பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82–
பாவியேற்கு என்று உறு நோய்–பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை
யான் உரைப்ப கேண்மின்–நானே சொல்லக் கேளுங்கள் (என்ன வென்றால்)
இரு பொழில் சூழ்–விசாலமான சோலைகள் சூழப் பெற்றதும்
மறையோர் மன்னும்–வைதிகர்கள் வாழப் பெற்றதுமான
திரு நறையூர்–திருநறையூரில்
மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு–பெரிய மலை போன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன்–எனது கண்கள் களிக்கும்படி உற்றுப் பார்த்தேன்
நோக்குதலும்–பார்த்த வளவில்
மன்னன்–(அங்குள்ள) எம்பெருமானுடைய
திரு மார்பும்–பிராட்டி யுறையும் மார்வும்
வாயும்–(புன் முறுவல் நிறைந்த) அதரமும்
அடி இணையும்–உபய பாதங்களும்
பன்னு கர தலமும்–கொண்டாடத் தக்க திருக் கைகளும்
கண்களும்–திருக் கண்களும்
ஓர் மணி வரை மேல் பொன் இயல் பங்கயத்தின் காடு பூத்தது போல் மின்னி ஒளி படைப்ப–ஒரு நீல ரத்ந பர்வதத்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற் போல் பளபளத்த ஒளியை வீச,
வீழ் நாணும்–விரும்பத் தக்க திரு வரை நாணும்
தோள் வளையும்–தோள் வளைகளும்
மன்னின குண்டலமும்–பொருத்தமான திருக் குண்டலங்களும்
ஆரமும்–திருமார்பில் ஹாரமும்
நீள் முடியும்–பெரிய திருவபிஷேகமும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப –மிக்க தேஜஸ்ஸை வெளி விடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க
மன்னு மரகதக் குன்றின் மருங்கே–எல்லார்க்கும் ஆஸ்ரயமான மரகத மலை யென்னும் படியான எம்பெருமான் பக்கத்திலே
ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது–விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக் கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள்.
அன்னம் ஆய்–(நடையில்) ஹம்ஸத்தை யொத்தும்
மான் ஆய்–(நோக்கில்) மானை யொத்தும்
அணி மயில் ஆய்–(கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும்
இடை மின் ஆய்–இடை யழகில் மின்னலை யொத்தும்
இள இரண்டு வேய் ஆய்–(தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களை யொத்தும்
இணை செப்பு ஆய்–(ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும்
முன் ஆய் தொண்டை ஆய்–முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும்.
குலம் கொண்டை இரண்டு ஆய்–(கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும்
அன்ன–அப்படிப் பட்டிருந்த
திரு உருவம்–திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி)
நின்றது அறியாது–(பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த)
என்னுடைய நெஞ்சும்–எனது நெஞ்சும்
அறிவும்–(அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும்
இனம் வளையும்–சிறந்த கை வளையும்
பொன் இயலும் மேகலையும் –ஸ்வர்ண மயமான மேகலையும்
ஒழிய போந்தேற்கு –(எல்லாம்) விட்டு நீங்கப் பெற்ற எனக்கு (இதற்கு மேலும் ஹிம்ஸையாம்படி)
மன்னு மறி கடலும் ஆர்க்கும் –சலியாததும் மடிந்து அலை யெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும்–சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும்
என் தனக்கே–எனக்கு மாத்திரம்
வெய்து ஆகும்–தீக்ஷணமாயிரா நின்றது,
தன்னுடைய தன்மை தவிர தான் என் கொல்–நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான் றான் ஏதாவது செய்து விட்டானோ-
பாவியேற்கு--உங்களுக்குச் சொல்ல பிறந்தேனோ –-என்னுறு நோய் யானுரைப்பக் –-நம்பி அழகிலே அகப்பட-ஸ்ரீ பரத ஆழ்வான் நோவு போலே –-கேண்மின் –-இத்தனையும் செய்ய வேணும் –-சோக ஷோபேச ஹ்ருதயம் ப்ரலாபைரேவ தார்யதே -என்னும் படியாலே-தான் பிழைக்கைக்காக வாய் விட்டு அழுவதாலேயே நெஞ்சு தரிக்குமே –
பாவியேற்கு-கேட்கிற இவர்களுக்கு பறக்கச் சொல்லலாம் படி இட்டுப் பிறந்திலேன்-பரக்கச் சொல்லுமது கேட்க வேண்டில் அவ்யாசாதிகள் பக்கலிலே சென்று கேட்டுக் கொள்வது –நாட்டார் படி கொண்டு கார்யம் என் எனக்கு –-என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் – நான் பட்ட பாடு சொல்ல வேணும் ஆகில் கேளுங்கோள்-என்கிறாள்–என் அபிமத விஷயத்தை அனைத்து அல்லது தரிக்க மாட்டாத நான் கொண்ட நோவை நீங்களும் கேளுங்கோள் –-என் உறு நோய்--மறுபாடுருவக் கொண்ட நோய் யான் உரைப்பக் கேண்மின்-நோய் கொண்ட நான் சொல்லக் கேளுங்கோள் –-வேறு ஒருவருக்கு நிலம் அல்ல என் நோய்-இதின் தலையைப் பற்றி அலையும் அதிலும் இந் நோய் தானே உத்தேச்யமாய் இருக்கை-யான் உரைப்ப—நோய் கொண்டார் இருக்க–வேறே சிலர் சொல்லப் புக்கால் பட்டது எல்லாம் தெரியாமையாலே உள்ளத்து எல்லாம் சொல்லப்போகாது இறே-இவள் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராது இறே –-ஸ்ரீ பரத ஆழ்வான் நோய் போலே –கேண்மின் –-செவி படைத்த பிரயோஜனம் பெறக் கேளுங்கோள் –-பரத்வ ஜ்ஞானத்தாலே பகவத் தத்வத்தை அறிந்தவர்கள் அன்றோ க்ரம ப்ராப்தி அறிந்து ஆறி இருப்பர்-உகந்து அருளின நிலங்களிலே புக்குக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கப் பெற்ற நான் ஆறி இருப்பேனோ-
இரும் பொழில் சூழ் —பரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழிலாலே சூழப் பட்டு இருப்பதாய்
எங்கும் ஒக்க சோலையும் பணையுமாய் கிடக்கும் இத்தனை இறே–மன்னு மறையோர் திரு நறையூர் –
மறையோர் மன்னும் திரு நறையூர் –-மடல் எடுக்கை சாஸ்த்ரார்தம் என்று உபபாதிக்குமவர்கள் மன்னும் தேசம் –-அங்கன் உண்டோ என்னில் – வ்யவசாயாத்ருதே ப்ரஹ்மன் நாசாத யதி தத் பரம் -என்று உண்டாகையாலே –-மா மலை போல்--மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்–பொன்னியலும் மாடக் – அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –-கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்--அவன் காண்கை–அவ வாளம் காலை தப்பின படி-பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை என்னுடைய படபாக்னி குளிர –களிப்ப –கண்கள் ஆரவளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திரு மொழி -7-10-9-என்னுமா போலே – நெடும் காலம் பட்டினி விட்ட கண்கள் வயிறு நிரம்பும் படி –நணுகினம் நாமே -திருவாய் மொழி -1-1-3- மன்யே ப்ராப்தா சம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -அயோத்யா -69-9–நோக்கினேன் நோக்குதலும் மன்னன் –-நான் கண்ட பொழுதே எழுதிக் கொண்டான் –-வாளும் பலகையும் பொகட்டு கண்ட போதே மடல் எடுக்கப் பண்ணினவன் –-கண்ட போதே தான் என்னலாம்படி இருக்கை- ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் –
இரும் பொழில் சூழ் –-பரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழிலாலே சூழப் பட்டு இருப்பதாய்
எங்கும் ஒக்கச் சோலையும் பணையுமாய்க் கிடக்கும் இத்தனை இறே –-மன்னு மறையோர் திரு நறையூர் –மறையோர் மன்னும் திரு நறையூர் – வேத வாக்யங்கள் எல்லாம் உபாசனத்தையே விதிக்கிறது என்று அறுதி இட்டு இருக்கிறவர்கள்-வர்த்தியா நிற்கிற திரு நறையூர்-மடல் எடுக்கை நியத கர்த்தவ்யம் -என்று இருக்கிறவர்கள் நித்ய வாஸம் பண்ணுமூர்–நிதித்யாசி தவ்ய -என்கிற வாக்யத்தையே பற்றி இருப்பார் வர்த்திக்கும் தேசம் –-மா மலை போல்--மலையைக் கொடு வந்து நெருங்க வைததால் போலேயாய்–பொன்னியலும் மாடக் – அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹணீயமான மாடங்களில் உண்டான –-கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –
கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9-என்னுமா போலே படபாமு காக்னி தெகுட்டினால் போலே விடாய்த்த கண்கள் குளிரும்படி நோக்கினேன் –அதொரு பிரதாபமும் –-நோக்குதலும் மன்னன் – த்ருஷ்ட ஏவ ஹி ந சோக மப நேஷ்யதி ராகவ -என்னும்படியே நோக்கின அநந்தரம் மமேதம் -என்கிற பிரதி பந்தகம் அடங்கப் போய்-அவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்-மமேதம் அடங்கலும் போயிற்று-அனுபவம் மடலேயாய் விட்டது –
மன்னன் திரு மார்பும் -வாயும் அடியிணையும்—பன்னு கரதலமும் கண்களும்--ராஜாதி ராஹஸ் சர்வேஷாம்-திரு மார்பு -தமக்கு பற்றாசு –-விரஹ ஸ்ரமஹரமான மார்பு தன்னைக் கணிசிக்கை
வ்ரீளை யாலே -வெட்கத்தாலே -முகம் பாராதே மார்வைப் பார்த்தாள் -என்னவுமாம் –-திரு மார்வு என்னா -வாயும் -என்பான் என் என்னில் பிராட்டி பக்கல் பிரேமத்தாலே -அவளைப் பார்த்து முறுவல் பண்ணி இருக்கும் –-அவ்வழியாலே முறுவலைக் கண்டபடி –அம் முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகள் –
திருவடிகளிலே விழுந்தாரைத் திருக் கையாலே ஸ்பர்சித்தால் -ஒரு கையே -என்று வாய் புலர்த்தும் கை-நோக்கும் கண்கள்-நின்ற விடத்தே நின்று ஸ்பர்சிக்கும் கண் -ஒரு கால் நோக்கினால் ஆலம் கட்டி விட்டெறிந்தால் போலே இருக்கை –-பங்கயத்தின்-பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் –பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறாப் பூத்தால் போலே திரு மேனியில் உண்டான திருக்கண்கள் திரு வாய் திருக்கை திருவடிகள்-இருக்கும் படி என்று கீழோடு அந்வயம் –
மன்னன் திரு மார்பும் –-பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமான- திரு மார்வும்-அவள் சம்பந்தம் கொண்டு இறே ராஜாவாவது-திருக்கண்டேன் -என்று இ றே கண்டவர்கள் சொல்லுவதும் –-மாத்ரு தேவோ பவ -முற்படக் கண்டது திரு மார்வாயிற்று –-வாயும் –-அவள் முன்னாகப் பற்றினாரை –மாஸூச-என்னும் திரு ஆஸ்யமும்–அடியிணையும்—அம் மார்வுக்கும் ஸ்மித்துக்கும் தோற்றார் விழுவனவான திருவடிகளும்-பன்னு கரதலமும் – திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைத்தால் இது ஒரு ஸ்பர்ச சௌக்யமே-என்று இடைவிடாதே கூப்பிடப் பண்ணும் படியாய் இருக்கிற திருக் கைகளும்-பன்னுதல்-இவனை எடுத்து அனைக்கையாலே-தோள்கள் ஆயிரத்தாய்-திருவாய் மொழி -8-1-10-என்கிறபடியே
பணைத்த என்றுமாம் –-சோப்யே நம் த்வஜ வஜ்ராப்ச கருத சிஹ்நென பாணினா-சம்ச்ப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்க்யா ஸூ காடம் பரிஷச்வஜே–கண்களும் –ஸ்பர்சத்துக்குத் தோற்றாரை குளிர நோக்குகிற திருக் கண்களும்–உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்கள் இறே –பங்கயத்தின் பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —– ஒரு பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறப் பூத்தால் போலே யாயிற்று திவ்ய ஆபரண சோபையும் திருமேனியும் பொருந்தி இருக்கும் படி –-கீழில் திவ்ய அவயவங்களுக்கு த்ர்ஷ்டாந்தம் ஆகவுமாம் –
மின்னி யொளி படைப்ப —–பளபளத்த ஒளியை உண்டாக்க ––வீணாணும் – விடு நாணும்-சௌந்தர்யம் நிறைந்தால் போல் இருக்கை ––தோள் வளையும்–திருவடிகளுக்கு வீரக் கழல் போலே –-மன்னிய குண்டலமும் –காதிலே பூத்தால் போலே இருக்கை –-ஆரமும் – மார்விலே சினைத்தால் போலே இருக்கை ––நீண் முடியும் —திரு நறையூராருக்குச் சூட்டின முடி –-சர்வேஸ்வரன் ஆகச் சூட்டின முடி –-துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப--சூடா மணியின் ஒளி எல்லா ஒளியையும் விஞ்ச
துன்னுகை -மிகுகை ––அழகு மிக்கால் கண் எச்சிலாம் என்று மறைப்பாரைப் போலே–சூடா மணியில் தேஜஸ்ஸூ எல்லாத் தேஜஸ்ஸிலும் மிக்க போது-இள வெயில் போன்றதொரு பிடம் விழ விட்டால் போலே இருக்கும் –
மின்னி யொளி படைப்ப –-மின் செய் பூண் மார்வினன்-என்கிறபடியே மின்னினொளி திரு வாபரணம் ஆயிற்றோ யென்னும்படியாய் இருக்கிற –-வீணாணும் தோள் வளையும்--பெரிய பிராட்டியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமாகத் தாழ்ந்து இருக்கிற விடு நாணும்- தோளை முட்டாக்கிட்டால் போல் இருக்கிற தோள் வளையும் –-மன்னிய குண்டலமும் –ஒரு நாள் வரையிலே சாதிற்றாய் இருக்கை அன்றிக்கே சஹஜமாய்-திருக் காதுகள் பூத்தால் போலே இருக்கிற மின்னு மணி மகர குண்டலங்களும் –-ஆரமும்-
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55-என்கிறபடியே திரு மார்விலே இருமடி இட்டுச் சாத்த வேண்டும்படி இருக்கிற திருவாரமும் –-நீண் முடியும் –— இவற்றை எல்லாம் தன் அழகாலே முட்டாக்கிடா நிற்பதாய்-விண் முதல் நாயகன் நீண் முடி -திரு விருத்தம் -50-என்று ஆதி ராஜ்ய ஸூசகமாய் இருக்கிற திரு அபிஷேகமும் –-துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப- நெருங்கின கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள சூடா ரத்னமானது தன் புகராலே எல்லாவற்றையும் முட்டாக்கிகிட வற்றாய்
மன்னு மரகதக் குன்றின்--தன்னைப் பற்றி லோகம் வாழ்வது ஒரு நீலகிரி –-மருங்கே யோர் —
ஆழம் கால் –-உள் இழிய ஒண்ணாமை-இருவரும் நேர் பார்க்க மாட்டாமை -யாதல்-பெரு வெள்ளம் கண்டு நோக்குவாரைப் போலே –-ஓர் -இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-
விலஷணமாய் -போக்யமாய் -இளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி–கொடி என்றது அல்லாத பெண்களை –பும்ஸ்தவ கந்தி-என்னும்படியான ஸ்த்ரீத்வம்-சாஷான் மன்மத மன்மத -என்னுமா போலே ஓன்று –இவளைப் போக்கி வேறு ஒருவர் இல்லாமை ரூபகம் முற்றின படி த்ருஷ்டாந்தமே பேசும்படி யாயிற்று –(பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளோர் பகுதி அருளிச் செயல்களில் இது -வஞ்சுள வல்லித் தாயார் அன்றோ )
மன்னு மரகதக் குன்றின் மருங்கே –நித்தியமாய் இருப்பதொரு மரகத கிரியின் அருகே –
சேர நிற்கில் ஆழம் காலாம் -என்று அருகே கிண்ணகப் பெருக்கை எதிர் செறிக்க ஒண்ணாதாப் போலே
எதிர் நிற்க ஒண்ணாமே கரை யருகைப் பற்றியாய் யாயிற்று இருப்பது –யோர் இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-அத்விதீயமாய் கண்டார் கண்ணுக்கு இனிதாய் இளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி நின்றது –-கொம்பு -என்று சொல்லிற்றில்லை-(அன்ன -திருவுருவம் நின்றது) அன்னாரும் என்னுமத்தைப் பற்ற – தான் -அது இருந்தபடி தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே மின்னாய் –அன்னம் -நடை-மான் -நோக்கு
அணி மயில் -அளக பாரம்-இடையே மின்னாய்-நடுவே மின்னாய் –-இளவேய் இரண்டாய்
இரண்டு இள மூங்கில் போலே பசுமையும் சுற்று உடைமையும் உடைய திருத் தோள்கள் –-இணைச் செப்பாய்- ஒன்றுக்கு ஓன்று ஒப்பு ஈஸ்வரனை இட்டு வைக்கும் செப்பு மலராள் தனத்துள்ளான் – முன்னாய தொண்டையாய்க் –-எல்லாவற்றிலும் முற்படுகிறது திரு வதரத்தின் அழகு-கெண்டைக் குலம் இரண்டாய் –— மௌக்த்யத்தாலும் மதமதப்பாலும் இரண்டு கெண்டை போலே யாயிற்று திருக் கண்கள்-அன்ன -திருவுருவம் நின்றது – அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –-அறியாதே--அறிவு கெட்டு–அறியாமையனபடி எங்கனே என்னில்-பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே பிரித்துப் பேசும் போது பேசலாம் இருவரும் கூடி நின்றால் பேச முடியாது-கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும் கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –
அன்னமாய் –நடை அழகுக்கு–மானாய் –-நோக்கில் உண்டான மௌக்த்யத்துக்கு—அணி மயிலாய் –
அளகபாரத்துக்கு-அணி -சாயை—ஆங்கிடையே மின்னாய் –இவள் நாலடி நடக்கும் போதாக நாயகனுக்கு துணுக்குத் துணுக்கு -என்னும்படி இருக்கை –-இளவேய் இரண்டாய் – சுற்றுடைமைக்கும் -பசுமைக்கும் -செவ்வைக்கும் -ஒழுகு நீட்ச்சிக்கும் மூங்கில் திருஷ்டாந்தமாக சொல்லக் கடவது இறே -இள வேய் -தோளுக்கு –-இணைச் செப்பாய்- நம்பியை சேமித்து வைக்கைக்கு- இணைச் செப்பாய் –
திரு முலைகளுக்கு –-முன்னாய தொண்டையாய்க்--திவ்ய அவயவங்களின் அழகுகளில் மிகையாய் வந்து பற்றா நிற்க-முன்னோடி வருகிறது திரு வதரத்தின் புகராயிற்று-வாலியதோர் கனி கொல்-திருவாய்மொழி-7-7-3- -இத்யாதி–கெண்டைக் குலம் இரண்டாய் –— கண்ணில் ஒழுகு நீட்ச்சிக்கும் அழகுக்கும் –அன்ன திருவுருவம் நின்றது அறியாதே-சில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே –-அப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இறே சொல்லலாவது–அன்ன திருவுருவம் – மருங்கே நின்றது அறியாதே-அறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்-அறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் பொன்னியலும் மேகலையும்--நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்–ஆங்கு ஒழியப் போந்தேற்கு-–வெறும் தரையாகப் போந்தேன்-வாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து-கடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச
மடலோ -என்று புறப்பட்ட படி–மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த இந் நிலாவின் கதிரும் –-சலியாத கடல்-ராஜ த்ரோஹிகளைக் கண்டால் போலே கூப்பிடத் தொடங்கிற்று –-என் தனக்கே வெய்தாகும்- நாட்டை வாழ்வித்து என்னை நலியா நின்றது–தன்னுடைய தன்மை தவிரத் தான் என் கொலோ –—சீதோ பவ ஹனூமத -என்ன நெருப்பு குளிருமா போலே நிலாச் சுடுக -என்று நினைப்பிட்டதோ இதுக்கு காரணம் என் -என்கிறாள் –
என்னுடைய நெஞ்சும் அறிவும் – ஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர்
அறிவை இட்டு வைக்கைக்கு கலமான என் நெஞ்சும் –-இன வளையும் —- ஆபரணமான வளையும் –-பொன்னியலும் மேகலையும் –-ஸ்லாக்கியமான பரிவட்டமும் –-ஆங்கு ஒழியப் போந்தேற்கு மன்னு மறி கடலும் ஆர்க்கும் –-நொந்தாரைக் கண்டால் ஐயோ என்ன பிராப்தமாய் இருக்க-அங்கனே செய்யாதே
சர்வேஸ்வரன் இஜ் ஜகத்துக்கு ரஷகமாக கல்பித்து வைத்த கடலும் சப்தியா நின்றது –-மதி யுகுத்த இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்- என்னளவிலே வந்தவாறே களளரைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே-சந்தரன் தன் ஆஸ்ரயம் கொண்டு பொறுக்க மாட்டாமையாலே பொகட்ட
இனிய நிலாவினுடைய கிரணம் எனக்கே சூடா நின்றது –-நாட்டார் வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கிற சந்திரனும் எனக்கே பாதகனாகா நின்றான்-நிலா -என்னா நிற்க –கதிர் -என்கிறது எத்தைப் பற்ற -என்னில்-த்ரவ்யமாய் இருக்கும் இறே –அதின் குணத்தைப் பற்ற – ஆகையாலே கதிர் என்கிறது –-தன்னுடைய தன்மை தவிரத் –-பதார்த்த ஸ்வ பாவங்கள் அடங்கலும் வேறுபடா நின்றது
சைத்யம் இறே இவற்றுக்கு ஸ்வ பாவம்-தான் என் கொலோ –—-பதார்த்த ஸ்வ பாவங்கள் அந்யமாக-அபி பதித்தவாறே அதி சங்கை பண்ண வேண்டி இருக்கும் இறே-இத்தை சீதோ பவ -என்றால் போலே
உஷ்ணோ பவ -என்றார் உண்டோ –இந்த நிலா -என்று பிரத்யஷம் ஆகவுமாம் –
இங்ஙனே ஊரிலுள்ள பெண்களின் சரித்திரங்களை எடுத்துரைப்பதனால் எனக்கு என்ன பயனாம்? அந்த வம்புக் கதைகளையெல்லாம் விரித்துரைப்பதற்கோ நான் பெண் பிறந்தது. அது கிடக்கட்டும், நான் பட்டபாடு நாடறியச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திருநறையூ ரெம்பெருமான் ஸ்ந்நிதியிலே ஸேவிக்கப்புகுந்த தான் பட்டப்பாட்டைப் பேசத் தொடங்குகின்றாள் பரகால நாயகி.பாவியேற் கென்னுறு நோய் என்று இங்ஙனே அந்வயித்துப் பொருள் கொள்வதிற் காட்டிலும் ‘பன்னியுரைக்குங்காற் பாரதமாம் பாவியேற்கு“ என்று கீழோடே அந்வயிப்பது பூருவர்களின் வியாக்கியானங்களுக்கு நன்கு பொருந்தும். (நெஞ்சினுள்ளே துக்கம் அதிகரித்தால் வாய் விட்டுக் கதறினால்தான் தீரும்.) என்று சொல்லியுள்ளபடி – தனது வருத்த்தை ஒருவாறு தணித்துக்கொள்ள வேண்டி வாய்விட்டுக் கதறுகின்றாளென்க.-யானுற்ற நோயை யான் சொல்லுகிறேன் கேளுங்கள் நான் திருநறையூரெம்பெருமானை ஸேவிக்கச்சென்று ஸந்நிதியுள்ளே புகுந்து பார்த்தேன், பார்த்தவுடனே அவ்வெம்பெருமானுடைய திருமார்வு திருவதரம் திருவடி திருக்கை திருக்கண் ஆகிய இவ்வவயவங்கள் நீலகிரிமேல் தாமரைக்காடு பூத்தாற்போல் பொலிந்தன.-திருவரைநாண் திருத்தோள்வளை திருமகர குண்டலம் ஹாரம் திருவபிஷேகம் அதனுச்சியிற்பதித்த மணி ஆகிய இவை பளபளவென்று ப்ரகாசித்தன, அவ்வெம்பெருமான் பக்கத்திலே அன்னம்போன்ற நடையழகும் மான்போன்ற நோக்கழகும் மயில்போன்ற கூந்தலகும் மின்போல் நுண்ணிய இடையழகும் வேய்ப்போன்ற தோளழகும் செப்புப்போன்ற முலையழகும் கோவைபோன்ற வாயழகும் கெண்டைபோன்ற கண்ணழகுமுடையளான பெரிய பிராட்டியார் இளவஞ்சிக்கொடி போலே நின்றதையுங் கண்டேன்.–கண்டதும் அறிவு போயிற்று பலவிகாரங்களுண்டாயின. இப்படி வருத்தபடாநின்ற எனக்குக் கடலோசை தானும் வந்து மேன்மேலும் ஹிம்ஸையைப்பண்ணா நின்றது. எல்லார்க்கும் இனிதான நிலா எனக்குத் தீ வீசுகின்றது குளிர்ச்சியையே இயல்வாகவுடைய நிலாவும் இப்படி கடும்படியான காரணம் என்னோ, அறியேன் – என்றாளாயிற்று.
திருநறையூர்ப் பொன்னியலுமாடம் – நாச்சியார் கோவிலுக்குத் திருநறையூர் மணிமாடம் என்று ப்ரஸித்தியுள்ளது. “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே“ என்றார் பெரிய திருமொழியில், “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணளனை“ என்பர் இத்திருமடலிலும். கவாடம் – கதவு, வடசொல்.–பன்னு கரதலம் – ‘இப்படிமொரு கரதலமுண்டோ‘ என்று வாய்வெருவப்பண்ணும் கை காரதலம் – வடசொல். ஓர் மணிவரைமேல் பொன்னியல் பங்கயத்தின் காடு பூத்த்துபோல் – எம்பெருமானது திருமேனி நீலரத்ந பர்வதமாகவும் திருக்கண் முதலியன தாமரைக் காடாகவும் ரூபிக்கப்பட்டன.-அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனாதலால் திருமார்பும் தாமரை யாக விளங்கக் குறையில்லை. பங்கயம் – பங்கஜம். ஒளிப்படைப்ப – ஒளியை யுண்டாக்க. வீணாணும் – வீழ் – நாண் – வீணான், வீரசோழிய மென்னும் இலக்கண நூலில் (சந்திப்படலம் – 18) “நவ்வரின் முன்னழிந்து பின் மிக்க ணவ்வாம் என்றது காண்க. வீழ்தல் –விரும்பப்படுதல். ஆரம் – ஹாரம்.(“துன்னுவெயில்விரித்த சூடாமணி இமைப்ப“) சூடாமணியிமைப்ப என்றவிடத்து உம்மைத் தொகையாகவும் உவமைத் தொகையாகவுங் கொள்ளலாம், உம்மைத் தொகையாகக் கொள்ளும்போது, சூடாமணியாவது திருவபிஷேகத்தின் நுனியிற்பதித்த ரத்னம், அதுவும் விளங்க – என்றதாகிறது. உவமத்தொகையாகக் கொள்ளும்போது,சூடாமணியாவது தேவலோகத்துச் சிறந்த்தொரு மாணிக்கம், அதுபோலே விணாணும். நீண்முடியும் விளங்க – என்றதாகிறது. சூடாமணி எனினும் சூளாமணி யெனினும் ஒக்கும். இமைத்தல் – ஒளிசெய்தல்.-மன்னுமரதகக் குன்றின் மருங்கே – எம்பெருமான்றன்னையெ ஸாக்ஷாத் மரகத பர்வதமாகக் கூறினது முற்றுவமை. அப்படியே, பிராட்டியை இளவஞ்சிக் கொடியாகக் கூறினதும் முற்றுவமை. இதனை வடநூலார் ரூபகாதிசயோக்தி யென்பர். ஒரு மலையினருகே ஒரு பொற்கொடி நிற்கக்கண்டேனென்று சமத்காரமாக அருளிச்செய்தபடி. மாதர்க்கு இளவஞ்சிக்கொடி ஒப்புச்சொல்லுதல் கவிமரபு.-அன்னமாய் மானாய். என்றவிடங்களிலும் உபமேயங்களான நடை நோக்கு முதலியன மறைக்கப்பட்டன. மயில் கூந்தற் செறிவுக்கும் சாயலுக்கும் உவமையாம். பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோள்களுக்கு உபமானமாக்குவது. செப்பு பொற்கலசம். தொண்டை – கோவைக்கனி.–அன்ன திருவுருவம் நின்றதறியாதே – “ப்ரஹ்மசாரி நாராயணன் மாத்திரமே யுள்ளான், கண்டு வந்தவிடுவோம் என்று கருதிச் சென்றேன். பக்கத்தில் ஒரு பிராட்டி யெழுந்தருளியிருப்பது தெரியாமற் போயிற்று. தெரிந்திருந்தால் உட்புகுந்தே யிருக்கமாட்டேன், அந்தோ! தெரியாமற்சென்று பட்டபாடு இது! என்கிறாள் போலும்.-நெஞ்சு போயிற்று, அறிவு போயிற்று, வளை கழன்றொழிந்தது, மேகலை நெகிழ்ந்தொழிந்தது. இபப்டிப்பட்ட பரிதாப நிலைமையில் கடல்தானும் தனது கோஷத்தைச் செய்து கொலை செய்யா நின்றது.(தன்னுடைய தன்மை தவிரத்தா னென்கொலோ?) “சீதோபவ ஹநூமதா“ என்ன நெருப்புக் குளிருமாபோலே “நிலாச்சுடுக“ என்று நினைப்பிட்டதோ? இதுக்குக் காரணம் என்? என்கிறாள்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்க. சந்திரனுக்குத் தன்னுடைய தன்மையாகிய குளிர்த்தி மாறி வெப்பமுண்டாவதற்கு என்ன காரணம்?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85–
தென்னன் பொதியில்–தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள
செழும் சந்திரன் தாது அளைந்து–அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்–நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற
இன் இள பூ தென்றலும்–போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும்
எனக்கே எரி வீசும்–எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது
முன்னிய பெண்ணை மேல்–முன்னே காணப்படுகிற பனை மரத்தில்
முள் முளரி கூடு அகத்து–முள்ளை யுடைய தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட கூட்டிலே
பின்னும் அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலும்–வாயலகு கோத்துக் கொண்டிருக்கிற அன்றிற் பேடையின் வாயிலுண்டான சிறிய குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாள் ஆம்–எனது நெஞ்சை அறுக்கின்ற வொரு வாளாக இரா நின்றது.
என் செய்கேன்–(தப்பிப் பிழைக்க) என்ன உபாயஞ் செய்வேன்?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து--மலைய பர்வதம் ––மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் ––லோகத்தை வாழ்விக்கை நித்யமானால் போலே
எனக்கு ஒருத்திக்குச் சுடுகை நித்யம் ஆயிற்று –-வீசும் எரி எனக்கே--விரஹாக்னி தன் மேல் தட்டாமே ––முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப்-பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்-–முன்பே நின்ற பனை -முள்ளை உடைத்தான தாமரைத் தண்டாலே செய்த கூடு –-என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் –-நெஞ்சுக்கு புறம்பு நலிகை தவிர்ந்து நெஞ்சை ஈரா நின்றது-பிழைக்க விரகு இல்லை –
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே--தென்னதான பொதிய மலையிலேயாய்-அழகியதாய் இருக்கிற சந்தனத்தை கந்தல் கழித்து -தான் அதில் தாதை யளைந்து-ப்ரவாஹ ரூபேண நித்யமான இந்த லோகமானது த்ருப்தமாம் படி புண்யம் பண்ணினார் இருந்த விடத்திலே எங்கும் ஒக்க சஞ்சரியா நிற்கிற-இனியதாய் இளையதாய் பரிமள பிரசுரமான தென்றலானது – என்னுடைய விரஹ அக்னி தன் மேலே படாத படி கடக்க நின்று நெருப்பை ஏறட்ட நின்றது –-முன்னிய பெண்ணை மேல் –
முன்னே நிற்கிற பெண்ணையின் மேல் உண்டான-முள் முளரிக் கூட்டகத்துப் —-தாமரை வளையத்தில் உண்டான கூட்டிலே-முள் முளரி என்று-பாதகத் வத்தில் உறைப்பைப் பற்றி சொல்லுதல் –-அன்றிக்கே-முள்ளு உண்டாய் இருக்கும் இ றே -அத்தைப் பற்றிச் சொல்லுதல் –-பின்னும் அவ்வன்றில்--அதுக்கு மேலே என்னுதல்–நெருங்கத் தொடுத்த வாய் அலகை யுடைத்தான அன்றில் -என்னுதல் –-பெடை வாய்ச் சிறு குரலும்- கோத்த வாயலகை யுடைத்தான அன்றிலுடைய பேடை வாய்ச் சிறு குரல் உண்டு –
ஒரு கால் சொல்லப் புக்கால் பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேண்டும்படி யான த்வனி -அது-என்னுடைய –முன்பே அழிந்து இருக்கிற என்னுடைய –-நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் – பேச்சுக்கு முன்னே என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாகா நின்றது –-என் செய்கேன் —– ஓர் அபலை இதுக்குப் பரிஹாரம் பண்ணிக் கொள்ளவோ –
எனக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணுவன கடலோசையும் நிலாவுமேயல்ல, தென்றல் முதலிய மற்றும் பல பொருள்களும் ஹிம்ஸிக்கின்றன என்கிறாள்.-தெற்குத்திசைக்குத் தலைவனாய் மலயத் வஜனென்று பெயருடையவனான பாண்டியராஜனது பொதிய மலையிலுள்ள திவ்யமான சந்தனமரத்தற் பூத்தாதுகளிற் படிந்து அவற்றின் பரிமளத்தைக் கொய்து கொண்டு நாடெங்கும் வந்து வீசி அனைவரையும் மகிழ்விக்கின்ற தென்றற் காற்று எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது,-இந்நிலைமையிலே அன்றிற் பேடையின் இன்குரலும் செவிப்பட்டுப் பரமஹிம்ஸையாகின்றது என்கிறாள்.-(என் செய்கேன்) –கீழே “தென்ன்ன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார்“ என்று தொடங்கி“ இன்னிளவாடை தடவத் தாங் கண்துயிலும் பொன்ன்னையார் பின்னும் திருவுறுக.“ என்று சொல்லியுள்ளபடி –-விரஹ காலத்தில் ஹிம்ஸகங்களான இந்த வஸ்துக்களை லக்ஷியம் பண்ணாமல் இவற்றைப் பரம போக்யமாகக் கொள்ளுகிற சில பெண்களாகப் பிறவா தொழிந்தேனே! இவற்றுக்கு நலிவுபடும் பெண்ணாக பிறந்தேனே! என்செய்வேன் என்கிறாள்.
கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-
கல் நவில் தோள் காமன்–மலை போல் (திண்ணிய) தோள்களை யுடையனான மன்மதன்
கரும்பு சிலை வளைய–(தனது) கருப்பு வில்லை வளைத்து
கொல் நவிலும் பூ கணைகள் கோத்து–(அந்த வில்லில்) கொலை செய்ய வல்ல புஷ்ப பாணங்களைத் தொடுத்து
பொத அணைந்து–(அந்த வில்லை மார்பிலே) அழுந்த அணைத்துக் கொண்டு)
தன்னுடைய தோள் கழிய வாங்கி –தனது தோள் வரையில் நீள இழுத்து
என்னுடைய நெஞ்சே இலக்கு ஆக தமியேன் மேல் எய்கின்றான் –எனது நெஞ்சையே குறியாகக் கொண்டு துணை யற்ற என் மீது (அந்த அம்புகளைப் பிரயோகிக்கின்றான்.
பின் இதனைக் காப்பீர் தான் இல்லையே-இப்போது இந்த ஆபத்தில் நின்றும் என்னைத் தப்புவிக்க வல்லீரில்லையே!
கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்--பெண்களை நலிய நக்கிப் பூண் கட்டும் தோள்–கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து –-இலக்குத் தப்பாமல் நின்று –-தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல் என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் –
பெருமாளில் இவனுக்கு விசேஷம்-அமூர்த்தமான நெஞ்சை இலக்காக எய்கிறான் –-மாருகிறிலன் –
சரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்தம் -94-18–இம்மூல பலத்தை பெற்ற போதே –-என்னுடைய நெஞ்சு என்கிறது
அவனுடைய நெஞ்சிலும் ஓர் அம்பு பட்டாலோ -என்கிறது –-பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-
லஷ்மணச்ய ச தீ மத –சுத்தர -16-4-என்னும்படியே பெருமாள் கையில் வில்லை வாங்கினால் போலே
காமன் கையில் வில்லை வாங்குவான் ஒரு தம்பி இல்லையே – கட்டுக்குக் காப்பார் இல்லையே -என்று –இவ்வாபத்துக்கு இட்டுப் பிறந்தாள் ஒருத்தி –
கன்னவில் தோள் காமன் ––கல் என்று சொல்லப்பட்ட தோளை யுடைய காமனுடைய ––கறுப்புச் சிலை வளையக்- கண்ணுக்கு ஆசர்யமாய் இருந்தும் பாதகத்வம் உறைத்து இருக்கிறபடி ––கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் –-இதுக்கு இலக்கானவர்கள் முடிந்தார்கள் என்று சொல்லுகிற புஷ்ப பாணங்களைத் தொடுத்து –-பொத வணைந்து –—-தொற்றர அணைந்து -என்னுதல் -மறுபாடுருவும்படி அணைந்து நின்று -என்னுதல் –-தன்னுடைய தோள் கழிய வாங்கித் –-மார்வை நிரம்ப வலித்து–தமியேன் மேல்--தனியேனாய் இருக்கிற என மேலே –-என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான்—-வர்த்தமானத்தாலே ஒரு காலும் எய்து கை வாங்குகிறிலன் –-பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே--ரஷகன் ஆனவன் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78–என்ன
நாட்டுக்குத் தண்ணளி பண்ணி நோக்க வல்லவோ உங்கள் தமப்பனார் உம்மைப் பெற்றது -நீர் நாட்டை அழிக்கக் கடவீரோ -என்று இளைய பெருமாள் காலைக் கட்டினால் போலே-இவளும் -இக்காமனைக் காலைக் கட்டி நோக்க வல்லார் இல்லையோ -என்கிறாள் –-பேதையேன்–பிரிந்து ஆற்ற மாட்டாத சமயத்தில் முடிந்து பிழைக்கை தேட்டமாய் இருக்க -இன்னம் ஒரு கால் காணலாம் படி இருக்குமாகில்
ஜீவித்துக் கிடந்தால் ஆகாதோ -என்று இருக்கும் படி அதி சபலையான நான் –
கீழ்ச் சொன்ன கடலோசை முதலியவற்றுக்கு ஒருவாறு தப்பிப் பிழைத்தாலும் பிழைக்கலாம், இனி ஜீவிக்க வழியில்லை யென்னும்படியாக மன்மதன் தனது பாணங்களைச் செலுத்தி வருத்துந்திறம் வாசாமகோசரம் என்கிறாள். மஹாபலசாலியான மன்மதனும் தனது கருப்புவில்லை வளைத்து என்னை இலக்காகக் கொண்டு புஷ்ப பாணங்களைப் பிரயோகிக்கின்றானே, நான் இதற்குத் தப்பிப் பிழைக்கும்படி செய்வாராருமில்லையே. என்கிறாள்.-கன்னவில் தோள் காமன் – ஒருகால் பரமசிவனுடைய கோபாக்கிநிக்கு இலக்காகி நெற்றிக் கண்ணால் தஹிக்கப்பட்டு உடலிழந்து அநங்கன் என்று பேர்பெற்றவனான மன்மதனுக்கு உடம்பு இல்லை யாயிருக்க, “கன்னவில் தோள் காமன்“ என்றும் “தன்னுடைய தோள் கழியவாங்கி“ என்றும் அருளிச் செய்வது சேருமோ எனின்,-அநங்கன் செய்கிற காரியத்தைப் பார்த்தால், திண்ணிய உடம்புடையானும் இவ்வளவு காரியம் செய்ய வல்லவனல்லன்“ என்னும்படியாகப் பெரிய கொலைத் தொழிலாயிருப்பதனால் அவனுக்கு வலிதான வுடம்பு இருந்தே தீரவேணுமென்று காமிகள் கருதுவதுண்டாதலால் இப்பரகால நாயகியும் அந்த ஸமாதியாலே சொல்லுகின்றாளென்க.-மன்மதனுக்குக் கரும்பை வில்லாகவும் ஐவகைப் புஷ்பங்களை அம்பாகவும் அந்த அம்புகளை வில்லிலே தொடுத்துப் பிரயோகிக்கின்றானாகவும் நூல்கள் கூறுகின்றமை காண்க.-கரும்பு –சிலை, கரும்புச்சிலை, பூங்கணைகள் – முல்லை, அசோகம், நீலம், மா, முளரி என்ற ஐந்து மலர்கள் மன்மத பஞ்ச பாணங்களெனப்படும். மத்தம், தீரம், சந்தாபம் வசீகரணம், மோகனம் என்கிற ஐவகைச் செயல்களைப் பஞ்ச பாணமாகச் சொல்லுவர் ஒரு சாரார்.
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
கல் நவிலும் காடு அகத்து–கல் மயமான காட்டினுள்ளே
ஓர் வல்லி–ஒரு கொடியில் (புஷ்பித்த)
கடி மலரின்–புதுமலரினுடைய
நல் நறு வாசம்–நல்ல பரிமளம்
மற்று ஆரானும் எய்தாமே–யார்க்கும் உபயோகப் படாமல்
மன்னும் வறு நிலத்து ஆங்குவாளா உகுத்தது போல்–அந்த சூன்ய ஸ்தலத்திலே வீணாகக் கழிவது போல்
பேதையேன் என்னுடைய பெண்மையும்–அறிவற்றவளான என்னுடைய ஸ்த்ரீத்வமும்
என் நலனும் –எனது குணங்களும்
என் முலையும்–எனது முலைகளும்
மலர் மங்கை மன்னும் மைந்தன்–பூவிற் பிறந்த பெரிய பிராட்டியோடு சேர்ந்த பரம புருஷனாயும்
கண புரத்து பொன்மலை போல் நின்றவன் தன்–திருக் கண்ணபுரத்தில் பொன் மலை போல் நிற்பவனாயுமுள்ள எம்பெருமானுடைய
பொன் அகலம் தோயா எல்–அழகிய திருமார்பிலே சேர்வதற்கு உறுப்பாகாவிடில்
வாளா இவை என்–வியர்த்தமான இந்த வஸ்துக்கள் எதுக்கு?
(இவை) -இம்முலைகளானவை
எனக்கே பொறை ஆகி–எனக்கு ஒருத்திக்கே வீண் பாரமாகி
முன் இருந்து–கண்ணெதிரே இருந்து கொண்டு
மூக்கின்று–மேன் மேலும் வீங்கும் போது
மூவாமை காப்பது–அப்படி வீங்காமல் தடுக்க வல்ல
ஓர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே–ஒரு சிறந்த மருந்து கண்டறிவாராருமில்லையே.
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் –-விலஷணமான வல்லி—கடி மலரின் – மதுவை உடைய மலர்-நன்னறு வாஸம் –நல்ல பரிமளம் – மற்று ஆரானும் எய்தாமே மன்னும் – ஓர் ஒருத்தர்க்கு –-வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்--வெறும் தரை – மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் பொன் மலை போல் நின்றவன்தான்- மலர் மங்கை மண்ணும் மைந்தன் – பொன்னகலம் – கூட இருந்தே அவளும் தண்ணீர் தண்ணீர் என்னும் மார்வு தோயாவேல் – அப்படி ஸ்ப்ருஹணீயமான மார்விலே தோயப் பெறாத இன்னாப்பு – விடாய்த்தார் நினைத்த மடுவில் முழுக்கப் பெறாதாப் போலே – மெல்லியல் தோள் தோய்ந்தாய் -என்னுமா போலே -அவனும் இத்தலையில் படி –-என்னிவைதான் வாளா-–பஸ்ய லஷ்மண புஷ்பாணி நிஷ்பலானி-கிஷ்கிந்தா -1-44- நிஷ்பலானவை எனக்கு என் செய்ய –-வெனக்கே பொறையாகி–-இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ -என்கை–என் கண்கள் காண மூக்க வேணுமோ – என்னை விட்டுக் கடக்க நின்று மூக்கல் ஆகாதோ –-வயோச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5-என்ற மூவாமைக் காப்பதோர் –அவனைக் கொடு வந்து தருவார் இல்லையே –-மன்னு மருந்து அறிவீர் இல்லையே ––சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று கடலைச் சரணம் புக என்றால் போலே – மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள் -என்று பட்டர் –
கன்னவிலும் காட்டகத்து –-கல்லு நெருக்கின பெரும் காட்டுக்கு உள்ளே-பெரும் தூறாய் என்கிறபடியே சம்சாரம் ஆகிற பெரும் தூறு இ றே ஒரு காடாவது –-தோர் வல்லிக் கடி மலரின் — அதுக்கு உள்ளே ஒரு கொடியாவது-அது தான் முட்டப் பூத்ததாவது-அது தான் கடிமலரை யுடைத்தாய் இருப்பதொரு வல்லி யாவது-சம்சார விபூதியில் இங்கன் ஒத்த ஆற்றாமை யுள்ளது இவர் ஒருவருக்குமே இறே –-ஓர் வல்லிக் கடிமலரின் உடைய –-நன்னறு வாஸம் –நல நறு வாசம் உண்டு –அத்யந்த விலஷணமாய் செவ்வி அழியாத பரிமளம் –-மற்று ஆரானும் எய்தாமே-மன்னும்--தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –-வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் —
வெறு நிலத்திலே நிஷ் பிரயோஜனமாகப் பொகடுமா போலே விழுந்த தரை தன்னிலே – விநியோகம் கொள்ளுகைக்கு யோக்யமாய் இருப்பதொரு வஸ்துவும் இன்றிக்கே பாழே பொகட்டால் போலே நல் நறு வாசம் தான் இருக்கிறபடி –-என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்--என்னுடைய ஸ்த்ரீத்வமும்-என்னுடைய நன்மையையும் என்னுடைய அவயவங்களும் –-பெண்மை -பாரதந்த்ர்யம்-நலன் -ஆத்மகுணம்-முலை -பக்தி-மன்னு மலர் மங்கை மைந்தன் – மலராள் தனத்துள்ளான்-ஆனவனுடைய மார்வோடே அணையா வாகில் பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே யுவாச குமார -என்று நித்தியமான யௌவனத்தை யுடையவன் –-கணபுரத்துப் பொன்மலை போல் நின்றவன் – திருக் கண்ண புரத்திலே ஸ்லாக்யமான வடிவோடு கால் வாங்காதே நிற்கிறவனுடைய-
மதுரையில் புறச் சோலையிலே எடுத்து விட்டு இருந்தால் போலே யாயிற்று திருக் கண்ண புரத்திலே வந்து நின்ற நிலை – மகா மேரு போலே அநுப யுக்தம் அன்றிக்கே சர்வ உப ஜீவ்யமாயிருப்பதொரு மலை –-தன் பொன்னகலம் தோயாவேல்- அவனுடைய அழகிய திரு மார்விலே அணைத்து விடாய் ஆறாவாகில்-தோய்கை -மறு நனைகை–மெல்லியல் தோள் தோய்ந்தாய் -என்று அவன் இவள் தோளிலே தோயும் இவள் அவன் மார்விலே தோயும் பொன் அகலம் ஆகையாலே இவள் விரஹ அக்னி பட்டு நீராய் யுருகும் அப்போது தோயலாம் என்று இருக்கிறாள்-இவளும் ஹிரண்ய வர்ணை இறே–என்னிவைதான் வாளா –-வகுத்த விஷயத்தோடு அணையப் பெறாதாகில்-வ்யர்த்தமே இராது அன்றே –-வெனக்கே பொறையாகி-—போக உபகரணம் ஆனால் இருவரும் கூடச் சுமக்கை அன்றிக்கே எனக்கே தலைச் சுமை யாகில் எங்கனே தரிக்கும் படி –-முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்- இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –-மன்னு மருந்து – தப்பாத மருந்து –-அறிவீர் இல்லையே – அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் -ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ -என்று இவ்வருகு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இறே -இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இறே –
காமன் செய்கிற ஹிம்ஸை ஒருபுறமிருக்கட்டும், என்னோடு கூடவே பிறந்து என்னை ஹிம்ஸிக்கின்ற இம்முலைகளைத் தண்டிப்பாராருமில்லையேயென்கிறாள்.-ஒருவரும்புகக்கூடாத காட்டிலே சிறந்ததொரு கொடி தன்னிலே பரிமளோத்தரமான புஷ்பம் புஷ்பித்துக் கமழநின்றால் ஆர்க்கு என்ன பயன்?“கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடுடனாய் நின்று தூங்குகின்றேன்“ (நாச்சியார் திருமொழி) என்றாற் போல, அங்கே புஷ்பித்து அங்கே உதிர்ந்து அங்கே உருமாய்ந்து போகவேண்டியதே அம்மலர்களின் கதி.-அதுபோல, எனது தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் திருக்கண்ணபுரத்தெம்பெருமானுடைய ஸம்ச்லேஷத்துக்கு உறுப்பாகாவிடில் இவற்றால் என்ன பயன், மேற்சொன்ன மலர்கள் போல இவையும் நிஷ்பலங்கயெ யன்றோ.-எம்பெருமானோடு அணையப்பெறாதே வீணாக வளர்ந்து கிடக்கின்ற இம்முலைகள் எப்போதும் கண்ணெதிரே தோன்றி நின்று மார்புக்கும் பாரமாகி வருத்துகின்றனவே! எதுக்கு இவை விம்மி வீங்கு கின்றன? இம்முலைகள் தொலைந்தொழிய மருந்து தருவாருமில்லையே! என வருந்துகின்றாள்.-பேதையன் – இப்படி ஹிம்ஸை பொறுக்கமுடியாமல் வருத்தமுறுகிற இந்நிலைமையில் முடிந்து பிழைக்கலாமாயினும் “என்றேனு மொருநாள் நமது மநோரதம் ஸித்திக்குமோ“ என்னும் நசையாலே பிராணனைப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கிற சாபல்யம் தோற்றுகிறது.-வல்லி – வடசொல். வாசம் – வாஸலை வறுநிலம் – புல்பூண்டு தண்ணீர் ஒன்று மில்லாத மரு காந்தாரம்.“எனக்கே பொறையாகி“ என்றவிடத்து. “இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி நோக்கத்தக்கது.-முன்னிருந்து – பெண்மைக்கு உறுப்பாக முலையிருக்க வேண்டியது அவசியமாகில் முதுகிலே முளைத்தாலாகாதோ? கண்ணெதிரே முளைத்து வீங்கவும் வேணுமோ?“கொள்ளும்பய னென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்விலெறிந்து என்னழலைத் தீர்வனே“ என்றாள் ஆண்டாள்“-அவள் மெய்யே பெண்ணாய்ப் பிறந்தவளாகையாலே முலைபடைத்துப் படுகிற வருத்தமெல்லாம் தோற்ற அப்படி சொன்னாள்,-அங்ஙன்ன்றிக்கே திருமங்கையாழ்வார் பாவநாப்ரகர்ஷத்தால் மாத்திரம் பெண்மையை ஏறிட்டுக் கொண்டவராதலால் அவ்வளவு ரோஷங்கொண்டு சொல்லமாட்டாமல் இந்த முலைகள் உள்ளே அடங்கிப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ? என்கிறார்.
மால் விடையின் ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர்-
மால் விடையின்–(பசுவின்மேல்) வியாமோஹங் கொண்ட வ்ருஷபங்களினுடைய
துன்னு பிடர் எருத்து–பெருத்த பிடரியிலுள்ள முசுப்பிலே
தூக்குண்டு–தூக்கப்பட்டு
கன்னியர் கண் மிளிர–சிறுப்பெண்களின் கண் களிக்கும்படி
வன் தொடரால் கட்டுண்டு –வலிதான கயிற்றாலே கட்டப்பட்டு
மாலை வாய்–ஸாயம் ஸந்தியா காலத்தில்
இன் இசை ஓசையும் வந்து–இனிதான இசையின் ஒலியும் வந்து
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்–தனது நாக்கு ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கப் பறெற சிறந்த மணியினுடைய
என் செவி தனக்கே–என்னுடைய காதுக்கு மாத்திரம்
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்–கொலை செய்ய வல்ல வேலைக் காட்டிலும் கடூரமாகி நெடுகா நின்றது
இதனை காக்கும் ஆ என்–இந்த ஆபத்திற்குத் தப்பிப் பிழைக்கும் வழி என்ன?
சொல்லீர்–(ஏதாவது உபாயம் உண்டாகில்) சொல்லுங்கள்.
மால் விடையின் —நாகின் மேலே பித்தேறின விடையின் –-துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு –
கடியுடைத்தான பிடரியிலே ககுத்திலே தூக்குண்டு –-வன்தொடரால்- தார்மிகர்களுக்கு அவிழ்த்து விட ஒண்ணாத படி பிணைக்கை – கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு- பிரணயத்தில் புதியது உண்டு அறியாதாரும் வெருவி விழிக்கை-மாலை வாய்த் தன்னுடைய நா வொழியாதுஆடும் –-இட்டால் தீரும் காலம் – தனி மணியின்- வ்யசநிக்கைக்கு தானே தனி என்னும் அத்தனை –-இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – இனிய பாட்டுக் கேட்டால் படுமோபாதி படுத்த வற்றாய் இருக்கை- ஹ்ருதயத்திலே வருவதற்கு முன்னே செவியிலே சுட்டுக் கொடு வரும் – கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்-
ஒரீட்டிலே முடித்து விடாதே சித்ரா வதம் பண்ணும் – என்னிதனைக் காக்குமா சொல்லீர் – எவ்வழியாலே ஸ்த்ரீத்வத்தைக் காப்பேன் -சொல்லீர் -என்கிறாள் –இது விளைத்த –தென்றல் அன்றில் குழல் விடை -உள்ளிட்டன-இருந்ததே குடியாக என்மேல் படை ஏறும்படி விளைத்த -கையும் மடலும் ஆக்கின படி என்றுமாம் – இப்படியாகைக்கு அபி நிவேசத்தை விளைப்பிக்கை –
மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க-சேய்க்களின் கழுத்திலே மணி யோசையானது செவிப்பட்டது –-மால் விடையின் -துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால் கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு – நாகின் மேலே பிச்சேறி வருகிற வ்ருஷபத்தின் உடைய நெருங்கின ககுத்தோடே சேர்ந்த கழுத்திலே தூக்கப் பட்டு வழிய சங்கிலியால் நாற்றப் பட்டு –-மாலை வாய்த் —- யா நிசா சர்வ பூதா நாம் தசாம் சாகரத்தி சமயமே -ஸ்ரீ பகவத் கீதை -2-69-என்கிறபடியே கண் உறக்கம் தேட்டமான ராத்ரியிலே-தன்னுடைய நா வொழியாது ஆடும் தனி மணியின் இன்னிசை ஓசையும் –-நாகானது வெருவி இருக்க அது தன்னையும் தன் நசையாலே விட மாட்டாதே தொடருகையாலே மாறாதே த்வநிக்கிற தனி மணியினுடைய இனிய இசையை யுடைத்தான த்வனியும் –-வந்து என் செவி தனக்கே – நாட்டார்க்கு இதினுடைய த்வனி செவிப் படா நிற்கச்செய்தேயும் ஜீவியா நிற்பார்கள் இறே-இவ் விரஹம் வேறு ஒருவர்க்கு இல்லையே –ஆகையாலே பாதகத்வம் இவளுக்கே இறே யுள்ளது –-கொன்னவிலும் எக்கில் கொடிதாய் –-அங்கன் அன்றிக்கே எனக்கு ஒருத்திக்குமே கொலையைச் சொல்லா நின்று உள்ள வேலிலும் காட்டிலும் துஸ் சஹமாய் –-நெடிதாகும்- வேலிலும் காட்டில் மிகவும் கொடிதாகா நின்றது-அது போலே கடுக முடித்து விடுகை அன்றிக்கே இது உருவ நலியா நின்றது –-என்னிதனைக் காக்குமா சொல்லீர் –ஓர் அபலையாலே இத்தைப் பரிஹரித்துக் கொள்ளலாமோ -இத் த்வனி செவிப்படச் செய்தேயும் தரித்து இருக்க வல்ல
உங்களுக்கு பரிஹாரம் தெரியாமை இல்லை இறே இத்தைப் பரிஹரிக்கும் படி சொல்ல வல்லீர்களோ
இதுக்கு ஒரு பரிஹாரம் இல்லை என்னா நான் மீளுவேனோ –-மடல் எடுத்து அவனைப் பழிக்கிலும் பெறத் தவிரேன் -என்கிறது மேல் – இது விளைத்த மன்னன் -நான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன் கண்டவர்களை மடல் எடுப்பிக்கை-
“மன்னு மருந்தறிவீரில்லையே?” என்றதும் “நல்லமருந்துண்டு“ என்று விடையளிக்க வல்லாருடைய வார்த்தை காதில் விழவேணுமென்று பாரித்திருந்த பரகால நாயகியின் காதிலே ஊராமாடுகளின் மணியோசை வந்து விழுந்தது, அதற்கு வருந்திப் பேசுகின்றாள்.-செவிக்கு இனிதாகக் கேட்கத்தக்க விடைமணிக்குரலும் என் காதுக்குக் கடூரமாயிராநின்றது, இந்த்த் துன்பமெல்லாம் நீங்கி நான் வாழும் வகை ஏதேனுமுண்டோ? சொல்லீர் என்கிறாள்.-மாட்டின் கழுத்தில் தொங்கும் மணியை மூன்றடிகளாலே கூறுகின்றாள். நாகின்மேலே பித்தங்கொண்டு காமித்து வருகின்ற காளையின் புறங்கழுத்திலுள்ள முசுப்பின்மேலே மநோஹரமாகக் கட்டப்பட்டு ஸாயங்காலத்தில் இடைவிடாது சப்தித்துக் கொண்டே யிருக்கிற மணியின் ஓசையும் வந்து செவிப்பட்டு, செவியிலே சூலத்தைப் பாய்ச்சினாற்போலே ஹிம்ஸை பண்ணா நின்றது.-அவ்வோசை ஓய்ந்தபாடில்லை, நெடுகிச் செல்கின்றதே! என்கிறாள. கடலோசை குழலோசை முதலியனபோல விடைமணி யோசையும் விரஹிகளுக்கு உத்தீபகமாதல் அறிக.-எஃகு – ஆயுதப் பொதுப்பெயர், சூலத்துக்குச் சிறப்புப்பெயருமாம். ஈட்டியையும் சொல்லும்.
இது விளைத்த ——–95
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை –
இது விளைத்த மன்னன்–(தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய்,
நறு துழாய் வாழ் மார்பன்–மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய்,
முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன்–முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய்,
காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன் –“காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய்,
வண்ணம் போல் அன்ன கடலை–தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை யுடைய கடலிலே
மலை இட்டு–மலைகளைக் கொண்டெறிந்து
அணை கட்டி–ஸேதுவைக் கட்டி (இலங்கைக் கெழுந்தருளி)
மா மண்டு வெம் சமத்து –சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க் களத்தில்
மன்னன் இராவணனை –ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய
பொன் முடிவுகள் பத்தும் புரள–அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக
சரம் துரந்து–அம்புகளைப் பிரயோகித்து
தென் உலகம் ஏற்றவித்த சேவகனை–(அவ் விராவணனை) யம லோக மடைவித்த மஹா ஸூரகனாய்.
இது விளைத்த மன்னன் –இத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி ––நறுந்துழாய்- இப்படிப் படுத்துகைக்கு பிரஹ்மாஸ்திரம்–வாழ் மார்பன் –தானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –-மா மதி கோள்--எங்கள் பகையை விளைக்கிறான் -என்கை –-நீ அவன் கோள் விடா விட்டாலும் அவன் தானே எங்களை பாதிக்க வல்லன் –-முன்னம் விடுத்த முகில் வண்ணன் – ஜல ஸ்தல விபாகம் இல்லாதவன் மதியை ரஷித்த உத்தமன் –-
இது விளைத்த மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் – நான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன் – கண்டவர்களை மடல் எடுப்பிக்கைக்கு முடி சூடினவன் – திருத் துழாய் மாலை சாத்தினால்-தன்னோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்று வாரா நின்றுள்ள திரு மார்வை யுடையவன் – தோளும் தோள் மாலையையும் கண்டால் மடல் எடாது ஒழியும்படி எங்கனே-இத்தலை மடல் எடுத்த பின்பு வெற்றி தோற்ற மாலை இட்டவன் -என்றுமாம் – இவளுக்கு கையும் மடலும் போலே அவனுக்கு முடியும் மாலையும் –மா மதி கோள் முன்னம் விடுத்த –-இப்போது கிடீர் அவன் ஆசன்னரானாரை நோக்கத் தவிர்ந்தது – மா மதி -அபலைகள் நலியும் இடத்தில் சம்ஹாரகனை வேண்டாத படி யிருக்கிறவன் – மா மதி கோள் முன்னம் விடுத்த -முகில் வண்ணன் –சந்த்ரனுக்கு ராஹூவால் வந்த இடரை ஒக்கவே போக்கின பரமோதாரன்- முன்னம் -முன்பு ஒரு காலத்திலேயே -என்றுமாம் –
காயாவின் சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் – சின்ன நறும் பூங்கடல்-என்னுதல்-மேகம் -என்னுதல் சிறுத்த காயாம்பூ என்கிறது அணுகலாய் இருக்கை- வண்ணம் போல் அன்ன கடலை – சத்ருக்கள் அன்றிக்கே சஜாதீயமான கடல் என்ன குற்றம் செய்தது –-மலையிட்டணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்- சதுரங்க பலத்துக்கும் உப லஷணம்-அவற்றை உடைய யுத்தம் – திறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே புக்குப் போம் அத்தனை யன்றிக்கே யுத்தத்திலே நேர் நின்று –-பொன் முடிகள் பத்தும் – மனிச்சன் இவன் என்று எதிரியையும் மதியாதே-ஒப்பித்து வந்த படி –-புரளச் சரந்துரந்து-—-தலையோடே உயிரையும் துண்டித்தான் -அதாகிறது -உயிரும் தப்ப விரகில்லாத படி அம்பு நுழைந்த சடக்கு -வர பலத்தாலே அறுத்த தலை முளைக்க-அவற்றுக்குத் தக்கபடி விட்ட அம்பின் பெருமை –-தென்னுலக மேற்றுவித்த சேவகனை –-யமலோகம் பாழ் படும்படி முன்பு இங்கே வந்து இவனுக்குப் பணி செய்த பேர் –-இப்போது அவனுக்குப் பணி செய்ய அவ் ஊர் பாழ் தீரும்படி குடியேறிற்று-ஆயிரக்கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் தன்னுடைய தன் விபூதி ரஷிக்க வேண்டும் கண் -தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்-வர பலத்தால் அன்று -என்னது என்று வரையிட்டுப் போம் அத்தனை –
காயாவின் சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் –-காயாவினுடை-பூப் போலே திகழா நின்றுள்ள திரு நிறத்தை யுடையவன் –-சின்ன நறும் பூ -சிறுத்து நறு நாற்றத்தை யுடைய பூ-என்றுமாம் –-பூவளவல்லவே மணம்–சின்னம்-சிறுமை குணமும் குணியும் போலே இவன் அபிமானத்திலே இது விளங்குவது –வண்ணன் -ஊராகப் பகையானாலும் விட ஒண்ணாத வடிவு –-வண்ணம் போல்-
ஜ்ஞான ஆனந்தங்களோடே ஒக்கும் இ றே சாம்யா பத்தியிலே –-உள்ள உலகளவும் -பெரிய திருவந்தாதி -76-இத்யாதி-ஸ்வா தீன பராதீனமே இறே யுள்ளது –எடுக்கத் தன்னோடு சமமாய் யுள்ளதொரு வஸ்துவைச் சொல்லக் கடவது இறே –-அன்ன கடலை – காம்பீர்யத்தாலும் சகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே இட்டுக் கொண்டு இருக்கையாலும்-பெருமையாலும் நிறத்தாலும் தன்னோடு போலியாய் இருப்பது ஒன்றைப் பெறாமையாலே –-மலையிட்டணை கட்டி –—
கண்ட மலைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டு வந்து-கடலிலே நடு நெஞ்சிலே இட்டு-கான எண்கும் குரங்கும் வழி போம்படி -பெரிய திருமொழி -6-10-6–பண்ணினான் ஆயிற்று –-என்னையும் அப்படியே காம்பீர்யத்தையும் அழித்து மடல் எடுக்கும் படி பண்ணினான் -என்கிறாள் –-மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்– நான் ராசாச ராஜன் -என்று அபிமானித்து இருக்கிற ராவணனையும்-அவனுடைய ரத கஜ துரக பதாதிகளான சதுரங்க பலத்தையும் உடையதாய்-மிகைத்து வருகிற யுத்தத்திலே –-பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலக மேற்றுவித்த சேவகனை –
வர பல புஜ பலத்தாலே பூண் கட்டின முடிகள் பத்தும் பூமியிலே புரளும்படியாக அம்பையோட்டி-தனக்குத் திரையிட்டு இருந்தவனுக்குத் தான் அடிமை செய்யும்படி பண்ணின-ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனை –-அந்த ஆண் பிள்ளைத் தனம் எல்லாம் உடையவன் என் கையிலே படப் புகுகிறபடி எல்லாரும் காண-விறே புகுகிறது-
ஆகக் கீழ்வரையில், தானநுபவிக்கும் கஷ்டங்களைச் சொல்லி முடித்தாள்,-இக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னானென்பதை நான் அறியாமையில்லை, நன்கு அறிவேன், அடிபணிந்தாரை ரக்ஷிப்பதற்கென்றே மார்பில் தனிமாலையிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லி உலகங்களை வஞசிப்பவனாம் அவன்,“சந்திரனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தொலைத்தேன், அப்படி உங்களுடைய துன்பத்தையும் தொலைத்தொழிப்பேன் வாருங்கள்“ என்று மயக்கி அழைப்பவன் அவன்.“காளமேகம் போலும் காபாமலர்போலும் என் வடிவு விளங்குகின்ற அழகைக்கண்டு களியுங்கள்“ என்றுமெனி நிறத்தைக்காட்டி வலைப்படுத்திக் கொள்பவன் அவன்,-ஒரு ஸீதாப் பிராட்டிக்காகவும் எப்படி யெப்படியோ உருமாறிப் படர்படுகள் பட்டுஅதிகமாநுஷமான காரியங்கள் செய்தவனாக்கும் நான், என்னை யடுப்பார்க்கு ஒரு குறையுமுறாது என்று சொல்லி அகப்படுத்திக்கொள்பவன் அவன்,-பல திருப்பதிகளிலே தனது பெருமையைக் காட்டிக்கொண்டு மேனாணித்திருப்பவன் அவன், அவன் படிகளெல்லாம் நான்கறிவேன் நான்,-அவனுள்ள திருப்பதிகள்தொறும் நுழைந்து புறப்பட்டு என் மனவருத்தங்களை இனி நான் சொல்லிக்கொள்ளப் போகிறேன், ஆதரித்து உஜ்ஜீவப்பித்தானாகில் பிழைத்துப் போகிறான், இல்லையாகில் என் வாய்க்கு இரையாகி அவன் படப்போகிற பாடுகளைப் பாருங்கள் – என்கிறாள் மேல்.-முன்னம் மாமதிகோள் விடுத்த – சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கியருளினவன் இன்று எனக்கு க்ஷணத்தை விளைக்கலானது என்னோ என்று இரங்குகின்றாளாகவுமாம்.“இப்போது கீடீர் அவன் ஆபந்நரானாரை நோக்கத் தவிர்ந்தது“ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும்,“மதியுகுத்த இன்னிலாவின் கதிரும் என்றனக்கே வெய்தாகும்“ என்று கீழே அருளிச்செய்தபடி என்னை எரிக்கின்ற சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப்போக்கி என்னை நன்றாகத் தப்பிக்குமாறு அந்த சந்திரனுக்கு நியமித்த மஹாநுபாவன் என்றதாகவுமாம்.-மா மண்டு வெஞ்சமத்து – மா என்று யானையையும் குதிரையையும் சொல்லும், ரதம், கஜம், துரகம், பதாதி எனச் சேனையுறுப்புக்ள நான்காதலால் மற்ற இரண்டு உறுப்புகட்கு உபலக்ஷணமென்க-மண்டுல் – நெருங்கியிருத்தல் சேவகனை – சேவகமாவது வீரம், அதனையுடையவன் சேவன். “செருவிலே அரக்கர்கோனைச் பெற்ற நம் சேவகனார்“ என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.
“இது விளைத்த மன்ன்ன்“ என்று தொடங்கி, “தென்னறையூர்“ மன்னு மணிமாடக்கோயில் மணாளனைக் கன்னவில் தோள்காளையை“ என்கிற வரையில் எம்பெருமானுடைய விபவாவதார வைபவங்கள் அர்ச்சாவதார வைபவ“கள் முதலியன விரிவாகக் கூறப்படுகின்றன.-மார்பன். முகில்வண்ணன், சேவகனை, வீரனை, கூத்தனை என்கிற இவ்விசேஷணங்கள் எல்லாம் மேலே கன்னவில் தோள் காளையை என்ற விடத்தில் அந்வயித்து முடியும்.
ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை
ஆயிரம் கண் மன்னவன் வானமும்–ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்க லோகத்தையும்
வானவர் தம் பொன் உலகும் –(மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும்
தன்னுடைய தோள் வலியால் கைக் கொண்ட தானவனை–தனது புஜ பலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை
பின் –சிறிது காலம் பொறுத்து
ஓர் அரி உருவம் ஆதி–ஒரு நரசிங்க மூர்த்தியாக அவதரித்து
எரி விழித்து–நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து,
கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே –கொடிய போர்க் களதிலே (பகைவரைக் கொல்லுங் கணக்கிலே சடக்கெனக்) கொன்று விடாதே
வல்லாளன்–மஹாபலசாலியான அவ்வசுரனுடைய
மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து–மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி–(அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்க வைத்துக் கொண்டு
அவனுடைய பொன் அகலம்–அவனது அழகிய மார்பை
வள் உகிரால் போழ்ந்து–கூர்மையான நகங்களாலே பிளந்து
புகழ் படைத்த –(ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய்
மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை–மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹா வீரனாய்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ––பின் -சில காலம் சென்ற பின்பு –-ஓரரி -தன்னாலும் இவ்வடிவு கொள்ள ஒண்ணாது –-ஆகி -வர பலத்தாலே மிகைத்த ஹிரண்யனை அழிக்கைக்காக சேராத நரத்வ சிம்ஹத்வங்களைச் சேர்ந்த படி –-எரி விழித்து -குளிர்த்தியை உடைத்தான கண்கள் –
ஆஸ்ரித விரோதி என்றவாறே நெருப்பை உமிழ வற்றான –-கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே- ஓர் அம்பை இட்டுத் தலையை உருட்டிற்றாகில் முடி சூட்டினதோடே ஒக்கும் –-வல்லாளன்-
நர சிம்ஹமும் பிற்காலிக்க வேண்டும்படி –-ஹிரண்யாய நம -என்று சொல்லும் படி செலுத்தின காலம்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் -தன்னுடைய தாள் மேல் கிடாத்தி – முடியைப் பற்றின போதே பிராணன் போயிற்று-பின்னை பிணத்தை இழுக்குமோபாதி தன்னுடைய பிராட்டி சாயக் கடவ மடியிலே-என்னைப் போல் அன்றிக்கே-முருட்டுப் பையலையோ மடியில் ஏற்றுவது -என்கிறாள் –-அவனுடைய பொன்னகலம் ––திரு வுகிருக்கு இறை போற வளர்த்த மார்வு—வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —-தமப்பன் பகையாகச் சிறுக்கனுக்கு உதவினான் என்னும் புகழ் படைத்த –-மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை –திரு வுகிருக்கு இரை போந்தது இத்தனை–திருவாழி தனக்கிரை போராமையாலே சீறி நாக்கு நீட்டுகிற படி –-வீரனை- திரு மந்த்ரத்தின் படியே அனுசந்திக்கிறது –
ஆயிரக்கண்--தன்னுடைய அலாபத்தில் விளம்பம் பொறுத்து இருந்தால் போல் அன்றிக்கே
ஆஸ்ரிதனுக்குப் ப்ரதிபந்தகம் வருகிற சமயத்திலே உதவா நின்றால் வருவதோர் ஏற்றம் உண்டு இறே-அந்த ஏற்றம் அழிய -அறிய -இறே -புகுகிறது–ஆயிரக்கண்-மன்னவன் வானமும் – ஆயிரம் கண்ணை யுடைய இந்த்ரனும் அந்த கண்கள் ஆயிரத்தாலும் உணர்ந்து நோக்குகிற லோகங்கள் மூன்றும் –-வானவர் தம் பொன்னுலகும் –—ஏற்றமுண்டான ஆதித்யர்கள் சஞ்சரியா நின்றுள்ள ஸ்லாக்கியமான லோகங்களும் –-தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட –அவன் தரக் கொள்ளுதல் –அன்றியிலே
ஒரு தேவதை கொடுக்கக் கொள்ளுதல் அன்றியிலே தன் தபசால் கொள்ளுதல் செய்கை அன்றிக்கே
தன் தோள் மிடுக்காலே கைக் கொண்ட அத்தனை மிடுக்கனானவன் கைக் கொண்ட பின்பு-நமக்குக் குடியிருப்பு அரிதென்று தம் தாமே விட்டுப் போம்படியாக–தானவனைப்-–ஆசூர பிரக்ருதியாய் உள்ளவனை—பின்னோர் அரியுருவமாகி ––ஆன்ரு சம்சயத்தாலே அவனுக்காக நெடுநாள் பொறுத்துப் போந்தான் – பின்பு சிறுக்கன்-இனி தோற்றி யருள வேணும் -என்று அபேஷித்த நர சிம்ஹஹமாய்
நரஸ் யார்த்த தநும் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்தாதநும் ததா -என்று-அரியுருவும் ஆளுருவுமாய் -முதல் திருவந்தாதி -31-அவ் வரத்தின் உள் வரியில் அகப்பட்ட தொரு வடிவைக் கொண்டு –-யெரி விழித்துக் —உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்களாலே அழல விழித்து -பெரிய திருமொழி -7-1-9–கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே –முடித்தே விடக் கடவதான யுத்தத்திலே இவனைக் கொல்லுகையாவது தலையிலே முடியை வைத்த வாசி இறே –-வல்லாளன்- வயிற்றில் பிறந்தவனுடைய உத்கர்ஷமும் கூடப் பொறாத துஷ் ப்ரக்ருதியாய் பெரு மிடுக்கை யுடையவன் –-மன்னு மணிக் குஞ்சி பற்றி வர வீரத்துத் ––நெடு நாள் ராஜ்ஜியம் பண்ணுவதாக முடி கவித்து இருக்கிற குஞ்சியைப் பற்றி அருகே வர இழுத்து-வரவீர்த்து -இற்றைக்கு முன்பு பரிபவப் பட்டு அறியாதவன் ஆகையாலே பிடித்த பிடியிலே பிணம் ஆனான் -பின்பு வர இழுத்துக் கொண்ட வித்தனை –-தன்னுடைய தாள் மேல் கிடாத்தி –-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்தார் – என் போல்வாரை இறே மடியிலே எடுத்துக் கொள்ள வடுப்பது –-ஆஸ்ரிதருக்குப் பரம ப்ராப்யமான திருவடிகளிலே ஆசூர பிரகிருதி யானவனை ஏறிட்டுக் கொள்ளுவதே -என்கிறாள் –என்று –அவனுடைய பொன்னகலம் –-ஹிரண்யன் இறே-அவனுடைய மார்பத்தை-அசஹ்ய அபசாரத்துக்குக் கொள்கலமான மார்பு இறே அத்தை இறே குட்டமிட்டு எடுத்தது –-வள்ளுகிரால் போழ்ந்து –-அழகிய உகிராலே உருகிப் பதம் செய்தது – பின்னை அநாயாசேன கிழித்துப் பொகட்டான் –-புகழ் படைத்த — ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறி உதவினான் என்று வந்த-அப் புகழை உடைய புண்ணியனை-ஹிரண்யன் உடைய உடல் திரு வுகிருக்கு அரை வயிறு ஆம்படி யும் போந்தது இல்லை இறே –-மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை –பின்னையும் பெரிய சன்னாஹங்களும் வீரப் பாடுகளுமாய் நாக்கை நீட்டா நின்றன –விஷயம் பெறாமையாலே –-வீரனை- வீரம் என்கிற மந்திர லிங்கம் தோன்றச் சொல்லுகிறார் –போரார் நெடு வேலோன்-கிளரொளியால் குறைவில்லா –வளரொளிய கனலாழி-
தானவன் –அரசன், வடசொல். கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே – தூணில் நின்றும் தோன்றியனவுடனே திருகண்ணாலே அவனைக் கொளுத்திவிடலாம்,-“ஆச்ரிதனான ப்ரஹ்லாத்தன் விஷயத்திலே பல்லாயிரங் கொடுமைகள் புரிந்த இப்பாவியை இப்படி ஒரு நொடிப்பொழுதிலே கொன்றுவிடக் கூடாது, சித்திரவதைப் பண்ணிவிடவேணும்” என்று தான் மேல்கிடாத்திப் போழ்ந்தானாயிற்று.-தன்னுடைய தாள்மேல் கிடாத்தி வள்ளுகிரால் போழ்ந்து – தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி இரணியன் வரம்பெற்றிருந்தானாதலால் அந்த வரம் பழுதுபடாதபடி அவனைப் பிடித்து வாசற்படியில் தன் மடி மீது வைத்துக்கொண்டு அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களாலே பிளந்தருளினன்.
மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104–
மன்னு இ அகல் இடத்தை–எல்லாரும் பொருந்தி யிருக்கின்ற விசாலமான இப் பூமியை
மா முது நீர் விழுங்க–மஹா ஸமுத்ரம் விழுங்கிவிட
பின்னம்–அதற்கு பிறகு
ஓர் எனம் ஆய் புக்கு–ஒரு திவ்ய வராஹமாய் (கடலினுள்ளே) பிரவேசித்து
வளை மருப்பின்–வளைந்த கோட்டினுடைய
கொல் நவிலும் கூர் நுதி மேல்–(பகவரைக்) கொல்ல வல்ல கூர்மையான நுனியின் மீது
வைத்து எடுத்து கூத்தனை–(அந்தப் பூமியை) வைத்துக் கொணர்ந்த அழகிய சேஷ்டித்த்தை யுடையனாய்
மன்னிவ் வகலிடத்தை –எல்லாரும் பொருந்தும் பூமி –-மாமுது நீர் தான் விழுங்கப் –– அத்ப்ய ப்ருதிவீ -என்று உண்டாக்கின தானே விழுங்க –-பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-–பின்னும் -ரஷணத்திலே-ஓர் ஏனம் -அழிவுக்கு இட்ட உடம்புக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை –-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –-கூரியதான அக்ரம்-
மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் — ஜ்ஞான அத்யவசாயங்கள் உள்ள விடத்தே உதவின அளவன்றிக்கே பட்ட பரிபவமும் அறிவிக்கையும் இன்றிக்கே-யோக்யதையும் இன்றிக்கே இருக்கிற இவற்றை -தன்னது -என்கிற பிராப்தியைக் கொண்டு-தன்னுருக்கெடுத்து வேற்றுருக் கொண்டதொரு நீர்மை உண்டு இ றே-அதுவும் அழிய இறே புகுகிறது –-மன்னிவ் வகலிடத்தை –
நெடுநாள் சர்வேஸ்வரனதாய் அடிபட்டுப் போருகிற இந்த பூமிப் பரப்பை-மாமுது நீர் தான் விழுங்கப் –
பாடி காப்பாரே களவு காணுமா போலே பூமிக்கு ரஷகமான கடல் தானே கொள்ளை கொள்ள –பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –-இது உரு மாய்ந்து போமாகில் நாம் வ்யாபரித்து போருமது தான் எது -என்று மீண்டு
கை வாங்காதே -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே இருப்பதொரு மகா வராஹமாய் ஜலத்திலே புக்கு உடைந்து எடுத்து கொண்டு அண்டத்தை கொம்பிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே யாயிற்று எடுத்து வைத்துக் கொண்டபடி –-கொன்னவிலும் கூர் நுதி மேல் – இவன் ரஷகன் என்று அனுகூலித்தால் பிழைத்துப் போம் இத்தனை போக்கி அவனோடு எதிரிட்டால் முடிந்து போம் இத்தனை –கூத்தனை –-என்றும் ஒக்க பூமியை கீழ் மண் கொண்டு பிரளயம் கொண்டு போனால் ஆகாதோ
இம் மநோ ஹாரி சேஷ்டிதத்தை காணப் பெறில் –
வைத்தெடுத்த கூத்தனை –பூமியைக் கோட்டின் நுனியில் வைத்துக்கொண்டு எழுந்தருளும் போது அக மகிழ்ச்சி தோற்றக் கூத்தாடிக் கொண்டே யெழுக்கருளின் போலும்.-மஹா வராஹ ரூபாயாய் -புண்ணியம் தெய்வதமும் சேர் பூ லோகத்தை புல் பாய் போலே சுருட்டிக் கொண்டே பாதாளம்
நண்ணி இரண்யாட்ச்சனை பின் தொடர்ந்தே ஏகி நலமுடனே யாதி வராகத் தேவாகி-மண்ணுலகம் அனைத்தும் இடந்து எடுத்தோர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்துத் தேவர் எண்ண உலகீர் எழும் படியப் பண்ணா-இறைவா நாராயணனே எம்பிரானே-என்பர் பின்னோரும்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பம் -வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க–முது நீர் -சகல பதார்த்தங்களும் முற்பட்டு புராதானமாய் யுள்ள நீர்-அப ஏவ சசர்ஜாதவ்–நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி –-வைத்து எடுத்த கூத்தனை –அக்காலத்தில் மகிழ்ச்சி தோற்ற கூத்தாடினான் -என்பதை கண்டார்கள் ஆழ்வார்கள்
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை –
மன்னும் வடமலையை–அழுத்தமாக நாட்டப்பட்ட மந்தர கிரியை
மத்து ஆக–மத்தாகக் கொண்டு
மாசுணத்தால் –(வாசுகி யென்னும்) பாம்பினால் (சுற்றி)
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து–விளங்குகின்ற சந்திர ஸூர்யர்களும் ஆகாசமும், ப்ரகாசிக்கின்ற (மற்றும் பல) தேஜ பதார்த்தங்களும் தன்னோடு சுழலும்படி அந்த மந்தர மலையைச் சுழற்றி (கடலைக் கடைந்து)
வானவரை இன் அமுதம் ஊட்டி–தேவர்களுக்கு இனிய அமிருத்த்தை உண்ணக் கொடுத்து
அவருடைய–அத் தேவர்களுடைய
மன்னும் துயர் கடிந்த–நெடுநாளைய துக்கத்தைப் போக்கடித்த
வள்ளலை–பரம உதாரனாய்-
மன்னும் வடமலையை மத்தாக –-நற்றரிக்க வைத்த படி கடையப் பிதிராத மலை –-மாசுணத்தால் மின்னு மிரு சுடரும் விண்ணும் பிறந்கொளியும் –—தேஜோ பதார்த்தங்கள் எல்லாம் தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய –-மன்னும் துயர் கடிந்த வள்ளலை –
யாவதாத்மபாவியான தாரித்ர்யம்-பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்பட –
மன்னும் வடமலையை –-அப்ரதி ஷேதம் உள்ள விடத்தே உதவினவளவு அன்றிக்கே-ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவர்கள் அளவில் ஆயாசித்து கார்யம் செய்த ஓன்று உண்டு இறே- அதுவும் அழிய இறே புகுகிறது –பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மந்தர பர்வதத்தை –-மத்தாக மாசுணத்தால் – மத்தாக கொண்டு வாசூகியைக் கயிறாக கொண்டு –-மின்னு மிருசுடரும் விண்ணும் – தர்ச நீய வேஷராய் ஜகத்துக்கு த்ருஷ்டி பூதராய் இருந்துள்ளவர்களுக்கு ஆவாஸ ஸ்தனமாய் இருந்துள்ள லோகங்களும் பிறந்கொளியும் —– மற்றும் பிரகாசிக்கிற தேஜோ பதார்த்தங்களாய் உள்ள நஷாத்ர தாரா கணங்களும் தன்னினுடனே சுழல – கடைகிற போது இவை யடைய பூ போலே பறந்து மலையோடு ஒக்கச் சுழன்று வரும்படிக்கு ஈடாக கடைந்து நெடும் போது தாங்கள் கடைந்து இளைத்துக் கை வாங்கின சமயத்திலே – மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய -மன்னும் துயர் கடிந்த வள்ளலை – ஆயிரம் தோளாலே சவ்யசாசியாய்க் கொண்டு தானே கடைந்த அம்ருதத்தை
அவர்களுக்கு சத்ருக்களான அசூரர்களை அழியச் செய்து தேவர்களை புஜிப்பித்து அவர்கள் உடைய நிலை நின்ற புறங்கால் வீக்கத்தை தவிர்த்து ரஷித்த பரமோதாரனை–வெள்ளை வேலை வெற்பு நாட்டி -திருச் சந்த விருத்தம் -88-
மாசுணம் என்று பாம்புக்கும் பெரிய பாம்புக்கும் பெயர்.-கடலைக்கடைய மந்தரமலையைச் சுற்றின போது அது சுழன்ற விசையின் மிகுதியினால் இரு குடர் விண் முதலிய ஸகல பதார்த்தங்களும் கூடவே சுழன்வனபோலத் தோற்றினமைபற்றி “மின்னுமிருசுடரும் தன்னினுடனே சுழல மலைதிரித்து“ என்றார்.-மந்த்ர மலை சுழன்ற பொழுது அந்த சுழற்சியின் விசையின் மிகுதியால் சகல பதார்த்தங்களும் சுழல்வன போலத் தோன்றினமை–மின்னு மிருசுடரும் – -தன்னினுடனே சுழல மலைத் திரித்து –-அவருடைய –மன்னும் துயர் கடிந்த வள்ளலை–துர்வாச முனிவர் சாபத்தால் தேவர்களுக்கு நேர்ந்து இருந்த வறுமையைப் போக்கின-என்றவாறு –
மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –
மற்று அன்றியும்–தவிரவும்
தன் உருவம் ஆரும் அறியாமல்–தனது ஸ்வரூபத்தை யாரும் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி.
தான் ஓர் மன்னும்–பரமபுருஷனான தான் ஒரு திவ்யமான வாமந வேஷங்கொண்ட பிரமசாரியாகி
மா வலி தன்–மஹா பலியினுடைய தான
பொன் இயலும் வேள்விக் கண் புக்கிருந்து –ஸவர்ணதானஞ் செய்யும் யாக பூமியிலே எழுந்தருளி
போர் வேந்தர் மன்னை–போர் செய்யவல்ல மிடுந்தையுடைய அரசர்களில் தலைவனான அந்த மாவலியை
மனம் கொள்ள வஞ்சித்து–(இப்பிரமசாரி யாசிப்பதற்காகவே வந்தானென்று) நம்பும்படியாக மயக்கி
நெஞ்சு உருக்கி–(நடையழகு சொல்லழகு முதலியவற்றால) அவனது நெஞ்சை உருக்கி
மன்னா–மஹா ப்ரபுவே!
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப–என் காலடியால் நாளே அளந்து கொள்ளும்படி
மூ அடி மண் தருக என்று–மூவடி நிலம் கொடு என்று
வாய் திறப்ப–வாய் திறந்து கேட்க,
அவனும் –(அதுகேட்ட) அந்த மாவலியும்
என்னால் தரப்பட்டது என்றலும்–அப்படியே என்னால் மூவடி நிலம் கொடுக்கப்பட்டது என்று சொல்ல
அத்துணைக் கண்–அந்த க்ஷணத்திலேயே-அத்துணைக் கண் – துணை –அளவு, அவ் வளவில் என்றபடி.
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ–விளங்குகின்ற மணிமகுடம் ஆகாசத்தே போய் அளாவ,
மேல் எடுத்த–உயரத் தூக்கி யருளின பொன் ஆர் களை கழல் கால்–பொன்கள் நிறைந்து சப்திக்கின்ற வீரத் தண்டை யணிந்த திருவடி
ஏழ் உலகும் போய் கடந்து–மேலுலகங்களெல்லாவற்றையும் தாண்டி
அங்கு ஒன்னா அசுரர் துளங்க–அந்த யாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகை யசுரர்கள் துன்பப்படும்படி
செல நீட்டி–(மேலே) நெடு கவியாபிக்கச் செய்து
மா வலியை வஞ்சித்து–(இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து
மன்னும் இ அகல் இடத்தை–நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை
தன் உலகம் ஆக்குவித்த தாளானை–தன்னுடைய லோகமாகவே ஆக்கிக் கொடுத்த திருவடிகளை யுடையனாய்-
மற்றன்றியும்--பிரதாபத்துக்கு எதிர்த்தட்டான தாழ்வுகள் பேசுகிறது –-தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் – பெரிய பிராட்டியாரும் நித்ய ஸூரிகளும் அறியாதபடி-மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்--வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –-பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து –-மகா பலியைப் போலே நானும் யாகம் பண்ணினேன் ஆகில் தானே வரும் இறே-என்று கருத்து –-போர் வேந்தர் —மன்னை-மகா ராஜனை–மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்- ஸூக்ர பகவான் உள்ளிட்டார் –நெஞ்சுருக்கி –புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6–ராஜாவே -என்ன-திரியப் பார்க்க-மூவடி -என்ன-என்னன்புது -என்ன மண் -என்ன ஆர் காலாலே -என்ன என் காலாலே -என்ன
பெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன என் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன
பேசாது இருந்தான்-இவன் பேச்சை கேட்க்கைக்காக-இவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட
அவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே வேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –-என்னால் தரப்பட்ட தென்றலுமே – தத்த மச்யாபயம் மா -யுத்த -18-34-என்ற பெருமாளைப் போலே –-அத் துணைக் கண் — அந்த ஷணத்திலே –-மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்தபொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு –-ஸ்ப்ருஹா விஷயமாய் – ஆஸ்ரித ரஷணத்துக்குப் பின்னை ஒன்றை வேண்டாதபடி சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகள் –-ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி--உகவாத நமுசி பிரப்ருதிகள் –-மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் –-அவனுக்கு அடி பட்டிருக்கை –-தன்னுலக மாக்குவித்த –ஆஸ்ரிதரோடு தன்னோடு வாசி இல்லாமையாலே இந்தரனுக்கு என்னாது ஒழிகிறது–தாளானை –
தாள் என்று திருவடிகள் –-
எம் வள்ளலார் –மற்றன்றியும் தன்னுருவ- ஈஸ்வர அபிமானிகளுக்கு கார்யம் செய்தானே யாகிலும்
தன்னுடைய ஐஸ்வர்யமான மேன்மையில் ஒன்றும் குறையாமல் செய்தது இறே அது –-இது அங்கன் இன்றிக்கே -தன்னுடைய ஸ்வ பாவத்தை தவிர்ந்து கார்யம் செய்த நீர்மை இறே-அந்நீர்மையும் அழிய விறே புகுகிறது-மற்றன்றியும் –அதுக்கு மேலே -கண்டவர்கள் இவன் முன்பு உள்ள ஜன்மங்களிலும் இப்படி உளனாய்ப் போந்தவன் ஒருவன் என்னும்படியாக-கோசஹச்ர ப்ரதாதாரம் -என்னும் நிலை ஒருவர்க்கும் தெரியாத படி –மாரும் அறியாமல் தான் –பிராட்டிமார்க்கும் அகப்பட இவன் இப்படி இரப்பாளனாய்ப் போந்தான் அத்தனையோ -என்னுபடியாக-சர்வராலும் அபிகம்யனான தான் போய்ப் புக்கு-அங்கு-மகாபலி யஞ்ஞ வாடத்திலே –-ஓர் மன்னும் குறளுருவின் –கண்ட கண்கள் வேறு ஒன்றைக் காணப் போகாதே தன பக்கலிலே துவக்குண்ணும் படி அத்விதீயமான வேஷத்தை உடைய-மாணியாய் மாவலி தன்-உண்டு என்று இட்ட போதொடு-இல்லை என்று தள்ளின போதொடு வாசி அற முகம் மலர்ந்து போக வல்லனாம் படி இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையனாய் –-பொன்னியலும் வேள்விக் கண் –மடல் எடுத்துப் பெற விருக்கிற இது போல் அன்றிக்கே பலத்தோடு வ்யாப்தமான யாகத்திலே–அன்றிக்கே அபேஷித்தார் உடைய அபேஷிதங்கள் எல்லாம் கொடுத்துப் போருகையாலே ஸ்லாக்கியமான யாகம் -என்னவுமாம் –-புக்கு –இப் பதத்தாலே இட்ட அடிகள் தோறும் பூமி நெரியும்படி போய்ப் புக்கு –இருந்து –மலையாள வளைப்பு போலே –கொள்வன் நான் மாவலி மூவடி தா -திருவாய் மொழி -3-8-9-என்று சொல்லுகிறபடியே கொண்டு அல்லது போகேன் -என்று இருந்து –-போர் வேந்தர் மன்னை – மதிப்புடைய ராஜாக்களுக்குஎல்லாம் பிரதானனாய் இருக்கிறவனை-இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் அல்லன் -அர்த்தியாய் வந்தான் -என்று அவன் நெஞ்சிலே படும்படியாக-வஞ்சித்து நெஞ்சுருக்கி--அவனுக்கு தந்து அல்லது நிற்க ஒண்ணாத படி அவனுடைய நெஞ்சை-புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி-1-8-6-என்கிறபடியே-அவனுடைய இந்த்ரியங்களை தானிட்ட வழக்காக்கி
சூக்ராதிகள் வந்து விலக்கினாலும்-அது கேளாதபடி கரைத்து-முன்பு அவன் பண்ணின அபிசந்தியைக் குலைக்கைக்கு ஒன்றும் பின்பு தான் சொல்லுவது ஒன்றுமாய் இருக்கையைச் சொன்ன படி –-என்னுடைய பாதத்தால் –-மகா பலீ -என் காலாலே மூன்றடி மண் தா -என்ன -உன்னுடைய சிறு காலாலே மூன்றடி மண் போருமோ –-யான் அளப்ப மூவடி மண் —–-அர்த்தித்தார் அர்த்தித்த படியே கொடுக்கும் அத்தனை அன்றோ –-மன்னா தருக என்று வாய் திறப்ப –-ராஜாவே மூன்றடி மண் தர வேணும் என்று சொல்ல –-மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே – தத்த மஸ்ய -யுத்த 18-34-என்கிறபடியே முன்பே என்னாலே தரப் பட்டது அன்றோ -என்றான் –-அத்துணைக் கண் —— ஆசூர பிரக்ருதியான அவன் மறு மனஸ்ஸூ பட்டு இரண்டாம் வார்த்தை சொல்லுவதற்கு முன்பே அப்போதே-மின்னார் மணி முடி போய் விண் தடவ –இவன் வாமனனாய் நின்றான்-திரு அபிஷேகமானது வளர்ந்து உபரிதன லோகங்கள் எங்கும்சென்று புக்கு வ்யாபரித்தது –-மேலேடுத்த--எடுத்த திருவடிகள் திரு அபிஷேகத்தோடே இசலி வளர்ந்த படி-முடி பாதம் எழ -திருவாய் மொழி -7-4-1-என்றும்-அத்ய திஷ்டத்த சாங்குலம்-என்றும் சொல்லக் கடவது இறே –-பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு –— த்வனியை உடைய வீரக் கழலை யுடைத்தாய் சலாக்கியமான திருவடிகள் மேல் உண்டான லோகங்கள் எல்லாம் கழியப் போய்–ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி--அவ்வளவிலே எதிரிட்டு வந்த நமுசிப் ப்ரப்ருதிகளை-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி-அவனை ஆகாசத்திலே சுழற்றி எரிந்து அவ்வளவும் செல்லப் பரப்பி–மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் — பழையதாய் மகாபலி தான் அடி இட்டுப் போந்த ராஜ்யத்தை-சிறு காலைக் காட்டி மூவடி மண் தர வேணும் என்று இரந்து-கையிலே நீர் விழுந்த அனந்தரத்திலே பெரிய அடியாலே அளந்த வஞ்சனையைச் சொல்லுகிறது –-மகா பலி பக்கல் நின்றும் வாங்கிக் கொடுத்தது இந்த்ரனுக்காய் இருக்கச் செய்தே-தன்னுலகம் -என்கிறது அவிவாதத்தைப் பற்ற –தாளானை – இதெல்லாம் இங்கனே செய்தான் அவன் அல்லன் -திருவடிகள் ஆயிற்று –
தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம் மா மணியை-
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை –தாமரைப் பூவில் பிறந்தவளும் மின் போன்ற இடையை யுடையளுமான பிராட்டிக்கு நாயகனாய்
விண்ணகருள் பொன் மலையை–திருவிண்ணகரிலே பொன்மலை போல் விளங்குமவனாய்
பொன்னி மணி கொழிக்கும் பூ குடந்தை போர் விடையை–காவேரி நதியானது ரத்னங்களைக் கொண்டு தள்ளுமிடமான அழகிய திருக்குடந்தையிலே யெழுந்தருளியிருக்கிற யுத்த ஸந்நத்தமான காளை போலச் செருக்குடையனாய்
தென் நன் குறுங்குடியுள் செம்பவளம் குன்றினை–தென் திசையிலுள்ள விலக்ஷணமான திருக்குறுங்குடியிலே சிவந்த பவழ மலை போல விளங்குமவனாய்,
தண் சேறை மன்னிய வள்ளலை–குளிர்ந்த திருச்சேறையிலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற பரம உதாரனாய்,
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வல் ஆலி என்னுடைய இன் அமுதை–சிறந்த தாமரைப் பூக்களின் மேலே அன்னப் பறவைகள் உறங்கப் பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களை யுடைத்தான திருவாலியிலே எனக்குப் பரம போக்யனாக ஸேவை ஸாதிப்பவனாய்.
எவ்வுள் பெருமலையை –திருவெவ்வுளுரில் பெரிய தொரு மலை சாய்ந்தாற் போலே சாய்ந் தருள் பவனாய்
கன்னி மதில் சூழ் கணமங்கை கற்பகத்தை –சாச்வதமான மதில்களாலே சூழப்பட்ட திருக்கண்ண மங்கையில் கல்ப வ்ருக்ஷம் போல் எழுந்தருளி யிருப்பவனாய்
மின்னை –மின் போல் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய்
இரு சுடரை–ஸூர்ய சந்திர்ர்களோ என்னும்படியான திரு வாழி திருச் சங்குகளை யுடையனாய்
வெள்ளறையுள் –திருவெள்ளறையிலே
கல் அறை மேல்–கருங்கல் மயமான ஸந்நிதி யினுள்ளே
பொன்னை –பொன் போல் விளங்குமவனாய்
மரதகத்தை–மரதகப்பச்சை போன்ற வடிவை யுடையனாய்
புட்குழி எம் போர் எற்றை–திருப்புட் குழியிலே எழுந்தருளி யிருக்கிற அஸ்மத் ஸ்வாமியான ஸமர புங்கவனாய்,
அரங்கத்து மன்னும்–திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிறவனாய்
எம் மா மணியை–நாம் கையாளக் கூடிய நீல மணி போன்றவனாய்-
தான் குணவானாக பாவித்து நின்ற விடங்களிலே இவன் குணவான் என்று அறியாதே கொள்ளுங்கோள்-என்று சாற்றுகிறேன் –-தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் – இதுக்கு எல்லாம் அடியான பிராட்டியோடு-திரு விண்ணகரிலே அவளோட்டை சம்ஸ்லேஷம் திரு மேனியிலே நிழலிட நிற்கிறவனை-பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையைத்– அவதாரங்களைப் பண்ணி-பிரதிபஷ நிரசனம் பண்ணி இளைப்பாறச் சாய்ந்தவனை -திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை -திருவாய் மொழி -5-8-9–தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –-வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –-மன்னிய தண் சேறை வள்ளலை--ப்ரதிகூலர் நடுவே ஆஸ்ரிதர்க்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற -ஔதார்யம் –-மா மலர் மேல்- ஊடல் தொடக்கமானவை கிட்டாமல்-அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி –-போகத்துக்கு ஏற்றவற்றை இட்டு உறங்கும் படுக்கை இறே–என்னுடைய வின்னமுதை –
இவள் பிறந்த விடமாய் -புக்க விடமுமாயிருக்கையாலே-மேல்வாரமும் குடிவாரமும் ஆகிற இரு தலை வாரமும் தம்முடையதாய் இருக்கிறபடி –-எவ்வுள் பெரு மலையைக்- அனுபவித்து முடிக்க ஒண்ணாமை –-கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை –என்று காவலிட்டு நின்றார் –எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றும்-கண்கள் ஆரளவும் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9- என்றரர் இறே-காவல் உண்டு என்று ஆஸ்வாசம் அடைகிறார் மடல் எடுக்கும் பொழுதும் மங்களா சாசன பரர ஆகையாலே –-மின்னை யிரு சுடரை – மின்னல் போலவும் சந்திர ஸூர்யர்கள் போலவும் தன்மை யுடையவனை –-பிராட்டி உடனும் -சங்க சக்கரங்கள் உடன் நிற்கிற படி-கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு இரு சுடர் இரு புறத்தேந்தி யெடவிழ் திருவோடும் பொலிய –கம்ப நாட்டு ஆழ்வார் –-வெள்ளறையுள் கல்லறை மேல் –-சீரிய வஸ்து என்று சேர்க்கிறார் -மாணிக்க அறை-பொன்னை மரகதத்தைப் – பொன்னையும் மணிகளையும் கொண்டு ரத்னஆகாரம் தொடுப்பாரைப் போலே
அர்ச்சாவதார ஸ்தலங்களை சேர்க்கிறார் மத்திய மணி நியாயம் முன்னும் பின்னும் அந்வயம் –புட்குழி எம் போரேற்றை —–-பிரதி பஷத்துக்கு கணிசிக்க ஒண்ணாமை -ரிஷபம் போலே நிற்கிறவன் -அத்தாலே என்னைத் தோற்பித்துக் கொண்டவன் – அற்ற பற்றார் -சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -திருச்சந்த -52-என்றும் நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -நாச் திரு -11-5-என்றும்
ஸ்தாவர பிரதிஷ்டியாக மன்னி கண் வளரும் தேசம் –-கண்டார் விடாத தேசம் -என்றுமாம்
அரங்கத்தம்மா மணி ––அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி—மா மணி -பெரிய மணி -கறுத்த மணி –
கோயில் மணியினார் -திருமாலை -21-தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமால்திருமொழி -1-1–அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா –மணியே மாணிக்கமே -பெரிய திரு -11-8-8-
தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் –—–ஆஸ்ரித விஷயத்தில் இப்படி பண்ணின அவ்வபதானத்துக்கு நிதானம் பிராட்டியோட்டை முகம் பெற்று மதிப்பானவனை–பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே தோற்றும்படி -திரு விண்ணகரிலே வந்து உஜ்ஜ்வலனாய் நிற்கிறவனை –பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப்-போர்விடையைத்-
காவேரியானது பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களைக் கொழித்துக் கொண்டு வந்து-ஏறிடா நின்றுள்ள அழகிய திருக் குடந்தையிலே – பிரதிபஷ நிரசனம் பண்ணின மேணாபபு எல்லாம் தோற்ற சந்நிஹிதனானவனை –-தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –-அவசியம் மடல் எடுத்தாலும் பெற வேண்டும்படி ஸ்ப்ருஹணீயமான வடிவோடு கூட – தென்னனனதான திருக் குறுங்குடியிலே வந்து நின்று அருளினவனை –-மன்னிய தண் சேறை வள்ளலை –
திருச் சேறையிலே நித்ய வாசம் பண்ணுகிற பரமோதாரனை–மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை –-அன்யோன்யம் ப்ரணய கோபத்தாலே ஊடினால் ஒருவர்க்கு ஒருவர் கடக்கக் கிடக்கலாம் படியான பரப்பை உடைத்தான பூவின் மேலே-ஒரு மஹா பாரதத்துக்கு வேண்டும்படியான பரப்பைப் பாரித்துக் கொண்டு இழிந்து படுக்கை வாய்ப்பாலே கிடந்து உறங்கி
விடிந்து எழுந்து இருக்கும் போதாக எழுப்பாதாரைக் கோபித்துக் கொண்டு எழுந்து இருக்கும் ஆயிற்று அன்னம் ஆனது –-இப்படி இருப்பதாய் அழகிய ஜல சம்ருத்தியை யுடைத்தான திரு வாலியிலே நிரதிசய போகய தமனாய்க் கொண்டு இருக்கிறவனை-திருப்பதியுமாய் -பிறந்த விடமும் ஆகையாலே
இருதலை வாரமும் தம்மதாய் இருக்கும் இறே – எவ்வுள் பெரு மலையைக்- திரு வெவ்வுளிலே தன்னுடைய போக்யதையை ஒருவருக்கும் அனுபவிக்க ஒண்ணாத படியாக-போக்யதா பிரகர்ஷத்தை யுடையனாய்க் கொண்டு-கண் வளர்ந்து அருளினவனை –-கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை —– அரணாகப் பொருந்தி இருக்குமதாய்-புதுமை அழியாத திரு மதிளை உடைத்தான
திருக் கண்ணமங்கையிலே எழுந்தருளி நிற்கிற பரமோதாரனை –-கண்கள் ஆரளவும் -என்கிறபடியே தன்னைக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கலாம் படி சர்வஸ்வதாநம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை அங்கு நிற்கிறபடி எங்கனே என்னில் – மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்-பொன்னை – பெரிய பிராட்டியாரோடும்-இரண்டு அருகும் சேர்ந்த ஆழ்வார்களோடும் ஆயிற்று நிற்பது -அங்கே தோற்றுப் படப் புக்கவாறே அனுகூலர் இங்கே கொண்டு சேமித்து வைத்தார்கள் -திரு வெள்ளறையுள் கல்லறையினுள்ளே ஸ்லாக்யமானவனை–கல்லறை -மாணிக்க அறை –
தென்னருகே அரங்கும் -வடவருகே அறையுமாய் இருக்குமாயிற்று –-மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை — அங்கு நிற்கிற படியே ஸ்ரமஹரமான வடிவோடே திருபுட் குழியிலே தோற்றி என்னைத்
தோற்பித்த மேணாணிப்போடேகூட நிற்கிறவனை –-மன்னு மரங்கத் தெம் மா மணியை –
திருநாள் சேவிக்க வென்று வந்து-பின்பழகும் பிறகு வாளியும் அழகும் -கொக்குவாயும் கடைப்பணிக் கூட்டமும் இருக்கிற படியைக் கண்டு ஷேத்ர சன்யாசம் பண்ணி -வர்த்திக்கும் படிக்கு ஈடாக-வாயிற்று கோயிலிலே கண் வளர்ந்து அருளும் படி –-பெரு விலையனான ரத்னங்களை முடிந்து ஆளலாய் இருக்குமா போலே-ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் யுள்ளவனை –-மன்னும் அரங்கம் –
திருநாடு -திருப் பாற் கடல் மற்றும் உள்ள தேசங்களில் விரும்பி இருக்கும் தேசம் -என்றுமாம் ––கோயில் மணியனார் -திருமாலை -21 -என்னக் கடவது இறே –-மணியே மணி மாணிக்கமே -பெரிய திருமொழி -11-8-8–என்று ரத்ன ஸ்ரேஷ்டம் இறே –பொன்னி அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமாள் திருமொழி -1-1-என்றும்–மணி இரண்டு இறே–மன்னும் அரங்கம் ––நல் சரக்கு படும் துறை –
ஆகக் கீழே சில விசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித் திருவிண்ணகரிலே வாய் வைக்கிறார்.-பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்–“மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ என்ற வளவில் ஒரு பகுதியாகவும்,“வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்,-அதற்குமேல் வினை முற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம்.
விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா!“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர்.-குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம்
குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரு நாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவவதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தலத்து நம்பியே.–சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும்.-ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாமமாயிற்று.-எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்? என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்–கண மங்கை – கண்ணமங்கை யென்பதன் தொகுத்தல்-மின்னை இருசுடரை –மின்னல் போலவும் சந்திர ஸூரியர்கள் போலவும் பளபளவென்று விளங்குபவன் என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்-மின் என்று மின்னற் கொடிபோன்ற பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய், இருசுடர் என்று ஸூர்ய சந்திரர்களுக்கொப்பான திருவாழி திருச்சங்குகளைச் சொல்லிற்றாய் இம்மூவரின் சேரத்தியைச் சொல்லுகிறதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம்“அங்கு நிற்கிறபடி யெங்ஙனே யென்னில், பெரிய பிராட்டியாரோடும் இரண்டருகுஞ் சேர்ந்த ஆழ்வார்களோடுமாயிற்று நிற்பது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.-வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை –பாறை) இது வடமொழியில் ச்வேதாத்ரி எனப்படும்.-புட்குழி – புள் ஜடாயுவென்னும் பெரியவுடையார் அவரைக் குழியிலிட்டு ஸம்ஸ்பரித்தவிடமென்று சொல்லுதல பற்றிப் புட்குழி யென்று திருநாமமாயிற்றென்பர், போரேறு – ஸமரபுங்கவன் என்று வடமொழித் திருநாமம் ஸமர – யுத்தத்தில் புங்கவ – காளை போலச் செருக்கி யுத்தம் நடத்துபவர்.-அரங்கம் – எம்பெருமான் ரதியை அடைந்த இடம், ரதியானது ஆசைப்பெருக்கம். அதனை யடைந்து (ஆசையுடன்) வாழுமிடம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் ஸூர்யமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்திலும் இனிய தென்று திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமான தென்பதுபற்றி ‘ரங்கம்‘ என்று அவ்விமாநத்திற்குப் பெயர். அதுவே லக்ஷணையால் திவ்ய தேசத்திற்குத் திருநாமமாயிற்று. தானியாகுபெயர்.-இனி, ரங்கமென்று கூத்தாடு மிடத்துக்கும் பெயராதலால், திரு அரங்கம் –பெரிய பிராட்டியார் ஆநந்தமுள்ளடங்காமல் நிருந்தஞ் செய்யுமிடம் என்றும் மற்றும் பலவகையாகவங் கொள்ளலாம்.
வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124–
வல்லவாழ்–திருவல்லவாழிலே எழுந்தருளி யிருக்கிற
பின்னை மணாளனை–நப்பின்னை நாயகனாய்
பேரில் பிறப்பு இலியை –திருப்பேர் நகரிலெழுந்தருளி யிருக்கிற நித்ய ஸித்தனாய்
தொல் நீர் கடல் கிடந்த–என்று மழியாத நீரையுடைய கடலிலே பள்ளி கொள்பவனாய்
தோளா மணி சுடரை–துளைவிடாத ரத்னம் போலே ஜ்வலிப்பவனாய்
என் மனத்து மாலை–என் மேல் வ்யாமோஹ முடையனாகி எனது நெஞ்சை விட்டுப் பிரியாதவனாய்
இடவெந்தை ஈசனை–திருவிடவெந்தையி லெழுந்தருளி யிருக்கிற ஸர்வேஸ்வரனாய்
கடல் மல்லை மன்னும் மாயவனை–திருக்கடல் மல்லையிலே நித்ய வாஸம் செய்யும் ஆச்சரியனாய்
வானவர் தம் சென்னி மணி சுடரை–நித்ய ஸூரிகளுடைய சிரோ பூஷணமாக விளங்குமவனாய்
தண் கால் திறல் வலியை–திருத்தண்காலில் எழுந்தருளியிருக்கிற மஹா பலசாலியாய்
தன்னை பிறர் அறியா தத்துவத்தை–(தனது திருவருளுக்கு விஷயமாகாத) பிறர் அறிந்து கொள்ள முடியாத ஸ்வரூபத்தை யுடையனாய்
முத்தினை–முத்துப் போன்றவனாய்
அன்னத்தை–ஹம்ஸாவதாரஞ் செய்தவனாய்
மீனை–மத்ஸ்யாவதாரஞ் செய்தவனாய்
அரியை–நரஸிம்ஹாவதாரஞ் செய்தவனாய் (அல்லது) ஹயக்ரீ வாவதாரஞ் செய்தவனாய்
அரு மறையை–ஸகல விதயா ஸ்வருபியாய்
முன இ உலகு உண்ட முர்த்தியை –முன்னொரு கால் இவ்வுலகங்களை யெல்லாம் திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸ்வாமியாய்
கோவலூர் இடைகழி மன்னும் எம் மாயவனை–திருக்கோவலூரடை கழியில் நித்ய வாஸம் பண்ணுகிற எங்கள் திருமாலாய்
பேய் அலற முலை உண்ட பிள்ளையை –பூதனையானவள் கதறும்படியாக அவளது முலையை உண்ட பிள்ளையாய்
அன்னம்–ஹம்ஸங்களானவை
அள்ளல் வாய் –சேற்று நிலங்களில்
இரை தேரழுந்தூர்–இரை தேடும்படியான திருவழுந்துரில்
எழும் சுடரை–விளங்கும் சோதியாய்
தென் தில்லை சித்திர கூடத்து என் செல்வனை–தென் திசையிலுள்ள தில்லைத் திருச்சித்திர கூடத்தில் (எழுந்தளி யிருக்கிற) எனது செல்வனாய்
மழை–மேகங்களானவ
மின்னி–பளபளவென்று மின்னிக் கொண்டு
தவழும்–சிகரங்களில் ஸஞ்சரிக்கப்பெற்ற
வேங்கடத்து–திருவேங்கட மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எம் வித்தகனை–நமக்கு ஆச்சர்யகரமான குண சேஷ்டிதங்களை யுடையனாய்.
வல்ல வாழ் பின்னை மணாளனைப்--நப்பின்னைப் பிராட்டியை திருமணம் புணர்ந்த செவ்வி தோற்ற நிற்கை –பேரில் பிறப்பிலியைத் –—இதுக்கு முன்பு பிறவாதே-பின்பு பிறக்க இருக்கிறவனை
தொல் நீர்க்கிடந்த தோளா மணிச் சுடரை –ச ஏகாகீ ந ரமேத -பரம பதத்தில் –-அவதாரம் செய்த பின் தொளைப் படாத மணியின் சுடர் போலே புகர் விஞ்சி நின்றான் –-தொல் நீர் -அவதாரத்துக்கு நாற்றங்கால்-தோளா மணிச் சுடர் -தொளைப் படாத மணியின் ஒளி தானானவன் –-என் மனத்து மாலை –என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி என் ஹிருதயத்தில் நிற்கிறவனை-விச்வஸ் யாயதனம் மஹத் –இளம் கோயில் கை விடேல் -இரண்டாம் திரு -54-நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே -திருவாய் மொழி -3-8-2–யிடவெந்தை ஈசனை —–சர்வேஸ்வரத்வம் நிழலிட நிற்கிறவனை –-மன்னும் கடன்மலை மாயவனை- ஆஸ்ரிதர்க்காகத் தரையிலே கண் வளர்ந்து அருளுகிறவனை–வானவர்தம் சென்னி மணிச் சுடரைத் –-அயர்வறும் அமரர்கள் சிரோ பூஷணம் -அமரர் சென்னிப்பூ -திருக் குறும் தாண்டகம்-6-தண் கால் திறல் வலியைத் —– எல்லாரையும் ஜெயிக்கும் மிடுக்கையுடையவனை –-தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை – சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே
வையும்படியாய் இருக்காய்–பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11–முத்தினை-
ஸ்ரமஹரமாயிருக்கிறவனை –-அன்னத்தை மீனை யரியை -சர்வ வித்யைகளுக்கும் உபதேஷ்டாவாய் இருக்கிறவனை-யரி -குதிரை ஹயக்ரீவன் –-யருமறையை-—அந்த வித்யைகள் தானாய் இருக்கை –
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15–முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக்- முற்கோலி-இருந்ததே குடியாக தன வயிற்றிலே வைத்து நோக்குமவனை –-கோவலூர் மன்னு மிடை கழி எம்-மாயவனைப் –-ஆஸ்ரிதர் அடிச் சுவடும் விடாதே நிற்கிறவனை –-இடை கழி மன்னும் -எம்மாயவன்-பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை –-யசோதை பிராட்டி யுடைய ஸ்துதி போலே பேயினுடைய கத்துகையையும் ஸ்துதி யாகக் கொண்டு-முலை யுண்ட மௌக்த்யத்தை யுடையவனை –-அள்ளல் வாய் அன்னம் இரை தேர்--கலங்கின நீரில் இழியாத அன்னமும் கூட இழியும்படிக்கு ஈடான நல்ல சேறு –-அழுந்தூர் எழுஞ்சுடரைத்-—-ஆஸ்ரிதர் கை தொடனாய் என்னையும் கண்டு உகந்து நிற்கிறவனை-அழுந்தூரிலே உதிக்கும் ஸூர்யன்-நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என் மேலும் பாசம் வைத்த பரஞ்சுடர் -நிரவதிக தேஜோ ரூபன்-தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை-
அங்குத்தை அழகனை –-மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை –—-மேகமானது மின்னாகிற கை விளக்கைக் கொண்டு குச்சி வழியே புக்குத் திருவாராதனம் பண்ண இருக்கிற ஆச்சர்ய பூதனை –வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு -நாச் -8-4- மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மாரவில் மன்னத்தான் வைத்துகந்தான் -பெரிய திருமொழி -6-9-6–நீலமுண்ட மின்னன்ன திரு மேனி–நீல தோயாத மத்யச்தையான அலர்மேல் மங்கை உறை மார்வா -திருவேங்கடத்தானே -திருவாய் -6-10-10-
வல்ல வாழ் பின்னை மணாளனைப் – திரு வல்ல வாழிலே நப்பின்னை பிராட்டியோட்டை மணக் கோலம் எல்லாம் தோற்ற நின்று அருளுகிறவனை –-பேரில் பிறப்பிலியைத் –—-ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணச் செய்தே பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்-பிறக்க ஒருப்பட்டு இருக்கிறவனை –-தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை- பரமபதம் கலவிருக்கை யாய் இருக்க –அங்கு நின்றும் போந்து-திருப் பாற் கடலிலே வந்து என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி அத்தாலே அத்யுஜ்ஜ்வலன் ஆனவனை –-இதுக்கு திருஷ்டாந்தம் –
யிடவெந்தை ஈசனை ––-ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பண்ணின வ்யாமோஹத்தாலே அத்யுஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –-மன்னும் கடன்மலை மாயவனை – திருக் கடல் மல்லையிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஆச்சர்ய பூதனை –-ஆச்சர்யம் தான் என் என்னில் –திரு வநந்த ஆழ்வானை ஒழிய
ஆஸ்ரிதன் உகந்த இடம் -என்று தரையிலே கண் வளர்ந்து அருளுகை--இப்படியில் அங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில்-வானவர் தம் சென்னி மணிச் சுடரைத்-நித்ய ஸூரிகளுக்கு சிரோ பூஷணம் ஆனவனை-அமரர் சென்னிப் பூவாகையாலே வானவர்க்கு சென்னி மணிச் சுடர் -என்னக் குறை இல்லை இறே–தண் கால் திறல் வலியைத் —— திருத் தண் காலிலே நின்று அருளி பிரதிபஷத்தை அடர்க்கிற பெரு மிடுக்கனை-வலியையும் மிடுக்கையும் காணும்படி கண்ணுக்குத் தோற்ற ஒரு வடிவு கொண்டு நின்று அருளினவனை –-தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை- தானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்-அல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை –-நின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இறே திரு மழிசைப் பிரானும் –முத்தினை-ஆஸ்ரிதர்கள் ஏறிட்டுக் கொள்ளலாம் படி குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் இருக்கிறவனை – அன்னத்தை மீனை யரியை ––அன்னமும் மீனுருவும் ஆளரியும்-பெரியாழ்வார் -1-6-11-என்று வித்யாவ தாரங்களைச் சொல்ல்கிறது –-யருமறையை—–-அத்தாலே பலித்த பலம் -தன்னைப் பெறிலும் பெற அரிதான வேதத்துக்கு பிரதிபாத்யன் ஆனவனை–முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியை--பிரளய காலத்திலேயே பூமியை உண்டு அத்தாலே-விலஷண விக்ரஹ யுக்தன் ஆனவனை –-கோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப் –-ஆஸ்ரிதர்க்கு போக்யமான இடமே தனக்குப் பரம போக்யம் -என்று-அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற சர்வ ஸூ லபன் ஆனவனை –-பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை- கம்சனுடைய வ்ருத்தியாலே வந்த பேயின் உயிரை அவள் அலறும்படியாக-பிராண சஹிதம் பபௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-9-என்கிறபடியே
பானம் பண்ணின பாலன் ஆனவனை-முன்னே உலகு உண்டு-பின்முலை உண்டபடி –-அள்ளல் வாய் அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்— சேறு கண்டு இறாய்க்கக் கடவ அன்னங்கள்-சேற்றைக் கண்டு இறாயாதே மேல் விழுந்து சஞ்சரிக்கும் படியான போக்யதை நித்ய வாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோ ரூபனை-திரு வழுந்தூரிலே முளைத்த ஆதித்யனை -என்றுமாம் – தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை--அங்குத்தை சம்ருத்தி இருக்கும் படி வாசா மகோசரம்–மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —திருக் காப்பு கொண்டு போனாலும் குச்சி வழியே தன வடிவில் இருட்சிக்குக் கை விளக்காக-மின்னோடி புக்கு மேகம் சஞ்சரிக்கிற திருமலையிலே நின்று அருளினவனை–தன்னாகத் திரு மங்கை தங்கிய -நாச் திரு மொழி -8-4- என்றும்-மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில் வைத்துகந்தான் –பெரிய திருமொழி -6-9-6- என்றும்-அலர் மேல் மங்கை உறை மார்வன் -திருவாய் -6-10-10- என்றும் சொன்ன இவற்றுக்கு மின்னையும் மேகத்தையும் திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்–மின்னார் முகில் சேர் திரு வேங்கடம் -பெரிய திரு மொழி -1-10-6—மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கடம் -பெரிய திருமொழி -2-1-10-
வல்லவாழ் – மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்முன்றனுள் ஒன்று, நம்மாழ்வாராலும் மங்களாசாஸனஞ் செய்யப்பெற்ற தலம். இதனைத் திருவல்லாய் என்று மலையாளர் வழங்குகின்றனர். வல்லவாழ்ப் பின்னை மணாளனை – நப்பின்னைப் பிராட்டியை மணம்புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவைஸாதித்தன்ன் போலும்.-பேர் –திருப்பேர்நகர், அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரில் பிறப்பிலியே – அடியவர்களுக்காகப் பலபல பிறவிகள் பிறந்திருந்தும் இதுவரை ஒரு பிறப்பும் பிறவாதவன் போலும் இனிமேல் தான் பிறந்து காரியஞ் செய்யப் பாரிப்பவன் போலும் ஸேவை ஸாதிக்கிறபடி.-தோளாமணிச்சுடரை – தோளுதலாவது துளைத்தல், துளைத்தல் செய்யாத மணி யென்றது – அநுபவித்து பழகிப் போகாமல் புதிதான ரத்னம் என்றபடி. (துளைவிட்டிருந்தால் நூல்கோத்து அணிந்து கொள்ளுவர்கள்) “அநாலித்தம் ரத்நம்“ என்று வடநூலாரும் சொல்லுவர்கள்.-இடவெந்தை இத்தலத்திலெழுந்தருளியுள்ள வாஹப்பெருமாள் தமது தேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால் இத்தவத்திற்கு திருவிடந்தை யென்று திருநாமமாயிற்று.-தண்கால் இது ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு ஸமீபத்திலுள்ளது. திருத்தங்கல் என்று ஸாமாந்யர் வ்யவஹிப்பர்கள். தண்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று பொருள், சீதவாதபுர மென்பர்.-திறல்வலி –எதிரிகளை அடக்கவல்ல பெருமிடுக்கன்.-தன்னைப் பிறரறியாத் த்த்துவத்தை – தனான தன்மையைத் தானே நிர்ஹேதுக்ருபையால் காட்டி ஆழ்வார் போல்வர்க்கு அறிவிக்கலாம் அத்தனை யொழிய மற்றையார்க்கு ஸ்வ ப்ரயத்நத்தால் அறிய வொண்ணாதபடி.-முத்தினை – முத்துப் பொலே தாபஹரனானவனை-அன்னத்தை மீனை அரியைஹரி என்னும் வடசொல்லுக்குப் பதினைந்து அர்த்தங்களுண்டு-பிரகிருத்த்தில் குதிரை சிங்கம் என்கிற இரண்டு பொருள்கள் கொள்ளலாம். குதிரையென்று கொண்டால் ஹயக்ரீவாவதாரஞ் செய்தபடியைச் சொல்லிற்றாகிறது. சிங்கமென்று கொண்டால் நரசிங்காவதாரஞ் சொல்லிற்றாகிறது. ஹம்ஸாவதாரம் மத்ஸ்யாவதாரம் ஹயக்ரீவாவதாரம் என்ற மூன்றாவதாரங்களும் வித்யொபதேசத்திற்காகச் செய்தருளினவையாம்.-அருமறையை – ஸகல வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுவன் என்ற கருத்து.-கோவலூர் – மாயவனை – கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசமானது பற்றி இதற்குத் திருக்கோவலூரென்று திருநாமமாயிற்று. வடமொழியில் இது கோபாலபுரம் எனப்படும். “பாவருந்தமிழற் பேர்பெறு பனுவந் பாவலர் பாதிகாளிரவின், மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் இது.-இடைகழி – தேஹளீ என்று வடமொழியிற் கூறப்படும்.-“வாசற்கடை கழியாவுள்புகா காம்ரூபங்கோவல் இடைகழிய பற்றியினி நீயுந்திருமகளும் நின்றாயால்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரம் நோக்குக.-அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூர் – “சேறு கண்டு இறாய்க்கக்கடவ அன்னங்களும் சேற்றைக்கண்டு இறாயாதே மேல் விழுந்து ஸஞ்சரிக்கும்படியான போக்யதை யுடைய திருவழுந்தூரிலே நித்யவாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோரூபனை“ என்ற அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீஸூக்தி காண்க.-அழுந்தூர் – தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சரிக்குந் தன்மையனான உபரி வஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பஷபாதமாகத் தீர்ப்புச் சொன்னமையால் ரிஷிகளால் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுத்தப்பெற்ற இடமானதுபற்றி இதற்கு அழுந்தூரென்று பெயர் வந்த்தென்பர், தேரழுந்தூர் எனவும் வழங்குவர் பிரகிருத்த்தில் மூலத்திலுள்ள தேர் என்னுஞ் சொல் ரதத்தைச் சொல்வதல்ல, தேர்தலாவது தேடுதல் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடு மழுந்தூரென்க.-தென் தில்லைச் சித்திரகூடம் – சித்தரகூடம் – விசித்திரமான சிகரங்களையுடையது, இது ஸ்ரீராமபிரான் வநவாஸஞ் செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்த்தொருமலை, அதனைப்போலவே இத்தலமும் எம்பெருமான் திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருப்பதென்பதுபற்றி அப்பெயரை இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவ மூர்த்தி இராமபிரான் வனவாஸஞ் செய்கையில் சித்திரகூட பர்வத்த்தில் வீற்றிருந்த வண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர். மூலமூர்த்தி க்ஷீராப்தி நாதன் போலச் சயனத் திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக் கொண்டிருக்கின்றனர். இது தில்லை மரங்களடர்ந்த காடாயிருந்தனால் தில்லை திருச்சித்திர கூடமென வழங்கப்படும். இது எம்பெருமான் தேவர்களும் முனிவர்களுஞ் சூழக் கொலுவிற்றிருந்த ஸபை.-வேங்கடம் – தன்னையடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்றது வடசொல், வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க.-“அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசலமெனும் பேர், வைத்தனாதுவேதென்னில் – வேமெனவழங்கெழுந்தே, கொத்துறுபவத்தைக் கூறும் கடவெனக் கூறிரண்டாஞ், சுத்தவக்கரம் கொளுத்தப்படுமெனச் சொல்வர் மேலோர“ என்றும்-“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திரடச்செய்வதால் நல் மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடலையான தென்று“ என்றுமுள்ள புராணச் செய்யுள்கள் காண்க.-அன்றி, வேம் என்பது அழிவின்மை. கடம் என்பது ஐச்வர்யம், அழிவில்லாத ஐச்வரியங்களைத் தன்னை யடைந்தார்க்குத் தருதலால் வேங்கடமெனப்பெயர் கொண்ட தென்றலுமுண்டு.
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய யோகத் துறக்கத்தை-
மன்னனை–ஸர்வேச்வரனாய்
மாலிருஞ்சோலை மணாளனை–திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாய்
கொல் நவிலும் ஆழிபடையானை –பகைவரைக் கொல்ல வல்ல திருவாழியை ஆயுதமாக வுடையனாய்
கோட்டியூர்–திருக்கோடியூரில்
அன்ன உருவின் அரியை–அப்படிப்பட்ட (விலக்ஷணமான) திருமேனியை யுடைய நரஸிம்ஹ மூர்த்தியாய்
திரு மெய்யத்து–திருமெய்யமலையில்
இன் அமுதம் வெள்ளத்தை–இனிதான அம்ருத ப்ரவாஹம் போல் பரம போக்யனாய்
இந்தளூர்–திருவிந்தளூரில்
அந்தணனை–பரமகாருணிகனாய்
மன்னு மதிள்–பொருந்திய மதிகள்களை யுடைய
கச்சி–காஞ்சிநகரத்தில்
வேளுக்கை ஆளரியை–வேளுக்கை யென்கிற தலத்திலுள்ள ஆளழகிய சிங்கராய்
பாடகத்து மன்னிய எம் மைந்தனை–திருப்பாடகத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற எமது யுவாவாய்,
வெஃகாவில்–திருவெஃகாவில்
உன்னிய யோகத்து உறக்கத்தை–ஜாகரூகனாகவே யோக நித்ரை செய்பவனாய்
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்--நாட்டுக்கு ராஜா-தமக்கு மணாளன்-கொன்னவிலும் ஆழிப் படையானைக் –-நமுசி பிரப்ருதிகளை வாய் வாய் என்னப் பண்ணும் திரு வாழியை உடையவனை – கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் – முரியும் வெண் திரை முது காயம் தீப்பட முழங்கழல் எரியம்பின் வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் -பெரிய திரு மொழி -8-5-6-
முரியும் வெண் திரை பாடினவர்க்கு நிலம் அன்றியே இருக்கிறவனை-திருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-6–திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை- நினைக்க விடாய் கெடும்படி இருக்கிறவனை –-இந்தளூர் அந்தணனை ——-அந்தணனை -ஆன்ரு சம்சயம் உடையவனை –அழகிய தண்மை இரக்கம் உடையவனை-அந்தணர் என்பர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலால் -திருக் குறள்–மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை-
வீரம் தோற்றாதே-அழகே தோற்றி பயப்பட்டு மதிளிட வேண்டும்படி நிற்கிறவனை –-மன்னிய பாடகத் தெம் மைந்தனை –அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணின படி தோற்ற இருக்கிறவனை –-நித்ய யுவா-என்னுமாம்–வெக்காவில் உன்னிய யோகத் துறக்கத்தை –-ஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கிறவனை -ஆஸ்ரித ரஷண சிந்தை உடன் விழி துயில் அமர்ந்து இருப்பவன் – அதாவது-திரு மழிசைப் பிரான் -கிட -என்னக் -கிடந்து நிற்கிறபடி – பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் -விரித்துக் கொள் என்ன செய்தவன் –
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்--எனக்கு ராஜாவே-திருமலையிலே வந்து நின்று அருளி என் வல்லபன் ஆனவனை-மன்னனை -மன்னனாகவுமாம் –-கொன்னவிலும் ஆழிப் படையானைக் –
பிரதிபஷ நிரசனத்துக்கு ஈடான பரிகரத்தை உடையவனை –-கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் –
திருக் கோட்டியூரிலே நரசிம்ஹ ரூபியாய் நின்று அருளின நிலை-தன்னுடைய பேச்சுக்கு நிலம் இன்றிக்கே இருக்கையாலே-அப்படிப் பட்ட உரு -என்னும் படியான வடிவு அழகை யுடையவனை –-திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை –-நடு வழியிலே விடாய்த்தார்க்கு விடாய் கெட-ஒரு அம்ருத சாகரத்தைத் தேக்கினால் போலே இருக்கிறவனை-இந்தளூர் அந்தணனை –— திரு இந்தளூரிலே நிற்கின்ற பரம பாவனனை–மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை- திரு வேளுக்கையிலே நித்ய வாஸம் பண்ணுகிற நரசிம்ஹ வேஷத்தை உடையவனை –-மன்னும் மதிள்-ப்ரளயத்திலும் அழியாத மதிள்-மன்னிய பாடகத் தெம் மைந்தனை – திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருக்கிற நவ யௌவன ஸ்வ பாவனை –-வெக்காவில் உன்னிய யோகத் துறக்கத்தை –திரு வெக்காவிலே ஆஸ்ரித சம்ரஷணத்துக்கு பாங்கான அனுசந்தானத்தோடே திரு மழிசைப் பிரானுக்காகப் படுக்கை மாறிப் படுத்தவனை –
மாலிருஞ்சோலை “ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையிதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் மாலிருஞ்சோலை யென்று திருநாமம் உயர்ந்து பரந்த சோலைகளை யுடைய மலை. வந்திரி எனப்படும்.-கோட்டியூர் – ஹிரண்யாஸுரன் மூவுலகத்தையும் ஆட்சி செய்த காலத்தில் தேவர்கள் அய்வஸுரனை யொழிப்பதற்கு உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய் அஸுரர்களின் உபத்ரவமில்லாதான இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால் ‘துஷ்டர் ஒருவரும் வரக்கூடாது‘ என்று ஏற்பட்டிருந்த இந்த க்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசிப்பதற்கு ஏற்ற இடமாயிருந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு கோஷ்டீபுரம் என்று வடமொழியில் திருநாமம், அதுவே கோட்டியூரெனத் தமிழில் வழங்குகிறது.-அன்னவுருவினரியை – “வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை“ என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்காண்க. தெக்காழ்வாரைக் குறித்தபடி.-திரு மெய்யம் – ஸத்ய தேவதைகள் திருமாலை நோக்கித் தவஞ்செய்த தலமானது பற்றி இத்திருமலை ஸத்யகிரி யென்றும் எம்பெருமான் ஸத்யகிரிநாரென்றும் பெயர் பெறுவர். ஸத்யகிரியென்ற அச்சொல்லை திருமெய்யமலை யென்றும், அத்திருப்பதி திருமெய்ய மென்றும் வழங்கப்பெறும்-இந்தளூர் – சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தலமாதலால் திருவிந்தளூரென்று திருநாமமாயிற்றென்பர். இந்துபுர் எனப்படும். ஸுகந்தவநம் என்றொரு திருநாமமும் வழங்குகின்றது.=அந்தணனை – “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்“ (திருக்குறள்) என்றபடி அழகிய தன்மையையுடையவனென்று பொருளாய், பரமகாருணிகனென்றதாம். “அறவனை ஆழிப்படை அந்தண்னை“ என்றார் நம்மாழ்வாரும்.-வேளுக்கை – காஞ்சீபுரத்திலுள்ள திருப்பதிகளில் ஒன்று “வேள்இருக்கை“ என்பது மருவிற்றுப்போலும் வேள் – ஆசை, எம்பெருமான் தனது ஆசையினாலே வந்திருக்கும் தலம் என்றவாறாம் இத்திவ்ய தேசத்தைப்பற்றி ஸ்ரீவேதாந்த தேசிகன் அருளிச்செய்த காமஸிகாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தில் “காமாத் அதிவஸந் ஜீயாத் கச்சித் அற்புத கேஸா“ என்றமையால் வேளுக்கை யென்பதற்கு இங்ஙனே பொருளாமென்று தோன்றுகிறது. காமாஸிகா என்பதன் அர்த்தமும் இதுவேயாம். காமேந ஆஸிகா – தன் ஆசையினாலே இருக்குமிடம். ஆளரியை – ஆளழகிய சிங்கர்ஸந்திதி என்று வ்யவஹரிக்கப்படும்.-பாடகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள பாண்டவ தூதர் ஸந்நிதி. “பாடுஅகம்“ என்ற பிரிக்க பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனைனிடஞ் சென்றபொழுது துர்யோதன்ன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நீலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து-அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன் மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கி பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரிய திருமேனியோடே ஸேவை ஸாதிக்குமிடம் பாடகம்.–பாடு-பெருமை. (“அரவுநின் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தேன்“ என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனி வளர்த்தியோடே ஸேவை ஸாதிக்குமாறு காண்க.-வெஃகா – கச்சியில் ஸ்ரீ யதோத்தகாரி ஸந்நிதி. இவ்வெம்பெருமான் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்கும்பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கில் பள்ளிக்கொண்டருளினவனாதலால், அப்பிரானுக்கு, வடமொழியில் “வேகாஸேது“ என்று பெயர். அது தமிழில் “வேகவணை“ என்று மொழிபெயர்ந்து, அது பின் (நாகவணை யென்பது நாகணையென விகாரப்படுதல் போல) வேகணை என விகாரப்பட்டு, அது பின்னர் வெஃகணை“ எனத்திரிந்து, தானியாகுபெராய்த் தலத்தைக் குறித்து, அதுபின்பு வெஃகா என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.
ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன்
ஊரகத்துள் அன்னவனை–திருவூரகத்தில் விலக்ஷணனாய்
அட்ட புயகரத்து எம்மான் எற்றை–அட்டபுயகரதலத்திலுள்ள அஸ்மத் ஸ்வாமி சிகா மணியாய்
என்னை மனம் கவர்ந்த ஈசனை–எனது நெஞ்சைக் கொள்ளைகொண்ட தலைவனாய்
வானவர் தம் முன்னவனை–தேவாதிராஜனாய்
மூழிக்களந்து விளக்கினை–திருமூழிக்களத்தில் விளங்குபவனாய்
அன்னவனை–இப்படிப்பட்டவனென்று சொல்ல முடியாதவனாய்
ஆதனூர் –திருவாதனூரில்
ஆண்டு அளக்கும் ஐயனை–ஸகல காங்களுக்கும் நிர்வாஹகனான ஸ்வாமியாய்
நென்னலை இன்றினை நாளையை–நேற்று இன்று நாளை என்னும் முக்காலத்துக்கும் ப்ரவர்த்தகனாய்
நீர்மலை மேல் மன்னும் –திருநீர்மலையி லெழுந்தருளி யிருக்கிற
மறை நான்கும் ஆனானை–சதுர்வேத ஸ்வரூபியாய்
புல்லாணி–திருப்புல்லாணியி லெழுந்தருளி யிருக்கிற
தென்னன் தமிழை வடமொழியை –உபயவேத ப்ரதிபாதயனாய்
நாங்கூரில்–திருநாங்கூரில்
மணிமாடக்கோயில் மன்னு மணாளனை–மணிமாடக் கோயிலில் நித்ய வாஸம் பண்ணுகிற மணவாளப் பிள்ளையாய்
நல் நீர் தலைச் சங்கம் நாண்மதியை–நல்ல நீர்சூழ்ந்த தலைச்சங்க நாட்டிலுள்ள நாண் மதியப் பெருமாளாய்
நான் வணங்கும் கண்ணனை–நான் வணங்கத்தக்க கண்ணனாய்
கண்ணபுரத்தானை–திருக்கண்ணபுரத் துறைவானாய்
தென் நறையூர்மணி மாடக்கோயில் மன்னு மணாளனை –திருநறையூர் மணிமாடமென்று ப்ரஸித்தமான ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கிற மணவாளனாய்
கல் நவில் தோள் காளையை–மலையென்று சொல்லத்தக்க தோள்களை யுடைய யுவாவாயுள்ள ஸர்வேச்வரனை
ஆங்கு கண்டு கை தொழுது–அவ்வவ்விடங்களில் கண்டு ஸேவித்து
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் –எனது அவஸ்தைகளையெல்லாம் விண்ணப்பஞ்செய்து கொண்டால் (அது கேட்டு)
எம்பெருமான் –அப்பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல்–தனது திருவருளையும் திருமார்பையும் எனக்குத் தக்க தருவான் அல்லனாகில்
தன்னை–அவ்வெம்பெருமானை
நான்–(அவனது செயல்களை யெல்லாமறிந்த) நான்
மின் இடையார் சேரியிலும்–ஸ்த்ரீகள் இருக்கும் திரள்களிலும்
வேதியர்கள் வாழ்வு இடத்தும்–வைதிகர்கள் வாழுமிடங்களிலும்
தன் அடியார் முன்பும்–அவனது பக்தர்கள் முன்னிலையிலும்
தரணி முழுதும் ஆளும் கொல் நலிலும் வேல்வேந்தர் கூட்டத்தும்–பூ மண்டலம் முழுவதையும் ஆள்கின்றவராயும் கொடிய படைகளை யுடையவராயுமிருக்கிற அரசர்களுடைய ஸபைகளிலும்
நாடு அநத்து–மற்றுமு தேசமெங்கும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன்–அவன் படிகளை யெல்லாம் பிரகாசப்படுத்தி விடுவேன்.
ஊரகத்துள் அன்னவனை–-அட்ட புயகரத் தெம் மானேற்றை –ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறுமவனை–கஜேந்திர ஆழ்வானுக்கு அரை குலைய தலை குலைய ஓடி வந்து அருள் செய்தவனை –-என்னை மனம் கவர்ந்த வீசனை – சர்வ ஸ்வாபகாரம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிறவனை –-வானவர் தம் முன்னவனை –-நித்ய ஸூரிகளுக்கும் கூட அனுபவித்து முடிய ஒண்ணாத படி இருக்கிறவனை –எதோ வாசோ நிவர்த்தந்தே –பூர்வோ யோ தேவேப்ய –-மூழிக் களத்து விளக்கினை ––
உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை-பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய் -1-3-2- ஸ்ரேயான் பவதி ஜாயமான –-அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை--கால த்ரயத்தை பரிச்சேதிக்குமவனை-
இவன் காலத்தை அளவு படுத்துவான் –-நென்னலை இன்றினை நாளையை-பரிச்சேதித்த படியைப் பேசுகிறார் –வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் -திருவாய் -3-1-5
சென்று செல்லாதான முன்னிலாம் காலமே -திருவாய் -3-8-9—நீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்-வேதத்தாலே அறியப்ப்படுமவனை –-புல்லாணித் தென்னன் தமிழை ––காவார் மடல் பெண்ணை -பெரிய திரு -9-4–தன்னை நைவிக்கிலென் -பெரிய திருமொழி -9-3–என்கிற திரு மொழிகள் தானேயாய் இருக்கிறவனை –-வடமொழியை –-ஸ்ரீ ராமாயணாதிகள் –-நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை –-என்னை மறுமுட்டுப் பெறாத படி பண்ணினவனை –-நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை –-தர்ச நீயமாய் இருக்கிறவனை –-நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத்-–கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ–பெரிய திருமொழி -8-9-3-யென்னும்படியாய் இருக்கிறவனை –
ஊரகத்துள் அன்னவனை – திரு ஊரகத்திலே திரு வுலகு அளந்து அருளின செவ்வி தோற்ற வந்து நிற்கிற நிலை பேச்சுக்கு நிலம் அன்றிக்கே நிற்கிற நிலை அழகை யுடையவனை –-அட்ட புயகரத் தெம் மானேற்றை —- திரு வட்ட புயகரத்திலே ஆனைக்கு அருள் செய்த வடிவைக் காட்டிக் கொண்டு பெரிய மேணாணிப்பு தோற்ற நிற்கிறவனை –-என்னை மனம் கவர்ந்த வீசனை ––யஸ்ய சா ஜனகாத்மஜா -என்னுமா போலே என்னுடைய நெஞ்சை அபஹரித்து அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்கிறவனை –-வானவர் தம் முன்னவனை – அயர்வறும் அமரர்களுக்கு எல்லா வகையாலும் தன்னை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனை –-மூழிக் களத்து விளக்கினை –– திரு மூழிக் களத்திலே மிகவும் விளங்கா நின்று உள்ளவனை–வளத்தினை -என்று பாடமான போது-சம்பத் ஆனவனை -என்றுமாம் –-அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை– திரு வாதனூரிலே இப்படிப் பட்ட அழகை உடையனாய்-காலத்துக்கு நிர்வாஹகனாய்க் கொண்டு-நின்று அருளின சுவாமியை நென்னலை இன்றினை நாளையை – அக்காலம் தன்னை பூத பவிஷ்யத் வர்த்தமானமாகப் பரிச்சேதிக்க லாம்படி அதுக்கு நிர்வாஹகனாய் நின்றவனை –-நீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்- திரு நீர்மலையிலே வந்து சனிஹிதனாய்-நித்ய நிர் தோஷமான வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறவனை – புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை- தென்னனதான திருப் புல்லாணியிலே சம்ஸ்க்ருத ரூபமாயும் திராவிட ரூபமாயும் உள்ள வேதம் என்ன வேத சாரமான திருவாய் மொழி -என்ன இவற்றுக்கு நிர்வாஹகனாய் இவற்றுக்கு பிரதிபாத்யனாய் யுள்ளவனை –-வடமொழி -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யன் என்னவுமாம் தென்னன் தமிழ் என்று அகஸ்த்யர் உடைய தமிழுக்கு பிரதிபாத்யன் -என்றுமாம் –-வடமொழியை நாங்கூரில் என்று மேலே கூட்டவுமாம் –-நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை- திரு நாங்கூரில் திருமணி மாடக் கோயிலிலே விடாதே நின்று அருளி அடிமை கொண்டு அத்தாலே நாயகன் ஆனவனை –-நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை – நல்ல ஜல சம்ருத்தியையுடைத்தான தலைச் சங்காட்டிலே –கடலிலே சந்தரன் உதித்தால் போலே பரி பூர்ணனாய்க் குளிர்ந்து நிற்கிறவனை – நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் ––கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -பெரிய திருமொழி -8-9-3-என்னும்படி அனந்யார்ஹை யாக்கின வடிவைக் கொண்டு நின்று அருளினவனை –
தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக்-மடல் எடுக்கப் பண்ணினவனை -ஆணை செல்லாத தேசம் –-கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது- பூண் கட்டின-கண்டு அன்றி விடேன்-தொழுது அவனைக் கெடுத்த படி ராஜ மகிஷி உஞ்ச வருத்தி பண்ணுமோ பாதி
இவனுக்கு அஞ்சலியும் ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளி மலர்ப்பாதம் நாளும் பணிவோம் – என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் –மடலிலே துணிந்த படி –
எம்பெருமான் தன்னருளும் – தர்மத்துக்கு தண்ணீர் வார்க்கை -தன பேறாக அருளுதல்-ஆகமும் தாரானேல்- நெஞ்சோடு கலந்த வன்று தேக தாரகமாம் அத்தனை –-தன்னை – மெய் போலே பாவித்துப் பொரி புறம் தடவி இருக்கிற தன்னை-நான்- அவை எல்லாம் வெளிவிடப் புகுகிற நான்-இருவர் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் அவனைப் பெற்று அல்லது விடேன் என்று இருக்கும் நான் – மின்னிடையார் சேரியிலும் –-தான் ப்ரனயத்துக்குச் சமைந்து -உங்களிடை அல்லது அறியேன் -என்று இருக்கிறவிடம் -ரசிகத்வம் விலை செல்லுகிற இடம் -என்றுமாம் –-வேதியர்கள் வாழ்விடத்தும்-—
பிரமாண கோடிகளாலே தன்னை அறிந்து சமாராத நமான யாகாதிகள் பண்ணும் இடத்திலும் -ஆன்ரு சம்சயம் விலை செல்லும் இடம்-தன்னடியார் முன்பும் – தன்னைப் பற்றாசாக நினைத்து இருக்கிற ஆஸ்ரிதர் முன்பும் குணம் விலை செல்லும் இடம் -என்றுமாம்-தரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் – தன் வீரப்பாடு பேசும் ராஜாக்கள் முன்பும்-ஆபிஜாத்யமும் ஜகத் ரஷணமும் விலை பெறும் இடம் என்றுமாம் –-நாட்டகத்தும்–—- இப்படி நாலைந்து இடத்திலே சொல்லி விடா நின்றேனோ-சர்வேஸ்வரனாக பாவிக்கிற இடம் எங்கும் -தன் வீரப்பாடு பேசும் இடம் எங்கும் -தன்னிலை எல்லாம் அறிவிப்பன் –-என் உடம்பைக் காட்டுகிறேன் –
தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் – இவை எல்லா வற்றுக்கும் அடியாகத் திரு நறையூரிலேவந்து நின்று அருளின வடிவு அழகைக் காட்டி-என் கையிலே மடலைக் கொடுத்து-மணி மயமான கோயிலிலே நிரதிசய போக்யமான வடிவைக் காட்டி-என்னைத் தோற்பித்து அத்தாலே -எனக்கு நிர்வாஹகனாய் நின்று அருளினவனை –-கன்னவில் தோள் காளையைக் – ஓர் அபலையை வென்றோம் -என்று தோள் வலியைக் கொண்டாடி இருக்கிறான் -என்னுதல்–அன்றியே ஒரு ஸ்திரீயை மடல் எடுப்பித்துக் கொண்டோம் -என்று தன பருவத்தைக் கொண்டாடி இருக்கிறவனை -தோளையும் பருவத்தையும் கொண்டாடி இருக்கிறவனை –-கண்டு- காண வேணும் என்னும் ஆசை கண்டு அல்லது நிற்க ஒட்டாது இறே-என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –என்று முதல் நோக்கிலே இறே ஆசை கை வளர்ப்புண்டது -இன்னமும் இவ்வாசைக்கு ஈடாகக் கண்டு அல்லது மீளேன் –-ஆங்குக் கை தொழுது –
கண்ட விடத்தே அவர்க்குச் செய்யக் கடவது ஓன்று உண்டு -தம்மை யன்றோ வென்று தொழக் கடவேன் –நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவு மாம் கொலோ -என்று உபாத்யாயன் அவன் இறே
ஓதி நாமம் –பணிவோம் -பெரிய திருமொழி -9-3-9- என்ற இவ் வாழ்வார் அடுத்த படியாக-அது அவனுடைய நெஞ்சுக்குத் தண்ணீர்த் துரும்பு போன்றது என்பதை-நமக்கே நலமாதலில் -பெரிய திருமொழி-9-3-9- என்று-ஏகாரத்தாலே உணர்த்தினார் –-தொழுது –என்னுமிது மிகையாதலின் -திருவாய் -9-3-9- என்றார் நம் ஆழ்வார்-கண்டு ஆங்கு கை தொழுது-மடல் எடுக்க துணிந்த நம் ஆழ்வாரும் நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே -திருவாய் -5-3-7- என்று-பலர் முன்பே அவன் ஸ்வ ரூபத்தை அழிக்க ஆசைப் பட்டார்-பெருமாள் மேலே ஸீதாப் பிராட்டியும்-தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா சாபி வாதய-சுந்தர -39-55-என்றாள் –
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் –-என்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –-உன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று தாயே தந்தையே யில் ஆசைப் பட்ட படியும்–ஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்-என் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்
இனியையாம் படியும் புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும் கால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6–ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று ஒருப்பட்டு மோகாங்கதையாய்-கொல்லையானால் பரிசளிந்தாள்-4-8-4-என்று-பார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்
திரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-
அறிவித்த படியும்–வெருவாதாளிலே-5-5–-வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்-தாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக் கோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும் சினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் – தந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே என் ஐம் புலனும் எழிலும் கொண்டு பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்–தெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்-கரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்
தந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று நாழிகை ஊழியில் பெரிதான படியும்-காவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்-தவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்-மூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே–திருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் –இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது –எம்பெருமான் தன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத் தலையில் வைலஷண்யம்
அவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –
எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -தன் பேறாக கிருபை பண்ணித் தன் உடம்போடு வந்து என்னை அணையானாகில்–தன்னை – சர்வதா மடல் எடுத்தாகிலும் பெற வேண்டும்படியான
வைலஷண்யத்தை உடைய தன்னை –-நான்--ஏதேனும் செய்தாகிலும் அபேஷிதம் பெற்று அல்லது மீளுவது இல்லை என்னும் துணிவை யுடைய நான் –-மின்னிடையார் சேரியிலும் – அல்லாதவிடம் செய்தபடி செய்ய-என்னோட்டை சஜாதீயர்க்கு முந்துற அறிவிக்கத் தட்டில்லை இறே-தான் ரசிகனாய் பிரணயித்வம் கொண்டாடி இருப்பது அவர்கள் பக்கலிலே இறே மின்னிடையார் என்று ஆண்டாள் போல்வார் கோஷ்டியிலும் திருக் குரவை கோத்த பெண்கள் திறங்களிலும் – இதுவே அன்றோ அவனுடைய ரசிகத்வம் இருந்தபடி -என்று என் உடம்பைக் காட்டி ஸ்திரீ காதுகன் கிடிகோள் -என்கிறேன் –வேதியர்கள் வாழ்விடத்தும் –உபாசக அக்ரேசரான வ்யாசாதி கோஷ்டியிலும்-வேதியர் -என்று பெரியாழ்வார் வர்த்திக்கிற தேசங்களிலும் என்னவுமாம் –-தன்னடியார் முன்பும்-–குணைர் தாஸ்ய முபாகத -என்றார் போலே குண ஜ்ஞானத்தால் ஜீவித்துக் கிடப்பார் சிலர் உண்டு இறே-நம் ஆழ்வார் போல்வார் -அவர்கள் சந்நிதியிலும் அவர்கள் முன்பே இது கிடிகோள் அவன் குணம் இருந்தபடி என்று
என் வடிவைக் காட்டி -ந்ருசம்சன் -என்னக் கடவேன் –-தரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும்-–ஒவ்வொரு நாடுகளுக்குக் கடவராய் இருப்பார் இவன் வீர வாசியை சொல்லி கொண்டாடி நிற்பார்கள் இறே –-அவ்விடங்களிலே இது கிடிகோள் அவன் ரஷகனாய் இருக்கிறபடி என்று அபலையான என் வடிவைக் காட்டுகிறேன் –-வேல் வேந்தர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் -தொண்டைமான் சக்கரவர்த்தி போல்வார் இ றே -இங்கனே பிரித்துச் சொல்லுகிறது என் –
நாட்டகத்தும்–—-லோகம் அடங்கத் திரண்ட இடங்களிலே சென்று–சேஸ்வரம் ஜகத்து -என்று பிரமித்து இருக்கிறவர்களை நிரீஸ்வரம் ஜகத்து -என்று இருக்கும்படி பண்ணுகிறேன்
நாட்டகத்தும் –-மற்றும் விலஷணர் வர்த்திக்கும் திவ்ய தேசங்களிலும் –-தன்னிலை எல்லாம் அறிவிப்பன் –-இவ் வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி
என்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற தன் துணிவை எல்லாம் அறிவிப்பேன்
நான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்-இனி அதுக்கு உனக்கு என் -என்ன
லோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்-பொரி புறம் தடவி தன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன்
ஊரகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் ஸந்நிதி. இத்தலத்தில் திருமாள் உரகருபியாய் ஸேவை சாதிப்பதுபற்றி இத்திருப்பதிக்கு ஊரகம் என்று திருநாமமென்பர், உரகம் – பாம்பு வடசொல்.-அட்டபுயகரம் –இத்தலத் தெம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகள் உள்ளது பற்றி அஷ்டபுஜன் என்று திருநாமமாய் அவன் எழுந்தருளியிருக்கின்ற கரம் – க்ருஹம் ஆதல்பற்றி அட்டபயக்ரமென வழங்கப்படும் அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாருமுளர்.-என்னை மனங்கவர்ந்த வீசனை வானவர்தம் முன்னவனை – வானவர்தம் முன்னவனென்று தேவாதிராஜனான பேரருளானப் பெருமாளைச் சொல்லுகிறதென்றும், “என்னை மணங்கவர்ந்த வீசனை“ என்கிற விசேஷணம் இவ்வர்த்தத்தை ஸ்திரப்படுத்துகின்றதென்றும் பெரியோர் கூறுவர். திருமங்கையாழ்வாருடைய மனத்தைக் பேரருளாளன் கவர்ந்தானென்னுமிடம் இவரது. வைபவத்திலே காணத்தக்கது. கனவிலே காட்சிதந்து வேகவதியில் நிதியைக் காட்டித் துயர் தீர்த்த வரலாறு.-மூழிக்களம் – மலைகாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம் “மூழிக்களத்து வளத்தனை“ என்றும் பாடமுண்டாம், வளமானது ஸம்பத்து, ஸம்பத் ஸ்வரூபனை யென்றபடி – ஆதனூர் – ஆதன் ஊர் காமதேநுவுக்குப் பிரத்யக்ஷமான கலமாதல்பற்றி வந்த திருநாம மென்பர் ஆ-பசு.–ஆண்டு அளக்கும் ஐயனை –ஆண்டு வருஷம் இது காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம் ஸகல காலங்களையும் பரிச்சோதிக்க ஸ்வாமி என்றப. காலசக்ரநிர்வாஹகனென்கை. நென்னல் – நேற்றுக் கழிந்தநாள், இறந்த காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம். “ஆண்டளக்குமையன்“ என்றதை விவரிக்கின்றார் மூன்று விசேஷணங்களாலே, பூத வர்த்தமான பவிஷ்யத் காலங்களுக்கு நிர்வாஹகனென்றவாறு.-நீர்மலை – நீரானது அரண் போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும்.-புல்லணை யென்பதன் மருஉ, ஸீதையைத் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீராமபிரான் வாநரஸேனையுடனே புறப்பட்டுச்சென்று தென்கடற்கரையை யடைந்து கடல்கடக்க உபாயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பத்தில் பிராயோபவேசமாகக் கிடந்த ஸ்தரமாதலால் புல்லனை யெனப்பட்டது. தர்ப்பசயா க்ஷேத்ரமெனவும் படும்.-தலைச் சங்க நாண் மதியை –சிறந்த சங்கத்தை யேந்திய நாண் மதியப் பெருமானுடைய தலமாதல் பற்றித் தலைச் சங்க நாண் மதியமென்று திவ்ய தேசத்தின் திருநாமம்.-கன்னவில் தோள்களியை – கீழே “இதுவிளைத்த மன்னன்“ என்று தொடங்கி இவ்வளவும் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளைப் பற்றிப் பேசினாராயிற்று. கீழே இரண்டாம் வேற்றுமையாக வந்த அடைமொழிகளெல்லாம் இங்கு அந்வயித்து முடிந்தன.
இப்படிப்பட்ட எம்பெருமானை ஆங்காங்குச் சென்று ஸேவித்து “ஸ்வாமிந்! இப்படிதானா என்னைக் கைவிடுவது? விரஹம்தின்றவுடம்பைப்பாரீர்“ என்று என் அவஸ்தையை விண்ணப்பஞ்செய்வேன்,-அதுகேட்டு திருவுள்ள மிரங்கித் திருமார்போடே என்னை அணைத்துக்கொள்ளாவிடில் மாதர்களும் வைதிகர்களும் பக்தர்களும் அரசர்களும் திரண்டுகிடக்குமிடங்கள் தோறும் புகுந்து அவனது ஸமாசாரங்களை யெல்லாம் பலரறிய விளம்பரப்படுத்துவேனென்றாயிற்று.-ஆண்டாள் ஆய்ச்சிமார் போன்ற பெண்ணரசிகளும், பெரியாழ்வார் வ்யாஸர் பராசரர் போன்ற வைதிகர்களும், இளைய பெருமாள் ப்ரஹ்லாதன் போன்ற பக்தர்களும், குலசேகரப் பெருமான் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்ற அரசர்களும் இவனுடைய பெருமேன்மைகளைச் சொல்லிக்கொண்டு ப்ரமித்துக் கிடப்பர்களே,-அங்கங்கெல்லாம் நான் சென்று அவனைப்போன்ற நிர்க்குணன் இவ்வுலகில் எங்குமில்லை“ என்று பறையடித்து எல்லாரும் அவனைக் கைவிடும்படி பண்ணி விடுகிறேன் பாருங்களென்கிறார்.-“லோகமடங்கத் திரண்டவிடங்களிலே சென்று “ஸேச்வரம் ஜகத்து“ என்று ப்ரமித்திருக்கிறவர்களை “நிரீச்வரம் ஜகத்து“ என்றிருக்கும்படி பண்ணுகிறேன்“ என்ற வியாக்கியான ஸூக்தியுங் காண்க.
தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கயிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139–
முனம் நாள்–முற் காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரி–மின் போல் நுண்ணிய இடையை யுடைய இடைச்சிகளின் சேரியிலே
துன்னு படல் திறந்து–நெருக்கமாகக் கட்டி வைத்த படலைத் திறந்து
களவின் கண் புக்கு–திருட்டுத் தனமாகப் புகுந்து
தயிர் வெண்ணெய்–தயிரையும் வெண்ணெயையும்
தன் வயிறு ஆர தான் விழுங்க–தனது வயிறு நிறையும்படி வாரி யமுது செய்த வளவில்
கொழு கயல் கண் மன்னு மடவோர்கள்–நல்ல கயல் மீன் போன்ற கண்களை யுடைய அவ் வாயர் மாதர்
பற்றி–பிடித்துக் கொண்டு
ஓர் வான் கயிற்றால்–ஒரு குறுங் கயிற்றால்
உரலோடு–உரலோடே பிணைத்து (க்கட்டிவிட)
கட்டுண்ட பெற்றிமையும்–(கட்டை யவிழ்த்துக் கொள்ள மாட்டாமல்) கட்டுண்டு கிடந்தன்மை யென்ன.
தான் முன நாள்--அன்று தான் இடைச் சேரியிலே வெண்ணெய் திருடி-உரலோடு கட்டுண்டு விட்டுப் புறப்பட்டதும் –-மின்னிடை –-நீ களவு காண்கிறது பெண்களிடை காணக் கிடாய் –-யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்— என்ன பட்டணத்தே புக்கான் –இடைச் சேரி அன்றோ என்ன மகுடபங்கம் பண்ணினான் துன்னு படல் அன்றோ என்ன பிரதிமை எடுத்தான் –வெண்ணெய் அன்றோ என்ன திருப்பணி செய்தான் –தன் வயிறு வளர்த்தான் அத்தனை அன்றோ சேரி -ஒழுகு ஒன்பதும் –-துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்- மேலே படல் இருக்க கீழே நுழைந்ததும் களவு கை வந்ததும் அத்தனை அன்றி அவள் கோலிட்டுத் திருகி வைக்கும் யந்த்ரம் அறியான்-பல்கால் புக்க வழக்கத்தாலே அறியும் -என்கை – தன் வயிறார விழுங்கக்-திரு மங்கை ஆழ்வாரைப் போலே பரார்த்த மாக களவு காண்கிறது அன்று –-கொழும் கயற்கண் மன்னு மடவோர்கள் பற்றியோர்-எட்டாதே திரிந்தவன் பிடியுண்ட ப்ரீதி ஆய்ச்சியர் கண்ணிலே தோற்றி இருக்கை –-வன் கயிற்றால்--எட்டிற்று ஒரு கயிறு –கண்ணி நுண் சிறுத் தாம்பு-கண்ணிக் குறும் கயிறு –-பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்—பெற்றிமை -பெருமை /-அப்போதே உரலோடு இருக்கச் செய்தே கண்டேனாகிலோ -என்று கருத்து-
இப்படி பிரதிஞ்ஞை பின குண ஹானியை உபபாதிக்கிறார் மேல்-தான் -இது செய்தானாய் மேனாணித்து இருக்கிற தான் –-முன நாள்-செய்த நாள் பழகிற்று என்று இருக்கிறானோ –-மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்— அகங்கள் தோறும் தனித்தனியே கண்ட களவு சேரிக் களவு என்று-தான் ஒரு சேரியாக வன்றோ களவு கண்டது களவு கண்டு ஓடப் புக்கால் தொடருகிற பெண்கள் உடைய இடையினுடைய நுடங்குதல் காண்கைக்காக அன்றோ செய்தது –-துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்--நெருங்கின படலை இட்டு வாசல்களை மரத்தை இட்டுத் திருகி வைப்பார்கள் யாயிற்று-அவற்றைத் திறந்து கொடு போய்ப் புக்கு –-திறந்து வைத்தார்கள் ஆகில் அடைத்துக் கொடு போய்ப் புக்கு களவு காண்பது-துச்சமான தயிரும் வெண்ணெயுமன்றோ –-பௌத்த பிரதிமையோ –-தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்-—-ஏதேனும் ஒரு திரு மதில் செய்க்கைக்காகவோ-இவன் தீரா மாற்றுச் செய்து அகப்படாதே திரிந்த இழவு தீர-அகப்பட்ட போதே நல்ல தாம்பு என்று-நீளியது ஒரு கயிறு கொடு வந்து கொடுப்பார் இல்லை இறே என்கிற-அஹங்காரம் தோற்றப் பார்க்கிற போதை
கண்ணில் புகரையும் ஆச்சர்யமாய் இருக்கிற வடிவையும் –-மன்னு மடவோர்கள் பற்றியோர் வன் கயிற்றால்--இவன் அகப்பட்ட போதே ஒரு கைக்கு ஆயிரம் பெண்களாய் வந்து பிடித்து விடாதே நிற்பார்கள்-அப்போது கைக்கு எட்டிற்று ஒரு கயிறு-நல்ல தாம்பு அன்றே-கண்ணிக் குறும் கயிறு என்றும்-கண்ணியார் குறும் கயிறு -என்றும்-கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்றும்-இது தன்னை சிஷித்து வைத்தார்கள் இறே –-பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்— கையாலே பிடித்து விட்டார்களோ – தன்னுடைய பெருமை இது அன்றோ –
என்னினைவைத் தலைக்கட்டாவிடில் அவனுடைய ஸமாசாரங்களையெல்லாம் தெருவிலே எடுத்து விடுகிறேனென்று கீழ்ப் பிரதிஜ்ஞை பண்ணினபடியே சில ஸமாசாரங்களை யெடுத்துவிடத் தொடங்குகிறாள் பரகாலநாயகி –-“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப்பெற்றான், பற்றியுரலிடையாப்புமுண்டான் பாவிகாளுங்களுக்கு எச்சுக்கொலோ? நற்றெனபேசி வசவுணாதே“ என்று – எம்பெருமானுடைய சரிதைகளை இழிவாகக் கூறி ஏசுமவர்களை வாய்புடைக்கவேண்டிய இவ்வாழ்வார் தாமே ஏசத்தொடங்குவது ப்ரணயரோஷத்தின் பரம காஷ்டையாகும்.“ஏசியே யாயினும் ஈனதுழாய் மாயனையெ பேசியே போக்காய் பிழை“ என்பாருமுண்டே. குணகீர்த்தனங்களில் இதுவும் ஒரு ப்ரகாரமேயாகும்.-இவ்வாழ்வார்தாமே பெரிய திருமொழியில் பதினோராம்பத்தில் மானமருமென்னோக்கி என்னுந் திருமொழியில், இரண்டு பிராட்டிகளின் தன்மையை ஏக காலத்தில் அடைந்து முன்னடிகளால் இகழ்ந்துரைப்பதும் பின்னடிகளால் புகழ்ந்துரைப்பதுமாக அநுபவித்த்தும் அறியத்தக்கது.(தான்முனநாள் இத்யாதி) இடைச்சிகளின் சேரியில் பிரவேசித்து, படல் மூடி யிருந்த மனைகளிலே திருட்டுத்தனமாகப் படலைத் திறந்துகொண்டு புகுந்து தயிரையும் வெண்ணெயையும் வயிறு நிறைய விழிக்கினவளவிலே அவ்வாயர் மாதர் கண்டு பிடித்துக் கொண்டு உரலோடே இணைத்துக் கயிற்றாலே கட்டிப்போட்டு வைக்க ஒன்றுஞ் செய்யமாட்டாமல் அழுது ஏங்கிக் கிடந்தானே, இது என்றைக்கோ நடந்த காரியமென்று நான் விட்டுவிடுவேனோ? இவ்வழிதொழிலை இன்று எல்லாருமறிந்து “கள்ளப்பையலோ இவன்“ என்று அவமதிக்கும்படி செய்து விடுகிறேன் பாருங்கள் – என்கிறாள்.-பெற்றிமையும், தெற்றெனவும் சென்றதுவும் என்கிற இவை யெல்லாம் மேலே “மற்றிவை தான் உன்னி யுலவா“ என்றவிடத்தில் அந்வயித்து முடிவு பெறும். இப்படிப்பட்ட இவனுடைய இழி தொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை என்றவாறு.-“தன் வயிறார“ என்றவிடத்து “திருமங்கையாழ்வாரைப் போலே பரார்த்தமாகக் கனவு காண்கிறதன்று“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி காண்க.-வான் கயிறு என்றது எதிர்மறையில் கனையினால் குறுங்கயிறு என்று பொருள்படும். கண்ணி நுண் சிறுத்தாம்பினாவிறே கட்டுண்டது.
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்
ஆயர் விழவின் கண்–இடையர்கள் (இந்திரனுக்குச் செய்த) ஆராதனையில்
துன்னு சகடத்தால் புக்க பெரு சோற்றை –பலபல வண்டிகளால் கொண்டு சேர்த்த பெருஞ்சோற்றை
அன்னது ஓர் பூதம் ஆய் –வருணிக்க முடியாத வொரு பெரும் பூத வடிவு கொண்டு
முன் இருந்து–கண் முன்னேயிருந்து கொண்டு
முற்ற–துளிகூட மிச்சமாகாதபடி
தான்–தானொருவனாகவே
தூற்றிய –உட்கொண்ட
தெற்றௌவும் –வெட்கக்கேடென்ன.
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை—-அன்னது –அம்மே அப்பூச்சி என்று முகத்தைத் திரிய வைக்கிறாள்-அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் -பெரியாழ்வார் -3-5-1–முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்-
ஒரு திரை வளைத்துக் கொண்டால் என் செய்யும் -வயிறு தாரித்தனம்-தெற்றனவும்–நிர் லஜ்ஜையும்
அதுக்கு மேலே செய்ததொரு செயல் அன்றோ இது –-அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
நினைத்த வாறே துணுக என்னும் படியான வடிவை யன்றோ கொண்டது-பூத வேஷத்தையும் பரிக்ரஹிப்பார் உண்டோ-ஆரேனுமாக நாழி அரிசி ஜீவிப்பாரைத் தேடித் திரியுமாயிற்று –ஆயர் விழாவின் கண் –-அங்கே புக்கு ஜீவிக்கைக்கு -இடையர் உடைய உத்சவத்திலே-துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை–-நால்வர் இருவர் சுமந்து கொடு போன சோற்றை ஜீவித்தானோ-நெருங்கின சகடங்களாலே கொடு பொய் புக்கு-மலை போலே குவித்த சோற்றை அன்றோ ஜீவித்தது-அட்டுக் குவி சோறு இறே இது –-முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும் ஒரு திரையை வளைத்துத் தான் ஜீவிக்கப் பெற்றதோ-அதிலே சிறிது சோறு வைக்கத் தான் பெற்றதோ-ஜீவிக்கும் இடத்தில் சில பந்துக்களோடே தான் ஜீவிக்கப் பெற்றதோ-இப்படிச் செய்தோம் என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –
துன்னு சகடத்தால் புக்க – சிலர் தலை மேலே சுமந்துகொண்டு போய்க் கொட்டின சோறன்று பல்லாயிரம் வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போய்ப் பெரிய மலை போலே கொட்டி வைத்த பெருஞ்சோறு, இவற்றையெல்லாம் ஒரு திரை வளைத்துக்கொண்டாவது உண்டானோ? இல்லை,-முன்னிருந்து உண்டான அதிலே சிறிது சோறு மிச்சமாமபடி உண்டானோ? இல்லை, முற்றத்துற்றினால், உற்றாருறவினர்க்கும் சிறிது கொடுத்து உண்டானோ? அதுவுமில்லை, முற்றவும் தானே துற்றினான்,–இப்படி வயிறுதாரித்தனம் விளங்கச் செய்த செயலுக்குச் சிரிது வெட்கமாவது பட்டானோ? அதுவுமல்லை. இப்படிப்பட்ட வெட்கக்கேடான செய்தியைத் தெருவேறச் சொல்லிக்கொண்டுபோய் “வயிறுதாரிப் பையலோ இவன்“ என்று எல்லாரும் அமைதிக்கும்படி செய்துவிடுகிறேன். பாருங்கள் என்கிறாள்–
மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்–
முனம் நாள்–முன்னொரு காலத்தில்
வாழ் வேந்தர் தூதன் ஆய்–பாண்டவர்களுக்குத் தூதனாய்
தன்னை இகழ்ந்து உரைப்ப–(கண்டாரங்கலும்) இழிவாகச் சொல்லும்படியாக
மன்னர் பெருசவையுள் சென்றதும்–(துரியோதனாதி) அரசர்களுடைய பெரிய சபையிலே சென்றதென்ன-
மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—-நாழி யரிசி ஏற ஜீவித்தார்க்குத் தூது போம் வேண்டப்பாடு-தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்- ஸ்ரீ விதுரரகத்தே உண்டது –
மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்– ராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய்-தன்னை வாழ்வாகவும் துணையாகவும் தோழனாகவும் தூதனாகவும்
உடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்-தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்- தன்னைக் கண்டார் அடைய அநாதர உக்தி-பண்ணும்படி அன்றோ செய்தது-இது செய்தோம் நாம் அன்றி -என்று இருக்கிறானோ-காலம் கடந்து போயிற்று என்று இருக்கிறானோ
நேற்று செய்தால் போலே யன்றோ இருக்கிறது –
கண்ணபிரான், பாண்டவர்களையும் துர்யோதநாதிகளையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதனாதியரிடம் தூது சென்ற வரலாறு ப்ரஸித்தமேயாம்-“கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலங் கூறிடுவான், தூதனாய் மன்னவனாய் சொல்லுண்டான்“ என்கிற இவ்விழிதொழிலை நாடறியச் சொல்லி “ஒரு வேலைக்காரப் பையவோ இவன்“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்கிறாள்.
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143–
மங்கையர் தம் கண் களிப்ப–(இடைப்) பெண்களின் கண்களிக்கும்படி
மன்னு பறை கறங்க–(அரையிலே) கட்டிக்கொண்ட பறை ஒலிக்க
கொல் நவிலும் கூத்தன் ஆய்–(பெண்களைக்) கொலை செய்கின்ற கூத்தை யாடுபவனாய்
போத்தும்–மேன்மேலும்
குடம் ஆடி–குடங்களை யெடுத்து ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும-–“இப்படியும் கூத்தாடுவா னொருவனுண்டோ!“ என்னும்படி பெற்ற சீர் கேடென்ன-
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப— பறை கொட்டுகைக்கு ஓர் ஆள் இல்லாமே அரையிலே கட்டிக் கொண்டது –-மங்கையர் -இது கொண்டாட வல்லவர்கள் அன்றோ –-கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி--கண்டார் பிழையாத படி இருக்கிற அழகு-என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்-— என் செய்ய-இவன் இப்போது போகானோ-என்னும்படி படுகிற பாடு –
மன்னு பறை கறங்க –-இவ்வசதச்ய பிரவ்ருத்திக்கு சஹ கரிப்பார் இல்லாமையாலே தானே பறையை அறையிலே-கோத்தன்றோ அடிக்கிறது –-மங்கையர் தம் கண் களிப்ப—— இது செய்தான் என் என்றால்-கண்ட பெண்கள் களிக்கச் செய்தோம் -என்று இ றே இவன் சொல்லுவது –-கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி-கண்டார்க்குப் பிழைக்க வரிதான கூத்தை யுடையனாயிற்று
அதுக்கு மேலே குடங்களை ஏந்திக் குடக் கூத்தாடி-என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்––
இவன் படுகிற பாடு என்- நாழி யரிசி ஜீவிப்பார்க்கு இப்பாடு பட வேணுமோ -என்று சொல்லுகிற எளிவரவையும் –
கண்ணபிரான் அரையிலே பறையைக் கட்டிக்கொண்டு குடக்கூத்தாடுவது சாதி வழக்கத்தை அநுஸரித்த ஒரு காரியம்.-அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகம் செய்வதுபோல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவார்கள்.-கண்ணபிரானும் சாதிமெய்ப்பாட்டுக்காக “குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே“ என்றபடி அடிக்கடி குடக்கூத்தாடுவது வழக்கம்.-தலையிலே அடுக்குக்குடமிருக்க. இரு தோள்களிலும் இரு குடங்களிருக்க, இருக்கையிலுங் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது என்பர்.-இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திவொன்றென்றும் கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து“ என்று மேற்கோளுங் காட்டினர் சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்.-இவன் சில பெண்களைப் பிச்சேற்றுவதற்காகக் கூத்தாடின படியைப் பலருமறியப் பேசி, “கூத்தாடிப் பையலோ இவன்!“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்றானாயிற்று.-ஈடறவு – சீர்கேடு, ஈடு- பெருமை, அஃது இல்லாமை – அற்பத்தனம் வீடறவும் என்று பிரித்து கூத்தனின்றும் மீளாமை என்று சிலர் சொல்வது ஏலாது.
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –
தென் இலங்கை யாட்டி–தென்னிலங்கைக்கு அரசியும்
அரக்கர் குலம் பாவை–ராக்ஷஸ குலத்தில் தோன்றிய புதுமை போன்றவளும்
மன்னன் இராவணன் தன் நல் தங்கை –பிரபுவாகிய ராவணனது அன்புக்குறிய தங்கை யானவளும்
வாள் எயிறு–வாள் போன்ற பற்களை யுடையளும்
துன்னு சுடு சினத்து–எப்போதும் (எதிரிகளைச்) சுடக் கடவதான் கோபத்தை யுடையளுமான
சூர்ப்பணகா–சூர்பணகை யென்பவள்
புலர்ந்து எழுந்த காமத்தால்–அதிகமாக வுண்டான காம நோயினால்
பொன் நிறம் கொண்டு–வைவர்ணிய மடைந்து
சோர்வு எய்தி–பரவசப்பட்டு (தளர்ந்து)
தன்னை நயந்தாளை –தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை
தான் முனிந்து–தான் சீறி
மூக்கு அரிந்து –மூக்கையறுத்து
மன்னிய திண்ணெனவும்–இதையே ஒரு ப்ரதிஷ்டையாக நினைத்துக கொண்டிருப்பதென்ன-
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்–
அவ் வைஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவள்-அரக்கர் -அவள் பிறந்தால் போல் பிறந்தார் இல்லை-நல் தங்கை -ராவணனுக்கு நேரே உடன் பிறந்தவள்-துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச்--அவளை ஒப்பார் இல்லை-சௌந்தர்யத்தால் குறைவற்றவள் –சோர்வெய்திப்- அவசையாய் –-பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—தன்னை நயந்தாளைத்-உடம்பு வெளுத்து-துவண்டு மிக்க ஸ்நேஹத்தால் தன்னை ஆசைப் பட்டவளை- தான் முனிந்து மூக்கரிந்து–வேண்டா என்பதும் அன்றிக்கே மூக்கை அறுப்பதே -என்ன வீரமோ –மன்னிய திண் எனவும்–
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை--சொல்லீர் அவள் ஒருத்தியை-அவளைப் போலே பிறந்தாரும் உண்டோ-ராவணன் என்று ஓர் பேர் மாத்ரமாய்-அவள் அன்றோ அப்படை வீட்டுக்கு நிர்வாஹகையாய் போந்தாள்–ஜனகஸ்ய குலே ஜாதா-என்னுமா போலே ராஷச குலத்துக்கு நிதி போலே யுள்ளாள்–மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்-—-சொல்லாய் ராஜ ராஜனை -அவனைப் போலே வாழ்ந்தார் உண்டோ-அவனுக்கு நல்ல ஜீவன் போலே வேறே தங்கை சொல்லீர் எயிற்றின் ஒளியை ஸ்திரீ யாகில் அங்கன் இருக்க வேண்டாவோ தான்-துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்-எயிற்றின் ஒளி போலேயோ அகவையில் த்வேஷம் வெள்ளம் இருக்கிறபடி
சூர்ப்பம் போன்ற நகத்தை யுடையவள் பெருமாளோடு தான் நினைத்து வந்த படி பரிமாறப் பெறாமையாலே சோர்ந்து பூமியிலே விழ – பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்-—
அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பை யுடையளாய் – கிளர்ந்து எழுந்த காமத்தை யுடையளாய்-தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து--தன்னை ஆசைப்பட்ட இது அன்றோ அவள் செய்த த்ரோஹம்-தன்னை ஆசைப் பட்டாரை முனியக் கடவதோ-ஆசைப் பட்டாரை ஒக்க ஆசைப் படும் அது ஒழிய அது செய்யா விட்டால் பின்னை முனியவும் வேணுமோ முனிந்து விட்டு விடப் பெற்றதோ அவளுக்கு வைரூப்யத்தையும் விளைத்து விட வேணுமோ–மன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்-—- ஸ்த்ரீத்வம் பண்ணினால் அனுதாபமும் இன்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்து இருக்கிற நிலை நின்ற த்ருடத்வமும்-சொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை – சொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை –
ஆலிறையும்“ என்ற நன்னூல் விதிப்படி சூர்ப்பணகை எனத் திரியவேண்டியிருக்க அங்ஙனத்திரியாது சூர்ப்பணகா என்று ஆலீறாகவே நின்றது – புதியனபுகுதல் என்னலாம். பழையன கழிதமு புதியன புகுதலும்வழுவல காலவகையினானே“ என்றார் நண்ணூலார்.தன்னை ஆசைப்பட்டு வந்தவனை ஏதோ நல்வார்த்தை சொல்லிப் போகவிடாமல் ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனாய் அங்கபங்கஞ் செய்துவைத்து அனுப்பினவன் காண்மின் என்று தெருவேறச்சொல்லி “ஸ்த்ரிகளை அநியாயம் பண்ணுகிறவனோ இவன்“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் – என்றாளாயிற்று.-பொன்னிறங்கொண்டு – காமநோயுடையர்க்கு உடல் விவர்ணப்படுங்காலத்து அந்த நிறம் பொன்னிறமெனப்படும். அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பையுடையளாய்“ என்பது வியாக்கியானம்.–புலர்ந்தெழுந்த காமத்தால் புலர்தல் என்பதற்கு காய்தல் வாடல் விடிதல் என்று பல பொருள்களுண்டு-இங்கு விடிதல் என்று பொருளாய் உதயமாகி வளர்ந்த காமத்தினால் என்றதாம்.–மன்னிய திண்ணெனவும் – “ஸ்த்ரிவதம் பண்ணினால் அநுதாபமுமின்றிக்கே பெரிய ஆண்பிள்ளைத்தனம் செய்ததாக நினைத்திருக்கிற நிலைநின்ற த்ருடதவமும்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.-
வாய்த்த மலை போலும்—–146
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147
உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148
மன்னிய பூம் பெண்ணை மடல் –
வாய்த்த மலை போலும் –பெரியமலை போன்ற உருவமுடையளும்
தன் நிகர் ஒன்று இல்லாத–(கொடுமையில்) ஒப்பற்றவளுமான
தாடகையை–தாடகை யென்பவளை
மா முனிக்கா–விஸ்வாமித்ர முனிவர்க்காக
தென் உலகம் எற்றுவித்த–யம லோக மடைவித்த
திண் திறலும் –மிக்க பராக்ரமமென்ன
மற்று இவை தான் –இப்படியாகவுள்ள மற்றும் பல செய்கைகளும்
உன்னி உலவா –நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)
உலகு அறிய–அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகாஸப்படுத்திக் கொண்டு
நான்–பரகால நாயகியாகிய நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூபெண்ணை மடல் ஊர்வன்–முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனை மடலைக் கொண்டு மடலூரக் கடவேன்-
வாய்த்த மலை போலும்-—-தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்-ஒரு பார்ப்பான் சொன்னான் இறே–தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—-தென் உலகம் -அவள் அங்கு இருக்கவும் பெற்றாளோ–உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்-–உலவா -ஆபத்துக்கு நான் தேடி வைத்ததுக்கு ஒரு முடிவு இல்லை-உலவு -முடிவு –உலவா -முடியா -என்றபடி-முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த-மன்னிய பூம் பெண்ணை மடல் – முன்னி -மடல் எடுக்கக் கடவேன் -என்று முற்கொலி –-உயர்ந்து ஒளி மிக்கு அழகியதாய் நிலை நின்றவை மடலாய் இருக்கிறபடி-பிராட்டிக்கு விஸ்வாமித்ர பகவானைப் போலே-இவளுக்கும் இம் மடல்-பெண்ணை யாகிறது-பனை –
வாய்த்த மலை போலும்- தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை – தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-நீ ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால் ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது
இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்–மா முனி-அவன் ஒருவன் படி இருந்த படி என்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் உடைய ஆற்றாமைக்கு உதவ கடுகக் கொடு சென்றவன்
கையும் மடலுமாய் இருக்கிற என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –
சூர்ப்பணகையை அங்கபங்கஞ் செய்து உயிரோடாவது விட்டிட்டான், இப்படி ஸ்த்ரீஹக்தி பண்ணுவதே இவனுடைய பராக்ரமத்துக்குப் போக்குவீடு,-பெண்களை கொலைசெய்து தன்னை மஹாபலசாலியாக நினைத்துச் செருக்குற்றிருக்குமின்னுடைய இந்த அழகால பராக்ரமத்தை நாடறிச்சொல்லி “இதுவோ இவனுடைய ஸமாசாரம்!“ என்று எல்லாரும் இழவாக நினைக்கும்படி பண்ணிவிடுகிறேன் பாருங்கள் – என்றாளாயிற்று.-திண் திறலும் – ஒரு பெண்பெண்டாட்டியைக் கொலைசெய்து விடுவது ஒரு பராக்ரம்மோ! என்று ஏசுகின்றவாறு.-மற்றவைதான் உன்னி உலவா – ஸ்ரீராமாயணம், ஸ்ரீபாகவதம், மஹாபாரதம் முதலியவற்றில் இப்படிப்பட்ட இழிதொழில்கள் எவ்வளவோ சொல்லப்பட்டுள்ளன, அவற்றுக்குக் கங்குகரையில்லை அவை என்னால் சொல்லி முடிக்கப் போகாதவை.-முடிந்த வரையில் சிலவற்றை யெடுத்துச் சொல்லிக் கொண்டு தெருவேற மடலூர்ந்து செல்வேன் என்று தலைக் கட்டினாளாயிற்று.-பெண்ணை என்று பனைமரத்துக்குப் பெயர், “முன்னிமுளைத் தெழுந்தோங்கி யொளிபரந்த மன்னியபூம் பெண்ணைமடல்“ என்று பனைமடலைச் சிறப்பித்துச் சொன்னது – என் கையிலே சிறந்த ப்ரஹ்மாஸ்க்ர மிருக்கிறபடி பாருங்கள், இனி எனக்கு என்ன குறை? என் காரியம் கைபுகுந்ததேயாம் என்று தான் பரிக்ரஹித்த ஸாதநத்தின் உறைப்பைக் காட்டினபடி.
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-கம்பர் பாடல்–ஒண் துறை நீர் வேலை உலகு அறிய-ஒளி பொருந்திய துறைகளை உடைத்தாய் நீர் நிரம்பியதுமான -கடல் சூழ்ந்த உலகினர் அறியும் படி-
மண்ணில் பொடிப்பூசி வண்டிரைக்கும் பூச்சூடி-பெண்ணை மடல் பிடித்துப் பின்னே -அண்ணல்-திரு நறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி-பொரு மறையாச் செல்வம் பொலிந்து-
அறையாய் -கூப்பிடாய் -அவனுடைய சேஷ்டிதங்களை எல்லாரும் அறியும் படி கோஷிப்பாய்-
தேர் போகும் வீதி அறையாய்-–இன்றும் திருத் தேர் அன்று திருமடல் சாதிப்பது இப்பாசுரத்தை அடி ஒற்றியே செல்வம் பொலிந்து பலன் கிட்டும்-அரை குலையத் தலை குலைய ஓடி வந்து கைங்கர்ய செல்வத்தை அருளுவான் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply