ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-5-1-3-

ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-3-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்கச் செய்தே சர்வஞ்ஞனான நீயும் கூட மெய் என்று இருக்கும் படி
வள்ளல் மணி வண்ணனே என்று என்று புறமே சில மாயம் சொல்லி வஞ்சிக்க நான் இப்போது உன்னுடைய ப்ரஸாதத்தாலே
அந்தக் கள்ளம் தவிர்ந்து அக்ருத்ரிம நிரவதிக பக்தி யுக்தனாய் உன்னைக் கண்டு கொண்டு ஒழிந்தேன் –
வெள்ளத்தணைக் கிடந்தாய் இனி நான் ஆத்மார்த்தமாக உன்னை அல்லது மற்றொரு ப்ராப்யம் வேண்டேன் என்கிறார் –

———————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –5-1-3-

ஹ்ருதயம் அந்நிய பரமாய் இருக்க -வாங்மாத்திரத்தாலே -உன்னை பெற்ற நான் உன்னை ஒழிய வேறு ஒரு புருஷார்த்தத்தை  ஆசைப்பட்டேன் என்கிறார் –

உள்ளன  மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

உள்ளன மற்று உளவா புறமே -இத்யாதி
அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்கச் செய்தே-பரம உதாரனே -நிரதிசய போக்யமானவனே -என்றால் போலே-புறம் பூச்சாக சில பொய்களை சொல்லி சர்வஞனான உன்னையும் வஞ்சிக்கும் படியான கள்ள மனம் தவிர்ந்து உன்னைக் காணப் பெற்று க்ருதார்த்தன் ஆனேன் –
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
என் பக்கல் உண்டான வியாமோஹத்தாலே அவசர பிரதீஷானனாயக் கொண்டு வந்து திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனே –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –5-1-3-

அநந்தரம் சர்வஞ்ஞனான உன்னையும் வஞ்சிக்கும் நெஞ்சில் க்ருத்ரிம ஸ்வ பாவம் தீர்ந்து காணப் பெற்றேன்
இப்படி உபகாரகனான உன்னை ஒழிய அபாஸ்ரயம் உண்டோ என்கிறார் –

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி–அந்தரக்கத்தங்கள் உன்னை ஒழிந்த பிராகிருத விஷயங்களாய்
நடக்க கண்டாது பரியாம்படி புறம்பே
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்-உதாரனானவனே -விலக்ஷண விக்ரஹ யுக்தனே என்று என்று
பலகாலும் சில மித்ய யுக்திகளைப் பண்ணி சர்வஞ்ஞனான உன்னையும் விப்ரலம்பிக்கும் படி
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்–க்ருத்ரிம ஸ்வ பாவமான நெஞ்சு தவிர்ந்து ஆனு கூல்ய
பாவனையே பற்றாசாக அங்கீ கரிக்கும் உன்னை அபரோக்ஷித்து அனுபவிக்கப் பெற்று அசத்கல்பனான நான் உஜ்ஜீவித்து விட்டேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –இப்படி என்னைத் திருத்துக்கைக்காக ஷீரார்ணவத்திலே
கண் வளர்ந்து அருளினவனே உன் கிருஷி பலித்த பின்பு நித்ய அவசர பிரதீஷனாய் நிரதிசய போக்யனான உன்னை விட்டு
நச்வரமாய் துராராதமான எத்தைக் கைக் கொள்ளுவேன் –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -5-1-3-

பொய்யே கைம்மை சொல்லி -என்றும் சில கூத்து சொல்ல என்றும் -சொன்ன வார்த்தையை விவரியா நின்று கொண்டு இப்படி வாங்மாத்திரத்தாலே உன்னைப் பெற்ற நான் உன்னை ஒழிய வேறு ஒன்றை ஆசைப்பட்டேன் என்கிறார் –

உள்ளன  மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

உள்ளன மற்று உளவா –
உள்ளுள்ளன -வேறு சில உளவாக -அந்தக்கரணம் பிராகிருத விஷய ப்ரவண மாய் இருக்கை-
புறமே சில மாயம் சொல்லி-
புறப் பூச்சாக -சில வார்த்தைகளை சொல்லி -இத்தால் கூத்துச் சொல்ல -என்றத்தை சொல்லிற்று –
கீழே கூத்து என்கிறது -பிறருடைய வியாபாரத்தை தான் அநு கரிக்கும் அளவாயிற்று -இங்கு மனஸ் அந்யத் வாசல் அந்யத் -என்கிறபடியே க்ருத்ரித்மத்தை சொன்னேன் என்கிறார்
சொல்லுகிறதவை தான் எவை என்ன –
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
பரம உதாரனே -பெரு விலையான நீல ரத்னம் போலே சிலாக்கியமான வடிவை எனக்கு உபகரித்தவனே -அப்புத்தயா சொல்லா நிற்கச் செய்தே -சஹ்ருத்யமாக சொல்லுகிறார் என்று தோற்றும் படி பல காலும் சொல்லி
சர்வஞ்ஞானான நீயும் மெய் என்று பிரமிக்கும் படி –
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்-
பகட்டும் க்ருத்ரியுக்தமான மனசை –
அஹ்ருதயமாக இழிந்தாரையும் மேல் விழும்படி கொண்டு முழுகும் விஷயம் இ றே
உன்னை -மித்ர பாவம் அடியாக -நத்யஜேயம் -என்னும் உன்னை –ப்ராப்தனாய் நிரதிசய போக்யனான உன்னை
நிதி எடுத்தால் போலே லபித்து
அசன்னேவ என்னும் படி இருக்கிற நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –
பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே
சத்ருசமான பரமபதத்தை விட்டு -விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே அவசர பிரதீஷனான பின்பு
நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய
பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் துராரதரைப் பற்றவோ –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –5-1-3-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

சர்வஜ்ஞ்ஞன் உன்னையும் வஞ்சிக்கும் நெஞ்சில் கிருத்ரிம ஸ்வ பாவம் தவிர்ந்து காணப் பெற்றேன்
உபகாரகனான உன்னை ஒழிய ஒரு அபாஸ்ரயம் பற்றுக் கொம்பு உண்டோ
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி ஆத்மவிஷயம் பரமாத்மா விஷயம் போகாமல்
கண்டா உபரி -கழுத்துக்கே மேலே –
உண்மையான சொற்கள் இல்லாமல்
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் -மித்யா உக்திகள் பொய்யான வார்த்தைகள் சொல்லி
உன்னையும் -சர்வஜ்ஞ்ஞன் சர்வ சக்தன் -விப்ரலம்பிக்கும் படி
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் –கிருத்ரிம ஸ்வ பாவம் தவிர்ந்து
தீய நெஞ்சு மாறி -ஆனந்தமாக பேசுகிறார் -கீழே பாசுரங்கள் போலே-
4/5 வருத்த பாசுரங்கள் மேலே 6 மேலே ஆனந்தம் தொடங்கும்
ஆநு கூல்ய பாவனையையே பற்றாசாக கொள்ளும் நீ -ஆபி முக்கியம் கூட எதிர்பார்க்காமல்
அபரோஷித்து பிரத்யஷமாக கண்டேன் அசத் கல்பமாக இருந்த நான் உஜ்ஜீவித்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
உனது கிருஷி பலித்த பின்பு -உன்னை நித்ய அவசர ப்ரதீஷன் -நிரதிசய போக்யன்-இரண்டாலும்
உன்னை விட்டு நஸ்வரமாக துராராதானமான வேறு ஒன்றை கொள்வேனோ -அல்ப பலம் கொடுக்கும்
நீயோ நித்யம் மஹத் சுவாராரதனன் ஆன பின்பு

பொய்யே கைம்மே –உள்ளன மற்றுளவாதல்- சில சொன்னதை விவரியா -நின்று
வாக் மாத்ரத்தாலே உன்னைப் பெற்ற பின்பு உன்னை ஒழிய வேறு ஒன்றை ஆசைப் படேன்

உள்ளன மற்று உளவா
ஹிருதயத்தில் உள்ளன வேறு சில உளவாக -அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்க –
புறமே சில மாயம் சொல்லி
புறப் பூச்சாக சில பொய்களைச் சொல்லி
இத்தாலே கூத்துக்களைச் சொல்ல -என்ற இடத்தைச் சொல்லிற்று

வள்ளல் மணி வண்ணனே
பரம ஔதாரன்
பெரு விளையனான ரத்னம் போலே ஸ்லாக்யமான வடிவை எனக்கு உபகரித்தவனே

என்று என்றே –
வீப்சை -அபுத்யா சொல்லா நிற்கச் செய்தேயும் சஹ்ருதயமாகச் சொல்கிறான் என்று
தோற்றும்படியாகப் பல காலும் சொல்லி

உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம்
உள்ளுவார் உள்ளத்து எல்லாம் -உடன் இருந்து அறியும் உன்னையும் –
சர்வஜ்ஞ்ஞன்-சர்வ அந்தர்யாமியான நீயும் மெய் என்று கருதும் படி உன்னையும்
பகட்டும் க்ருத்ரிம யுக்தமான மனசை

தவிர்ந்தே-
அஹ்ருதயமாக இழிந்தாரையும் மேல் விழும் படி முழுகும் விஷயம் இறே

உன்னை
மித்ர பாவேன-வந்தாலும் -நத்யஜேயம் -என்னும் உன்னை
வேஷம் கொண்டு வந்தாரையும் -ப்ராப்தனும் போக்யமுமான உன்னை

உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
ஒரு படி காண வல்லோமே-ஒரு படி -சாடு-கொஞ்சம் -திருமேனி-
நிதி எடுத்தாரைப் போலே லபித்து
அசந்நேவ என்று இருந்த நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
கண்டு கொண்டாலே போதுமா
ந பிபந்தி -அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்த்யந்தி -சாப்பிடாமல் குடிக்காமல் கண்டு கொண்டே -சாந்தோக்யம்
இனி நீர் செய்யப் பார்க்கிறது என்

வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே -இவ் வேலையிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக கொண்டு
அவசர பிரதீஷனாய் கொண்டு -கண் வளர்ந்து அருளுகிறவனே

இனி
உனக்கு சத்ருசமான பரமபதத்தை விட்டு வி சத்ருசமான சம்சாரத்திலே
என்னுடைய ரக்ஷண அர்த்தமாகக் கொண்டு கண் வளர்ந்து அருளின பின்பு

உன்னை விட்டு
நான் விட்ட அன்றும் என்னை விட மாட்டாத இருக்கிற உன்னை ஒழிய –
முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று -அவசர ப்ரதீஷனனாக நீ இருக்க –

என் கொள்வனே
பச்சை கொண்டு -பல வேளையிலே -நிஷ் பலங்களாக –இருக்கும் விஷயங்களைப் பற்றவோ
ஆராதிக்கும் இடத்தில் -துர் ஆராதரராய் -வருந்தி ஆராதித்தாதிலும் கிடைப்பது ஒன்றும் இல்லாதவர்களைப் பற்றவோ

————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading