ஸ்ரீ வாக்ய குரு பரம்பரை -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் —

ஸ்ரீ வைஷ்ணவ சமாச்சார நிஷ்கர்ஷம் -என்னும் நூல் இந்த வியாக்யானம் பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்ததாகக் காட்டி அருளும்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் -திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ஸ்ரவணம்)
அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்
ஆசார்யன்: சடகோபாசார்யர்–ஸ்ரீ சடாரி குரோர்-இவர் திருத் தந்தையாயும் குருவும் ஆனவர் –

காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.

ஸ்ரீசடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மது வ்ரதம் |
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||–பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

கோவிந்தப்ப தாதர் தாசர் -ஆச்ரயம ஸ்வீகாரம் பின்பு -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
இவர் பூர்வ ஆஸ்ரம புத்திரர் -அழகிய மணவாளன் -இவர் குமாரர்-சடகோபாச்சார்யர் –
இவர் குமாரர் வரதாச்சார்யர் -இவரே ஆச்ரயம ஸ்வீகாரம் பின்பு பிள்ளை லோகம் ஜீயர் ஆனார்

ராமானுஜர்ய திவ்ய சரிதை
பிரபன்ன அம்ருதம்
யதிராஜ வைபவம்
பெரிய திருமுடி அடைவு
சரம உபாய நிர்ணயம் –
யதீந்த்ர ப்ரவண பிரபாவம்
குரு பரம்பரா பிரபாவம் நம்பிள்ளை வரை பின் அழகிய பெருமாள் ஜீயர்
அதுவே இவருக்கு அடை மொழியாகி யதீந்த்ர ப்ரவண பிள்ளை லோகம் ஜீயர் ஆனது
பிள்ளை லோகாச்சார்யார் திரு ஆராதன பெருமாள் அழகிய மணவாளன் இவர் பெற்றார் என்பர்
பல வியாக்கியானங்கள்-இராமானுஜ நூற்றந்தாதி-உபதேச ரத்ன மாலை -அனைத்து அருளிச் செயல்களின் தனியன்கள்
ஸ்ரீ பராங்குச திவ்ய சரித்திரம்
ஸ்ரீ பரகால திவ்ய சரித்திரம்
ஸ்ரீ வைஷ்ணவ சமாச்சார நிஷ்கர்ஷம்

ஸ்ரீ குரு பரம்பரை அனுசந்தானத்தை ஒழிந்த த்வய அனுசந்தானமும் தேவதாந்த்ர பஜனத்தோடு ஒக்கும் -ஸ்ரீ முதலியாண்டான் -ஸ்ரீ வார்த்தா மாலை

ஸ்ரீ வாக்ய குரு பரம்பரைஸ்ரீ ஸ்லோஹ குரு பரம்பரை -இரண்டையும் நம் ஆச்சார்யர் இடமிருந்து உபதேசமாகப் பெறுகிறோம்-

—————————-

பிரமாணங்கள் ப்ரத்யக்ஷம் அனுமானம்  வேதம் என்னும் சப்தம்-ஸ்ம்ருதி இதிகாசங்கள் உப அங்கங்கள்
அர்த்த பஞ்சக ஞானம் முக்கியம்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]

பரமாத்ம ஸ்வரூபம் -ஜீவாத்மா ஸ்வரூபம் அறிந்து -சேஷ பூதன் என்று அறிந்த பின்பு அடைந்து கைங்கர்யம் புருஷார்த்த ஸ்வரூபம்
அடையும் உபாய ஸ்வரூபம் -தடுத்து இருந்த விரோதி ஸ்வரூபம்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்– -யாழின் இசை விட பக்தாம்ருதம்-தொண்டர்க்கு அமுது

ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் பஹு கிலேசம்
ஆச்சார்ய உபதேஸ ஜன்ய ஞானம் எளிது -உபதேஷ்டாவுக்கு ஸாஸ்த்ர ஞானம் வேண்டுமே -அதுக்கும் மேல் அனுஷ்டானமும் கொண்டவர்
அந்திம ஸ்ம்ருதி தேவை -பிரபன்னனுக்கு அஹம் ஸ்மராமி போல் ஞானம் ஆச்சார்யர் கொண்டு நமக்கு ஏற்றபடி கொடுத்து அருளுகிறார்
ஈஸ்வரனும் ஆச்சார்ய பதவிக்கு ஆசைப்பட்டு -கீதாச்சார்யர் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -கூரத் ஆழ்வான்—ஸ்ரீ தரன் பிரதம ஆச்சார்யர்

பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10—உபகார ஸ்ம்ருதி –

ஆசார்யன் செய்த உபகாரமாவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்று மேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் —63-

நித்தியமாக குரு பரம்பரை அனுசந்தானம் அவஸ்யம்
உத்தாரக ஆச்சார்யர் எம்பெருமானார் ஒருவரே – -உபகாரக ஆச்சார்யர்கள் மற்ற அனைவரும் –
பரம்பரா– பரம் அதிசயேந ஸ்ரேஷ்ட-மேல் மேல் சிறப்பு கூட்டும் சந்தானம்-ஞான ரீதி -ஸம்ஸாரம் தீர்த்து அருளும் ஞான பரம்பரை -வரிசை –

லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

திருமகள், திருமால் முதற் கொண்டு நாதமுனிகள், ஆளவந்தார் இடைக் கொண்டு
வழிவழி வந்த அடியேன் ஆச்சார்யர் அளவும் அத்தனை ஆசார்யர்களுக்கும் வணங்குகிறேன்

அஸ்மத் குரு சமாரம்பாம் யதி சேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

இதில் தற்போது உள்ள அடியேன் ஆச்சார்யர் தொடங்கி உள்ள குரு பரம்பரை ஆசாரியர்களை வணங்கி
ஸ்ரீ ராமானுஜரை நடு நாயகமாகக் கொண்டு திருமகள், திருமால் என்று முடிவடைகிறது.

ஆரோஹண அவரோஹண இரண்டுக்கும் இரண்டு ஸ்லோகம்
13 பெயர்களுக்குள் அனைவரையுமே காட்டும் படி வாக்ய குரு பரம்பரை –
முதல் மூன்றும் பொது -அனைவருக்கும் பொருந்தும்
4-13 வரை மீதி பத்தும் குறிப்பிட்ட பெயர்களுடன் பஹு வசன பத பிரயோகம்

என் அளவுக்காகவாது அவர்களை பூஜிப்பாய் –
உத்தரணத்துக்காக சாஷான் நாராயண காருண்யாது ஸாஸ்த்ர பாணி -அவனே ஆச்சார்யக அவதாரம் -மோக்ஷ ஏக ஹேது
ஸஸ்த்ர பாணியாய் மோக்ஷ போக இரண்டுக்கும் ஹேதுவாகிறான்-உறங்கும் பெருமாளே உபதேசிக்கும் பெருமாளாக –
ஆச்சார்யருடைய ஒரு கண் பார்வைக்கு -ஸ்ரீ நாராயணனின் ஸஹஸ்ர 1000 கண்களும்-நான்முகனின் 8 கண்களும்-ருத்ரனின் 3 கண்களும் சேர்த்தாலும் நிகர் அல்லவே
அனைத்தையும் உபதேசிக்க நேரம் இல்லாமல் இருந்தாலும் கடாக்ஷம் மூலம் அருளும் ஏற்றம் உண்டே

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ஸ்ரீயை நம:
ஸ்ரீதராய நம:

முதல் மூன்றிலும் ஸ்ரீ சப்தம் இல்லை
இறுதி ஸ்ரீ யை -ஸ்ரீ தராய இரண்டையும் விட்டு
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:இவ்வாறு மூன்றும்
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம-இவ்வாறு இரண்டும் -நாத யமுனா மத்யமே
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:–இவாறு மூன்றும்
தார தம்யம் உண்டே -இதற்கும் ஹேது வியாக்யானத்தில் உண்டு

ஸ்லோக குருபரம்பரை (ஸ்லோகம்)

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

முதல் மூன்று வாக்கியங்கள் வேத யுக்தம் –
அடுத்த பத்தும் கூரத்தாழ்வான் அருளிச் செய்தது
ஸ்லோக குரு பரம்பரை முதலியாண்டான் அருளிச் செய்தது

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:–ஸ்ரீ-கூரத்தாழ்வான் தனியன்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்–ஸ்ரீ முதலியாண்டான் தனியன்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

அனைத்து உலகும் வாழப்பிறந்த அந்த ராமானுஜரும் இவர் சம்பந்தத்தால் பேறு

குரு ரேவ பர ப்ரஹ்மம்

மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ; என்கிறது தைத்திரீய உபநிஷத்

மாத்ரு தேவோ பவ -தெய்வத்தையே மாதா பிதா ஆச்சார்யர் அதிதியாகக் கொள்ள வேண்டும்

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்தோறும் பிறந் மாதவனே வந்து கண்ணுற நிற்கிலும் கணகிலா–
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நாரணனுக்கு ஆள் ஆனோமே

குகாரம் அந்தகாரம் ருகாரம் அத்தை நிவர்த்திப்பவன் –
ஆஸீ நோதி சாஸ்த்ரரான -ஸ்வயம் ஆசரதே -ஆச்சார ஸ்தாபயிதி யதி -ஆச்சார்யர்
ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய உபதேசிப்பவரே நேராக ஆச்சார்யர்
ப்ரதாதா உபதேஷ்டா -ஆச்சார்யர் –
குரு பரம்பரா அனுசந்தான பூர்வகமாக இல்லாத த்வயம் அனுசந்தானமும் தேவதாந்த்ர பஜனத்தொடு ஒக்கும்

நர நாராயணனாய் சிங்காமை விரித்தான் –
அர்ஜுனனுக்கு கீதாச்சார்யன் சரம ஸ்லோகம் அருளிச் செய்தான்
இவர்கள் மேல் யாருக்கும் உபதேசம் செய்ய வில்லையே
அர்ஜுனனும் மறந்து அநு கீதம் சொல்ல வேண்டிற்று
விஷ்ணு லோகத்தில் மஹா லஷ்மிக்கு உபதேசம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் -மூலம் நமக்கு
லஷ்மீ நாதன் -பெரிய பெருமாளையே குறிக்கும் –
விஷ்வக் சேனர் -இவர் தனியனிலும் ஸ்ரீ ரெங்கம் உள்ளவரையே
சேஷாசனர் -இவரைச் சொல்கிறோம்
குரு சந்ததி படித்துறை இறங்கியே அனுபவிக்க வேண்டும் –

நம பிரிக்காமல் வணங்குகிறேன் -பிரித்தால் நான் எனக்கு உரியன் அல்லன்
தனியங்களையும் வாழி திருநாம அனுசந்திக்க வேண்டும்

லஷ்மீ நாதாக்க்ய சிந்தவ்-சடரிபூஜலத -ப்ராப்ய காருண்ய நீரம்
நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை- -எம்பார் உருவகம்

லஷ்மீ நாத சிந்தவ் இத்யாதி – –கருணைக்கடல் -நம்மாழ்வார் மேகம் -நாதமுனி மலையில் பொழிந்து
இரண்டு அருவிகள் -உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி -காட்டாறு ஆளவந்தார் -ஐந்து ஆச்சார்யர் முகமாக
ராமானுஜர் ஏரி -74 சிம்ஹாசனபதிகள் -மூலம் நம்மை அடையும்படி அருளி –74 நரஸிம்ஹ திவ்ய மங்கள விக்ரஹம்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ராமானுஜர் நாயக ரத்னம்

நாம் பயிர் -தண்ணீர் வேண்டுமே -சடரிபு ஜலத
பிராப்ய காருண்ய நீரம் -ஸ்வாதந்தர்ய கோபம் உப்பு நீக்கி –
நாதமுனி -மலை -அக்ர -ரகுவரன் அம்போத ஸஷுஸ் -இரண்டு அருவிகள்
யாமுனாச்சார்யர் காட்டாறு
ஐந்து நதிகள் -பெரிய நம்பி போல்வார் மூலம் யதீந்த்ரர் ஏரி

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஸ்ச ததாபர: |
பலபத்ரஸ் து கலெள கஸ்சித் பவிஷ்யதி ||-என்று பவிஷ்ய புராணத்தில் இவரைச் சேஷாம்சம் என்று கூறப்பட்டிருக்கிறது. .

——————-

ஸ்ரீ வாக்ய குரு பரம்பரை-13 வாக்கியங்கள் கொண்டது
முதல் மூன்று வாக்கியங்கள் வேத உக்தங்கள்
மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்தவை
ஸ்லோக குரு பரம்பரை ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்தது

குரு ரேவ பர ப்ரஹ்மம்
கு அக்ஷரம் அந்தகாரம் இருளை-அந்தகாரம் -அஞ்ஞானத்தைக் குறிக்கும்
இத்தைப் போக்கி அருளுபவர் ரு அக்ஷரத்தின் பொருள்
ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை நேரே உபதேசித்து அருளி
நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே
ஸ்ரீ மன் நாராயணனாகிய பரஞ்சுடரைக் கண்டு களிக்கச் செய்து அருளுவர் ஆச்சார்யர்

இந்த குரு பரம்பரை ரஹஸ்ய த்ரயத்துக்கும் பொதுவானது

————–

1-அஸ்மத் குருப்யோ நம -எனது ஆச்சார்யனை – ஆச்சார்யர்களை -வணங்குகிறேன் -ஸ்வ ஆச்சார்ய  தனியன் அனுசந்தேயம்

2-அஸ்மத் பரம குருப்யோ நம -எனது ஆச்சார்யரின் ஆச்சார்யரை-ஆச்சார்யர்களை வணங்குகிறேன் -ஸ்வ ஆச்சார்ய குரு பரம்பரா தனியன்கள் அனுசந்தேயம்

3-அஸ்மத் ஸர்வ குருப்யோ நம -எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீ மணவாள மா முனிகள் வரையில் உள்ள ஸ்வ ஆச்சார்ய பரம்பரா தனியன்களும் அனுசந்தேயம்-ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யா ஜா மாதரம் முநிம்–

—————–

4-ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைப் பெருக்கமாய் யுள்ள -ஞான பக்தி வைராக்ய கைங்கர்ய செல்வங்களில் விஞ்சியவரான
எம்பெருமானாரை வணங்குகிறேன்-ஸ்ரீ எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யோமோஹதஸ் ததிதராணி த்ருணாய மே நே
அஸ்மத் குரோர் பகவதோஸ் அஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே 

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

————–

5-ஸ்ரீ பராங்குச தாஸாய நம –செல்வரான பெரிய நம்பியை வணங்குகிறேன்-ஸ்ரீ பெரிய நம்பி (மார்கழி கேட்டை)

கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -பராங்குச தாசாயா -பெரிய நம்பி
யமுனைத் துறைவன் இணை வடியாம் -என்றதும் பெரிய நம்பியையே குறிக்கும்
மாறனேர் நம்பி பொன்னடி சாத்தி திருவரங்கத்தில் பெரிய நம்பி திருமாளிகை புனிதமாக்கி அருளினாராம்
தற்போது 46 வம்ச பெரிய நம்பி ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்

————-

6-ஸ்ரீ மத் யாமுந முநயே நம –செல்வரான யமுனாச்சார்யர் என்ற பெயரை யுடைய ஸ்ரீ ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

———

7-ஸ்ரீ ராம மிஸ்ராய நம -செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்–ஸ்ரீ மணக்கால் நம்பி (மாசி மகம்)

அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ் க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணி கொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே-ஸ்ரீ யதிராஜா சப்ததி -7

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –நான்கு ராமர் -தேசிகன்

ராம சேஷன் என்றே ஆளவந்தாருக்கும் இவரால் பெயர் உண்டே

————–

8-ஸ்ரீ புண்டரீகாஷாய நம -செல்வரான உய்யக் கொண்டாரை வணங்குகிறேன் -ஸ்ரீ உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)

நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீ காக்ஷரை வணங்குகிறேன்.

————-

9-ஸ்ரீ மந் நாத முநயே நம -செல்வரான ஸ்ரீ ரெங்க நாத முனிவரை வணங்குகிறேன்-ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

————

10-ஸ்ரீ மதே சடகோபாய நம –செல்வச் சீமானான சடகோபரை -ஸ்ரீ நம்மாழ்வாரை -வணங்குகிறேன்-ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

————-

11-ஸ்ரீ மதே விஷ்வக் சேநாய நம –செல்வத்தில் மிக்க சேனை முதலியாரை வணங்குகிறேன் -ஸ்ரீ சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)

ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

வந்தே வைகுண்ட்ட ஸேநாநயம்-தேவம் ஸூத்ரவதி ஸகம்
யத் வேத்ர சிகர ஸ்பந்தே விச்வம் ஏதத் வ்யவஸ்த்திதம்—ஸ்ரீ பட்டர் விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில்

—————

12-ஸ்ரீயை நம -ஸ்ரீ பெரிய பிராட்டியாரை -ஸ்ரீ ரெங்க நாச்சியாரை வணங்குகிறேன்-ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)

நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம் -8-ஸ்லோகம் இங்கே எடுக்கப்பட்டுள்ளது

————

13-ஸ்ரீதராய நம -திருமகள் கேள்வனான பெரிய பெருமாளை வனகிங்குகிறேன்-ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)

ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம் 7-ஸ்லோகம் இங்கே எடுக்கப்பட்டுள்ளது

—————

ஸ்ரீ ஸ்லோஹ குரு பரம்பரை

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாச்சார்யான் அசேஷான் குருன்
ஸ்ரீ மல் லஷ்மண யோகி புங்கவ மஹா பூர்ணம் முனிம் யாமுநம்
ராமம் பத்ம விலோசனம் முனி வரம் நாதம் சட த்வேஷிணம்
ஸேநேசம் ஸ்ரீயம் இந்திரா ஸஹ சரம் நாராயணம் ஸம்ஸ்ரயே

அஸ்மத் தேசிகம் -அஸ்மத் குருப்யோ நம
அஸ்மதீய பரமாச்சார்யான் -அஸ்மத் பரம குருப்யோ நம
அசேஷான் குருன்-அஸ்மத் ஸர்வ குருப்யோ நம

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாச்சார்யான் அசேஷான் குருன் -வாக்ய குரு பரம்பரையில் முதல் மூன்று வாக்ய விஷயங்கள்
ஸ்ரீ மல் லஷ்மண யோகி புங்கவ
மஹா பூர்ணம்
முனிம் யாமுநம்
ராமம்
பத்ம விலோசனம்
முனி வரம் நாதம்
சட த்வேஷிணம்
ஸேநேசம்
ஸ்ரீயம்
இந்திரா ஸஹ சரம் நாராயணம்
ஸம்ஸ்ரயே

——————————————————————————————————–

ஸ்ரீ வாக்ய குரு பரம்பரை வியாக்யானம்

ஸ்ரீ யபதியாய்
ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய்
நித்ய முக்த அநு பாவ்யனாய்
நிரதிசய ஆனந்த யுக்தனாய் இருக்கிற ஸர்வேஸ்வரன்

அந்த நித்ய ஸூரிகளோ பாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி-(தகுதி -உறவு ) யுண்டாய் இருக்கச் செய்தேயும் அத்தை இழந்து
அஸந்நேவ ச பவதி (ப்ரஹ்மம் உண்டு என்று அறியாதவன் இருந்தும் இல்லாதவனாகவே ஆகிறான் )-என்கிறபடியே
அஸத் கல்பராய் (இல்லாதவர் போலேயாய் )
போக மோக்ஷ சூன்யராய் (அனுபவம் முக்தி எதுவுமே இல்லாதவராய் )
ஸம் யுக்தம் ஏகம் ஷரம் அக்ஷரம் ச (நசிக்கக் கூடிய அசித்தும் நசியாத ஆத்மாவும் கூடி இருப்பதான ஒன்றான )என்கிறபடியே

தில தைலவத் தாருவஹ் நிவத் துர் விவேச (எள்ளில் எண்ணெய் போலவும் -அரணிக்கட்டையில் அக்னி போலேயும் பிரித்து அறிய முடியாத )என்றும்
த்ரிகுண துரத்யாநாத் அசித் ஸம்பந்த திரோஹித (ஸத்வ ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களால் விட முடியாததான
நெடும் காலம் அசித் சம்பந்தத்தால் மறைக்கப்பட்ட ) என்றும்
ஸ்வ ப்ரகாசகராய் இருக்கிற ஸம்ஸார சேதனருடைய இழவை அனுசந்தித்து

ஸ ஏகாகீ ந ரமேத (அந்தப் பரம புருஷன் தனியனாய் இருந்து கொண்டு ஸந்தோஷம் அற்றவனாய் இருக்கிறான் )என்றும்
ப்ருசம் பவதி துக்கித (ராமாயணம் மிகவும் துக்கம் அடைகிறான் ) என்றும் சொல்லுகிறபடி
அத்யந்த வ்யாகுல சித்தனாய் (கலங்கிய மனஸ்ஸூ யுடையவனாய்

இவர்கள் கரண களேபரங்களை(உடலையும் கை கால் முதலிய அவயவங்களையும் ) இழந்து
லூத பக்ஷ இவாண்ட ஜா (அறுபட்ட சிறகுடைய பக்ஷிகள் )என்கிறபடியே
இறகு ஒடிந்த பக்ஷிகள் போலே கிடக்கிற தசையிலே

நாம ரூப வ்யாகரவாணி என்றும்
(ஜீவாத்மாவை சரீரமாக யுடைய என்னால் இவையும் அந்தர்யாமியாய்ப் புகப்பட்டு
பெயர் உருவங்கள் யுடையவையாய் செய்யப் படக் கடவன-பஹுஸ்யாம் ப்ரஜாயேய- )என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை –என்றும் சொல்லுகிறபடி
இவர்களுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
அவற்றைக் கொண்டு வ்யாபாரிக்கைக்கு(செயல் படுகைக்கு ) ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து

தேஹாத்ம அபிமானமும் (உடலும் ஆத்மாவும் ஓன்று என்ற கலக்கம் )
அந்நிய சேஷத்வமும் (பிரருக்கு ஆட் பட்டு இருக்கை )
ஸ்வ ஸ்வா தந்தர்யமுமான (அஹங்காரம் )
(ஆகிய பெரும் பள்ளங்களிலே ) முக்குழியிலே விழுந்து அநர்த்தப் படாதே

தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு உடலாக அபவ்ருஷம் அப்ரபவம் -என்கிறபடியே
அபவ்ருஷேயமாய் -அத ஏவ புருஷ ஷேமுஷீ க்ருத மாலிந்ய தோஷ விநிர்முக்தமாய்
(புருஷனால் உண்டாக்கப் படாத தோஷம் அற்றதாய் )
வேத ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி (வேதத்தை விட மேலான சாஸ்திர ப்ராமணம் கிடையாது )என்கிறபடியே
தனக்கு மேம்பட்ட தொரு ஸாஸ்த்ரம் இன்றியே இருப்பதான ஸ்வதஸ் பிரமாணமான வேதத்தை

யோவை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை
(எந்த பரமபுருஷன் முன்னமே நான்முகனைப் படைத்தானோ -எவன் அவனுக்கு வேதங்களை உபதேசித்தானோ )என்றும்
அரு மறையை வெளிப்படுத்த அம்மான் -என்கிற படியே
நாராயண ப்ரயுக்தமான தன் உதரத் தரிப்பாலே -(குடல் துவக்கு -உறவு )
தானே ப்ரவர்த்திப்பித்த இடத்திலும் ( வெளியிட்டு அருளிய இடத்திலும் )
ததர்த்த நிர்ணயம் தான் ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயாதி ஸா பேஷமாய் இருக்கையாலே
(அதற்குப் பொருள் காண்பது எல்லா வேதங்களையும் ஆராய்ந்து விரோதி பரிஹாரங்களைப் பண்ணி முடிவு செய்வதன் மூலவே செய்யக் கடவது )
அல்ப மதிகளுக்கு-(மந்த புத்தி யுடைய ) அர்த்தம் நிஸ்சயம் பண்ணுகை அரிது என்றும்
இம் முகத்தாலே இவர்கள் திருந்திக் கரை மரம் சேருகை அரிது என்றும்
(ஸாஸ்த்ரம் ஆகிய தெப்பத்தின் உதவியால் பிறவிக் கடலைக் கடந்து எம்பெருமானாகிற கரை சேருகை அரிது )என்றும்

(த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் –கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்-

இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது- மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –

தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –என் பேரைச் சொன்னாய் –என்னடியாரை நோக்கினாய் –அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –என்றாப்  போலே சிலவற்றைப் பேரிட்டு –மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்துமெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும் யாத்ருச்சிகம் – ப்ராசங்கிகம்- ஆநு ஷங்கிகம்-என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் –ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை-381-)

உபதேஸ பரம்பரைகளாலே இவர்களைத் திருத்தி உஜ்ஜீவிப்பிக்கை எளிது என்றும் திரு உள்ளம் பற்றி
ஆச்சார்யாணாம் அஸாவஸா வித்யா பகவத்தா
(ஆச்சார்ய பரம்பரையில் பகவான் வரையில் ஒவ்வொருவரையும் இன்னார் இன்னார் என்று அறிய வேண்டும் )
உபதேஸம் தான் பகவானான தான் அடியாக வந்ததாய் இருக்குமாகையாலே
அதற்காக
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -என்றும்
ஸஸி (வெண்மை )வர்ணம் சதுர் புஜம் -என்றும்
வல்லன் எம்பிரான் விட்டுவே -என்றும் சொல்லுகிறபடியே

திருமந்திரத்தை உபதேசிக்கும் இடத்திலே
தத் உபதேஷ்டாவுக்கு (உபதேசிப்பவனுக்கு )
வடிவாய் இருந்துள்ள ஸூத்த ஸ்வ பாவத்வ ஸப்த ஸம்பத்வாத் அசங்கித (சங்கை இல்லாமலும் உள்ள )
அகடிதகடநா ஸாமர்த்யாதிகளை (சேராதவைகளை சேர்த்து வைக்கும் ஆற்றல் ) யுடையவனாய்

பஹுதா விஜாயதே -என்றும்
சன்மம் பல பல செய்து -என்றும் சொல்லுகிறபடியே
பலவகைப்பட்ட இருந்துள்ள விபவங்களிலே(ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் ) வைத்துக் கொண்டு
மத்யே விரிஞ்சி கிரிஸம் ப்ரதம அவதாரம் (ப்ரம்ம ருத்ராதிகளில் நடுவே அவர்களுக்கு சமமாகத் தோன்றும் விஷ்ணு என்ற முதல் அவதாரம்-ஜகதாதி ஜா )
என்னும்படி பிரதம அவதாரமான ஸ்ரீ மஹா விஷ்ணுவாய்க் கொண்டு

இந்த அண்டாந்தர வர்த்தியான ஸத்ய லோகத்துக்கும்
அவ்வருகாய் இருந்துள்ள ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே
ஜகத் உப க்ருத்யே ஸோயம் இச்சாவதாரா(ஜகத்தை வாழ்விப்பதற்காக )
ஸ்ரோணா நக்ஷத்ரம் விஷ்ணுர் தேவதா (திருவோண நக்ஷத்ரத்துக்கு தேவதை விஷ்ணு )என்கிறபடியே
விஷ்ணு தேவதாகமான திருவோணம் என்கிற திரு நக்ஷத்ரத்திலே ஸ்வ இச்சையாக ஸ்வ மேவ (தனது ஸங்கல்பம் அடியாகவே )திரு அவதரித்து அருளி

உடனே
இறையும் அகலகில்லேன் -என்று இருக்கும் பெரிய பிராட்டியாரையம்
அந்த விஷ்ணு லோகத்திலே தானும்
பத்மே ஸ்திதாம் (தாமரை மலரில் இருப்பவள் )பத்ம வர்ணாம் என்றும்
தேனே மலரும் பூ மேல் இருப்பாள்- என்றும்
அஸ்ய ஈஸானா விஷ்ணு பத்நீ -என்றும் சொல்லுகிறபடி
அப்பொழுதைத் தாமரைப் பூவிலே மஹா லஷ்மீ என்கிற திரு நாமத்தை யுடையளாய்
ஸ்வ மஹிஷியாய்த் தானே திரு அவதரிப்பித்து அருளி

தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம அமீ பரம ஸம்ஸ்காரா பாராம ஏகாந்த்ய(பரமை ஏக அந்த) ஹேதவ-என்கிறபடியே

(தாபம் -தீயில் பொலிகின்ற சங்க சக்ர இலச்சினைகளைப் பெறுதல்
புண்ட்ர -ஊர்த்வ புண்ட்ரமான திரு நாமங்களை அணிவித்தல்
நாம –தாஸ்ய நாமம் இடப் பெறுதல்
மந்த்ர -குரு பரம்பரா பூர்வகமாக திரு மந்த்ரம் த்வயம் சரம ஸ்லோகம் -மூன்று ரஹஸ்ய மந்திரங்களையும் உபதேசமாகப் பெறுதல்
யாக -மங்களா ஸாஸன பரனாக எம்பெருமானால் ஏற்ப்பிக்கப் பட்டு பகவத் ஆராதனத்துக்குத் தகுதி பெறுதல்
இந்த ஐந்து ஸம்ஸ்காரங்களும் எம்பெருமானுடைய கைங்கர்யத்தையே பிரயோஜனமாகக் கருதும் பரமைகாந்தி நிலைக்குக் காரணமாய் அமைந்தவை)

(பரமை ஏக அந்தம்-பெருமாள் திரு முக மலர்த்தி ஒன்றே குறிக்கோள் -பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வதே இதற்காகவே )

(ஏகாந்தி -உபேயத்திலேயே –கைங்கர்யம் ஒன்றிலே கண் வைப்பவன்-பரம ஏகாந்தி -அசித்வத் -அவன் பிரயோஜனத்துக்காகவே கைங்கர்யம் )

(யாகஸ்-யஜ தேவ பூஜாயாம் –
சங்கு சக்ர முத்திரை இருந்தால் த்வாராகையில் உள்ளே விட கண்ணன் பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணி
இருக்க வேண்டும் என்று வாசல் காப்பார் இடம் அருளிச் செய்தான் அன்றோ
ஸம்ஸ்காரம் -தகுதி கொடுக்க –கற்ப தானம் அன்ன ப்ரசானம் போன்ற 16 ஸம்ஸ்காரங்கள் குழந்தை பிறந்ததில் இருந்து பலவும் உண்டே
இங்கே பஞ்ச ஸம்ஸ்காரம் -பரம ஸம்ஸ்காரம் –இதுக்கு மேல் ஒன்றும் இல்லையே -மீண்டும் பிறவி வராதே)

ரஹஸ்ய த்ரய உபதேசம் தான்
தபோ ஊர்த்வ புண்ட்ர நாம மந்த்ர யாக பூர்வகமாய் இருக்கிறதோ பாதி
பரம்பராம் உபதிஸேத் குரூணாம் ப்ரதமோ குரு
ஆத்ம வித்யா வி ஸூத் யர்த்தம் ஸ்வ ஆச்சார்யாத்யாம் த்விஜோத்தம -என்றும்
(ப்ராஹ்மண ஸ்ரேஷ்டனான முதல் ஆச்சார்யன் -ஸ்வ ஆச்சார்யன் -தனது ஆச்சார்யன் முதல் கொண்டுள்ள ஆச்சார்ய பரம்பரையை-
பரம் பரா -அடுத்து அடுத்து உயர்ந்த ஸ்ரேஷ்டமான -ஆத்ம ஞானம் பெறுவதற்கு உரிய சுத்தியின் பொருட்டு சிஷ்யனுக்கு உபதேசிக்கக் கடவன் )என்றும்

ஸஹஸ்ர புருஷம் வாபி சத பூருஷ மேவ வா த்ரி ஸப்த தச பூருஷம்-என்றும்
(ஆயிரம் புருஷர்களை யாவது நூறு புருஷர்களை யாவது 21 புருஷர்களை யாவது 24 புருஷர்களை யாவது பன்மையால் காட்டும் )

(உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1 -சரம சரம சொல் இது தானே-ஆச்சார்யன் பிரதானம்)

(பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன் —ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -450-)

ஆதவ் யுபதிதேஸாஸ் வேதே சில ரிக் (முதல் முன்னமே வேதத்தை உபதேசிக்கக் கடவது ) என்றும்
இத்யாதிகளிலே குரு பரம்பரா ஸங்க்ரஹமாய் இருந்துள்ள
அஸ்மத் குருப்யோ இத்யாதி
வாக்ய த்ரய உபதேச பூர்வகமாய் இருக்கும் என்கையாலே
விஷ்ணு லோகே பகவான் விஷ்ணுர் நாராயண ஸ்வயம்
ப்ரோக்தவான் மந்த்ர ராஜாதீந் லஷ்ம்யை தாபாதி பூர்வகம் -என்றும்
(ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் நாராயணன் பெரிய பிராட்டியாருக்கு தாபம் முதலான சம்ஸ்காரங்கள் முன்னாக
திரு மந்த்ரம் முதலான-மந்த்ர ராஜாதீந் மந்த்ரங்களை தானே உபதேசித்தான் )

விஷ்ணும் ஆதி குரும் லஷ்ம்யா மந்த்ர ரத்ன பிரதம் பஜேத் –
(மஹா லஷ்மிக்கு மந்த்ரங்களை உபதேசித்த ஆதி குருவான விஷ்ணுவை வணங்கக் கடவன் )
என்றும் சொல்லுகிறபடியே அவளுக்கு
தாப ஊர்த்வ புண்ட்ர தாஸ்ய நாம பிரதான புரஸ் சரமான (பிரதான-கொடுத்தல் )இந்த வாக்ய த்ரய உபதேஸ பூர்வகமாக
ஸ்வரூப உபாய புருஷார்த்த
யாதாத்ம்ய ப்ரதிபாதிதமான ரஹஸ்ய த்ரயத்தை நேராகத் தானே உபதேஸித்து அருளி
(ஸ்வரூபம் -ஆத்மாவின் தன்மை –
உபாயம் -பேற்றுக்கு வழி
புருஷார்த்தம் -பேறு-(ஸ்வரூபம் திருமந்திரம் -உபாய சரம ஸ்லோகம் -புருஷார்த்தம் த்வயம்)
இவை பற்றிய உள்ளபடி உண்மையான அறிவைப் புகட்டுவதான )

(விவரணமாக ஒவ்வொன்றும் மற்றவை என்றால் திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் )

அப்படியே
ஸோப திஷ்டவதீ ப்ரீத்யா தாப புண்ட்ராதி பூர்வகம் விஷ்ணு லோக அவதீர்ணாய ப்ரியாய ஸததம் ஹரே
ஸேநே ஸாய ப்ரியா விஷ்ணோர் மூல மந்த்ர த்வயாதிகம் -என்கிறபடியே
(விஷ்ணு லோகத்தில் உள்ளவரும் விஷ்ணு பகவானுக்கு எப்போதும் பிரியமானவருமான சேனை முதலியாருக்கு
விஷ்ணு ப்ரியா என்று பகவானுக்கு மிகவும் பிரியமான பிராட்டியாரான லஷ்மி பிரியமுடன்
திரு இலச்சினை திருமண் காப்பு முதலிய ஸம்ஸ்காரங்களைத் தொடங்கி ரஹஸ்ய த்ரயங்களை உபதேசித்தார் )
அவளைக் கொண்டு அந்த விஷ்ணு லோகத்தில் தானே அவ தீர்ணரான சேனை முதலியாருக்கும்
இந்தக் க்ரமத்திலேயே ரஹஸ்ய த்ரய உபதேஸத்தைப் பண்ணுவித்து

(த்வயாதிகம்-ஆதி சரம ஸ்லோகம் அங்கு உபதேசித்தாரா
குருஷேத்ரம் என்று அன்றோ நாம் அறிந்தோம் என்னில்
விஷ்ணு தான் செய்தவற்றை தானே அறிவான்
நமக்கும் ஸ்வரூப விகாசம் பிறந்த பின் -அங்கு சென்ற பின் அறிவோம்)

பின்னையும் அப்படியே
ஸ்நேஸ ஸ்வயமாகத்ய ப்ரீத்யா ஸ்ரீ நகரீம் ஸூபாம் சடகோபாய முநயே திந்த்ருணி மூல வாஸிநே
தாபாதி பூர்வகம் மந்த்ர த்வய (த்ரய ) ஸ்லோக வரான் க்ரமாத் விஷ்ணு பத்ன்யா மஹா லஷ்ம்யா நியோகாத் உப திஷ்டவான் –
(சேனை முதலியார் தாமும் மங்களம் பொருந்திய ஆழ்வார் திரு நகரியை ப்ரீதியுடன் வந்து அடைந்து அங்கு
திருப் புளி ஆழ்வாரின் அடியிலே வசித்து வந்த சடகோப முனி என்ற மனன சீலரான நம்மாழ்வாருக்கு பெரிய பிராட்டியார் நியமனப்படி
முறைப்படி திரு இலச்சினை முதலாக ரஹஸ்ய த்ரயத்தை உபதேசித்து அருளினார் ) என்கிறபடியே இந்த க்ரமத்திலே
தானே சேனை முதலியாரைக் கொண்டு திரு நகரியிலே திருப் புளி ஆழ்வார் அடியிலே எழுந்து அருளி இருக்கிற ஆழ்வாருக்கு
ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து உடனே தான் அவருக்கு மயர்வற மதிநலம் அருளி

(ஸ்வயமாகத்ய-பர கத ஸ்வீகாரம்-ஸ்ரீ நகரீம்-திரு நகரி-ஸ்லோக வரான்-சிறந்த சரம ஸ்லோகம் )

(உடனே தான் அவருக்கு மயர்வற மதிநலம் அருளி-இவருக்கு மட்டும் இது -கீழே விஷ்வக் சேனருக்கும் பிராட்டியாருக்கும் இது இல்லையே)

(பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -ஆச்சார்ய பரம்பரை விடக் கூடாது என்று விஷ்வக்சேனர் மூலம் அருளி)

புனஸ் ச நாத முநயே பஞ்ச ஸம்ஸ்கார பூர்வகம் பட்ட நாத ப்ரப்ருதிர் நிர்மிதைர் திவ்ய யோகிபி திவ்யைர் விம்சதி சங்க்யாகை
ப்ரபந்தனைஸ் ஸஹ தேசிகஸ் ஸ்வ யுக்த த்ரமிட வேதாநாம் சதுர்ணாம் உபதேஸ க்ருத் -என்கிறபடியே
(மேலும் நாத முனிகளுக்கு ஞான தேசிகரான நம்மாழ்வார் தாபம் முதலான பஞ்ச ஸம்ஸ்காரம் முதலாக
பட்டர் பிரானான பெரியாழ்வார் தொடக்கமான திவ்ய யோகிகளான ஆழ்வார்களால் அருளிச் செய்யப்பட்ட இருபது திவ்ய ப்ரபந்தகளுடன்
தாம் அருளிச் செய்த தமிழ் வேதங்களான நான்கு திவ்ய பிரபந்தங்களையும் உபதேசித்து அருளினார் )என்கிறபடியே
ஆழ்வாரைக் கொண்டு அத் திரு நகரியிலேயே திருப் புளி ஆழ்வார் அடியிலேயே தானே நாத முனிகளுக்கும் இந்த கிரமத்திலேயே
ரஹஸ்ய த்ரய உபதேசத்தைத் திவ்ய பிரபந்த உபதேசாதி சிரஸ்கமமாகப் (பின்னையும்
திவ்ய பிரபந்தங்கள் அவற்றின் பொருள்கள் முதலான ஸம்ப்ரதாயங்களையும் முடியப்) பண்ணுவித்து

(திவ்ய பிரபந்த உபதேசாதி சிரஸ்கமமாக-இது இங்கு மட்டும்)

அப்படியே
அந்த நாத முனிகளைக் கொண்டு உய்யக் கொண்டார் தொடக்கமானவருக்கும்(குருப்யோ பஹு வசனம் இதனால் தான் )
உய்யக் கொண்டாரைக் கொண்டு மணக்கால் நம்பி தொடக்கமானவருக்கும்
மணக்கால் நம்பியைக் கொண்டு ஆளவந்தார் தொடக்கமானவருக்கும்
ஆளவந்தாரைக் கொண்டு பெரிய நம்பி தொடக்க மானவருக்கும்
பெரிய நம்பியைக் கொண்டு உடையவருக்கும்
இந்தக் க்ரமத்திலே ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து

(அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்தி ஹார யட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி–எதிராஜ சப்ததி-)

(பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடு நாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குரு பரம்பரைக்கே ஏற்றம் .குரு பரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்)

(எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா –38-)

பின்னையும் அப்படியே
உடையவரைக் கொண்டு
ஆழ்வான் ஆண்டான் முதலான எழுபத்து நாலு முதலிகளுக்கும்
எம்பார் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தொடக்கமான ஏழு நூறு ஜீயர்களுக்கும்
மற்றும் அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்
இந்தக் கிரமம் தப்பாதே ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து

பின்னையும் அப்படியே
உடையவர் தர்சனத்தை நிர்ஹித்துக் கொண்டு போகிற காலத்திலே
ப்ரீத்யா ப்ருதக் ப்ருதக் சிஷ்யை ப்ரணமே தீஸ்வராவதி ஸ்வாராத்யம் யாவதா ஞாதும் வாக்யம் தாவத் அநு ஸ்மரேத்
(ஸ்வ ஆச்சார்யன் தொடக்கமாக ஈஸ்வரன் அளவும் எவ்வளவு ஆச்சார்யர்களை அறிந்து ப்ரீதியுடன் தனித் தனியே
வணங்கக் கடவனோ அவ்வளவு அவர்கள் விஷயமான ஸ்துதி வாக்யங்களை அனுசந்திக்கக் கடவன் )என்றும்

ப்ரத்யஹம் ப்ரணதைஸ் சிஷ்யைஸ் ப்ரபாதே பத்ம ஸம்பவே தத்யதா விதிநா நித்யம் ப்ரவர்த்தவ்யம் குரோர் குலம்
( பத்ம ஸம்பவே-தாமரை மகளே அநு தினம் ஆச்சார்யனை வணங்கும் சிஷ்யர்களாலே காலையில் முறைப்படி தினம் தோறும்
குருவினுடைய பரம்பரை யானது அனுசந்திக்கத் தக்கது )என்கிற படியே

இம் மூன்று வாக்யத்துடனே
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -என்று தொடங்கி
ஸ்ரீ தராய நம என்கிற வாக்யத்து அளவான பத்து வாக்கியங்களையும் சேர்ந்து பதின் மூன்று வாக்கியங்களாக
இத்தை மேலோரான நம் ஆச்சார்யர்கள் தம் தாமுக்கு தஞ்சமாகத் தாம் அனுசந்திப்பதும்
தம் தாமை ஆஸ்ரயித்தார்க்கு உபதேசிப்பதும் செய்யக் கடவர்கள் என்று
தாமே ஆழ்வானைக் கொண்டு நியமித்து அருளி

(தாமே-பிரதம ஆச்சார்யன் என்றும் நாயக ரத்னமான உடையவர் என்றும் கொள்ளலாம்)

இப்படி சேதன ஸ்வரூபத்தைப் பல்லவமாக்கியும் ( தளிர்க்கும் படி செய்து )
புஷ்பிதமாக்கியும் பல பர்யந்தம் ஆக்கியும் ( புஷ்பித்து பழம் -முழுப் பலன் தரும் வரை ஆக்கியும்  )
(பகவத் சேஷ பூதன் பல்லவம் -பாகவத சேஷத்வம் புஷ்பிதம் -ஆச்சார்ய சேஷ பூதன் -பழம் )செய்து வைத்துச் செல்வனாய்
துளக்க முற்ற அமுதமாய் என்றும்
விஜ்வர பிரமுமோதஹ ( ஸ்ரீ ராமாயணம் -ஜ்வரம் -கவலை விட்டு மகிழ்வு எய்தினான் ) என்றும் சொல்லுகிறபடியே
உள் வெதுப்புத் தீர்ந்து நிர் வ்ருதனாய் (துக்கம் தீர்ந்து சந்தோஷமாய் இருப்பவன் ஆனான் )இருந்தான்

(நைச்யம் பாவிக்காமல் இவர்கள் தமது திரு நாமத்தை சொல்ல வேண்டும் என்றதும் விலக்காமல் இருந்தார்கள்
என்பதாலேயே இவனே நியமித்து 13 வாக்கியங்களையும் ஏற்பாடு செய்து அருளினான் என்பது தேறும்)

அந்வயாத் அபிசைகஸ்ய ஸம்யக் ந்யஸ்த ஆத்மாநோ ஹரவ் ஸர்வ ஏவ ப்ரமுச்யேரந் நரா பூர்வே பரே
( எம்பெருமான் இடம் நன்கு வைக்கப்பட்ட மனதை யுடைய ஒரு ஆச்சார்யனுடைய சம்பந்தித்தினால்
ஒருவனுடைய முன்னோர்களும் பின் வருவார்களும் மோக்ஷம் அடைகின்றனர் ) என்றும்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்தம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வயம் உபகதா தேஸிகா முக்திம் ஆபு
ஸோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் சம்பந்தாதம் அநுத கதம் வர்ண்யதே கூர நாத
( பின் வந்தவர்களாய் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை ஆஸ்ரயித்தும்
முன்னோர்களாய் திரு முடி சம்பந்தத்தினாலே எந்த எம்பெருமானருடைய ஆச்சார்யர்கள் அவர் சம்பந்தம் பெற்று மோக்ஷத்தை அடைந்தனரோ
அப்படிப்பட்ட எம்பெருமானாரும் கையிலங்கு நெல்லிக்கனியாய் யுள்ள தமது மோக்ஷத்தை எந்த கூரத்தாழ்வான் சம்பந்தத்தினாலேயே
பெற்றதாய் நினைத்தாரோ அந்த கூரத்தாழ்வான் எப்படி ஸ்துதிக்கப்பட்டு முடிக்கப் பட்டராவார் ) என்றும் சொல்லுகிறபடியே

(தை பிறந்தால் வழி பிறக்கும்
ஹஸ்தம்-கூரத்தாழ்வான் –
மகம் -திருமழிசை ஆழ்வார்
புஷ்யம் -எம்பெருமானார் குரு புஷ்யம் தான் உகந்த திருமேனி ப்ரதிஷ்டை
புனர்பூசம் -எம்பார்
திரு நக்ஷத்ரம் வருவதாலேயே)

முன்புள்ள முதலிகளுக்கும் பின்புள்ள முதலிகளுக்கும் ஓக்க உத்தாரகரான ( கரை ஏற்றுபவர் -உஜ்ஜீவனம் செய்பவர் )
உடையவர் ஸர்வஞ்ஞராய் இருக்கச் செய்தேயும்
ததாபி சமயா ஸாராந் ஸ்தாபயந் ஸாம் ப்ரதாயிகாந் ( அப்படிப்பட்ட ஸம்ப்ரதாய ஸித்தமான ஸமய ஆசாரங்களை அனுஷ்டான பர்யந்தமாக்கி ) என்கிறபடியே
தமக்கு ஸம்ப்ரதாய பரிசுத்தி யுண்டு என்னும் இடம் தோற்ற

(திருமாலை ஆண்டானுக்கு திருக்கோஷ்டியூர் நம்பி ராமானுஜர் பெருமை அருளிச் செய்தார் அன்றோ
அஞ்ஞான ஞானம் பண்ண வரவில்லை
கண்ணன் சாந்தீபன் -ராமர் வசிஷ்டர் விசுவாமித்திரர் போல்
ஆச்சார்ய சிஷ்யர் பரம்பரை விடாமல் இருக்கவே இவ்வாறு நடக்கிறது -)

அஸ்மத் குருப்யோ நம -இத்யாதி வாக்ய த்ரயத்தையும் தாம் அநுஸந்திக்கும் போது
முந்தின முதல் வாக்கியத்தில் குரு பத ப்ரதிபாத்யர்(சொல்லப் பட்டவர் ) பெரிய நம்பி என்றும்
அதில் பஹு வசன ( குருப்யோ என்ற பன்மையால் சொல்லப் பட்டவர் ) ப்ரதிபாத்யர் திருக்கச்சி நம்பியும் பேர் அருளாளப் பெருமாளும் என்றும்
இரண்டாம் வாக்யத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் ஆளவந்தார் என்றும்
அதில் பஹு வசன ப்ரதிபாத்யர் ஆளவந்தாரின் ஸ ப்ரஹ்மசாரிகளான பெரியோர்கள் என்றும்
மூன்றாம் வாக்யத்தில் குரு பத ஸர்வ ஸப்த பஹு வசன-ப்ரதிபாத்யர் மணக்கால் நம்பி தொடக்கமான மேல் எல்லாரும் என்று கண்டு கொள்வது

(ஆறு வார்த்தைகளில்- பூர்ணாச்சார்ய ஸமாஸ்ரய -காட்டி உபகாரம் செய்தவர் பேர் அருளாளப் பெருமாள் தானே)

அப்படியே உடையவருக்கு முன்புள்ள முதலிகளில் வைத்துக் கொண்டு பெரிய நம்பி இவ் வாக்ய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
முந்தின வாக்யத்தில் குரு பத ப்ரதிபாத்யர் ஆளவந்தார் என்றும் இரண்டாம் வாக்யத்தில் பரம குரு பத ப்ரதிபாத்யர் மணக்கால் நம்பி என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் இவர்களுக்கு குரு உப சத்தியிலே (ஆச்சார்யரைக் கிட்டுவதிலே ) ருசியை ஜநிப்பித்த (பிறப்பித்த )
ஸ்ரீ வைஷ்ணவர்களும் -அவர்களோடு சங்கதியை யுண்டாக்கின ஈஸ்வரனும் என்றும்
மூன்றாம் வாக்யத்தில் குரு பத ஸர்வ ஸப்த பஹு வசன ப்ரதிபாத்யர்
உய்யக் கொண்டார் தொடங்கி ஸ்ரீ யபதியாய் யுள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது

அப்படியே ஆளவந்தார் இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது
குரு பத ப்ரதிபாத்யர் மணக்கால் நம்பி என்றும்
த்வதீய வாக்யத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் உய்யக் கொண்டார் என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதா சம்பவம் இதில் ருசியைப் பிறப்பித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஈஸ்வரனும் என்றும்
மூன்றாம் வாக்யத்தில் குரு பத ஸர்வ ஸப்த பஹு வசன ப்ரதிபாத்யர்
ஸ்ரீ மன் நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீ யபதி அளவாய் யுள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே
மணக்கால் நம்பி  இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது
பிரதம த்விதீய வாக்யஸ்த குரு -பரம குரு பத ப்ரதிபாத்யர் உய்யக் கொண்டாரும் நாத முனிகளும் என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதா சம்பவம் இத்தை இசைவிப்பித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஈஸ்வரனும் என்றும்
த்ருதீய வாக்ஸ்த குரு பத ஸர்வ ஸப்த ப்ரதிபாத்யர் நம்மாழ்வார் தொடக்கமானார் எல்லாரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே
உய்யக்கொண்டார்  இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது
ஆதி மத்ய வாக்ய கத குரு -பரம குரு பத ப்ரதிபாத்யர் நாத முனிகளும் -ஆழ்வாரும் என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதா சம்பவம் இதில் ப்ரேமத்தை ஜநிப்பித்த பெரியோர்களும்- எம்பெருமானும் என்றும்
த்ருதீய வாக்ய கத குரு பத ஸர்வ ஸப்த ப்ரதிபாத்யர் சேனை முதலியார் தொடக்கமான மேலோர் அனைவரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே
நாத முனிகள் இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது பிரதம த்விதீய வாக்ய கத குரு பரம குரு பத ப்ரதிபாத்யர்
ஆழ்வாரும் -சேனை முதலியாரும் -என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் தத் சம்பந்த கடகரான(சேர்ப்பிப்பவர் )
ஸ்ரீ வைஷ்ணவர்களும் -எம்பெருமானும் என்றும்
த்ரிதீய வாக்ய கத குரு பத ஸர்வ ஸப்த பஹு வசன ப்ரதிபாத்யர்
பிராட்டியும் -எம்பெருமானும் -மற்றும் அங்குள்ளார் அனைவரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே
ஆழ்வாரும் இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது பிரதம த்விதீய வாக்ய கத குரு பரம குரு பத ப்ரதிபாத்யர்
சேனை முதலியாரும் -பிராட்டியாரும் -என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் இருவருக்கும் உயிர் நிலையாய் இருப்பவர் சிலர் என்றும்
த்ரிதீய வாக்ய கத குரு பத ஸர்வ ஸப்த பஹு வசன ப்ரதி பாத்யர்
ஸர்வேஸ்வரனும் வ்யூஹமும் விபவமும் நித்ய ஸூரிகளும் என்று கண்டு கொள்வது –

(ஸர்வ பஹு வசன சப்தத்துக்கு பல ஈஸ்வர அவஸ்தைகள் சொல்ல வேண்டுமே)

இப்படியே
சேனை முதலியாரும் இவ்வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது பிரதம த்விதீய வாக்ய கத குரு பரம குரு பத ப்ரதிபாத்யர்
பிராட்டியாரும் -விஷ்ணுவாக அவதாரமான எம்பெருமானும் -என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் அவளுக்கு ஸ்தன பாஹு த்ருஷ்டி ஸ்தானீயருமான (மார்பு கைகள் கண்கள் இவைகளாகக் கொள்ளப்பட்ட )மற்றைப் பிராட்டிமாரும்
அவன் அடிமை கொள்ளுகிற மற்றை அமரர்கள் தாங்களும் (கைங்கர்ய நிஷ்டர்கள் )என்றும்
த்ரிதீய வாக்ய கத குரு பத ஸர்வ ஸப்த பஹு வசன ப்ரதிபாத்யர்
இவ் வவதாரத்துக்கு நாற்றங்காலான (அவதாரத்துக்குத் தோற்றுவாய் மூலமான கிழங்கு )ஷீரார்ண நிகேதனனும்
மற்றும் வ்யூஹ அவதாரங்களும்(ஸங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்ரர்கள் )
ஸர்வேஸ்வரனும் வ்யூஹமும் விபவமும் நித்ய ஸூரிகளும் ஸ்வேத த்வீப வாசிகளும் (ஸநகாதி முனிவர்கள் )என்றும் யதா ஸம்பவம்
இப் புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக் கடவது

இப்படியே
பிராட்டியார் இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம (பிரதம த்விதீய) வாக்ய கத குரு பரம குரு பத ப்ரதிபாத்யம்
விஷ்ணு அவதாரமான எம்பெருமான் தானும் -அவ் வவதார கந்தமான (தோற்றுவாய் மூலமான கிழங்கு ) வ்யூஹ வாசுதேவன் என்றும்
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர்
பெரிய திருவடி தொடக்கமானவரும் -(அநந்த கருடாதி ஸூரிகள்-கடகரே பஹு வசன ப்ரதிபாத்யர் )
ஸங்கர்ஷண அநிருத்த ப்ரத்யும்னர்கள் என்றும்
த்ரிதீய வாக்யஸ்த குரு பத ஸர்வ ஸப்த பஹு வசன ப்ரதிபாத்யர்
வான் இளவரசு வைகுந்தக் குட்டனும் -லீலா ரஸம் அனுபவிக்கும் பர வாஸூ தேவன் –
ஓடும் புள்ளேறி யில் படியே இச் சேதனனுக்காக இவ் விபூதியிலே அவன் பரிக்ரஹிக்கும் சில அவதாரங்களும்
நித்ய ஸித்தரும் -என்றும் எதா சம்பவம்
இப் புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக் கடவது

(தர்ம ஏக வசனம் -தர்மான் பஹு (தர்ம ஏக -ஸர்வ -அங்கங்கள் கூடி பலவும் போல்
இங்கும் சர்வ-குரு -குருப்யோ -பத பிரயோகங்கள்-மேல் நோக்கியும் -ச ப்ரஹ்ம சாரிகளும் கொள்ள வேண்டும் )

(மண்டலாகாரம் -ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு -விபவ அவதாரம் போல்
ஸ்ரீ ரெங்க நாதனுக்கு சரம சிஷ்யரும் ஆச்சார்யரும் மா முனிகள் வரை முடிந்து ஆரம்பிக்குமே )

ஸ்ரீமத் வானமா மலை ஜீயர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருப்பாவை ஸ்வாபதேச வியாக்யானம் –

அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்

அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்

அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்

ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்

ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்

ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்

ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்

ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம்
அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்

ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்

ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்

ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்

ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

வாக்ய குரு பரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேத வாக்யங்கள்
மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்தது ஆகும்

(பிள்ளாய் -தொடங்கி -இளம் பிள்ளாய் -வரை -பத்துப் பாட்டும் ப்ரபத்திக்கும் பூர்வ பாவியான
வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவகாஹித்தரோடு வாசி அற
உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –

அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –

அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –

கோதுகலமுடைய பாவாய் -என்று
சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே -அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –

மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கும் கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –(யதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவன் )
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருத த்ரவ ஸம்யுதம் (கிளி கொத்தின பழமே ஸ்ரீ மத் பாகவதம் )-என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப் பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியாளை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

(திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ணா பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-)

(ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-)

நாயகனாய் என்று தொடங்கி –
மேல் ஐந்து பாட்டாலே –
ஸ்ரீ மத் விஷ்வக் சேனாயா நம —
ஸ்ரீ யை நம —
ஸ்ரீ தராய நம -என்னும் அர்த்தங்களையும்
அச் சேர்த்தியிலே
இருவர் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்த பெருமை ஏற்றங்களை சொல்லுகிறது –)

பிரதம அவதாரமான விஷ்ணு அவதாரமும்
அவ் வவதார கந்தமான பாற் கடலுள் பையைத் துயின்ற பரமனும்
நிவாஸமான வைகுண்ட வானாடனும் தர்மி ஐக்யத்தாலே பேதம் இன்றிக்கே ஏக தத்வமாய் இருந்தார்களே யாகிலும்
பெரிய பெருமாளுக்கும்(ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் ) பெருமாளுக்கும் (ஸ்ரீ ராம பிரானுக்கும் )தர்மி ஐக்யம் இருக்கச் செய்தே
ஸஹ பத்ன்யா விசாலாக்ஷி நாராயணம் உபாகமத் (யுவ ராஜ பட்டாபிஷேக பூர்வ அங்கமாக பிராட்டியுடன் ராமபிரான் நாராயணனைப் பூஜித்தான் )என்று
விக்ரஹ பேதத்தாலே –வெவ்வேறு திரு மேனி உள்ள படியால் – உப கந்த்ருத்வ உப கந்தவ்யங்களைச் சொன்னவோ பாதி
(பூஜிக்கும் தன்மை பூஜிக்கப்படும் தன்மை என்று பிரித்துச் சொல்வது போலே -உபாகமத்-ஸ்லோகத்தில் இருப்பதால் இந்த பத பிரயோகங்கள் )
இவ்விடத்தில் உள்ள விக்ரஹ பேதத்தை இட்டு இம் மூவருக்கும் இங்கனம்
குருத்வ
பரம குருத்வ
ஸர்வ குருத்வங்களைச் சொல்லக் குறை இல்லை

உடையவருக்கு பின்புள்ள முதலிகளில் வைத்துக் கொண்டு ராமானுஜ பதச் சாயா (திருவடி நிழல் )என்னும்படி
அவர் திருவடிகளில் ஆஸ்ரயித்தகவர்களுக்கு நிழலும் அடிதாறுமாய் (பாத ரேகையாய் )கொண்டு
குரு பரம்பரா அநு ப்ரவிஷ்டாரான(உள் அடங்கிய ) எம்பார் இவ்வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது
அதில் குரு பரம குரு ஸர்வ குரு பத பஹு வசன ப்ரதிபாத்யர்
எம்பெருமானார்
பெரிய நம்பி ஆளவந்தார் உடன் கோபாலீ வர்த்த நியாயத்தாலே -(சாமான்ய விசேஷ -நியாயம்-
நாலு கால்கள் கொம்பு பசு போன்ற உருவம் என்று எருதுவையும் குறிக்குமா போலே )
பிள்ளானும் -ஆண்டானும் -ஆழ்வானும் -அனந்தாழ்வானும் -என்றும்
அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள -பிரியத்துக்கும் கௌரவத்துக்கும் பாத்ர பூதரான ஸ்ரீ வைஷ்ணவர்களும்
என்று பூர்வம் போலே இங்கனம் விபஜித்து -பிரித்து -பொருள் சொல்லக் கடவது –

(தை புனர்பூசம் -சித்திரை தேர் திரு நாள் -எம்பார் திரு நக்ஷத்ரம்)

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ |
ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||-எம்பாரின் தனியன்:

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே-எம்பாரின் வாழி திருநாமம்:

(74 சிம்ஹாசானாபதிகளையும் சொல்லி அவர்களில் இவர் அபிமதர் என்று காட்டவே கோபாலீ வர்த்த நியாயம்
வந்தே கோவிந்த தாதவ் -எம்பாரும் ஆழ்வானும்)

(வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம சரண ஸ்ரீ தரம் சாம்ச்ரயேயம்)

அப்படியே
எம்பார் திருவடிகளில் ஆஸ்ரயித்த பட்டர் இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது
இதில் குரு பரம குரு ஸர்வ குரு பத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவே
எம்பாரும் -ஆழ்வானும் ஆண்டானும் பிள்ளானும் -எம்பெருமானாரும்
அவர்களுக்கு அந்தரங்கராய இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்று
பூர்வம் போலே இங்கனம் விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது -(சர்வ நம்பி பெரிய நம்பி இவருக்கு )

அப்படியே
பட்டர் திருவடிகளில் ஆஸ்ரயித்த நஞ்சீயர் இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது
இதில் குரு பரம குரு ஸர்வ குரு பத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவே
பட்டரும் (கு)-எம்பாரும் (பரம குரு )-ஆழ்வானும் ஆண்டானும் பிள்ளான் தொடக்கமானவரும்(பரம குருப்யோ இவர்கள் )-எம்பெருமானாரும்
மற்றும் பெரியோர்களும் என்றும்
பூர்வம் போலே இங்கனம் விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –

பின்னையும் அப்படியே
நஞ்சீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்த நம்பிள்ளை இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது
இதில் குரு பரம குரு ஸர்வ குரு பத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவே
நஞ்சீயரும் -பட்டரும் -எம்பாரும் – பிள்ளானும்
அவர்களுக்கு ஸ ப்ரஹ்மசாரிகளாய் பஹு மந்தவ்யராய் இருந்துள்ள
ராமானுஜனைத் தொழும் பெரியோர்களும் என்றும்
இங்கனம் விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –

இக் குரு பரம்பரையைத் தான் ஆரோஹண க்ரமத்திலே -(ஸ்வ ஆச்சார்யன் தொடக்கமாக திரு முடி வர்க்கமாய் மேலே உள்ள ஆச்சார்யர்களை)
ஆசார்யாணாம் அஸாவஸா வித்யா பகவத்த என்று பகவான் அளவும் சென்று அவ்வருகில் செல்லக் கடவது ஓன்று அன்று
ஒவ்வொருவரையும் இன்னார் என்று அறிய வேண்டும்
இங்கனம் இருந்தாலும் அவரோஹண க்ரமத்தில் வந்தால் –
(லஷ்மி நாத ஸமாரம்பாம் –அஸ்மாதாச்சார்ய பர்யந்தம் திருவடி சம்பந்தம் நோக்கி நினைப்பது)

ராமானுஜன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி -இத்யாதிப்படியே மேன் மேல் என கொழுந்து விட்டுப் பகிர்ந்து செல்லக் கடவது ஓன்று
ஆகையாலே நம்பிள்ளை திருவடிகளிலே ஆஸ்ரயித்த வடக்குத் திரு வீதிப்பிள்ளையும்
அவர் திருவடிகளில் ஆஸ்ரயித்த பிள்ளை லோகாச்சார்யாரும்
அவர் திருவடிகளிலே ஆஸ்ரயித்த திருவாய் மொழிப் பிள்ளையும்
அவர் திருவடிகளிலே ஆஸ்ரயித்த பெரிய ஜீயரும்
இவ் வாக்ய த்ரயத்தையும் அநுஸந்திக்கும் போது இவ் வாக்ய த்ரய குரு பரம குரு சர்வ குரு பத
பஹு வசன ப்ரதிபாத்யர் இன்னார் இன்னார் என்னும் இடம் ஆச்சார்யர்களுடைய திரு நாமங்களிலே கண்டு கொள்வது

அப்படியே பஹு வசன ப்ரதிபாத்யர் அவர்களுக்கு உயிர் நிலையாய்த் தம் தாமுக்கு பஹு மந்தவ்யராய்க்
கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும் போது சுள்ளிக் கால் போலே தம் தாமை அவ்வவர்கள் திருவடிகளிலே சேர்க்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்றும் கண்டு கொள்வது –

———-

இனி ஸ்ரீ ராமாநுஜாய நம இத்யாதி
தசகத்திலும் -10- வைத்துக் கொண்டு
ஸ்ரீ ரியை -ஸ்ரீ தராய நம -என்கிற வாக்ய த்வயத்தில்
ஸ்ரீர் இதி பிரதம அபிதானம் லஷ்ம்யா (பெரிய பிராட்டியாரின் முதல் திரு நாமம் ஸ்ரீ என்பது )
ஸ்ரீர் இத்யே வச நாம தே(தேவரீருக்கு ஸ்ரீ என்று அன்றோ திரு நாமம் அமைந்துள்ளது )என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ ஸப்தம் பெரிய பிராட்டியாருக்கு வாசகமாய் இருக்கும்

(ஸ்ரீ ரிதி ப்ரதமம் நாம லக்ஷம்யா-என்கிறபடியே இவளுக்கு பிரதம அபிதானமாய் இருக்கும் –
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதானம் -என்று அகாரம் ஈஸ்வரனுக்கு பிரதமம் அபிதானம்
ஆனால் போலே ஆயிற்று இவளுக்கும் இது பிரதம அபிதானமாய் இருக்கும் படி –
அது அவனுடைய ரக்ஷகத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வ பாவங்களை சொல்லக் கடவதாய் இருக்கும் -என்றபடி –
இது இவளுடைய புருஷகாரத்துவத்துக்கு ஏகாந்தமான ஸ்வ பாவங்களை சொல்லக் கடவதாய் இருக்கும் -என்றபடி)

(“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“-ஸ்ரீ சது ஸ்லோகி – ஸ்லோகம் 1-)

(ஸ்ரீ யதே-ஸ்ரயதே -என்று -அதாவது -ஸ்ரீஞ்-சேவாயாம் -என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -ஸ்ரியதே இதி ஸ்ரீ -என்று
ஸித்தமான கர்மணி வ்யுத் புத்தியையும் கர்த்தரி வ்யுத் புத்தியையும் -சொன்னபடி –

இவ் வ்யுத் த்வயத்துக்கும் அர்த்தம் அருளிச் செய்கிறார் -மூன்று இத்யாதி
அதாவது -இவ் உபய வ்யுத் பத்திக்கும் அர்த்தம் –
ஸ்ரீ யதே என்று எல்லாராலும் சேவிக்கப் படா நின்றாள் என்கையாலே –
சகல சேதனர்க்கும் இவளை பற்றித் தங்கள் உடைய சேஷத்வ ரூப ஸ்வரூப லாபமாய்
ஸ்ரயதே -என்று ஈஸ்வரனை சேவியா நின்றாள்-என்கையாலே இவள் தனக்கும் ஈஸ்வரனைப் பற்றி
தன்னுடைய ஸ்வரூப லாபமாய் இருக்கும் என்கை –
இவள் தனக்கு சேதன விஷயத்தில் சேஷித்வமும் -ஈஸ்வர விஷயத்தில் சேஷத்வமும் என்றும் உண்டாய் இறே இருப்பது –
ஆகையால் இந்த சேவ்யத்வ சேவகத்வங்கள் இரண்டும் இவளுக்கு நித்தியமாய் செல்லா நிற்கும் -என்றதாயிற்று –)

ஸ்ரீயம் தரதீதி ஸ்ரீ தர ( பெரிய பிராட்டியாரை திரு மார்பில் தரிக்கிற படியாலேயே ஸ்ரீ தரன் என்கிற திரு நாமம் ஆயிற்று ) என்ற
யோக வ்யுத்பத்தியாலே எம்பெருமானுக்குத் திரு நாமமாய் இருக்கும்

மற்ற எட்டு வாக்யத்திலும்
ஸ்ரீ ஸப்தம் ஞான துல்யம் தனம் அஸ்தி கிஞ்சித் (ஞானத்துக்கு சமமான -ஞானமாகிய ஸ்ரீ சப்தத்தால் குறிக்கப்படும் செல்வம் )என்றும்
பகவத் பக்திர் ஏவ அத்ர ப்ரபந்நா நாம் மஹா தனம் (ப்ரபன்னர்களுக்கு பகவத் பக்தியே மேலான செல்வம் )என்றும்
சொல்லுகையாலே ஞான பக்திகள் ஆகிற மஹா ஸம்பத்துக்கு வாசகமாய் இருக்கும்

(முதல் மூன்றிலும் ஸ்ரீ சப்தம் இல்லை
இறுதி ஸ்ரீ யை -ஸ்ரீ தராய இரண்டையும் விட்டு
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:இவ்வாறு மூன்றும்
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம-இவ்வாறு இரண்டும் -நாத யமுனா மத்யமே
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:–இவ்வாறு மூன்றும்
தார தம்யம் உண்டே -இதற்கும் ஹேது அருளிச் செய்கிறார் மேல் )

இதில் சில வாக்யங்களில்
ஸ்ரீ ஸப்தம்
ஸ விபக்திக மது பிரத்யய உபேதமாயும் (-நித்ய யோக மதுப்பு -மத் என்ற விகுதி நான்காம் வேற்றுமை யுருபுடன் கூடியதாய் )
சில வாக்கியங்களில்
லுப்த விபக்த மதுப் பிரத்யய உபேதமாயும் (மறைந்த நான்காம் வேற்றுமை மத் விகுதியுடன் )
சில வாக்யங்களில்
மதுப் ப்ரத்யய ரஹிதமாயம்(மத் விகுதி இல்லாமலும் )
இங்கனம் வைரூப்யேண நிர்த் தேசிகைக்கு நிபந்தனம் சிலருடைய ஞான பக்திகள் விசத தமங்களாய்
சிலருடைய ஞான பக்திகள் விசத தரங்களாய்
சிலருடைய ஞான பக்திகள் விசதங்களாய் -இருக்கையாலே –
அது எங்கனே என்னில்

பங்கயத்தாள் திருவடியைப் பற்றின சேனை முதலியாருடையவும்
அவர் அடிக் கண்ணி சூடிய ஆழ்வாருடையவும்
அவர் அடி பணிந்து உய்ந்த உடையவருடையவும்
ஞான பக்திகள் விசத தமங்களாய் இருக்கும்

திருக் குருகூர் நம்பிக்கு அன்பரான நாதமுனிகளுடையவும்
தத் விஷயீகார பாத்ர பூதரான யமுனைத் துறையவருடையவும்
ஞான பக்திகள் விசத தரங்களாய் இருக்கும்

சீல மிகு நாதமுனி சீர் உரைப்போரான உய்யக் கொண்டாருடையவும்
தத் ஸிஷ்யரான மணக்கால் நம்பி யுடையவும்
தத் ப்ரசிஷ்யரான பெரிய நம்பி யுடையவும்
ஞான பக்திகள் விசதங்களாய் இருக்கும்

இவர்களுடைய ஞான பக்திகள் ஏக ரூபமாய் இராதே இங்கனம் தர தம பாவேந இருக்கைக்கு ஹேது ஏது என்னில்
சேனை முதலியார் யுடையவும்
ஆழ்வார் யுடையவும்
ஞான பக்திகள் தாம் பிரபத்தி மார்க்கத்தை விஷ்வக் சேன ஸம்ஹிதையிலே பரக்க தர்சிப்பிக்கைக்கும் (காட்டி அருளுவதற்கு )
பிரபத்தவ்யனான எம்பெருமான் (போற்றப்படும் பகவான் )படிகளை உள்ளபடி அனைவருக்கும் அறிவிக்கைக்கும்

(ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே)

(யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

நம்முடைய தடைகளைப் போக்கிகொடுக்கும் விஷ்வக்சேனரை வணங்குகிறேன்)

(வ்ருஷமாஸி விசாகாயாம் அவதீர்ணம் குணோஜ் வலம் |
ஸுந்தரார்ய குரோசிஷ்யம் சடகோப குரும்பஜே 

கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தினுள்ள திருக்குருகூரில் ‘காரி’ என்பவருக்குத் திருக்குமாரராய் “ஸேனை முதலியார்” எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாய் அவதரித்த சடகோபனை உபாசி க்கிறேன்.  )

அப்படியே
ப்ரியேண ஸேனாபதி நா நிவேதிதம் தத் அநுஜம் ஆனந்த உதார வீக்ஷணை
(தேவரீர் அமுத செய்த சேஷத்தைப் புஜிப்பவரும் –
தேவரீரால் அவரிடம் வைக்கப்பட்ட உபய விபூதி நிர்வாகத்தை யுடையவரும் –
தேவரீருக்கு மிகவும் பிரியரான ஸேனாபதி ஆழ்வானாலே எந்தக் காரியம் யாதொருபடி சொல்லப் படுகிறதோ-
அந்தக் காரியத்தை அப்படியே பூர்ண கடாக்ஷத்தாலே அனுமதி பண்ணுமவரான தேவரீரை ) என்று
மதியுடையார் சொல்லலாம் படி அவன் அடியாகப் பிறந்தவையான திருவாய் மொழி முகத்தாலே

(அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம் ததேக உபாயம் யாஞ்சா
த்வமேவ உபாய பூதா மே பவ இதி பிரார்த்தனா மதி சரணாகதி –)

(த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||-ஶ்லோகம் 42 –

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு
ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத்
தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.)

தந்தனன் தன தாள் நிழலே என்றும்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
பிரபத்தி மார்க்கத்தைப் பல படியாலும் தம்முடைய யுக்தி அனுஷ்டானங்களாலே ஸ்பஷ்டம் ஆக்குகைக்கும் (சொல் மற்றும் செயல்களினால் தெளிவாக்கும் )

உயர்வற உயர் நலம் யுடையவன்
மயர்வற மதி நலம் அருளினான்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவா -என்றும்
பிரபத் தவ்யனுடைய படிகளைப் பத்தும் பத்தாக (முழுவதுமாக ) பற்றி இருக்கைக்கும்

உம்முயிர் வீடுடையான்
யானே நீ என்னுடைமையும் நீயே
தொண்டர் தொண்டர் தொண்டன் -என்றும்
பிரபத்தாவின் (அடைபவன் -பற்றுமவனுடைய )படிகளை பல வகையாக ப்ரதர்ஸிப்பிக்கைக்கும்

பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்துக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழி
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் என்றும்

(பேர் அமர் காதல் – பின் நின்ற காதல் -கழிய மிக்க காதல் 5-3 தொடங்கி மூன்றிலும் )
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -என்றும்
பிராட்டிமார் பேச்சாலும்
தம் பேச்சாலும்
தம்முடைய ஆற்றாமையை அறிவிக்கைக்கும் உறுப்பாய் இருக்கையாலே விசத தமங்களாய் இருக்கும் –

உடையவருடைய ஞான பக்திகளும்
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா (பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாய் ஸ்ரீ யபதியான மேலான
பர ப்ரஹ்மத்தின் இடத்தில் எனக்கு பக்தி ரூபமான ஞானம் உண்டாகட்டும் )என்று தாமும்

(அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா-(ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்)(சேமூஷீ பக்தி ரூபா-பக்தி ரூபா பன்ன ஞானம் )

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத (பற்றியவரை நழுவவிடாத வனான எம்பெருமானது பொன்னான –
மிகவும் விரும்பாத தக்க இணைத் தாமரை அடிகளில் எப்போதும்(அரங்கம் என்னில் மயலே பெருகும் ராமானுஜன் )
மையல் கொண்டுள்ள எம் இராமானுசன் )என்று ஆழ்வானும் அருளிச் செய்யலாம் இருந்தவையாய்
கத்ய த்ரய ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே ஸரணாகதி ஸாஸ்த்ரம் பக்தி ஸாஸ்த்ரங்களை -அடைவே வெளியிடுகைக்கும்

அவ் வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே (அப்போது மலரும் ஞானம் )-என்கிறபடி
தம்முடைய தாதாத்மிக பிரதிபையாலே (வேதங்களை பிரமாணமாக ஓவ்வாத பாஹ்யர்களையும் அவற்றைப் பிரமாணமாக ஒத்துக் கொண்டு
தவறான பொருள்களைச் சொல்லும் குத்ருஷ்டிகளையும் அவ்வப்போது பிராமண பூர்வகமான யுக்திகளைக் கொண்டு நிரசனம் பண்ணுகை )
பிரதிவாதி வாரண ப்ரகட ஆ டோப விபாட நத்துக்கும் (பாஹ்ய குத்ருஷ்டிகளான யானைகளை நாசம் செய்கைக்கும் )

நாறு நறும் பொழில் திருமால் இருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் என்று நாச்சியார் மநோ ரதித்த படி
பரம ஸ்வாமியான அழகருக்கு அமுது செய்யப் பண்ணி அருளுகைக்கும்

துருஷ்கன் படை வீட்டில் சென்று அவன் மாளிகையில் இருக்கிற ராமப் பிரியரை -செல்லப் பிள்ளையை –
வருக வருக வருக இங்கே வாமந நம்பி வருக இங்கே
கரிய குழல் செவ்வாய் முகத்து என் காகுத்த நம்பி வருக இங்கே -இத்யாதியாலே
தாமே எழுந்து அருளி அழைக்க அவர் தம் அருகே ஓடியோடி விரைந்தோடி வந்ததால்
என் செல்வப் பிள்ளாய் வாராய் -என்று அவருக்குத் திரு நாமம் சாற்றி (சம்பத் குமாரர் )
தம் திரு மார்பில் அணைத்துக் கொள்ளுகைக்கும்

புழுவன்-கிருமி கண்டன் – பட்ட விருத்தாந்தத்தை திருக் கல்யாணி கரைக் கரையிலே தம் ஸந்நிதியிலே வந்து
மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான் விண்ணப்பம் செய்யக் கேட்டுப் பெரிய ப்ரீதியோடே
செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான பெரிய பெருமாளை மங்களா ஸாஸனம் பண்ணுவதாக
கோயிலுக்கு எழுந்து அருளும் போது தாம் ஓர் ஐம்பத்து இருவரை செயல் நன்றாகத் திருத்தி
தத் (செல்லப் பிள்ளை )விஷயத்திலே பரிவராய் இருக்கும் படி நியமிக்கைக்கும்

கரை கட்டாக் காவேரி போலே கரை புரண்டு ஆஸ்ரயித்த (700 யதிகள் -12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சிஷ்யர் சமூகம் )
அளவன்றிக்கே இருக்கைக்கும் உடலாய் இருக்கையாலே விசத தமங்களாய் இருக்கும்

ஸ்ரீ மன் நாத முனிகளுடையவும் ஆளவந்தாருடையவும்
ஞான பக்திகள் இங்கனம் விஸ்ருங்கலமாய் கரை புரண்டு இராமே
அரையாறு பட்டு தாம் தாம் ஆஸ்ரயித்த அளவிலே தானே அடங்கி ஓன்று இரண்டு பிரபந்தங்களையே இட்டு அருளுகைக்கு
உடலாய் இருக்கையாலே விசத தரங்களாய் இருக்கும்

(குளம்பு நீர் குருவி மட்டுமே குடிக்கப் போதும் –
வீராணம் ஏரி நிறைந்தால் மதகுகள் மூலம் உலகெல்லாம் உஜ்ஜீவிக்குமே –
ஸ்ரீ நாதமுனிகள் தாமே அருளிச் செய்தார் அன்றோ)

உய்யக் கொண்டாருடையவும் -மணக்கால் நம்பியுடையவும் -பெரிய நம்பியுடையவும்
ஞான பக்திகள் கீழ்ச் சொன்னபடி இராதே சினை யாறு பட்டு பரிமிதங்களாய் இருக்கையாலே
விச தங்களாய் இருக்கும்

(பெருக் காறு -விசத தமம்-கரை கட்டா காவேரி
அரை யாறு –விசத தரம்-கரைக்குள்ளே அடங்கி இருக்கும் ஆறு
சினை யாறு -கர்ப்பம் போல் உள்ளேயே இருக்கும் -விச தமமாய் இருக்கும்)

இப்படி பதின்மூன்று வாக்யங்களிலும்
முந்தின வாக்யங்கள் மூன்றும் வேதமாகிய ஸாஸ்த்ர ருசி பரி க்ருஹீதங்களாய் இருக்கும்
மற்றைய வாக்யங்கள் பத்தும் ஆச்சார்ய ருசி பரி க்ருஹீதங்களாய் இருக்கும்

அபவ்ருஷேயமாயும் பவ்ருஷேய மாயும் இருக்கிற ரஹஸ்ய த்ரயத்துக்கும் (திரு மந்த்ரம் வேதம் போலே அபவ்ருஷேய மாயும்
சரம ஸ்லோகம் பவ்ருஷேய மாயும் )இருந்தாலும் ஏக அவயவித்வம் -(ஒரே உறுப்பாய் இருத்தல் )-சொன்னவோ பாதி
இப்படி அபவ்ருஷேய மாயும் பவ்ருஷேய மாயும் இருந்துள்ள இப் பதின் மூன்று வாக்யத்துக்கும் ஏக அவயவித்வம் சொல்லத் தட்டில்லை –

அப்படியே நமோ ருஷிப்யா (ரிஷிகளுக்கு வணக்கம் ) என்றால் போலே
நமஸ் ஸப்தம் முன்னாக இவ் வாக்ய த்ரயத்தையும் நிர்த்தேசியாதே
அஸ்மத் ஸப்தம் முன்னாக நிர்த்தேசித்தது
(நிகில சகல சொல்லாமல் )அகில புவன ஜென்ம -என்ற இடத்தில் போலே
மங்கள யுக்தமான அகார உபக்ரமத்வ ஸித்த்யர்த்தமாக

அப்படியே முந்தின வாக்யத்தை அகார உபக்ரமத்வ ஸித்த்யர்த்தமாக அஸ்மத் ஸப்தத்தை முன்னிட்டு நிர்த்தேசித்தவோ பாதி
மற்றை இரண்டு வாக்யங்களையும் அஸ்மத் ஸப்தத்தை தானே  முன்னிட்டு நிர்த்தேசித்ததும்
ஸந்நோ மித்ரஸ் ஸம் வருண
ஸந்நோ பவத்வ அர்யமா
ஸந்நோ இந்த்ர பிரஹஸ்பதி (தைத்ரியம் )என்னுமா போலே
(ஆதித்ய மண்டல மத்ய வர்தியான பகவான் நமக்கு நன்மைகளை செய்பவன் ஆக வேண்டும் )

த்ரயோதச வாக்யாத்மகமான இக் குரு பரம்பரா ரூப மாலா மந்த்ரம் தான்
ஸ்ரீ ஸஹஸ்ர நாம மாலா மந்த்ரம் போலே அநேக நமஸ் ஸப்த சரீரகமாய்
த்வார சேஷிகளுக்கும்
பிரதான சேஷிகளுக்கும்
ப்ரதிபாதகமாய்

பிரதம மத்ய சரம அவதி ஸ்வரூபமான
பர்வத த்ரய பிரகாசகமாய்

(பகவத்-பிரதம பர்வம்
பாகவத -மத்ய பர்வம்
ஆச்சார்யர் -சரம பர்வம் )

உபதேஷ்டா -உபதேஸம் -உபதேஸ்யர் ரூப – (ஆச்சார்யன் -உபதேசம்- உபதேசிக்கப்படும் பொருள் )மூன்று வர்க்கத்துக்கும்
ஸாம் ப்ரதாயிக ஸாத் குண்ய யோக்யதைகளுக்கும் ஸம் பாதகமுமாய் (தகுதியைப் பெற்றுவிப்பதாய் )

(சம்ப்ரதாயம் -பிராசாங்கர்ம் காயகா ப்ரதாயா -முதலில் சொல்லப்பட்ட உபதேசம்
சமீசீனம் -யதார்த்த ஞான விஸிஷ்ட -முன்னோர் மொழிந்த முறைப்படி உண்மையை
நன்கு உணர்ந்து நம்பிக்கையும் உபதேசித்து அனுஷ்டானம் பண்ணும் படி)

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -96-
இந்த இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —சூரணை -97-)

வக்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்கையாலே
த்வயத்தோபாதி ஸதா அநு ஸந்தேயமுமாய்
தன்னை முன்னிட்டு அநு சந்திப்பாரை
நாவ காரியம் சொல் இல்லாதவர் -என்று
மயர்வற மதிநலம் அருளப் பெற்றார் கொண்டாடும்படி பண்ணக் கடவதாய்

(இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -274-)

அஸ்மத்-என்று அகாரம் ஆதியாக உபக்ராந்தமாய்
அப்படியே
அகார
ஸ்ரீ மத்
ஸப்தங்களை பல இடங்களிலும் இடையிலே யுடைத்தாய்
ஸ்ரீ தராய நம என்று
மாங்களிகமான நமஸ் ஸப்தத்தோடே நிகமிக்கப் பட்டதாய் இருக்கையாலே
கார்த்ஸ்ந்யேந (முழுமையாகவே )மங்களாத் மகமாய் இருக்கும் –

ஸ்ரீ வாக்ய குரு பரம்பரா வியாக்யானம் ஸம் பூர்ணம்

————–

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருச்ச புதமுச்சதே எதிராஜோ ஜகத் குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கதாயி’

இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி.

இப்படி மங்கள கரமாக அமைந்துள்ள குரு பரம்பரை
எம்பெருமானாரை நடு நாயக ரத்னமாக யுடைத்தகாய
ஸ்ரீ ரெங்கநாதன் தானே உகந்து தனக்கு ஆச்சார்யனாய் வரித்து
தனியன் அருளிச் செய்து போற்றிய ஸ்ரீ வர வர முனியை
ஸ்ரீ மணவாள மா முனிகளை சரம ஆச்சார்யனாக யுடைத்தாய்
ஒரு அழகான ஹாரமாக அமைகிறது

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி–எதிராஜ சப்ததி-

(பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்)

ஞான பக்தி செல்வம் விசத தமமாகவே யதீந்த்ரர் யதீந்த்ர பிரவணருக்கும் இருந்தமை ப்ரத்யக்ஷம்
ஸ்ரீ ரெங்கநாதன் தனியன் அருளி சேஷ பர்யங்கமும் நித்ய ஆஸனமாக அளித்து அருளி
ஈடு பெருக்கராகி
மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே
ஆச்சார்யர் தீர்த்த திவசத்தையும் சிஷ்யன் நடத்தக் கடவன் என்பதை இன்றும் ஸ்ரீ ரெங்கநாதன் அனுஷ்டித்துக் காட்டி அருளுகிறான்
ராமானுஜ -சரம சதுர அஷரியின் பெருமையை வெளியிட்டு அருளி தந் நிஷ்டராய் அனுஷ்ட்டித்து இருந்ததாலேயே
ஸ்ரீ மதே வர முநயே நம -என்று நித்ய அனுசந்தானம் பண்ணி
நம் ஸ்வரூபத்தை நிறம் பெறச் செய்கிறோம்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

One Response to “ஸ்ரீ வாக்ய குரு பரம்பரை -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் —”

  1. Thirumalai Ramanuja dasan Says:

    மிகவும் உபயோககரமாய் இருக்கிறது. ஜீயருடைய வாக்கியகுருபரம்பரை வியாக்யானம் முழுவதும் இதில் உள்ளதா என்று தெரிவிக்கப் பிரார்த்திக்கிறேன்.
    தொடரட்டும் தொண்டு. அதோடு வெளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமியின வாக்கிய குருபரம்பரை காலக்ஷேப ஆடியோ பைல் அடியேனிடம் 1, 2, 3 பி என்று மூன்று உள்ளது. 3ஏ இல்லை. தங்களிடம் இருந்தால் கொடுத்து உதவ கேட்டுக்கொள்கிறேன்.
    Ramaanuja dasan (vsthirumalai@yahoo.com)

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading