ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-2-10-8-

ஸ்ரீ ஆறாயிரப்படி –2-10-8-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

ஹேய விஷயங்களிலே விநியோகித்து அருமந்த பலத்தைப் போக்காதே ஆச்சர்ய பூதனாய் ஆஸ்ரித ஸூலபனாய் இருந்த எம்பெருமானும்
அயர்வறும் அமரர்களும் வலம் செய்து கொண்டு அனுபவிக்கிற திருமாலிருஞ்சோலையை வலம் செய்து நாளும் மருவுகை வழக்காவது -என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-10-8-

திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

நல்ல பலன்களை சம்பாதித்து ஷூத்ர விஷய ப்ராவண்யத்தாலே அந்த பலன்களை வ்யர்த்தம் ஆக்காதே
நம்மோடு ஓக்கத் திரு மலையை வலம் செய்யா நின்றுள்ள ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனுடைய கோயில்
வலம் செய்யும் பலதன் என்றுமாம்
எம்பெருமானோடு ஓக்க வலம் செய்யா நின்றுள்ள அயர்வறும் அமரர்களுடைய திருமலையை –

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –2-10-8-

அநந்தரம் -ஆஸ்ரித அனுகூலனான கிருஷ்ணன் வர்த்திக்கிற திருமலையில் நிரந்தர அனுகூல வ்ருத்தியே ஸ்வரூப பிராப்தம் -என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே–காரணங்களுக்கு பலத்தை உண்டாக்கி நிரந்தரமாக அந்த பலத்தை இதர விஷயமாக்கிக் கெடாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்–ஆஸ்ரிதர்க்கு பவ்யத்தை யாகிற ஆனுகூல்யத்தை பண்ணும் க்ருஷ்ணனான ஆச்சர்ய பூதனுடைய கோயிலான
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை-பரமபத வாசிகள் அனுகூல வ்ருத்தி பண்ணும் திருமலையைக் குறித்து
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –பிரதஷிணாத் யனுகூல வ்ருத்தியை பண்ணி நிரந்தரம் சம்ச்லேஷம் பண்ணுகை நியாயம் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-10-8-

திருமலையைச் சென்று நிரந்தரமாக அனுகூலிக்கையே பிராப்தம் என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
கரண படாவத்தை உண்டாக்கி நாள் தோறும் அந்த பலத்தை இதர விஷயங்களுக்கு உறுப்பாக்கி வியர்த்தல் ஆக்காதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
தன்னையும் கொடுத்து -தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தியையும் கொடுக்கும் ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம் –
ய ஆத்மதா பலதா-என்னக் கடவது இ றே
அழகர் பிராட்டிமாரோடு கூடே வலம் செய்கிற திருமலை என்றுமாம் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை-
ராஜாக்கள் நகர சோதனைக்கு புறப்பட்டால் அந்தரங்கர் முகம் தோற்றாமல் திரியுமா போலே நித்ய ஸூரிகளும் அனுகூல வ்ருத்தி பண்ணுகிற தேசம்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
நாமும் திருமலையில் சென்று அவர்களோடு ஒரு கோவையாய் சர்வ காலமும் அனுகூல வ்ருத்திகளை பண்ணி
வர்த்திக்கும் இதுவே பிராப்தம் -என்கிறார் –

—————————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –2-10-8-

திருமலையை நிரந்தரமாக வலம் செய்வதே வழக்கு என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வானோர் மாலிரும் சோலை -விண்ணோர் வெற்பு -விண்ணவர் நாடு -அவனுக்கு ஆசை –
ஆஸ்ரித அனுகூலன் -இங்கே நிரந்தர வாஸம்-நிரந்தர அனுகூல வ்ருத்தி –நாளும் மருவுதல் வழக்கே
-ஸ்வரூப பிராப்தம் –வழக்கே -ஆத்மாவுக்கு நியாயம்
வலம் செய்து வைகல் வலம் கழியாதே -கரணங்களுக்கு இந்த்ரியங்களுக்கு -பலம் கொடுத்து
-தக்க வைத்து -இதர விஷயமாக்கி கெடாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் -ஆயனான மாயவன் -ஆஸ்ரிதர்க்கு பவ்யமான -ஆனுகூல்யம் செய்யும்-
வினயம் தானே பலம் -அஞ்சலி ஹஸ்தம் –பரமா முத்ரா -ஷிப்ரம் தேவ பிரசாதினி –
ஆயன் -கிருஷ்ணன் -ஆச்சர்ய பூதன்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -அனுகூல்ய வ்ருத்தி கைங்கர்யம் செய்யும் வானோர்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -பிரதஷிணம்-போன்ற அனுகூல வ்ருத்தி செய்வதே ஸ்வரூபம்
சத்தம் கீர்த்தயந்த -நித்ய யுக்தா உபாசயே-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாக தந்த மனுஷ்ய சரீரத்தைக் கொண்டு பலத்தை உண்டாக்கி பின்னை அவனை
ஆஸ்ரயிக்கை இன்றிக்கே மாயவன் தன்னை வணங்க வைத்த கரணமிவை –இராமானுசன் நூற்றந்தாதி -67-
விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதும் -காருணிகன் நீர்மையினால் அருள் செய்தான் –
இதர விஷய பிராவண்யத்துக்கு உடலாக்கி அனர்த்தப் படாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு
அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்
காகுஸ்தன் -குபேர இவ நந்தன -மந்தாகினி போலே நூபுர
மா தவன் -என்பதால் பெரிய பிராட்டியார் உடன் –இந்த்திரா லோக மாதா -மா –
ய ஆத்மாதா பலதா -என்கிறபடியே -தன்னையும் கொடுத்து தன்னை தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தியையும் கொடுக்கும்
ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம் -மாயத்தை உடையவன் -மாதவன் –
ஆழ்வார்கள் திரு உள்ளம் -கண்ணன் -ஆச்சார்யர்கள் திரு உள்ளம் ராமன்-
ஆழ்வார்கள் -திரு வேங்கடவன் பஷபாதிகள் -ஆச்சார்யர்கள் திருவரங்கன் பஷபாதிகள் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
கீழே –தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்
இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்
இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க
முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது
அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –
ஆரியர் இகழ்ந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு நிர்வாஹகரான ஷத்ரியர் தங்களது என்று அபிமாநிக்கும் படி –தென்னன் -பாண்டிய மன்னன்
வானோர் மாலிரும் சோலை
பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற  போது லஷ்மண பரதர்கள் பின் தொடர்ந்தால் போலே -சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே
நித்ய ஸூரிகளும் போந்து வலம் செய்யா நிற்பர்கள் -சித்ர கூடம் வரை -பரதன் –
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே —
நாமும் இவர்களோடு கூட அங்கே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி –
விஷ்ணோர் ஆயதனம் நித்யம் சாயம் ப்ராதர் திநே திநே ப்ரதஷிண த்வயம் குர்யாத் அஸ்வமேத பலம் லபேத் –
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் –
அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே
பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -பிரபன்ன ஜன கூடஸ்தர் பிரதஷிணம் செய்ய சொல்வான் என் –
உபாயதயா புத்தியால் இல்லை -கைங்கர்யத்துக்கு -கண்ணால் பருகுவார் -பிராப்யம் -அனுபவித்து செல்வார்-
அஸ்வமேத பலம் -உபாயமா எண்ணம் வருமே -சாமான்யனுக்கு -பிரபன்னர் இப்படி பிராப்யமாக எண்ணுவார் –
எண்ணுவதற்கு ஐதிகம் –அவர்களுக்கு அது பிராப்யம் -நஞ்சீயருக்கு இவர்களை பார்த்து கொண்டே செல்வதே பிராப்யம்
நாளும் மருவுதல் வழக்கே —
நித்ய ஸூரிகளுடைய யாத்ரையே தனக்கு யாத்ரையானால் பின்னை மறுவல் இடாது இறே -இதுவே வழக்கு
வாழ் முதல் -தாரகம் / போஷகம் –வளர் முதல் /போக்யம் மகிழ் முதல் –
உபாயத்வ கந்தம் இல்லாமல் -நித்யர் போலே இதுவே பிராப்யம் –

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading