Kaliyan wonders “ivar aar kol?” (Who could this One be?) and the Lord repiled “atta bhuya karatthEn yenRaar” (I am the Lord of the divya desam of Ashta Bhujam).
Kaliyan wonders aloud eight times :
- ari uru aam ivar aar kol? (Narasimha rUpi)
- anthaNar pOnRu ivar aar kol? (Vaamana rUpi)
- ambhutham pOnRu ivar aar kol? (with the hue of a dark cloud)
- anchudar pOnRu ivar aar kol? (ancient jyoti )
- alaikkadal pOnRu ivar aar kol? (with the bluish hue of the ocean)
- azhagiyathaam ivar aar kol? (the One with beateous form
- meham — pOnRivar aar kol? (Once again the bluish hue of a cloud)
- en aavi oppaar ivar aar kol? (One who is the soul of my soul)
The Lord answers, “It is me, the Lord of Ashta Bhujam, that has rushed to your side” and delights Parakala Nayaki with that revelation. The Lord says “I am the AttabhuyakaratthEn-
பரகால நாயகி -இவர் யார் கொல்-என்று அருகில் உள்ள தோழி இடம் கேட்க –
பரகால நாயகி எட்டு தடவை கேட்க்கிறாள்
1-அரி உருவம் இவர் யார் கொல் –ஸ்ரீ நரஸிம்ஹ ரூபியாக சேவை சாதிக்க
2-மா வலி வேள்வியில் மண் அளந்த அந்தணர் போன்று இவர் யார் கொல் -ஸ்ரீ வாமன ரூபியாக சேவை சாதிக்க
3-இருண்ட அம்புதம் போன்று இவர் யார் கொல் -நீல மேக ஸ்யாமளனாக சேவை சாதிக்க
4-நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் யார் கொல் -ஸ்ரீ வைகுண்ட நாதனாக சேவை சாதிக்க
5-அலை கடல் போன்று இவர் யார் கொல் -ஓத வண்ணனாக சேவை சாதிக்க
6-நீலம் புனைந்த மேகம் அங்கனம் போன்று இவர் யார் கொல் -நீள மேல ஸ்யாமளனாக மீண்டும் சேவை சாதிக்க
7-அழகியதாம் இவர் யார் கொல் –திரு அவயவ ஸுந்தர்யங்கள் உடன் சேவை சாதிக்க
8-என் ஆவி ஒப்பார் இவர் யார் கொல் -என் ஜீவனுக்குள் ஜீவனாக சேவை சாதிக்க
அஷ்ட புயகரத்தேன்-என்று அருளிச் செய்தானே –
அஷ்ட புஜம் திவ்ய தேசம் உகந்து வர்த்திக்கும் பெருமாள் அன்றோ –
இவள் மனத்து என் நினைந்து இருந்தாய் என்று திருத் தாயார் திருவிடை வெந்தை எம்பெருமான் இடம் முன் வினவ
இப்படி பிற்காலித்தோமே என்று திவ்ய அவயவ திவ்ய ஆயுதங்கள் திவ்ய மகிஷி யுடன் சேவை சாதிக்க -பரகால மகிழ்கிறாள்-
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply