ஸ்ரீ தில்லைச் சித்ரகூடம் -சிதம்பரத்தில் இருந்து 24 மைல் தூரம் மேற்கிலும்
ஸ்ரீ காட்டு மன்னார் திருக்கோவிலில் இருந்து 16 மைல் தென் மேற்கிலும் உள்ள திவ்ய
தேசம்
பெருமாள் -ஆதி வராஹ பெருமாள் -மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்-மூலவர் -ஸ்ரீ பூ வராஹன் –உத்ஸவர் –யஞ்ஞ வராஹன்-
தாயார் -அம்புஜ வல்லித்தாயார்
தீர்த்தம் -நித்ய புஷ்கரணி
விமானம் -பாவன-விமானம்
ப்ரத்யக்ஷம் -அஸ்வத்த நாராயணன்
கோரைக்கிழங்கு பிரஸாதம் பிரஸித்தம்-
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய
1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்
தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்பா நாயக்கா்.10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்கள் காலத்தில்இந்த கோவிலுக்கு பங்களித்தனர். ஒரு கிரானைட் சுவர் ஆலயத்தைச் சுற்றிலும், உள்ளஎல்லா கோயில்களையும் கோவிலின் குளங்களையும் இணைக்கிறது. கோவிலின் நுழைவாயிலில் ஏழு-அடுக்குராஜகோபுரமும் உள்ளது. கோவிலில்தினசரி ஆறுசடங்குகள் மற்றும் மூன்று வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தமிழ் மாதமான வைகசி மாதத்தில் (ஏப்ரல்-மே) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானதுஇப்பகுதியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது – இரதத்தின் கொடியை முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்; அவர்கள் கோவிலில் இருந்து காணிக்கைகளை எடுத்து, வந்து மசூதிகளில் அல்லாஹ்விடம் வழங்குகிறார்கள். இந்த கோயில் தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் எண்டௌமென்ட் சபைகளால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோவிலில் நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார். தினமும் காலை மூலவருக்கு திருமஞ்சனம், இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் மண்டபம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேர் வடிவ மண்டபத்தை குதிரைகளில் போர் வீரர்கள் இழுத்துச் செல்ல, பின்னால் யானைகள் தொடர்ந்து வருமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ முஷ்ணத்தில் நாயக்கர் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் அவர்களின் படங்களை முற்றத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் தாங்கி நிற்கிறது.
திருத்தல வரலாறு : முன்னொரு காலத்தில் நாராயணன் மிகப் புனிதமான வராஹஅவதாரம் எடுத்து, பூமியைக் கவர்ந்து சென்ற ஹிரன்யாஹூசன் என்னும் அசுரனை கொன்று, அப்பூமியை தனது கோரைப் பற்களினால் சுமந்து வந்து, அதிஷேஷன் மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அச்வத்த விருஷத்தையும், துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்ய புஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீமுஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்று பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீபூவாராகவன் என்ற திருநாமத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பவராக இத்திருக்கோவிலில் எழுந்தளியுள்ளார்.
இக்கோவிலின் பெருமையை உணர்த்த பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஒரு ஊரை ஆண்டு வந்தார். அவருக்கு தீராத வியாதி ஏற்பட்டது. வைத்தியர்கள் அவரை கைவிட்ட நிலையில், இக்கோவில் வழியாக ஆதி நவாப் செல்லும் போது, ஒரு பக்தன் தான் வைத்திருந்த பெருமாளின் தீர்த்ததையும், பிரசாததையும் கொடுத்தான். அதை சாப்பிட்ட ஆதி நவாப் பூரண குணமடைந்ததார். அது முதல் அவர் பெருமாளின் பக்தனாக மாறினார். அதுமட்டுமில்லாமல் கோவிலுக்காக நிறைய நிலங்களை எழுதி வைத்தாக கூறப்படுகிறது.
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அம்புஜ வல்லித் தாயார் திருவடிகளே சரணம் -.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply