பரமார்த்தியோடு கதறுகின்ற விஷயத்தில். திரெளபதீ சரணாகதி ச்லோகக்கிற்கு ஒருபுடை ஒப்பாகச் சொல்லலாயிருப்பது திருவாய்மொழியில் ” மாயம் செய்யேல்’ (திருவாய் 10-10-2) என்றுதொடங்கித் திருவாணையிடும் பாசுரமேயாகும். அந்தப்பாசுரத்தின் வியாக்கியானத்
தில். “சரணம்புக்க என்னை வஞ்சியாதே கொள்!” (என்னைக் கூவிக்கொள்ளாய் வந்து )ஆன பின்பு, என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய் ; ஸாஸ்த்ரங்களாலே அறிவிக்குமளவு
போராது; குணாவிஷ்காரமாத்ரத்தாலே போராது ஸாக்ஷாத்கரிக்குமளவு போராது ; உன்னைக் கிட்டி அனுபவிக்கும்படி பண்ணவேணும். (அந்தோ) தன்னை யொழியச் செல்லாமையைத் தானே விளைத்துக் கூப்பிட வந்து முகங்காட்டாதொழிவதே! என்று நம்பிள்ளை அருளி யிருப்பதை ரசோக்தி யென்றோ, அதிசயோக்தியென்றோ எவராவது கூறுவார்களோ?இது போலவே, திரெளபதீசரணாகதி ச்லோகத்தில் பதங்களின் பாவ வர்ணனம் செய்திருக்குமிடங்களையும் ரஸோக்தி யென்றோ.அதிசயோக்தி யென்றோ எவரும் கூற முடியாது.
நூறாண்டு காலமாக த்ரௌபதி ப்ரபத்தி விஷயமாக ஏற்பட்ட விவாதங்களை எம்பெருமான் அல்பஜ்ஞனான அடியேனைக் கருவியாகக் கொண்டு முடித்து வைத்து விட்டான். மஹபாரத ஸந்தர்ப்பங்களை மூலமாகக் கொண்ட மூன்று வகைப்பட்ட ஆசார்ய ஸ்ரீஸூக்திகளை அடிப்படையாகக் கொண்டது இவ்விவாதம்.
(1) த்ரௌபதியானவள் சரணாகதி ச்லோகத்தைச சொல்லும் போது கண்ணன் உடனே நேரே வந்து பற்பல பலன்களை அளிக்க வேண்டுமென்று விரும்பினாள் என்று தனி ச்லோகம். தனி த்வயம், திருவிருத்த வ்யாக்யானம் முதலானவற்றிலுள்ள பல ஆசார்ய ஸ்ரீஸுக்திகள் காட்டுகின்றன.
(தனி த்வயம் ஸ்ரீஸுக்திகள்-ஸ்ரீ மகாபாரதத்திலும் ஆபன்னரானவர்க்கு வசிஷ்டாதிகள் உபதேசிப்பது பிரபத்தியை –-எங்கனே என்னில் –
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -கச்சத்வமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷப என்று விதிக்க-அனுஷ்டான வேளையிலே-த்ரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் என்று நமஸ்ஸூ சரண பர்யாயம் ஆகையாலே பிரயோகித்தார்கள் –
திரௌபதியும் அந்தப் பெரிய சபையிலே துச்சாசனன் என்பான் ஒரு முரட்டுப் பயல் வாசா மகோசரமான பெரிய பரிபவத்தைப் பண்ண-தர்மம் ஜெயிக்கிறது என்று இருந்த பர்த்தாக்கள் ஐவரும் –-தர்மம் இல்லை என்று இருந்த நூற்றுவரும்-தர்மாதர்ம விவேகம் பண்ண மாட்டாத த்ரோண பீஷ்மாதிகளும்-இப்படி நிர் லஜ்ஜரான சபையிலே பிரபத்தியை வெளியிடப் பிறந்த பாக்யவதி யாகையாலே லஜ்ஜை உடையவனை நினைத்து
சங்க சக்ர கதா பாணே –என்கையில் வளையோபாதியோ உன் கையில் ஆயுதமும் -என் பரிபவத்தைப் போக்குதல் –-உன் கையில் திருவாழியைப் போக்குதல் செய்ய வேணும்
த்யாகக் கொடி கட்டிக் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப் போலே திருவாழி ஏந்தி இருக்க நான் பரிபவப் படுவதே –எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இறே –
த்வாரகா நிலய –-இப்போது முதலியார் வர்த்திக்கிறது ஸ்ரீ வைகுண்டத்திலேயோ –
அச்யுத –பற்றினாரைக் கைவிடோம் என்றது பண்டோ -இன்று அன்றோ –
கோவிந்த – கோவிந்த அபிஷேகம் பண்ணிற்று தளர்ந்தாரை நோக்குகைக்கு அன்றோ –
கடலிலே வர்ஷித்தால் போலே நித்ய ஸூரிகளை ரஷிக்கவோ-
புண்டரீகாஷ-இக்கண் படைத்தது ஆர்த்த ரஷணம் பண்ண வன்றோ –துச்சனாதிகளை யிடுவித்து பரிபவிக்கைக்கோ
ரஷமாம் சரணாகதாம் –-என் கை விட்டேன் -என்று பிரபத்தியைப் பண்ணினாள்-
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம் –
ருணம் பிரவ்ருத்தம் இவமே ஹ்ருதயான்னாப சர்ப்பதி-என்று சரண்ய பிரபாவம் சொல்லிற்று இறே)
(2) அப்படி உடனே பெற விரும்பிய பலன்களை உடனே பெறவில்லை யென்றும். நீண்டநாள் கழித்தே இந்த சரணாகதியின் பலனாகப் பெற்றாள் என்றும் தனிச்லோகம். ஸ்ரீவசநபூசணஸுத்ரம் (22), அதன் வ்யாக்யானம்.ஈடு (6-10-1) முதலானவை காட்டுகின்றன.
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —சூரணை -22-
அந்தத்தில் முடியும் வகை அடியேற்கு தெரியும் ஓ ஆதி மூர்த்தி -சகாதேவன் சொன்னதை -வில்லிபுத்தூரார் –-பாகவதையான பரிபவம் கண்டு வாளா இருந்தமை –ஆறாவது காது கேட்க்க கூடாத -பூசல் காலத்திலே உபதேசித்து –-கடகன் போலே தூது சென்று பூசல் விளைத்து -சாரதியாய் இருந்து தன் மநோ ரதம் நடத்தியும் -சரணாகதையின் அபேக்ஷிதம் நடத்தி தலைக்கட்டவே —தூது போய்த்தது-பொய் சுற்றம் பேசி நின்று பேதம் செய்து பூசல் விளைக்காக—பெரியாழ்வார் திருமொழி – –சாரத்தியம் பண்ணிற்று -ஆயுதம் எடுக்க ஒண்ணாது ஆகையாலே –கொல்லா மா கோல் கொலை செய்து–பாரத போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவிக்கைக்காக -திரு வாய் மொழி -3- 2- 3-
பிரபத்தி உபதேசம் பண்ணிற்று -ந யோத்ச்யாமி -என்று இருந்தவனை -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி-யுத்தே பிரவ்ருத்தன் ஆக்குகைக்காக –-இவை எல்லாம் செய்தது -சரணாகதை யான இவள் சங்கல்பத்தின் படியே-துர்யோநாதிகளை அழிய செய்து இவள் குழலை முடிப்பைக்காக இறே –-ஆக அர்ஜுனன் திறத்தில் செய்த தூத்யாதி த்ரயமும் இவளுக்காக செய்தான் என்கிறது –
(பெரு வாயா –
திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க,
சபையில் துச்சாதனன் உண்டாக்கின மான பங்கத்தையும் நீக்கி,
துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து,
தரும புத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும்
“வட்டிக்கு வட்டி ஏறின கடனைப்போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை” என்று
கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”– என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.
குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிற போதும்
“நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில்
புண்ணோடே யன்றோ எழுந்தருளினான்.–(பெரு வாயா -பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது,
அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும்,
தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி.)
(3) உடனே கிடைத்த ஓரே பலனான வஸ்திர விருத்தி திரு நாமத்தின் பலனாகவே கிடைத்தென்றும். எம்பெருமான் (பலகரணமாய் நின்று) அதை அருளவில்லை யென்றும் முமுஷுப்படி ஸுத்ரங்கள். அவற்றின் வ்யாக்யானம். ஈடு (3-3-6) ஸூக்திகள். தனிச்லோக ஸ்ரீஸுக்தி முதலானவை காட்டுகின்றன.
திரௌபதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது திருநாமம் இறே–முமுஷுப்படி-சூரணை -16
(இப்படி வாச்யன் தூரஸ்தனாய் இருக்க வாசகம் உதவின இடம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்-அதாவது-மகா சதச்சிலே துச்சாசனன் வஸ்த்ர அபகாரம் பண்ணுகிற போது–மகாத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று முன்பே ஸ்ரீ வசிஷ்ட மக ரிஷி சொல்லி வைத்ததை நினைத்து –சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீ காஷா ரஷமாம் சரணா கதாம் -என்று சரணம் புகுந்த த்ரௌபதிக்கு அவ் வாபத்திலே கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணமாம் தூராவாசினம்-என்கிறபடியே-வாச்யனான கிருஷ்ணன் தூரஸ்தனாய் இருக்கச் செய்தேயும் –வஸ்த்ரத்தை வர்த்திப்பித்து கொடுத்தது அவ் வவதாரத்துக்கு வாசகமான கோவிந்தன் என்கிற திரு நாமம் இறே என்கை –நாராயண சப்த்தத்தில் ஏக தேசத்துக்கு வாசகமான ஒரு திரு நாமம் செய்த படி கண்டால் இதின் பிரபாவம்கிம்புநர் நியாய சித்தம் இறே என்று கருத்து –)
இப்படி மூன்று வகைப்பட்ட இந்த ஸ்ரீஸூக்திகளில் ஒன்றையும் அஸ்வரஸமாக்காமல் நிர்வஹிக்க விரும்புகிறவர்கள் மூன்று உயிர்நிலையான விஷயஙகளுக்குக் காரணம் காட்ட வேண்டும்:-
1) ப்ரபத்தி அப்போதைக்குப் புலனளிக்காமல் தடைபட்டதற்குக் காரணத்தைக் காட்டி யாகவேண்டும்.
(2) வஸ்திர விருத்தியைத் திருநாமமே செய்ததென்றும். எம்பெருமான் செய்யவில்லையென்றும் ஆசார்யர்கள் அருளியிருப்பதற்குக் காரணத்தைக் காட்டியாகவேண்டும்.
(3) த்ரௌபதியின் இந்த சரணாகதியே நீண்டநாள் கழித்துப் பலித்கதற்கும் காரணத்தைக் காட்டி யாகவேண்டும்.
ஸ்ரீமத்பரமஹம்ஸ எம்பார் ஜீயர் ஸ்வாமி இவற்றில் முதலாவது விஷயத்திற்குப் புருஷகாரபுரஸ்ஸரண மில்லாமையைக் காரணமாகக் காட்டினார். இரண்டாவது விஷயத்திற்கு உபாயபுத்தியற்று கோவிந்த நாமத்தை உச்சரித்ததைக் காரணமாகக்காட்டினார். மூன்றாவது விஷயத்திற்குக் காரணம் காட்டவேயில்லை.
த்வாரகாநிலயாச்யுத ” என்ற பதத்தின் வயாக்யானத்தில் அபலைகளுக்கு முகங் கொடுத்த விடமன்றோ.. ஆச்ரிதையான ஒருத்தியை உபேக்ஷித்தால் அபிமதர்களான பலர் முகம் உனக்குப்போக வேண்டாவோ” என்று பல்லாயிரம் பெருந்தேவிமாரையும் திரௌபதி புருஷகாரமாகப் பற்றினாள் என்று பெரியவாச்சான் பிள்ளை காட்டியிருப்பதோடு எம்பார் ஜீயர் ஸ்வாமியின் பக்ஷம் விரோதிக்கிறது.
கண்ணன் ருக்மிணிப் பிராட்டியின் போக மயக்குக்களிலே அழுந்தி நினைவிழந்தமையாலே திரெளபதியின் கூக்குரல் அவன் செவியில் படவில்லை என்று அந்த ஸ்வாமி எழுதியிருப்பதற்கு ஒரு ஆதாரமுமில்லை; பொய்ச்சூது நடந்தபோது தான் ஸால்வயுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கண்ணன் கூறியதாகக் காட்டும் மாஹா பாரதம் வனபர்வம் பதின்மூன்றாமத்தியாயம் தொடங்கியுள்ள வசனங்களோடும் இது விரோதிக்கிறது.
திரெளபதிக்கு உபாயாந்தர ஸம்பந்தம் ஏற்பட இடமேயில்லை யென்று அவர் வாதம் செய்வது பாரதத்தில் பீஷ்மாதிகளை அவள் பற்றியிருப்பதாகக் காட்டியிருப்பதோடும் விரோதிக்கிறது. மேலும் உபாய புத்தியற்ற கோவிந்த நாமத்திற்குப் பலனாக வஸ்திரத்தை யளித்தான் என்று கொள்ளும் போது, எம்பெருமான் வஸ்திர விருத்தியைச் செய்யவில்லை என்று கூறும் ஆசார்ய ஸ்ரீஸுக்திகள் அமுக்கியமாகின்றன. இக்காரணங்களால் எம்பார் ஐயர் ஸ்வாமியின் பக்ஷம் ஏற்கத்தகாததாகிறது-
ஸர்வஸ்வகாரரின் பக்ஷத்தில் உயிர்நிலையான இம்மூன்று விஷயங்களுக்கும் காரணம் காட்டப்படாததோடன்றியில் ஆயிரக்கணக்கான ஆசார்யஸ்ஸூக்திகள் அஸ்வரஸமாகின்றனவாகையால் அவருடைய பஷமும் ஏற்கத்தகாத தென்பதை விரிவாக நிரூபித்தோம்.
அண்ணாவப்பங்கார் ஸ்வாமி நிர்வாஹத்தை அடியொற்றிய அடியேனுடைய நிர்வாஹத்தில. சரணாகதி யனுஷ்டித்த சில கணங்களுக்குப் பின் கோவிந்த நாமத்தில் திரௌபதிக்கு உபாயபுத்தி ஏற்பட்டதாக ஒப்புக் கொள்ளப்படுவதால் முதலிரண்டு விஷயங்களுக்கும் இது ஒரே காரணமாயமைகின்றது.
த்ரெளப்த்யா ஸஹிதா என்ற ச்லோகத்தில் லக்ஷ்மீ தந்த்ர வசனத்தின்படி ப்ராயச்சித்த ப்ரபத்தி யனுஷ்டித்ததாகக் காட்டுகையால் மூன்றாவது விஷயத்திற்கும் காரணம் காட்டப்பட்டதாகிறது.
இப்பஷம் ஒன்றிலேயே எல்லா மஹாபாரத ஸந்தர்பங்களுககும் எல்லா ஆசார்யஸ்ஸுக்தி களுக்கும் ஸ்வாரஸ்யம் ஏற்படுகிறது.ஒன்றுக்கும் அஸ்வாரஸ்ய லேசமும் இல்லை. வேறு எந்தப் பக்ஷத்திலும் இவை யெல்லாவற்றுக்கும் ஸ்வாரஸ்யம் ஏற்பட வழியேயில்லை. எவரையும் வெற்றி கொள்வதற்காக நாம் ஸித்தாஞ் ஜனத்தையும் ஸம்ரணத்தையும் எழுதவில்லை. ஆசார்ய ஸ்ரீஸுக்திகளை ஸம்ரக்ஷிக்கவே இவற்றை எழுதினோம். இவற்றின் வெற்றி ஆசார்யஸ்ஸுக்திகளின் வெற்றியே யொழிய அடியேனின் வெற்றியன்று.
ஸாராஸாரவிவேகஜ்ஞா: கரீயாம்ஸோ விமத்ஸரா: 1 ப்ரமாணதந்த்ரா: ஸநதீ கருதேவம் க்ருதிராத ராத்-[ஸராஸாரவிபாகம் அறிந்தவர்களும். மதாஸர்யமற்றவர்களும், ப்ரமாண பரதந்திராகளுமான பெரியோர்கள் இக் காலத்திலும் இருக்கிறார்கள் என்னும் கருத்தாலேயே ஆதரத்தோடு இந்நூல் இயற்றப்பட்டது. ]
————
ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –
அவதாரிகை
ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்
பிராட்டியினுடையவும்-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-30-என்றும்
த்ரௌபதி யினுடையவும்–
சிந்தயந்தி யினுடையவும் –
தத் பிராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா -தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா
சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-21/22-என்றும்
அத்யாவசாயத்தைப் பிரதி பாதிக்கையாலே இறே இவை பிரபல பிரமாணம் ஆயிற்று –
(பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
திரௌபதி ஸ்வ லஜ்ஜையை விட்டாள்
இவர்களுக்கு விளம்ப பேறு
சிந்தயந்தி அனைத்தையும் துறந்து உடனேயே பேற்றைப் பெற்றாள்)
இதில் மஹா பாரத உக்தமான த்ரௌபதியினுடைய சரணாகதி நிஷ்டையை வெளியிடுகிறது இஸ் ஸ்லோகம் –
அதாவது
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு பரிகரமான அத்யவசாயத்தைச் சொல்லிற்று ஆயிற்று –
அப்படியே இறே-
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புராகீதம் மஹாத்ம நா
மஹாத்யாபதி சம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -பார -சபா -90-42-என்றதும்
இவ் வத்யவசாயத்தைக் கொண்டு
பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் -பெரியாழ்வார் -2-1-1- என்றபடி
சபா மத்யத்திலே துச்சாசன க்ருஷ்டயாய் –
அதினாலே பரிபூதையான தான் –
அரஷகரான பர்த்தாக்கள் முதலானவர்களை ரஷகராக கூப்பிட்ட இழவு தீர
சர்வ ரஷகன் ஆனவன் தன்னை ரஷகனாகத் துணிந்து
அவனுடைய ரஷகத்வ உபயோகியான குணங்களைச் சொல்லி சரணம் புகுகிறாள் –
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1-
என் நான் செய்கேன் -ஸூவ ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
யாரே களை கண் -இதரர் ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
என்னை என் செய்கின்றாய் -இவன் ரக்ஷணத்தில் விஸ்வாஸம் மிகு விளம்பம் பொறுக்காதவள்-சங்கு ஏத்தும் கை -தொழுவிக்கும் கை -முப்படை -சங்க சக்கர கத பாணி
———–
இந்த்ரப்ரஸ்தத்தில் கண்ணன் இல்லை-சால்வனுடன் யுத்தம் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் சரணாகதி
இருந்தாலும் நேராக விளிச்சொற்களால் சரணாகதி
த்வயம் ஸமாசமாக ஆறு பதங்களாகவும் பிரித்து அஷ்ட பதங்களாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ மானே நாராயணனே -தவ -அத்தியாஹரம் செய்து கொண்டு -உன் திருவடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் -எதுவரை ராமச்சந்த்ரனுடைய திருவடிகளில் தலையால் தரிக்காமல் நான் உளனாக மாட்டேன் -பரதன்
லஷ்மணன் -நேராகவே பார்த்து அஹம் ஸர்வம் கரிஷ்யாமி
இங்கு கண்ணன் நேராக இல்லாவிட்டாலும் திரௌபதி விளிச்சொற்களாக அமைத்து சரணம் செய்கிறாள்
ஆபத்தில் நினைக்கச் சொல்லி வசிஷ்டர் உபதேசப்படியே நினைவில் மட்டும் இல்லாமல் மஹா விஸ்வாஸத்துடன் கூப்பாடு செய்து சரணம் -சரணம் அடைந்த அடியேனை ரக்ஷிப்பாய் என்ற பிரார்த்தனையுடன் அமைந்த ஸ்லோகம் -ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும் –
ஸபா பர்வத்தில் சரணாகதி கட்டத்தில் –சங்க சக்ர கதா பாணே ஸரணாகதி ஸ்லோகத்தைச் சொன்ன பின்பு
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாஸி யாதவ நந்தந
இமாம் அவஸ்தாம் ஸம் ப்ராப்தாம் அநாதாம் கிம்
உபேக்ஷஸே கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கவ்ரவை பரிபூதாம் மாம் கிம் நா ஜாநாஸி கேஸவ
ஹே நாத ஹே ரமாநாத வ்ரஜ நாதார்த்தி நாஸந
கவ்ரவர்ணவ மக்நாம் மாமுத்தரஸ்வ ஜநார்தந
கிருஷ்ண மஹா யோகின் விஸ்வாத்மன் விஸ்வ பாவந
ப்ரபந்நாம் கோவிந்த குருமத்யே அவ ஸீததீம் –90–44–47-அவன் திருவடிகளைத் தவிர் வேறே எதுவுமே உபாயமாகாதே
வாக்ய பிரபாவம் போல் அன்றி வாசக பிரபாவம் என்றும் அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும் என்றும் திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது இது-திருநாம வைபவம் அன்றோ -என்றும்- இருப்பதால்
ஸர்வ தர்ம பரித்யாஜ்யத்தில் திரு நாம சங்கீர்தனமும் அடங்கும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ-
புடவை சுரப்பது மட்டும் இவளது பிரார்த்தனை இல்லையே -மற்றவை கண்ணன் தானே அருளினான்
இவன் செய்தன அனைத்துமே இவள் கூந்தல் முடித்து இவள் மங்கள ஸூத்ரம் தரிக்க வைப்பதற்கே
ருணம் பிரவர்த்த -திரு உள்ளம் பின்னும் புண்பட்டே சென்றான் அவன் –
ராஜன் கூப்பிட்டதால் புண்பட்ட பரதனின் அநிஷ்ட நிவ்ருத்தியை உடனே திருப்பாதுகைகள் மூலம் அருளி பின்னர் 14 வருடங்கள் சென்ற பின்பே சேர்ந்து ஆலிங்கனம் செய்து அருளி பிராப்தி செய்தால் போல் இவளுக்கும் விளம்பி பலன்களை அருளினான்
உபாய அபாய ஸம் யோகே நிஷ்டயா ஹீயதே அநயா
அபாய ஸம் ப்லவே ஸத்யஸ் ப்ராயச்சித்தம் ஸமாஸரேத்
ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்
உபாயாநாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யேவ மேவ ஹி –லஷ்மீ தந்த்ரம் –17-92-93-94-என்று
உபாயாந்தரமாவது விஹிதத்தை அனுஷ்டியாமையும் நிஷித்தத்தை அனுஷ்டிக்கையும்
மற்ற உபாயங்களில் உபாய புத்தி வைத்தால் பிராயச்சித்தமாக மீண்டும் ஸரணாகதி செய்ய வேண்டும் –
மார்க்கண்டேயர் உபதேசப்படி
ஏவம் யுக்தாச்ச பார்த்தா யமவ் ச புருஷர்ஷபவ்
திரௌபத்யா சஹிதா ஸர்வே நமஸ் ஸக்ருர் ஜநார்த்தனம்-மீண்டும் ஸரணாகதி செய்யது பலன்களைப் பெற்றாள் என்பது தெளிவு-)
———
த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43 –
சங்க சக்ர கதா பாணே –
கைப்படை யில்லாதனையோ நான் கை கூப்பிற்று –(ஒன்றுக்கு மூன்று திவ்ய ஆயுதங்களைக் கைப்பற்றினவனை அன்றோ நான் கூப்பிட்டது)
த்வாரகா நிலய-
ஓர் இருப்பிடம் இல்லாதானையோ நான் நேர்ந்தது –
அச்யுத –
தன்னை அடைந்தாரை நழுவ விடுமவனையோ நான் அடைந்தது –
ந ச்யவந்தே யஸ்மாத் இத் யச்யுத –
கோவிந்த–
தன் ஆஸ்ரதரை நோவு பட விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயதித்தது-
காவ விந்தந்த்யேனம்-கா விந்ததி –
புண்டரீகாஷ-
கண்ணில்லாதவனையோ நான் காலைக் காட்டிற்று –
1-கண் 2-இரக்கம் –(தயா வாத்சல்யாதி குணங்களை கோட் சொல்லித்தரும் செந்தாமரைக் கண்ணன் அன்றோ)
ரஷமாம் –
ருசி இல்லாதேயோ நான் சரணம் புகுந்தது –
சரணா கதாம் –
ஆகையாலே பல சித்தியில் கண்ணழிவு வர ஹேது இல்லை என்று துணிகிறாள் –
1-சங்க சக்ர கதா பாணே –
நீ ஆயுத பாணியாய் இருக்க -நான் அம்பரத்தைப் பறி கொடுத்தேன் –
2-சங்க சக்ர கதா பாணே —
சுவர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை -திரு எழு கூற்றிருக்கை -என்கிறபடியே –
நீ சதா பஞ்சாயுதங்களைத் தரித்து இருக்கிறது சரணாகத ரஷணத்துக்கு அன்றோ –
சகல ஆபன் நிவ்ருத்திக்கும் ஹேது உன் கை தானே –
ஸூதர்சனம் சிந்தித்த மாத்ரமாஸூ -தஸ்யாக்ர ஹஸ்தம் ஸ்வயம் ஆருரோஹா -பார -பீஷ்ம -59-58-என்று
(கை கழலா நேமியான் –கருதும் இடம் பொருதும் கை நின்ற சக்கரத்தான்)
நீ கை வந்த சக்கரத்தென் கண்ணனாய் -திருவாய் -5-4-8- இருக்க
காப்பாரார் இவ்விடத்து -திருவாய் -5-4-6/7-என்று
நான் கை விரிப்பது என் –
நான் கை விட்டு இருக்க நீ கைக் கொண்டு இருப்பதற்கு பிரயோஜனம் வேண்டாவோ
பஞ்சாயுதங்களையும் தரிக்கிறது பரிபவத்தில் நொந்தாரை ரஷிக்க அன்றோ
(தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6-
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7-)
3- சங்க சக்ர கதா பாணே –
நான் கை விட்ட படியே -அவன் படை தொட்டான்
அங்கனம் தொட்ட படி இறே
மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்-தொழும் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -திருவாய் -3-1-9-
அப்படியே கூராராழி வெண் சங்கேந்தி -திருவாய் -6-9-1-வந்தருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து
(மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-)
பின்பு இவளுக்காக இறே –
ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ரவாயுநா ப்ருசம் ஸூபூர்ண உதர நிஸ் ஸ்ருத த்வநி ஜகத் ஸமாதான வியத் திகீஸ்வரம் ப்ரகம்பயாமாஸ யுகாத்யயே யதா -பாரத த்ரோ -73-58-அச்சுதனுடைய திருமுக வாயுவினால் மிகவும் நிறைந்த உட்புரத்தின் நின்றும் வெளிப்படும் ஒலியையுடைய அந்தப் பாஞ்ச ஜன்யம் பாதாளம் ஆகாயம் திக் பாலர்கள் ஆகிய எல்லாவற்றையும் ஊழிக் காலத்தில் போலே நடுக்கமுறச் செய்தது-என்றும்
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-என்றும்
கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்ததும் -பெரிய திரு -6-7-8- என்றும்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப -பெரியாழ்வார் -4-1-8- என்று செய்து அருளியதும்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்ததும் -திருவாய் -3-2-3-என்றபடி-(இவள் விரும்பிய ஸரணாகதி பலன்களை கண்ணன் அளித்து அருளினான்)
(பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8-
நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8-
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-)
4- சங்க சக்ர கதா பாணே-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ தெருளோம் அரவணையீர்-திரு விருத்தம் -33-
5- சங்க சக்ர கதா பாணே –
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் -திருவாய் -2-3-10- என்றபடி
இருக்கிற உனக்கு அபலையை ரஷிக்கை பணியோ-
நான் அழகுக்கு இட்ட வலை போல் ஆயிற்றே நீ இட்ட பத்திரம் –
(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-)
இனி அவன் நிலை கலங்கி வரும்படி அவன் நிலையைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்
1-த்வாரகா நிலயாச்யுத-
நீ -வண்டுவராபதி மன்னாய் –திருவாய் -5-3-6-
நழுவுதல் இன்றிக்கே நாட்டாளாய் நிற்க
நான் பிடித்தார்க்கு எல்லாம் பெண்டிர் ஆகவோ –
(அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-)
(உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-மா முனிகள் மன்னார்குடி திவ்ய தேசத்துக்குச் சமர்ப்பித்த பாசுரம்)
2-த்வாரகா நிலயாச்யுத-
பரமபத நிலையனையோ நான் கூப்பிடுகிறது
சாது பரித்ராணம் பண்ண வந்த இடத்தே யன்றோ
அயர்வறும் அமரர்களுக்கு முகம் கொடுத்த இடம் அன்றே நான் அர்த்தித்தது
அபலைகளுக்கு முகம் கொடுத்த இடம் அன்றோ –
பல்லாயிரம் பெறும் தேவிமாரோடு பௌவம் எறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்திலே -பெரியாழ்வார் -4-1-6- என்கிறபடியே தேவிமார்களை நழுவ விடாமல் இருக்கையாலேயே அச்யுதனாய் திருத் துவாரகையில் இருப்பவனை அன்றோ கூப்பிடுகிறேன் –
(பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 –பல்லாயிரம்-ஷோடச ஸ்த்ரீ -பதினாறாயிரம் )
ஏகஸ்மி னநேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முனே
ஜக்ராஹ விதிவத் பாணீன் ப்ருதக் கேஹீஷூ தர்மத –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-
ஆஸ்ரிதையான ஒருத்தியை உபேஷித்தால் அபிமதர்களானவர்கள் பலர் முகம் உமக்குப் போக வேண்டாவோ –( ப்ருதக் கேஹீஷூ-தனித் தனியாக வீடுகள் -தனித் தனியாக திவ்ய மங்கள விக்ரஹம் -க்ருஹஸ்த தர்மம் கடைப் பிடித்த வ்ருத்தாந்தம்)
3- த்வாரகா நிலயாச்யுத –
நீயும் என்னைப் போலே நிலை இழந்து இருக்கிறாயோ –
அவர் ஒரு நிலை நின்றது என்பரேல்-
திரை பொரு கடல்சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-8-என்கிறபடியே
அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான் ஆயிற்றே –(இதில் இருந்து திரௌபதி யானவள் தனது ஸரணாகதிக்குப் பலனாக –அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான்-ஸத்ரு ஸம்ஹாரத்தையும் ராஜ்ய ப்ராப்தியையும் விரும்பினாள் என்று புலப்படுகிறது)
(திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –)
4-த்வாரகா நிலயாச்யுத
ஆராய்ச்சியைத் தவிர்ந்த அதர்மமான சபை போல் ஆயிற்றே உன் தர்ம சபையும்
5- அச்யுத –
என்று அவனை அல்லாதாரை என்றும் தன்னை நழுவாமல் நோக்கும்படியான பெயரைச் சொல்லுகிறாள்
அச்சுதன் இறே அடியவர் வினை கெடுப்பான்
அச்யுதாஹம் தவாஸ்மீதி ஸைவ ஸம்ஸார பேஷஜம் –என்கிறபடியே (அச்யுதனே நான் உனக்கு அடியேனாகிறேன் என்பதே ஸம்ஸார நோய்க்கு மருத்தாகும்)-என்கிறாள்
மித்ர பாவத்திலே -ந த்யஜேயம்-யுத்த -18-3- என்கிற நீ
சரணாகதியான என்னை சத்ருக்கள் நலியும்படி காட்டிக் கொடுத்து இருப்பதே –
அவசன்னையாய் அநாதையாய் இருக்கிற என்னை நெகிழுகையே ப்ராப்தமோ
நீயும் உன் ஸ்வ பாவத்தில் நெகிழில் அன்றோ என்னுடை நெகிழ வேண்டுவது-
என்னுடைய வஸ்திரம் இடுப்பை விட்டு நெகிழ்வது அவன் ஸ்வ பாவம் நெகிழ்ந்தால் தானே
என்னுடை நெகிழ்ந்தோ உன் பேர் உண்டாவது -(கைவிட்டால் அச்சுதன் பேர் நிலைக்காதே
நாராயணன் பேர் நிலைக்க வேண்டாமோ என்றால் போல் இங்கும்)
(அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-)
(நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-)
6-சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத –
தமசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-15-என்றாள் ஒருத்தி -மண்டோதரி —
இவளும் இப்படியே பேசுகிறாள்
(அவள் வைகுண்ட நிலையா என்றாள்
இவள் துவாரகா நிலையா என்கிறாள்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகாதோ மதுராம் புரம் தானே)
ஜாதோ அஸி தேவ தேவேச சங்க சக்ர கதாதர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1- என்னக் கடவது இறே –
பிராகார சர்வ வ்ருஷ்ணீ நாம் -பார -சபா -36-12-என்று இருக்கும் நீ
இவர்களுக்கு கடலை அரண் செய்து கொடுத்து சத்ருக்கள் கையில் காட்டிக் கொடாமல்
காக்கும் இயல்வினனாய் இருக்கிற உனக்கு சத்ருக்கள் கையிலே அகப்படுவது என் -செய்வது என்-
பின்பு –ரதம் ஸ்தாபாய மே அச்யுத –ஸ்ரீ கீதை -1-21- என்னும்படி இறே இவளுக்காக சாரதியாய் வ்யவஸ்திதன் ஆனதும்
நீ கை கழலா நேமியானாய் இருக்க
என் மொய் குழல்கள் இரண்டும் விழும்படி யாவதே என்று
பொற் சக்கரத் தரியினை யச்சுதனைப் பற்றுகிறாள் –
(மோக்ஷ ப்ராப்திக்குத் தான் ஸக்ருத் பிரபத்தி
இவள் அபேஷிதம் அரசை அவித்து அரசை அருளுவதே-கோவிந்த நாம சங்கீர்த்தனமே உபாயம் என்று தப்பாக இருந்து பின்பு-பிராயச்சித்தமாக மீண்டும் சரணாகதி செய்கிறாள்)
(இது வரை பரத்வம் -ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டியவை
மேல் ஆஸ்ரித ஸுகர்ய ஆபாத குணங்கள் -ஸுலப்யாதிகள்)
1-கோவிந்த-
அச்யுதன் என்று சொன்ன பின்பும் உதவக் காணாமையாலே அடுத்த படியாக அவனை அரை குலையத் தலை குலைய வருந்தியோடி வரச் செய்வதாய்
இந்த்ரனாலே கோவிந்த பட்டாபிஷேகம் செய்யப் பெற்ற அவனுக்கு
முடி சூடின பேரான கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு முறையிடுகிறாள்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நாம் –
ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பத்தி –பார -உத் -47-39-என்று
அவன் திரு உள்ளம் புண்படும்படி உயர் நிலையிலே ஒன்றைச் சொல்லிற்று –
(உயர் நிலையிலே-ருணம் –ருணம் வ்ருத்தமிவ –ருணம் பிர வ்ருத்தமிவ)
2- கோவிந்த –
நீ கோவித்த அபிஷேகம் பண்ணி கோப்தாவாய் இருக்க
இவ்விடம் அராஜகமாய் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என் –
இவளுக்கு புடவை சுரக்கும் திரு நாமம் இருக்கும் படி–
3- கோவிந்த –
நீ ஆஸ்ரித ரஷணத்தில் தீஷித்து இருக்க
க்ருஷ்ணாஸ்ரய—கிருஷ்ண பல—பார த்ரோண -183-24-என்று இருக்கிற என்னை
கிருபை பண்ணாது ஒழிவது என்
நாராயணா என்று உன் சிறு பெயரையோ நான் சொல்லிற்று(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் –சங்கு சக்ர கதா பாணி இங்கு-சிறு பேர் அழைத்தனம் –சீறி அருளாதே-பிரமாத -ப்ரணய -அஜானாம் மூன்று காரணங்கள் அர்ஜுனனும் விஸ்வ ரூபம் கண்டதும்)
நாமைதத் தவ கோவிந்த நாம த்வத் தஸ் சதாதிகம் -என்று
உன்னிலும் அதிகமான உன் பேரை அன்றோ நான் சொல்லிற்று
சக்ருத் சம்ருதோ அபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதை க்ருதம்-பாப ராசிம் தஹத் யாஸூ தூலராசி மிவ அநல -என்று
சகல ப்ரவ்ருத்தி பண்ண வற்றானது உன் திரு நாமம் அன்றோ –
4- கோவிந்த –(கோ –மயிர்முடி குழல்)
நான் குழல் பேணாமல் இருக்க –
நீ குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் -பெரியாழ்வார் -3-6-11-என்றபடி
கோவிந்தனாய் மயிர் பேணி இருப்பதென் –
(குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே -3-6-11 – –)
5- கோவிந்த
நீ முடி சூடிவித்திருக்க நான் –
சாஹம் கேசக்ரகம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ -பார உத் 81-24-என்னும்படி யாவது என்
என்று சொல்லி –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -நாச் -8-3- என்றபடி
குண ஜ்ஞானத்தாலே நிர்ப் பரை யானாள்-
பின்பு இறே மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்ததும்
(இதில் இருந்து திரௌபதி இந்தக் கோவிந்த நாமத்தைக் கூறும் பொழுது உபாய புத்தியைக் கைக் கொள்ள வில்லை என்று புலப்படுகிறது-முன்பு கோவிந்த நாமம் புடவை சுரக்கும் என்று நினைத்தவள்
இப்பொழுது ஆவி காத்து இருக்கவே -ஆற்றாமைப் போக்கவே திரு நாம சங்கீர்தனம்
முழுவதும் உபாய புத்தி வைக்க வில்லை
அபலை போல் சந்தேகத்தில் அலை பாய்ந்து இருக்கிறாள்)
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 -6-
6- கோவிந்த –
ஜகத் ஹிதிதார்த்தமாக -வந்து அவதரித்தவன் அல்லையோ –
7- த்வாரகா நிலய கோவிந்த –
துவாராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலனை -நாச் -4-8-கூறுகிறாள்
(ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-)
8- கோவிந்த –
கோவிந்தன் -பசு மேய்த்தவன் -என்றபடி
கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் -திருவாய் -4-4-5-
நீ பசு மேய்க்கக் கற்ற வத்தனை யல்லவோ
பரிபவத்தில் ரஷிப்பது உனக்குப் பணியாய் இருப்பது என்
(கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-)
9- கோவிந்த –
என்னுடைய ரஷணத்துக்கு மலை எடுக்க வேணுமோ
கண்ணாலே நோக்க அமையாதோ
கோவிந்தம் கோபதிம் தேவம் சந்ததம் சரணம் வ்ரஜ -என்கிறது
இவள் அனுஷ்டானத்தை பின் செல்லும்படியாய் இறே இருப்பது
விதயச்ச வைதிகா த்வதீய கம்பீர மநோநு சாரிண-ஸ்தோத்ர ரத் -20-
(த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||ஶ்லோகம் 20 –
ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.)
1- புண்டரீகாஷ-
பாஞ்சால்யா பத்மா பத்ராஷ்யா –
நான் கமலக் கண் முத்தம் சோரா இருக்க
கிமர்த்தம் நேத்ராப்யாம் –சுந்தர 33-4-என்கிறபடியே
உன் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காது ஒழிவது என்
(பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-)
2- புண்டரீகாஷ-
என்னுடைய ஆபத்துக்கு
அவலோக நாத –நே ந போயோ பாலயாச்யுத -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-20-16-
நம் அன்றோ அபேஷிதம்-
3- கோவிந்த புண்டரீகாஷ
க்ருஷ்ணம் கமல பத்ராஷம் -என்னக் கடவது இறே-
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன்ன பரமம் தனம் -அந்யதா
ஹி விசேஷணே கஸ்த்வா மர்ச்சிதும் அர்ஹதி -பார -உத் -91-44(பரபரப்பே தனம்-கோவிந்த)
என்ற அனந்தரம்
பீஷ்ம த்ரோண அதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூ தன –கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்றான் துரியோதனன் இறே –(புண்டரீகாஷ)
4-புண்டரீகாஷ
நான் கண் கலங்கி இருக்க- நீ கண் வளர்த்தியோடே இருப்பது என்-
5-புண்டரீகாஷ –
நீ கண் யுடையவனாய் இருக்க -நான் கண்டார் கண் பார்வைக்கு இலக்காய்க் கண் கலங்குவது என் –
6- புண்டரீகாஷ –
நான் கண் சிவந்து இருக்க
நீ உன் முகத்தன கண்கள் அல்லவே(வாய்) -நாச் -2-5-இருப்பது என் –
(வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-)
7-புண்டரீகாஷ –
அவன் கண் செம்பளித்து இருந்தான்
பின்பு கண்ணாலே அலர விழித்ததும் இவளைக் குளிர நோக்கிற்றும் –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன –
மோஷயித்வா தநும் ப்ராப்த கிருஷ்ண ஸ்வஸ்தா நமுத்தமம் -பார மௌசல-9-34-இத்யாதி
அனுகூல ரஷணத்துக்கும் பிரதிகூல நிரசனத்துக்கும் (மண்ணின் பாரம் நீக்கவும் பேற்றை அளிக்கவும்)பரிகரம் ஒன்றே யாயிற்று –
8- புண்டரீகாஷ –
தாமரைக் கண்ணாவோ தனியேன் தனியாளாவோ -திருவாய் -7-6-1- என்கிறாள்
(பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-)
(பிரபத்தி ஸூர்யன் –
திருநாம சங்கீர்த்தனம்–உபாயாந்தரம் -மேகம் மூட
மீண்டும் பிரபத்தி)
9-புண்டரீகாஷ -அச்யுத –
தாமரைக் கண்ணா அச்யுதா -என்கிறாள்
10- அச்யுத புண்டரீகாஷ –
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க் கண்ணன் -திருவாய் -4-5-3–என்கிறாள் –(கடாஷித்து நழுவ விடாமல் அருளுபவர்)
(வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-)
11- புண்டரீகாஷா –
கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-7- என்கிற
சுருதி அர்த்தம் இவளுக்குக் கையாளாய் இருக்கும் படி –
12-புண்டரீகாஷ-
ஜிதந்தே புண்டரீகாஷ -ஜிதந்தே -என்று
இவள் முக்த அனுபாவ்யமான கண்களிலே ஜிதையாய் இருக்கும்படி
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-
13-புண்டரீகாஷ –
ச ஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தி தே ஜனார்த்தன -பார -வன -192-51-என்று
இவள் பேசினபடி கேட்டுக் கொண்டு இருக்குமே –
வழி பறிக்கும் தசையிலே தாய் முகத்திலே விழிக்க ஆசைப்படுவாரைப் போலே
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனைக் காண வாயிற்று இவள் ஆசைப்படுகிறது
14-சங்க சக்ர கதா பாணே புண்டரீகாஷ –
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் -திருவாய் -7-2-1- என்கிறாள் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
15- புண்டரீகாஷ சங்க சக்ர கதா பாணே-
பங்கயக் கண்ணன் என்கோ —சங்கு சக்கரத்தான் என்கோ -திருவாய் -3-4-3-என்கிறாள்
(பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-)
16-புண்டரீகாஷ –
பாஹி மாம் புண்டரீகாஷ ந ஜாநே சரணம் பரம் -ஜிதந்தே -8-என்கிறாள்
(அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-
புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –)
ரஷமாம் —
1-ரஷ அபேஷை யுடைய என்னை –
2- அநாதையான என்னை –
3-அபலையான என்னை –
4-ஆஸ்ரிதையான -பலமற்ற -என்னை
4-அநந்ய சரணையான என்னை
ரஷமாம் –
ரஷிக்கை யாவது
விரோதியைப் போக்குகையும் –
அபேஷிதங்களைக் கொடுக்கையும் –
அலமன்னு மடல் சுரி சங்கம் எடுத்து அடலாழியினால் அணியாருருவின்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடுவாள் அமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நிலா மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –பெரிய திரு -2-4-3-
1-சரணாகதாம்-
சரணம் அடைந்த இவளுக்காக இறே-பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்ததும் –
இவளுக்கு வஸ்த்ர வர்த்தநமும்
சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்
ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்று
தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னுமிது மிகையாதலின் -திருவாய் மொழி-9-3-9-என்றபடி –
அத்தலைக்கு மிகையாய் இறே இருப்பதும்
(தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-–)
2-சரணாகதாம் –
சத்ருவாகிலும் விட ஒண்ணாதே ரஷிக்க வேண்டும்படியான சரணாகதி தர்மத்தை அனுஷ்டித்தேன்
தஸ்மாதபி வைத்தியம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும்
சரணாகத அரி ப்ரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -யுத்த -18-28-என்றும் சொல்லக் கடவது இறே
காதுகனான வேடன் விஷயத்திலே திர்யக்கான பட்ஷி தன்னை அழிய மாறி ரஷித்தபடி கண்டால் –
சரணாகத வத்சலனான -சுந்தர -21-21-நீ
சரணாகதையான என் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்
இவன் இப்படியே நாதிஸ் வஸ்த மநா -என்று இழவோடே எழுந்து அருளிற்றும்
3-சரணாகதாம் –
ஆண் பிறந்தார்க்கு எல்லாம் அடைக்கலமாய் இருக்க பெண் பிறந்தார் அடைக்கலம் புகுந்தால்
அஞ்சேல் என்னாது இருப்பது என்-
மாஸூசா -என்று ஒரு வார்த்தை அன்றோ அருளிச் செய்ய வேண்டுவது –(உனக்கு ஒரு சொல் எனக்கு வாழ்வு)
சங்க சக்ர கதா பாணே –சரணாகதாம் –
1-நீ ரஷண பரிகரங்களை யுடையனாவது –
2-ஆசன்னன் ஆவது –
3-ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாவது –
4-ஆஸ்ரித ரஷணத்திலே தீஷித்து இருக்குமவனது
5-கண் யுடையவனாவது
6-நான் ரஷக அபேஷை யுடையவளாய் சரணம் புகுவது
ஆகையாலே ரஷிக்கக் குறை என் –
(நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–
நம்பியை-என் சொல்லி மறப்பேனோ
தென் குறுங்குடி நின்றவனை -என் சொல்லி மறப்பேனோ
அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை-என் சொல்லி மறப்பேனோ
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை என் சொல்லி மறப்பேனோ
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ)
சங்க சக்ர கதா பாணே -என்கையாலே –
ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் (ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்கள்)சொல்லி
த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷ -என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் (ஆஸ்ரித ஸுவ்கர்ய ஆபாத குணங்கள்)சொல்லி
ரஷமாம் -என்கையாலே
அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி
சரணாகதம் -என்கையாலே
உபாய அத்யவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது –
இத்தால்
லஜ்ஜா புரஸ் ஸரமாக இதர உபாய த்யாகம் சொல்லி
சித்த உபாய ஸ்வீகாரம் பண்ணுகை அதிகாரி க்ருத்யம்-என்றது ஆயிற்று –
—————————————————————————————–
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாசி யாதவ நந்தன
இமாமவஸ்தாம் சம் ப்ராப்தாம நாதாம் கிம் உபேஷஸே
கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கௌரவை பரி பூதாம் மாம் கிம் ந ஜாநாசி கேசவ
ஹே நாத ஹே ரமா நாத வ்ரஜ நாதார்த்தி நாசன
கௌரவார்ணவ மக்நாம் மஹா யோகின் விச்வாத்மன் விஸ்வ பாவன
பிரபன்னான் பாஹி கோவிந்த குரு மத்யே அவசீததீம் -பார -சபா -90-44/45/46/47-
மனக் குறை வெளியிட்டு பற்பல திரு நாமங்களை அனுசந்திக்கிறாள் –
வன வாசத்தின் போது ஸ்ரீ கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இரண்டு தடவை வருகிறான் –
அதில் முதல் தடவை வந்த போது
நைவ மே பதய சந்தி நபுத்ரா ந பாந்தவா ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது சூ தன —
யே மாம் விப்ரக்ருதாம் ஷூத்ரைரு பேஷத்வம் விசோகவத்-ந ச மே சாம்யதே துக்கம் கர்ணோ யத் ப்ராஹசத் ததா -பார -ஆர -12-128/129–
யாரும் இல்லை -சரணாகதி பலன் கிட்ட வில்லை என்கிறாள்
உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அனயா-அபாய சம்ப்லவே சத்ய ப்ராயச்சித்திம் சமாசரேத்-
ப்ராயச்சித்திரியம் சாஸ்திர யத் புன சரணம் வ்ரஜேத்-உபாயாநாம் உபாயத்வ சவீ காரேப் ஏவ மேவ ஹி-ஸ்ரீ லஷ்மி தந்த -17-92/93/94-
மீண்டும் சத்தியபாமை பிராட்டி யோடு எழுந்து அருளி –
மார்கண்டேய பகவானையும் தர்ம உபதேசம் -செய்யத் தூண்ட -அவரும்
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பார ஆர -192-56–என்ன
ஏவமுக்தாச்ச தே பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-
த்ரௌபத்யா சாஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம் -பார -ஆர -192-57- என்று சரணம் அடைய
ச சைதான் புருஷவ்யாக்ர சாம்நா பரம வல்குநா
சாந்த வயாமாச மாநார்ஹோ மன்யமாநோ யதா விதி –பார -ஆர -192-58-என்று
திரு நாம சங்கீர்தனத்தால் தடை பட்ட சரணாகதி பிராயச் சித்தம் செய்யப் பட்டதும் தடை நீங்க –
சாஸ்திர விதியை நினைத்து சமாதானம் அடைந்தான்
இத்தையே பெரியவாச்சான் பிள்ளை பல கால் பின்பு பின்பு என்று அருளிச் செய்கிறார்-
இவளுக்கு புடவை சுரந்தது திரு நாமம் இறே-
நம் பேர் தன் கார்யம் செய்தது இத்தனை போக்கி
நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோம் இறே -என்று இருந்தான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-
முமுஷூப்படி -அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
ஸ்ரீ வசன பூஷணம் -திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் -த்ரௌபதி வஸ்த்ரார்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
உபாய புத்தி யுடன் திரு நாம சங்கீர்த்தனம் கூடாது இறே
ஸ்ரீ கண்ணபிரான் விளம்பித்து மீதி பலன்களை அளித்தது ஸ்ரீ கீதா சாஸ்திர அவதரணம் முதலியவற்றைக் கருதியே
திரௌபதிக்கு வந்து கழிந்த உபாயாந்தர சம்பந்தம் ஏற்பட்டது என்றே கொள்ள வேண்டும் –
திரு நாமம் சொல்லுவதும் பிரபத்தியும் ஒன்றாக பூர்வர்கள் கருத வில்லை
பெரிய திருவந்தாதி -53 வ்யாக்யானத்தில் –
தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளத்திலே தனிசு பற்றது இருக்குமா போலே -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் –
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம் -பார -உத் -47-39-
த்ரௌபதி சரணம் செய்ததுக்கும் புடவை சுரந்ததுக்கும் இடையில் உள்ள சில கணங்களிலே
ஆபத்தால் கலங்கி அவனிலும் விஞ்சிய கோவிந்த நாமமாவது நம் மானத்தைக் காப்பாற்றாதா என்னும் நினைவுடன் –
உபாய புத்தியால் -உச்சரித்து விட்டாள்
இதுவே எம்பெருமான் திரு உள்ளத்தில் புண் பட காரணம்
இந்த உபாயாந்தர சம்சர்க்கம் பரம ஆபத்தினால் விளைந்தது ஒன்றே –
அதனால் தோஷமாக கொள்ள வில்லை-
வாச்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -உத்க்ருஷ்டம் சொல்ல வந்தது
புஷ்ப பிரபாவம் போல் அன்று பரிமள பிரபாவம்
பிஷக்கின் பிரபாவம் போல் அன்று பேஷஜத்தின் பிரபாவம் போலே –
குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே
புண்டரீகாஷா -இக் கடாஷம் கொண்டு நித்ய ஸூரிகளை நோக்க இருக்கிறாயா -என்று எல்லாம் சொன்னாளே –
பின்பே கலங்கினாள்-
நாராயண சப்தார்த்தத்தில் ஏக தேசத்துக்கு கோவிந்த சப்தார்த்தத்துக்கு -செய்த படி கண்டால்
இதன் பிரபாவம் கிம்புநர் ந்யாய சித்தம் இறே -மா முனிகள் திரு மந்திர பிரபாபம் சாதிக்கிறார்
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply