ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-5-10-3-

ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-3-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

பூப் பெய்த பூதனையுடைய முலையுண்ட பிள்ளைத் தனத்திலே யுண்டாய் இருக்கிற ரஸஜ்ஞானமும்
அதுக்கும் மேலே அஸூரா வேஷத்தாலே ஊருகிற தொரு சங்கடத்தை சிவந்த திருவடி ஒன்றாலே உதைத்த சிறுமையாலுண்டான
ஆண் பிள்ளைத் தனமும் நெய்யைகே களவு கண்டான் என்னும் வார்த்தா ப்ரஸ்தாவத்திலே ஸ்நேஹி நியான தாயார் கையிலே
ஒரு துரும்பைகே கொள்ள அத்யந்த ஸூ ந்தரனான நீ உனக்குத் தகுதியாய்த் தாமரைப் பூப் போலே இருக்கிற
கண்கள் அச்சத்தினால் நீர் மல்கும்படி
அடி படுகிறது என்று பேகணித்து நின்ற நிலையம் வந்து என் நெஞ்சை நீராக்கா நின்றது என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –5-10-3-

உன்னுடைய பால சேஷ்டிதங்கள் என்னை மிகவும் நலியா நின்றன என்கிறார் –

பெய்யும்  பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

தன்னை அறிய ஒண்ணாத படி யசோதை பிராட்டி போலே ஒப்பித்து வந்த பூதனையுடைய முலையுண்ட பிள்ளைத் தனத்திலே உண்டாய் இருக்கிற ரஸ ஞானமும் –பூ பெய்த குழலையுடைய பிள்ளை என்றுமாம் –
அதுக்கு மேலே அஸூரா வேசத்தாலே உயிர் பெற்று ஊருகிற தொரு சக டத்தை திருவடி ஒன்றாலே உதைத்த சிறுமையில் உண்டான ஆண் பிள்ளைத் தனமும் -நெய் யைக் களவு கண்டான் என்னும் இவ்வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹிநியான தாயார் கையிலே ஒரு துரும்பைக் கொள்ள அத்யந்த ஸூ ந்தரனான நீ உனக்குத் தகுதியாய் தாமரைப் பூ போலே இருக்கிற கண்கள் அச்சத்தினால் நீர் மலக்கும்படி -அடி படுகிறது -என்று பேகணித்து நின்ற நிலையும் வந்து என் நெஞ்சை நீராக்கா நின்றன –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –5-10-3-

அநந்தரம் உன்னுடைய பால சேஷ்டிதங்களானவை என் நெஞ்சை உருகப் பண்ணா நின்றன என்கிறார்-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்-செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்–
யசோதை வடிவு கொண்டு ஒப்பித்து வருகையால் வைத்த பூவையுடைத்தானா மயிர் முடியையுடைய பேயின் முலையை
உண்ட பிள்ளைத் தனத்திலே வேற்று முலையை அறிந்த தெளிவும்
அஸூ ரா விஷ்டமாய் நலிய வந்ததொரு சகடம் பேருந்து போய் முடியும்படியாக சிவந்த திருவடி ஒன்றாலே
செய்து அருளின உன்னுடைய பால பராக்ரமமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப் பையவே நிலையும்-நெய் அமுது செய்த வார்த்தை
பிறந்த அளவிலே தாயான யசோதை பரிவாலே கையிலே கோலை கொள்ள –
எல்லாரையும் உன் கோல் கீழே நடத்தும்படி ஸர்வ சக்தியான நீ
உனக்கு அநு ரூபமாய் தாமரை போலே இருக்கிற கண்களானவை நீர் மல்கும்படி பீதனாய்க் கொண்டு ஒடுங்கி நிற்கும் நிலையும்
வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–முற்காலத்தில் செய்து போனவை இன்று
என்னளவும் வந்து என்னுடைய சபலமான நெஞ்சை உருக்கா நின்றன –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -5-10-3-

உன்னுடைய பால சேஷ்டிதங்கள் என்னை மிகவும் நலியா நின்றன என்கிறார் -பிரதிகூலருடைய பிராணனும் ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமுமே தாரகமாக வளர்ந்தான் என்று -வளர்ந்தவாறு என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு –

பெய்யும்  பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட
பேயின் முலையுண்ட –பெய்யும் பூங்குழல் பிள்ளை என்னுதல் -பெய்யும் பூங்குழல் பேய் என்னுதல் -திரு மஞ்சனம் பண்ணி ஒப்பித்து முலை கொடுத்து வளர்த்தி வைத்த பிள்ளை என்னுதல் -தன்னை அறிய ஒண்ணாத படி இவன் சோம்பாத படி எப்போதும் ஒப்பித்து இருக்கும் யசோதை பிராட்டி போலே ஒப்பித்து வந்த பூதனை என்னுதல்
பிள்ளைத் தேற்றமும்
ஐசுவரமான ஞானம் இன்றிக்கே -தாய் முலை யன்று வேற்று முலை என்று அறியும் தெளிவு -அத்யந்த சைவத்திலும் பிள்ளைகள் முலை வாசி அறிவார்கள் இ றே -பிள்ளைத் தனத்தின் மெய்ப்பாட்டினாலே வரும் ரஸ ஞானமும் –பாதகர் என்று அறியவுமாம் -அறியாது ஒழியவுமாம்-சத்ருக்கள் கிட்டினால் முடியக் கடவதான வஸ்து ஸ்வ பாவத்தால் முடித்தாள் அத்தனை –
பேர்ந்தொர் சாடிறச்-செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
பேர்ந்து-அதுக்கு மேலே என்னுதல் -ஓர் சாடிற பேர்ந்து என்று -அவன் தன்னோடே யாதல் -அஸூரா வேசத்தாலே உயிர் பெற்று ஊருகிற சகடம் தூக்கலாம் படி பேர்ந்து –
செய்ய பாதம் -சிறந்த திருவடிகள் -என்னுடைய ஜீவனத்தை கொண்டு கிடீர் விரோதியைப் போக்கிற்று –
ஒன்றால் -கறுவிச் செய்கை அன்றிக்கே அநாதரம் இருக்கிற படி -சிறுமையில் யுண்டான ஆண் பிள்ளைத் தனமும் -ராமாவதாரத்தில் சிறுச் சேவகம் ஆயுத சிரமம் பண்ணியும் விச்வாமித்திராதிகளோடே மந்த்ர ஸ்ரவணம் பண்ணியும் இ றே -அதில் காட்டிலும் வ்யாவர்த்தமாய் இருக்கிற படி
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
நெய் யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இ றே
நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்
உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.
அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்
பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன-

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –5-10-3-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

நவ நீத சௌர்ய-வ்ருத்தாந்தம் -வந்தே பிருந்தாவனம் சரம்-84 க்ரோசம் -168 மைல் விரஜா -வல்லவீ ஜன வல்லபன் ஜெயந்தி சாம்பவம் தாம –
பிறந்த அன்றே -வைஜயந்தீ விபூஷணம் -ஹர்த்தும் கும்பே விநிதிகர ஸ்வாது ஹையங்கவீனம் – புத்துருக்கும் வெண்ணெய்-
இளம் பச்சை நிறம் நீர்த்து -த்ருஷ்ட்வா தாம –தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் -வாய் வாய் -அழவும் முடியாதே -கால் கால் -ஓடவும் முடியாமல்
நாப கச்சயன்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -வெண்ணெயையும் பெண்களையும் ஒழித்து விடுவார்கள்-ந திஷ்டன் மித்யா கோபத்துடன் -கோபால விம்சதி
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-
பால சேஷ்டிதங்கள் என் நெஞ்சை உருகப் பண்ணா நிற்கின்றன -மதுரகவி ஆழ்வாரையும் கண்ணி –என் அப்பன் சொல்ல வைத்ததே
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிற-யசோதை போலே அலங்கரித்து
பித்தர் என பிறர் எச நின்றாயே -வேற்று முலையை அறிந்து உண்ட தெளிவும் -பிள்ளை தெரியாமல் தேற்றம் தெரியாமல் -கேச பாசம் இருவருக்கும் –
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்-சகடாசுரன் -அசுரா விஷ்டமாய் -சாடு -சக்கரம்
சிவந்த பாதம் ஒன்றால் -உதைத்ததா சிவந்ததா -சிவந்தது உதைத்ததா -பால பராக்ரமும் –
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்-அமுது செய்த வார்த்தை பிறந்த அளவிலே
நெய் வைத்தேனே காணோமே -சொன்னதும்
மூடன் சத்திரம் பெருக்குவான் வார்த்தை கேட்டதும் என்னால் முடியாது என்றவன் போலே
களவு காண வேண்டும் என்றே இருந்தானே -பரிவாலே கையிலே கோல் கொள்ள -பயப்படுத்த தான் -அடிக்க இல்லை –
வெண்ணெய் பிள்ளைக்கு நிறைய உண்டால் என்ன ஆகுமோ என்கிற பரிவு –
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனை கோல் கொண்டு பயப்படுத்த
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-பீதனாய் கொண்டு ஒடுங்க -வெண்ணெய் உண்ட பிள்ளை –
திருக்கால் வெளியில் தொங்க யமுனை தொட பார்த்து தூய யமுனை ஆனதே -ததிபாண்டன் கஷ்டப்பட்டு உள்ளே வைத்தானே
தாமரைக் கண்கள் நீர் மல்க -முன் காலத்தில் செய்து போனவை இன்று ஆழ்வார் கண் முன் வந்து நையுமே
300 தேவமான வருஷம் கழித்து தானே நம்மாழ்வார் -யுக சந்தி நடுவில் உண்டே –

பூக்கள் வைத்த கூந்தலையுடைய பூதனையினது பாலை உண்ட பிள்ளைத் தனத்திலே தெளிவும், வஞ்சனையினால் ஒப்பற்றவனான
சகடாசுரன் இடம் விட்டுப் பெயர்ந்து சென்று அழியும்படி சிவந்த ஒரு திருவடியினால் உதைத்துத் தள்ளிய நின் சிறிய வீரமும்,
நெய்யை உண்ட வார்த்தை பிறந்தவளவிலே தாயானவள் கோலினைக் கையிலேஎடுக்க நீ உன் தாமரை போன்ற திருக்கண்களில்
நீர் மிகும்படி அச்சங்கொண்டு நின்ற நிலையும் வந்து என்னுடைய மனத்தினை உருக்காநின்றன.
“பெய்யும் பூங்குழல்” என்பதனை, “பிள்ளை”க்கு அடையாக்கலுமாம். சாடு பேர்ந்து இறச் செய்த சிறுச்சேவகம் என்க. சாடு-சகடம்.
கோல் கொள்ள கண்கள் நீர் மல்க நின்ற நிலை என்க. உருக்குங்கள்: கள், அசைநிலை.

நீ இளமைப் பருவத்தில் செய்த உன்னுடைய செயல்கள் என்னை நலியா நின்றன என்கிறார்.

பெய்யும் பூங்குழல் பேய் முலை உண்ட பிள்ளை-
பிரதிகூலருடைய பிராணன்களும் அடியார்கள் சம்பந்தமுடைய திரவியமுமே தாரகமாக வளர்ந்தான் என்று
‘வளர்ந்தவாறு’ என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு.
பிள்ளையைத் திருமஞ்சனம் செய்து ஒப்பித்துக் கண் வளரப் பண்ணிக் கடக்க நின்றாள் யசோதைப் பிராட்டி,-
அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்டப் போனாள் -ஆ -கறவைகள்-
அவ்வளவிலே வந்து கிட்டினாள் பூதனை. இங்கு, ‘பெய்யும் பூங்குழல்’ என்பது, பிள்ளைக்கு அடைமொழி.
பெய்யும் பூங்குழலையுடைய பிள்ளை பேய் முலையுண்ட தேற்றம் என்று கூட்டுக.
அன்றிக்கே,
‘பெய்யும் பூங்குழல்’ என்பதனை, ‘பேய்’க்கு அடைமொழி யாக்கலுமாம்; என்றது,
‘பிள்ளை அனுங்க ஒண்ணாது’ என்று தாய்மார் எப்போதும் ஒப்பித்தபடியே இருப்பர்களாயிற்று,
இவளும் அப்படியே வந்தாளாயிற்று என்றபடி. பிணக் கோலமாக ஒப்பித்து வந்தாள் காணும் என்கிறார் என்றபடி.
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி யன்றோ. வைத்த பூக்களை யுடைய மயிர் முடியை யுடைய பேய்.

பிள்ளைத் தேற்றம் –
ஐஸ்வர்யமான ஞானம் இன்றிக்கே, ‘தாய் முலை’ என்றும், ‘வேற்று முலை’ என்றும் அறியும் தெளிவு.
மிகச் சிறிய இளமைப் பருவத்திலும் பிள்ளைகள் முலைவாசி அறிவர்கள் அன்றோ.
இவனும் ‘தாய்’ என்றே நினைத்து உண்டான் காணும். பால்யத்தில் தெளிவு இருக்கிறபடி. என்றது,
யசோதைப் பிராட்டி முலை கொடுக்கும் போது பிரீதியினாலே செய்யும்-முக்த ஜல்பிதங்களை – மழலைச் சொற்களை
இவள் பக்கலிலே செய்தானாயிற்று.
‘பாதகர்’ என்று அறியவுமாம், அறியாதிருக்கவுமாம், பகைவர்கள் கிட்டினால் முடியக் கடவதான பொருளின் ஸ்வபாவம் இருக்கிறபடி.

பேர்ந்து –
அதற்கு மேலே

ஒர் சாடு இற –
தீமை செய்வதில் இதனோடு ஒப்பது இல்லை கண்டீர். ஒர்-அத்விதீயம் –
‘பிரதி கூலம்’ என்று சங்கிக்கவும் ஒண்ணாது கண்டீர்.
பூதனையை, ‘இன்னாள்’ என்று ஆராய்கைக்காகிலும் விஷயம் உண்டு,
யசோதையைக் கண்டவாறே ‘இவள் யார்’ என்று ஆராய்ச்சிப் படுமன்றோ,
இது ரக்ஷகமாக வைத்தது கண்டீர். இற – ‘தளர்ந்தும் முறிந்தும்’ என்கிறபடியே முறிய.

செய்ய பாதம் –
சிவந்த திருவடிகள். என்னுடைய ஜீவனத்தைக் கொண்டு கண்டீர் விரோதியைப் போக்கிற்று என்கிறார்.
இவர்க்கு ஜீவனம் அடியிலே கல்பித்தன்றோ கிடப்பது.

ஒன்றால் –
‘இன்ன திருவடி’ என்று நியதி இல்லை யன்றோ; கறுவிச் செய்கின்றான் அன்றே.

செய்த நின் சிறுச் சேவகமும் –
நீ சேவகம் செய்ய அடியிட்டபடியும். என்றது, அரச குமாரனாய்ப் பிறந்து, பருவம் நிரம்பி, ஆயுதப் பயிற்சி செய்து,
வசிஷ்டர் முதலியவர்களைப் பின் சென்று, விஸ்வாமித்திரர் முதலியோர் பக்கலிலே அத்திரங்களைப் பெற்றுப்
பின்பே யன்றோ தாடகை மாரீசன் சுபாகு முதலியவர்களைக் கொன்றது;
அவை யெல்லாம் பருவம் நிரம்புவதற்கு முன்பே, வாயாலும் காலாலுமாயிருக்கிறபடி இங்கு. -முலை உண்டதும் சகடாசுர நிரசனமும்
வாயால் வலியார்க்குத் தாயாரும் வேண்டாவாயிற்றுக் காணும்.
இவனைப் போன்று கால் கடியார் இலர், ஆகையாலே யன்றோ காலிலே கொடி கட்டி வைக்கிறது.
“எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்து உதவி செய்தவனே!
சங்கு சக்கரம் கொடி தாமரைப்பூ மாவட்டி வச்சிரம் முதலிய ரேகைகளாலே அலங்கரிக்கப் பட்டிருக்கிற உன் இரண்டு திருவடித் தாமரைகளும்
காலிலே கொடி இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எல்லார் தலைகளிலும்’ என்று தொடங்கி.
“கதாபுந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாங்குஸ வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம்புஜ த்வயம் மதீயமூர்தாநம் அலங்கரிஷ்யநி”-என்பது தோத்திர ரத்நம், 31.
என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன” என்பது ஸ்தோத்திர ரத்நம்.
பருப்பயத்து –திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –
ஒண் மிதியில் — அப்போதும் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்ட மீது போயிற்றதும் கடுகித் திருவடிகள் அன்றோ.
ஓர் அடியும் –சாடு உதைத்த திருவடியும் -இவனுக்கு சாடு உதைத்தும் உலகு அளப்பதும் வாசி இல்லாமல் அன்றோ ஒன்றாய் இருப்பது

நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் –
பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப் பண்ணுமாறு போலே காணும்
பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும் படியும்.

நெய் உண் வார்த்தையுள்-
நெய்யைக் குறியிட்டுக் கடக்க வைத்துப் போய்ப் பின்னர் வந்து பார்த்தாள்
குறி அழிந்து கிடக்கையாலே ‘நெய் களவு போயிற்று’ என்றாள்;
அவ்வளவிலே பையாக்க-பயந்து- விழிக்கத் தொடங்கினான்.

அன்னை கோல் கொள்ள –
‘மாதா அன்றோ எடுத்தாள்’ என்னும் வேறுபாடு அறிகின்றிலன்.
அவள் வார்த்தை அன்றோ ‘உந்தம் அடிகள் முனிவர் – வாரீர் பிள்ளாய், உங்கள் தமப்பனார் கேட்பராகில் உம்மைப் பொடிவர்.
உன்னை நான் என் கையிற்கோலால் நொந்திட மோதவும் கில்லேன்’ இதுதான் இருக்கிறபடி கண்டீரே;
இதனைக் கொண்டு இனி, நீர் ஒன்றும் செய்யாதபடி பண்ணிக் கொள்ளலாமன்றோ வல்லார்க்கு, நான் அதற்குச் சக்தை ஆகின்றிலேன்.

அன்னை கோல் கொண்ட பின் இவள் கண்ண நீர் விழ விட்டது மயக்கத்தின் காரியம் என்கிறார் ‘மாதா அன்றோ’ என்று தொடங்கி.
ஆயின், அவள் அடியாளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவள் வார்த்தை’என்று தொடங்கி. “உந்தம் அடிகள்” என்ற பாசுரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘வாரீர்’ என்று தொடங்கி.
உந்த மடிகள் முனிவர் உன்னை நான் என்கையில் கோலால்
நொந்திட மோதவுங் கில்லேன் நுங்கள்தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதுஅங்கு நில்லேல் ஆழியங் கையனே வாராய்.-என்பது, பெரிய திருமொழி, 10. 5 : 8.

“தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடித் தயிருண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரிவளையே”-என்பது, பெரிய திருமொழி, 8. 3 : 5.

தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து- ஓடி அன்றோ. ‘அச்சம் உறுத்துகிறபடி இது, பட்டாலும் நோவாது’ என்று அறிகின்றிலன்.
தமப்பனார் எடுத்தாராகிலும் சிறிது ஆறலாம் காணும், ஹிதத்தை விரும்புகிறவராகையாலே அது தக்க தன்றோ;
உகப்பே பின் செல்லக் கடவ இவள் பொடிந்தால் பின்னைப் பொறுக்கப் போகாதன்றோ.
இவள் தான் இப்படிச் செய்வான் என்? என்னில், சிநேகம் இன்றிக்கே ஒழிந்தால் இன்னார் என்று
உண்டோ கல்லும் தடியும் கொள்ளுகைக்கு.-சிநேகம் -அன்பு – நெய் சாடு

நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கிற நீ, அதற்கு மேலே கண்களும் கோட் புக்கால் பொறுக்கப் போமோ.
கோட் புக்கால்-நூதனமாக அலர்ந்தால்-
வன் தாம்புகளால் புடைக்க அலந்தான் அலர்ந்தான் -பட்டர் நஞ்சீயர் சம்வாதம் –
“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’ என்கிறது.
“துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 15.

‘தக்க தாமரைக் கண்’ என்னக் கடவதன்றோ. பையவே நிலையும்-‘அடிக்க’ என்று அவள் கோலை எடுத்தாள்;
அவளைப் பார்த்து நின்று கண்ண நீரை விழ விடா நிற்பது, உடம்பு வெளுப்பதாய்ப் பேகணித்து நின்ற நிலையும்:
அன்றிக்கே
அஞ்சி அவள் முகத்தைப் பார்த்து நிற்கச் செய்தே பின்பே கால் வாங்கக் கணிசித்து மாட்டாதொழிவது,
ஊன்ற நிற்க மாட்டாதொழிவதாய்த் துறையில் கால் பாவாதபடி பொய்க்க-பைய -மெள்ள- அடியிட்டுக் கொண்டு நின்ற நிலை காணும் என்னுதல்.
இதுவே வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திருக் கோலம் -சதங்கை அழகியார் -இன்றும் எல்லார் கிருஹங்களிலும் சேவை சாதிக்கின்றானே

பைய – மெள்ள.
வந்து என் நெஞ்சை உருக்குங்களே –
அச் செயல்கள் என்னை நலியா நின்றன. உனக்காகில் தப்பியாகிலும் போகலாம்,
அதுவும் ஒண்ணாதபடி புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலியா நின்றன.
பையவே வந்து என் நெஞ்சை உருக்கும் –
என்னை ஓர் அடி போக ஒட்டாதே காற் கட்டா நின்றன என்கிறார்.
நெஞ்சை உருக்கும்-இவர் நெஞ்சிலே அடியிட்டபடி. உருக்கும்-முதல் நெஞ்சினை உருக்க அடியிட்டது.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading