ஸ்ரீ திரு மாலை-சங்கதி-பாசுர ப்ரவேசங்கள் —

திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்

கலியுகம் -289-பிரபவ சம்வச்தரம் -மார்கழி -கிருஷ்ண பஷ சதுர்த்தசி –-செவ்வாய் கிழமை -கேட்டை நஷத்ரம் வைஜயந்தி வனமாலை அம்சம் திரு மண்டங்குடி திருவவதாரம் விப்ர நாராயணர் -தேவதேவி

ஸ்ரீ விஷ்ணு தர்மம் சாரம் என்பர் –-சதீநாகன் -பாண்டவ ராஜ குலம் நான்கு ஐந்து தலை முறைக்கு பின்பு
ஸ்ரீ சௌவன பகவான் இடம் சென்று சம்சாரிகளுக்கு உஜ்ஜீவனமான சர்வாதிகாரமான பகவன் நாம சங்கீர்த்தனமே ஆத்மாக்களுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று அருளிச் செய்ததே ஸ்ரீ விஷ்ணு தர்மம்

கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி ப்ரோத்பவம்
சோளோர் வ்யாம் வந மால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
–வைஜயந்தி என்னும் வந மால அம்சம்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர்
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் துன்னு புகழ்
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்-

—

அவதாரிகை
இதில் மனசை குறித்து -பகவத் விஷயத்தில் வாசிகமாக அடிமை செய்த
ஸ்ரீ ஆழ்வார் திரு நாமத்தை நிரந்தர அனுசந்தானம் பண்ணும்படி சொல்லுகிறது

மற்று ஒன்றும் வேண்டா மனமே மதிள் அரங்கர்
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் -உற்ற
திருமாலைப் பாடும் சீர்த் தொண்டர் அடிப் பொடி எம்
பெருமானை எப்பொழுதும் பேசு –ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் சாதித்து அருளிய தனியன்

கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–9-பின் தொடர்ந்து அருளிச் செய்த தனியன்

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே–நடு நாயகப் பாசுரம் – -23-பாசுரம்
எல்லா ஸ்வரூபமும் அரங்கன் என்று மஹா விஸ்வாசம்
உற்ற -பக்தி பதிந்து முதிர்ந்து -வேறு ஒன்றும் நான் அறியேன் -என்பதையே மற்று ஒன்றும் வேண்டா -என்கிறார் இங்கு

———

ஸ்ரீ பெரிய பெருமாள் தம்முடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு வாசகமான திருநாம பிரபாவத்தை நிர்ஹேதுகமாக காட்டி அருளக் கண்டு – தாமும் அனுபவித்து – அனுபு பூஷுக்களையும் அனுபவிக்கவும் வல்லராய் –ஸ்ரீ பெரிய பெருமாளையும் உகப்பித்து தலைக் கட்டுகிறார்-பக்தியினுடைய துஷ்கரதையோபாதி பிரபத்தி நிஷ்டா ஹேதுவான மஹா விஸ்வாசமும் சிலருக்கு கிட்டுகை அரிது ஆகையாலே-இதில் இழியக் கூசினவர்களுக்கு-சர்வாதிகாரமான யாத்ருச்சிக பகவன் நாம  சங்கீர்த்தனமே– சேதனருடைய பாபத்தைப் போக்கி ஸூஹ்ருத அநு கூலமாக –-கர்ம யோகாதிகளிலே மூட்டுதல் –-பிரபத்தியிலே மூட்டுதல் –-விரோதியைப் போக்கி ப்ராப்யத்தைக் கொடுக்கைக்கு தானே நிர்வாஹகம் ஆதலாம்படியான வைபவத்தை உடைத்தாய் ஆய்த்து திருநாமத்தின் உடைய வைபவம் இருப்பது –-அதற்க்கு பிரமாணம் ஏது என்னில்-கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்தனாத் -என்றும் –-யாதி ப்ரஹ்ம சநாதனம் – என்றும் –உபோத்காத பல ஸ்ருதிகளிலே சொல்லி – நடுவே திருநாமத்தை சொல்லுகையாலே இவ் வாழ்வார் இப்படிப்பட்ட திரு நாமத்திலே இழிந்தவர் ஆகையாலே அத் திருநாம வைபவத்தை பேசுகிறார் இப் பிரபந்தத்திலே-

ஆழ்வார்களிலே-முதல் ஆழ்வார்கள் -மேன்மைக்கு எல்லையான பரத்வத்திலும்-நீர்மைக்கு எல்லையான திருமலையிலும் மண்டினார்கள் –-நம் ஆழ்வாரும் பெரியாழ்வாரும் கிருஷ்ண அவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –-திருமங்கை ஆழ்வார் உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றிலும் மண்டினார் –-அர்ச்சாவதார சாமான்யமும் அன்றிக்கே பெரிய பெருமாளை அல்லாது வேறு அறியாது இருப்பார் ஒருவர் ஆய்த்து இவர் –அர்ச்சாவதார சாமான்யத்தில் காட்டில் கோயிலுக்கு ஏற்றம் என் என்னில் – காவேரியானது பிரவாகமும் ஏக ரூபமாய் – ஸ்தலமும் அதுவே இருக்கச் செய்தே –
தீர்த்த விசேஷங்களிலே ரச விசேஷங்கள் உண்டாகிறாப் போலே – போக்ய அதிசயத்தால் வந்த ஏற்றம் வேறு ஒரு இடத்துக்கு இல்லை –

அல்லாதாரில் இவருக்கு உண்டான எற்றம் போலே – பிரபந்தாந்தரங்களில் காட்டில் இப் பிரபந்தத்துக்கு நெடு வாசி உண்டு –-எங்கனே என்னில்-நீராய் நிலனாய் -என்று தொடங்கி –-சிவனாய் அயனாய் என்று சேதன அசேதன வாசி சப்தங்களாலே-ஈஸ்வரனை சொல்லுகிற இந்த சாமாநாதி கரண் யத்துக்கு
அனுபிரவேச க்ருதம் சாமாநாதி கரண்யம் என்று நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல் –
முனியே நான்முகனே முக் கண் அப்பா -என்று தோற்றுகிற-த்ரி மூர்த்தி சாம்யத்தை நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல்–இன்னமும் சப்தத்தில் அருமையாலே ஸ்வார்தத்தை அறிக்கைக்கு அருமைப் பட -வேண்டுதல் செய்யும் இக் குறைகள் ஒன்றுமே இன்றிக்கே இருக்கையும் –-இன்னமும் கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தேயும்-நீர்த் தெளிவாலே தரை தோற்றுமா போலே – சப்தத்தின் செவ்வாயாலே ப்ரேமம் கனத்து இருக்கச் செய்தேயும் உள்ளது அடங்கத் தோற்றும்படி இருக்கையும்-இன்னமும் பிரணவம் போலே சப்தம் அத்யல்பமாய் அர்த்த க்ரஹணம் அரிதாய் இருத்தல் –-இவ்விரண்டு குறையும் இன்றிக்கே ஒரு சேதனனுக்கு ஞாதவ்யங்களை – பரந்த சடங்குகளை சுருங்க ப்ரயோக வ்ருத்தி செய்து கொடுத்தாப் போலே-சகல அர்த்தங்களும் இப் பிரபந்ததுக்குள்ளே உண்டாகையாலும் பிரபாந்தரங்களில் காட்டிலும் இப் பிரபந்தத்துக்கு நெடு வாசி உண்டு

——————

திரு நாமம் யம வஸ்யதையை தவிர்த்து தரும் என்று இதனுடைய பாவநத்வத்தையும் ராஜ குல மஹாத்ம்யத்தையும் சொல்லுகிறது –

அடியார்களைக் காத்தருளும் திறம் நன்கு விளங்கும்படி கோயிலில் கண் வளர்ந்தருளும் பெருமானே!
உன் திருநாமத்தை நான் கற்றதனால் பெற்றபேற்றின் கனத்தைக் கண்டாயோ?-அஹஹ! என்னைத் தீவழியில் செலுத்தி உனக்கு விலக்காக்கின பஞ்சேந்திரியங்களை அவற்றின் ஸ்வாதந்திரியம் ஒன்றும் ஓங்க வொண்ணாதபடி அமுக்கி இத்தனை நாளாக இவற்றை அமுக்கி, ஆளமுடியாதபடி தடையாய்க் கிடந்த பாபங்களையும் உதறிவிட்டு, நரக பாதையில் நின்றும் பயம் தவிர்ந்து யமகிங்கரர் தலைமேல் அடியிட்டுத் திரியாநின்றேன்; எனது செருக்கு எப்படிப்பட்டது! பாராய் என்கிறார்–

காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே -1—ஆவலிப்பு -பலம் வீர்யம் சாமர்த்தியம் -கர்வம்

முன்பு அநீதியிலே கை வளர்ந்து –-அ சதஸ்யனாய் –-நால்வர் இருந்த இடத்தில் சென்று ஏற மாட்டாதே இருந்தவன் – தனக்கு-ஒரு ராஜகுல சம்பந்தம் உண்டானால் சதஸ்ஸை மதியாதே சென்று ஏறுகையும் –
அவர்கள் சிரஸா வஹிக்கையுமாய இறே இருப்பது –-அப்படியே முன்பு யமாதிகளுக்கு அஞ்சிக் கிடந்தது இடம் அறியாதே போந்தவர் – இப்போது திருநாம சம்பந்தத்தாலே யமாதிகள் தலையிலே அடி இட்டு
திரியும்படியான ராஜ குலத்தை சொல்லிற்று ஆய்த்து –

——–

திரு நாமத்தின் உடைய பாவநத்வமும் அது கற்கையாலே தமக்கு பிறந்த ராஜ குலமும் சொல்லிற்று கீழ்-இதில் திரு நாமத்தின் உடைய போக்யதையைச் சொல்லுகிறத-ஆனால் போக்யதையைச் சொல்லி
பாவனத்வத்தைச் சொன்னாலோ -என் என்னில் –பயம் போனால் இறே ரஸ்யதையிலே இழிவது-ஜ்வரம் அனுவர்த்தியா நிற்க பால் ரசிக்குமோ –முன்பு பாபத்தை கூடு பூரித்து யம பீதனாய் இருக்கிறவனுக்கு
அந்த பயம் நிவர்த்தம் ஆனால் அல்லது போக்யதையிலே நெஞ்சு செல்லாது இறே-யன் நாம சங்கீர்த்தனதோ மகா பயாத் விமோஷ மாப்நோதி ந சம்சயம் நா -என்று ரிஷிகள் பய நிவ்ருத்திக்கு ஹேதுவாக சொல்வார்கள்–ஆழ்வார்கள் ––பிழைப்பில் பெரும் பெயரே பேசி -என்று-போக்யதா பிரகர்ஷத்தைச் சொல்லுவார்கள் –-அப்படியே பிரயோஜநாந்த பரருக்கும் உறுப்பாய் சாதநாந்தர நிஷ்டருக்கும் உறுப்பாய் பிரபன்னருக்கு ஸுயம் பிரயோஜனமுமாய் ஆய்த்து இத் திரு நாமம் இருப்பது-இத் திரு நாமம் தான் பிரயோஜநாந்த பரருக்கு பிரயோஜனத்தைக் கொடுக்கும் – உபாயாந்தர நிஷ்டருக்கு உபகரணமாய் இருக்கும் –பிரபன்னருக்கு தேக யாத்ரை சேஷமாய் இருக்கும் –-முத்துப் படும் துறையிலே முக்குவார் முத்தை கொடுத்து பழம் கொள்ளுவார்கள்–செழு முத்து வெண்ணற்க்கும் என்று ஆறுவார்கள் இறே-விலை அறியும் செட்டி பக்கல் புகுந்தவாறே பெரு விலையனாம்-செருக்கர் ஆனவர்கள் இதைப் பூண்டு அனுபவிப்பார்கள் ––கீழ் நின் நாமம் கற்ற -என்னா நின்றீர்-நம் பேர் சொன்னாருக்கு நாம் கொடுக்கக் கடவதொரு நாடு உண்டு அத்தை அவர்களால் கொள்ளோம் என்ன ஒண்ணாது அத்தைக் கொள்ளீர் -என்று பெரிய பெருமாள் அருளிச் செய்ய –-திரு நாமம் சொல்லும் போதை ரசம் ஒழிய அவ்வருகு போய் அனுபவிக்கும் ரசம் எனக்கு வேண்டா -என்கிறார் –

இப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரிய பெருமாள் “ஆழ்வீர்! நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு; அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன; இவ்வுலகத்தி லிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது; அது எனக்கு வேண்டா என்கிறார்.

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2–அச்சுதன் -பரத்வம் – ஏறு வ்யூஹம் -ஆயர் தம் கொழுந்து -விபவம் -அமர-அர்ச்சை-அரங்க மா நகர் உளானே

பரம பதம் வேண்டா என்ன -இங்குத்தை நன்மை ஏது என்ன – அரங்க மா நகர் உளானே –-பரம பதத்தில் அனுபவத்தை விட்டு இவ் வழகையும் சீலத்தையும் இங்கு உள்ளாரை அனுபவிக்கைக்கு அங்கு உள்ளாறும் இங்கே வாரா நிற்க என்னை அங்கே போகத் தேடுகிறது என் –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-

————

உமக்கு பரம பதம் வேண்டாவாகில் கோயிலோடு தோள் தீண்டியான சம்சாரத்திலே இருந்து திரு நாமத்தை அனுபவியும் என்று ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ய – அத்தையும் நிரூபித்த வாறே அவகாசம் இல்லாதபடி துரித பரம்பரையேயாய் இருந்தது –-ஆகையாலே அது எனக்கு அது வேண்டா வென்ன – திரு நாமம் சொல்லுகைக்கு அவகாசம் இல்லாதபடி சம்சாரத்துக்கு நீர் சொல்லுகிற குறை என் என்று அருள சம்சாரத்தின் உடைய தோஷங்களை உப பாதித்துக் காட்டுகிறார்-இத்தால் –பழகிப் போகிற சம்சார யாத்ரையிலும் ஜூகுப்சை பிறக்கும்படி திரு நாமம் இனிது என்று அம் முகத்தாலே திரு நாமத்தின் உடைய போக்யதா பிரகர்ஷத்தை சொல்கிறது –

உலகத்தில் மானிடப்பிறவி யென்பது ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே பெறக்கூடியது;-அதனை வருந்திப் பெற்றாலும், கர்ப்பத்திலேயும், பிறந்தவுடனும் நாலு நாள் கழித்தும் சில மாதங்கள் கழித்தும்
சில வருடங்கள் கழித்தும் இறக்கக் கூடியவர்கள் பெரும்பான்மையரேயன்றி, வேத சாஸ்த்ரத்தில் “தாயுர்வை புரு‘” (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று கூறியுள்ளபடி தீர்க்காயுஸ்ஸாக வாழக்கூடியவர் மிகச் சிறுபான்மையரே; விதிவசத்தால் சிலர்நூறு பிராயம் புக்கு வாழப்பெற்றாலும் அவரது வாழ்நாள் கழியும் வகையை ஆராய்ந்தால் ஒரு நொடிப்பொழுதாவது நற்போதாகக் கழிய வழியில்லை.-ஸூர்யன் அஸ்தமித்து மீண்டும் உதிக்குமளவும் உறங்குவது ஒரு நியமமாக வந்துவிட்டபடியால்-அஹோராத்ரமாகிய ஒரு திநத்துக்கு உள்ள அறுபது நாழிகையில் முப்பது நாழிகை உறக்கத்தில் கழிகிற-கணக்கில் பாதி ஆயுஸ்ஸாகிய ஐம்பது வருஷம் உறக்கத்தால் கழிந்ததாகிறது;
மற்ற பாதிவாழ்நாளில்-தன்னுடைய ஹிதாஹிதம் தாயின் அதீனமாயிருக்கும் சிசுத்வாவஸ்தையாய்ச் சிலகாலமும்,-எத்தனை தீம்புகள் செய்தாலும் சீறவொண்ணாதபடி செல்வப்பிள்ளை பருவமாய்ச் சிலகாலமும், பிறகு யௌவநம் வந்து புகுந்து விஷயாந்தரங்களிலே மண்டித்திரியும் பருவமாய்ச் சிலகாலமும், இங்ஙனே இந்திரியச் சிறையிலே அகப்பட்டுத் தடுமாறாநிற்க இடிவிழுந்தாற்போலே வந்து புகுகிற கிழத்தனமாய்ச் சிலகாலமும் “அத்யுத்கடை; புண்யபாபைரிஹைவ பலமச்நுதே”
(வரம்புகடந்த புண்யபாபங்களின் பலனை இப்பிறவியிலேயே அநுபவிக்கிறான்)என்றபடி –
யௌவநத்திற் செய்த எல்லை கடந்த குறும்புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் வருந்துவதாய்ச் சிலகாலமும், பசியினால் ஒன்றும் தோன்றாதபடி இடர்படுவதாய்ச் சிலகாலமும், ஒருபக்கத்தில் பிள்ளை செத்தான் என்று கேட்டு அழுவதும், மற்றொரு பக்கத்தில் மனைவி செத்தாள் என்று கேட்டு அழுவதுமாய் இப்படி ஸம்ஸாரத் துன்பங்களில் ஆழ்ந்து செல்லும் நாளாய்ச் சிலகாலமும் கழிவதால்
இத்துன்பங்களை அநுபவிப்பதற்கு இன்னும் சிறிது ஆயுஸ் கடன் வாங்கிக் கொள்ள வேண்டியதாமேயன்றி உள்ள வாழ்நாளில் ஆத்மாவைப்பற்றிச் சிறிதாகிலுஞ்சிந்திக்கப் பொழுது கிடைப்பரிது; ஆதலால் இப்பிறவி எனக்கு வேண்டா என்கிறார்–-கீழ்ப்பாட்டில் ‘பரம பதம் எனக்கு வேண்டா’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர் உமக்குப் பரமபதம்; வேண்டாவாகில் கோயிலோடே தோள் தீண்டியான ஸம்ஸாரத் திலேயிருந்து திருநாமத்தை அநுபவியும் “ என்றருளிச்செய்ய; “அது தன்னையும் நிரூபித்தவாறே திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் அரிதாம்படி துக்கப் பரம்பரையேயா யிருந்தது ; ஆகையாலே எனக்கு ஸம்ஸாரத்திலிருப்பும் வேண்டா “ என்று ஆழ்வார் கூற ‘திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸம்ஸாரத்திற்கு நீர் சொல்லுகிற குறை என்?’ என்று எம்பெருமான் கேட்டருள, ஸம்ஸாரத்தினுடைய தோஷங்களை இப்பாட்டால் உபபாதிக்கிறாரென்க.-“இத்தால், பழகிப் போருகிற ஸம்ஸார யாத்ரையிலும் ஜுகுப்ஸை பிறக்கும்படி திருநாமம் இனிதென்று அம்முகத்தாலே திருநாமத்தினுடைய போக்யதா ப்ரகர்ஷத்தைச் சொல்லுகிறது” என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே-3-

பாதி -பகுதி என்றபடி
பேதை பெதும்பை மங்கை (15 வயசு வரை கீழ் மூன்றில் )மடந்தை அறிவை தெரிவை பேர் இளம் பெண் -ஏழு வகைகள்
பாலன் மீளி அறிவோன் திறலோன் (15 வயசு வரை பாலகன் கீழ் நான்கும் )காளை விடலை முதுமகன்

————

கீழ்-மூன்று பாட்டாலும்–ஸ்வ லாபத்தை பேசினாராய்-மேல் பதினோரு பாட்டாலே -பரோபதேசம்  பண்ணுகிறார் –ஸ்வ அனுபவத்தை விட்டு இவர் பரோபதேசம் பண்ணுகைக்கு ஹேது என் என்னில் –
பிராப்தமுமாய் ஸூலபமுமான இவ் விஷயத்தை சம்சாரிகள் இழக்கிற இழவு பொறுக்க மாட்டாமையாலும்-இவ் விஷயம் தான் சம்சாரிகளைப் பற்று அல்லது தனியே அனுபவிக்க அரிதாகையாலும்-ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத -என்கிறபடி அனுபூதாம்சம் பிறரை அனுபவிப்பித்து அல்லது நிற்க மாட்டாத ப்ரக்ர்தி ஆகையாலும் பரோபதேசத்திலே பிரவர்தகர் ஆகிறார் –(ஸம்ஸாரிகளின் இழவைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தளர்ந்து ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும், ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும், மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும் இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக்கொண்டும் பேசுகிறார்.)

இதில் முதல் பாட்டு-சம்சாரிகள் பாபிகளான எங்களுக்கு-திரு நாமம் சொல்லுகைக்கு யோக்யதை உண்டோ என்ன பிராயச் சித்தம் சாத்தியம் அல்லாதபடி பாப பிரசுரனான ஷத்ர பந்துவும் திரு நாம பிரபாவத்தாலே பரமபத பிராப்தியை பண்ணின படியைக் கேட்டார்க்கு அயோக்யன் என்று அகல விரகு உண்டோ என்ற இடத்திலும் விமுகராக கண்டவாறே அத்தைக் கேட்டு வைத்து பாப பலமான ஜென்மாதி கிலேசத்தை அனுபவிப்பதே –என்று விஸ்மிதர் ஆகிறார் –

இப்பாட்டு முதல், பதினான்காம் பாட்டளவும் பகவத் விஷயத்திலே தம்மைப் போல் ஆழங்காற்படாமல் உடலுக்கே கரைந்து நைந்து திரியும் ஸம்ஸாரிகளின் இழவைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தளர்ந்து ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும், ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும், மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும் இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக்கொண்டும் பேசுகிறார்.-பகவதநுபவத்திலே ஊன்றி உகப்பேயாய்ச் செல்லுமிவர் ஸம்ஸாரிப் பாவிகளைப் பற்றிக் கரைந்து வருந்துவானேன்? என்னில்; இப்பாவிகள் அநியாயமாய் வகுத்த விஷயத்தை இழந்து படுகின்றனரே என்னும் துக்கம் பொறுக்க மாட்டாமையாலும்,-பகவத் விஷயம் பலர் கூடித் திரண்டு அநுபவிக்க வேண்டிய இனிய விஷயமாதலாலும்,-“ஏக; ஸ்வாது ந புஞ்ஜீத” (இன்கனி தனி யருந்தான்) என்றபடி இனிய விஷயத்தைத் தனியராய் அநுபவித்து ஸாத்மிப்பித்துக்கொள்ள வல்ல தன்மையரல்லராதலாலும்
துணை கூட்டிக்கொள்ளத் தேடுகிறாரென்க. ‘கொடும்பாவிகளான எங்களுக்கு எம்பிரான் திருநாமங்களை உச்சரிப்பதற்கு யோக்யதை உண்டோ? தேவனேசமான புரொடானத்திலே நாய் வாய்வைக்கக்கடவதோ?’ என்று சில ஸம்ஸாரிகள் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்க்க, அவர்களை நோக்கி, ‘ஆதர்காள்! நன்கு சொன்னீர்கள் க்ஷத்ர பந்து என்வனிற்காட்டிலும் வேறொரு கொடிய பாபிஷ்டன் இவ்வுலகில் உளனென்று நீங்கள் கேட்டதுண்டோ! அவனுடைய கொடுமையை நீங்கள் புராணத்திலே விரிவாகக் கேட்டிருக்கலாமோ-அப்படிப்பட்ட பாவியுமன்றோ கோவிந்த நாமத்தை உச்சரித்து நற்கதி நண்ணினன்.-அன்றியும், பொய்யான அன்பை அபநயித்துக் காட்டுவார் பக்கலிலும் பிச்சேறி மேல் விழுந்து பற்றுவானாயிருந்தான் எம்பெருமான் இவற்றை யெல்லாம் நீங்கள் அறிந்து வைத்தும் படு குழியில் வீழ்ந்து படுவதே! இஃது என்ன கொடுமை!’ என வியக்கிறார்.

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே--4-

சர்வேஸ்வரனுக்கு-ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி ஸ்ப்ர்ஹா விஷயமான ஆத்ம வஸ்து-இப்படிப் படுவதே என்று தர்மஹானி கண்டால் -படுகுலை படுகுலை -என்பாரைப் போலே வெறுக்கிறார்-ப்ராப்தமுமாய்
ஸூலபமுமாய்-ஸூஸீலமுமான-இவ் விஷயத்தை விட்டு-அப்ராப்தமுமாய் துர்லபுமுமாய் துஸ் சீலமுமான விஷயங்களைப் பற்றி க்லேசிக்கக் கண்டால்
தார்மிகரான இவர்க்கு பொறுக்கப் போமோ –

————–

பிறவியுள் பிணங்குமாறு -என்று விலஷண விஷயத்தை விட்டு துர் விஷயங்களை பற்றி அனர்த்தப் படுவதே -என்று வெறுத்தார் -கீழ-ஏன் தான் ஷோடச வயசைகளான ஸ்திரீகள் சஞ்சரிக்கிற சம்சாரத்துக்கு பொல்லாங்கு சொல்லுவான் என் என்று லோகாயதிகள் ப்ரத்ய வஸ்தானம் பண்ணினான்-அவனாகிறான் – தேஹாதி ரிக்தமாய் இருப்பான் ஒரு ஆத்மா உண்டு என்றும் தர்ம அதர்மங்கள் உண்டு என்றும் பரலோகம் உண்டு என்றும் சொல்லுகிறவை அசத்யம்-பிரத்யஷிக்கிற உடம்பு கொண்டு அனுபவிக்கிற த்ரஷ்ட அனுபவம் ஒழிய வேறு ஓன்று இல்லை என்னுமவன் –அவர்களைக் குறித்து விஷயங்கள் அல்ப அஸ்திரத் வாத்யநேக தோஷி தூஷிதங்கள் என்று
இவை எல்லாம் சொல்ல வேண்டுவது லபித்தால் இறே துராரதமாகையாலே லபிக்கை அரிது –என்கிறார் –

பெண்களோடு அணைந்து சுகத்தை அநுபவிக்க விரும்பதல் தீயோடு அணைந்து விடாய் தீர நினைப்பதையும், ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி சுகம் பெற நினைப்பதையு மொக்குமென்பார்-
பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபண்டு என்கிறார். ஐயோ துக்கத்திற்கு ஸாதமானவற்றையே சுகத்திற்கு ஸாதனமாக நினைப்பதே இப்படியுமொரு மயக்கமுண்டோ
பிழைக்கவேணுமென்று நினைப்பாரும் விஷத்தை யுண்பரோ ?

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–5-

மண்ணில் காட்டிலும் சோற்றுக்கு வாசி அறிந்து ஜீவிக்கிற படி எங்கனே-நித்தியமான ஆத்ம வஸ்துவுக்கு-பகவத் சேஷமே தாரகம் என்று அறியாதவன்-அநித்யமான தேகத்திற்கு சோறு தாரகம் என்று ஜீவிக்கிறான் இத்தனை இறே-பித்ராதிகள் ஜீவிக்க காண்கிற வாசனை கொண்டு ஜீவிக்கிறான் இத்தனை இறே-வாசியறியுமாகில் ஆத்மாவுக்கு நன்மை எண்ணானோ-ஒன்றிலே விசேஷ ஞானம் உண்டாகில் மற்றை யதிலும் அறிவு உண்டாகாதோ–கீழ் -அது -என்று காம போகத்திலே உழன்று உள்ளாரைப் பற்றியே இது – நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை ப் பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே –பெரியாழ்வார் -4-4-5-

————

விஷயங்களுக்கு அல்ப அஸ்திரத் வாதி தோஷங்கள் அநேகம் உண்டானாலும் எங்கள் உடைய த்யாகத்துக்கு ஹேதுவாக மாட்டாது –-ஏக விஷயத்தில் பூர்ண அனுபவம் பெற்றிலோமே யாகிலும்
விஷயங்கள் அநேகம் உண்டான பின்பு ஒன்றில் இல்லாத நன்மை மற்றையதில் கூட்டிக் கொண்டு அனுபவிக்கிறோமே -என்ன-அப்படியே யானாலும் அந்த போக்தா தான் ஸ்திரனாக வேணுமே –அவ் விஷயங்களோபாதி போக்தாவும் அஸ்திரன் என்று போக்தாவினுடைய நிலை நில்லாமையைச் சொல்லுகிறார் –

விஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர்
“விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பல தோஷங்களுள்ளன வாயினும் அவற்றை நாங்கள்
விடவேணுமென்ற நியதி யில்லை; ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோ மாயினும் விஷயங்கள் பல உளவாகையால் ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல, “அப்படியே யானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக் கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்க வேணுமே அவ் விஷயங்களைப் போலவே போக்தாவும் அஸ்திரன் கிடீர்” என்கிறார் இப் பாட்டால்–

மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே-6-

வகுத்த விஷயம் சந்நிஹிதமாய் இருக்க – இங்கனம் அனர்த்தப் படுகிறீர்களே -என்று வெறுக்கிறார் –-பரர் அனர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறார் –-கோவை வாயாளில் படியே -அவன் சாத்தும் படியான உடம்பு படும் பாடே -என்று வெறுக்கிறார் –-இவர்கள் செத்துக் கிடக்கச் செய்தேயோ இவ் வார்த்தை சொல்லிற்று என்னில்-அங்கன் அன்று –-இவர்கள் உண்டு உடுத்து திரியா நிற்கச் செய்தே -கிடக்கின்றீரே -என்கிறார்-நேயமஸ்தி புரி லங்கா -என்று திருவடி சொல்லிற்று-ராவணன் சிம்ஹாஸ்தானானாய் இருக்கச் செய்தே இறே –-துர்யோனாதிகள் பூசல் களத்திலே பட்டுக் கிடக்க அவர்களை ஸ்ரீ வேத வியாசர் பகவான் கண்டு நான் சொல்லிற்று செய்யாதே பட்டுக் கிடக்கிறி கோளே-என்று வெறுத்தாப் போலே வெறுக்கிறார்

———–

தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் -என்றும்–புள் கவ்வக் கிடக்கின்றீர் -என்றும் எங்களை நிந்திக்கிறது என்-சம்சார ஸ்வாபம் இங்கனே இருந்தது – தண் துழாய் மாலை மார்பன் – என்று ஆஸ்ரயணீயனாகச் சொன்னவன் தூரஸ்தன் ஆகையாலே எங்களுக்கு கிட்ட அரிது -இன்னமும் ஆஸ்ரயிப்பார்க்கு விலக்கடிகள் பலவும் உண்டாய் இருந்தது –அந்த தடைகளையும் அறுத்து – ஆஸ்ரயணீய னையும் காட்டித் தாரும் என்ன – இங்கே வந்து அவதரித்து விரோதி நிரசன சீலனான தசரதாத் மஜனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –(ஸம்ஸாரிகளைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித் தருகிறார்–)

தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும், “புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும் எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்? ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிரா நின்றது;-அன்றியும்- “தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவது தென்று தெரியவில்லை; நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்; எங்கள் மீது குற்றமென்?” என்று சில ஸம்ஸாரிகள் கூற, அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித் தருகிறார்–

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

வரம் கொடுத்த தேவதைகள் தாம் குலையாமே சக்கரவர்த்தி திரு மகனாய் வந்து அவதரித்து கையிலிலே வில்லாலே இலங்கையை அழிக்கச் செய்தவனே -ஆஸ்ரயணீயன்-என்கிறார்-தேவதைகள் தங்கள் அளவு அறியாதே ராவணனுக்கு வரம் கொடுத்து பின்னை தங்கள் குடி இருப்பு இழக்கும் படி -அவனாலே நெருக்குண்டு போக்கற்ற அளவிலே திருவடிகளிலே வந்து விழுவார்கள் – அதுக்குப் போக்கடி செய்கை ஈஸ்வரனுக்கே பரம் இறே-ப்ரஹ்மாதிகள் வர பலத்தாலே பூண் கட்டின இலங்கையை
சங்கல்ப்பத்தால் அன்றியே கையில் வில்லாலே அழியச் செய்தவனே உங்கள் விரோதியையும் போக்கி ரஷிக்கும் -என்கை –-தேவனே – ராவண வத சமனந்தரத்திலே கையும் வில்லுமாய் நின்ற போதை வீர ஸ்ரீ யால் வந்த புகரை உடையவனே ஆஸ்ரயணீயன்-ஆவான் —

நாராயண பரத்வத்தை அஸ்தி செய்யும் ஆஸ்திகர்களுக்கு இவ்விதப் பிறப்பு இல்லையே ஆகையால் சாகேன் என்கிறார்-இறப்பு எனும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ண வதைப் படலம்–கபீர் தாஸ் புத்ரன் கமால் என்னும் இராம பக்தனுடைய தலையை வெட்டி வீட்டில் சட்டியில் போட்டு இருக்க சாலைப் பக்கத்தில் கட்டப்பட்டு இருந்த அவன் உடல் ராம நாமத்தைக் கேட்ட பின்
கைங்களை உயர்த்திக் கூப்பிட்ட்தால் ராம நாம மஹிமையால் தலை அறுப்புண்டும் சாகார் என்பது திண்ணம்-கம்பர் தில்லையில் பிள்ளையை உயிர் பிழைப்பித்த வ்ருத்தாந்தம் அறிவோம் அன்றோ-

———

இப்படி வைதிக மர்யாதைகளிலே நின்ற தசரதாத் மஜனே ஆஸ்ரயணீயன் என்று சொன்ன விடத்தில்
அங்குத்தை குணாதிசயத்தை புத்தி பண்ணி ஆஸ்ரயியாதே சம்சாரிகள் விக்ர்த்தராய் இருந்த படியைக் கண்டு இதுக்கடி பாஹ்ய தர்சன ருசிகள் ஆகை இறே – ஆன பின்பு இவர்கள் அவத்யர் என்று பெரிய பெருமாளைக் குறித்து அருளிச் செய்கிறார் –(புறச் சமயிகள்,-ஸாத்விகர் காது கொடுத்துத் கேட்கப் பெறாத உன் விஷயமான தூஷணங்களைப் பேசும் போது அப் பேச்சுக்கள் ஒரு ஸாத்விகன் காதில் விழுந்தால், அவன்றான் மெய்யே ஸாத்விகனாகில் அந்த் க்ஷணத்திலேயே தன்னடையே உயிர் துறக்க வேணும் என்கிறார்–முன்னிரண்டடிகளால்.-உயிர் துறப்பதறகு நோய் முதலிய சில வியாஜங்கள் நேர வேண்டுமே என்று சிலர் நினைக்கக் கூடுமென்றெண்ணி“போவதே நோயதாகி” என்கிறார்.-பகவந் நிந்தையைக் கேட்பதற்கு மேற்பட்ட நோய் கூட உலகத்திலுண்டோ? என்பது கருத்து–)

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே–8-

ஆத தாயினம் ஆ யாந்தம் ஹன்யான் ஏவ அவிசாரயன் -மனு ஸ்ம்ருதி -8-350-பகவத் தூஷணம் கொல்லத் தக்கதே-ஆங்கே -இடப் பொருளும் காலப் பொருளும்-

திரு நறையூர் அரையரைப் போலே -சத்வ பிரசுரனாய் இருந்தான் ஆகில் அவன் நிந்தையே நோயாக முடிந்து போவது-அதவா-கேட்டார் பொறுக்காத படி அசக்தனாய் இருந்தான் ஆகில் அவர்கள் முகத்தில் விழியாதே போவது என்றுமாம் –“குரோர் யத்ர பரிவாதோ நிந்தாவாபி ப்ரவர்த்ததே, கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோந்யத; “(பெரியோரைப் பற்றி நிந்தை நடக்குமிடத்தில் காதுகளை மூடிக் கொள்வதாவது, சடக்கென அப்பால் செல்வதாவது செய்ய வேணும்) என்ற சாஸ்திரப்படி விலகிச் செல்வது நன்று என்கிறாராகவுமாம்.-ஆன்ரு சம்சய பிரதானராய் – பரம சாந்தரான இவ் வாழ்வார்
வதமாம் -என்று விதிப்பான் -என் என்னில் ந ஹிம்ச்யாத் பூதானி -என்கிறது அன்றே-அக்நிஷோமீய ஹிம்சை போலே இருப்பது இருப்பது ஓன்று இறே இது –-பகவத் நிந்தை பண்ணுவார்க்கும் பகவத் அசாதாரணராய் இருப்பார்க்கும் பாத்ய பாதக சம்பந்தமே உள்ளது –-எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே -என்னக் கடவது இறே

———-

சிஷ்ட கர்ஹைக்கு அஞ்சி இதர தர்சன ருசியால் ஆஸ்ரயியாது இருந்தோம் அல்லோம் – தசரதாத் மஜனை இறே ஆஸ்ரயிக்கச் சொல்லிற்று -அவன் ஆகிறான் –வாசலும் தடையுமாய் எங்களுக்கு கிட்ட ஒண்ணாதாய் இருப்பான் ஒருத்தன் –கிட்டினாலும் வசிஷ்டாதிகள் அருகே இருந்து அயோக்யரோ அயோக்யரோ என்னா நிற்பார்கள் –-ஆகையாலே பர அவஸ்தையோடு ராம அவஸ்தையோடு வாசி இல்லை – எங்கள் யோக்யதை பாராதான் ஒருத்தன் ஆஸ்ரயணீகனாக வேணும் அவனைக் காட்டித் தாரீர் -என்-அதில் யோக்யதை அயோக்யதை பாராதே தானே மேல் விழுந்து விஷயீ கரிக்கும் கிருஷ்ணனை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

பல தேவரையும் பற்றிக் கூறுகிற வேதத்தின் உட்பொருளை நுட்பமாக ஆராய்ந்து அறியுந் திறமை யில்லாமையால் நீங்கள் தேவதாந்தரங்களைப் பற்றுகின்றீர்கள்; ‘ஒரு குறையும் வாராமல் உன்னைப் பாதுகாக்கிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணி பாணாஸுரனது வாசலிலே பரிவாரத்தோடு பாதுகாவாலாயிருந்த சிவன் அந்த வாணாசுரனை எதிர்த்து வந்த ஸ்ரீ கிருஷ்ணனோடு போர் செய்யமாட்டாமல் தோற்று ஓடின போது அந்தச் சிவனுடைய வலியின்மையை-அந்த வாணன் கண்டறிந்ததுபோல, நீங்களும் ஸரணமாகப் பற்றியிருக்கிற தேவதாந்தரங்களுக்கு
ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் தான் அத்தெய்வங்களின் பலஹீநத்வத்தைக் கண்டறிவீர்கள்;
நீங்கள் இப்படி பரமாத்மாவைத் தவிர்த்து இதர தேவதைகளைப் பற்றுவதற்குக் காரணம்
நுமக்குப் பகுத்தறிவு இல்லாமையே. உண்மையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வையே சரணமாகப் பற்றுங்களென்று உபதேசிக்கின்றனரென்க–

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே--9-

மேல் ஓன்று அறியீர் –கஜேந்த்ரனுக்கு இடர் தீர்த்தத்துக்கும் மேல் மோக்ஷ சாம்ராஜ்யமும் அருளியதை அறியீர் என்றபடி-கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை-சரம ஸ்லோகம் அருளிச் செய்த முந்தை எந்தை அன்றோ-தான் சிறியனாய் நின்ற நிலையிலே தன்னை ஆஸ்ரயித்தார்க்கு பொறுப்பிக்கும் அவனை ஆஸ்ரயுங்கோள்-வேத உப ப்ரஹ்மன அர்த்தமாக பிரவ்ருத்தமான மகா பாரதத்தில் இது என்ன வேதார்த்தம் சொல்லுகிறது என்று குறைப்பட்டு இருக்குமே என்ன அவனே ஆஸ்ரயணீயன் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது -என்று அருளிச் செய்தார்-

———

தண் துழாய் மாலை மார்பன் -என்கிற தேச விப்ரகர்ஷம் தீர ஸ்ரீ ராமாவதாரத்தை அருளிச் செய்தீர்
அநந்தரம் அதிலும் ஸூலபமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை அருளிச் செய்தீர்-ஸ்ரீ ராம அவதாரத்தோடு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தோடு வாசி என் இரண்டுக்கும் பிற்பாடரான எங்களுக்கு என்ன-தேச காலத்தால் வந்த குறை தீர ஸ்ரீ கோயிலிலே வந்து ஸ்ரீ பெரிய பெருமாளே கண் வளர்ந்து அருளுகிறார்
அங்கே ஆஸ்ரயிங்கோள் அவரை ஒழிய மோஷார்தமாக வேறு தேவதைகளை ஆஸ்ரயிக்கை யாவது
அ ஸ்ரீ வாசலிலே ஐஸ்வர்யம் வேண்டி இருப்பாரோபாதி கிடி கோள் -என்கிறார்-

நீர் சொல்லுகிற எம்பெருமானொழிய வேறொரு தேவதையும் புகலன்றாகில், உலகில் பல பல தேவதைகள் அவ்வவர்களால் கொண்டாடப்படுவதற்கும், அக்கொண்டாட்டத்திற்கு ஏற்ப அத் தேவதைகள் பயன் அளித்து வருவதற்கும் என்ன காரணம்? பயன் கொடுக்கிற சக்தி வாய்ந்த தேவதைகளைப் பற்றுவதால் என்ன பாதகம் விளையும்? என்று சில மாந்தர் கேட்க; அவர்களுக்கு விடை அளிக்கிற பாட்டு இது–

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10-

இதர தேவதைகளை ஆஸ்ரயித்து மோஷம் பெற இருக்கை யாகிற இது-அ ஸ்ரீ பக்கல் ஐஸ்வர்யம் வேண்டி இருக்கை இறே-பந்தகமாய் சூத்திர மான பலன்களைத் தரும் தேவதைகளை ஆஸ்ரயித்து
அபுனாவ்ர்த்தி லஷண மோசத்தை லபிக்கப் போமோ-அமணனை கூறை வேண்டுகிறது -கோலை கருதி இறே அப்படியே இவர்கள் மதிப்பை அறுக்கை இறே-ரஜஸ் தமஸ் பிரக்ருதிகளை ஆஸ்ரயித்து
நித்ய சத்வர் பெரும் பேற்றை எங்கனே பெறும்படி –-பகவத் பிரவணர் ஆனவர்கள் தேவதாந்தரங்களை த்ரணீகரித்து இருப்பதே ருத்ரனும் தேவியும் போகா நிற்க – பகவத் பிரவனணனாய் இருப்பான் ஒருவன்
அவனை அநாதரித்து தன் வஸ்த்ரத்தைக் குத்தினான் -என்கிறதை நினைக்கிறது–(சேட்டை-மூத்தவள் என்னும் பொருளதான ‘ஜ்யேஷ்டா’ என்ற வட சொல் விகாரம்.-மூதேவி யென்பவள் பிராட்டிக்கு முற்பிறந்தவள்.-தாரித்திரியம, துரத்ருஷ்டம், உறக்கம், சோம்பல், மூடத்தனம் முதலியவை உள்ளவனை ‘மூதேவி’ என்று நிந்திப்பது ப்ரஸித்தம். ஆகையாலே மூதேவி யென்பவள் ஸகல அச்லீலங்களுக்கும் மூல ஸ்தாநம்.)

———-

இப்படி சௌலப்ய காஷ்டையை சொல்லா நிற்கச் செய்தேயும் அவிக்ருதராய் இருக்கிற சம்சாரிகளைக் குறித்து நான் ஆஸ்ரயணீயனாகச் சொன்ன சக்கரவர்த்தி திருமகன் பிற்பாடர்க்கு உதவுகைக்காக கண் வளர்ந்து அருளா நிற்க பாஹ்ய ஹானியாலே -திரு நாமத்தைச் சொல்லி பிழைக்க மாட்டாதே காலத்தை வ்யர்த்தமே போக்குகிறி கோளே என்று இன்னாதாகிறார்-

இராமபிரானும் கண்ணபிரானுமாய் அவதரித்த பெருமான்றானே திருவரங்கம் பெரிய கோயிலில்
கண் வளர்ந்தருளுகிறான்; ஜாய மாந கால கடாக்ஷமில்லாமையா லன்றோ நீங்கள் இழக்கிறது! என்று க்ஷேபித்துக் கூறுவது இப்பாட்டு–

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–11-

எல்லார்க்கும் தஞ்சமான பிராட்டிக்கு உதவுகையாலே நமக்கு உதவினான் என்று எல்லார்க்கும் சொல்லலாம் படி இருக்கையாலே –நம் சேவகனார்—அநந்ய கதிகளான நமக்குத் தஞ்சம் சக்கரவர்த்தி திருமகன் -என்கை-(நம் சேவகனார் மருவிய பெரிய கோவில்–-ராவண வதம் பண்ணி வினையற்ற பின்பும் அப்போதை யநுபவத்தை இழந்த பிற்பாடர்க்கும் உதவுகைக்காக வன்றோ கோவிலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறது. “ மா முனி வேள்வியைக் காத்து அவபிரத மாட்டிய வடுதிற லயோத்தி யெம் மரசே! அரங்கத்தம்மா” என்ற ஒற்றுமை நயமும் நோக்கத் தக்கது.-நம் சேவகனார் -அஞ்சலி ஒன்றுக்கே சேவகத் தொழில் செய்யுமவன் – இன்னார் தூதன் என நின்றான்)நித்ய ஸூரிகள் அனுபவம் உங்களுக்கும் வேண்டும் என்று அது சாத்மிக்கைக்காக இங்கே சிரமம் செய்கைக்கு வந்து கிடக்க நீங்கள் அந்ய பரராய் திரிகிறிகோளே -என்கிறார் —(காலத்தைக் கழிக்கின்றீரே––“பழுதே பல பகலும் போயின வென்றஞ்சி யழுதேன்” என்று ஞானிகள் கதறியிருப்பதைக் கேட்டு வைத்தும் நீங்கள் காலத்தைப் பாழே போக்குறீர்களே பாவகாள்! என்று வயிறெரிகிறார்.)

———

வாயாலே திரு நாமத்தைச் சொல்லச் சொன்னீர் –எங்கள் பாபத்தாலே பஹூ ஜல்பம் பண்ண ஷமர் ஆகா நின்றோம் –திரு நாமம் சொல்ல சக்தர் ஆகிறிலோம் -என்ன-ஆகில் ஸ்ரவண மாத்ரத்திலே திரு நாமம் உத்தாரகம் -என்று உத்கலோபாக்யான முகத்தாலே சொல்லி இப்படிப் பட்ட பிரபாபத்தை உடையவனூர் கோயில் -என்று உஜ்ஜீவிக்கலாய் இருக்க துக்க பாவிகள் ஆவதே -என்று இவர்கள் அனர்த்தத்தை பொறுக்க மாட்டு கிறிலேன் – என்கிறார் –

திருநாமத்தின் பெருமையை நான் அறியாதிருந்தேனாகில் ஸம்ஸாரிகளைப் பற்றிக் கவலைப் படமாட்டேன்-மநுஷ்ய ஜந்மம் எளிதிற் பெறக்கூடுமாயின் நான் கவலைப்படமாட்டேன்; இவர்கள் உஜ்ஜீவநத்திற்காகச் செய்ய வேண்டிய காரியம் மிகப் பெரியதாயின் கவலைப்பட மாட்டேன்.
திருநாமங்களின் மேன்மையோ சொல்லுந்திரமல்ல-பெறுதற்கு அரிதான மானிட ஜந்மத்தையோ இவர்கள் பெற்றிருக்கிறார்கள்; இவர்கள் செய்யவேண்டிய காரியமோ மிக அற்புதமானது-
‘எம்பெருமான் ஊர் திருவரங்கம்’ என்றிவ்வளவே சொல்லவேண்டுமத்தனை-இங்ஙனிருக்கவும் இவர்கள். விஷயாந்தரப் படுகுழியிலே தலை கீழாக விழுந்து வருந்துவர்களாகில் நான் எங்ஙனே கவலைப்படாதிருக்கமுடியும்? இவர்கள் சிறிது திருந்தினராகில் என் அநுபவத்திற்கு எவ்வளவோ துணையாகுமே! என்கிறார்–

நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே–12-

ஒருவனுடைய அந்திம தசையிலே திரு மந்த்ரத்தை உபதேசித்து இத்தை சொல்லாய் -என்ன -அவனும் –
ஆமாகில் சொல்லப் பார்க்கிறேன் -என்ற இத்தை அநேகம் உருச் சொல்லி அது தன்னைச் சொல்லாதே செத்துப் போனான்-இரண்டும் அஷரம் ஒத்து இருக்கச் செய்தேயும் சொல்ல ஒட்டிற்றில்லை இறே பாப பலம் —அதனுக்கே கவர்கின்றேனே –-அதனுக்கே கிலேசப்படா நின்றேன் -என்கிறார்-சுக ரூபமான திரு நாம ஸ்பர்சத்தாலே ஆநந்த நிர்பரராய் இருக்கைக்கு யோக்யமானவர்கள் துக்க பாவிகள் ஆவதே -என்று இறே இவர் கிலேசப்படுவது – அவதாரணத்தாலே--எனக்கு கரைதல்-எனக்கும் பிறர்க்கும் கரைதல் செய்ய ஒண்ணாதபடி -சம்சாரிகள் துக்கம் எனக்கு ஆற்றப் போகிறது இல்லை -என்கிறார்
கவலை -துன்பம்

———–

சம்சாரிகளை நோக்கி ஹிதம் சொல்லுகை தான் அவர்களுக்கு அசஹ்யமாம் அளவானவாறே
இவர்கள் துஷ் ப்ரக்ருதிகள் என்று பாராதே துர்க்கதியைப் பார்த்து ஸ்வ கதமாக இவர்கள் ஸ்வரூபம் பகவத் அர்த்தமாய் இருக்கிற படியை அறிந்து இலர்களே ஆகிலும் ஓர் உபாதியால் அன்றியே வாயால் திருவரங்கம் -என்பார்கள் ஆகில் சம்சாரம் கரம்பெழுந்து போம் ஆகாதே -என்கிறார் –

(கீழெல்லாம் பிறருடைய துயரத்தைக் கண்டு தாம் பொறுக்க மாட்டாமல் கவல்கிறபடியை வாய் விட்டுச் சொன்னார்;ஒன்றும் பயன்பட வில்லை; இனி பரோபதேசத்தில் நின்றும் மீண்டு விடுவோம் என்று பார்த்தார்;பிறர்க்கென்றே அவதரித்த இவர் எங்ஙனே சடக்கென மீளக் கூடும்?-தீய குணம் நிறைந்த பிள்ளையைப் பற்றி ஒன்றும் கவனிக்கக் கூடாதென்று தகப்பன் மீள நினைத்தாலும் அந் நினைவின்படி உடனே மீள முடியுமோ? அப்படியே இவ் வாழ்வாரும் பிறருடைய துயரத்தைப் பற்றிக் கவலைப்படுவதினின்றும் உடனே மீள மாட்டாமல் அவர்களை நோக்கிக் கூறுகிற முறையை மாத்திரம் விட்டிட்டு, தம் நெஞ்சோடு தாமே வருந்துகின்றார், இப்பாட்டில்–)

எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –13-

(இவ்வுலகத்திலுள்ளோர் யாவரும் எம்பெருமானுடைய திருப்பதியின் திருநாமத்தைச் சொன்னாராகில்
அதுவே காரணமாகப் பரம பதத்தை அடைவராதலால் அப்போது நரகத்திற்குச் செல்வார் ஒருவரு மில்லாமற் போக, அந் நரகம் புல்லெழுந்தொழியும் என்று உரைப்பாருமுண்டு; இப் பொருளில், பொறி இல் என்று பிரித்து ‘அழகு இல்லாத’ எனப் பொருள் கொள்க.) போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே -திருவாய்மொழி

————-

பிறர் முகம் பார்த்து சொல்லியும்-தம்மிலே சொல்லியும்-இப்படி ஹிதம் சொன்ன இடத்திலும் அவர்கள் விமுகர் ஆகையாலே அவர்களை வெறுத்து-அவர்களோட்டை சகவாசத்தாலே வந்த கிலேசம் தீர
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுவாரைப் போலே கோயிலை அனுபவித்து இப்படி தங்களுக்கு செல்ல பிராப்தமாய் இருக்க இத்தை அநாதரிப்பதே என்று அவர்களை உபேஷா வசனத்தைப் பண்ணி இவர்
பரோபதேச சாந்நிவர்த்தகர் ஆகிறார் –-இது ஸ்வ அனுபவமாய் இருக்க பரோபதேசமாகத் தலைக் கட்டுகிறது-சத்துக்கள் அனுபவ ஜ்ஞானம் பிறர்க்கு கர்த்தவ்யமாக கடவது இறே-

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–14-

மெய் கண் மூக்கு செவி நான்கினுக்கும் சோலை வளப்பம் விஷயம் ஆகுமே-சமஷ்டியாக அண்டர் கோன் அமரும் சோலை -சொன்னால் வாய்க்கு இன்பம் —திரு நாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால் இறைப்பொழுதும் எண்ண கிலாது போய் உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே -பெரியாழ்வார் -4-4-3-தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-“மிண்டர்பாய்ந்துண்ணுஞ் சோற்றை விலக்கி நாய்க்கிடுமிளீரே.”)“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;
இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.-தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.

இது வரை பகவத் விஷய விரோதிகளான பாவிகளை நினைத்ததற்கும் அவர்களோடு ஸம்பாசனை செய்ததற்கும் ப்ராயஸ்சித்தமாக “வண்டினமுரலுஞ் சோலை” இத்யாதியைப் பரம போக்யமாகத் தாம் அநுஸந்திக்கச் செய்தேயும், மீண்டும் “திருவரங்கமென்னாமிண்டர்”என்று அப்பாவிகளையே நினைக்கிறார்.-அவர்களையொழிய இவர்க்கு ஒருக்ஷணமும் செல்லாது போலே.-ஸம்ஸாரத்திலேயே நெடுநாள் ஊன்றினவன் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவரோடுண்டான பற்றை அறுத்துக்கொண்டு பகவத்விஷய சிந்தையினாலேயே போதுபோக்குவேணுமென்று பெருமுயற்சி செய்தாலும் பழையதான வாஸநையின் கணத்தினால் அந்த ஸம்ஸாரப்பற்றை விரைவில் அறுத்துக்கொள்ள முடியாமல் “அங்குற்றேனல்லே னிங்குற்றேனல்லேன்” என்றாற்போல இருகரையனாய்த் தடுமாறுமா போலே பராங்முகரையும் சீர் திருத்தி மங்களாபாஸநத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்காகப் பாடு படுகையாகிற ஒரு விலக்ஷண ஸம்ஸாரத்திலே நெடுநாளாக ஊன்றின இவ்வாழ்வார், மநோரதம் நிறைவேறப்பெறாத வருத்தத்தினால் அப்பாவிகளின் பற்றை அறுத்துக் கொள்ளவேணுமென்று பெருக்க முயன்றாலும் அது இவர்க்கு விரைவில் கைகூடுகிறதில்லை.
மங்களாஸாஸணத்திற்கு ஆள் சேர்க்கப் படுகிறபாட்டின் உறைப்பு என்னே–

——–

முதல் மூன்று பாட்டாலே -ஸுவ லாபத்தைப் பேசி –அனந்தரம் – பதினொரு பாட்டாலே -பரோபதேசம் பண்ணி – அது தன்னை சம்சாரிகள் ஸ்வீகரியாமையால் அவர்கள் பக்கல் நின்றும் கால் வாங்கினாராய் நின்றார் -கீழ் –

இவர்களிலே அந்ய தமனாய் இருந்துள்ள என்னை – பரோபதேசம் பண்ண வல்லனாம்படி ஸ்வ விஷயத்திலே –சம்சய நிவ்ருத்தி முதலாக –பரம பக்தி பர்யந்தமாக பிறப்பிப்பதே -என்று பெரிய பெருமாள் தமக்கு நிர்ஹேதுகமாகப் பண்ணின மகா உபகாரத்தை –மேல் பத்துப் பாட்டாலே -அருளிச் செய்கிறார் –-இது இறே க்ருதஞ்ஞர் உடைய ஸ்வ பாவம் இருக்கிற படி – என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்னா நிற்பார்கள் இறே –

இப்பாட்டில் –அத்வேஷம் பிறந்த அளவில் தன் படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்கும் என்றும் தானும் ஒருவன் உளன் என்று அறிந்த அளவில் சம்சய நிவ்ருத்தியைப் பண்ணி வைக்கும் என்றும் இவ் வர்த்தத்தை எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே காட்டித் தர அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

தம் உபதேசத்தை மதியாத ஸம்ஸாரிகளைக் குறித்து ஹிதம் கூறுவதில் நின்றும் கால் வாங்கின ஆழ்வார் –‘ இந்த ஸம்ஸாரிகளுக்குள்ளே ஒருவனான என்னைப் பரோபதேசம் பண்ண வல்லேனாம்படி
எம்பெருமான் தன் விஷயத்தில் படிப்படியாகப் பரமபக்தியளவான ஊற்றத்தைப் பிறப்பித்து
இப்படி நிர்ஹேதுகமாகக் கடாக்ஷித்தவாறு என்னே!’ என்று தமது நன்றியறிவு தோன்றக் கொண்டாடுகிறார்; இதுவன்றோ அறிவுடையாருடைய செயல்.
-‘தெய்வம் உண்டு’ என்று ஆதரவோடு அங்கீகரியாவிடினும் ‘தெய்வம் உண்டு’ என்று ஒருவன் சொன்னால் அதில் ஆக்ஷேபாதிகளாலே பகைமை பாராட்டாதிருக்கும் நிலை – அத்வேஷமெனப்படும்:-இதுவே பரமபக்திக்கு முதற்படி எனப்படும்.-ஒருவஸ்துவில் ஒருவனுக்கு த்வேஷம் குடிகொண்டிருந்தால் அவன் அவ்வஸ்துவைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது: அன்றி, ‘நேசமுமில்லை, த்வேஷமுமில்லை’ என்கிற நிலைமையிலிருந்தால்
அவன் நாளடைவில் அவ்வஸ்துவிடத்தில் பரமபக்திபர்யந்தமான அன்பைப் பெற்றுவிடக்கூடும் என்பது
அனைவர்க்கு அநுபவம் ஸித்தமான விஷயம்.-ஆனது பற்றியே அத்வேஷமென்பது பரமப்ரீதிக்கு முதற்படியாகக் கொள்ளப்புட்டிருக்கின்றதென்க.-இத்தகைய அத்வேஷமுடையார்க்குத் தனது ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்தும், அவ்வாறன்றிப் பகைமை கொண்டிருக்கும் நாஸ்திகர்க்குத் தனது ஸ்வருபத்தைக் காட்டித் தராமலும் இருப்பவனான எம்பெருமான்,-‘தெய்வம் ஒன்று உண்டு’ என்று மாத்திரம் கருதுபவரான அந்த ஆஸ்திகர்க்கு ‘நாம் அடைய வேண்டிய அக்கடவுள்தான் யாவன்?
அக்கடவுளை நாம் அடையுமிடத்து நமக்கு நேரக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்போன் யாவன்?’
என்று இவை முதலாகத் தோன்றுகிற ஸந்தேககங்களையெல்லாம் தனது வடிவழகு முதலியவற்றால் போக்குவான்:
அப்படிப்பட்டவன் நித்ய வாஸம் செய்யுமிடம் திருவரங்கம் என்பது இப்பாட்டின் கருத்து.
எம்பெருமானுடைய இத்தகைய தன்மையை இவர் தம் அநுபவத்தாலே உணர்ந்து கூறினராதலால்
தம்முடைய க்ருதஜ்ஞதையை வெளியிடுவது இப்பாட்டு என உரைக்கப்பட்டதென்க.

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-

மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்-பொய்யனாகும் புற-வேதங்களும் இவனுக்கு சொத்தே-ஐயப்பாடு -ஐயம் சங்கை -பாடு விபரீத ஞானத்தால் பட்டு நிற்கும் நிலை-சிஷ்யச் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம் -என்று-அர்ஜுனனுக்கு உபதேசத்தாலே சம்சயம் அறுத்தான் இத்தனை – அவ்வளவு அல்லாதார்க்கு அழகாலே சம்சயத்தை அறுத்து கொண்டு வந்து –-தோன்றும் – பிரகாசிக்கும்-திருமேனி யடிகளுக்கு -என்றும் – கண்டவாற்றால் உலகே தனது என்று நின்றான் -என்றும் – சொல்லுகிறபடியே கண்ட போதே சர்வாதிக வஸ்து என்று நிர்ணயிக்கலாம் படி இறே திரு வடிவு தான் இருப்பது –-ஊர் அரங்கம் அன்றே –இவ் வழகு ஓர் தேச விசேஷத்திலே போனால் அன்றோ லபிக்கல் ஆவது என்ன-அது வேண்டா –சம்சாரத்துக்கு உள்ளே கோயிலிலே அனுபவிக்க அமையும் -என்கிறார் –-பரம பதம் கலவிருக்கையாக இருக்க-நம் தம் கோயில் என்னும்படி யாய்த்து-கோயிலில் நித்ய சந்நிதி இருப்பது –

———-

பிராப்யமும் பிராபகமும் தானே என்னும் இடத்தில் சம்சயத்தை அறுத்துத் தந்தாப் போலே தத் அனந்தர பாவியான ஆதரத்தை தன் பக்கலிலே அனுகுணமாகப் பெருகும் படி பண்ணினான்–என்கிறார்-

எம்பெருமானால் தாம் பெற்ற பேற்றை மற்றொரு வகையாகப் பேசுகிறார்.-முன்னிரண்டடிகளால்-தாம் முன்பு நின்ற நிலையைக் கூறி, பின்னடிகளால்-இப்போது பெற்ற நன்மையைக் கூறுகிறார்.

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-

கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரி தந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
–பெரிய திருமொழி -1-1-7-

இவருக்கு சம்சயத்தை அறுக்கையும் ஆதரத்தை பெருக்குகைக்கும் சாமக்ரி ஒன்றே என்றது ஆய்த்து –-அழகன்-அழகையே நிரூபகமாக உடையவன் –-ஊர் அரங்கம் அன்றே=இவர் திரு உள்ளத்திலே புகுருகைக்கு அவசர பிரதீஷனாய் இருந்தவனூர் கோயில் -என்கிறார்-பரம பதம் கலவிருக்கை என்னும்படி நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –ருசி பிறந்த போது புக்கு அனுபவிக்கலாம் தேசம் இறே இது –(“தன்பால் ஆதரம் பெருகவைத்த”என்ற அடைமொழியை அழகனிடத்திலே அந்வயிக்காமல் அழகிலே அந்வயிக்க வேண்டும்:–எம் பெருமான் ஓர் அழகு உடையவன்; அவ் வழகு எப்படிப்பட்ட தென்றால், சூதனாய்க் கள்வனாகி வலையுள்பட்டழுந்து வேனைப் போதரேயென்று சொல்லிப் புந்தியிற் புகந்து தன் பால் ஆதரம் பெருக வைத்து-என்றிங்ஙனே உய்த்துணர்க.-தன் பால்-எம்பெருமானிடத்திலே என்றபடி.)

————-

கீழ்-ஆதரம் பெருகின படி சொல்லிற்று-இதில் அகவாயில் ஆதரம் விளைந்து புறவே கட்டு அழியாமல் இருக்கை அன்றிக்கே சஷூராதி கரணங்களும் தன்னைக் கண்டு சேதன சமாதியாலே களிக்கும் படி பண்ணினான் – என்கிறார் –

தரித்ரனுக்கு நித்யபாயஸம் கிடைத்தாற்போலே, ஒருவகை யோக்யதையுமில்லாத கல்நெஞ்சனான எனக்கு அழகிய மணவாளன் ஸேவை ஸாதிக்கப் பெற்ற பாக்கியத்தை நான் என்னவென்று சொல்லுவேன் என்று தடுமாறுகின்றனர்.

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும் இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று – கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –-இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து சேதன சமாதியாலே தானே களியா நின்றன –-ராமம் மே அநுகதா த்ருஷ்டி ––கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இறே விஷய ஸ்வபாவம் இருப்பது –

———-

கண்களினுடைய களிப்புக்கு போக்கு வீடான ஆனந்தா ஸ்ருக்கள் பிரவஹிக்கையாலே குட்யாதி வ்யவதானம் போலே அநுபாவ்ய விஷயத்தை மறையாது நின்றது -என்று வெறுக்கிறார் –கண்ண நீர் ஊற்று மாறாத படி வெள்ளமாய் செல்லுகையாலே இத்தை மாற்றி ஒருக்கால் கண்டதாய் விடப் போகிறது இல்லை – இவ்விஷயத்தை அநாதி காலம் பாபத்தாலே அனுபவிக்கப் பெற்றிலேன் –
இன்று கண்ண நீர் மறைக்க அனுபவிக்கப் பெற்றிலேன் என் கார்யம் வெள்ளக்கேடும் வறட்டு கேடுமாய் யாய்த்து -என்கிறார் ––(தக்தஸயோ முக்த-ஸமஸ்த-தத்-குணோ நைவாத்மனோ பஹிர் அந்தர் விகாஸ்தே பரத்மநோர் யத்-வ்யவதானம் புரஸ்தத் ஸ்வப்நே யதா புருஷஸ் தத்-விநாஸே(SB 4.22.27)] “ஒருவன் எல்லாப் பௌதிக ஆசைகளி லிருந்தும் விடுபட்டு, எல்லாப் பௌதிகக் குணங்களிலிருந்தும் விடுபடும்போது, ​​அவன் வெளி மற்றும் அகச் செயல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து செல்கிறான். அப்போது ஆன்மாவிற்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு, சுய-உணர்தல் முன் இருந்த, அழிகிறது. ஒரு கனவு முடிந்ததும், கனவுக்கும் கனவு காண்பவருக்கும் இடையே வேறுபாடு இருக்காது.)

எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் , கண்களினுடைய களிப்புக்குப் போக்குவீடான ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ! இக் கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்கவொட்டாமல் துடைச்சுவராய்த் தடை செய்கின்றவே ! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான்
இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார்–

இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக்கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும்புதிரு மாலோ வேன்செய்கேன் பாவியேனே-18-

கண்ண நீர் ஊற்று மாறாத படி வெள்ளமாய் செல்லுகையாலே இத்தை மாற்றி-ஒருக்கால் கண்டதாய் விடப் போகிறது இல்லை –-இவ்விஷயத்தை அநாதி காலம் பாபத்தாலே அனுபவிக்கப் பெற்றிலேன் –
இன்று கண்ண நீர் மறைக்க அனுபவிக்கப் பெற்றிலேன்-என் கார்யம் வெள்ளக்கேடும்-வறட்டு கேடுமாய் யாய்த்து -என்கிறார் –அத்தலையில் வை லஷண்யத்தை அளவு படுத்த ஒண்ணாது
அனுபவ ஜனித ஹர்ஷத்தை அளவு படுத்தப் போகிறது இல்லை
–

————-

சஷூர் யாதி அவயவங்களுக்கு பிறக்கிற விக்ருதிகள் அன்றிக்கே தத் ஆஸ்ரயமாய் அவயவியான சரீரம் தானே கட்டழியா நின்றது-என்கிறார்–இவரை உருக்கின பரிகரம் தான் இருக்கிறபடி –பூமியை சிருஷ்டித்தது – புண்ய பாப மிஸ்ரங்களாயும்- பாப பிரசுரங்களாயும் – மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்களாயும் இருந்துள்ள பதார்த்தங்கள் வர்த்திக்கைக்காக என்றும் –-ஆகாசத்தை சிருஷ்டித்து
புண்ய யோநிகளான தேவதைகள் வர்த்திக்கைக்காக என்றும் நினைத்து இருப்பார் –-நடுவில் திக்குகளுக்கு ஒரு விநியோகம் இல்லை இது வ்யர்த்த ஸ்ருஷ்டியோ என்று இருப்பர்-இப்போது அங்கன் அன்று – இதுவும் ஸ பிரயோஜனம் என்னும் இடமும் கண்டார்-சேதன ஸ்ருஷ்டி -முமுஷூ ஸ்ருஷ்டி யானால் போலேயும் -சேதனர் வர்த்திக்கைக்கு லோக ஸ்ருஷ்டி யானால் போலேயும் திக்குகளை ஸ்ருஷ்டித்ததும் சேதனர்க்கு ருசி ஜனகமான ருசி வ்யாபாரார்த்தமாகக் கண்டதாகாதே -என்று இருக்கிறார்-

கண் முதலிய அவயவங்களுக்கு உண்டாகிற விகாரமே யல்லாமல் அவற்றுக்கு ஆஸ்ரய மாய் அவயவியான ஸரீரமும் கட்டழியாநின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார்.-அழகிய மணவாளன் நான்கு திக்குக்களுக்கும் தன் ஸம்பந்தமுண்டாம்படி ஸேஷஸயநனாய் யோக நித்திரை செய்தருள்வதை ஸேவித்துத் தமது ஸரீரம் நீராய்க் கரைந்து உருகிச் செயலற்றிருத்தலை உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றனரென்க–-பூமியின் ஸ்ருஷ்டி – மநுஷ்யதிர்யக்ஸ் தாவரங்களான பொருள்கள் வாழ்தற்காக என்றும் ஆகாஸத்தின் ஸ்ருஷ்டி – தேவர்கள் வாழ்தற்காக என்றும் ஏற்பட்டிருக்கிறது;-திக்குக்களின் ஸ்ருஷ்டி வ்யர்த்தம் என்று நினைக்க வேண்டா;
சேதநர்க்கு தன்மீது அன்பைக் யுண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளி கொள்வதற்காகவே
திக்குக்களை ஸ்ருஷ்டித்ததும் என்று இப்பாட்டால் கூறுவதாக விஸேஷார்த்த முரைப்பார்-

குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே--19-(உடல் நெக்கு உருகுமாலோ பாட பேதம் -நெக்கு கரைந்து)

மேற்கு கிழக்கு -இப்பொழுது சொல்வது மேல் ஊர்த்த-ஆகாசத்தை நோக்கிச் செல்வத்தையும்-கீழ் -பூமிக்கு கீழ் என்பதையும் காட்டும் —குடக்கு -குணக்கு -என்பதே சரியான தமிழ் சொற்கள்-இவன் விட்டு வந்த திக்கு வடக்கு பின்புறம் காட்டுகிறான்-பூமி மேற்கே இருந்து கிழக்கே சுற்றுவதால் அது சுற்றிச் செல்லும் வழி வழியே இவன் திருவடிகளும் செல்லுகிறது -ஞான மார்க்கத்துக்குப் பின்புறமும் கர்ம மார்க்கத்தில் உள்ளார் சேவிக்கப் பங்காக தென் திசை நோக்கி சேவை சாதிக்கிறான்

என் செய்கேன் உலகத்தீரே – பெரிய பெருமாள் அழகை கண் வைத்து குறி அழியாதே புறப்படுகிற சம்சாரிகளைப் பார்த்து உங்களைப் போல் தரித்து இருக்கைக்கு ஒரு விரகு சொல்ல வல்லி கோளே -என்கிறார்-தம்மோடு சஜாதீயராய் இருக்கிற ஆழ்வார்களைக் கேட்கில்-என் செய்கேன் பெருமாளே –
என்று அவர் தம்மை கேட்கில் தம் எளிமை அறிவித்ததாய்-அத்தாலே எதிர்தலை அழிந்தது ஆகாதே என்று அவர் மேணானித்து இருக்கக் காணும் யாய்த்து பலம் –-இவ் விஷயத்தைக் கண்டு வைத்து குறி அழியாதே இருக்கிற சம்சாரிகளைப் பார்த்து உங்கள் அருகு வாராத பரிஹாரத்திலே எனக்கும் ஒரு சிறாங்கை இட வல்லி கோளே
-என்கிறார் –

———-

இவ் விஷயத்தில் ப்ராவண்யத்தை தவிர்த்து எங்களைப் போலே தேக யாத்ரா பரராய் வர்த்திக்கவே தரிக்கலாம் -என்ன-கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்து–இஸ் ஸ்மர்த்தி யடங்க எங்களுக்கு -என்னும்படியான ஸ்வரூப ஞானம் உடைய எங்களுக்கு–அஹம் மம -என்கிற உங்களைப் போலே அகல விரகு உண்டோ –என்கிறார் –

கீழ் “பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே” என்றும்,-“உடலெனக் குருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே” என்றும் கதறின ஆழ்வாரை நோக்கிச் சில ஸம்ஸாரிகள்-“ஓய்! பகவத் விஷயத்திலே அகப்பட்டு ஏன் இங்ஙன கதறுகிறீர்?-அதில் ஊற்றத்தை விட்டு எங்களோடே கூடினீராகில் என் செய்கேன்! என் செய்வேன்!! என்று வாய் வெருவ வேண்டாதபடி தரித்து ஸுகமே வாழலாமே!-உம்முடைய ஸ்வயம் க்குருதாநத்தம் மிகவ மழகிறது! என்றாற்போலே சில சொல்ல;
அது கேட்ட ஆழ்வார்,-‘ பாவிகாள்! கண்வளர்ந் தருளுகிற அழகைக் கண்டு வைத்து இவ்வழகெல்லாம் நமக்காகவாயிற்று? என்று களிக்கும் படியான ஸ்வரூப ஜ்ஞாநமுடைய:எங்களுக்கு, “அஹம்-மம” என்றிருக்கிற உங்களைப் போல் அகலமடியுமோ? என்கிறார்.

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-

எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது “தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?

——–

அகலப் போகாதாகில் பரிச்சேதித்து அனுபவிக்கப் போகலாகாதோ -என்கிற திரு உள்ளத்தைக் குறித்து இவ் விஷயத்திலே துணிவு இல்லாமையாலே அநாதி காலம் இழந்த அறிவு கேடு போலே இருப்பது ஓன்று காண்-இப்போது பரிச்சேதித்து அனுபவிக்கலாம் என்று கணிசிக்கிற இதுவும் –என்கிறார் –

கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும்,-“அரவணைத் துயிலுமா கண்டு” என்றும்-அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையா லன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்;-அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காண வேண்டா;-ஒரு மூலை யிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர் சொல்ல-அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் –-அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.

பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில்
மணியினார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே–21-

கண் வளர்ந்து அருளுகிற அழகை கண்டு நெஞ்சாலே பரிச்சேதிக்கலாம் படி இருந்ததோ-ஸ்வரூபத்தை பரிச்சேதிக்கிலும்-தத் ஆஸ்ரயமான கல்யாண குணங்களை பரிச்சேதிக்கிலும்-வடிவு அழகை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை –-நினைவுக்கு பரிகரம் ஆனது ஒழிய வேறே ஒரு கரணத்தாலே நினைக்கும் இத்தனை காண் –

—————–

நினைக்க ஒண்ணாதாகில் வாய் விட்டு பேசினாலோ -என்ன–மநோ பூர்வோ வாக்குத்தர -அன்றோ
மனசால் பரிச்சேதிக்க ஒண்ணாதா விஷயத்தை பாசுரம் இட்டு முடிக்கப் போமோ ––பேசலாம் என்று -அறிவு கெட்ட நெஞ்சே சொல்லாய் –என்கிறார் –

நினைக்க முடியாதாகில் வாய்விட்டுப் பேசினாலோவென்ன “மந: பூர்வோ வாகுத்தர:” என்றன்றோ சொல்லியிருப்பது; மநஸ்ஸாலே பரிச்சேதிக்க வொண்ணாத விஷயத்தை பாசுரமிட்டு முடிக்கப் போமோ என்கிறார்–

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்–22-

முன் பாசுரத்தில் விசாரித்தால் தொல்லை நெஞ்சாக இருந்தது –இப்பொழுது சூது வாது அறியாத பேதை நெஞ்சாக மாறி தூய்மை யானதைக் குறிக்கும்-

யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று வேதம் பேசினபடியே நாமும் “எம்பெருமானுடைய பெருமையைப் பேசமுடியாது” என்று பேசுமத்தனையல்லது பெருமை அறியமுடியாது என்றும் பொருள்படும்.)(ஆசற்றார் நம் ஆழ்வார் போல்வார்–நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று ஏக சிந்தையராய் இருக்கும் சித்தோபாய விசுவாசிகள்–மாசற்றார் பெரியாழ்வார் போல்வார்-வடதடமும் வைகுந்தமும் மதிள் த்வாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பாள் இடவகை கொண்டனையே -என்றபடி நித்ய வாசம் செய்து அருளுபவன் என்று சொல்லிக் கொண்டு வணங்கினால் நமக்குள்ளும் நித்ய வாஸம் செய்து அருளுவான்)

———–

நினைக்கவும் பேசவும் ஒண்ணாது ஆகில் இவ் விஷயத்தை விஸ்மரித்து தரித்தாலோ -என்ன பெரிய பெருமாள் உடைய கிடை அழகிலே அதி சபலனான நான் விஸ்மரித்து எங்கனே தரிப்பேன் – என்கிறார்-

உபய காவேரி மத்தியிலே ஸ்ரீரங்கத்தில் அழகிய மணவாளனது சயந திருக்கோலத்தை ஸேவிக்கப் பெற்ற பின்பு,-யான் அந்தக் கிடையழகிலே மனம் ஈடுபட்டுப் புறம்பே செல்ல மாட்டாது தவித்து வருந்துதலை யொழிய அதனை மறந்து தரித்திருக்க உபாயமுண்டோ என்று – தாம் எம்பெருமானது கிடையழகில் ஈடுபட்டமையை இதனால் கூறுகின்றனரென்க–

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே–23-

பொங்கு நீர் பரந்து -ஓடும் இடம் எல்லாம் சோலை வளம் மிக்கு –கா -சோலைகள் -விரி -பரவச செய்து –

கண்டு எங்கனம் மறந்து வாழ்கேன் –-இவ் விஷயத்தை கண்டு அனுபவிப்பதற்கு முன்பாகிலும் மறக்கவுமாம் – கண்டு அனுபவித்த பின்பு இனித் தான் எந்த பிரகாரத்தாலே மறப்பது –-வாழ்கேன் –
இவ் விஷயத்தை விட்டுப் போய் மணலை முக்கவோ –அனுபவித்தால் மறக்க ஒண்ணாது-மறந்தால் புறம்பு தரிக்க ஒண்ணாது –-ஏழையேன் ஏழையேனே--நானோ அத்யந்த சபலனாய் கிட்டினால் அனுபவிக்க மாட்டேன் – பிரிந்தால் தரிக்க மாட்டேன் –-ஏழையேன் ஏழையேனே–-முன்பு இதர விஷயங்களிலே அகப்பட்டு சிதிலராய் இருப்பார்-இப்போது பகவத் விஷயத்தில் அகப்பட்டு
புறம்பு கால் வாங்க மாட்டாதே இருப்பார் –-அது கர்மத்தாலே வந்த சைதில்யம்-இது
விஷய வை லஷண்யத்தாலே வந்த சைதில்யம்–

—————-

மனத்தினால் நினைக்கலாமே -என்றும்-பேசத் தான் ஆவதுண்டோ -என்றும்-எங்கனம் மறந்து வாழ்கேன் -என்றும் இவர் மறக்கப் புக்க வாறே இவரை நினைப்பிக்கைக்காக இவர் பக்கல் தமக்குண்டான பிரேமத்தைக் காட்டக் –கண்டு -இவ் விஷயத்தில் நமக்கு உண்டான ப்ரேமம் அசத் சமமாய் இருந்ததீ என்றும்-இன்னமும் இவ் விஷயத்தின் உடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து
தமக்குப் பிறந்த பக்தி விஷய அனுரூபமாகப் போரமையாலும் அசித் சம்ச்ருஷ்டனுக்கு பிறந்த பிரேமம்
பித்தோபஹதனுக்கு பிறந்த தெளிவு போலே விஸ்வசிக்க ஒண்ணாமையாலும் அனுதபித்து–திரு உள்ளத்தைக் குறித்து உனக்கு இதர விஷயத்தோபாதி இவ் விஷயத்திலும் க்ர்த்ரிம ஸ்நேஹமாய் விட்டதாகாதே -என்று திரு உள்ளத்தை நிந்திக்கிறார் –

எம்பெருமான் பரமபதத்தில் நித்யஸூரிகளோடு பரிமாறுவதை விட்டுவிட்டு இங்கே வந்து கண் வளர்ந்தருளுவது–உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவராகிய ஸம்ஸாரிகளை வசப்படுத்திக் கொள்வதற்காக வலை வீககிறபடியாதலால் கள்வனார் எனப்பட்டது.-வேசியைக் கண்டு பேச விரும்பியும், சோறு வாங்கி உண்ணக்கருதியும், திருவிழாக்களிலே திரண்டவர்கள் ஏமாந்திருக்கையில் கொள்ளை கொள்ளக் கருதியும் இவ்வாறு பலவகை எண்ணங்களோடே கோவிலுக்குள்ளே புகுந்தவர்களை, வடிவழகு முதலியவற்றைக் காட்டி நாளடைவில், தனக்கு அற்றுத்தீர்ந்த அடியவராம்படி, ஆக்கிக் கொள்ளுகிற எம்பொருமானைக் கள்ளனென்னத் தடையுண்டோ? “செஞ்சொற் கவிகாள்! உயிர் காத்து ஆட்செய்மின் திருமாலிருஞ்சோலை, வஞ்சக் கள்வன் மாமாயன்” என்றாரே நம்மாழ்வாரும்–

வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்;
கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே–24-

உனக்கு ப்ரக்ருதி விஷயத்தில் பண்ணிப் போந்த வாசனை இங்கும் அனுவர்த்தித்து போந்த இத்தனை ஒழிய இவ் விஷயத்துக்கு ச்த்ருசமாய் ஸ்நேஹித்தாய் அல்லையே –-விஷயாந்தரங்களில் பண்ணிப் போந்ததும் பலபக்தி யாகையாலே இங்கும் பலபக்தி பண்ணிற்று–உன் கள்ளத்தே கழிக்கின்றாயே–-இந்த கர்த்ரிம பக்தி யானது -பண்டே யுன் பாழி இறே-இங்கும் அது தன்னையே முடிய நடத்தினாய் இத்தனை இறே-விஷயாந்தரகளோ பாதியாக இது தன்னையும் நினைத்தாய் இத்தனை போக்கி
இவ் விஷயத்துக்கு அனுரூபம் அன்று இறே உன்னுடைய பிரேமம் -என்கிறார் –

———————

கீழ் பகவத் விஷயத்தில் தமக்கு பிறந்த ஆதாரம் விஷய அனுரூபமாகப் போராமையாலும் அசித் சம்சர்க்க யுக்தனுக்கு பிறந்தது ஆகையாலே பித்தோப ஹதனுக்கு பிறந்த தெளிவு போலே விஸ்வசிக்க ஒண்ணாமை யாலும் திரு உள்ளத்தைக் குறித்து அனுதபித்தவராய் நின்றார்

இனி அசித் சம்சர்க்கம் அற்று ஒரு தேச விசேஷத்திலே நித்ய அனுபவம் பண்ணுகைக்குநம் கையில் முதல் காண்கிறிலோம்-நாம் விஷயத்தை இழந்தே போம் இத்தனை -யாகாதே -என்று சோகிக்-நீர் சோகிக்கிறது என் –அசித் சம்சர்க்கம் அற்று நம்மைப் பெறுகைக்கு சாஸ்த்ரங்களிலே த்ரைவர்ணிக அதிகாரமாயும் சர்வாதிகாரமாயும் உண்டான சாதனங்கள் பிரசித்தம் அன்றோ அவற்றில் ஒன்றை அனுசந்தித்து நம்மை கிட்ட மாட்டீரோ என்ன -எனக்கு அவை ஒன்றிலும் யோக்யதையே தொடங்கி இல்லை என்றும் மேல் பத்துப் பாட்டாலே தம்முடைய உபாய சூன்யதையை அருளிச் செய்கிறார்

ஆனால் பின்னை கீழ் இவருக்கு பிறந்ததாகச் சொன்ன ஜ்ஞான பக்திகள் என்னவாய்த்து என்னில் பகவத் பிரசாதத்தாலே பிறந்த போக உபகரணமான ஜ்ஞான பக்திகள் யாய்த்து அங்குச் சொல்லிற்று –
அவை சாதன கோடியிலே அந்தர்பவியாது —அவ் வநுபவம் காதாசித்கம் அன்றிக்கே நித்யமாகைக்கு தம் கையிலே சாதனம் இல்லை என்கிறார் -இங்கு –இதில் முதல் பாட்டில் பிரசித்தமாய் தரை வர்ணிகர் ஆனவர்களுக்கு அதிகாரமான ஞான பக்திகள் எனக்கோர் அந்வயம் இல்லை–என்கிறார் –

கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் என்று சாஸ்த்தரங்களில் உபாயமாகக் கூறப்பட்டவற்றை
அநுஷ்டிப்பதற்கு ஏற்ற ப்ராஹ்மண்யமிருந்தும் ஐயோ!; எனக்கு ஒன்றிலும் யோக்யதை இல்லையே என்று தமது வறுமையைக் கூறுகின்றார்
–

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-

அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் – என்னை தேவரீருக்கு கிருபா விஷயம் ஆக்கி கிருபை பண்ணி யருள வேண்டும் –-அதாவது-அனுதாபத்தையும் பிறப்பிக்க வேணும் -என்கை –-என் தான் -நமக்கு இங்கனே அடியே தொடங்கி செய்து கொண்டு போர வேண்டுகிற நிர்பந்தம் தான் என் என்னில் –-அரங்க மா நகர் உளானே –தம்தாமுக்கு என்ன ஒரு முதல் இல்லாதவரை ரஷிக்கைக்காக வன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று-குறைவற்றாரை ரஷிப்பார்க்கு இங்கே வர வேணுமோ –-அங்கே இருக்கை அமையாதோ –-இங்கே வந்தது கிடை அழகைக் காட்டியும் அர்ச்சக பராதீனமான சீலத்தைக் காட்டியும் ருசியே தொடங்கி உண்டாக்கி ரஷிக்கைக்காக வன்றோ –

—

த்ரை வர்ணிக அதிகாரமான உபாயம் இல்லை யாகில் சர்வாதிகாரமான -அர்ச்சன ஸ்த்வநாதிகள் தான் உண்டோ வென்னில் – அதுவும் இல்லை -என்கிறார் –

கடல்வண்ணா! கடல்வண்ணா!!” என்று கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,‘த்ரை வர்ணிகாதிகாரமான உபாயங்களில் உமக்கு அந்வயமில்லையென்றீர்; இருக்கட்டும்;
ஸர்வாதிகாரமான அர்ச்சகம், ஸ்தோத்ரம் முதலியவற்றில் எதாவது அந்வயமுண்டோ? என்று கேட்க,
ஐயோ! ஒன்றிலும் அந்வயமில்லையே! என்று கையை விரிக்கிறார்–

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே–26-

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -பக்தியின் நான்கு லக்ஷணங்கள் -தூய்மை -குளித்து மூன்று அனலை ஓம்பும் என்றார் கீழ் -இதில் -போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைதலையும்–தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்பாததையும் –காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலாமையையும்-செய்யச் சக்தி அற்று இருப்பது வினைப் பயன் என்கிறார்-நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8–நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

அசந்நிஹிதராய் இழந்தேன் அல்லேன் –-பிராப்தி இல்லையால் இழந்தேன் அல்லேன்-செய்த அம்சத்திலே பிழை பிடிக்குமவராய் இழந்தேன் அல்லேன் –-என் இழவுக்கு அடி பாபம் இறே –-ஸ்ரீ கௌஸ்துபம் போலே உகப்பான வஸ்து கிடீர் இப்படி வ்யர்த்தமாய்ப் போய்த்தது –-அரங்கத்து உறையும் இன் துணைவருக்கு கிடீர் நான் தூரஸ்தன் ஆய்த்து –-கஷாய பாநம் பண்ணுமா போலே ஹித புத்தியாலே சேவிக்க வேண்டும் விஷயமாய்த் தான் இழந்தேனோ –-பாலே மருந்து ஆனால் போலே
தர்ச நீயரான தேவரீரே மோஷ ப்ரதராய் இருக்க வன்றோ இழந்தது
–-என் செய்வான் தோன்றினேனே
விசித்ரா தேக சம்பத்தி -என்கிறபடியே-தேவரீருக்கு உறுப்பான ஜென்மமாய் இருக்க-நான் ஏதுக்குப் பிறந்தேன் –-என் செய்வான் பிறந்தேன் -என்னாதே-தோன்றினேன் -என்கிறது –-உத்பாதங்கள் போலே அநர்த்த ஹேதுவாகப் பிறந்தேன் -என்கை-உத்பாதங்கள் உடைய தோற்றம் தான் தமக்கும் பிரயோஜனம் இன்றிக்கே பிறர்க்கும் அனர்த்தமாய் இறே இருப்பது – – அது போலே யாய் விட்டதே என் ஜன்மம் -என்கிறார் –

———————

மனுஷ்ய அதிகாரமானவை ஒன்றும் இல்லை யாகில்-திருவடி திரு அநந்த ஆழ்வான் முதலானவர்களைக் கொள்ளும் அடிமையை சாஸ்திர அவஸ்தை இன்றிக்கே இருந்துள்ள திர்யக்குகளைக் கொள்ளுவதாக நாம் வந்து அவதரித்த காலத்தில் திர்யக் சாமான்யத்தாலே அணில்கள் ஸூத்த பாவனை யோடே பண்ணின சில கிஞ்சித் காரம் உண்டு – அது தானும் உண்டோ வென்னில் அதுவும் இல்லை என்கிறார் –

மநுஷ்யனாய்ப் பிறந்தவன் செய்யக்கூடிய கிஞ்சித்காரங்களில் மாத்திரமே யன்று-எனக்கு அந்வயமில்லை யென்பது;-ஸாமந்யமான திர்யக்குகள் செய்யக் கூடிய கிஞ்சித்காரமம் பாவியேன் செய்யப் பெற்றிலேன் என்று வருந்துகின்றார்–

குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –27-

தரங்க நீர் -அலை வந்து மணல்களை அடித்துக் கொண்டு போவதை பார்த்தும் மணலால் அணை கட்ட துணிவு கொண்ட அணில்கள் பக்தியைக் காட்டும்-சலம் -சங்கை நெஞ்சு -மனம் புத்தி சித்தம் மூன்றையும் குறிக்கும–நேஹாபி க்ரம நாஸோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே–ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்–৷৷2.40৷৷–மனம் மொழி வாக்கு -இவற்றில் ஏதாவது ஒன்றாலும் சிறிய கைங்கர்யம் செய்தாலும் மிக்க பலனை அருளுவான் அன்றோ-

அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளைய பெருமாளைப் போலே சர்வ வித கைங்கர்யங்களுக்கும் அர்ஹமான அருமந்த வஸ்து கிடீர் இது –விஸ்மரித்து அனர்த்தப் பட்டு போவதே –இவ் விஷயம் சந்நிஹிதம் இல்லாமையாலே யாதல்-இத் தலையில் யோக்யதை இல்லாமையாலே யாதல் -அன்று இறே-மறந்தேன் உன்னை முன்னம் -என்கிறபடியே விஸ்மர்த்தியாலே இறே அனர்த்தப் பட்டது –-சலமிலா மரங்கள் போலே என்னவுமாம்–மரங்கள் போலே சலமிலா என்னவுமாம்-மரத்தை ஓர் ஆயுதத்தால் சலிப்பிக்க வுமாம் –நெஞ்சை ஒன்றாலும் சலிப்பிக்க ஒண்ணாது -என்றபடி-

——————-

அணில்கள் திர்யக்காக வைத்து நமக்கு கிஞ்சித் கரிக்க உத்யோகித்த பாவ சுத்தி உமக்கு இல்லை யாகில்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பொய்கையிலே புக்கு இடர் பட்டு நாம் சென்று தனக்கு உதவக் கடவதாக நினைத்ததொரு நினைவு உண்டு–அது தானும் உமக்கு உண்டோ -வென்ன அதுவும் இல்லை -என்கிறார் – –

மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான்“நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே அரைகுலையத் தலைகுலைய மடுவின் கரையிலே ஓடிவந்தவனன்றோ எம்பெருமான்;-இப்படி ஆச்ரித ஸுலபனாய் ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல் நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ?-ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரமநிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்;-இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்;‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான்.-இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப் பெறாத பாவியேன் ஏதுக்காக ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி –

உம்பரால் அறியலாகா யொளி யுளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே–28-

ஓளியுளார் -ஆதித்ய வர்ணம் -ஸ்ருதி வாக்கியம்-ஸம்ஸார சாகரம் –ஐந்து இந்திரியங்கள் ஆகிய முதலைகள் இங்கு -ஸஹஸ்ர கோடி ஜென்மங்கள் –கஜேந்திரன் போல் ஸ்வ வியாபாரம் தவிர்த்து நாராயணா ஆர் இடரைக் கழித்து அருள்வாய்-என்ற யுக்தி மாத்திரத்தாலே மாயையில் நம்மை விடுவிப்பான்–

ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய – என்கிறபடியே-ஜன்ம பிரயோஜனம் அடிமை யானால்-அதுக்கு அசலான என் ஜன்மம் வ்யர்த்தம் இறே-பிறந்தேன் -என்னாதே-தோன்றினேன் -என்றது –-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளைய பெருமாள் பிறவி போலே ஆகில் இறே பிறந்தேன் -என்னாலாவது – அது இல்லாமையால் தோன்றினேன் -என்கிறார் –

——————-

ஆனை இடர் பட்ட போது அது தனக்கு உதவுகைக்காக நினைத்த நினைவு உமக்கு இல்லையாகில்-ஸ்ரீ சாளக்ராமம்–ஸ்ரீ அயோதியை–ஸ்ரீ கோயில் முதலாக நாம் உகந்த நிலங்களிலே ஒருவனுக்கு ஜன்மாதிகள் உண்டானால் அவனை நமக்கு ரஷித்தே தீர வேணும் அங்கனே இருப்பன சில உண்டோ -வென்ன –அவையும் எனக்கு இல்லை -என்கிறார்-

தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து விசாரமற்றிருப்பதற்கு இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை–பரமபதம் -நித்ய முக்தர்-கைங்கர்யம் -அபி நிவேசம் ஒன்றும் இல்லை–சடாரி -பாதுகையே நமக்கு மூலம் -முறையிடுவதே கர்தவ்யம் -என்பதை -கதறுகின்றேன்-என்கிறார் –-உடைமை நசித்தால் இழவு உடையவனது அன்றோ –உடையவன் ஆனாலும் சந்நிஹிதன் அல்லன் என்று தான் ஆறி இருக்கிறேனோ-சம்சாரத்தில் நன்மை பெற வேணும் என்று கூப்பிடுவாரும் உண்டாக கூடுமோ என்னும் நப்பாசையாலே அன்றோ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

———————-

1-பிரசித்தமான கர்மாத்யுபாயங்கள் இல்லை
2-ஸ்திரீ சூத்திர அதிகாரமான த்யான சங்கீர்த்த நாதிகளும் இல்லை –
3-அணில்களுக்கும் உண்டான பாவ சுத்தியும் இல்லை –
4-ஆனை இடர்பட்ட போது நினைத்த நினைவும் இல்லை –
5-புண்ய தேச வாசத்தால் வரும் நன்மையையும் இல்லை –என்றார் -கீழ் அஞ்சு பாட்டாலே –

இந் நன்மைகள் ஒன்றும் இல்லை யாகிலும் உம்முடைய பக்கல் தீமைகள் இல்லை யாகில் உம்மால் வரும் இழவு இல்லாமையாலே உம்மை அங்கீ கரித்து உம்முடைய கார்யங்களும் செய்கிறோம் அது இருந்த படி என் என்று பெரிய பெருமாள் கேட்டு அருள –நன்மைகள் ஒன்றும் இல்லாதோபாதி தீமைகள் எனக்கு இல்லாதது இல்லை -என்கிறார் மேல் அஞ்சு பாட்டாலே –

அதில் –இப்பாட்டில் –ஆனுகூல்ய பாவத்தை அனுபாஷித்துக் கொண்டு தம்முடைய பர சம்ருத்த்ய சஹத்வம் ஆகிற அநாத்ம குணத்தைப் பேசுகிறார் –

குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே-தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி-எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும்,-ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்;-அப்படி உண்டோ?” என்று கேட்க;-நநிந்திதம் கர்மததஸ்தி லோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆளவந்தாரைப் போலே என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை! எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடி கொண்டிருக்கின்றன வென்கிறார்–

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே–30-

இப்படி தோஷ பிரசுரனான எனக்கு –-இனி –-என் தோஷத்தை அனுசந்தித்து நான் எனக்கு ரஷகனாகை தவிர்ந்த தேவரீர் பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு–கதி என் சொல்லாய் – போக்கடி சொல்லாய் – போக்கடிக்க சூழ்ந்து கொண்டு வைத்து -அவனைச் சொல்லாய் -என்னும்படி இறே பிராப்தியிலும் இருப்பது –-நீர் போக்கடி சொல் என்ற போதாக-நமக்குச் சொல்ல வேண்டுகிறது என் என்ன –-என்னை ஆளுடைய கோவே–-இத் தலையில் சேஷத்வமும்-அத் தலையில் சேஷித்வமும் வ்யவஸ்திதமாய் அன்றோ இருப்பது –-வேறு இதுக்குக் கடவார் ஆர் – இது யாருடைய வஸ்துவாய் நோவு படுகிறது –

—————–

சாஸ்த்ரீயமாய்-மோஷார்த்தமான விஷயங்களிலே எனக்கு ஓர் அந்வயம் இல்லை என்றீர்–ஸ்வர்க்க பலார்த்தம் ஆதல் -விப்ரலம்பக த்ர்ஷ்ட பலார்த்தமாக வாதல் – சத் கர்மாதிகளைப் பண்ணிப் போந்தீர் ஆகில் அவற்றில் உபாயமாக்கி நன்மையில் மூட்டி விடுகிறோம் – அவை தான் உண்டோ -என்ன –-அவை ஒன்றும் ஸ்வ பிராப்திக்கு பரிகரமாக தேவரீர் தந்த ஜென்மத்தை விஷய பிரவணனாய் ப்ரந்வேஷத் விநாச ஹேதுவாக்கத் தந்தீராகக் கொண்டேன் -என்கிறார் –

ஆனால் கீழ் பாட்டோடு இதுக்கு சங்கதி என் என்னில் பர சம்ர்த்த்ய அசஹத்வமே அன்றிக்கே விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பந்து ஜனங்களுக்கும் அசல் ஆனேன் –என்கிறார் –

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே–31-

கர்மம் ஆவது-ஈஸ்வர ஹ்ருதயத்திலே நிக்ரஹ ரூபேண நின்று பலிப்பது-சாகப பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஈஸ்வர அதீனமாம் படி யாய்த்து ஸ்வ ரூபம் இருப்பது-பொறுத்தோம் என்ன போமது ஓன்று—புத்தி யோகம் தம் -என்றபடியே புத்தி பிரதானம் பண்ணி-நல் வழி போக்கும் இடத்தில் நிவாகரர் இல்லை-ஆக இப்படி உணர்ந்தவருக்கு சொல்லலாம் இறே –-கிணற்றிலே விழுந்த பிரஜையைக் கண்டு தாய் அருகே இருந்தால் -தாய் தள்ளினாள் -என்னக் கடவது இறே-அரங்க மா நகர் உளானே –-கர்ம பரதந்த்ரராய்-விஷயாந்தர பிரவணராய் இருப்பாரை அழகாலும் சீலத்தாலும் மீட்க்கைக்கு அன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

———–

நம் பக்கல் விமுகரான சம்சாரிகளுக்கும் கூட ஆகாத படி வர்த்தித்த நீர் நம் பக்கலில் வந்த படி என் -என்ன-பிரதிபன்னகாரிகளாய் இருப்பார் செய்யும் அவற்றுக்கு ஒரு அடைவு உண்டோ–என் மௌர்க்யத்தாலே வந்தேன் –-என்கிறார்-

எம்பெருமான் ஆழ்வாரைநோக்கி “ஸம்ஸாரிகளுக்குங்கூட ஆகாதபடி அஸாரமான நீர் என்னிடத்தில் வந்து நிற்பதேன்?” என்று கேட்க; என்னுடைய மூர்க்கத் தனத்தாலே வந்து நின்றேன் காண் என்கிறார்–

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே--32-

திருக்குடந்தை யூரா உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -5-8-10-–உன் முன் நின்றும் உன்னை வழி பட்டும் மெய்ப்பொருள் அறியா மூர்க்கனேன் ஆனேனே அந்தோ–

என் தண்மை பாராதே மூர்க்கன் ஆகையாலே வந்து கொடு நின்றேன்-என் தண்மையும் அறிந்து
உன் வை லஷண்யத்தையும் அறிந்து வைத்து அயோக்யன் -என்று அகல இறே அடுப்பது – அத்தைச் செய்யாதே வந்து கொடு நின்றேன்-தண்ணீர் குடிக்கிற ஊற்றிலே நஞ்சை இடுவாரைப் போலே
விலஷண போக்யமான விஷயத்தை கிட்டி அழித்தேன் என்கிறார் –

————

இப்படி- நன்மைகளும் இல்லை தீமைகளாலும் குறைவில்லை -நான் இங்குத்தைக்கு ஆகாத ஒருவன் -என்கிறார்–அநந்தரம் – மேல் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் சங்கதி என் என்னில்–மூர்கனேன் வந்து நின்றேன் -என்று அந்த மௌர்க்யம் ஹ்ருதயத்தில் பட்டுச் சொல்லுகிறீரோ -என்னில் – அதுவும் -பொய் –என்கிறார் ––ஆனால் நம்மைக் கிட்டுகைக்கு ஒரு உபாயம் இல்லை யாகில் மேல் போக்கு என்ன -என்று கேட்க–தேவரீர் திருவடிகளோட்டை சம்பந்தமும் கிருபையும் ஒழிய வேறு உண்டோ -என்று சரம உபாயமான கிருபையை வெளியிடுகிறார் –

தம்முடைய தாழ்வுகளை வாயாறச் சொல்லி கதறி தேவரீர் உடைய கருணை யொன்றைய
எதிர்பார்திருப்ப வனடியேன் என்கிறார்
–

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –33-

பட்டு -அகப்பட்டு--போழ்தல் -பிளத்தல் -பல சாகைகளாக மனம் பிளவு பட்டு நிற்றல்-பஹு சாகாஹி அனந்தாச்ச புத்தயோ அவ்ய வசாயினாம் -கீதை -2-21- கீழ்-ஆதாரம் பெருக வைத்த அழகன் -என்றும்-கண்ணினை களிக்குமாறு -என்றும்-பனியரும்பு திருமாலோ -என்றும் உடல் எனக்கு உருகுமாலோ -என்றும் சொன்ன பொய் மாலைகளை அனுசந்தித்து பொய்யனேன் பொய்யனேனே — என்கிறார்-மெய் கொண்டு பரிமாற வேண்டும் தேவரீர் திருவடிகளிலே எத்தனை பொய் சொன்னேன் என்கிறார் –

——————-

ஜ்ஞான ப்ரசர த்வாரமான -மனசிலே நித்ய வாஸம் பண்ணுமவனாய் நம் குற்றங்களை நேராக அறியும் சர்வஞ்ஞனான -இவனை – பொய்யனான நான் கிட்டி – அவத்யத்தை விளைத்து என்ன கார்யம் செய்தேன் -என்று லஜ்ஜித்து –-இதில் காட்டில் நம் குற்றம் அறிகைக்கு ஜ்ஞானம் இன்றிக்கே இருக்கிற
சம்சாரிகளோடே முடிந்து போகையே நன்று என்று பெரிய பெருமாள் திருவடிகளிலே நசை அற்று அகலுகிறார் –

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–34-

ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா
–৷৷18.61৷৷

தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்
–৷৷18.62৷৷

ஏதந் மாயா நிவரித்தி ஹேதும் ஆஹ –தூண்டுபவன் நீயாய் இருக்க வெளியில் வர உபாயம அருளுவாய் என்ன பதில் -இங்கு தமேவ –பின்பு மாம் ஏகம்- -ப்ராப்யமும் பிராபகமும் நானே என்கிறான்

சந்நிதியில் லஜ்ஜித்துக் கவிழ் தலை இட்டு நிற்க மாட்டாமையாலே கடக்கப் போந்தார் –-அவன் இல்லாத இடம் தேடித் போகிறார் இறே இவர் பாஹ்ய விஷயங்களில் லஜ்ஜித்தால் அங்கு நின்றும்
அது இல்லாத இடம் தேடி போருவாறே -அந்த வாசனையாலே போருகிராயாய்த்து இங்கும்-என் உள்ளே –இவ்வர்த்தத்தில் சம்சாரிகள் இவருக்கு கூட்டு அல்லர்-பெரிய பெருமாள் பக்கல் நின்று மக்னரராய் நின்றார் –-அவர் சன்னதி உண்டானாலும் அவர் இதுக்கு கூட்டு அல்லர்-இனி இவர் தன்னிலே சிரிக்கும் இத்தனை இறே – தம்முடைய அபஹாச்யதைக்கு தாமே சஹகாரியாம் இத்தனை இறே–

———————–

இப்படி இவை கை வாங்கின வாறே பெரிய பெருமாள் -இவரை இழந்தோம் ஆகாதே -என்று நொந்து–ஆழ்வீர்-நீர் அகல நினைத்ததற்கு ஹேது என் என்று கேட்டு அருள ––சர்வஞ்ஞரான தேவரீர் திரு முன்பே க்ர்த்ரிமங்களை சொல்ல உம்மைக் கிட்டி அவத்யாவஹன் ஆகும் காட்டில் என் சுவடு அறியாத சம்சாரிகளும் நானுமாய் இருக்கப் பார்த்தேன் -என்ன

நீர் கிட்டின பிரயோஜனம் அழகிது – நாம் தோஷத்தில் அவிஞ்ஞாதா – அவர்கள் குணங்களில் அவிஞ்ஞாதா –அவர்கள் தோஷத்தில் சர்வஞ்ஞர் – நாம் குண சர்வஞ்ஞர் ஆகையால் நம் வாசல் சர்வாதிகாரம் -காணும் -என்ன

இது உக்தி மாத்ரமேயோ – அனுஷ்டானமும் உண்டோ வென்ன –

பண்டே அடிபட்டுக் கிடக்கிறது காணும் என்று த்ரிவிக்ரம அபதானத்தைக் காட்டிக் கொடுத்தான் –-த்ரிவிக்ரம அபதானம் கேட்டு அறியீரோ – வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும் நம் கால் பொருந்தின படி அறியீரோ -வென்று – சீல ஆதிக்யத்தையும் தன் செல்லாமையையும் காட்டி – சமாதானம் பண்ண சமாஹிதர் ஆகிறார் –

கீழ்ப் பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி,-“இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமைகொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய; அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச் செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி, “பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக் கூறி, எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை நினைத்தலும் தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்–

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-

தலை விளா–சான்றாண்மை குன்றாமல் உலகு அளந்து அனைவரும் உகக்கும் படி செய்து அருளினான் என்றவாறு

தலை –ஆதி இடம் சென்னி சால்பு மாட்சிமை சான்றாண்மை-விளா -விள்ளா பிரியா நீங்கா-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3- பாவியேன் பாவியேனே -குறை வேண்டுதல் -குறை தீர வேண்டுதல்

1-வத்சலனை விட்டு புறம்பே போகவோ –
2-பிராணனை விட்டு புறம்பே போகவோ –
3-போக்ய வஸ்துவை விட்டு புறம்பே போகவோ –
4-என்னை நல் வழி போக்கு வித்த என் ஸ்வாமியை விட்டு புறம்பே போகவோ –
என்கிறார்
–குற்றம் காண மாட்டாத அளவேயோ-உபேஷித்த சம்சாரிகளையும் உபேஷிக்க மாட்டாத உன்னை-அகல நினைத்ததற்கு ஹேது-என் பாப ப்ராசுர்யமே அன்றோ –-என்னைக் கொண்டு அகன்று என் சத்தையை அழிக்கப் புக்க அளவேயோ –-எல்லார்க்கும் சத்தா ஹேதுவான உன்னையும் உன்னை ஒழிந்த எல்லாருடைய சத்தையையும் நசிப்பிக்கைக்கு கிடீர் நான் நினைத்தேன் – என்கிறார் –

————————-

அயோக்யன் என்று அகலாதபடி தன் நீர்மையைக் காட்டி சேர விட்டுக் கொண்டான் என்றார் கீழில் பாட்டில் –

இதில் –-தம்முடைய அயோக்யதை கழிந்தவாறே ப்ராப்யத்தில் த்வரை மிக்கு யோக்யரைக் கொண்டு போய் அடிமை கொள்ளும் தேசத்து ஏறக் கொடு போக வேண்டி இருந்தார்-அது செய்யக் கண்டிலர் அதுக்கடி இவரை அகலாமே சேர விடுக்கைக்கு தான் பட்ட பாடு அறியுமவன் ஆகையாலே-ஆமம் அற்றுப் பசி மிக வேணும் என்று பேசாது இருந்தான் –-விஷயங்கள் நடமாடும் தேசத்தில் இருந்து கிலேசப்பட்டே போம் இத்தனை ஆகாதே -என்று பிராப்யத்தில் த்வரையாலும் விரோதியில் அருசியாலுமாக பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருள அரிதாம்படியாகவும் கேட்டார் எல்லாரும் நீராம்படியாகவும் பெரும் மிடறு செய்து கூப்பிடுகிறார் –

பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரை புரண்டு பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்–

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-

மைந்தனே– வலிமை மிடுக்கு -அநாயாசேன கோவர்த்தன தாரணம்-ஆதி மூர்த்தி -ஆதி -ஜகத்காரணன் மூர்த்தி -அர்ச்சா சேவை-

இவர் இப்படிக் கூப்பிட பெரிய பெருமாள் ஆறி இருப்பான் என் என்னில் பரம பதத்தில் உள்ளார் போகத்தாலே கூப்பிட கேட்டு அறிவர் -சம்சாரிகள் விஷய லாபத்தாலே கூப்பிட கேட்டு அறிவர்-தம்முடைய கிருஷி பலமான கூப்பீடு கேட்டு அறியாமையாலே பேசாதே கிடந்தார்

———————–

இப்படி கூப்பிடச் செய்தேயும் பெரிய பெருமாள் இரங்கி -மாஸூச -என்னக் காணாமையாலே தம்மை ஒழிய வேறு எனக்கு ஒரு பந்துக்கள் உண்டாய் இருக்கிறாரோ-பிரயோஜனாந்த பரனாய் பந்தகமாய் இருந்துள்ள புருஷார்த்தத்தை அபேஷிக்கிறான் -என்று இருக்கிறாரோ–நம்முடையவன் என்று அங்கீ கரிக்க நான் பிழைப்பேன் ஆகில் இத்தனையும் செய்யாதே ஆர்த்த த்வனி கேட்டு கண் உறங்கும் படி அம்மே – இவர் திரு உள்ளம் இப்போது இங்கனே கொடியதாய் யாய்த்து ஆகாதே என்று இன்னாதாகிறார் –

தாம் இப்படி கதறா நிற்கச் செய்தேயும் பெரிய பெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே,
தம்மை யொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ?-ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ? ‘
நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமா யிருக்க இவ்வளவு கூட அபிமாநியாமல் கூக் குரல் கேட்டுக் கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே!-இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார்–

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளியல் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –37-

இவன் நமக்கு நல்லன் -நம்முடைய பையன் -என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய கேட்க வாய்த்து இவர் ஆசைப் படுகிறது-ஆழ்வீர் -என்னுமது இவர்க்கு அசஹ்யம் ஆய்த்து –-சேஷ பூதரான நாம் இவ்வர்த்தங்களை நினைத்து இருக்க அமையாதோ-அவன் சொல்ல வேணுமோ -என்னில்-அது போராது- சேஷி யானவனும் இதுக்கு மேல் எழுத்து இடும் அன்றோ சேஷத்வம் நிலை நின்றது ஆய்த்து –மணக்கால் நம்பி -நம்மாணி – திரு மகிழ் மாலை மார்வனுக்கு திறம் -என்றார் இறே –-பிள்ளைப் பிள்ளை யாழ்வான் தம்பி அப்பிள்ளை ஆழ்வான் வாயாலே மாணி -என்னப் பெற்றான் என்றான் இறே

————————–

ஸ்ரீ மகா பாரதத்துக்கு சரம ஸ்லோகம் போலே யாய்த்து–இப்பிரபந்ததுக்கு இப்பாட்டு-மகா பாரதம் ஆகிறது – மதிமந்தா நமாவித்ய யேனா சௌ சுருதி சாகராத் ஜகத்தி தாய ஜனித்த மகா பாரத சந்த்ரமா -என்கிறபடியே – ஸ்ருதி சாகர சந்தரமா வாய்த்து மகா பாரதம் –-சர்வேஸ்வரன் ஷீராப்தியைக் கடைந்து தேவர்களுக்கு அம்ர்தத்தைக் கொடுத்தான் – ஸ்ரீ வேத வியாச பகவான் சுருதியைக் கடைந்து சர்வாஹ்லாத கரமான மகா பாரதத்தை சம்சாரிகளுக்கு ஆத்ம உஜ்ஜீவன ஹேதுவாக கொடுத்தான் –-தேவர்களுக்கு ஈஸ்வரன் கொடுத்த அமர்த்தம் பந்தகம் ஸ்ரீ வேத வியாச பகவான் சம்சாரிகளுக்கு கொடுத்த மகா பாரதம் சம்சார விமோசகம் இறே –-அம் மகா பாரதம் தான் கோது என்னும்படி ஆய்த்து ஸ்ரீ கீதை அதில் சாரம் யாய்த்து சரம ஸ்லோகம் இது சொல்லுகைக்காக -கீழ் அடங்கச் சொல்லிற்று –-இதந்தே நாதபஸ்காய -என்று தொடங்கி இந்த சரம ஸ்லோகத்தின் கௌ ரவத்தைச் சொல்லுகிறது மேல் –அப்படியே இப் பாட்டு அவதரிக்கைக்காக வாய்த்து இப் பிரபந்தம் அவதரித்தது –

இதுக்கு மேலே – இப்பிரபந்த சேஷமும் இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தத்தில் நிஷ்டராய் இருப்பார் உடைய ஏற்றம் சொல்லுகிறது –

ஆக மகா பாரத சாரம் -சரம ஸ்லோகம் -ஆனால் போலே இப்பிரபந்த சாரம் -இப்பாட்டு –-இது தான் த்வயத்தின் உடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது – த்வயத்தில் பிராபகம் முன்னாய்-பிராப்யம் பின்னாய் -இருக்க இதில் பிராப்யம் முன்னாய் -பிராபகம் பின்னாய் -இருப்பான் என் என்னில்-வ்யுத்பத்தி வேளையிலே பிராப்யம் முன்னாகவும் பிராபகம் பின்னாகவும் இருக்கக் கடவது இறே
ஸ்வர்க்க காமோ ஜ்யோதிஷ்டோமேன யஜேத -என்று இறே வ்யுத்பத்தி வேலை இருப்பது –-அனுஷ்டான வேளையிலே-ஜ்யோதிஷ்டமோம் அனுஷ்டான பூர்வகமாக இறே ஸ்வர்க்க சித்தி பிராபக நிஷ்டையால் இறே பிராப்யம் சித்திக்கும-அப்படியே இப் பாட்டிலே வுயுத்பத்தி வேளையாய் த்வயத்தில் அனுஷ்டான வேளையாய் இருக்கிறது –-அதில் பூர்வபாகத்தளவிலே அனுசந்தித்தார் நம் ஆழ்வார் – உத்தர பாகத்தை அனுசந்தித்தாள் ஆண்டாள் அவ் விரண்டையும் சேர அனுசந்தித்தார் இவ் ஆழ்வாரே யாய்த்து-

இப்பாட்டுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில் –-அளியல் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே -என்று கிலாய்த்து வார்த்தை சொன்னவாறே-விஷயாந்தர பிராவண்ய கரமான சம்சாரத்தில் வகுத்த புருஷார்த்தத்தை அபேஷிக்கையும்- தத் சித்திக்கு நம் கை பார்த்து இருக்கையும் –
அதுக்கு மேலே விளம்பம் பெறாதே கிலாய்க்கையும்-ஆக இவ்வளவு புகுர நிற்பாரை பெறுவோமே என்று பெரிய பெருமாள் திரு உள்ளம் பிரசன்னமாய-திரு உள்ளத்தில் ஹர்ஷம் அடங்கலும் திரு முகத்தில் தோற்றும் படியாய் இருக்க தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ந்யஸ்த பரராய் தம்தாமுடைய ஹிதத்தில் கை வாங்கி இருப்பாரைக் கண்டால் இங்கனேயோ தேவரீர் திரு உள்ளம் இருப்பது என்று பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –

சரம ஸ்லோகம் பிராப்தியை விதிப்பதாய் இருக்கும் – அதில் ருசி உடையாருடைய அனுசந்தானமாய் இருக்கும் -த்வயம் – த்வய நிஷ்டர் பக்கலிலே ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை சொல்லுகிறது இப் பாட்டு –

“அளியலம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே
“இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும் அதற்காக நம் கை பார்த்திருப்பதும் அதுக்குமேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமா யிருக்கிறதே!-இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று
பெரிய பெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய்,-அந்த ப்ரஸாதமெல்லாம் திரு முகத்திலே தோற்றும்படி யிருக்கக் கண்ட ஆழ்வார்,“பெருமானே! தேவரீரைக்கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வ பாரங்களையும் ஸமர்பித்து-நிச்சிந்தையா யிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று பெரிய பெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்–

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-

காம்பற தலை சிரைத்து -என்ற இடம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமான உபாயாந்தர பரித்யாகத்தை
சொல்லுகிறது –-சூழ் புனல் அரங்கத்தானே –உன் கடைத்தலை -என்று நாராயண சப்தார்த்தமான சீலாதிகளை நினைக்கிறது –-பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும் நாராயண சப்தத்தில் அந்தர்பூதை யாகையாலும்-உன் -என்கிற இதிலே –லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயம் –-கடைத்தலை -என்றது-சரணவ் -என்றபடி –-இருந்து வாழும் -என்ற கிரியா பதத்தில் உபாயத்வ அத்யாவச்யதையும்
அது தான் போக ரூபமாயும் இருக்கிற படியும் சொல்லிற்று –-சோம்பரை – என்றது –பிரபத்யே -என்கிற உத்தமனால் ஆஷிப்தனான அதிகாரியைச் சொல்லிற்று –

திருக்குறளில் 36 துறவு அதிகாரம் -அடுத்து மெய் உணர்தல் -அடுத்து 37 அவா அறுத்தல் முன்னும் பின்னும் வினைத் தொடர்பு அறுத்தார்க்கு நடுவு நின்ற உடம்பும் அது கொண்டு வினைப் பயன்களும் நின்றமையின் வேதனை பற்றி ஒரோ வழித் துறக்கப் பட்ட புலன் கண் மேற் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லும் அன்றே அந்நினைவும் அவிச்சை எனப் பிறவிக்கு வித்தாமகலின் அதனை இடைவிடாது மெய்ப்பொருள் உணர்வான் அறுத்தல் அதிகார முறைமையும் இதனால் விளங்கும்-பரிமேல் அழகர்

————————–

மேல் ஆறு பாட்டும் இந்த ஜ்ஞானம் உடையார் உடைய ராஜகுலம் சொல்லுகிறது –-இவருடைய
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை — இருக்கிறபடி –-ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்களால்
குறைய நின்றார்களே யாகிலும் இவர்கள் இந்த ஜ்ஞானம் உடையவர்கள் ஆகில் உத்தேச்யர் -என்கிறார் –

இப் பாட்டால் ––எத்தனையேனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தார்களே ஆகிலும் இந்த ஜ்ஞானத்தில் நிஷ்டை உடையவர்கள் ஆகில் திருத் துழாயோ பாதி ஈஸ்வரனுக்கு சிரஸா வஹிக்கப் படுவர்–என்கிறார்-

இனி மேல், கீழ்ப்பாட்டில் சொன்ன ஞானமுடைய பாகவதர்களின் வைபவம் கூறுகிறது.-எம்பெருமான் தன் திருவடித் தாமரைகளில் பக்தி செய்யாதவர்கள் உயர் குலத்திற் பிறந்தவர்களாயிருந்த போதிலும்
அவர்களை ஒரு பதார்த்தமாகவும் நினையாமல் உபேஷித்து விட்டு, தனது திருவடிகளில் பக்தி செய்பவர் மிகவும் இழி குலத்தவராயினும் அவரையே விரும்புவன் என்கிறது இப்பாட்டில்–

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே--39-

மொய் கழல் -ஆஸ்ரிதர்கள் ஹ்ருதயங்களை மொய்த்துக் கொண்டே இருக்கும் திருவடி இணைகள்-மொய் கழற்கு அன்பு செய்யும் – ஐம்புலன் அகத்தடக்கி -என்கிறபடியே –-உன் உகப்புக்கு புறம்பானவற்றைப் பொகட்டு-உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்று திருவடிகளுக்கு பரியும் அதுவே யாத்ரையாய் அத்தையே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் –-அடியரை – கீழ் -உபேயத்தை சொல்லிற்றாய் இது -உபாயத்தைச் சொல்லுகிறது – சோம்பர் -என்கிற படியே-ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இன்றிக்கே இருக்குமவர்கள் – அடியர் – அடியில் உள்ளாருக்கும் திருவடிகளேயாய் தாரகமும் திருவடிகளேயாய் இருக்கை –-நிழலும் அடி தாறும் ஆம் – என்னக் கடவது இறே – உகத்தி போலும் – இப்படி இருக்கும் அவர்களை உகத்தி இதுக்குப் புறம்பான சதுர் வேதிகளைக் காட்டில் இவர்களை இறே தேவரீர் உகந்து இருப்பது –-போலும் – திருத் துழாய் போலும்-முடியினில் துளவம் போல் அடியரை உகப்புதி –

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே
–10-9-7-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் –

————————-

ஜன்மத்தால் வந்த தண்மை அன்றிக்கே எத்தனையேனும் தண்ணிய வ்ர்த்தம் உடையாரும் மேம் பொருளில் -சொன்ன ஜ்ஞானத்திலே உண்டார் ஆகில் அவர்களுக்கு அந்த கர்ம பலம் அனுபவிக்க வேண்டா – என்கிறார் –

தாழ்ந்த வகுப்பில் பிறப்பேயன்றி நீசமான அநுஷ்டாநமு முடையரேயாயினும் “மேம் பொருள் போகவிட்டு” என்ற பாட்டிற் கூறிய அதிகாரத்திலே நிஷ்டையுடையராகில் அவர்களுக்கு அந்தக் கருமங்களின் பலன் அநுபவிக்கக் கடவதல்ல என்கிறது, இப்பாட்டு–

திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேனும்
அருவினைப் பயனது உய்யார் அரங்க மா நகர் உளானே –40-

பதித பாவநத்வம்-ஈட்டிய -இறந்த கால பத பிரயோகம் –அன்பு பூண்ட பின்பு செய்யார்களே-உய்த்தல் -அனுபவித்தல்

ப்ராமாதிகமான புண்யத்தையும் பாதகம் என்று இருக்கிறவர்கள் பாபத்தில் இழியவோ-மார்வில் இருந்து ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள்-தானே குறை சொன்னாலும்-என் அடியார் அது செய்யார் -செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் அவனும் என்னா பாபங்களில் இழிவார்களா-வாய்க் கரையர் நினைக்கவும் நிலன் அன்று என்க

———————–

இவர்களுக்கு ஜன்ம வ்ருத்தங்களால் வரும் இல்லாமையே அன்று–தங்களோடு சம்பந்தித்த சம்சாரிகளுக்கும் தங்கள் அங்கீ காரத்தால் பரிசுத்தராம்படியான உத்கர்ஷத்தை உடையவர்கள் என்கிறார்-

பகவத் ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு நீஹீந ஜந்மத்தாலும் நிஹீன அநுஷ்டாநத்தாலும் ஒரு குறையு மில்லை யென்பது மாத்திரமேயல்ல;-அவர்கள் தங்களுடைய உச்சிஷ்டாந்நத்தாலே ஸம்ஸாரிகளை யெல்லாம் பரிசுத்தராக்கும் படியான பெருமை பொருந்தியவர்கள் என்பது இப்பாட்டு–

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள் ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-

போனகம் -போஜனம் வடசொல்-

யஜ்ஞ ஸிஷ்டாஸிந ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை-
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த் யாத்ம காரணாத்—৷৷3.13৷৷
-யஞ்ஞத்தில் எஞ்சி நிற்பதைப் புசிப்பவர்களான நல்லோர்கள் -திருவாராதனம் பண்ணி -சேஷம் உண்பவன் ஆத்ம தர்சனத்துக்குத் தடையான எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள் –

தருவரேல் – பகவத் பிரசாதம் போலே பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாய் இருக்குமது அன்றோ இது –அலாப்ய லாபம் கிட்டிற்று ஆகில் –ஒரு நாள் பட்டர் பிரசன்னராய் ஜீயருக்கு இட்ட பிரசாதத்தை நினைப்பது –-புனிதம் அன்றே –-தேசாந்தர காலாந்தர தேகாந்தரே அன்றியே ஸ்பர்ச வேதியாய் இரும்பு பொன்னாப் போலே அப்போதே பரி ஸூத்தம் –-தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் –-பகவத் பிரசாதம் -பாவனம்-இது ஸூபாவனம்–

———————–

ஜன்ம வ்ர்த்தாதிகளால் குறைய நின்றே இந்த ஜ்ஞானம் உடையவர்கள் இந்த ஜ்ஞான விதுரராய் ஜன்ம வ்ருத்தாதிகளால் உயர்ந்தவர்களுக்கு ஸர்வேஸ்வரனோபாதி பூஜ்யராய் ஜ்ஞான பிரதான ப்ரதிக்ர ஹவ்யவ ஹாரங்களுக்கும் அர்ஹர் ஆவார் என்கிறார்-

(உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி எம் பெருமான் கூறின வார்த்தை;–‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப் போலே, ப்ரஹ்மாதொடங்கி நெடுகி வருகிற வம்ச ப்ரவாஹத்திலே பிறந்து சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது; எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழ வேணும்; பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக் கொள்ளலாம். விசேஷமாகச் சொல்வதேன்? என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ, அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்” என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே “பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி “தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ஸ்லோகங்களை நோக்குக–)

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே–42-

(ஆசார்ய ஹ்ருதயத்தில் -“ம்லேச்சனும் பக்தனானால் சதுர் வேதிகள் அநுவர்த்திக்க அறிவுக் கொடுத்துக் குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு பாவந தீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப் படியும்”, என்னும் ஸ்ரீஸூக்தியும் அதன் வ்யாக்யாந ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கக் கடவன)

———————–

கீழ்ச் சொன்ன ஜன்ம வ்ருத்தாதிகளுக்கு மேலே ஜ்ஞானாதிகாருமான இவர்கள் ஜன்ம வ்ருத்தாதிகள் இன்றிக்கே இந்த ஜ்ஞானம் உடையார் ஆனவர்களை பகவத் பிரசாதத்தாலே வந்த வை லஷ்ண்யத்தை புத்தி பண்ணாதே கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி தாழ நினைத்தார்கள் ஆகில் அந்த ஷணத்திலே அவர்கள் தான் சண்டாளர்கள் -என்கிறார் –

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43-

கர்ம யோக உபாய நிஷ்டர்க்கு ஸ்வ கதமான உபாயாந்தரங்களில் ந்யூநாதி ரேகங்களைப் பற்றி இருக்கலாம் –-பகவத் சம்பந்தம் கொண்டு பெற இருக்கிற பிரபன்னனுக்கு பாகவத அபசாரம் ஆகிறது பகவத் சம்பந்தத்தை அறுக்கும் ஆகையாலே பெற வில்லை பெறுகைக்கு அவர்கள் சம்பந்தமே அமைகிறாப் போல இழக்கைக்கும் அபசாரமே அமையும-ஆகையால் பிரபன்னனுக்கு பயப்பட்டு நோக்க வேண்டுவது தேவதாந்தர சம்பந்தமும் பாகவத அபசாரமும் –ஆகும்–பகவத் விஷயத்தில் ஒரு ஆனுகூல்யம் பண்ண வேண்டுவது இல்லை – இவை இன்றிலே ஒழிந்தவனுக்கு ஈஸ்வரன் ஸூலபனாம் –

———————–

கீழ் பிரதிபாதித்த அர்த்தங்கள் உஜ்ஜீவிக்கும் என்னும் இடம் ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை
திர்யக் ஜாதியிலே பிறந்த ஒருவன் பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று அன்யாபதேசத்தாலே ஸ்வ லாபத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடிய தென்பதை ஸ்தாபிப்பதற்காக
ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்;-சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத் கரிக்க வேணுமென்று-நெடுங்காலம் தவம் புரிந்தும் அவர்கட்கு அப் பேறு கிடையாமையாலே வெள்கி நிற்க்கும்படி யாயிற்று;-கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக் ஜாதி. அப்படி யிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய் விட்டது. ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோக மற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44–

ஆஸ்ரித பஷ பாதியான உன்னை – ஜகத்துக்கு பொதுவான ரஷகன் என்று சொல்வார்கள் மதி கேடர்கள் -என்கிறார் –-தேவாநாம் தானவாநாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிற பந்தம் கிடக்க
சிலர்க்காக சிலரை அழிக்கிற இவனை சர்வ ரஷகன் என்று நினைக்கலாமோ –

——————–

நிகமத்தில் – குவலயா பீடத்தைப் போக்கினால் போலே தம்முடைய பிரதிபந்தகத்தைப் போக்கின படியைச் சொல்லி – பெரிய பெருமாள் உடைய ப்ரீதியே தமக்கு பிரயோஜனம் என்று முடிக்கிறார் –

விசேஷ உணவுகளை யுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீட மென்னும் கம்ஸனது யானையை ஒழித்தருளினாற் போலே தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கின படியை அருளிச் செய்து பெரிய பெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் —

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே--45-

தொண்டர் அடிப்பொடி -தொல் சீர் தொண்டர் களுடைய திருவெடிப்பொடியாக -சரம பர்வ நிஷ்டை
திருத்துழாய் ஆழ்வார் தொல் சீர் தொண்டர்-

பிரஜை மழலைச் சொல்லு தமப்பனார்க்கு இனிதாய் இருக்கும் இறே –-ப்ரஹர்ஷ யிஷ்யாமி சநாத ஜீவித – என்கிறபடியே-இவ் உகப்பு தானே புருஷார்த்தம் –-இவன் சத்தை யாவது அவன் ப்ரீதிக்கு கை தொடுமானமாகை-இப் பிரபந்தம் கற்றார்க்கு பலம் சொல்லாது ஒழிந்தது-இவ் உகப்பு தானே அவர்களுக்குப் பலம் ஆகையாலே-இவ் வாழ்வாரை உகந்தாப் போலே-இப்பிரபந்தம் கற்றாரையும்
பெரிய பெருமாள் உகந்து அருளுவார் -என்கை –-ப்ரியதே சததாம் ராம -என்று ஸ்ரீ ராமாயணம் கற்றார் உடைய பலம் போலே இப் பிரபந்தம் கற்றார் உடைய பலமும் –

———————————————————————————–

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ஆழ்வார் அனுசந்தித்து ரசித்தார்

அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது-ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும்- “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.-எம்பெருமான், திருவரங்கனாக-26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’) ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)-தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)-பல காலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர்
பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)-அவனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழச் செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“) அவனிடம் மஹா விஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை எண்ணி ஆழ்வாரை கலங்க வைத்தான். (“பணிவினால் மனம் அது ஒன்றி“)-வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் அவனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)-அவனின் சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய) -சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3),
தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14),
மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24)
என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின்  நைச்சானுசந்தானம்

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:-திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொள்கிறார்.-மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.-இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல கைங்கர்யம் செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் சொல்வது குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.–உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய கஜேந்திரன் என்ற யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்தியது
கூறப்பட்டது.
–ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால்,
அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று அருளிச் செய்கிறார-தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன, மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.-தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை,
அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை,
சொந்த பந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக ஆனதாகவும் ஆழ்வார் வருந்தி இந்த பிறவி வீணானதாக தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்கிறார்.-திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.-தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால் அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற பாடலில் சொல்கிறார்.

—

ஸ்ரீயபதி கிருபையால் யதார்ச்சிகமாக -திரு நாம சந்கீர்த்தனத்தாலே – யமாதிகள் தலையிலே காலை வைத்தேன் -என்றார் முதல் பாட்டில் –

அதனுடைய இனிமையால் பரமபதம் வேண்டாம் என்கிறார் -இரண்டாம் பாட்டில் –

அத்தோடு விரோதிக்கும் சம்சாரமும் வேண்டாம் என்கிறார் -மூன்றாம் பாட்டில் –

பாப பிரசுரர்க்கும் திரு நாமம் சொல்ல அதிகாரம் உண்டாய் இருக்க இவ்விஷயத்தை இழப்பதே என்றார் -நான்காம் பாட்டில்

அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்களான ப்ராக்ருதங்களைப் பற்றுவார் அவிசேஷஞ்ஞர் என்கிறார் -ஐந்தாம் பாட்டில்

போக்தாவின் நிலை இல்லாமையைச் சொன்னார் ஆறாம் பாட்டில் –

முமுஷூகளாக பிரமித்து இருக்கிற பாஹ்யரைக் குறித்து ஆஸ்ரயணீய வஸ்துவை உபதேசித்தார் ஏழாம் பாட்டில்

இது கேட்டால் பொறாதவர்கள் என்கிறார் எட்டாம் பாட்டில்

இசைந்தவர்களைக் குறித்து ஸூலபனான கிருஷ்ணனை ஆஸ்ரயிங்கோள் -என்றார் ஒன்பதாம் பாட்டில்

பிற்பாடர்க்கு உதவும்படி கோயிலிலே சந்நிஹிதர் என்றார் -பத்தாம் பாட்டில்

உறவு அறிந்தார்க்கு அகல ஒண்ணாது – அதுக்கு கண் அழிவு உடையார் கர்ப்ப நிர்பாக்யர் -என்றார் பதினோராம் பாட்டில்

தாம் பெற்றாலும் பிறர் அநர்த்தம் பொறுக்க மாட்டேன் -என்றார் பன்னிரண்டாம் பாட்டில்

எல்லாரும் திருநாமத்தைச் சொல்லி பிழைப்பது காண் -என்று மனோரதித்தார் –பதிமூன்றாம் பாட்டில்

அவர்களோட்டை சம்சர்க்கத்தால் வந்த விடாய் தீர திரு நாமத்தைச் சொன்னார் -பதினான்காம் பாட்டில் –

சம்பந்த ஜ்ஞானம் பிறப்பித்தபடி சொன்னார் -பதினைந்தாம் பாட்டில்

விஷய அனுரூபமாக பக்தி பெருகின படியைச் சொன்னார் -பதினாறாம் பாட்டில்

கண் களித்த படியைச் சொன்னார் பதினேழாம் பாட்டில்

அது புற வெள்ளம் இட்ட படியைச் சொன்னார் -பதினெட்டாம் பாட்டில்

உடல் உருகின படி சொன்னார் -பத்தொன்பதாம் பாட்டில்

மனசால் பரிச்செதிக்க ஒண்ணாது -என்றார் இருபத்தொராம் பாட்டில்

பாசுரம் இட்டுப் பேச ஒண்ணாது -என்றார் இருபத்திரண்டாம் பாட்டில்

மறக்க ஒண்ணாது என்றார் -இருபத்து மூன்றாம் பாட்டில்

பிறந்த பக்தி விஷய வை லஷண்யத்துக்கு அனுரூபமாய் இராமையாலே அது க்ர்த்ரிமம் -என்றார் இருபத்து நான்காம் பாட்டில்

சாஸ்த்ரியமான பக்த்யாதிகள் இல்லை -என்றார் -இருபத்து ஐந்தாம் பாட்டில்

ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு உள்ள நன்மையையும் இல்லை என்றார் -இருபத்து ஆறாம் பாட்டில்

திர்யக்குகளுக்கு உள்ள நன்மையையும் இல்லை -என்றார் இருபத்து ஏழாம் பாட்டில் –

ஆனை தன் இடரிலே நினைத்த நினைவும் இல்லை -என்றார் இருபத்து எட்டாம் பாட்டில்

விலஷண தேச வாஸம் இல்லை -என்றார் இருபத்து ஒன்பதாம் பாட்டில்

இவை இல்லாமை அன்றிக்கே -பிறர்க்கு அநர்த்தன் ஆனேன் -என்றார் முப்பதாம் பாட்டில்

நீச விஷயங்களுக்கும் ஆகாதான் ஒருவன் -என்றார் முப்பத்தோராம் பாட்டில்

இப்படி இருக்க வந்து கொடு நின்ற மூர்க்கன் -என்றார் முப்பது இரண்டாம் பாட்டில்

அதுக்கடியான நிர்லஜ்ஜையை உடையேன் -என்றார் முப்பது மூன்றாம் பாட்டில்

இப்படிப் பட்ட நான் கிட்டி அவத்யத்தை விளைப்பேன் அல்லேன் -என்றார் முப்பத்து நான்காம் பாட்டில்
நீர்மையால் சேர்த்துக் கொண்டான் -என்றார் -முப்பத்து ஐந்தாம் பாட்டில்

விசேஷ கடாஷம் பண்ண வேண்டும் என்று கதறினார் முப்பத்து ஆறாம் பாட்டில்

அது பெறாமே கிலாய்த்தார் -முப்பத்து ஏழாம் பாட்டில்

இப்படி த்வரை உடைய பிரபன்னரை உகத்தி -என்றார் முப்பத்தி எட்டாம் பாட்டில்

அவர்களுக்கு ஜன்மத்தில் தாழ்வால் வரும் குறை இல்லை -என்றார் முப்பத்து ஒன்பதாம் பாட்டில்

அவர்களுக்கு ஹிம்சாதி வ்ருத்தத்தால் உண்டான பலம் அனுபவிக்க வேண்டாம் என்றார் -நாற்பதாம் பாட்டில்

தங்களோடு சம்பந்தித்தாரையும் பரிசுத்தர் ஆக்குமவர் -என்றார் நாற்பத்து ஒன்றாம் பாட்டில்

இவர்கள் நம்பெருமானோபாதி பூஜ்யர் -என்றார் நாற்பத்து இரண்டாம் பாட்டில்

இவர்களை ஜன்ம வ்ருத்தாதிகளாலே குறைய நினைத்தவர்கள் சண்டாளர் -என்றார் நாற்பத்து மூன்றாம் பாட்டில்

ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை ஒரு திர்யக்குக் கொடுத்தபடி சொன்னார் -நாற்பத்து நான்காம் பாட்டில்

இப் பிரபந்தம் கற்றார்க்கு பலம் அருளிச் செய்தார் நாற்பத்து ஐந்தாம் பாட்டில்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply