ஸ்ரீ ஆறாயிரப்படி –3-9-11-
———–
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-9-11-
நிகமத்தில் இது திருவாய் மொழியை பாட மாத்ரத்தை சொல்ல வல்லார்க்கு வேறு சிலரைக் கவி பாட வேண்டா வென்று
கற்பிக்க வேண்டும்படியான சம்சாரத்தில் ஜென்மம் இல்லை என்கிறார் –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-
இப்பாட்டுக்கு தகுதியான மிக்க புகழை உடையனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்துள்ள கிருஷ்ணன் தனக்கு
ஏற்று இருந்துள்ள பெரும் புகழை உடைய ஆழ்வார் அருளிச் செயலாய் சொன்ன புகழ் எல்லாம்
தக்கு இருந்துள்ள ஆயிரத்துள்ளே ஏற்கும் புகழான இது திரு வாய் மொழி சொல்ல வல்லார்க்கு –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –3-9-11-
அவதாரிகை
அநந்தரம் இத்திருவாய் மொழி சொல்ல வல்லார்க்கு ஜென்மம் இல்லை என்று பலத்தை அருளிச் செய்கிறார் –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு–பரதவ சவ்லப்யங்களுக்குத் தகுதியான குண பரத்தையை யுடையனாய் -நித்ய ஸூ ரிகளுக்கு
நிர்வாஹகானான மேன்மையோடே ஸூலெனாய் அவதரித்த கிருஷ்ணனுக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்–ஸ்தோ தாக்களாகைக்கு அனுரூபமான ஞானாதி குண ப்ரதையை யுடையராய்
அழகிய திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் –பகவத் குணாதி ப்ரதிபாதனத்துக்கு அனுரூபமான லக்ஷண ப்ரதையை யுடைத்தாய்
இருக்கிற ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளே
ஏற்கும் பெரும்புகழ் இவை பத்தும் -இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்த்து பகவத் ஸ்தோத்ரத்தை ப்ரதிபாதிக்கை யாகிற
ஸ்வரூப அனுரூபமான குண ப்ரதையை உடைத்தாய்க் கொண்டு அத்விதீயமான இவை பத்தையும் –
சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–சொல்ல வல்லார்க்கு இதர ஸ்துதி ஹேதுவான ஜென்மம் இல்லை —
இது கலித் துறை
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -3-9-11-
நிகமத்தில் இது திருவாய் மொழியை -இயல் மாத்ரத்தை -சொல்ல வல்லார்க்கு -பிறரைக்
கவி பாட யோக்கியமான நீச ஜென்மம் இல்லை என்கிறார் –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –
சொல் ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள்-
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை விளா க்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதுக்கு போரும்படி ஆயிரம்
இவையும் ஓர்பத்து ஏற்கும் பெரும்புகழ் -சொல்ல வல்லார்க்கு
ஆயிரத்திலும் இப்பத்துக்கு தகுதியான புகழை உடைத்து ஸ்வரூப அநு குணமாக அப்ராப்த விஷயத்தை தவிர்ந்து
ப்ராப்த விஷயத்திலே கவி பாட சொல்லிற்று ஆகையால் ஏறிட்ட நன்மை எல்லாம் பொறுக்கை
இல்லை சன்மமே.
பிறரை கவி பாட வேண்டா -என்று உபதேசிக்க வேண்டுகிறது இஸ் சம்சாரத்தில் பிறப்பு இ றே -அந்த ஜென்ம சம்பந்தம் அறும் என்கிறார் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –3-9-11-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-
கிருஷி பலிக்க இந்த திருவாய்மொழி -ஜன்மம் இல்லை -பலம் அருளிச் செய்கிறார் -அசேவ்ய சேவை தேவதாந்திர பாசனம் பண்ணும் ஜன்மம் வாராதே
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு-பெரும் புகழ் ஏற்கும் -நால்வருக்கும் -குண ப்ரதை-நித்ய சூ ரிகள் அவனுக்கு ஏற்க –
நிர்வாகன்- சுலபன் -அவதரித்த
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-ச்ரோதாக்களுக்கு -ஏற்ற -அனுரூபமான -ஞானாதி குண பிரதி உடைய ஆழ்வார் –
அழகிய திரு நகரி –
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து-குணாதி பிரதிபாதிதமான -அனுரூபமான -ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் எடுத்து விளக்கிச் சொல்ல –
லஷணம் -அமைப்பாக -பகவத் ச்தோத்ரமே பண்ணச் சொல்லும் இதுவே ஏற்கும் -ஸ்வரூப அனுரூபமான
இதர ஸ்துதி ஹேதுவாக ஜன்மம் கிட்டாது
‘தகுதியான பெரும்புகழையுடைய வானவர் ஈசனான கண்ணன் விஷயமாக, தகுதியான பெரிய புகழையுடைய வளப்பம் பொருந்திய
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த தகுதியான பெரிய புகழையுடைய ஆயிரம் பாசுரங்களுள் தகுதியான
பெரிய புகழையுடைய ஒப்பற்ற இப்பத்துப் பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கட்குப் பிறவி இல்லை,’ என்றபடி.
‘ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் ஏற்கும் பெரும் புகழ் ஓர் இவை பத்தும்’ எனக் கூட்டுக.
‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தைக் கற்றவர்கட்கு, பிறரைக் கவி பாடத் தகுதியான பிறவி இல்லை,’ என்கிறார்.
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலே
பரத்துவத்தை யுடையவன் தனக்கு. ‘மனிதத் தன்மையில் பரத்துவம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின்,
ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசாநின்றதே அன்றோ?
ராஜ்ய வித்யா குஹ்யா வித்யா -சு மாகாத்ம்யம் -9 அத்யாயம் –
ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் –
‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று -சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால்
அதற்குப் போரும் படியிருக்கிற ஆழ்வார் அருளிச்செய்த.
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம்
‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான பரம்பொருளை
விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.
ஏற்கும் பெரும்புகழ் ஓர் இவை பத்தும்-
ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும்புகழையுடைத்து. என்றது,
‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்துக்குச் சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
சொரூபத்திற்குத் தகுதியாக அடையத்தக்க பரம்பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும் சொன்ன பத்து ஆகையாலே,
சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று.
சன்மம் இல்லை –
நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?
பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.
அநிஷ்ட நிவ்ருத்தி மட்டுமே சொல்லி -இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை –
உபதேசம் இங்கு உள்ளாருக்குத் தான் -லீலா விபூதி கழிவதே முக்கியம் இவர்களுக்கு –
அஜீர்ணம் தொலைந்தால் தானே அக்காரவடிசில் -மோஷ பிராப்தி சொல்ல வந்தவர் அல்லர் இவர் இந்த திருவாய்மொழியில்
தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன் பாவிற் சிறந்த திருவாய் மொழி பகர் பண்டிதனே:
நாவிற் சிறந்த அம் மாறற்குத் தக்க நன்னா வலவன் பூவிற் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.’–என்பது சடகோபரந்தாதி, சிறப்புப்பாயிரம்.
———————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply