முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-
கடலுக்குள் பட்டதொரு த்ருணம் ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக் கடந்து அலையுமா போலே -ஓர் அழகு ஓர்-அழகிலே தள்ளக் கிடந்து அவற்றை அனுபவிக்கிறார்-சேஷித்வ ஸூசகமான அழகை அனுபவித்து தம் சேஷத்வத்துக்கு அனுரூபமான திருவடிகளின் அழகை அனுபவிக்கிறார் –மருளில் வ ண் குருகூர் வ ண் சடகோபன் -என்ற தத்வ ஹிதங்களில் சம்சயம் அற்ற இவருக்கு இது ஒரு நித்ய சம்சயம் விளைந்தது
விஞ்ஞான பலமாய் விஷய வை லக்ஷண்யம் அடியாக பிறந்த சம்சயம் ஆகையால் நித்யமாகச் செல்லும் என்கை –
திருமாலே கட்டுரையே —இதுவும் ஒரு சேர்த்தி அழகு இருக்கிறபடி-இப்படி இன்று அனுபவிக்கப் புக்க இவரோடும் நித்ய அனுபவம் பண்ணுபவர்களோடு அவன் தன்னோடு வாசியில்லை இச்சம்சயம் அனுவர்த்திக்கைக்கு-தமக்கு இந்த சம்சயம் அறுதியிட ஒண்ணாதாப் போலே அவர்களுக்கும் என்று இருக்கிறார்-கட்டுரையே -சொல்ல வேண்டும் என்றபடி -ஷேப உக்தி -சொல்ல முடியாது என்றபடி –அறிந்தேன் என்பவன் அறியாதவன் ஆகிறான் –
————-
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-
முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை-இவை இருக்கிற படி –நின் கண் -என்கையாலே -உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது-பாதம் என்று -அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது –-கை என்று தாம் நடு வனுபவித்த அழகுக்கு உப லஷணம் –ரத்னம் அறியாதான் ஒருவன் குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது -என்றால் -அவ்வளவாக இ றே இவனுக்கு இதில் பிரதிபத்தி –
அவ்வழியாலே அதுக்கு அவத்யமாம் இ றே -அப்படியே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் இங்குத்தைக்கு அவத்யமாகவே தலைக் கட்டும் –இங்குத்தைக்கு புன்மையைக் காட்டுகைக்கு நிபந்தனம் என் -என்னில் பரஞ்சோதி –நாராயண பரோ ஜ்யோதி -என்கிறபடியே நீ சர்வ வஸ்து விசஜாதீயன் ஆகையாலே –
——————
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-
உன்னுடைய சங்கல்ப லவ லேசத்தாலே கார்யகரமாய்க் கொண்டு விஸ்த்ருதமாக நின்றுள்ள லோகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி –மேன்மையை எல்லை காணிலும்-நீர்மை தரை காண ஒண்ணா தாய் இருக்கிறதே-நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய்யூண் என்னும் ஈனச் சொல் -திரு விருத்தம் -98-என்று நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது சொல்லத்தானே போகாதது இறே- -ஸூலபதையால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது-லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ் ஸூம் உன்னது–ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ்ஸூம் உன்னது
பண்புரைக்க மாட்டேனே-பண்பு -படி -உன் படிகள் இவையான பின்பு என்னால் பேசப் போகாது-அனுபவித்துப் போம் இத்தனை- என்கிறார் –
———–
மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க–உன் இடத்திலேயான -உன் பக்கலிலே யான -அன்றிக்கே -மாட்டு -என்று மாடாய் -நிதி போலே ஸ்லாக்க்யமான என்னுதல்-
மாட்டு என்று மட்டாய்-மத்வ உத்ஸ – என்று மதுஸ் யந்தி யாகையாலே நிரதிசய போக்யம்-என்னுதல் – –மாட்டு -இடம் -தேன் -நிதி மூன்று பொருள்கள்
மாஞாலம் -இத்யாதி-இம் மஹா பிருத்வியானது இங்கனே நோவு பட்டே போமித்தனை ஆகாதே
1–கர்ம வச்யர் ஆகையாலே தானே உன் பக்கலிலே நெஞ்சை வைக்க மாட்டிற்றிலர்-
2–அதுக்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய் –
3–நீயோ நிரதிசய போகய ஜாதத்திலே பிரவணனானாய்-இனி சம்சாரிகளுக்கு க்லேசமேயோ சேஷித்தது –-உன்னை விட்டால் பின்னை புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63–என்னும் விஷயங்களிலே இவர்கள் பிரவணராய் இங்கனே நோவு பட்டே போம் இத்தனையாகாதே –படிக்கட்டு-விஷாயாந்தர -நினைவு -சங்கம் பற்று -விருப்பம் -பேராசை கிடைக்காமல் –கோபம் -சம்மோஹம் மயக்கம்-நினைவு போகும் -புத்தி நாசம் -ஸ்வரூப நாசம் –பிரானே தமக்கு பகவத் விஸ்லேஷம் கிலேச கரமாய் இருக்கையாலே எல்லாருக்கும் இப்படி இருக்கும் என்று இருக்கிறார்–
————
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-
மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி -நாட்டார் இழவு நடுவு பிரசங்காத் ப்ரஸ்துதம் இத்தனை – கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -என்று சொல்லுவான் என்-நாட்டார் பேர் இழவு கிடக்கிடீர் -மயர்வற மதிநலம் அருளப் பெருகையாலே நீர் வ்யாவ்ருத்தரே – நாட்டாரில் வ்யாவ்ருத்தரான அளவேயோ -விண்ணுளாரிலும் வ்யாவ்ருத்தரே -நீர் நம்மைப் பேச மாட்டீரோ என்ன – என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினாய் இத்தனை அல்லது உன்னை சாவதி ஆகிற்றிலையே -என்கிறார் –
திரு மேனியைக் கண்டவாறே -அரிய தப பலமோ -என்று தோற்றி இருக்கும் -ஆபாத ப்ரதீதி –
சிறிது அவஹாகித்தவாறே -ஒரு தப பலம் அல்ல -சஹஜ பாக்ய பலம் -என்று தோற்றி இருக்கும் -நிர்ணயம் -காலத் த்ரயத்திலும் லோகத்தை ஒருங்காக ஒருமடைப்பட ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை எங்கே முடிய நான் பேசுவேன்-உடையவன் ஆகையால் எல்லாவற்றையும் உடைய உன் சர்வ ரக்ஷகத்வம் இவற்றை எங்கே நான் முடிவு காண –
—————
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-
எங்குலக்க ஓதுவன் -என்றார் -வேதங்கள் நம்மைப் பேசா நின்றனவே -உமக்குப் பேசத் தட்டு என் -என்ன-அவையும் இவ்வளவு அன்றோ -தகையல்லால் பிறிதில்லை -செய்தது -வேதங்கள் உன்னைப் பேசி சத்தை பெற்றன-என்கிறார் –
ஸ்ரீ ராமாயணம் என்றால் ப்ரஹ்ம லோகத்தில் அநேகம் க்ரந்தமாய் இருக்கச் செய்தே இங்கு இருபத்து நாலாயிரமாய் இரா நின்றது-
பூவின் மேல் மாது வாழ் மார்பினா-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ –தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வர்த்திக்கும் மார்வை உடையவனே –
பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –
என் சொல்லி யான் வாழ்த்துவனே-இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னாலே பாசுரம் இட்டு சொல்லலாய் இருந்ததோ –சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –
——————
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-
உன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டரானவர்கள் உன்னை ஏத்த என்ற ஒரு பொருள் உண்டோ –இப்பங்களத்தை விட்டு கால்கடியரானவர்கள் ஏத்தப் புக்கால் எல்லை காணப் போமோ -கால் கடியார் -சக்தர் –இவர்கள் ஏத்தும் அளவோ இவன் குணங்கள் என்ன — அவ்வழியாலே அவத்யமாய்த் தலைக்கட்டாதோ –
————-
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-
இவனைப் போல் அன்றியே கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மாவை உத்ப்ரேஷித்து-அவன் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யமாம் அத்தனை அன்றோ – என்று பட்டர் அருளிச் செய்யும் படி-
மலராது குவியாது -என்கிறது கீழும் மேலும் அந்வயிக்கக் கடவது-சம்சாரிகள் கர்ம நிபந்தமாக பரிக்ரஹித்த தேஹத்துக்கு வரக் கடவதான ஸ்வரூப அந்யதா பாவமும் இல்லை இவன் திருமேனிக்கு – அவர்கள் ஞானத்துக்கு வரக் கடவதான ஸ்வபாவ அந்யதா பாவமும் இல்லை இவனுடைய ஞானத்துக்கு -என்கை-தம்முடைய சேஷத்வ அனுரூபமாக உன் திருமேனி என்னாதே உனபாதம் என்கிறார்-திருமேனி -சோதி சொல்லாமல் –சுடர் உடம்பாய் -தொடங்கி -சேஷ பூதர் என்பதால் –பாத மலர்ச் சோதி மழுங்காதே -என்கிறார்-மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி-ஹேய பிரதி படமான உன்னுடைய திருவடிகளின் அழகு –
—————
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
கையில் திரு வாழி இருந்தது அறிந்திலன்-அறிந்தான் ஆகில் இருந்த விடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யம் கொள்ளலாம் இறே-ஆர்த்த நாதம் செவிப் பட்டவாறே -தன்னை மறந்தான் -கையும் திரு வாழியுமான தன்னை -தான் ரஷகன் என்பதை மறக்க வில்லை –
நினைத்தாலும் இருந்த இடத்திலே இருந்து துக்க நிவ்ருத்தி பண்ண ஒண்ணாது
தொழும் காதல் களிறு ஆயிற்று-கையும் திரு வாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிறவன் ஆயிற்று –காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் -சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது-சங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடி வேகம் இருப்பது-அவன் வேகம் போராமல் அவனையும் இடுக்கிக் கொண்டு இறே வந்து விழுந்தது -ஹூம் ஹூம் -பட்டர் –-தோன்றினையே -இடர் பட்டார் தாமாய்-தமக்குத் தோற்றினால் போலே காணும் இருக்கிறது –மலருலகில்-திரு நாபீ கமலத்தை அடியாக யுடைததான சம்சாரத்தில் -மலரும் உலகம் -மலரை அடியாக கொண்ட உலகம் –மறையாதே என்ற இதுக்கு மறையும் மறையும் -என்று சிற்றாட் கொண்டான் வார்த்தை —பெரு முதலியாய் இருந்து வைத்து திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு தானே தடுமாறி கொண்டு வந்து உதவும் என்னும் இவ் வழகிய தேஜஸ்ஸை இழந்தாய் ஆகாதே –
————–
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-
மறை என்றும்-வேதம் என்றும் இரண்டு படியாகச் சொல்கிறது –
பாஹ்யராய் நாஸ்திகராய் இருப்பாருக்கு தன் படிகளை மறைக்கையாலும்
ஆஸ்திகராய் இருப்பார்க்கு தன் அர்த்தத்தை வெளியிட்டுக் காட்டுகையாலும்-வேதங்களிலே சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே-சர்வவித ரஷணங்களையும் பண்ணிணவனே-விஷம சிருஷ்டிக்கு அடியான கர்ம விசேஷம் இறே சேதனர் பண்ணி வைப்பது-யௌ கபத்யம் அனுக்ரஹ கார்யம் -ஒருவன் ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி -அதன் கழுத்திலே காக்கைப் பொன்னித் தொற்றி -அதன் தலையிலே காலை வைத்து-இது என்னை வணங்கிற்று என்று இறுமாந்து இருக்குமா போலே நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய்மொழி -7-5-4-என்கிறபடியே-உன்னாலே மனையப் பட்ட பிரம்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த அத்தாலே இறுமாந்து இருந்தால் என்றால் இது உனக்கு ஏற்றமோ -ஹாச்யமாய்த் தலைக்கட்டும் அத்தனை அன்றோ-உனக்கு அவத்யம் அன்றோ –-
—————
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-
துயக்காவது -மனம் திரிவு சம்சார விபர்யய ரஹிதமாக சாஷாத்கரித்து அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும் அராஜகமான தேசத்தில் ராஜ புத்திரன் தலையில் முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே அழகர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அன்வயித்து பின்னை தத்விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்-
————–
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
முந்நீர் –ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷ ஜலம் -மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது.-இனி, அப ஏவ ச சர்ஜ்ஜாதவ் ‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே,-முற்பட ஜல ஸ்ருஷ்டியைப் பண்ணி – பின்பு இறே அண்ட ஸ்ருஷ்டி தான் பண்ணிற்று , –முந்நீர் -முன்னே படைத்த நீர் -என்னுதல்.ஸ்ருஷ்டிப்பது கர்மங்களை கடாக்ஷித்து ஆகிலும் , யௌகபத்யம் அனுக்ரஹ காரியம்; ஒவ்வொரு கால விசேஷங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை இறே-அசித் அவிசேஷிதான் பிரளய சீமனி சம்சரத கரண கலேபரைர்க் கடயிதும் தயமான மநா-என்றார் பட்டர்.-சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தால் போலே-தோற்றா நின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார்.-இனி, பகவத் விஸ்லேஷத்தோடே இருக்கையாலே, நெருப்பை ஏறட்டினாற் போலே இருக்கிறதாதலின் ‘வெம்நாள்’ என்கிறார். என்னுதல்.
எந்நாள் –எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை;
இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். –இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.
எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.
ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-
—————
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–
‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார்.-வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை.-அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல்.-மஹாபலி தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின்,‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல்.
எம் வாமனா –அபஹ்ருத ராஜ்யத்தை யுடையவனான இந்திரனுக்காக அன்று,
வாமனாவதாரமும் மதர்த்தம் என்றிருக்கிறார்.
படிகின்ற –தரை காணாதே அவகாஹிக்கிற – இவ்வனர்த்தத்திலே வெறுப்பின்றிப் பொருந்தி இருப்பதால் -‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார். ‘படிகின்ற’ என்ற வர்த்தமான நிர்த்தேசத்தால் , ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும்.
அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பது போன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி.-இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் சொல்லுவார்கள் –
—————
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-
என்னை விஷயீ கரிக்கைக்கு என்று வந்து திருவவதாரம் பண்ணி அருளி -கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக்கொண்டு முடித்துப் பொகட்டான்.-அவித்த – பீஷ்மாதிகள் காட்டுத் தீகிளர்ந்தால் போலே வர, காளமேகம் மழை பெய்வது போன்று அவித்தான்.-‘மழை கொலோ வருகின்றது!’ என்னும்படி யன்றோ அவன் வரவுதான் இருப்பது?இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்.-இராவணன் தலைகள் போன்று முளையா நிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார்.-ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும்
உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும்-நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்- இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –
—————-
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-
எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை – -வாழ்ச்சி -என்கிறார் –யான் சேரும் வகையருளாய் வந்தே –
இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது –
வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –
—–
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-
யிதுவே யிதுவாகில்- உதவாது ஒழிகையே ஸ்வ பாவமாகச் செல்லுமாகில்–கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த-எந்தாய் –நீ உதவாது போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது -விலக்ஷணமான வடிவு அழகைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே–உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான்.- ‘இவ்வடிவின் போக்யதையை யறிந்த யான்’-பிரியில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை.-எங்கு வந்து அணுகிற்பன் –என்ன சாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக்கடவேன்?‘நான் உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’-
—————-
கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-
என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை;-உன்னைப் பார்த்தால் தப்புவதற்கு விரகு இல்லை;ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். என்றது, ‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார்
கிற்பன் கில்லேன் என்றிலன்-விஹிதத்ததைச் செய்யாமையும், அவிஹிதத்தைச் செய்கையும்-காலமெல்லாம் எனக்கு இதுவே அன்றே யாத்திரை –அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் – முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.-உயிர் செய்கையாவது – ஸ்திதி கமன சயனாதிகளுக்கு – நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி-யோக்யமாம்படி சரீரத்தோடே-சம்பந்திப்பிக்கை சேர்ப்பித்தல்.–இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ?-நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று –உன்னுடைய ப்ராப்தமாய் -அப்ராக்ருதமாய் நன்றாய் -ஸ்ப்ருஹணீயமான -விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக் கடவேன்?
———–
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-
பரம்பொருளை யறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்;மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய ஞானமே ஞானம் –கண்ணனை மேவுதுமே – ஸூலபன் என்று நினைத்து நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ?’ என்னுதல்.நினைவுக்கு வாய்த் தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று கூட்டிப் பொருள்-
——————
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-
சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப்
பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால் கர்மயோகம் இன்மையையும்,
‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று.-உபலக்ஷணத்தால் ஞானயோகம் இன்மையையும் கொள்க.
கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி, ‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’-‘பரஞ்சுடராய் உடம்பாய்’ –
——————
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-
ஒரு கால் கூப்பிட்டு பின்பு ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே மேல் மேல் எனக் கூப்பிடுகிற படி இவர் கூப்பிட்டால் ஈஸ்வரனுக்கு கை நீட்டி எடுக்க ஒண்ணாத தூற்றிலே யாயிற்று இவர் புக்கு நிற்கிறது –மேவி அன்று ஆ நிரை காத்தவன் -ஆபத்துக்கு உதவாதானாயத் தான் படுகிறேனோ -வழி திகைத்து அலமருகின்றேன் மேவி அன்று ஆ நிரை காத்தவன்’ என்ற சொற்றொடரால்,‘காட்டிலே வழி திகைத்தார்க்கு -இடையர் -அங்கேயுள்ள ஆயர்கள்- போலே காணும் வழி காட்டுவார்’ என்று பொருளும் போதரும்.-திருத்தேர்த்தட்டிலே நின்று சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி சரம ஸ்லோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனே யன்றோ?’-–உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்–தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தவனை.-எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -இனி அவனுடைய ஈஸ்வரத்வம் விகலமாக வாகாதே புகுகிறது –என்று நிராசர் ஆகிறார் –
—————-
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-
இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.
‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.
இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.
நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டு கொண்டு.நெஞ்சும் ஒரு படி தரிக்கப் பெற்றது–உயிர் நீடு பெற்றது –அழியப் புக்க ஆத்மாவும் இப்போதாயிற்று -நித்யத்வம் -அழிவின்மையைப் பெற்றது.-நித்யமான ஆத்மாவிற்கு நாசமாவது, தாஸ்ய அசித்தி; சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தை யொழிய நிரூப்ய சித்தி யில்லையே’
———–
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-
இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;-இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது;
அங்கு ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி.-இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’பிரகாரியானவன் தரித்து,-பிரகாரரான இவரும் தரித்து,-இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,-அங்கு உண்டான சோலைகளும் தரித்து,-அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு-அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,-நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும் தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.-இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.
————-
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-
கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையே யன்றோ உள்ளது?-உடனாய் –
காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச-அனுபந்தமும் – சம்பந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும் இவர்க்கு.-இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வன வாசத்திலும் அடிமை செய்தால் போலே.-மன்னி – சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.-ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால்,
‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக் கட்டிப் போவாராம்.வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.-எல்லா அடிமைகளும் நானே செய்ய வேண்டும்-ஓரடிமை குறையிலும் உண்டது உருக் காட்டாது இவருக்கு–அநுஷ்டான பர்யந்தமாக வேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.நாம் –தம் திருவுள்ளத்தையும் கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;-அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.-அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை–திருவேங்கடத்து எழில் கொள் சோதி –‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது,’ என்று அவன் வந்து வசிக்கிற தேசம்.-எழில் கொள் சோதி-அசன்னிஹிதனே -தூரத்திலுள்ளவனே-யாகிலும், மேல் விழ வேண்டும்படி வடிவழகு இருத்தலின், ‘எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதியையும்-நீலாழிச் சோதியையும்-வ்யாவர்த்தித்து -வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதி, பகல் விளக்குப்பட்டிருக்கும்:-நீலாழிச் சோதி கடல்கொண்டு கிடக்கும்;
வேங்கடத்து எழில்கொள் சோதி, குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்;
‘வேங்கடமேய விளக்கே’யன்றோ? அந்நிலத்தின் தன்மையாலே அழகு நிறம் பெற்றபடி.
தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திருஅருவியின் ஒலியும் கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு, அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.
எந்தை –விரூபனே -அழகில்லாதவனே-யாயினும் விடவொண்ணாதபடியிருக்கும் –
பிராப்தி -சம்பந்தத்தைத் தெரிவிக்கிறார்.-இனி, ‘சௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்த படியைத் தெரிவிக்கிறார்’ எனலுமாம்.-தந்தை தந்தைக்கு –-பரம சேஷி –
எல்லார்க்கும் முதல்வன்
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால், சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;
‘நாம்’ என்னுமிதனால், -பிரணவ ப்ரதிபாத்யமான -பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;
சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள்.
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.
(‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.
ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின் பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன;
இங்குச் சொல்லப்படாத ‘நம’ பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.)
—————
எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –-‘அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஸ்வ -ஆத்ம- சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று,
பர சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.-தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம்
கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து-நைந்தவர்களாய்ப் பின்னர் க்ரமத்தில் -முறைப்படி -பரிமாற அருச்சிக்க -மாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள்.-இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு-அநந்யார்ஹர் – அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று,
அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி.
இங்கு, ‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது.-ஆக,ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் ‘ஈஸ்வரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவே வுடையவன்,’ என்றபடி.-இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு.
கார் எழில் – ஸ்யாமளமான வடிவு அழகு -நிர்க்குணன் -குணமில்லாதவன் ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு-அண்ணல் –வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச் சம்பந்தம் -பிராப்தி -இருப்பது.
———-
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-
வானவர் ஈசனே–குணங்களை அனுபவிப்பித்து நித்ய ஸூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு செல்லுகிறவன். என்றது,-‘கண்ணழிவற்ற ருசியுடையாரைத் தன்னை யனுபவிப்பிக்கும்’ என்கை.-நிரபேஷமானவர்களுக்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டிருக்கிறவன், சாபேஷரான நமக்குத் தரச் சொல்லவேண்டுமோ?’மாயன் –ஸுந்தர்ய- அழகு சீலம் முதலியவைகளால் -ஆச்சர்யபூதன் -ஆச்சரியங்களை,யுடையவன்.
‘அவற்றில் ஓர் அம்மான் பொடி சொல்லிக் காணீர்,’ என்ன, சொல்லுகிறார் மேல்:
அணி கொள் செந்தாமரைக் கண்ணன் – ‘இக் கண்ணழகு உடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா,’ என்னும்படி யிருப்பதாய்,-தனக்குத்தானே ஆபரணமாய், -விகாசம் மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாம்படி சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன்.-இது, முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது.-செங்கனி வாய் – அந் நோக்குத் தப்பினார்க்கும் தப்ப வொண்ணாதபடி யிருக்கிற -ஸ்மிதம் -புன்முறுவலைச் சொல்லுகிறது. –-ஸ்மிதமே- முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது.-கரு மாணிக்கம் – அந்த ஸ்மிதத்திலே -முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது.
‘அணிகொள் செந்தாமரைக் கண்ணன்’ என்றதனோடு,-‘செங்கனிவாய்’ என்றதனோடு,
‘கருமாணிக்கம்’ என்றதனோடு,-‘தெண்ணிறை நீர்ச்சுனை’ என்றதனோடு-வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்தில் உள்ளதொன்றாகையாலே.
——————-
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு ஏற்றம் சொல்லுகிறேனாக மயங்கினேன்;
கானமும் வானரமும் வேடுமானார் ஓலக்கம் கொடுக்க நிற்கிறவனுக்கு நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?-முடி சூடி அரசு செலுத்தும் நிலை, திருவேங்கடத்தில்; தட்டியில் இருக்கும்-நிலை, பரமபதத்தில். தட்டி – சிறைக்கூடம்.திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின்,
‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்;
அமர்யாத ந்ருபசு-என்னுமா போலே-‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்.
(அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி ‘அகதிம்’ என்ன, நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம்)
ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால்,- அநாத்ம- ஆத்மாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்ம குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி.
‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை-ஈசன் வானவர்க்கு என்பன் – சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.
வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி –நித்யஸூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை-சங்கத்தை – வைத்தான்.
அவர்களுக்கு-சத்தை – இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்:
தன்-சத்தை – இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்;
பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார்.
இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு, தன் பக்கலிலே சங்கம் உண்டாம்படி -பண்ணினான் -‘
என்னிடத்தில்-ஸ்வ விஷய பாசத்தை – தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர்.
இனி,அஹ்ருதயமாக இருக்கச் செய்தே – மனத்தொடு படாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, ச ஹ்ருதயமாக -மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும்,
கலந்த பின்னர்-உஜ்வலனாய் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் -‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.-
————-
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-
எனக்குத் தன்னைத் தந்தான்’ என்கிற இதுதான் ஓர் ஏற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே -தேடித் கொண்டே நித்ய வாசம் செய்கிறவனுக்கு–?’ என்கிறார் இப் பாசுரத்தில்.-எல்லா உலகும் தொழும்-ஆதி மூர்த்தி-மிகத் தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்;-எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக் கூடிய பொருளை அருளிச் செய்தார்.-காரண வஸ்துவே உபாஸ்யம்- ஸ்ருதி-நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை அநுசந்திக்கையாவது,-ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’என்றருளிச்செய்தாராம்,
ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’ என்று கேட்டருள,‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.
வேதியர் முழு வேதத்து அமுதத்தை-அந்தணர் மாடு -தனம் –ஸ்வரூபத்தில் இனிமை-ரச மயமாய் இருக்கிறது-குணத்தில் இனிமை.-வேதைஸ்ஸ சர்வைர் அஹம் ஏவ வித்ய -என்கிறபடியே வேதைக சமதி கம்யனாய்-பரம போக்யனானவனை –-தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை –
குற்றமற்ற குணங்களையுடையவனை. சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது,–அங்கீகரிக்குமிடத்தில், ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.
1-ஈசன் வானவர்க்கு –
2-என் கண் பாசம் –
3-எல்லா உலகுந்தொழும்-
4-தீதில் சீர்–அவசர ப்ரதீஷனாய் நிற்கிறான் -ஒன்றை விட ஒன்றுக்கு ஏற்றமே –
ஷத்ரியன் -திருவேங்கடமுடையான் ரஷ்ய வர்க்கம் கிடைக்குமா என்று பார்த்து நிற்கிறான்
ஸ்ரீ வைகுண்ட நாதனும் – தேடி இங்கே வந்ததால்- ஷத்ரியன் -நாமும் கைங்கர்யங்கள் தேடி தேடி ஷத்ரியன் ஆவோம் –
—————–
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—
மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான ‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் தாங்கள் தங்களுக்கு நன்று என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும் –.கைங்கர்யத்திலே ஈடுபடவே -கர்மங்கள் எல்லாம் தன்னடையே நசிக்கும் –கைங்கர்யம் செய்து கொண்டே குணானுபவமும் பண்ண வேண்டும் -என்றபடி –வேங் கடங்கள்-கடம் என்று கடனாய் ருண த்ரயத்தை சொல்லுகிறது-மெய் மேல்வினை முற்றவும்,- தேஹ உபாதிகமான கர்மங்களும் அடங்க நசிக்கும் –என்று ஆளவந்தார் –உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் இது மெய் -என்று எம்பெருமானார்-வேங்கடத்து உறைவார்க்கு – சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது-நம –-தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற-அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் –வ்ருத்தியின் -செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி –-‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான்.
அது சுமந்தார்கட்கு – பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சியின் சிறுமையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப் போன்று-‘அது சுமந்தார்கட்கு’ என்கிறார்.- இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும் அறிந்திருக்கிற இவர் தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்;
இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே சொல்லுகிறாராதல்.-நிர்ஹேதுக கிருபாவான் அன்றோ -நம சொல்லவும் வேண்டுமோ-
———-
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-
‘ஒரு கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சாத்தி யருளக்கடவனே! நம்மை விசேட கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே!’-என்றிருக்கிற இவர்கள் அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின், ‘சுமந்து’ என்கிறார். பக்த்யா பிரயச்சதி –
சாது ராமானுஜாச்சார்யர் ஜீயர் ஸ்வாமிகள் -நமக்காக ஆழ்வார் அருளிச் செய்தார் -என்பாராம்-இன்றும் ஜீயர் ஏகாங்கி -பொட்டு சுமந்து போகிறார்கள் -அகோராத்ரி கைங்கர்யம் செய்து கொண்டே இருக்கிறார்கள்-
இனி, அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேசுவரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின், ‘சுமந்து’ என்கிறார் என்னுதல்.-ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு அரசகுமாரன் செண்பகப் பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது.‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.
தம்மையேயொக்க அருள் செய்வர்,-ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் –-சொரூபத்திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும்–திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது,-‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது?-அப்படியே ‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத் திருமலையாழ்வார் தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம்-கு மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.-
————-
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-
கீழே இஷ்ட பிராப்தி சொல்லி இங்கே அநிஷ்ட நிவ்ருத்தி சொல்லிற்று-ஏந்திக் காத்தவன்’ என்றும், ‘தொழ ஓயும்’ என்றும் முடிக்க. ‘ஒன்றுமே’ என்பதில் ஏகாரம் பிரிநிலை.-சேஷிக்கு உத்தேச்யம் -சேஷ பூதனுக்கும் உத்தேச்யம் என்றவாறு –ஏந்தி -அநாயாசேன -இன்றும் ஏந்திக் கொண்டு சேவை சாதித்து -கோவர்த்தன கிரிதாரானாக-இதனால், துக்கத்தைப் போக்கும் சாதனம் மலையே என்பதனைத் தெரிவித்தவாறு.-ஒன்றுமே தொழ – ‘ஒன்றையுமே வணங்க. உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானும் வேண்டா,
திருமலையாழ்வார் தாமே அமையும்,’ என்பார், ‘ஒன்றுமே’ என்கிறார். -ஸ்ரீ சைலமே ரஷகம் என்றவாறு –
நம் வினை ஓயும் – ‘பெற வேண்டும் பேற்றினைப் பெற்றிலோம்’ என்கிற துக்கத்தைப் போக்கும்’ என்னுதல்;
‘வேங்கடங்கள்’ என்னும் பாசுரத்திற்கூறிய, அடிமை செய்வதற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் என்னுதல்.
———
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-
விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலை யாழ்வாரெல்லாம் வேண்டுமோ?-திருமலை யாழ்வாரில் ஒரு பகுதி அமையாதோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.-‘ஒரு பகுதி’ என்றது, திருவேங்கடமுடையானை;- ‘வட மா மலையுச்சியை’ -7-10-3-என்பர் திருமங்கை மன்னன்.-சரம பர்வதத்திலே இன்னும் நிற்கிறார் -கோல் விழுக்காட்டாலே இவனாக அமைந்தது -என்கிறார் –முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர், மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில்,-‘இவனுடைய இங்குத்தை துக்கத்தைப் போக்குகைக்காக’ என்கை;
அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு –-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.
வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.
மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு -அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.
————
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-
தேவி சுமித்திரை.-ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -கைங்கர்யமே என்பதை காட்டி அருளுகிறாள் ஸ்ரீ சுமித்ரா தேவி –-‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் – தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன் அப் படுக்கையைக் காட்டிலும் விரும்பி வசிக்கின்ற தேசம். இனி, ‘பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்னுதல்;-திருமலையாழ்வார் தம்மைத் திருவனந்தாழ்வானாகவும் சொல்லப்படும்.
———-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-
திருவேங்கடமுடையானை யன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,
’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’-பெரிய திரு மொழி -1-10-4- என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும், ‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ -5-8-9-என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்;எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
கிரமத்திலே–அடி வைத்த கணக்கிலே -அடியார்களைப் படிப்படியாக -என்றுமாம் –
வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.-இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.
———–
புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1-
அவனுடைய குணங்களையும் விபூதி காரணமான ஐம்பெரும்பூதங்களையும் சேரப்பிடித்து,
இத்திருவாய் மொழியில் மேல் விரிவாகச் சொல்லப்படும் அர்த்தத்தையெல்லாம் சுருக்கமாக அருளிச் செய்கிறார்.
புகழும் நல் ஒருவன் என்கோ –
1–‘உயர்வற உயர்நலம்’ தொடங்கி இதுகாறும் தாம் அனுபவித்த குணங்களை யடைய ஒரு சொல்லாலே ‘புகழும் நல் ஒருவன் என்கோ’ என்கிறார்.
2– இனி, ‘சுருதி ஸ்மிருதி இதிகாசம் முதலானவைகளெல்லாம்
கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வேறுபட்ட சிறப்பையுடையனான ஒத்தாரை மிக்காரை இலையாய புருஷன் என்பேனோ!’ என்னுதல்;
3– இனி, ‘புகழும் என்கோ, நல் என்கோ, ஒருவன் என்கோ’ எனத் தனித்தனியே கூட்டி,
‘எல்லாராலும் நன்றாகப் புகழப்படுமவன் என்பேனோ! நல்ல ஆனந்தம் முதலிய குணங்களையுடையவன் என்பேனோ!-சமாயப்திக தரித்திரன் –ஒத்தாரை மிக்காரை இலையாய அரியவன் என்பேனோ!’ என்னுதல்.
ஆக, குணத்தின் சேர்க்கையால் வந்த வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறார்:-குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்-
1-குணம் ஜாதி -வியக்தி விட்டு பிரியாது –கோத்வம் போலே -/ குண்டலம் -த்ரவ்யம் -பிரியுமே -பிரித்து ஸ்திதி உண்டே இதற்கு-சௌலப்யம் -குணம் பிரியாது அறிவோம் –பிருத்வி -த்ரவ்யம் -பிரியாமல் இருக்குமோ சங்கை வருமே -இவற்றின் ஸ்திதி அவனாலே தானே
2-சமா நாதி கரண்யம் இருப்பதால்
3-ஸ்வரூப ருப குண விபூதி -சேர்த்து படிப்பதால்
4-சேர்த்தி -ஆஸ்ரயித்து பெருமை சேர்க்கும் –
5-ஜன்ய ஜனக பாவம் -குணங்கள் -தாய் -படைக்கப் பட்டதால் தானே விபூதி -காருணிகன் நீர்மையால் அருள் செய்தான் -யௌகபத்யம் அனுக்ரகத்தால்
6-ததீயத்வ ஆகாரத்தால் இனிமையாய் எல்லாம் இருக்குமே-
பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ!-இனி, ‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார்.-நீள் சுடர் இரண்டும் என்கோ –காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார்.-இகழ்வில்’ என்பதற்கு, ‘ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் – ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது
முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக.-அருச்சுனன், ‘ஹே கிருஷ்ண ஹே யாதவ’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.
———-
கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-
உக்தமான பூதங்கள் உடைய கார்ய விசேஷத்தை அருளிச் செய்கிறார்-மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.-‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.அன்றிக்கே,-‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது ‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய், சாமா நாதி கரண்யம் இல்லாமல் அவற்றை நிர்வகிப்பவர் வையதி கரண்யம் -கொண்டு –நிர்வகிப்பது போலே -இவற்றை நிர்வகிப்பவர் –
———
பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-
உலகமே உருவமாய் நின்ற நிலையோடு அசாதாரண விக்கிரகத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்.-தம்மோடு முதல் உறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார்.-ஜிதந்தே புண்டரீகாஷன் -தூது செய் கண்கள்-அந்நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது.-நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.-அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு அனுபவிக்கக் கூடியதான வடிவைச் சொல்லுகிறது.-இது பிராப்த விஷயத்தில் அனுபவம் என்னுமிடத்தைக் காட்டித்தருவது தலைவனாந்தன்மைக்குப் பிரகாசகமான திருமுடி யன்றோ?-திருமுடியைக் கண்டால் சுவாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீ சம்பந்தமன்றோ?-‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’ -திரு மறுவைப் பீடமாக கொண்டு இருப்பவள் என்றுமாம் –‘இச் சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற பிரேமத்தின் முடிவெல்லையிலே-நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ?-போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே குற்றமற்றதாய் இயல்பாய் அமைந்த வடிவழகையுடையவனை.-இந்த விபூதி யோகம் அவனுடைய அப்ராக்ருதமாய் திவ்ய பூஷணாதி களாலே அலங்க்ருதமான திருமேனியோடு ஓக்க தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக விபூதி கதனத்தின் நடுவே அவனுடைய திரு மேனியின் அழகைப் பேசுகிறார் –
———
சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-
‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்,’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்;-நீ எனக்கு அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம்.–குருகைக் காவல் அப்பன்-பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி இருக்கின்றனவே யன்றோ-எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது-எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.-
எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாக வுடையவன் என்பேனோ!-லீலா விபூதியைச் சொல்லுகிற இடத்தில் நித்திய விபூதியைச் சொல்லுவான் என்?’ என்னில்,‘ஆதி அம் சோதி என்கோ’ என்றதும், ‘சாதி மாணிக்கம் என்கோ!’ என்றது போலே இருக்கிறது.-ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே 1–சமுசார காலத்திலே; என்றது, எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.
அன்றியே,
2–‘யாதுமில்லாத பிரளயகாலத்தில் காரியமாக மாறின இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ என்ற நிலையாய்க் கிடக்கிற அன்று, தான் ஸ்வாமியான சம்பந்தத்தைக்கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச் சத்தை இழந்து போகாமல் தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி இவை தன் பக்கலிலே கலந்த அன்றும் இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.
‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரிய நின்ற போதும் இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு; இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற
போதும் இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ என்று அருளிச் செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.-இங்கே அமலன் -காரண -பிரளய – அவஸ்தையில் -ஸ்தூலம்–தோய்விலன் -எனபது -கார்ய அவஸ்தையில் -சூஷ்ம –
———
அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—
ஹேயப்பிரத்தியநீஹதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால் கல்யாணகுணங்களும் புகுமாதலின்,-‘அமலன்’ என்றதற்குக் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய் நற்குணங்கட்கெல்லாந் தானே இருப்பிடமானவனாய்’ என்று பொருள் அருளிச்செய்கிறார்.-அடியார்கள் இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன்
1-நாம் ஆபத்துக்குள்ளான சமயத்திலே வந்து பாதுகாக்கும்’ என்று நம்பலாம்படி இருப்பான் ஒருவன். -சஞ்சீவி -ஔஷதி நச்சிக் கொண்டு போக வேண்டாத படி நச்சு மா மருந்தம் -2-‘ஆசைப்படும் ஓர் மருந்து’ என்னுதல். மா மருந்து – பெரிய மருந்து; வியாதியினளவு அல்லாத மருந்து-மேல் காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி. –வாட்டம் தணிய வீசீரே — நமனும் முத்கலனும் பேச -நரகில் நின்றார்கள் கேட்க -நரகமே ஸ்வர்க்கமே நாமங்கள் உடைய நம்பி –
3- இனி, ‘மா மருந்து’ என்பதற்கு, ‘ஒரே மூலிகையாய் எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல்.-ஏக மூலிகை -சஹாயாந்திர நைரபேஷ்யம் -பக்க விளைவு போக்க வேறே மருந்து தேவை இல்லாத -சக்ருத் சேவய்யையாய் இருக்குமே-4- இனி, ‘பத்தியமில்லாத மருந்து’என்னுதல்; என்றது, இவன் பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை.-பார்க்காத தன்மையன் என்றபடி -காவலில் புலனை வைத்து -கட்டுக்காவல் இல்லாமலும் –பலன் கொடுக்கும் -பத்தியமே வேண்டாம் –கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்-
——–
பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-
வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் –வினையில் மிக்க பயன் என்கோ –-கல நெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக் கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத் தன்மையேயாய் அதற்கு -மித்ர பாவமே சம்ப்ராப்தம் -’நத்யஜேயம்-நான் விட மாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி.-உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!-‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’-
இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று பதண் பதண் என்றான் காணும்,’ என்று அருளிச் செய்தார்.
வானவர் ஆதியையே.–ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –-தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –
——————
வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-
அதனுடைய நித்தியத்துவம் (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்;-அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். –திருமந்த்ரார்த்தம் -மூன்றையும் சேஷித்வம் -சரண்யத்வம் பிராப்யத்வம் மூன்றும் -ஆதி -தெய்வம் -போகம் -என்கிறார் -நம்மாழ்வார் பத த்ரயம்
ஒளி மணி வண்ணனை – விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது;-இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று -மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.
—————-
ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-
உலகத்தில் முதன்மையினையுடையவரான பிரமன் சிவன் முதலியோர்களை விபூதியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.-கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –
———-
கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-
அவனுடைய விபூதியினுடைய விரிவினைத் தனித்தனியே பேச முடியாது; காரிய காரண உருவமான அறிவுடைப் பொருள்களும் அறிவில் பொருள்களும் அவனுக்கு விபூதி என்று -பிரயோஜகத்திலே -சேர பிடித்து -கோவையாக -சுருங்கச் சொல்லலாமித்தனை,’ என்கிறார்.யாவையும் எவரும் தானே – அறிவுடைப் பொருள் அறிவில் பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.
———–
யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-
‘அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களுக்கு உள்ளுயிராய் நிறைந்து நின்றாலும், அவற்றின் குற்றங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.-சரீரத்தினுடைய பரிணாமம் முதலியவைகளையும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களையும் நினைக்கிறது-தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்து நிற்பினும், அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி நிற்பான்.-ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது;
இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக் கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போக ரூபமாயிருந்தது.
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் –
1–உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும்-ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு,-அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு இல்லை.-பாவனை -அநுசந்தான பர அனுசந்தானம்-
அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு,
2– ‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ -பிரயோஜநாந்தரங்களில் பற்றில்லாத-பத்தி பரமாக அருளிச் செய்தது;-என்றும்,
3–‘புறம்பே உள்ளவேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’-‘உபாயாந்தரங்களில் பற்றில்லாத’-பிரபத்தி பரமாக அருளிச்செய்தது;- என்றும்,
4–‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ -வேறுபட்ட விஷயங்களில்
சங்கமில்லாத’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர்.
இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச் செய்வர்.
———–
கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-
மலர்கள் மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். நித்திய கைங்கரியத்தைப் பெற்று, அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும், தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிறபடியைக் கண்டு கூறினேன்,’ என்பார், ‘வண்டு கூடி அறையும் தண்தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேமத்தின் மிகுதியாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்திய ஸூரிகள் ஆதலின், ‘அமரர் மொய்த்து விரும்புவர்,’
—————
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-
கலங்கிய மடுவின் கரைக்கு கலங்கா பெரு நகரின் இருந்து வந்தானே –அச்சோலையோடு பொய்கையோடு வேற்றுமை அற-இவர்க்கு உத்தேஸ்யமாயிருத்தலின் வர்ணிக்கிறார். ‘வல்லரக்கர் புக்கு அழுந்த –தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு இப் பொய்கையும் போலியாய் இருத்தலின், வர்ணிக்கிறார்,’தாமரைக்காடு மலர்க் கண்ணொடு கனிவாய் உடையதுமாய்’ என்கிறபடியே, உபமான முகத்தாலும் விரும்பத் தக்கதாய்
இருக்கிறதாதலின், வர்ணிக்கிறார் -அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார்.-முதலையின் செயலே யாய் யானையின் செயல் ஒழிந்ததாதலின், ‘நின்ற’ என்கிறார்-கால் வாசி அறிந்தே அன்றோ பற்றிற்று? முன்பு ஒன்றைப் பிடித்தது இல்லையே? –
பலம் இருக்கிறது என்ற எண்ணம் -யானைக்கு வந்து நோவு ஆதலின், ‘கைம்மா’ என்றது.
அன்றியே, ‘துதிக்கையும் முழுகிப் போய்விட்ட துன்பம் ஆதலின், ‘கைம்மா’ என்கிறது ‘என்னுதல்.‘யானைக்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று ‘தூவாய புள் ஊர்ந்து வந்து’ பூ இடுவித்துக்கொண்டான்-யானையின் காலில் விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ -பெரிய திருமொழி, 6-8-3.-அன்றோ? ‘விலங்கு’ என்றது, சிலேடை: கால் விலங்கு, முதலை, ‘முதலையை ‘விலங்கு’ என்றல் கூடுமோ?’ எனின், அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,-கண்ணன் – கண்ணையுடையவன்; இதனையே ‘குளிரக் கடாக்ஷித்து நின்ற நிலை’ –கார் முகில் போல் வண்ணன் கண்ணன் –யானையின் இடரைப் போக்கின போது வடிவிற் பிறந்த துடிப்பும் குணத்திற் பிறந்த துடிப்பும் இருக்கிறபடி.
வடிவழகை யனுபவிப்பித்து யானைக்குக் கையாளாய் நின்ற நிலை; தன்னை அனுபவிப்பித்துத் தாழ நின்றாயிற்றுப் போக்கிற்று.எம்மானை –யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்;பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது மேலும் இயலைச் சொல்லச் செய்து ‘அவன் நூறாயிரம் செய்தாலும் மனமும் செயலும் வேறுபடாதிருப்பதற்கும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்த விடத்தில் இருக்க மாட்டாமல் விரைந்து வருவதற்கும் அவனே வேணும்,’ என்று அருளிச் செய்தார்.
தண் கடல் வட்டத்து உள்ளீர் சொல்லீர்-விசேஷஜ்ஞர்களோடு அல்லாதாரோடு இவ் வர்த்தம் பிரசித்தம் என்று இருக்கிறார்.-சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே-இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை-ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –
———
தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-
‘ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ,-தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது?-ஆபத்துக்கு உள்ளே இருந்து சம்பத்து என்று நினைத்துக் கொண்டு இருப்பார்களுக்கும் வந்து ரஷித்தானே-என்று நீர்மையை நினைந்து விக்ருதர் ஆகாதார்
தண் கடல் வட்டத்துள்ளார் – ஏக தேச வாசித்வ பாந்தமே -ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது-தமக்கு இரையாகத் தடிந்து உண்ணும் திண்கழல் கால் அசுரர் – சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஹேது -ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும்.மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’இறைவன், ரக்ஷிக்கைக்கு ‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார். ‘அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான கிருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பிறரை நலிவதற்கு இட்ட வீரக்கழலைத் தவிர்க்க ஒண்ணாது,’ என்பார், ‘திண்கழல்’ என்கிறார்.
பண்கள் தலைக்கொள்ளப் பாடி –
1-‘திருமகள் கேள்வனைப் பாடாநின்றார்கள்’ என்று,
2- பண்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலை காட்ட. என்றது,
3- ‘பண் சுமக்கப் பாடி’ என்றபடி. -அதிகமாக பாடி -ராக மாலிகையில் என்றுமாம் –
4-அன்றி, ‘பண்கள் தலைமை பெறும்படி பாடி’ என்றுமாம். என்றது, ‘தலையான பண்ணிலே பாடி’ என்றபடி.
5-அன்றி, ‘அன்பினாலே அடைவு கெட்டு, ஒரு பண்ணிலே எல்லாப் பண்களும் வந்து முகங்காட்டும்படி பாடி’ என்னலுமாம்.
———-
மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-
தான் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு பொருளை வேறு ஒரு தேவதை கொள்ளுகையாகிற இது-மஹிஷீ ஸ்வேதம் பிறரதானதைப் போன்றது’ என்று பார்த்து, ‘அவ்வாகாச வாயனுக்கோ இடுவது? -ஆகாசம் வாசமாக கொண்ட இந்த்ரன் – நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடம் தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லும் தண்ணீரும் உண்டாய் இருக்கிற
இம்மலைக்கு அன்றோ இடுவது?’
வீரராயிருப்பார் வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவார்களே அன்றோ? அப்படியே, முன்னே நின்ற கல்லை எடுத்துக் கல் மாரியைக் காத்தான்.-அவன் செய்த தீங்கிற்குத் தோளைக் கழிக்க வேண்டியிருக்க, ‘பாவி பசிக் கோபத்தாலே செய்தானாகில் செய்வது என்? அசுரர்கள் பக்கல் செய்யுமதனை இவனோடு செய்ய ஒண்ணாது; தானே கையோய்ந்து போகிறான்!’ என்று, அவனால் வந்த நலிவைக் கணக்கிட்டு ஏழு நாள் ஒருபடிப்பட்ட மலையை எடுத்துக்கொண்டு நின்றானாயிற்று.
குன்று குடையாக எடுத்தான் குணம் போற்றி – ‘கல்லை எடுத்துக் கல் மாரி காத்து’ என்னும் இவ்விடத்தில் ‘நீராலே வர்ஷித்தானாகில் கடலை எடுத்துக் காக்குமித்தனை காணும்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.
ஆயர்களுடைய இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களே யன்றோ?-அன்று அம்மழையிலும் காற்றிலும் அடியுண்டாரும் தாமாய், உதவிற்றும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘பிரானை’ என்கிறார்.நிலா, தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர்பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது.
‘அரியன செய்து பாதுகாப்பதற்குப் பண்ணும் செயலை விலக்காது ஒழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரம் இல்லை,’
என் தஞ்சனே! நஞ்சனே! வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகம்,’ என்கிறபடியே,
‘வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று ஏத்தாதார்.
அவன் தன்னை தங்களுக்காக ஒக்கினால்-அவனுக்காக தங்களை ஒக்காதார் அவஸ்துக்கள் என்கை-தடு குட்டம் -குணாலை கூத்து –
————-
வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-
கோகு கட்டுண்கை –ஆரவாரம் கொட்டுகை –கோகு கொட்டு என்றும்- பாடம் –
ஒப்பனை யழகையும் மயிர் முடியையுங்கண்டவாறே தன்னைப் பேணாதே ‘தவாஸ்மி – உனக்காக இருக்கிறேன்’ என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான்-அடர்த்த – பின்னர் அணையப் புகுகிறது அவள் தோள்களை ஆகையாலே கிரமப் பிராப்தி பற்றாமே ஒரு காலே ஊட்டியாக நெரித்தான் ஆயிற்று.
செம்பவளம் திரள் வாயன் – விருப்பத்திற்குத் தடையாய் இருந்தவைகள் போகையாலே புன்முறுவல் செய்தபடி.
அன்றியே,
‘அவை திருத்தோள்களுக்கு இரை போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி’ என்னுதல்.
சிரீதரன் – இவ்விடைகள் ஏழையும் வென்று வீர லக்ஷ்மியோடே நின்ற நிலை
அன்றி,-‘அவள் அணைக்கும்படியாக நின்ற நிலை’ என்றுமாம்.-தந் திருஷ்ட்வா -மஹர்ஷீணாம் சுகாவஹம்-பபூவ –ஹ்ருஷ்டா-வைதேஹீ –பர்த்தாரம் –-பரிஷஸ்வஜே –இப்போதாயிற்று ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ஸ்த்ரியம் புருஷம் விக்ரஹம் என்றவள் –‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’ என்றவளே யுத்தவடு உள்ள இடமெங்கும் திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். ’பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’
‘திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக் கொண்டிருக்கச் செய்தே, கிராமணிகள், மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாறு போலே காண்’ என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்– கூரத்தாழ்வான் சிஷ்யர்.-அருளிச் செய்வர்.–பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு இல்லாதவர்கள் நடுவே வந்தால் அவர்களுக்கு அஸஹ்யமாயிருக்கும் என்று கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு ஆப்த சம்வாதம்-
——–
சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-
பாகவத அபாசாரம் பொறாமையாலே இவன் அவதரித்து ஆனைத் தொழில்கள் -ஆஸ்ரிதர்களுக்காகவே திருவவதாரம் –என்பர் -நித்திய விபூதியில் உள்ளார் அனுபவிக்கிறபடியே -அனுபவிக்கிற பிரகாரமும்,-அனுபவிக்கிற திருமேனியும்.-லீலா விபூதியில் உள்ளாரும் அனுபவிக்கும்படியாக அவதரித்தான்-பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும்
திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது-இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றே யன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே?
அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையே யன்றோ? இதற்குப் பிரமாணம் ‘அஜாயமாந:’ என்ற சுருதியே யன்றோ?
வேத முதல்வனைப் பாடி – வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப் பாடி’ என்னுதல்.
‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின்,
‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது?
‘எத்திறம்!’ என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை.
‘துள்ளி ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’ என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’ என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது கருத்து.
ஈசுவரன் கை விட்டாலும் விடாத என் நெஞ்சிலும் அவர்களைஉபேக்ஷித்தேன் என்கிறார்
மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ் விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதி தன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளா நின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.
————-
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-
கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது.
‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்
’தனியன் –இப்படி அவதரித்தும், போகும் அன்று உடுத்த ஒலியலோடே-கட்டின வஸ்த்ரத்துடன் – ஆயிற்றுப் போவது.
‘சேர்ந்து போனார் ஒருவரும் இலரோ?’ எனின், தொடர்ந்து செய்த இவ்வவதாரங்களிலே இராமாவதாரம் ஒன்றிலும்‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையே யன்றோ? -அவர் பட்ட பிரயத்னத்துக்கு இது நாலிரண்டு போலே என்றவாறே –
‘சேர்ந்து போனார் இலரேயாயினும், இங்கிருந்த நாளில் பரிவருண்டோ?’ எனின்,
‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவரும் இலரே அன்றோ?
பிறப்பிலி தன்னை – இப்படிப் பிறருக்காக அவதரித்தால் அவ்வவதாரத்தால் பயன் முழுதும் பெறாதே ஒழிந்தாலும்,நாம் வருந்தியும் இது பலித்தது இல்லையே!’ என்று கைவாங்குகை யன்றி,இவர்களுக்கு ஒன்றுஞ் செய்யப்பெற்றிலோம்’ என்று,பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாய் இருப்பவன்.
தடங்கடல் சேர்ந்த பிரானை –இன்னமும் பிறக்கைக்குத் தவயோகம் பண்ணுகிறபடி.
திருப்பாற்கடலிலே அநிருத்த உருவமாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதாரத்திற்கு மூலமேயன்றோ?‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை’ என்றார் ஸ்ரீஆண்டாள். இவர்கள் பிறவி என்னும் பெருங்கடலைப் போக்குகைக்காக அன்றோ அவன் கடலிலே வந்து கிடக்கிறது?
கனியை –
கடல் பழுத்தபடி. அன்றி, ‘பாலிலே பழுத்த படி’ என்னுதல்
அங்குச் சாய்ந்து கிடக்கிற போதை வடிவழகால் வந்த இனிமையை ‘சர்வரஸ:’ என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்;-எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்;
அவற்றால் போதரும் கூற்றிலே வைத்துச் சிலவற்றைச் சொல்லுமித்தனை, ஆகையாலே, ‘கனியை’ என்கிறார்.
கனியை கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை– கண்ட போதே நுகரவேண்டும் கனியும், கோது அற்ற இனிய கருப்பஞ்சாறும், உடல் முழுதும் ரசத்தையுடைய கட்டியும்,
எல்லா ரசமும் சேர்ந்திருக்கிற தேனும் நுகர்கின்றவனை என்றும் உள்ளவனாகச் செய்யும் அமுதமும் போலே இனியனானவனை.
கண்ட போதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரசாமிசமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய், இனிமையேயன்றிச் சாவாமல் காக்கமதாய் இருக்கையைத் தெரிவித்தபடி. மேல் திருவாய்மொழியில் ‘நலங்கடல் அமுதம்
என்கோ!’ என்று தொடங்கி அனுபவித்த இனிமை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் – பகவானுடைய குணங்களைக் கேட்டால் அசூயை பண்ணாமல் ஏத்திக் குனிப்பவர்கள்;முனிவாகிறது, வெறுப்புத் தன்மையாய், அது இன்றிக்கே ஒழிகையாவது, கலங்குகையாய், அடைவு கெட்டு ஏத்திக் குனிப்பார் என்று பொருள்
முழுது உணர் நீர்மையினாரே –1- ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம்-‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்:
2-ஞான பலமான இது -ஏத்திக் குனிப்பது-உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லை யன்றே?
———–
நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-
அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது.பரஞ்சுடரை –‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின
திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.-ஆதி யம் சோதி உரு -ஏஷ நாராயண ஷீராப்தி நாதனே இவன்-
நினைந்து ஆடி –அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங் குணத்தை அநுசந்தித்து,
ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கி யன்றோ வைப்பது?
அடியார்களுக்கு உடைமை ஆக்கி வைக்கும் என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஆயிரத்தளியிலே’ என்று தொடங்கி. ஆயிரத்தளி – பழையாறை – நாதன்கோயில் – நந்திபுரவிண்ணகரம் என்னும் தலம். இங்கே சோழர்களும், பின்னர்ப் பல்லவர்களும், பின்னர்ச் சோழர்களும் சில காலம் இருந்து அரசாண்டனர். இராஜா – கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த சோழ அரசன்.-கிருமி கண்ட சோழன் –
ஆயிரத்தளியிலே இராஜா இருக்கச்செய்தே பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச்செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைத் தகனம் பண்ணக்கடவோம்,’ என்று திரிகிறார் சிலர் அங்கே வந்து, ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்திபண்ண
இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சிக்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.
ஸ்ரீ வைஷ்ணவன் -அநாதி இல்லையே ச நாதன் அன்றோ -ஜென்மத்துக்கு பிரயோஜனம் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உறுப்பாக-கூரத் ஆழ்வான்-மாருதி ஆண்டான் மூலம் அனுப்பி அருளிச் செய்த ஸ்லோகம்
அஷ்டகாக அஷ்ட அத்யாயி -வையாகரனிகள் -தீ விஷய -அஸ்தி -நாஸ்தி -திஷ்டன் -மனுஷ்யாணாம் –
ஆஸ்திகன் -நாஸ்திகன் -திஷ்டன் -பூர்வம் -மத்யம் -பச்சிம -யதீஸ்வரன் -துரந்தவன்-பின்னால் உள்ள -பூர்வம் பிரதமம் –
கிருமி கண்ட சோழன் நாஸ்திகன் –
உன் சேவை எப்படி கிடைக்குமோ -என்று கேட்பது போலே
ஆந்தர அபிப்ராயம் -மத்யம நமஸ் – -பெருமானுக்கு கிங்கரன்
பகவத் பக்தன் -பாகவத பக்தன் -பிரணவம் -பாகவத சம்பந்தம் தெளிந்த பின்பு தானே நாராயண கைங்கர்யம் சித்திக்கும் -என்றவாறு
அஷ்டாஷர-தீ விஷய -ஸ்வரூப -உபாய -புருஷார்த்த -ஞானம் -த்ரிவித நிஷ்டன் -மத்யமபத ஏக தேச -ஷட்யந்தமான மகார வாஸ்ய உபாய விரோதி –
பூர்வம் மாம்-ஸ்வரூப நிஷ்ட மாம் -அடியேனை -கிழக்கு தேசத்தில் உள்ளவர் -பிரணவம் நிஷ்டர் -இரண்டும்-மன் நாசாயா முயற்சிக்கிறது -இங்கு அர்த்தம் –
ஹே பச்சிம -ஹே கைகர்யா நிஷ்டர் -மேலேதேசத்தில் உள்ள பாஷ்யகாரர் -என்றுமாம் –
திருதிய பத -நாராயணாய -கைங்கர்யம் பண்ணி ஆனந்தப்பிபது புருஷார்த்த விரோதி -நலிகிறது-பாகவத ஆச்சார்ய கைங்கர்ய அலாபத்தால் ஞானமே வியர்த்தம்
போக்கி கொடுத்து அருளும் -என்கிறார் -திரு உள்ளம் உகந்தார் –
உத்தமர்கட்கு என் செய்வாரே –பகவானுடைய குண அநுசந்தானத்தாலே மெலிகின சரீரத்தையுடையராய் இருந்துள்ள மஹா புருஷர்களுக்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக்
கொள்வதற்கு உசாத்துணை ஆவார்களோ? ‘பிறப்பிற்குப் பிரயோஜனம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே,’ என்கிறார்.
———–
வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-
‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார்?
நித்தியஸூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்?’ என்கிறார்.
பேர் பல சொல்லிப் பிதற்றி – அவனுடைய திருநாமம் பலவற்றையும் அடைவுகெடச் சொல்லி. சொரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு வாசகமாயுமுள்ள பெயர்கள் பலவாதலின், ‘பேர் பல’ என்கிறார். என்றது, தாம் ‘ஒழிவில் காலத்’திலும், ‘புகழும் நல் ஒருவனி’லுமாகச் சொன்னவற்றைச் சொல்லுகிறார்-
ஒழிவில் காலம்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவரீசன்’ ‘ஈசன் வானவர்க்கு’ என்பன, ஸ்வரூப வாசகம்; ‘காரெழில் அண்ணல்’ ‘கருமாணிக்கம்’ என்பன,ரூப வாசகம்; ‘திருவேங்கடத்து அந்தமில் புகழ்’ என்றது, குணவாசகம்;
‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவராதி என்கோ’என்றது, ஸ்வரூப வாசகம்; ‘பங்கயக் கண்ணன்’ என்றது, ரூப வாசகம்; ‘புகழும் நல் ஒருவன்’ என்றது, குணவாசகம்.
‘‘பொருவில் சீர்ப் பூமி என்கோ!’ என்னா, ‘கண்ணனைக் கூவுமாறே’ என்பது; ‘குன்றங்கள் அனைத்தும் என்கோ!’ என்னா, ‘பயங்கயக் கண்ணனையே, என்பது; ‘ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே’ என்பதாகா நின்றார்;
வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்.இராவணன் ‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?
மிளகாழ்வான் வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல,‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன,
‘அது என்? வேதபரீக்ஷை வேணுமாகில் அத்தைச்செய்வது, சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில்
அத்தைப் பரீக்ஷிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போதும்; அதற்கு உம்மைச்சொல்ல வொண்ணாது,’ என்ன,
‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலே காண்,’ என்ன, புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கைவிட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால்
‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.
———
அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-
சர்வேசுவரனை அடைந்து அற்பப் பிரயோஜனங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள் மக்கள் ஆகார்,’கேவலம் ஆத்தும அநுசந்தானத்தைப் பண்ணி, சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனிடத்திலே நெஞ்சு போகாதபடி நெஞ்சை இறுகப் பிடிக்க வல்ல தாழ்ந்தவர்கள் நீங்க மற்று உள்ளார் எல்லாம்.-யாத்ருச தாத்ருச -நின்ற நின்ற நிலையிலே வாரும் -பக்தியிலே குறைந்தார்களும் மிக்கார்களும் -என்றவாறு –
அமர நினைந்து எழுந்து அலற்றுவதே கருமம் – வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்களாய் இறைவனை நெஞ்சிலே பொருந்த அனுசந்தித்து, அவ் வனுசந்தானத்தாலே வந்து மகிழ்ச்சி கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அடைவு கெட ஏத்தும் இதுவே செய்யத்தக்க காரியம்.-பக்திபாகம் பிறவாதார்க்கும் நிஷ் பன்ன பக்திக ப்ரவ்ருத்தியை அநு விதானம் பண்ணுகை பிராப்தம் -என்று கருத்து –
————
கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-
ஒருமை மனத்தினுள் வைத்து – ஒரு பிரயோஜனத்துக்காக அன்றி, நெஞ்சிலே இருக்கை தானே பிரயோஜனமாக நெஞ்சிலே வைத்து.-இதனால், மேற் பாசுரத்திலே பிரயோஜநாந்தர பரரை நிந்தித்தார் என்னுமிடம் தோன்றுகிறதே அன்றோ?
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பேதைமை தீர்ந்து பிதற்றுமின்– இப்படி வேறு பலனைக் கருதாதவராய் நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய் நெகிழ்ந்து அந்த நெகிழ்ச்சியோடே இருந்த இடத்தில் இராமல் ஆடி,
‘பகவானுடைய குணங்களைக் கேட்டார் உரையும் செயலும் வேறுபட்டவராதல் விக்ருதராய் -நமக்குப் போருமோ? ‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு இருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவு கேட்டையும், இவற்றை அடையப் பொகட்டு, அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.
———
தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-
பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;-அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –அருவினை நீறு செய்யும் –பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.
———-
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-
கம் பிபதீதி கபி–கம்பீராம்ப -சமுத்பூத ச்ம்ருஷ்ட நாள- ரவி கர விகசித -புண்டரீக தல -அமல ஆயத ஈஷண-அமலங்களாக விளிக்கும் கரியவாகி –நீண்ட அப்பெரிய வாய கண்கள்
‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை.-மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை.-மீண்டும் மற்றும் என்றது, அவை தமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, எல்லாவற்றையும்.-முற்றவும், உண்டாகைக்காக இவையாய்க் கொண்டு தான் படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி இவற்றைப் படைத்தான்–அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ –சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை.
சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.-‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது.
மூவராகிய மூர்த்தி –செய்ய தாமரைக் கண்ணனாய் -உலகம் ஏழும் உண்ட அவன் கண்டீர் -என்று அந்வயம் –
———
மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-
அகில காரணாய அத்புத காரணாய நிஷ்காரணமாய் –‘பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’-தடம் கடல் கிடந்தான் தன்னை –‘இன்னம் இவர்கட்கு ஆபத்து வந்த போது நம்மைத் தேடித் திரிய ஒண்ணாது’ என்று ஏற்கவே கடலில் இடங் கொண்டவனை-தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியை- நெருப்பானது இராவணபயத்தாலே புகமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி பரவும்படி செய்ய வல்ல வில் வலியை யுடையவனை,-இதனால், பிரமன் முதலியோர் கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்த தொழிலைத் தெரிவித்தபடி.-முதல்வன் – காரணன்-தலைவன்.-தேவதேவன்-எரி எழச் செற்ற வில்லி-மனிதத்தன்மையில் பரத்துவம்-பங்கயம் தடம் கண்ணனை –-பாப நாசனாய் இல்லாமல் – பாவத்தை வளர்ப்பவன் ஆனாலும், விடவொண்ணாத படியான கண்ணழகை யுடையவனை.-பரவுமினோ–ஜிதந்தே புண்டரீகாஷே நமஸ்தே -‘தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறை கெடப் புகழுங்கோள்.
————
பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-
இராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே பற்றுங்கோள்-ஏத்துவதனாலே பரமன்’ -ஏத்தினாலும் அதற்கும் அப்பாற்பட்டவன்’ -பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை;-அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.
நித்திய ஸூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் – பவ்யன்-மணி வண்ணனை – அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை;குடக்கூத்தனை –திருக் குரவைக் கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.-மன்றம் அமர கூத்தாடி -இவன் ஆடி விட்டு போன பின்பும் கோபிமார்கள் மன்றிலே அமரும் படி –இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ –‘காலம் நடையாடாத தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார்.
ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’ என்கிறார்.
‘துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார்.-‘நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே வேண்டுவது; விஷயம் தன்னடையே கொண்டு முழுகும்,’ என்பார், ‘மனம் வைம்மினோ’ என்கிறார்;
‘நித்தியஸூரிகள் ஏத்தும் விஷயத்தை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
அறப் பெரியவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? நீங்கள் ஏத்துகிற இது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்கிறவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய விலக்காமையே பற்றாசாக வந்து கலக்குமவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது?
யாதாயினும் நேர்ந்து அணுக வேண்டும் வடிவழகையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
சேஷசயனத்தை யுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
உங்களுடைய சேர்க்கையாலே செருக்கியிருக்கிறவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
ஒரு கால நியதி உண்டாய் இருக்கின்றீர்களோ? ஏத்துகைக்குச் சாதனம் இல்லாதவர்களாய்த்தான் இருக்கின்றீர்களோ?
அதில் ஒரு அருமை உண்டாய்த்தான் இருக்கின்றீர்களோ?
ஆன பின்னர், விஷயங்களிலே ஓடித்திரிந்த மனத்தினை மீட்டு இவ்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்,’ –ஓவாதே என்றும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே நெஞ்சை வையுங்கோள் —-விஷய வைலக்ஷண்யத்தாலே இது தானே கொண்டு முழுகும் என்று கருத்து —
————
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-
செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும் தடையின்றிக்கே புக்குப் பற்றும்படியாக இருக்கிற சீலகுணத்தைப் பேசுகிறார்.-பாடித் திரிவனே’ என்னுமாறு போலே. வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச் செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின்,-‘செம்மையால் திரிவர்’ என்கிறது;-அளவிறந்த நீர்மையை யுடையனாய் இருந்தவன் அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களைக் கை விடுமோ -என்கிறார் –
————-
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-
ஆஸ்ரித பரதந்த்ர தயா நிர்வதிக தேஜஸான திரு அபிஷேகத்தை உடையனான சர்வேஸ்வரனுடைய தோற்றரவு –பிரகாசம் -என்னுதல் -அவதாரம் என்னுதல்-
———
தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-
தனக்கு மேல் ஒரு இனிய பொருள் இல்லாதவனான-நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை உத்தேசியமாக உடையேன் அல்லேன், காலன் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்,’ என்கிறார்.-பரோபதேசம் செய்து கொண்டு –இங்கு ஸூய அனுபவம் -தம்மைப் போலே சம்சாரிகளும் இருக்க வேண்டும் என்று காட்ட அருளிச் செய்கிறார் -இதுவும் பர உபதேச உக்தி-
இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின்,‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது.
இனி, ‘சீற்றத்தோடு’ என்பதனை ‘ஒரு மூர்த்தி’ என்பதற்கு அடையாக்கலுமாம். -சீற்றமே வடிவு கொண்ட ஒரு மூர்த்தி -என்றவாறு —
‘இரணியன் பக்கல் சீற்றமும் செல்லா நிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானை மேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச் செய்தார்.
‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச் செய்தார் என்றபடி. எழுமைக்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க, நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?சீற்றத்தோடு அருள் பெற்றவன் -என்று சிஸூபாலனாகவும் சொல்லுவர் –
————-
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-
இப்படிச் சுலபனானவன் பக்கல் அரியன் என்னும் ஐயத்தை நீக்கி அவனைப் பற்றுங்கோள்,
உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.மணி வண்ணனைக் குடக்கூத்தனை –வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் – நிறம்.-இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம்.-இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.-தொழுமின் – இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடி நீர்? பால்குடிக்கக் கால் பிடிக்கிறேன் அன்றோ?
———–
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-
இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால்,-இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று
உமிழ்ந்து பார்க்குமவனை; வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே.‘தயரதன் மகன்’ என்னாதே, தயரதற்கு மகன் தன்னை’ என்கிறது,-ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய், ‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’என்னா, இப்படிச் சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்-
அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே –இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன,
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என் சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -போலே – ‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது பாவநத்வத்தைப் பற்ற; இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச் செய்தார்.போக்யத்தை பற்ற இவர் இடம் -மற்றவர்கள் -பாவனத்வம் -இவரையே அனுபவிக்க ஆழ்வார் –
ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்-ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி – ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை – பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் –
பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக,
சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன,
‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? ‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில் மொழிந்து அரக்கன், மன்னூர்தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே, பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி;-பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.-இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.
‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம்,
பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;-இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய் இருக்கும்.-‘ஒரு சிறாயை நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்;-அதைப் போன்ற நம்பிக்கையாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச் செய்தார்-
————–
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-
நீங்கள் விரும்பியபடியே உகந்தருளப் பண்ண,-அத்திருமேனியையே இவ்வுலக சம்பந்தமில்லாத தெய்வத் திருமேனியைப் போன்று விரும்பும் அர்ச்சாவதாரத்தைப் பற்றுமின்,’ என்கிறார்-இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம்
இழவுக்குக் கண்ணநீர் பாயவேண்டாத தந்தையாய் இருப்பான்.-தஞ்சமாகி தாய் -தஞ்சமாகிய தந்தை -தஞ்சமாகிய தான் –‘தஞ்சமாகிய தானும்’ என்று ஓதியது என்?’ என்னில், -அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்-ஆகையாலே, தனக்குத்தான் தஞ்சம் அல்லன்.-
அவன் இவன் என்று கூழேன்மின் –‘அவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களால் அளவிடமுடியாதவனாய் அசாதாரண விக்கிரஹத்தோடே நித்தியஸூரிகளுக்கு
அனுபவிக்கப்படுகின்றவனாய்க் கொண்டிருக்கிறான் ஒருவன்;
இவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களாற்பிற்பட்டு, நாம் விரும்பியது ஒரு பொருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு இவ்வழியாலே நம் புத்திக்கு உரிமைப்பட்டவனாய் இருப்பான் ஒருவன்;
ஆன பின்பு, அவன் அளவிடப்படாதவன்; இவன் அளவிற்கு உட்பட்டவன்,’ என்று இங்ஙனம் சந்தேகம் பொருந்திய மனம் உடையவர் ஆகாதே கொள்ளுங்கோள்.
நெஞ்சினால் நினைப்பான் எவன் – மனத்தினாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினீர்கள்-நீள்கடல் வண்ணன் அவன் ஆகும் – அளவிட முடியாத பெருமையையுடைய சர்வேசுவரன் அதனையே தனக்கு அசாதாரண விக்கிரஹமாகக் கொண்டு விரும்பும்.
‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே; சமமாகப் பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.
‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனே நீள்கடல் வண்ணன் ஆகும்’ என்று கொண்டு கூட்டி,‘அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூதியாக நினையாதே, இங்குத்தைக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்,’ என்று பணிப்பர் ஆண்டான்.நெஞ்சால் நினைக்கும் அங்குத்தைக்கும் -உகந்து அருளினை நிலம் விபூதி சேஷம் அர்ச்சை என்று நினையாதே-அர்ச்சைக்கு பரவாசுதேவன் சேஷன் என்பர் முதலியாண்டான்
தெளி விசும்பு திரு நாடும் அர்ச்சையிலே சேர்த்தே -108-திவ்ய தேசம்
இவ்வுலக சம்பந்தமில்லாத விக்கிரகத்திலே செலுத்தும் விருப்பத்தை அர்ச்சாவதாரத்தில் செலுத்தமுடியுமோ?’ எனின்,-அசாதாரண விக்கிரகத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் விரும்பி மேற்கொண்டது’ என்றுதானே?-அதைப் போன்று, இதுவும் அவன் விரும்பி மேற்கொண்டானாகில், ஆதரிக்கத் தட்டு இல்லையே?-முதல் தன்னிலே அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும்‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ?-அது காரியமாய்ப் பயன் தருமிடத்திலே அன்றோ மிகவும் உறைக்க இருப்பது?ஆகையாலே, நீள் கடல் வண்ணன் அவன் ஆகும்.-அர்ச்சாவதார சேதன புத்தியால் மூச்சு விடுவான் உண்பான் அன்றோ –
———–
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
தாம் உபதேசிக்கத் தொடங்கின சௌலப்யத்தை அர்ச்சாவதாரம் முடிவாக அருளிச்செய்து, பின், தன் துறையான கிருஷ்ணாவதாரத்திலே போய், ‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ!’ என்னும் மனக் குறைவோடே தலைக்கட்டுகிறார். ‘தயரதற்கு மகன்தன்னை அன்றிமற்றிலேன்’ என்றது செய்வது என்?’ என்னில், கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை காணுமளவுமே இது சொல்லுகிறது. கிருஷ்ணாவதாரத்திற்காட்டிலும் அர்ச்சாவதாரத்துக்குச் சௌலப்யம் மிக்கிருந்ததே யாகிலும், இவர் ‘எத்திறம்!’ என்று ஆழங்காற்பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று.
விண்ணவர் கருமாணிக்கம்’ என்றதனால், நித்திய ஸூரிகளுக்கு அனுபவிக்கத் தகுந்த விக்கிரகத்தையுடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘பட அரவின் அணைக் கிடந்த’ என்றதனால், அங்குநின்றும் பேர்ந்து, பிரமன் முதலியோர் கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்கடலிலே அணித்தாய் வந்து கண்வளர்ந்தருளுகிறவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘கண்ணன்’ என்றதனால், அங்கு நின்றும் பேர்ந்து எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தமையைத் தெரிவித்தபடி.
தேர் கடவிய பெருமான் கனை கழல் –‘சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.
கண்கள் காண்பது என்று கொலோ– இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?
‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி.-இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே –
————-
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-
காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய் காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார். இவர்க்குப் பிரிவாவது, புறக்கண்களால் காணவேண்டும் என்னும் நசையாலே மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம். கலவியாவது புறக்கண்களால் நேரே காண்டலைப் போன்று உட்கண்ணால் காண்டல்.-நித்தியஸூரிகளுக்கு அனுபவிக்கத் தக்கவன் ஆனாற்போலே, சமுசாரிகள் என்று வாசிவையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து சுலபன் ஆனவனை.
1- பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், -2-சாஸ்திர ஞானமாதல்,
3- நற்குருவின் உபதேசமாதல், 4-பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார்.
ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.-கல்லுவார்கள் -தோண்டுவார்கள் கற்பார்கள் அப்யசிப்பார்கள்-
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக–எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –-என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்-உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது-உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
—————
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-
என்றும் ஒக்கப்புகர் விஞ்சி வாராநிற்குமாதலின், ‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார்.-பயிலுகை – செறிகை. சுடர் என்றும், ஒளி என்றும் தேஜஸ்ஸாய் ‘மிக்க தேஜஸ்’ என்கை. அன்றியே, ஒளி – அழகுமாம்.
அன்றியே,‘பயிலும்’ என்பதனை ‘மூர்த்திக்கு’ அடைமொழியாக்கி, என்றும் உளதாந் தன்மையைச் சொல்லிற்றாகக் கோடலுமாம்.-என்றும் உளதாவதாவது, எல்லாக்காலத்திலும் இருப்பது ஒன்று ஆகையாலே, ‘பயிலும்’ என நிகழ் காலத்தால் அருளிச்செய்கின்றார்.
பங்கயக் கண்ணனை –வடிவழகு எல்லாம் பாதியும், கண்ணழகு பாதியுமாயிருக்கும்.-
‘ராம: கமல பத்ராக்ஷ:’ என்னுமாறு போன்று, வடிவிலே துவக்கு உண்பாரை வளைத்துக் கொள்வது கண் அழகாயிற்று.-ஒரு சுடர்க்கடல் போலே ஆயிற்று வடிவு; அது பரப்பு மாறத் தாமரை பூத்தாற்போலே ஆயிற்றுக் கண் அழகு.-வடிவுதானே கவரும் தன்மையது? அதற்கு மேலே அகவாயில் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கும் பிரகாசகமாய் இருக்குமன்றோ திருக் கண்கள்?காணாது கண்டவனுக்கும் ‘பண்டு கண்டு விட்ட முகமோ?’ என்று தோன்றியிருக்கும்; சில நாள் பழகினால், பண்டு இவரை நாம் கண்டு அறியோமே!’ என்று தோன்றியிருக்கும்’ என்றபடி.‘ஆயின், இரண்டற்கும் சொல் ஒத்திருக்க, இப்பொருளைக் காட்டும்படி எங்ஙனே?’ என்று நான்-நம்பிள்ளை – கேட்டேன்;
‘பயில்கின்றாளால்’ என்று முதல் முன்னம் பார்த்த நிலையோடு பார்த்துப் பின்னர்க் கலங்கிய நிலையோடு வேற்றுமை அற வார்த்தை இதுவேயாய் இருந்தது கண்டீரே’ என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.-வர்த்தமான பிரயோகம் —-தெரிந்த பின்பு தெரியாதது என்று அறிந்தேன் -அறிந்தேன் என்பவன் அறியாதவன் -என்று ஸ்ருதி சொல்லுமே –
பயிலும் திருவுடையார் –‘நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று முகம் காட்டுவித்துக்கொண்டு பிரயோஜனத்திற்கு மடி யேற்கை யன்றியே,-அவன் தன்னையே பிரயோஜனமாகப்பற்றி நெருங்கும் செல்வமுடையார்-அவன் இறைமைத்தன்மைக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே,-இவர்கள் அடிமைக்கு எல்லையாய் முடி கவித்திருப்பவர்களாதலின், ‘திருவுடையார்’ என்கிறார்.-‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ‘ஸது நாகவரஸ் ஸ்ரீமான் -‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’-லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:-
பயிலும் பிறப்பிடை தோறு –
மேன்மேல் என நெருங்கி வருகிற பிறவிகளில் அவகாசங்கள்தோறும். ‘நின் பன் மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்’ என்று வெறுக்கத் தக்கதாகச் சொன்ன பிறவி தன்னையே விரும்புகிறார் இப்போது; பாகவதர்களுக்கு அடிமைப்படுவதற்கு உறுப்பு ஆகையாலே
. ‘மேன்மேல் எனப் பிறவிகள் உண்டாகவும் அமையும்; ஒரு பாகவதர் ஸ்ரீ பாதத்திலே வசிக்கப்பெறில்’ என்கிறார்
எம்மை ஆளும் பரமர் – என்னை அடிமை கொள்ளக்கூடிய ஸ்வாமிகள். ‘முன்பு அவனைப் ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களைப் ‘பரமர்’ என்னாநின்றீர்;-இது இருக்கும்படி என்?’ என்னில், அனுபவிக்கும் குணங்களின் மிகுதியாலே சொல்லிற்று அங்கு;
இங்கு, அக்குணங்களுக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது. ‘நன்று; ‘எவரேலும்’ எனின், அமையாதோ? ‘பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம். குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்–
————-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-
ஆளும் பரமனை- இவ் வஸ்துவை ஆளும் போது ஒப்பு இல்லாதவனை –அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -அடியாரை விரும்புவது அவன் அடியாக அன்றோ?-அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை’-ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை’-எதிர் சூழல் புக்கு ஒரு பிறவியிலே இவனை அடிமை கொள்ளுகைக்காகத் தான் பல பிறவிகளை எடுத்துத் திரிகின்றவன்’ -ஒரு கையிலே-சிந்தனையிலே- ஏறி விரோதிகளை அழியச் செய்பவன்-‘கருதும் இடம் பொருது-நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்-கையும் திருவாழியுமான அழகினை அடியார்கட்கு ஆக்கி அதனைக் கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி அது தன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின், ‘ஆழிப்பிரான்’ என்கிறார்.-தோளும் ஓர் நான்குடை –விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள்தாமே அமைந்திருக்கை-ஆழ்வாரை அடியார்க்கு ஆட்படுத்த ஹர்ஷத்தால் நான்கு தோள்கள் ஆயினவாம் பூரித்து –-
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும் போது அனந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் சர்வேசுவரன் நாற்றோளனாயோ,-இரு தோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, ‘ஏகாயநர் இருதோளன் என்னாநின்றார்கள்; நம்முடையவர்கள் நாற்றோளன் என்னாநின்றார்கள்,’ என்ன,
‘இரண்டிலும் வழி யாது?’ என்ன, ‘இருதோளனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது;-நாற்றோளன் என்று தோன்றிற்றாகில் பெருமாளைப் போலே இருக்கிறது,’ என்று அருளிச்செய்தார்;
முக்த கண்டமாக பரிகரியாதே -தெளிவாக சொல்லாமல் -அனந்தாழ்வான் -கௌரவ்யர் -அவர் முன்னே சொல்லக் கூடாது சின்னப் பிள்ளை தாம் என்று – ஜ்ஞ்ஞார்க்கு இரு கைகள் -ஞானாதிகருக்கு தெளியக் கண்ட -காட்டக் கண்ட -கையினார் சுரி சங்கு -என்றாரே -சதுர் புஜம் காட்டி அருளுவார்-நம்மளவு அன்றியே தெரியக் கண்டவர்கள் ‘கையினார் சுரிசங்கு அனல் ஆழியர்’ என்றார்கள் அன்றோ பெரிய பெருமாளை?-ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது? ‘மறைத்துக்கொள்க’ என்ன,-மறைத்தான் மற்றைத் தோள்களை. நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன, ‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்,-சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன,-வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராய் இருக்க, ‘பிரமாணப் போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச் செய்தார்.
தூ மணிவண்ணன் எம்மான் தன்னை – பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கிற வடிவழகைக் காட்டி என்னைத் தனக்கே உரிமையாக்கினவனை.-இதனால், சிலரை அகப்படுத்துகைக்குத் தோள்கள் தாமும் மிகையாம்படி இருக்கிற வடிவழகைத் தெரிவித்தபடி.-அடியார் பக்கலிலே சென்ற மனத்தை யுடையராய்ப் போவாரை நடுவே வழி பறிக்கும் வடிவழகுடையவன் ஆதலின், ‘எம்மான்’ என்கிறார்.‘அடியாரை விரும்பும்படி செய்ததும் இவ்வடிவழகாலேயாதலின், ‘எம்மான்’ என்கிறார்’-தன்னிடம் அடிமை கொள்வதற்கும் -ததீயர் இடம் போவாரை வழி பறிக்கவும் -இதே அழ்கு-ததீயர் இடம் ஆட்செய்ய்து அருளுவதற்கும் இதே அழ்கு தான்-குண கிருத தாஷ்யத்துடன் நாம் போனோம் -வழி பறித்து ஸ்வரூபம் உணர்த்தி ஆள் படுத்தி வைக்கிறான்-இவ்வழகை அனுபவித்துத் தொழ என்றால் தாளும் தோளும் பணைத்துக் கொடுக்குமவர்கள்;
தாள் கூப்புகையாவது, அநந்யகதியாகை; கைகூப்புகையாவது, அகிஞ்சன் ஆகை.ஆக இரண்டாலும் ஒக்க ஏறின பிரயோஜனம், அபிமான பங்கமாய் -உபாயாந்தரம் கத்யந்தரம் இல்லாமல் -வான மா மலை- திருக்குடந்தை பதிகங்கள் -காட்டிய படி –
எம்மை ஆளுடை நாதரே – ‘வடிவழகாலேயாதல், குணங்களாலேயாதல், யாதேனும் ஒரு காரணத்தாலே அடிமை கொள்ள வேண்டுவது ஈசுவரனுக்காயிற்று,
ஒரு காரணமும் இன்றியே அடிமை கொள்வார் இவர்கள்,’ என்பார், ‘எம்மை ஆளுடை நாதர்’ என்கிறார்.-காரணம் இல்லை என்கிறது என்? பகவானுடைய அநுமதி முதலானவைகள் வேண்டாவோ?’ எனின், அவனதானால்,-எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’ என்றார் பட்டர் பிரானும்.
————–
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-
பலகால் திருவாழியைச் சொல்லுவான் என்?’ எனின்,-இராஜகுமாரர்களுக்குப் பிடிதோறும் நெய் வேண்டுமாறு போன்று, இவரும் ‘ஆழிப்பிரான்’ என்பது,-‘பொன் நெடுஞ்சக்கரத்து எந்தை பிரான்’ என்பதாய் அடிக்கடி கையும் திருவாழியுமான சேர்த்தியை அனுபவிக்கிறார்.வல்லாரைப் பணியுமவர் கண்டீர் –-ஈசுவரன் பக்கல் உட்பட அசூயை பண்ணாநின்றால் அடியார் பக்கல் சொல்ல வேண்டுமோ? இறைவன் பக்கல் அவனுடைய
பெருமையாலே வணங்கவுமாம்; ’நான் ஒருவருக்கும் உரியன் அல்லேன்,’ என்று இருக்கவுமாம்;-சோறு தண்ணீர் முதலியவற்றாலே தரிக்கிற இவர்கள் பக்கல் பணிய மனம் பொருந்தாதே அன்றோ? தோன்றுகிற உருவத்தைப் போகட்டு அடியராய் இருக்கின்ற தன்மையையே பார்த்து விரும்பும்போது அதற்குத் தக்க அளவு உடையவனாக வேண்டும்;
ஆதலின், ‘வல்லாரைப் பணியுமவர் கண்டீர்’ என்கிறார்.
‘ஆயின், அவதரித்துச் சுலபராய் இருக்கிறவர்களைத் தோன்றுகின்ற வடிவத்தை நோக்கி வெறுக்கக் கூடுமோ?’ எனின் சௌலப்யந்தானே நறுகு முறுகு -பொறாமை -என்று முடிந்து போகைக்கு உடலாயிற்று அன்றோ சிசுபாலன் முதலியோர்கட்கு?
‘பிள்ளையாத்தான் என்று போர நல்லனாய் இருப்பான் ஒருவன், நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே வந்து ‘எனக்கு ஓர் உரு திருவாய்மொழி அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன, ‘உனக்கு விளக்கமாகத் தெரிவது நம்பிள்ளையோடே கேட்டால் ஆயிற்று; அங்கே கேள்,’என்ன,
‘அவரைத் தண்டன் இடவேண்டுமே?’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேண்டுமாகில் செய்கிறாய்,’ என்று என்னை அழைத்து, ‘இவனுக்குப் பாங்கானபடி ஓர் உரு திருவாய்மொழி சொல்லும்,’ என்ன, இவ்வளவும் வரக் கேட்டவாறே, எனக்குத் தண்டன் இடப்புக,
நான் ஒட்டாதொழிய, சீயர் பாடே சென்று ‘இவ்வர்த்தத்தினுடைய சீர்மை அறியாமையாலே முன்பு அப்படிச் சொன்னேன்; இனி, நான் வணங்குவதற்கு இசையும்படி அருளிச் செய்ய வேண்டும்,’ என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து, அவன் வணக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளச் செய்தான்,’ என்று அருளிச் செய்வர்.–நம்பிள்ளை –
எம்மை ஆள் உடையார்களே– ‘அடியார்கள் குழாங்கள்’ என்றும், ‘அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’ என்றும் ஒரு தேச விசேடத்திலே அடிமை செய்வது இவர்களுக்கே அன்றோ? அதனை இங்கே கொள்ளக் கூடியவர்கள் இவர்கள். ‘திருமகள் கேள்வன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, பொதுவான தலைவனாந்தன்மையே அன்றோ இறைவனுக்குஉள்ளது? மயர்வு அற மதிநலம் அருளி விசேஷ கடாக்ஷம் பெற்ற எம் போல்வார்க்குத் தலைவர்கள் இவர்களே என்பார், ‘எம்மை ஆளுடையார்கள்’ என்கிறார்.
வீரப்பிள்ளையும், பாலிகை வாளிப்பிள்ளையும் என்ற இருவர், நஞ்சீயர் ஸ்ரீபாதத்தில் விருப்பம் உள்ளாராய், தங்களிலே செறிந்து போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப்பு உண்டாய்த் தங்களில் வார்த்தை சொல்லாதேயிருக்க, இவர்களைப் பார்த்துப்
‘பிள்ளைகாள்! பொருள் இன்பங்கள் தியாச்சியம் அல்லாமையோ, பகவத் விஷயம் அராட்டுப் பிராட்டாயோ,-அல்பம் என்றோ – ஒரு ஸ்ரீவைஷ்ணவனும் ஸ்ரீவைஷ்ணவனும் தங்களிலே வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?’ என்ன, இருவரும் எழுந்திருந்து
தெண்டனிட்டுச் சேர்ந்தவர்களாய்ப் போனார்கள்.–ததீய சேஷத்வம் புரிந்தோம் -பரஸ்பர நீச பாவம் வேண்டுமே –
————
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-
திரு அரை மலர்ந்தது போன்று இருக்கின்ற பட்டாடை’,-படிச்சோதி ஆடையோடும் பல் கலனாய் —-கடிச்சோதி கலந்ததுவோ -இதுவே யாத்ரையாய் இருக்கும்-சாஷாத் மன்மத மன்மதன் -அவனுக்கும் மடல் எடுக்க வேண்டி இருக்குமே –கண்டிகையன் –‘கூறை யுடை அழகு மேலே எழ வீசிப் போகாநிற்க, நடுவே வழி பறித்துக்கொள்ளும் திருக்கழுத்தில் ஆபரணம்,-இவரை மடி பிடித்துக்கொண்டு போய்க் கழுத்தளவு-முழு அனுபவம்- வனப்பிலே நிறுத்திற்று’ என்றபடி.-மடி-புடைவை. கண்டிகை-கண்டத்திலே சார்த்துமவை;ஆரம். உடை நாணினன் –-அரைநூல் வடத்தை உடையவன்; கழுத்தே கட்டளையாக அனுபவியாநிற்க,-கழுத்தே கட்டளையாக -முழு அனுபவம் என்றவாறு – கண்டத்திலேயுள்ள அழகுத் திரைகள் -சௌந்தர்ய தரங்கங்கள் -கீழே போர வீச, நடுவே நின்று அனுபவிக்கிறார்.
புடையார் பொன் நூலினன் – தான் கிடந்த பக்கத்தில் வேறோர் ஆபரணம் வேண்டாதே, காளமேகத்திலே மின்னியது போன்று இருக்கின்ற பூணூலை யுடையவன்.
இந்த அழகுக் கடலின் நடுவே அலையப் புக்கவாறே, தமக்குப் பற்றுக்கோடாக ஒரு நூலைப் பற்றினார் காணும்.-பொன் முடியன் – ‘தேர் கடவிய பெருமான்’ என்கிறபடியே, அடியார்கட்கு ஆட்செய்கைக்கு முடி கவித்திருக்கின்றவன்;-ஒரு நூலைப் பற்றி நின்றவர்களை அதுதானே ஒரு தலை சேர்த்து விடுகை நிச்சயம் அன்றோ?-திரு நாரணன் – அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலே காணும்; ‘உன் திருமார்வத்து மாலை நங்கை’ -10-10-2-என்பர் மேல்-இம் மிதுனமே உலகத்துக்குச் சேஷி-அடைமொழி இல்லாமல் தொண்டர் தொண்டர் -வெறும் புறத்திலே சேஷிகள் -ஸ்வரூப க்ருத தாஸ்யம் -அவர்கள், எங்களை எண்ணாதே இருந்த போதும் எமக்கு ஸ்வாமிகளே யாவர்- எமக்கு எம் பெருமக்களே’ என்கிறார்.‘எங்களுக்கே உரிய தலைவர்கள்’ என்றபடி.-அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று
அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள்–தொண்டர் தொண்டர் கண்டீர் -தங்கள் அபிப்ராயத்தால் தொண்டர் -எம் நினைவால் அசாதாராண சேஷிகள் -என்கிறார் -பிரணவ அர்த்தம் –
———-
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-
பெருமக்கள்-நித்தியஸூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. ‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ –உள்ளவர் –அசந்நேவ-சந்தமேவ ஆகாமல் நித்யர்கள்-நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார்’-பெரிய திருமொழி–2-6-1-அன்றோ?
அப்பன் – உபகாரகன்.- குழந்தைகட்குத் தாய் பண்ணும் உபகாரமாவது, அதன் முகம் வாடாமல் வளர்த்தலே அன்றோ?-நம்மை அளிக்கும் பிராக்கள் – நம்மை உஜ்ஜீவிக்கும் ஸ்வாமிகள். – சர்வேசுவரன் ஒரு நாள்வரையிலே தன்னிடத்தில் ஒடுக்கி வைத்து, ஒரு நாள் வரையிலே சமுசாரத்திலே தரு துயரம் தடாதே வைப்பான் அன்றோ? ஸ்ரீவைஷ்ணவர்களோடே சேர்ந்து வசிக்கப் பெறில் ‘சமுசாரந்தானே நன்று’ என்னும்படி அன்றோ அவர்கள் படி?ஆதலின், ‘அளிக்கும் பிராக்களே’ எனத் தேற்றேகாரங் கொடுத்து ஓதுகிறார்.-மேலே ‘நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் உறுமோ?’ என்றாரே அன்றோ?-
—————-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-
அளித்தல் – காத்தலும், கொடுத்தலும்.-அளிப்பது தன்னையே அன்றோ? ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’-தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற
ஆழிப்பிரான் தன்னை–‘நாயுதாநி–‘பக்தாநாம் – பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை. இதனால், ‘ஆளும் பரமனை’ என்ற பாசுரத்தை நினைக்கிறது-துளிக்கும் நறுங்கண்ணி – அவ்வளவில் அகப்படாதாரை அகப்படுத்துகைக்கு ஈடான கண்ணி-மிருகம் வளைக்க -கண்ணி போட்டு பிடிப்பது போலே -ஆயுதத்தால் அகப்படாதவரை இத்தைக் கொண்டு அகப்படுத்த -நாதனை’ என்ற பாசுரத்தில், நறுந்துழாய்ப் போதனை’ என்ற பகுதியை நினைக்கிறது.-தூ மணி வண்ணன் எம்மான் தன்னை – பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கின்ற திருநிறத்தைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாம்படி செய்தவனை;-தோளும் ஓர் நான்குடைத் தூ மணி வண்ணன்’ என்ற பகுதியை நினைக்கிறது.-ஒளிக்கொண்ட சோதியை –-பயிலும் சுடர் ஒளி’ என்ற பகுதியை நினைக்கிறது.-
எம்மைச் சலிப்பு இன்றி ஆண்டு –-அடியார்கட்கு அடிமை என்னும் அளவு ஆனால் ஆயிற்று மீளாதொழிவது; ஆதலின், ‘சலிப்பின்றி ஆண்டு’ என்கிறது. ‘ஆயின், அடியார்கட்கு அடிமை என்னும் அளவு சென்றும் மீளுகின்ற பேர் உளரே?’ எனின், மீண்டார்களாகிலும், திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பரித்தனையே.சன்ம சன்மாந்தரம் காப்பர் –ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி பாதுகாப்பார்கள். மேற் பாசுரங்களிலே ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ஆதரத்தாலே பிறவியை ஆதரித்தார்;
இப் பாசுரத்தில் அவர்கள் செய்யும்படியைச் சொல்லுகிறார்.-
—————-
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-
‘மரணமானால்’ என்கிறபடியே, சரீரம் பிரியுமளவும் பொறுத்திருந்து– உயிர் உடம்பின் நீங்குங் காலத்து நினையும் நினைவையும் பத்தியையும் இவர்களுடைய பணியாக்காமல் –’அஹம் ஸ்மராமி – நானே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,
தானே நினைத்து, வழி தெரியாதபடி இருக்கின்ற நூற்றோராவது நாடியாலே
‘ஆர்த்தனான பரம புருஷனால் அநுக்கிரஹிக்கப்பட்டவனாய்’ என்கிறபடியே, தான் கூடக் கொண்டு புறப்பட்டு,-அச் சரீரத்தின் பிரிவு சமயத்திலே இவன் பட்ட வருத்தமெல்லாம் தீரும்படியாக அவ்வளவிலே ஒரு பரமாத்தும பிரவேசத்தைப் பண்ணுவித்து,
சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று அவ்வளவிலே மேல் வழி போகைக்குத் தரிப்பு உண்டாம்படி செய்து, ’உயிர்கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி, அயர்வென்ற தீர்ப்பான்’ என்கிறபடியே
சென்று முகங்கொடுத்து, கர்ம சம்பந்தம் அற்றிருப்பினும் வித்யா மஹாத்மியத்தாலே விரஜையளவும் சூக்ஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி அர்ச்சிராதி கணங்களோடு ஒக்க ஆள் இட்டிராமல், ‘நயாமி – அடையச்செய்கிறேன்’ என்கிறபடியே,
தானே வந்து ‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ என்கிற ‘கள்வன்கொல்’ என்கிற திருப்பதிகத்திலே பிராட்டியைப் போலே தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வருகுள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு,
’இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளை யடைந்து’ என்கிறபடியே தனக்கே உரியதான உருவத்தோடு விளங்கும்படியாகச் செய்து,
பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு, இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை. ‘எவர் ஒருவர் மிக்க பத்தியையுடையவராய் உபாசனை செய்து எனது சாயுஜ்ய பதவியை அடைகின்றாரோ அவர் விரோதி கழிந்தவராய்
எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்,’ எனப்படுதலால் ‘தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்’ என்கிறார்.
‘தன்மை பெறுத்தி’ என்றது, ‘தனது சொரூபம் தோன்றும்படி செய்து’ என்றவாறு.
இதுதன்னை இவன் அறிவினை உடையவன் ஆகையாலே உபகாரமாக நினைத்திருப்பான்;
பாரதந்திரியத்தாலே அவன் தனக்காகச் செய்தானாக இருப்பான் ஆதலின், ‘அப்பனை’ என்கிறார்.
பிதற்றுமவர் கண்டீர் –‘அந்தப்புர விருத்தாந்தம் இவர்களுக்கு நிலையாவதே!’ என்று அவர்கள் விஷயத்திலே ஈடுபட்டு ஏத்துமவர்கள் தாம்.-நன்மை பெறுத்து –பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் ஆகிற செல்வத்தை உண்டாக்கி-எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே – நமக்கு அவன் திருவடிகளில் கைங்கரியத்தை உயிர் உள்ள வரையிலும் நடத்தக்கூடிய நம்பத்தக்கவர்கள்;
இனி, ‘நம்பர்’ என்பதற்கு, ‘முதலிகள்’ என்னலுமாம்.-
——–
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-
‘மேற்பாசுரத்திலே அடியார்களை நம்பர் என்றாரே?’ எனின், ‘மேற்சொன்னவர்களும் நம்பர் ஆகைக்கு அடியானவனை என்கிறார்’ இப்பாசுரத்தில்.-இதனால், ‘இவனை ஒழிந்த பந்துக்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர்’ என்கை;-ஞாலம் படைத்தவனை – தனக்கு, தானும் இன்றிக்கே பிறரும் இன்றிக்கே-அறிவு இல் பொருளைப் போன்று கிடக்கிற நிலையிலே பேற்றிக்கு உபயோகமான சரீரத்தை உண்டாக்கினவனை.–அது யாருக்குப் பிரியமாக?’ என்னில்,-திருமார்பனை – அவளுக்குப் பிரியமாக.
‘பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக்கொண்டு அந்த முகத்தின் குறிப்புகளைப் பின் சென்றவனாய்ப் படைத்தல் முதலான காரியங்களைச் செய்கிறான்,’ என்னக்கடவதன்றோ?-
–யஸ்யா வீஷ்யா முகம் –தத் இங்கித பராதீனன் -விதத்தே அகிலம் –ஐகரஸ்யம்–ப்ரூ பங்கமே பிரமாணம் –எத்தகைய தீவினையாளரேயாகிலும், அவ்விருப்பிலே நமக்கு அடையத்தக்கவர்.-எம் பல் பிறப்பிடை தோறு எம் தொழுகுலம் தாங்கள் – நம்முடைய பல வகைப்பட்ட பிறவிகளிலே இடங்கள்தோறும் திருநாமத்தைச் சொன்னவர்கள் மாத்திரமே அன்று எனக்கு உத்தேஸ்யர்;-அவர்கள் குலங்களாக எங்கள் குலத்துக்கு ஆசாரியர் ஆவார்கள். ‘அங்குத் துக்க அனுபவம் பண்ணாநிற்க, திருநாமத்தைச் சொல்லக்கூடுமோ?’ என்னில், ‘துன்பத்தின் மிகுதியாலே, ‘அம்மே! அப்பா!’ என்னக்கூடாதோ?’ என்று காணும் இவர்க்கு நினைவு.-இவர்க்கு நினைவு’ என்கையாலே, ‘துக்கத்தை அனுபவிக்கும் சமயத்தில் திருநாமத்தைச் சொல்லுதல் அரிது,’ என்பது கருத்து.-
———-
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-
விருத்தவான்கள் -வ்ருத்த வான்கள் -ஒழுக்க சீலர் -சக்கர குறி வலக்குறி-அன்றோ இவர்கள் என்று கைமேலே காட்டிக்கொடுக்கிறார்-உள்ளங்கை நெல்லிக் கனி போலே -கை மேல் உள்ள சக்கரப் பொறியே பழம் –வலம் தாங்கு சக்கரத்து மணிவண்ணன் அண்ணற்கு –
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்றவர்,
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று, இவரும் மேற் பாசுரத்திலே ‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார்.
அந்தப்புரத்துக்கு காவல் வேண்டுமே -இதனால் நம்மாழ்வார் பெரியாழ்வார் -இப்படி அருளிச் செய்கிறார்கள் –விருத்தவான் அபிமானத்திலே ஒதுங்கும் இதுவே அன்றோ வேண்டுவது? அவர்கள் அவனிலும் உத்தேஸ்யர் ஆவர்கள் அன்றோ!
இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்-‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில், ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.-
————
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10-
அடி ஆர்ந்த வையம் உண்டு –அமுதுசெய்ய, முன்பே அடி இட்ட படி அன்றோ இது? தன் படிக்குக் காற்கூறும் போராததை அன்றோ அமுது செய்தது?-காலால் அளந்ததை -கால் பங்கு தான் உண்டார் -திருவடிக்கு அளவான பூமியை அமுது செய்து.-ஆல் இலை அன்ன வசம் செய்யும் – அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிரிலே உணவுக்கு ஈடாக இடம் வலங்கொள்ளும். அமுது செய்த படி ஜீரணியாமல், வலக்கை கீழ்ப்பட ஆயிற்றுக் கிடப்பது. ‘வலக்கை கீழ்ப்படக் கிடப்பான் என்?’ எனின், தந்தாம் ஜீவனத்திற்குக் கேடு வாராமல்
பாதுகாத்தல் எல்லார்க்கும் ஒக்குமே? கூழாட்படுகை அவனுக்கும் ஒத்திருக்கிறபடி.
படி யாதும் இல் குழவிப் படி –-ஒப்பு ஒன்றுமின்றியே இருக்கின்ற பிள்ளைத்தனத்தாலே. ‘யசோதையின் முலைப்பால் உண்ணும் பிள்ளையும் ஒப்பு அன்று வடதளசாயிக்கு’ என்பார்,
‘படி யாதும் இல் குழவி’ என்கிறார். ‘தொட்டில்நின்றும் தரையிலே விழப் புகுகிறோம்’ என்று அஞ்ச அறியாத இளமையே அன்றோ அங்கு? ‘ஆல் இலையினின்றும்பிரளயத்திலே விழுகிறோம்,’ என்று அஞ்ச அறியாத மௌக்த்யம் அன்றோ இங்கு?’ என்றபடி.
எந்தை பிரான் –அகடித கடநா சாமர்த்யத்தாலே என்னைத் தோற்பித்த உபகாரகன்.இறைமைத் தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று, அடிமையாம் தன்மைக்குத் தமக்கு-அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார்.தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் இவ்வளவிலே நின்றார் அல்லர்;
பாசுரத்தில் இதற்கு அவ்வருகு போக ஒண்ணாமையாலே நின்றார் இத்தனையேயாம்.-
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-7-11-
ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –இரண்டு இடத்திலும் ஒக்குங்காணும் ஐவர்க்கு அருள் செய்கை.-பாண்டவர்க்கும் -ஆழ்வாருக்கு -பஞ்ச இந்த்ரியங்கள்
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான்.
ஆழ்வார் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேசுவரனுக்கு. அவனைப் பற்றி பாடினால் பஹிரங்கமாம் -தொண்டர் மேல் பாடினால் அந்தரங்கமாம் –அவன் தொண்டர்மேல் முடிவு இவை பத்து –இதில் சர்வேசுவரனைச் சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜன கோடியிலே யாமித்தனை.-சன்மம் செய்யாமை முடியும் –
அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல் அறும்.
அடியார்க்கு அடிமையாகும் தன்மை கிட்டும் சொல்லாமல் -வியாதி போக்க சக்கரைப் பொங்கல் போலே அநிஷ்ட நிவ்ருத்தி – ஆனபின்பு இஷ்ட பிராப்தி -பாகவத கைங்கர்யம் பள்ள மடை தன்னடையே வரும் –
———–
முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-
‘பெருந்தானத்தில் பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்’ என்று அருளிச்செய்வதனால், அளபெடை கொண்ட பாடமே சிறப்புடைத்தாம்.-பொன் முடியன்’ என்றதுதான், முடியத் தொடர்ந்து வருகிறபடி.-தொடங்கின வற்றை முடிக்கிறார் –அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது? மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே – உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது? இவர்க்கு இதில் ஓடுகிற விடாயின் மிகுதி, ‘முடியானேஎ!’ என்னும் இசையின் ஓசையிலே காணலாமித்தனை-இத்தால் இசையின் முக்கியத்வம் -அரையர் சேவை -புகும் முறைகள் எல்லாம் இல்லை இதில்:நெடிலுக்கு பின்னால் குறில் வருவது அக்ரமம்
மூன்று உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானேஎ – குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லா உலகங்கட்கும் புகலிடமானதிருவடிகளையுடையவனே! திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.
மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி. ‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.
ஆழ்கடலைக் கடைந்தாய் –ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, பின்னாடுகிறபடி. இதனால், ‘இத்திருவடிகளில் இனிமையை விட்டு வேறு பிரயோஜனத்தை ஆசைப்பட்டார்க்கும் வருந்தி அவர்கள் விரும்பியவற்றைக் கொடுக்குமவன்’ என்பதனைத் தெரிவித்தவாறு.
புள் ஊர் கொடியானேஎ – தன்னை உவந்தார் பக்கல் வந்து தோற்றும்படி பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே!-அடியார்கள் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனம்; தூரத்திலே கண்டு வாராநின்றான் என்று தரிக்கைக்குக் கொடி.-கொண்டல் வண்ணா – திருவடி முதுகிலே தோன்றினபோது ஒரு மேருவைக் கினிய – கபளீகரித்த -முழுதும் அபகரித்த -காளமேகம் படிந்தாற்போலே ஆயிற்று இருப்பது –என் நெஞ்சமே –கொண்டாடிச் சொல்லுகிறார் அல்லர்;-தன் விடாய்க்கு என்செய்வேன்!’ -‘நாதா! காப்பாற்ற வேண்டாவோ! இவ்வயிறு தாரி-ஒன்றின் ஒன்றின் செயலை கேட்க்கிறதே ஒரு வயிறு இல்லையே –நெஞ்சை என்னால் பரிக்கப் போமோ?’ –பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போலே பெரிய திருவடி திருத் தோளின் மேல் ஏறி அருளி இந்த லோகத்தில் வந்து தோன்றாய் -என்று எம்பெருமானைக் காண ஆசைப்பட்ட போதே காணப் பெறாமையாலே குறைப் பட்டுக் கிடைக்கும் என் நெஞ்சம் என்கிறார்.
————–
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னா நின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது-பரமபதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.-என் வாக்கானது இவ் வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ் வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு இராமாவதாரத்தின்
செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற் செய்த இடம் அன்றோ இராமாவதாரம்?
தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.
———-
வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—
என் கைகள் வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர்தம் நாயகனே என்னும்– கைகளானவை ‘இவ்வாக்கே ஏத்திப் போமித்தனையேயோ! நானும் ஒருகால் ஏத்தினால் ஆகாதோ!’ என்னா நின்றது.‘தன் நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும்
தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே, கையிலே வெண்ணெய்த் தாழிகள் தட்டின அளவிலே பிரியத்தாலே நகைத்தலைச் செய்வான்-அவ்வாறு நகைத்தலைச் செய்யுமதுவே கை விளக்காக அமுது செய்வான்,’புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் இருக்கிறது;-அவன் கை வெண்ணெய் தடவ -கையும் மெய்யுமாக பிடிக்க ஆழ்வார் கை தடவுகிறது-வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை; அதனாலே, தேடுகின்றன’ என்னுதல். –கைகளும் மயங்கின -ஆழ்வார் அபி நிவேசம் இவற்றுக்கும் உண்டே –-‘கடல் கொண்ட பொருள் மீளுமோ?-ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –-
—————–
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-
வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி-இத்தலை தொழுது இருப்புப் பெறுமாறு போன்று, தொழுவித்துக் கொண்டு இருப்புப் பெறும் உன்னை. என்றது,
‘தொழுது அல்லது தரியாத கையாலே தொழுவித்துக்கொண்டு அல்லது தரியாத உன்னை’ என்றபடி.-பை கொள் பாம்பு ஏறி உறை பரனே – திருமேனியின் பரிசத்தாலே விரிந்திருக்கிற பணங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே இருக்கையாலே ‘பரன்’ என்கிறது.-இதனால் தொழுவித்துக் கொள்ளுகைக்கு ஈடான உயர்வு அற உயர்ந்த உயர்வினையும், விரும்பத் தக்கதாகையையும்
தொழுமவர்கள் இருக்கும்படியையும் சொல்லிற்று.-அரவு அணையான் அன்றோ சர்வேசுவரனாவான்? -பர்யங்க வித்தையிற் சொல்லுகிற பேற்றை ஆசைப்படா நின்றது என்றபடி.
மெய் கொள்ளக் காண – பத்தும் பத்தாக மெய்யே காண. என்றது, ‘மனத்தின் அனுபவம் எப்பொழுதும் இடையறாது நிற்கின்ற நினைவின் மிகுதியாலே நேரே கண்கூடாகக் காணுதலைப் போன்று நன்கு வெளிப்பட,-பாவனா பிரகர்ஷம் -உருவ வெளிப்பாடு – ‘இனிக் கிட்டிற்று’ என்று அணைக்கத் தேட, -கைக்கு எட்டாமையாலே கூப்பீட்டோடே முடிந்து போதலன்றிக்கே, பிரத்ய பிஜ்ஞார்ஹமாம்படி தேடாநின்றது,’ என்றபடி. விரும்பும் –
ஆசைப்படாநின்றது. ‘கிடைப்பது, கிடையாது ஒழிவது, ஆசைப்படுகின்றது’ என்றபடி.
என் கண்கள் தம் கைகளாலே தொழவும் தாம் காணவும் ஆசைப்படா நின்றன.
‘ஸ்ரீபரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற் போலே ஆசைப்படாநின்றன,’ என்றபடி.
————
கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-
தன்னைக் காணவேண்டும் என்று விடாய்த்த இக்கண்களாலே ஒருகால் காண வருமோ?’ என்னும் ஆசையாலே செவிகள் கிடந்து ஓர்க்கும்; கன்னம் இட்டும் காண வேண்டும்படி யன்றோ இறைவனுடைய சிறப்பு இருப்பது? பிச்சை புகினும் கற்கை நன்றே போலே திருடியும் காண வேண்டும் படி அன்றோ விஷய வை லக்ஷண்யம் -கன்னக் கோல் இட்டு காண ஆசைப்பட்டன செவிகள்-மண் கேட்ட வாமனன் -என்றும் – மண் கொண்ட திரிவிக்ரமன் சொல்லாமல் முடி சூடின பின்பும் கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார் காணும்.
அன்றியே, இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும் ‘வாமனன்’ என்கிறார் என்னுதல்.பண் கொண்ட – வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்;
அன்றி, கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல்.திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் – முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை; இதனையே திண்ணிதாகப் புத்தி பண்ணா நின்றது. அதன் பக்கல் பக்ஷபாதமன்றோ அதற்கு அடி? பெரிய திருவடியின் மேல் உள்ள ஆசை -இறகின் ஒலி கேட்க ஆசை என்றுமாம் –
———–
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-
‘கவி கனி போல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே கனி கவியாயிற்று,’ என்கிறார்.-புவியின்மேல் – ‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார்.
‘தேசம் இதுவே ஆனதைப் போன்று விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்;
பொன் நெடும் சக்கரத்து உன்னையே – விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை அடையாளமாக உடைய உன்னையே-எனது ஆவியே –
‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’ என்றால், அது கேளாது-‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.-என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது -என்கிறார் –
———–
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-
கரணங்களை ஒழியத் தம்முடைய இழவு சொல்லுகிறார். மக்களினுடைய இழவும் பசியும் சொன்னார் மேல்;-இனி, தம் இழவும் பசியும் சொல்லுகிறார். இப்பாசுரத்தில், ‘நான் மஹாபாபி ஆகையாலே, நெஞ்சின் விடாயும் தீரப்பெற்றிலேன்;-என் விடாயும் தீரப்பெற்றிலேன்,’ என்கிறார்.-ஆரமுதே- ஆர்ந்த அமுது; நிறைந்த அமுதம்; உள்ளுந்தோறும் தித்திக்கும் அமுது.-நினைக்கும் பொழுது எல்லாம் அமுதிலும் ஆற்ற இனிய அமுதே அன்றோ? தேவசாதியினுடைய அமுதைக்காட்டிலும் வேறுபாடு தோன்ற ‘ஆர் அமுது’ என்கிறார்.-இவற்றால், தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருக்க, விட்டிருக்கப் போமோ?’ என்கிறார் என்றபடி.-என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!-மற்றை அமுதத்தைக் கொண்டு வருமவனே காணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும்,‘தாரகமுமாய் இனிய பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’ என்கிறார் என்பதும் பெறுதும்.
மடல் ஊர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேன் அல்லேன்.-என் சொரூபத்தையும் அழித்தேன், அவன் சொரூபத்தையும் அழித்தேன். அவன் நீர்மையையும் அழித்தேன்,உன கோலமே –
இரண்டு தலையையும் அழித்துப் பெற வேண்டும் விஷயத்தினுடைய சிறப்புச் சொல்லுகிறது.-கண்ணும் உறங்காதே போது போக்கவும் அரிதாய் அன்றோ இருப்பது?
———
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-
கோலமே –அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி.-தத் குணசாரத்துவத்தாலே-விஜ்ஞ்ஞாதா என்னாமல் -விஜ்ஞ்ஞானம் யஜ்ஞ்ஞம் தனுதே -பண்ணும் என்பதே போலே –அப்படி அழகே விஞ்சி அதனையிட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கையாலே, ‘கோலமே!’ என்கிறார்.
அஞ்சன நீலமே –‘அஞ்சனமே! நீலமே!’ என்றபடி.-ஒன்றே உபமானமாவது ஒன்று இல்லாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்-நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே –பிரிவு காலத்தில் வடிவை மறக்கிலும் மறக்க ஒண்ணாதபடி பின்னாடி என் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கின்ற சீலமே சொரூபமானவனே! இங்கே ‘சீலம்’ என்றது, ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்கிற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை.
அன்றிக்கே,-‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.
சென்று செல்லாதன முன்னிலாம் காலமே – இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம் என்னும் மூன்று காலத்தையும் நீ இட்ட வழக்காக உடையவனே! இதனால், ‘அக்காலமும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்-உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது,-இக்காலம் தன்னையே அந்தக் காணக் கடவிய காலம் ஆக்குவம் என்றால் உன்னால் ஆக்க முடியாதோ -என்கிறார்–
———–
கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-
கொள்வன்-1-மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று.-அன்றிக்கே,2-இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு -விநீத வேஷம் கண்டு -‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, 3-இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி;
‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான்
‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து,-‘உனக்கு வேண்டுவது என்?’அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய் மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.-
புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை-வையாளி-வந்தவனே!
‘கரபாதை அன்றோஇவனை இப்படிக் கலங்கப் பண்ணிற்று’ என்று அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’‘இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி.-வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே –-சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.பிராட்டியினுடைய
வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது?ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன;
ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம் -கச்சதா மாதுல குலம் போலே – ‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக-ப்ராசங்கிகமாக – ஓர் உருவிலே அருளிச்செய்தார்-
ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் –கரபாஹை கலங்கப் பண்ணியது -அடுத்தேறாக வந்த -அடுக்கு அடுக்க -வந்தவற்றை நீக்கி -பிராப்த கரத்திலே நிறுத்தி -இரண்டில் நிறுத்தினான்
வாணன் உடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி -கரம் இல்லாமல் -என்றுமாம் –
கைப்பற்று -பரமசிவன் -இறை இல்லாமல் ஆக்கி -இறை -கரம் என்றும் அர்த்தம் உண்டே –
‘வாணனுடைய கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள் வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.
———–
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-
பொருந்திய மா மருது – மருது, மா மருது, பொருந்திய மா மருது.
மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, ‘மரங்கள்போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி.
‘மா’ என்கையாலே, மா–மாறுஎன்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம்.
‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி.
ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை யுடையராய், சீற்றத்தை யுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி-மருதங்களின் இடை -சொல்லாமல் ஒருமை -பொருந்தி -காம குரோதங்கள் சொல்லி ஒருமை ஒரு தாய் பிள்ளைகள் -லஷ்யம் ஓன்று போலே இங்கும்
எம் பெருந்தகாய் – அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!-ஜகத் சேஷி உடைத்தாய் ஆயிற்றே என்று உகக்கிறார் —உன் கழல் காணிய – ‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவை முரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற
திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. –தம்முடைய ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.-எல்லா அவச்தைகளிலும் திருவடி விடாதவர் இவர் -ரிஷி ஜீவனம் திருக் கண்கள் இவர் ஜீவனம் திருவடி
வாசகமாலை கொண்டு – ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று- இவர்க்கு ஒரு சொற் கொண்டு சொல்லுகை-எத்தனை காலம் புலம்புவனே –‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.-
——————-
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
சப்த மாத்ரத்தாலே -பரமபதம் பெறுவார் -சொன்னாலே -இதில் பிரார்த்தித்த படியே –
ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –பூமி யளந்த பெருமானை-அந்ய சேஷத்வ -ஸூவ ஸ்வதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்ந்தார் -சர்வ ஸ்வாமி –நலங்கொள் சீர்-கரணங்கள் சேதன சமாதியால் விடாய்த்து-அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தி மற்றவற்றை ஆசைப்பட்டு இவர் அவைகள் உடன் ஆசைப்பட்டு பகவத் விச்சேதம் இல்லாத
ச ஏகதா பவதி -அநேக சரீரங்கள் பரிகரித்து
அவ்வோ சரீரங்களிலும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி
தேசம் பெறப் பெறுவார் –
——————-
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன்-1-நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று விரோதமாய்த் தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு?-2-ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை? அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.-3சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும்
அமுத வெள்ளம் அன்பின் தேன் போலே அவன் இருக்க என் வாயாற்சொல்ல ஒண்ணாது;
ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ?-உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்;-நீங்கள் உங்களுக்கு விருப்பமான வற்றினின்றும் மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார்-அர்த்த ஞான பர்யந்தமாகவும் வேண்டாம் -அனுஷ்டானமும் வேண்டாம் ஒ என்பதால் -கடல் ஓசைக்கு காது கொடுப்பது போலே இவை
கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை-வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக் கொண்டாடுகிறார்.-இன் கவி – இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே தமக்கு இனியதாய் இருக்கிறபடி.-இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது?-தென்னா தெனா என்று வண்டு முரல் –-பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை.
பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?-திருவேங்கடத்து என் ஆனை – வேதத்தைக் காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும்
தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன்.-யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய
வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்ஆனை’ என்கிறார்.1-என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?-2-தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’ என்னுதல்.-3-அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது,-நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என்னுதல்.-
————
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-
உளன் ஆகவே எண்ணி –1-அவனைத் தவிர -ஸ்வ தந்தரமாக வஸ்து இல்லையே -அவனைச் சார்ந்து இல்லாமல் ஒன்றும் இல்லையே –2-தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ?-3-தன்னைக் கட்டிக் கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ,-அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?
ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், எண்ணி’ என்கிறார்.-தன்னை – உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்’ என்கிறபடியே, உளன் என்று இசைந்ததால் –நல் நெஞ்சு
கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட,-அவன் பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டு இவனைப் பெருமைப்படுத்தும்’ என்று அருளிச்செய்ய,
அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம்படியே!’ என்ன,-ஆ! ஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே?
கிராம காரியம் செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான்.
கண்ணன் குறுங்குடி –சர்வேசுவரன் ‘என்னது’ என்று அபிமானித்து வசிக்கும் நகரம்.
‘கண் நல் குறுங்குடி’ என்று பிரித்துப் பொருள் கூறுவார்கள் தமிழ் அறிஞர்கள்;
அப்போது ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’ என்பது பொருள்.எந்தையை –
நான் கவி பாடுகைக்குத் தன் குணங்களைப் பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை.
அன்றிக்கே,‘கவிபாடுகைக்கு வகுத்த -ப்ராப்த -விஷயமானவன்’ என்னுதல்.
‘திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும் பத்தாக உடையனாய், நமக்கு நாதனுமாய்’ என்றபடி.- பிராப்தி தம் அளவில் பர்யவசியாமையாலே –என் குல நாதன் என்கிறார் – ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ப்ராப்தனுமாய் இருந்துள்ள அவனை ஒழிய ஷூத்ர மனுஷ்யரைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார்-
————
ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-
போம் வழியைத் தரும் –1-அர்ச்சிராதி மார்க்கத்தைத் தரும்.-2-தன்னைக் கிட்டும் வழியைத் தரும்-3-வழி’ என்பது ‘பெறுகிற பேறு’ என்னுதல். ‘பெறுகிற பேறு’ என்னும் போது, தான் போம் நெறியாய், அதாவது, என்றும் ஒக்கப் பின் சென்று நடக்கையே தன்மையாய், இயற்கையான கைங்கரியத்தைச் சொல்லுகிறது-நிற்க – இப்படிப் பட்டவன் இவன் வாயாலே ஒரு சொல் கேட்க்கை தன் பேறாக நினைத்து நிற்க போய்க் அபிராப்தராய் -கவிக்கு பரிசில் கொடுக்க ஷமர் அல்லாமையாலே ஒளித்துப் போம் அவர்களை இறே தேடித் போவதே –.-புலவீர்காள் -உங்கள் விசேஷ ஞானத்துக்கு சேருமோ-மானிடம் -பாடுவதில் நன்மை உண்டோ-இழிய -தாழ்ச்சி வேற வருமே வான் கவி -கவிக்கும் அனுரூபம் இல்லையே –
——————
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-
‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை-தம்மையே ஒக்க அருள்செய்வர்’ -தன்னாகவே கொண்டு சன்மஞ் செய்யாமையும் கொள்ளும்’-ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும்.-தலையில் முடியை வைத்து விலங்கை வெட்டி விடுமா போலே-புலவீர்காள் – ‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான் சொல்லவேண்டி இருப்பதே!-வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் இருப்பவன் அவன்
ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.
கோது இல் – ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது,-‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல்,-கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன,-என் வள்ளல் –நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன். மணி வண்ணன் – கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு.-உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்;
கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?
கொடுத்து கொள்ளாதே கொண்டதுக்குக் கைக்கூலி கையூட்டு கொடுக்க வேண்டும் –
————-
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ – உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள்.-இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.
‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன அது ஆகுமே அன்றோ, பெற்றால்?
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதிக்கே சேரும்
புண்டரீகாக்ஷன் என்றும் -ஸ்ரீ மான் என்றும் மஹா உதாரன் என்றும் இறே கவி பாடுவது
அது உள்ள இடத்தில் சொல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் தத் அந்தர்யாமி அளவும் செல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல். என்றது, ‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி.
————
சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-
பெருமாள் சிங்காசனமும் ஸ்ரீ சத்ருஞ்சயனும் அகப்படக் கொடுத்து வெறுவியராய் நின்ற அளவிலே திரிஜடன் வந்து யாசிக்க, சரயூநதி தீரத்துக்கு இவ்வருகுபட்ட பசுக்களை அடையக் கொண்டு போ,’ என்று கொடுக்க, பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்கள் அன்றோ? அப்படியே, ‘தகுதியான கொடையால் வந்த புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்றபடி.-உத் ஒன்றையே விரிக்க தானே ஆயிரம் திருவாய்மொழிகளும்-அவற்றை இவர்க்குப் பிரகாசிப்பித்த உபகாரகன் ஆதலின், ‘பிரானை’ என்கிறார். இவ்விஷயத்தை ஆயிற்றுக் கவி பாடுகிறது.-திண் தோள் மால் வரை ஒக்கும் – கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக் குறித்து, ‘கொடுத்துப் பணைத்திருக்கிறது’ என்றும்,
இத்தோள் நிழலிலே அன்றோ உலகம் அடங்க வாழ்ந்து கிடக்கிறது?’
பாரில் ஓர் பற்றையை – பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய் இருக்கின்றவர்களை. என்றது, ‘முளைத்து எழுந்து தீந்து போவன சில சிறு தூறுகள் உள அன்றே?
அப்படியே, பிறந்தது தொடங்கி இருக்கின்ற வரையிலும் தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்கள்’ என்பதனைக் குறித்தபடி. போக பூமியில் சிலராகில் பொருந்தினும் பொருந்தும்’ என்பார், ‘பாரில் ஓர் பற்றை’ என்கிறார்.
அன்றிக்கே,-பாரில் ‘பற்றையை’ என்பதற்கு, பார் என்பது,நத்தமாய்,-இருப்பிடமாய் – அதனால் ஒரு குடிப்பற்றைக் கூறுகிறது என்றும்,-இல்’ என்பது, இல்லாமையைக் கூறுகிறது என்றும், பற்றை என்பது, கைப்பட்டதை இறுகப் பிடித்து ஒருவர்க்கு ஒன்றும்
ஈயாதவர்களைக் கூறுகிறது என்றும் பொருள் கூறுவாருமுளர்.-ஆயின்,‘திருணசமன்’ -புல்லுக்கு சமன் -என்று கூறப்படும் வழக்கு உளது ஆதலின், மேலதே பொருள்.பச்சைப் பசும்பொய்கள் பேசவே.– மெய் கலவாத பொய் சொல்ல நான் ஷமன் அல்லேன் –
ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மாற்று பாரில் ஓர் பற்றையைபச்சை பசும் பொய்கள் பேச யான் கிலேன்-
———–
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-
அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார்.அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக் கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்-கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார்.-முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.-பிறரை நிஷேதிக்கும் பிரகரணத்தில் சுய அனுஷ்டானம் சொல்வது -பிராப்தி – ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.-
————
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-
வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர்.-இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப் படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள்.
உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று உண்டோ?-அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை செய்யுமவரிறே.-செவியே கண் கண்ணே செவி யாக கொண்ட ஆதி சேஷன் அன்றோ-என்னைப் படைத்து அவனைப் பாட வைத்து –அவன் தாளிணை அடைய வைக்கவே -தன் பயனாகவே சிருஷ்டி-அவன், ‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே,-தன்னை எனக்கு ஆக்கி வைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.ஆழிப்பிரான் – தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.-‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை, மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.வானவர் நாட்டையும் – அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார்.-இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.
வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற் போன்று-சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’
நின்று நின்றே – ‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்றுதிருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள்.
அன்றியே,
‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம்.
அன்றியே,
‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில் பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.
———-
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-
இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார்.-‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு. சஜாதீயம் -பிறப்பு கர்மம் -பொது தானே இவற்றுக்கு-இந்த ஜன்ம சமாஸ்ரயணத்தால் முந்திய கர்மாக்களும் நிவ்ருத்தி ஆகும் –பத்தி உழவன் பழம்புனமே-
உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு – அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ? ‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில், பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.
வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல்.
அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்
கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது.
இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.
————–
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-
தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலேபரத்துவத்தை யுடையவன் ‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று -சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால் அதற்குப் போரும் படியிருக்கிற ஆழ்வார்
சன்மம் இல்லை – நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே? பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.
——————
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-
இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார்;
‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடைய நற்குணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.
ஓர் அவதாரத்தைச் சொன்னால், ‘எத்திறம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார் அன்றோ? அதனால், ‘பல’ என்கிறார்.
‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார், ‘பலபல’ என்கிறார்.கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள் காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி.-எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே ஒரு பொருளுக்குத் தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார், ‘செய்து’ என்கிறார் -என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’-அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கின்றான்–ஸ்ரீ பரத ஆழ்வான் திருச்சங்கு அம்சம் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் திருச்சக்கர அம்சம் -விண்ணுளாரிலும் சீரியர் –அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு.
‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்திய ஸூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும்,
அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.–‘வன்மையுடைய அரக்கர்-திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழ மாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார்
ஓர் குறைவு இலன் –ஒரு குறையும் உடையேன் அல்லேன்.
1-முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல்,
2-அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல்,
3-சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல்.
4- ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் -கரை காண ஒண்ணாமல் -இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின்,‘ஓர் குறைவிலன்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே,-பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப் பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.
———–
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-
குறைவு இல் தடம் கடல்-ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, ‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று,-அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. யசோதைப் பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக் கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை
காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே ‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்-இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான்-திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார்.-
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – ‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு – விலக்கு.-
———–
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-
பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’-விலஷணர்கள் -வீத ராகம் இல்லாத முமுஷுக்கள் அனுபவிக்கும் அமுதம் அன்றோ-இவருடைய அறுசுவை இருக்கிறபடி-பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே-வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.-
———
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-10-4-
இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம்.– ‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ?-ஆயனை –அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; -இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே.-பொன் சக்கரத்து
அரியினை-அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை.-பற்றி யான் இறையேனும் இடர் இலனே – இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று; ‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.-நான் ஏகதேசமும் மிறுக்கை யுடையேன் அல்லேன் இடர் -இடைஞ்சலாய் மிறுக்கு-என்றபடி –
———–
இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-
காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்.-பால உடலோடும் –
அன்றிக்கே,
‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல்.
‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள்
ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர் காணும்’ என்று அருளிச்செய்தார்.
கர்ம சம்பந்தம் அற்றுப் போகாமையாலே ஆயிற்று இவர்களுக்கு மீள வேண்டிற்று-கர்ம சம்பந்தம் அற்றார் போகக்கூடிய
தேசத்திலே இவர்கள் சென்றபடி என்?’ என்னில், ‘நாய்ச்சிமார் தங்கள் சுவாதந்தரியம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்கள் ஆயிற்று.
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, ‘மங்கவொட்டு’ என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி சமுசாரத்தில் விரக்தி பிறந்தும்,
‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், ‘மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘அதனிற்பெரிய என் அவா’ என்றும் இப்படிப் பகவத் விஷயத்தில் கண்ணழிவு அற்ற பக்தி விளைந்து போக ஆசைப்படுகிற
எனக்கு ஒரு துக்கம் இல்லை’ என்கிறார் –
————-
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி –தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய்
பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது.
நின்ற வண்ணம் நிற்கவே –-அங்கு இருக்கும்படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க-நித்திய ஸூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னைஊனக் கண்களுக்குப் புலப்படச் செய்து.-தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’அம்மான்-அபேஷா நிரபேஷமாக-இவர்களுக்கு தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் ப்ராப்தியைச் சொல்லுகிறது
புகழ் துற்ற யான் – அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற யான்.
ஓர் துன்பம் இலன் –‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு இவ்வுடம்போடே அணையலாம் படி அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?-
———–
துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-
கொடுத்த அறிவுதான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க் கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.
ஏதும் அல்லல் இலனே –-‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ -லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை -என்கிறார். -புருஷோத்தம ஞானம் வந்தால் கர்மங்கள் தீண்டாதே -அந்த பிறவியிலே பிரபன்னன் போலே பேறு கிட்டுமே-அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ –அவன் காலைக் கட்டி நாம் கால் கட்டு விடுவித்திக் கொள்ளலாமே –
————
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-
எங்கும் அமர் அழகன் –-மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியை யுடையவன்.
எங்கும் சூழ் ஒளியன் – திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன்.
அன்றிக்கே,
‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம்.
அன்றிக்கே,
‘எங்கும் அழகு அமர் – பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால்
‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதி கேசம் பழிப்பு அன்று,
சூழ் ஒளியன் –
மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.அல்லி மலர் மகள் போக மயக்குகள் –-இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது.-உளமார அனுபவிப்பார் -மார்பிலே இருந்தே அனுபவிப்பார் –ஆகியும் நிற்கும் – தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையால் வந்த ஆனந்தத்தையுடையனாய் இருக்கும்.
ஸ்ரீ யை அணைத்து ஆனந்தம் -ஸ்ரீ யபதி என்பதை அனுசந்தித்து ஆனந்தம் –
அம்மான் –ஆனந்த மயனாய் திருமகள் கேள்வனாய் இருக்குமவன் அன்றோ சர்வேசுவரன்?எல்லை இல் ஞானத்தன்-யஸ்யா வீக்ஷம் முகம் ததிங்கித பராதீ நோ விதத்தே அகிலம் -அவளுக்காகவே புருஷ பிரசவம் —-இவளுக்கும் ஆனைக்கு குதிரை வைப்பார் போலே அவனது ஞானம் –
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், ‘இந்தப் பரமாத்துமா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,
—————–
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-
ஒடுங்க விழுங்குகையாவது,-‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய்
கோத்தது போன்று விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை. இப்படிப்பட்டவனை பெற்று ஒன்றும் தளர்வு இலனே – எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாய்ப் பிரமன் முதலானவர்களையும் காப்பாற்றுகின்றவனானவனை
வேறு பயன் ஒன்றையும் கருதாதவனாய் அடைந்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.-நைமித்திகப் பிரளயமான போது, அவர்களால் காக்கப்படுகின்ற மூன்று உலகங்களையும் பாதுகாக்கையாலே அவர்களையும் பாதுகாப்பவன்’ என்கை.-
—————
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-
கிளர் ஒளி மாயனைக் கண்ணனை– நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு வ ஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணன் ஆனவனை பற்றின எனக்கு-யான் என்றும் கேடு இலன் – ‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.
மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள்
அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்’ என்று கூட்டுக.
வியாப்யமே மூன்றாம் பத்தின் -சாரம் -எங்கும் வியாபித்து -த்ரிவித காரணன் – சங்கல்ப ஞானத்தாலே -ஞானம் மிக்கு -வியாபகத தோஷம் இல்லாமல் -விபுவாக -அந்தர் பஹிஸ்ஸ சர்வம் –நியந்த்ருத்வம் தொடங்கி -அடுத்த பத்தின் சாரமும் கோடி காட்டி -பொசிந்து காட்டுவதை காணலாமே –
————
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11-
‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி,-மேலே பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.
நலன் இடை ஊர்தி பண்ணி – நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ.-வீடும் பெறுத்தி – பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் – தன்னதான மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக் கொடுக்கும்
————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply