ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-4-10-3-

ஸ்ரீ ஆறாயிரப்படி –4-10-3-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

ஸ்ருதி வாக்ய சித்த ஸர்வேச்வரத்வ ஸூசக நிகில ஜெகன் நிகரண உத்தரணாதி நாராயண திவ்ய சேஷ்டிதங்களைக் கண்டு
இவனே சர்வேஸ்வரன் என்று அறிய மாட்டுகிறிலீர் -அவன் அல்லது மற்றொரு தைவம் இல்லை –
உண்டாகில் அத்தை ஒரு ப்ரமாணத்தாலே சாதியுங்கோள் என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-10-3-

ஜெகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும் இவனே பரன்-இது இசையாதோர் என்னோடே வந்து பேசிக் காணுங்கோள் -என்கிறார் –

பரந்த  தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பரந்த -இத்யாதி
ஈஸ்வரத்வ சங்கை பண்ணலாம் படி விஸ்திருதமான பல தேவதைகளையும் அவர்களுக்கு போரும்படியான பல லோகங்களையும் உண்டாக்கி
தெளிய கில்லீர் -தெளிய மாட்டு கிறி லீர்
பரன் திறமன்றி-இத்யாதி –
சர்வ ஸ்மாத் பரனான பொலிந்து நின்ற பிரானுக்கு சேஷமாய் அல்லது ஸ்வதந்திரமாய் இருபத்தொரு வேறு ஒரு தேவதை இல்லை -உண்டாகில் அதுக்கு உபபத்திகளை சொல்லுங்கோள் –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –4-10-3-

அநந்தரம் கார்ய ரூப ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்த வ்யாபாரங்களே பரத்வ ப்ரதிபாதகங்கள் -என்கிறார் –

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்–ஸ்வ விபூதி நியமனத்தாலே ஈஸ்வரத்வ சங்கை பண்ணும்படி விஸ்தீர்ணமான
தேவதா வர்க்கத்தையும் அவர்களுக்கு விபூதியான பஹு வித லோகங்களையும் ஸ்ருஷ்டித்து பிரளயம் வந்த அன்று இக்க்ரமம் பாராதே கூட விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–பிரளயம் காண ஒண்ணாத படி ஒளித்து வைத்து பிரளய அநந்தரம் வெளிநாடு காண உமிழ்ந்து
மஹாபலி அபிமானம் கழியும்படி அளந்து கொண்டு அநந்யார்ஹம் ஆக்கி அவாந்தர பிரளயத்தில் வராஹ ரூபியாய் இடந்து எடுத்த இது
பிராமண முகத்தாலே விசதமாகக் கண்டு இருக்கச் செய் தேயும் ரஜஸ் தம அபிபவத்தாலே நிர்ணயிக்க மாட்டு கிறிலீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்–நித்யரான ப்ரஹ்மாதி தேவர்கள் தங்கள் பத ஸித்த்யர்த்தமாக
பஹு முகமாக தலைகளால் வணங்கும் திரு நகரிக்கு உள்ளே நிற்கிற
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–சர்வ ஸ்மாத் பரணுக்கு பிரகாரமாய் அல்லது
வேறு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு தேவம் இல்லை
நாநா மதி பேதங்களாலே பலவகைப்பட்ட லோகத்தில் உள்ளீர் உண்டாகில் வந்து சொல்லுங்கோள்-

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -4-10-3-

ஜெகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும் இவனே பரன்-இது இசையாதோர் என்னோடே வந்து பேசிக் காணுங்கோள் -என்கிறார்

பரந்த  தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பரந்த தெய்வமும்
கொள் கொம்பு மூடப் பரந்து கை விஞ்சின தேவ ஜாதியும் நியாமகனோடு ஓக்க பரத்வ சங்கை பண்ணி நான் எடுத்து கழிக்க வேண்டும் படி இருக்கை –பிதாவையும் புத்ரனையும் பிரிக்க அரிதாமா போலே உத்பாதகனுக்கு அவ்வருகே கை விஞ்சின படி
பல் உலகும் படைத்து
அவர்கள் தனித்தனியே நியாமகராய் போரும்படி நியாம்யமான லோகங்களையும் ஸ்ருஷ்டித்து -ஸ்ருஷ்டியில் கர்மீ பவிக்கைக்கு நியாமகர் ஆனவர்களோடு நியாம்யங்களோடு வாசியில்லை என்கை –
அன்று
எல்லாருக்கும் இவன் கை பார்த்து இருக்க வேண்டும் ஆபத் தசையில்
உடனே விழுங்கிக்
ஸ்ருஷ்ட்டி காலம் போலே க்ரமம் பார்த்து இருக்க ஒண்ணாதே ஆபத் சமயத்திலே
கரந்து
பிரளயம் வந்து தேடினாலும் அதுக்கு எட்டாத படி கரந்து-திரு வயிற்றிலே வைத்து இருக்கச் செய்தே யும்-பண்டையிலும் இளைத்து காட்டலாம் படி இருக்கை –
உமிழ்ந்து-கடந்து இடந்தது-
உள்ளே இருந்து நோவு படாத படி உமிழ்ந்து
மஹா பாலி போல்வார் அபஹரிக்க எல்லை நடந்து மீட்டுக் கொண்டு நைமித்திக பிரளயத்தில் மஹா வராஹமாய் பூமியை பிரளயத்தின் நின்றும் எடுத்து –
கண்டும் தெளிய கில்லீர்
ப்ரத்யக்ஷத்திலும் -விசதமாய் இருக்கிற தாயிற்று இவர்க்கு சாஸ்திரம்
இவ்வதி மானுஷ சேஷ்டிதங்களாலே ஆஸ்ரயணீயன் என்று அறியலாய் இருக்க சக்தர் ஆகிறிலி கோள்-
இவர்கள் ஞான அஞ்ஞானங்கள் ஒழிய அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை என்கை –
அவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் இவனை அநீஸ்வரன் ஆக்குதல் செய்ய ஒண்ணாதாய் இருக்கை –
சிரங்களால் அமரர் வணங்கும்
ஸ்ருஷ்ட்யாதி அபதானங்கள் கிடைக்க ஆஸ்ரயணீய தேவதைகள் அவனை ஆஸ்ரயிக்க கண்டால் உங்களுக்கு விச்வாஸம் பிறக்கத் தட்டு உண்டோ –
நித்யத்வாதிகளால் வந்த துர்மானத்தை போக விட்டு தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று ஆஸ்ரயிக்கை-
பாதேந கமலா பே ந ப்ரஹ்ம ருத்ரார்ச்சி தே நச
திருக்குருகூர் அதனுள்-பரன் –
பரமபதத்திலும் வியாப்தியிலும் காட்டில் திருநகரியில் நின்ற நிலையிலே பரத்வம் மிக்கு இருக்கிற படி
மனுஷ்யத்வே பரத்வத்துக்கும் அவ்வருகே ஓன்று இ றே இது
வஸ்துவுக்கு குணாதிக்யத்தாலே யாகில் உத்கர்ஷம்-அது மிக்க இடத்திலே பரத்வம் உறைத்து தோற்றக் கடவது இ றே
திறமன்றிப்
அவனுக்கு பிரகாரமாய் கொண்டு அல்லது -திறம் -பிரகாரம் –
பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை -–
ஸ்வதந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை -தேவதைகளுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறார் அல்லர் -ஈஸ்வர விபூதி யாகையாலே ஸ்வாதந்தர்ய நிஷேதம் பண்ணுகிறார்
அவனுக்கு பிரகாரம் என்று ஆச்ரயிக்கில் அவனுடைய ஆசிரயணீயத்திலே புகும்
ஸ்வதந்த்ர புத்தி பண்ணில் ஸ்வதந்திரமாய் இருப்பது ஓன்று இல்லை –தேஹ நா நாஸ்தி -யேய ஜந்தி
பேசுமினே.-
அவனுக்கு பிரகாரமாய் அல்லது ஸ் வ தந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை என்று சொன்ன என் முன்னே சர்வாதிகனை பிரகாரமாக யுடையதொரு தெய்வம் உண்டு என்று சொல்ல வல்லார் உண்டாகில் சொல்லுங்கோள் -என்கிறார்-

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –4-10-3-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

ரஷகத்வம் -கார்ய ரூப ஜகத்தை ரஷிப்பதே -ஸ்ருஷ்டித்தவனது அடையாளம் –
பரந்த தெய்வமும் பல்உலகும் படைத்து அன்று உட னேவிழுங்கிக்-ஸூ விபூதி நியமனத்தாலே –
விபூதி லோகங்களால்–சிருஷ்டித்து க்ரமம் பார்க்காமல் விழுங்கி
கரந்துஉ மிழ்ந்து கடந்துஇடந்தது கண்டும் தெளிய கில்லீர்-பிரளயம் காண ஒண்ணாதபடி –அளந்த -மகா பலி அபிமானம் –
அனந்யார்ஹம் ஆக்கி -மகா வராஹமாய்
கண்டும் அறியாமல் -திருவடி ஒருவன் நீட்ட -ஒருவன் கழுவ ஒருவன் தலையில் வாங்கி சுத்தி பெற
சிரங்க ளால்அம ரர்வணங் கும்திருக் குருகூர் அதனுள்-ரஜஸ் தமோ குணங்களால் அறியாமல் -சர்வ ஸ்மாத் பரன்
பரன்திற மன்றிப் பல்லுல கீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.-அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் –
தெய்வம் மற்று இல்லை -பரன் திறம் அன்றி -விசேஷித்து -ஸ்வ தந்தரமாக இல்லையே

பரந்திருக்கின்ற தெய்வங்களையும் அவர்களுக்கு உறைவிடமான பல வகைப்பட்ட உலகங்களையும் படைத்தும்,
பிரளயம் வந்த அக்காலத்தில் உடனே விழுங்கியும், பிரளயம் அறியாதவாறு மறைத்தும், பின்னர் வெளி நாடு காண உமிழ்ந்தும்,
திருவிக்கிரமா வதாரத்தில் இரண்டு அடிகளால் அளந்தும், வராஹ அவதாரத்தில் பிரளயத்தினின்று எடுத்தும் செய்து போன
காரியங்களைப் பார்த்திருந்தும், ‘அவனே யான்; அவனுக்கேயுரியது உலகம்’ என்பதனைக் தெளிய மாட்டுகின்றிலீர்;
தேவர்கள் தலைகளாலே வணங்குகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற
சர்வேசுவரனுக்குச் சரீரமாய் அல்லது
ஸ்வதந்தரத்தோடு கூடியிருக்கிற வேறு தெய்வம் இல்லை: இருக்குமேயாயின், பல வகைப்பட்ட உலகத்தில் உள்ளவர்களே!
என்னோடு வந்து பேசுங்கள்.
பல் உலகீர்! கண்டும் தெளியகில்லீர்! திருக்குருகூரதனுள் பரன் திறம் அன்றி மற்றுத் தெய்வம் இல்லை; பேசுமின்,’ எனக் கூட்டுக.
அன்றி இல்லை’ என்க. திறம் – பிரகாரம்; சரீரம்.

உலகத்தை விழுங்குதல் முதலிய தெய்வத்தன்மை வாய்ந்த செயல்களாலும் இவனே பரன்;
இதனை உடன்படாதார் என்னோடு வந்து கலந்து பேசிக் காணுங்கோள்,’ என்கிறார்.

பரந்த தெய்வமும் –
கொள் கொம்பு மூடப் படர்ந்து இறைவனோடு ஒக்க எடுத்துக் கழிக்க வேண்டும்படி,
கை விஞ்சின தேவசாதியும்.

பல் உலகும் –
அவர்கள் பரப்புக் கெல்லாம் போரும் படியான உலகங்களும்.
அன்றிக்கே, ‘அவர்கள் நியமிக்கின்றவர்கள் ஆகைக்குக் காரணமாக நியமிக்கப் படுகின்றவர்களான
மற்றைய ஆத்மாக்களையும்’ என்னலுமாம்.

படைத்து –
உண்டாக்கி. இவருக்கு அந்தத் தேவர்களோடு அல்லாதாரோடு வாசி அற்று இருக்கிறபடி.

அன்று உடனே விழுங்கி –
அந்தப் பரமாத்மா முன்னே பிரமனைப் படைத்தார்,’ என்கிறபடியே,
படைக்கிற போது முறையாகப் படைத்தான்; ஆபத்து வந்தால், அங்ஙனம் முறை பார்க்க ஒண்ணாதே,
பிரளயாபத்திலே ஒரு காலே வயிற்றில் வைத்து.

கரந்து –
பிரளயம் வந்தாலும் இங்கு உண்டோ?’ என்று இளைத்துக் காட்டலாம்படி மறைத்து.

உமிழ்ந்து –
உள்ளே இருந்து நோவு படுகின்றனவோ?’ என்று வெளி நாடு காண உமிழ்ந்து.

கடந்து –
நடுவே மஹா பலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொள்ள,
எல்லை நடந்து மீட்டுக் கொண்டு.

இடந்து –
பிரளயத்திலே அழுந்தி அண்டப் பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹா வராஹமாய்ப்
புக்கு ஒட்டு விடுவித்து எடுத்து.
இப்படிச் செய்த இவற்றை,

கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப் படுகிறது காணும்.

தெளியகில்லீர் –
மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக்கொண்டே ‘அவனே அடையத் தக்கவன்’ என்று அறியலாய் இருக்க,
அறிய மாட்டுகின்றிலீர்கோள். இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின்,
கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய, அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல்,
இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

அமரர் சிரங்களால் வணங்கும் –
எல்லாப் பொருள்களையும் படைத்தவனும் அல்லன்; ஆபத்திற்குத் துணைவனும் அல்லன்’ என்று இருந்தீர்கோளே யாகிலும்,
நீங்கள் அடைகிற தேவர்கள் செய்கிறது முன்னம் நீங்கள் கண்டால் தெளியலாமே!
அவர்கள், ‘தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்குகிற படியைக் கண்டாகிலும் நீங்கள் அவனைப் பற்றப் பாருங்கோள்.
தாமரை போன்று ஒளியுள்ளதும், பிரமன் சிவன் இவர்களால் அருச்சிக்கப் பட்டதுமான திருவடிகளால் தடவினார்,’ என்றும்,
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும், துன்னிட்டுப் புகலரிய’ என்றும்,
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய முறையால் ஏத்த’ என்றும் கூறப்படும் பிரமாணங்களைக் காண்க.

திருக் குருகூர் அதனுள் பரன் –
மனித வடிவத்தில் பரத்வத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்துவமே அன்றோ இது?
இவ் வருகே போரப் போர உயர்வு மிகுமத்தனை. குணத்தாலே அன்றோ பொருளுக்கு உயர்வு?
குணங்களுக்குப் பெருமை உள்ளது இங்கேயே யன்றோ?
அவர்கள் இருவரில் சேதனன் கரும பலத்தை இனிமையாக அனுபவிக்கிறான்; மற்றவனான ஈசுவரன் கர்ம பலத்தை
அனுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்!’ என்கிறபடியே, இவ் வுயிர்கள் சரீரத்தோடே கலசக் கலச ஒளி மழுங்கி வாரா நிற்கச் செய்தே,
அவனுக்கு நியமிக்கும் தன்மையால் வந்த புகர் அற விஞ்சி வருமாறு போன்று,
இம் மக்கள் நடுவே போரப் போர ஆயிற்று, முதன்மை – மேன்மை பிரகாசிப்பது.-இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் சஹோம்

திறம் அன்றி –
அவனுக்குச் சரீரமாய் அல்லாது. திறம் – சரீரம்.

தெய்வம் மற்று இல்லை –
சுதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை.
தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று, ‘அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே;
அவர்களுடைய சுவாதந்தரியத்தை விலக்குகிறார். ‘மற்றைத் தேவர்களை அவனுக்குச் சரீரமாகப் புத்தி பண்ணி அடைந்தீர் கோளாகில்,
அவனுடைய ஆஸ்ரயணத்திலே புகும்; அவர்கள் சுவதந்தரர்கள் என்று புத்தி பண்ணிப் பற்றினீர் கோளாகில்,
சுவதந்தரமாய் இருப்பதொரு வேறு தெய்வம் இல்லை;
சுவதந்தரப் பொருள் இங்குப் பல இல்லை’ என்றும்,
எவர்கள் பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ, அவர்கள் எல்லா
ஆத்மாக்களுக்கும் அந்தரியாமி யாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’ என்றும் வருவன காண்க.

பேசுமின் –
நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது சுவதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்;
இப்படி வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையை யுடைய இவனைத் தனக்குச் சரீரமாக வுடையது
ஒரு தெய்வம் உண்டு,’ என்று சொல்ல வல்லார் உண்டாகில்,
வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக் காணுங்கோள்,’ என்கிறார்.

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading