***– ஔபாதிக பந்துக்களான களத்ர புத்திராதிகளால் ஒருபயனுமில்லை. அவர்கள் ஆபத்துக்கு உதவார்கள்.
கிருபாதிகபந்துவான ஸர்வேச்வானே ஆபத்பந்து. அவனையேபற்றி யுஜ்ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார்.
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-
கொண்ட பெண்டிர்–கொள்ளப்பட்ட பெண்டிர் என்றபடி. உயர்ந்தவுறவாகக் கொள்ளப்பட்ட மனைவி (அல்லது) பொருள் முதலிய உபாதிகளாலே பரிக்ரஹிக்கப்பட்ட மனைவி (அல்லது) ஆசார்யனும் பரதேவதையும் செல்வமும் மற்றுமெல்லாம் இவளேயாகக் கொள்ளப்பட்ட மனைவி–என்று பலவகையாகப் பொருள் கூறுவர்,
கொண்ட என்பதைப் பெண்டிர்க்கு மாத்திரம் பிசேஷணமாகக் கொள்ளுகை அமையும்.
பந்துக்களாகத் தான் கொண்டிருக்கும் (நினைத்திருக்கும்) மனைவிமுதலான என்றபடி,
உற்றார், சுற்றத்தவர் என்ற வகுப்பு விபாகம்–ஸம்பந்திகளாக ஆக்கிக் கொள்ளப்படுகிறவர்களையும் தாயாதிகளையும் பற்ற ஜன்மஸித்தமான வுறவுடையார் தாயாதிகள் வந்தேறியான வுறவுடையார் ஸம்பந்திகள் என்று வாசிகாண்க.
பிறரும் என்றதனால் நண்பர்கள் அடியார்கள் முதலானுரைக் கொள்வது.
ஆக இவர்களெல்லாரும் கையிலே காசுகண்ட போது அதற்காக அன்பு காட்டுகின்றவர்களேயன்றி நிருபாதிகமாக ப்ரீதிவைப் பல்களல்லார்.
“கண்டதோடுபட்டதல்லால்” என்றதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர்;
கையில் காசுகண்டபோது என்பது ஒன்று; நேரில் கண்டபோது என்பது மற்றொன்று,
ப்ரத்யஷத்திற்போலவே பரோக்ஷத்திலும் அன்பு காட்டுவாரல்லர் என்றபடி,
ஆகவே ஔபாதிகபந்துக்களான இவர்களை யெல்லாம் விட்டொழிந்து நிருபாதிக பந்துவான ஸர்வேஸ்வரனையே சேஷியாகக் கொண்டு உஜ்ஜீவிக்கப்பார்ப்பதே உற்றதென்கிறார் பின்னடிகளில்,
ஸர்வேஸ்வரனே நிருபாதிக பந்து என்பதற்கு நிரூபமாக ஓர் இதிஹாஸமரூளிச் செய்கிறார் மூன்றாமடியில்,
மஹாப்ரளயகாலத்தில் உலகங்களையெல்லாம் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்தருளி நோக்கிகானுக நூற்கொள்கை .
ஒருவருடைய அபேக்ஷையினாலல்லாமல் நானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக ரக்ஷித்தருளுகையாலே அவனே நிருபாதிகபந்துவாவன்;
அப்படிப்பட்டவனுக்கு நம்மதாயிருப்பதொன்று கொடுக்க வேண்டுவதில்லை;
‘அவனுக்கு அடியோம்’ என்று சொல்லிக் கொண்டு உஜ்ஜீவிக்குமத்தனை யென்றாராயிற்று.
—————
***– ஆபாஸபந்துக்கள் உபகாரம் செய்வாரைப்போலேயிருந்து தங்களுக்கு வேண்டிய ப்ரயோஜனங்களைத் தலைக்கட்டிக் கொள்வர்கள்;
அவர்கள் நம்பத்தகுந்தவர்கவல்லர்; நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை யுண்டாக்கி
ஆபத்ஸகனாரும் ஸர்வேச்வரனைப் பற்றுமதே ப்ரயோ ஜனமென்கிறது இப்பாட்டு.
துணையும் சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-9-1-2-
சுற்றத்தவர் பிறரும் துணையுஞ்சார்வுமாகுவார் போலிருந்து அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்–
துணையாவதென்று சார்வாவதென்? என்னில்; ஸுகதுக்கங்களை ஸமமாகக் கொள்ளுகை ஆப்தலக்ஷணமாகையாலே அப்படி ஸுகதுக்கங்களை ஒக்கவநுபகிக்கை துணையாகுகை, வேறு போக்கடியில்லாத நிலைமையில் தாங்களே புலாகை–சார்வாகுகை இங்ஙனே துணையுஞ்சகாவுமாகக் கூடிய சுற்றத்தவர் உண்மையில் ஒருவர் கூட இல்லை;
அப்படியிருப்பதாக அபிநயிப்பார்களேயுள்ளார்களென்பது “ஆகுவார் போல்” என்பதனால் அறிவிக்கப்படுகிறது.
உண்மையில் துணையுஞ்சார்மாவான் எம்பெருமானொருவனேயென்பது குறிப்பு.
துணையுஞ் சார்வுமாக மாட்டாதவர்கள் அணுகாமல் கடக்க நிற்கலாமே; அப்படி நிற்காமல் ‘இவர்கள் ரக்ஷகர்கள்’ என்று பிரமிக்கும்படி நெருங்கி வர்த்திப்பர்கள்;
அப்படி வர்த்திப்பதற்குப் பயனயாதெனில்; அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்–அணையவந்தவென்றது அணைந்து வந்தவென்றபடி,
கைக்கு எட்டும்படியான ஸம்பத்து உண்டாகில், பசையற ரத்தத்தைக் கவர்ந்து குடிக்கும் அட்டைகள் போலே கவர்ந்து கொள்வர்களத்தனே, இதனால், ஆபாஸபந்துக்களின் நட்பு–நம்மிடத்திலுள்ளவற்றை எதேனு மொருவழியாலே கொள்ளை கொள்வதற்காகவேயன்றி மற்றொன்றுக்கு மன்ன என்றதாயிற்று.
ஆகவே, அவிச்வனதீயர்களான இவர்களை விட்டு விச்வஸநீயர்களில் தலைவனான எம்பெருமானையே துணையாகக் கொள்ளவடுக்குமென்கிறார் பின்னடிகளில்.
ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானம் செய்யப்பெற்ற பின்பும் மனத்தெளியாமல் வாலியின் பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும் துந்துபியின் உடலெலும்பை ஒருயோஜனை தூரம் துக்கியெறிந்ததையுங் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவை வெல்வது கூடுமோ? என்று சொல்ல,
அது கேட்ட லக்ஷமணன் உனக்கு நம்பிக்கையில்லையாயின் இப்போது என்ன செய்யவேண்டுவது? என்ன ஸுக்ரீவன், ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புப்போலத் தோன்றிலும் வாலியின் வல்லமையை நினைக்கும் போது சங்கையுண்டாகின்றது; ஏழு மராமங்களைத் துளைத்து இந்த துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடைதூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்புதலுண்டாகுமாறு என்று சொல்ல;
ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாகுநாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக் குவியலைத் தனது காற் கட்டைவிரலினால் இரேசாய்த் தூக்கிப் பந்துயோஜனை துரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட சுக்ரீவன் முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கி யெறிந்தான்; இப்போது உலர்ந்து போன விதனைத் துக்கியெறிதல் ஒரு சிறப்பன்று என்று கூற,
பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அம்பறாத் தூணியையடைந்ததென்பது, கணையொன்றாலே யேழ்மரமுமெய்த வரலாறு,
‘நம்மை ரஷிப்பனோ மாட்டானோ’ என்று அடியாருக்குச் சங்கைபிறந்தால், அந்த சங்கையைப் போக்கி அரியன செய்தும் அடியாரைக் காத்தருள்பவன் என்ற மஹாகுணம் இந்தச் சரிதையினால் விளங்கும்.
இப்படி அரியன செய்து நம்பிக்கையையுண்டாக்கி அடியாரைக் காத்தருளவல்ல பெருமாள் நிற்க, இவனையே துணையாகவும் சார்வாகவும் பற்ற வேண்டியிருக்க அணையவந்தவாக்சமுண்டேல் அட்டைகள்போல் சுவைக்கின்ற பொய்யுறவினரைப் பற்றி அணையவந்தாக்சமுண்டேல் அட்டைகள் போல் சுவைக்கின்ற பொய்யுறவினரைப் பற்றி யொழிவதே! என்ற நிர்வதேம் வெளிப்படுமாறு அருளிச் செய்தாராயிற்று.
எம்பெருமானுடைய மஹத்தான இளநார்யத்தையும், கைம்மாறு கருதாது அருளபுரியந் தன்மையையுங் கணிசித்து எங்கார் முகிலை என்றார்.
‘புணையென்று’ என்றதனால் “என் காரியம் உனக்கே கடமை” என்று ஒரு வாய்ச் சொல் சொன்ன மாத்திரத்தில் உஜ்ஜீவிக்க பிராப்தமாகும் என்பது தொனிக்கும்
மனமொழி மெய்களாகிற முக்கரணங்களில் மொழியாகிற ஒருகரணமே அமையுமென்றதாயிற்று
—————
***– ஸம்ஸாரிகள் ஸ்வப்ரயோஜனமே கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில்,
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-9-1-3-
“பைத்திரக்காரனைச் சுற்றிப் பத்துப்பேர்; பணக்காரனைச் சுற்றிப் பதினாயிரம்பேர்” என்றொரு பழமொழியண்டே ஒருவன் கையில் பொருளுள்ளதாகத் தெரியவர்தான் அதைப் பறிக்கனென்பு வந்து சேர்வாருவர்;
வரும்போதே போற்றி பல்லாண்டு ஜீதம் தெனன்று கண்ணப் பணிமொழிகளைக் கூறி அபரிமிதமான ஆதாரவை அபிநயிப்பர்கள்;
உனக்கு இன்னமும் கிழிச்சிரை பெருகவேணுமப்பா என்பார்கள்; தக்களுக்கொரு ப்ரயேதத்தில் கருத்தில்லை போலவும், அவனுக்கு மேன் மேலும் ஸம்ருத்திகள் பெருகுவதே தங்களுக்குப் பரமானந்தம்போலவும் காட்டிப்போல பேசுவர்கள்;
அவனும் இவற்றைக் கேட்டு மயக்கி “இப்படி நம்முடைய ஸம்ருத்தயே தனக்கு பிரயோஜனமா ருப்பானொருவ அண்டாவதே” என்று மனம் பொங்கிக்கு வர நோக்குவன்; ‘நம் வலையில் அசப்பட்டுவிட்டானிலன்’ என்று நிச்சயித்து அன்று முதலாகவே பொருளைப் பறிக்கத் தொடங்குவர்கள்.
“ஜீவாத்மஹஸோ நம்ரா க்ருஹீத்வா கிம் கநிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: ” உன்றான் ஒரு மஉறகனி ஏற்றச்சாலும் துர்ஜநமும் ஒரே வகுப்பாம்.
——————
***– சிலரை ஆபத்துக்கு உதவுமவர்களாகக் கொண்டு நெடுநாள் ஆராவதித்தால் அவர்கள் அவ்வாராதனைகளை யெல்லாம் பெற்றிருந்து ஆபத்துவந்தவாறே எண்ணற்று உபேக்ஷிப்பர்கள். அப்படியன்றிக்கே நிர்ஹேதுகமாகவந்து அவதரித்து ஆபத்ஸகனுனவனே ஆச்ரயிக்கத் தக்கவனென்கிறுரிப்பாட்டில்.
அரணம் ஆவர் அற்ற காலைக்கு
என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்
இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-
பதவுரை
| அற்ற காலைக்கு அரணம் ஆவயர் என்று என்று | கைம்முதலற்ற காலத்திற்குப் புலாகங்சுடடுமென்று பலகாலும் சிந்தித்து |
| அமைக்கப்பட்டார் | வசப்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள் |
| இரணம் கொண்ட தெப்பம் ஆவர் | கடனை இலுத்துக் கொண்டவர்கள் போல் தக்கராயொழிவர்கள் |
| இன்றி இட்டாலும் | பச்சை யிடாவிட்டாலும் |
| அஃதே | அவர்களின் உதயாமை உன்னதே |
| வருணித்து எண்ணே | (இப்படி) இன்றி கெட்டவர்களைப் பற்றிச் சொல்லி என்ன பயன்? |
| வடமதுரை பிறந்தவன் | வடமதுரையிலே வந்து பிறந்த எண்ணபிராணுடைய |
| வண் புகழே | சீனம்முதலிய குணங்களையே |
| சரண் என்று | தஞ்சமென்று கொண்டு |
| உய்யப் போகில் அல்லால் | உஜ்ஜீவித்துப் போமதொழிய |
| சதிர் இல்லை | வேறு சதிர்பாடு இல்லை |
அற்றகாலைக்கு அரணமாவர் என்றென்று அமைக்கப்பட்டார் ‘அற்றகாலைக்கு’ என்றது கைம்முதலற்ற காலத்திற்கு என்றபடி.
இப்போது நாம் செல்வம் மிக்கவர்களாக இருந்தாலும் வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பதில்லையாதலால் ஒருகால் நமக்கு வறுமை நேருமாயின் அப்போது உதவுவர்கள் என்றெண்ணிச் சிலரிடத்தே பொருளைச் சேமிக்க இட்டு வைப்பாருண்டே; அது சொல்லுகிறது இங்கு.
தைத்திரீயஸ்ஹிதையில் முதற் காண்டம் ஐந்தாவது ப்ரசகத்தின் தொடக்கத்தில், தேவாஜீராஜ் ஜம்யத்தா ஆஜந் தே தேவா விஜய முபயந்த; அக்நௌ வாமம் வஸீ ஸம்ந்யததத இதமுநோ பவிஷ்யதி யதி நோ ஜேஷ்யந்தீதி என்ற ஒர் உபாக்கியான மேதப்பட்டுள்ளது;
தேவர்களும் அசுரர்களும் போர்புரிந்து கொண்டிருந்த காலத்துத் தேவர்களுக்கு வெற்றியுண்டாயிற்றாம். அப்போது அத்தேவர்கள் மெற்றொருகால் நமக்குத் தோல்வியுண்டானால் அப்போது உபஜீவிக்க இருக்கட்டும் என்று நினைத்துத் தங்களுடைய சிறந்த செல்வத்தை அக்நிதேவதையிடத்து இட்டுவைத்தார்கள் அந்த தேவதை அதனைக் கொள்ளைகொண்டு அகன்றதாம். அக்கதையை இங்கு நினைப்பது.
இப்படி, அற்றகாலைக்கு அரணமாவரென்று கருதி ஆராதிக்கப் பெற்றவர்கள் அக்கருத்தின்படி ஆபத்துக்கு உதவுகிறார்களோ வென்னில்; இரணங்கொண்ட தெட்புராவர் தங்களுக்கு எதோ கடன் செலுத்த வேண்டியிருந்து அதனைச் செலுத்தினதாக நினைத்துக் கிடப்பர்களே யல்லது சிறிதளவும் உதவிபுரியார்கள்.
சக்தியற்ற காளிலுங்கூட இவன் நம்மை இப்போது ஆராதிக்கவில்லையே என்று வெறுத்துமிருப்பர்கள்.
இரணம்–’ருணம்’ என்னும் வட சொல்லின் விகாரம். தெப்பர்–தப்ரர் என்பது வடசொல் ; புல்வியர் என்றபடி.
இன்றியிட்டாலும் அஃதே=ஏற்கெனவே பச்சையிட்டு அராதியாமற் போனாலும் ஆபத்து வந்தால் கைவிடுவார்தாம் உளர் என்றபடி.
இங்கே ஈடு:– “அன்றிக்கே, இப்படியே இப் பச்சையிட்டவன் நமக்கு ரக்ஷகனென்று ஆராதியா நிற்கச் செய்தே நடுவே இவன முடிவது, அப்போதும் கீழச்சொன்னதுனே பலிதமா மித்தனை.”
வருணித்து எண்ணே ! நன்றிகெட்டார்களான உலத்தாரின்படியை வருணிப்பதற்கோ நாம் வாய் படைத்தது ! என்று அதைவிட்டு ஸர்வாக்ஷகன்படியைப் பேசவொருப்படுகிறார்.
இவ்விடத்தில் ந தேம்பா மத்யமா தாந! கர்ஹிதவ்யா கதஞ்சா தாமேவ இசஷ்வாரு நாதஸ்ய பாநஸ்ய கதாம் குரு என்று இளைய பெருமாளை நோக்கிப் பெருமானருச்செய்த ச்லோகம் ஊட்டில் இன்சுவை மிக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது ஸேவிக்கத் தக்கது
[வடமதுரைப் பிறந்தவன் இத்யாதி] கிர்ஹேதுகமாக உபகாரம் செய்தருள் பவனுடைய ஸெளசீல்யம் முதலிய கல்யாண குணங்களே நமக்கு ரக்ஷகமென்று எண்ணி உஜ்ஜீவித்துப் போமதொழிய வேறொன்றும் நமக்குத் தஞ்சமன்று என்றாராயிற்று
“இல்லை கண்டீர் கதிரே” என்றவிடத்து;ஈட்டில் – “நெற்றி பெருந்துப் பலமொன்றுமிற்றிக்கேயிருக்கமென்னுமது இளிம்பிநே; நெற்றி அல்பமாய் பலம் கணக்கப்பெறுமதிதே கதிராவது நமவென்னவிநே நெற்றி; சமன்கொள்வீறேபலம்” என்கிற ஸ்ரீஸூக்திகளுள்ளன.
இங்கு நெற்றியாவது ப்ரயாஸம். நேர்த்தி என்கிற சொல்லே பூருவர்களால் எழுதப்பட்டிருந்ததென்றும், பின்புள்ளவர்களால் அச்சொல் நெற்றியென்று திரித்து எழுதப்பட்டதென்றும் சிலர் சொல்லுவர்;
நெற்றி, நேர்த்தி, நேர்ச்சி என்று மூவகைச் சொற்களும் ப்ரயாஸமென்னும் பொருளில் வருவன வென்பர் பலர்.
——————
***– மாதர்களால் படும் அவமானங்களை யெடுத்துரைத்து எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே உய்வு என்கிறாரிப்பாட்டில்.
சதிரமென்று தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-
பதவுரை
| சதிரம் என்று |
– |
சதிரையுடையோ மென்று |
| நம்மை நாமே சம்மதித்து |
– |
தம்மைத் தாங்களே பஹீமானித்துக் கொண்டு |
| இன்மொழியார் |
– |
வெறும் பேச்சினிமையையுடையரான மாதர்களினுடைய |
| மதுரபோகம் |
– |
இனிய போகங்களை |
| அற்றவரே |
– |
அனுபவித்தவர்களே |
| லைகி |
– |
மற்றொரு காலத்திலே |
| மற்று ஒன்று உறுவர் |
– |
வாய்கொண்டு சொல்ல வொண்ணாத அவமானங்களை அடைவர்கள் |
|
(ஆனபின்பு) |
||
| அதில் கொள் செய்கை அசுரர் மங்க |
– |
அஞ்சவேண்டுஞ் செய்கைகளையுடைய அசுரர்கள் தொலையும்படி |
| வடமதுரை பிறந்தாற்கு |
– |
வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரானுக்கு |
| எதிர்கொள் ஆள் ஆய் |
– |
ஆபிமுக்யம் பண்ணுமடியவர்களாகி |
| உய்ரல் அல்லால் |
– |
உஜ்ஜீவித்துப் போமதொழிய |
| இன்பம் இல்லை |
– |
(வேறு வழியில்) சுகமில்லை. |
(தம்மைத் தாமே சதிமென்று சம்மதித்து) “சம்மதித்து” என்கிற வினையெச்சம் ‘மதுரபோகம் துற்றவரே’ என்றதில் அக்வயிப்பதாதலால், தம்மைத்தாமே சதிசமென்று சம்மதிப்பர் ஆண்களேயாவர்கள்;
“சம்மதித்தின் மொழியார்” என்றவிடத்துத் தொகுத்தலாகக்கொண்டு ‘சம்மதித்த இன்மொழியார்’ என்று பிரித்து, சம்மதித்தவென்று பெயரெச்சமாக்கி இன்மொழியார்க்கு அடைமொழியாக அங்வயித்து, தம்மைத்தாமே சதிமென்று சம்மதிப்பவர் இன்மொழியாராவ பெண்கள் என்று சிலர் கூறுவர். அதிர்சுவையொன்று மறிகின்றிலோம்.
ஆடவர் வாழ்ந்தகாலத்தில் சதிர் கேடாக வாழ்ந்தாலும் கூட ‘சாம் சதிராக வாழாநின்றோம்’ என்று தங்கள் வாழ்ச்சியாத் தாங்களே உகந்துகொண்டிருந்து பெண்களோடே போகங்களை அனுபவித்துக் கொண்டிருத்தவர்கள் தாமே, வைகி மற்றொன்று உறுவர்–வயலும் தொலைந்து பொருளும் தொலைந்தவாறே வாய்கொண்டு சொல்லவொண்ணாத அவமானம்களையுடையவர்கள் என்றபடி
(இன்மொழியார்) மது திஷ்டதி வாசி போஷிநாம் ஹருதி ஹலாலமேவகேவலம் என்றான் ஒரு மஹாகவி இங்கு நம்பிள்ளையீடு– “அகலாய் மயிர்க்கத்தியாயிருக்கச் செய்தேயும் பிரணய ஸரஸமான சேச்சாலே வசீகரிக்கவல்லவர்கள்” என்று.
வைகி மற்றொன்று உறவர் என்றயிடத்து சம்பிள்ளை ஈட்டின் கனவ வாசாமகோசரம் ஈ ஸ்த்ரார்த்தங்களை மாததீம் அற்புதமாக அருளிச் செய்யவல்லர் லௌகிக விஷயங்களையும் அப்படியே திடீர். அந்த ஸ்ரீ ஸீர்திகளைக் காண்மின்,–”[வைகி மற்றொன்றுவர்]” போகத்துக்குப் பாங்கான வௌன அதுக்குக் கைம்முதலான த்ரவ்யமும் போமே; பிள்ளையும் ஆசை மாறாதே; வருவார்க்கு விரோதியாய் அவ்வொவிடங்களிலே போயிருக்கும் முற்பட மனித்திலே நாளிரண்டு பண்ணை ‘போகலாதாதோ’ என்பர்களே; போகிறோம் போகிறோமென்றிருக்குமே போகாதே; பின்னை வெள்ளாட்டியையிட்டுப் பரிபவிப்பர்கள்; அதுகரும போகாமே; பின்னை ஆணையிட்டெழுப்பிப் பார்ப்பர்கள்; அதுக்கு மெழுந்திரான் பின்னே காலைப்பற்றியிருப்பர்கள்; இவன் தூணைச் சுட்டிக் கொள்ளும்; இப்படியால் அவர்களாலே பரிபூதாரளர்கள், விபாகத்தில் பிறக்கும் பரிபல்த்தை யநுஸந்தித்து அது தம் வாயாலருளிச் செய்யமாட்டார்களே மற்றொன்று என்கிறார்” என்று.
வெறும் சாஸ்த்ரார்தர்களோகா யிருந்தால் காலசேஷபபரர்கள். தூங்கி விழுவர்களென்று ஆசார்யர்கள் இப்படிப்பட்ட களோச்சதிகளையும் இட்டு வைக்கிறார்கள். இவ்வளவு ரஸோக்திகளுக்கும் மூலம் இடம் வந்திருக்கு பழகு காண்மின்.
“ப்ராக்ருதர்கள் நமக்கு எம்பெருமானொருவனே ரக்ஷகன்” என்னுமடத்தையருளிச் செய்துவரும் இப்பதிக்கத்தில் இப்பாசுரத்திற்கு என்ன ப்ரஸக்தியென்று சங்கிப்பர் சிலர்
ஆசார்ய உறருதயத்தில் ப்ரசுரணத்தில் ஒன்பதாம்பத்தின் தாத்பார்ய ஸாரத்தைச் சுருக்கியருளிச் செய்கிற சூர்ணையிலே இம்மடவுலகர் கண்டதோடுபட்ட அபாந்தவ அரக்ஷக அபோக்ய அஸுக அநுபாய ப்ரதிஸம்பந்தியைக் காட்டி என்றருளிச் செய்திருப்பது கண்டு தெளினெணும் பிறர் ரக்ஷகரல்லர், நம்பெருமானே ரக்ஷகன் என்கிற விஷயம் மாத்திரமன்று இப்பதிக்கத்திற் சொல்லப்படுவது; கேண்மின்;
கண்ணெதிரே நேசிப்பதொழிய, காணுதபோது நேசமொன்று மின்றிக் கேயிருக்கிற களத்ர புத்ராதிகள் பந்துக்களன்று; ப்ரளயாபஸ்களுனவனே பரமபந்து என்பதை முதற்பாட்டில் நிரூபித்தார்; ஸம்ஸாரிகள் தாங்கள் உபகாரகரைப் போலே ப்ரயோஜனமுள்ளபோது பந்துக்களாய்க் கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர்களாகையாலே அவர்கள் ரக்ஷகரல்லர்
தன்னுடைய ரக்ஷணத்தாலே அதிசங்கை பண்ணினுரையும் விச்வ விப்பித்து ரக்ஷிக்குமவனாய் அவதாக முகத்தாலே ஸுலபனாய் ரக்ஷணத்திற்கேற்ற குணங்களையுமுடையவனான எம்பெருமானே ரக்ஷகளென்பதை இரண்டு மூன்று நான்காம் பாட்டுக்களிலே நிரூபித்தார்
தங்களுக்கு போக்கையகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள் பிராயம் கழிந்தவாறே உபேக்ஷிப்பர்கள்; எப்போதும் ஒரு படிப்பட ஸ்நேஹித்திருப்பான் எம்பெருமானொருவனே; ஆகவே அவர்கள் போக்யால்லர்; இவனே பரமபோக்யன் என்னுமிடம் இப்பாட்டில் நிரூபிக்கப் படுமதாகையாலே, எடுத்துக்காட்டின என்கைக்கு இடமில்லையென்க.
எம்பெருமானைப்பற்றுவதே ஸகீருப்மென்பதும், இதுவே உபாயமென்பதும் மேற்பாட்டுக்களில் நிரூபிக்கப்படும்.
இனி, பின்னடிகளால் எம்பெருமானைப் பற்றுவதே பரமபோக்யமென்கிறது, அதிர் கொள்செய்கையசுரர்–பிராணிகளின் செஞ்சுகள் அதிரும்படியான செய்கைகளையுடைய அசுரவர்க்கம்; அது முடியும்படியாக வடமதுரையிலே வந்து திருவவதரித்தவனுக்கு. எதிர் கொளாளாய்–அவன்தானே மேல்விழுந்துவாராநின்றால் வைமூக்க்யம் பண்ணியொழியாமே வருகவருகவென்று சொல்லி ஆபிமுக்க்யம் காட்டுவதே எதிர்கொளளாதல்.
இங்கே நம் பிள்ளையீடு; “அவனுக்கு நாம் செய்யவேண்டுவது இது : அவன்தானே மேல்விழாநின்றால் விமுகராகா தொழியுமத்தனையே வேண்டுவது” என்று
த்ரூதராஷ்ட்ரன் ஸஞ்ஜயனோடு சொன்னாளும் ” பாண்டவபக்ஷபாதியான க்ருஷ்ணன் வருகிறான், அவனுக்குச் சில பொருகள்களைத் தந்து அவனை நமக்கு வசப்படுத்திக் கொள்ளுவோம்” என்று. இதைக் கேட்ட ஸஞ்ஜயன் அப்பா! வருகிறவனை அப்படிப்பட்டவனாகவா நினைத்துவிட்டாய்? அவனுக்கு வேண்டுவது இன்ன தென்று அறியாயோ
[அந்யத் பூர்ணுத் அபாம் கும்பாத் அந்யந் பாதாவநேஸநாத், அந்யத் குசலஸம்ப்ரக்நாத் ந சேச்சதி ஜநார்தநஃ] அவரவர்கள் தாம் குடிக்குத் தண்ணீரைக் குளிவவைப்பதுண்டே ; அது தன்னை அவன் அவரவர்கள் தாம் குடிக்குந் தண்ணீரைக் குளிரவைப்பதுண்டே ; அது தன்னை அவன் வருகிறவழியிலே வைப்பது, அதிதிகள் வந்து புகுந்தால் கால் கழுவுவதாக ஸாமாந்யசாஸ்த்ரம் விதித்தவளவு அவன் விஷயத்தில் செய்வது; அதாவது குடத்தில் நீரையிட்டு அவன் திருவடிகளை விளக்குவது; பல்லாண்டு பாடுவது ஆக இதற்கு மேற்பட அவன் திறத்துச் செய்யலாவதில்லை;
அவனும் இவ்வளவுக்கு மேற்பட வேறொன்றும் விரும்புவானல்லன்– என்றான். இவைசெய்து தலைக்கட்வேணுமென்பதுமில்லை ; செய்யவேணுமென்று நெஞ்சினால் கோலினாலும் போதும். “ஆபிமுக்க்யஸீசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும்” என்பது ஸ்ரீவசநபூஷணம். அப்படிப்பட்ட அதிகாரிகளை நோக்கியே இங்கு எதிர்கொளாளாய் என்றது.
இல்லைகண்டீரின்பமே=இங்கே ஈடு; “துக்கங்களிலே சிலவற்றே ஸுகமென்று ப்ரமிக்கிறவித்தனை போக்கி இதொழிய ஸுகரூபமாயிருப்பதொன்றில்லை. உயிர்க்கழுவிலே யிருக்கிறவனுக்கு பிபாஸையும் வர்த்தித்து தண்ணீருங்குடித்து தாஹமும் சமித்தால் பிறக்கும் ஸுகம் போலெயிருப்பதோன்றிறே ஸம்ஸாரிகளுக்கு போகத்தால் பிறக்கும் ஸுகமாகிறது. ஆடுகிற பாம்பின் நிழலிலேயொதுங்கி, அது அள்ளிக் கொள்ளுமென்றறியாதே வெய்யிலைத் தப்பப் பெற்றோமென்று ஹருஷ்டராயிருப்பாரைப் போலேயிறே விஷயாநுபவத்தாலே களித்திருக்கிறவிருப்பு இவனுக்கு,”
—————–
***– எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில்.
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ
உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர்
தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால்
மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-
பதவுரை
| இன்பம் இல்லை! கண்டீர் |
– |
(இவ்வுலகில்) சுகமே யிருப்ப தொன்று இல்லைகிடீர் |
| அந்தோ |
– |
ஐயோ! இதை நாமெடுத்துச் சொல்ல வேணுமோ ? |
| உள்ளது நினையாதே |
– |
சாச்வதமான புருஷார்த்தத்தை நினையாதே |
| தொல்லையார்கள் |
– |
பழைய காலத்திலிருந்தவர்கள் |
| எத்தனைவர் |
– |
எத்தனை பேர் |
| தோன்றிகழிந்து ஒழிந்தார் |
– |
ஜன்மமரணங்களே யாத்திரையாய்ப் போனார்கள் (அன்னவர்கள் கணக்கற்றவர்கள்) |
|
(ஆன பின்பு) |
||
| மல்லை மூதூர் வடமதுரை |
– |
செல்வம் மிகுந்த புராதனமான வடமதுரையிலே |
| பிறந்தவன் |
– |
வந்து பிறந்து கண்ணபிரானுடைய |
| வண் புகழே சொல்லி |
– |
உதாரமான திருக்குணங்களையே கீர்த்தனம் பண்ணி |
| உய்ய போகில் அல்லால் |
– |
உஜ்ஜீவித்துப் போமதொழிய |
| சுருக்கு |
– |
சுருங்கச் சொல்லும் வழி |
| மற்று ஒன்று இல்லை |
– |
வேறொன்றுமில்லை. |
பாட்டுத் தொடங்கும்போதே இல்லை கண்டீரின்பமந்தோ! என்கிறார். கெடுவிநான் ! துக்கமயமான ஸம்ஸாரநிலத்தில் ஸீநாபாஸமுள்ளதேயல்லது உண்மையான ஸீதம் லவலேசமுமில்லை திடீர் என்கிறார். இதை நீங்கள் அறியாதவர்களல்லீரே; அறிந்தவுங்களுக்கு நான் எடுத்துக்காட்ட வேணுமோ; என்பது அந்தோ வென்பதன் கருத்து
“ப்த்யக்ஷமும் அகிஞ்சித்தரமாயிருக்க உபதேசிக்கிறாரிறே” என்பர் நம்பிள்ளை. இதனால் ஆழ்வாருடைய அருளின் கனம் தெரிவிக்கப்பட்டதாம்.
உள்ளது நினையாதே யென்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; ‘ஸம்ஸாரத்தில் இன்பமில்லை’ என்கிற வுண்மையை நினையாமல் என்பது ஒரு பொருள். ‘ஸுகரூப முமாய் நித்யமுமாயிருப்பது பகவத்விஷயம்’ என்கிறவுண்மையை நினையாமல் என்பது மற்றொரு பொருள்.
தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் = தோன்றினவிடந்தன்னிலே நின்று தீய்ந்துபோம் சிலபூண்டுகளுண்டே; அப்படி உத்பத்தியும் விநாசமுமேயாய்க் கழிந்து போனவர்கள்–உள்ளது நினையாதே தொலைந்து போனவர்கள் எண்ணிக்கையில் அகப்படுவர்களோ? ஸம்ஸாரமோ அநாதி; விவேகமோ துர்லபம்; அவிவேசிகளாயே மாண்டு போனவர்கள் அஸங்க்யேயர் என்க.
‘நாங்கள் அப்படி அவிவேகிகளாய்த் தொலைந்து போககில்லோம்; எங்களுக்கு உய்யும் விரகு சொல்லலாகாதோ?’ என்று சிலர் கேட்க, பின்னடிகளால் ஹிதமூரைக்கிறார்.
மல்லை மூதூர் வடமதுரை= செல்வச்சிறப்புடைனை பற்றி மல்லை யென்கிறது. பகவத் ஸம்பந்தம் அநாதியாயுள்ளது பற்றி மூதூர் என்கிறது. “ஸித்தாச்ரமமாய் ஸ்ரீவாமனனெழுந்தருளியிருந்தும், ஸ்ரீசத்ருக்நாழ்வான் படை வீடுசெய்தும் கிருஷ்ணன் வந்தவதரித்தும் இப்படி பகவத்ஸம்பந்தம் மாறாதே போருகிற தேசமாயிற்று” என்பது ஈடு.
திருப்பாவையில் “மன்னு வடமதுரைமைந்தனை” என்றவிடத்து வியாக்கியானமுங்காண்க. இப்படிப்பட்ட வடமதுரையிலே வந்து அவதரித்தவனுடைய உதாரமான புகழையே வாயாரச் சொல்லி உய்வதன்றி வேறில்லை. சுருக்கே–’கிம்பஹீநா?’ என்னுமாபோலே ……..
————–
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-
பதவுரை
| மற்றொன்று இல்லை |
– |
உபாயாந்தரமில்லை |
| மாநிலத்து, எவ் உயிர்க்கும் |
– |
பரந்த நிலவுலகிலுள்ள யாவர்க்கும் |
| சுருங்க சொன்னோம் |
– |
இது சுருக்கமாகச் சொல்லுகிறோம் |
| சிற்ற வேண்டா |
– |
ஆயாஸகரமான ப்ரவருத்திகளிலேநின்று உழலவேண்டா |
| சிந்திப்பே அமையும் |
– |
மாநஹிகமான அத்யவஸாயமே போதும் |
|
கண்டீர் அந்தோ-; |
||
| கூட மதுரை பிறந்தான் |
– |
வடமதுரையிலே அவதரித்தவனான |
| எங்கள் பெற்றத்து ஆயன் |
– |
எங்கள் கோபாலகிருஷ்ணணுடைய |
| குற்றம் இல்சீர் |
– |
குற்றமற்ற திருக்குணங்களை |
| வைகல் கற்று வாழ்தல் இது |
– |
எப்போதும் கற்று வாழ்தாலகிறவிது |
| குணம் |
– |
குணமாகுமே தவிர |
| குற்றம் அன்று |
– |
குற்றமாகாது. |
***– கீழ்ப்பாட்டில் சுருக்கே யென்றதைச் சுருங்கவருளிச் செய்கிறார். எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கிறன்ர்.
மற்றொன்று இல்லை= இத்தொடொக்க வேறொன்று எண்ணலாவதில்லை; அன்றியே; எத்தனை தடவை சொன்னாலும் இது தவிர வேறொருவார்த்தை சொல்லலாவதில்லை என்னவுமாம்.
சுருங்கச் சொன்னோம்= உங்கள் நெஞ்சில் தேக்கிக் கொள்ள வொண்ணாதபடி காடு பாய்ந்து சொல்லுகை பன்றிக்கே ஸாரஸம்சேஷபமாகச் சொல்லுகிறோமொகை. சொன்னோமென்றது–சொல்லுகிறோமென்றபடி.
மாநிலத்து எவ்வுயிர்க்கும் = கடல் சூழ்ந்த மண்ணுலகிலுள்ளாரெல்லாரும் இது கேட்க அதிகாரிகள். “இவ்வர்த்தத்துக்கு அணியார்” பரமபதத்திலுள்ளாராகிலும் உபதேசத்துக்கதிகாரிகள் ஸம்ஸாரத்திலுள்ளாரென்கை” என்பது ஈடு.
ஸித்தோபாயஸ்வீகாரஞ் சொல்லுகிற இப்பாட்டில் சிற்றவேண்டா என்பதே உயிரானது; கிற்றுதல், சிதறுதலாய், ப்ரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்கை.
இவ்வுபாயத்திவிழியுமவனுக்குப் பரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்னுமிடம் சரமச்லோகஸித்தம். ஸகலப்ரவ்ருத்தியினுடையவும் நிவ்த்தியே இவனுக்கு வேண்டுமென்பது ஸர்வதர்மாந் ப்ரித்யஜ்ய என்பதனால் சொல்லிற்றன்றோ. சிந்திப்பே அமையும் = ரக்ஷித்தருண வேணுமென்று வாயாலே சொல்லி ப்ரார்த்திக்கவும் வேண்டா; அஞ்சவி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸதநி என்கிறபடியே பகவத்ப்ரஸாத ஹேதுபூதமான அஞ்ஜவியைப்ரயோகிப்பதோ. குஹன் காகம் முதலானாரைப்போலே ரக்ஷசுவஸ்து இருந்தவிடத்தே வருவதோ இவையும் செய்யவேண்டா: *ஜ்ஞாநாந் மோக்ஷ:* என்று ஞானத்தாலே மோக்ஷமென்று சொல்லி யிக்கையாலே மாநஸிகமான பற்றுதலே போதும் என்றவாறு, த்ருடாத்யவஸாய ரூபமாயிருப்பதொரு ஜ்ஞாநவிசேஷத்தைத் திருவுள்ளம்பற்றிச் ‘சிந்திப்பேயமையும்’ என்கிறார்.
முமுக்ஷுப்படி த்வயப்ரகரணத்தில் “வாசிகமாகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு அழிவில்லை; ஜ்ஞாநாந் மோக்ஷ மாகையாலே மாநஸமாகக் கடவது” என்றுள்ள சூர்ணிகை இங்சு அநுஸந்தேயம்.
“சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்” என்கிற இவ்வளவையே நோக்கி “மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்” என்றருளிச் செய்தாரென்க.
சிந்திப்பே அமையுமென்றால் இனி வாய்திறந்து ஒன்றும் சொல்லவேண்டாலே: வாயைமூடிக்கொண்டு மௌனியாயிருக்க வேண்டியது தானோ? கீழே வடமதுரைப் பிறந்த வின் வண்புகழே சொல்லியுய்ய என்று வாயாலே சில சொல்லும்படி நியமித்தீரே, அதுவும் இப்போது தள்ளுண்டதோ? என்று சிலர் கேட்க: அவர்கட்குப் பின்னடிகளால் விடையளிக்கிறார்.
வடமதுரைப் பிறந்த எங்கள் கோபாலக்ருஷ்ணனுடைய திருக்குணங்களை வாயாரச் சொன்னால் என்ன குற்றமுண்டாம்? பாய புத்தியினால் செய்ய வேண்டிய தொன்று மில்லை யென்று சொன்னதேயொழிய ஸ்வயம் ப்ரயோஜந புத்த்யா செய்யத்தகாததுண்டோ? அது குற்றமோ? என்கிறார். “குற்றமன்றெங்கள்” என்பதோ பாடம்; “குற்றமென் எங்கள்” என்றும் பாடமுண்டென்பர் சிலர். குற்றம் என்?–என்ன குற்றமுண்டு?
குற்றமில் சீர்கற்றுஹ வைகல்வாழ்தல் குணங்கண்டீர்= அகிலஹேயப்ரத்யநீக கல்யாண குணங்களைக் கற்பது ஒருகால்; அதன் பலனான வாழ்ச்சி நித்யமாயிருக்கும்; இதுவே ப்ராப்தம், இது தவிர்ந்தெல்லாம் அப்ராப்தம்.
—————–
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-
பதவுரை
| வாழ்தல் இது குணம் கண்டீர் |
– |
வாழுகிறவி அவன்றோ எல்லார்க்கும் குணமாவது |
| அந்தோ |
– |
வாழும் வகையறியாதபடி எண் |
| மாயவன் அடி பாவி |
– |
ஸர்வேச்வரனுடைய திருவடிகளை துதித்து (பகவத்குணு நுபவம் பண்ணி) |
| போழ்துபோ |
– |
காலசேஷபம்பண்ண வேறுமென்று |
| உள்ளகிற்கும் |
– |
நினைக்கவல்லவர்களான |
| புன்மை இல்லாவர்கக்கு |
– |
உத்தமாதிகாரிகளுக்கு |
| வாழ்துணை ஆ |
– |
வாழ்ச்சிக்த துணையாவதற்காக |
| வடமதுரை பிறந்தவன் |
– |
வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணனுடைய |
| வண் புகழே |
– |
திக்குணங்களையே |
| வீழ்துணை ஆ போம் இதனில் |
– |
ஆசைப்படுந் துணையாகக் கொண்டு நடப்பதிற்காட்டிலும் |
| மிக்கது யாதும் இல்லை |
– |
மேற்பட்ட வாழ்வு யாதொன்றுமில்லை. |
***– கண்ணபிரான் திருவவதாரம் செய்தது எதற்காக? என்றொரு கேள்வி பிறப்பதுண்டு ; பகவத் கீதையில் சுபரித்ராணுய ஸாதூநாம் விநாசாய சதுஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே என்று அவன்தாநே பணித்திருப்பதைக் கொண்டு அக்கேள்விக்கு விடை கூறுவதுண்டு.
சிஷ்டரக்ஷணமோ துஷ்டசிக்ஷணமோ தர்மஸ்தாபனமோ இலை ஸங்கல்பமாத்ரத்தாலே ஸாத்யமாகாதோ? இவற்றுக்காக நேரில் வந்து பிறக்க வேணுமோவென்று கேட்பதுண்டு; துஷ்ட நிரஸனம் ஒருகால் ஸங்கல்ப ஸாத்யமானாலும் ஸாதுபரித்ராணம் ஸங்கல்பத்தினால் ஸாத்யமாகாதென்றும், நேரே வந்து அவதரித்தே அது செய்யத்தக்கது என்றும் அந்தரதிகாண ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி யருளிச் செய்துள்ளார்.
அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று– அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று. இதில் மூன்றாமடியில் “வடமதுரைப் பிறந்தவன்” என்று ப்ரஸ்தாவிக்கப்படுகிற அவதாரத்திற்கு ப்ரயோஜனம் கூறுவது முற்பகுதி. “மாயவனடிபரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ்துணையா” என்பது அவதாரஹேது சொல்லுகிறபடி.
இவ்வாழ்வார் தாமே பெரிய திருவந்தாதியில் கார்கலந்த மேனியான கைகலந்த வாழியான் பார்கலந்த வல்லயிற்றான் பாம்பணையான் சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையயினாழ் துயரை, என்னினைந்து போக்கு வரிப்போது” என்றார்.
பகவத் குணங்கள் மலிந்திருக்கப்பெற்ற ஸ்ரீராமாயண ஸ்ரீபாகவ தாதிகளைக் கொண்டு போது போக்க முடியுமே தவிர மற்ற எதனாலும் போதுபோக்க முடியாதென்றார் ஆழ்வார் தம்மியல்வுகொண்டு, அவ்விதமாகப் போதுபோக்க விரும்புமலர்களே “பரித்ராணாய ஸாதுநாம்” என்கிற த்லோகத்தில் சொல்லப்பட்ட ஸாதுக்கள்: அவர்களைப் பரித்ராணம் செய்வதென்றால் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதேயாம். எம்பெருமான் திருவலதாரஞ் செய்து தனது திருக்குணங்களைக் காட்டியருளாதொழியில் சீர்கலந்த சொற்கள் தோன்றமாட்டா; அவை தோன்றவில்லையாகில் அவற்றைக் கொண்டே காலசேஷபம் பண்ணவிருக்கும் ஸாதுங்களின் பரித்ராணம் வித்திக்கமாட்டாது. ஆகவே, மாயவனடி பரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ் துணையாவதற்கு வடமதுரைப் பிறந்தானாயிற்று. அப்படிப்பட்டவனுடைய திருக்கல்யாண குணங்களையே விரும்பத்தக்க துணையாகப் பற்றும தொழிய வேறொரு நலமுமில்லை யென்றாராயிற்று.
முதலடியில் “வாழ்நல் கண்டீர் குணமிது” என்றவுடனே அந்தோ! என்றதன் கருத்தை நம்பிள்ளை விவரிக்கிறார் காண்மின்;– “[அந்தோ] கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை யபேக்ஷிக்க வேண்டுவதே யெனக்கு. வாழ்ச்சி உங்கள் தாயிருக்க இரந்து திரிவேன் நானாவதே!”
மாயவனடிபரவிப் போழ்து போகவுள்ளகிற்பாரான ஸ்ரீவைஷ்ணவர்கள் உத்தமாதிகாரிகள்; அவர்களை ‘உத்தமர்கள்’ என்றோ ‘சீரியர்கள்’ என்றோ நிர்தேசிக்க வேண்டியிருக்க ‘புன்மையிலாதவர்க்கு’ என்று நிர்தேசிப்பதேன்? புன்மையை ப்ரஸங்கித்து அஃதில்லாமையைச் சொல்லுவானேன்? என்று சங்கை தோன்றும் ;
அதற்குப் பரிஹாரமாக பட்டர் அருளிச் செய்வராம் – இந்த மாயவனடி பரவுகையை சூதுசதுரங்கம் போலே காலசேணபமாச்ருகிற புன்மையில்லாதவர்கள்–என்று *தெரிந்தெழுதி வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது* என்ற திருமழிசையாழ்வாரைப் போலே உலகில் எல்லாரும் போதுபோக்குவாரல்லலே ;
சூதாட்டியும் சதுரங்கமாடியும் போதைப்போக்குவார் பலருளரே, ஆச்செய்கைகளினால், ஒருவாறு போதுபோகிற தென்னாமளவேயல்லது அவை ஆலாதரூபமாயிருக்க ப்ரஸந்தியல்லையே. பகவத் குணுந பவத்தையும் அங்ஙனே போதுபோவதற்காகவே கொள்ளுமது புன்மையேயாம்;
யந்முஹீர்த்தம் க்ஷணம் வாபி வா*தேவோ ந சிந்த்யதே, ஸா ஹாநிஸ் தந்மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸாச விக்ரியா என்றும்
“ஏகஸ்மிந்நபி அதிக்ராந்தே முஹீர்த்தே த்யாநவர்ஜிதே, தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணும்” என்றுஞ் சொல்லுகிற நிலைமை யுண்டாகி ப்ரஹமாநந்த ரூபமாக குணுநுபவம் நடக்குமதுவே புன்மையிலாமை.
இதைத் தெரிவிக்கைக்காகவே இங்கு ஆழ்வார் “புன்மையிலாதவர்க்கு” என்றருளிச் செய்தாரென்ப.
வாழ்துணையா என்றது–வாழ்ச்சித் துணையாக என்றபடி, வீழ்துணை–ஸ்ப்ருஹணீயமான ஸஹாயம்.
——————-
***– எம்பெருமானைத் தவிர்த்து வெறொன்றை ரக்ஷகமாகப் பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையுங்கெட்டு அனர்த்தப்பட்டுப் போவர்கள்; ஆனபின்பு அவனல்லது புகலில்லை யென்கினறார்.
யாதும் இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-
பதவுரை
|
(பகவத்விஷயம் தவிர வேறொன்றைப் பற்றி நின்று) |
||
| அதனில் மிக்குயாதும் இல்லை என்று என்று அது கருதி |
– |
அதிற்காட்டிலும் மேம்பட்ட தொன்றுமில்லை யென்று பலகாலும் அதையே சிந்தனை செய்யுமளவில் |
| காது செய்வான் கூதைசெய்து |
– |
கனங்குழையிடக் காதுபெருக்கப் புகுந்து பண்டுள்ளதையும் போக்கிக் கூதை செய்யுமா போல |
| கடை முறை வாழ்க்கையும் போம் |
– |
கடைகெட்ட ஸம்ஸார வாழ்க்கைக்கும் ஹானிவந்த தாமித்தனை |
|
(ஆன பின்பு) |
||
| மாதுகிலின் கொடிகாள் மாடம் |
– |
பெரிய த்வஜபடங்களைக் கொண்ட மாடல்களைக் புடைத்தான |
| வட மதுரை பிறந்த |
– |
வடமதுரையிலே வந்தவதரிந்த |
| தாது சேர்தோள் கண்ணன் அல்லால் |
– |
மாலையணிந்த தோள்களையுடைய கண்ணனைத் தவிர்த்து |
| சரண் இல்லை கண்டீர் |
– |
வேறொரு புகலில்லை திடீர் |
“நஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே, ஸமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்” என்றும், ந ஹி பாலநஸாமர்த்த்யம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம் என்று முள்ள ப்ரமாணங்களை யறிந்துவைத்தும் இந்த அத்யவஸாயத்தை எம்பபெருமானளவிற் பண்ணுதே வேறொரு விஷயத்திற்பண்ணி,
(அதாவது) அப்ராப்த விஷய மொன்றைப்பற்றி ‘இதுவே நமக்கு ரக்ஷதம், இதனில் விஞ்சியராக்ஷகமில்லை’ என்கிற அத்யவஸாயத்தை அவ்விஷயத்திலே கொண்டிருக்குமளவில்.
காது செய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கையும்போம் = கனங்குழையிடுவதற்காகக் காதைப்பெருக்கப்புகுந்து பண்டுள்ள யோக்யதையையுங் கெடுத்துக் கூறையாக்கிக் கொள்வாருண்டே; அப்படியாகி, தண்ணிதானமுறைமையாலே வாழக்கடவதான வாழ்வும் தொலைந்து போம்.
“ஸம்ஸாரத்திலே பசலுங்குட்டியுமாய் அனாய்குளாயாய்ப் போருமதுவுங்கூடக் கெடுமித்தனை” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
கடைமுறை வாழ்க்கையாவது இவ்வாழ்வே: இதுவும் கெட்டுப்போமித்தனை உயர்ந்த ஜீவனத்தில் ஆசை கொண்டதற்குப் பயனாக அதமஜீவனமும் அழிந்து போமென்றபடி, “காது செய்வான கூதை செய்து” என்பது உபமானத்தையுட் கொண்ட வாக்யம்.
முன்னடிகட்கு மற்றொரு வகையான நிர்வாஹமுமுண்டு; அதாவது கைகல்ய பரமான நிர்வாஹமுமுண்டு; அதாவது கைவல்ய பரமான நிர்வாஹம்; கைவல்யஸுகத்தை விரும்பி இவ்வாத்மாநுபவ ஸுகத்திற்கு மேற்பட மற்றோரின்பமில்லை என்று துணிந்து அதற்கு க்ருஷி பண்ணுமளவில் முன்புள்ள ஸாம்ஸாரிக ஸுகத்தையுமிழக்குமித்தனை –என்று.
இங்கே ஆறாயிரப்படி யருளிச்செயல் – “எல்லாவற்றிலும் மேற்பட்ட புருஷார்த்தமன்றோ ஸாம்ஸாரிக துக்கநிவ்ருத்திரூப கைவல்யமென்று அத்தைப் புருஷார்த்தமென்று பற்றில், காதுபெருக்க வென்றுபுக்குப் பண்டுள்ளதையுங் கெடுத்துக் கூதையாக்கினாப்போலே பண்டுள்ள ஸாம்ஸாரிக ஸுகத்தையுமிழக்குமித்தனை ஆதலால், ஸ்ரீமதுரையிலே திருவவதாரம் பண்ணுகையாலே புதுக்கணித்த வழகையுடையனான கண்ணனே பரமப்ராப்யனென்கிறார்” என்று.
இப்பொருளில் “அது கருதி” என்றது கைவல்யோபாஸநத்தைப் பண்ணி யென்றபடி. அந்த ஹேயக்ருத்யத்தைத் தம்வாக்காலே சொல்லக் கூசி ‘அது ‘ என்றதாகக் கொள்க.
தோளுந் தோள்மாலையுமான வழகிலே ஈடுபட்டுத் தாதுசேர்தோள் கண்ணன் என்றது.
—————
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-
பதவுரை
| கண்ணன் அல்லால் சரண் இல்லை அது நிற்க |
– |
ஸ்ரீக்ருஷ்ணனல்லது வேறு சரணில்லை யென்னுமர்த்தம் நிலைநிற்கைக்காகவும் |
| மண்ணின்பாரம் நீக்குதற்கு |
– |
பூபாரத்தைப் போக்குகைக்காகவும் |
| வட மதுரை பிறந்தான் |
– |
வட மதுரையில் வந்து அவதரித்தான் |
|
(ஆன பின்பு. ஸம்ஸாயிகளே)! |
||
| அம் உடைமை உண்டேல் |
– |
உங்களதாக நினைத்திருக்கிற பொருளுண்டாகில் (அதை) |
| திண்ணமா அவன் அடி சேர்த்து உய்ம்மின் |
– |
திடமாக அவன் திருவடிகளினே ஸமர்பித்து உஜ்ஜீவியுங்கள் |
| எண்ண வேண்டா |
– |
ஆலோசிக்க வேண்டா |
| நும்மது ஆதும் |
– |
உங்களுடையதான எப்பொருளும் |
| அவன் அன்றி மற்று இல்லை |
– |
அவனதேயன்றி மற்றமடியாயில்லை. |
***– *பரித்ராணுய ஸாதூநாம்* என்கிற கீதாச்லோகத்தை நிற்வஹிக்கும் நம்மாசார்யர்கள் வெவ்வேறு வகையான சாஸ்த்ராத்தங்களை வெளியிட்டருளினார்கள்.
எம்பெருமாளுடைய அவதாரம் ஸாது பரித்ராணத்திற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவும் என்று மூலத்தில் மொழிந்திருந்தாலும் ஸாது பரித்ராணந்தான் முக்கமாக ப்ரயோஜனமென்றும் துஷ்க்ரூத்விநாசஙம் அப்படி முக்ய மன்றென்றும், அது ஸங்கல்பத்தாலும் செய்து முடிக்கத் தக்கதாகையாலே அதற்காக அவதாரம் அபேக்ஷி தமன்றென்றும் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றினர்.
ஸ்ரீவசநபூஷணத்தில் “ஈச்வான் அவதரித்துப்பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயாருளிச்செய்வர்” என்ற சூர்ணையையும் அதன் வியாக்கியானத்தையும் நோக்குமளவில் துஷ்க்ருத் விநாசநத்தை நோக்கியே எம்பெருமானது அவதாரமென்று நஞ்சீயர் திருவுள்ளம் பற்றினதாகப் புலப்படுகின்றது.
இவை பரஸ்பர விருத்தங்களல்ல. இரண்டு படியாகவும் சொல்லலாம் போலேயுள்ளது.
இரண்டும் ஆழ்வார் திருவுள்ளத்திலோடியிருப்பதாக விளங்காநின்றது.
இப்பதிக்கத்திலேயே கீழ் எட்டாம்பாட்டில் ஸாதுபரித்ராணமே வேதாரத்திற்கு ப்ரயோஜனமென்னுந் திருவுள்ளத்தை வெளியிட்டார்.
இப்பாட்டில் “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்” என்பதனால் துஷ்க்ருத்விநாசமே அவதாரப்ரயோஜன மென்கிற திருவுள்ளத்தை வெளியிடுகிறாரயிற்று.
உண்மையில் ; துஷ்க்ருத்விநாசந மென்பீதும் ஸாதுபரித்ராணத்தின் பாகுபாடேயென்பது அண்ணிதி னுணரத்தக்கது.
ரக்ஷிக்கையாவது அநிஷ்டங்களைத் தவிர்க்கவும் இஷ்டங்களைக் கொடுக்கையுமாதலால் துஷ்க்ருத விநாசநம் பண்ணுகவனவில் ஸாதுபரித்ராணம் பூர்ணமாக வித்திக்கமாட்டாதன்றோ.
அன்றியும், ஸாது பரித்ராண துஷ்க்ருத்விநாசகங்களுக்கு மேலே “தர்மஸம்ஸ்தாப கார்த்தாய” என்று மூன்றாவதான வொரு ப்ரயோஜனமும் சொல்லப்பட்டுள்ளது.
தர்மஸ்தா பனத்திற்காக அவதரிக்கிறேனென்ற திருவாக்கினாலேலே “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்றும் மேலே சொல்லியிருக்கையாலே இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் முரண்பாடில்லாமை ஆராயத் தக்கது.
இன்று புதிதாக நாம் ஆராயவேண்டாவே; முமுக்ஷுப்படி சாமச்லோகப்ர கரணத்தில் “தர்மஸம்ஸ்தாபநம் பண்ணப் பிறந்தவன் தானே ஸர்வதர்மங்களையும்விட்டு என்னைப் பற்றென்கையாலே ஸாசஷாத்தர்மம் தானே பென்கிறது” என்றருளிச் செய்தார் பிள்ளையுலகாசிரியர்.
ஆகவே “தர்மஸம்ஸ்தாபநார்த்தாய” என்றவிடத்தில் விவக்ஷிதமான தர்மஸ்தாபனம் ஆபாஸதர்மான ஸாத்ய தர்மங்களின் ஸ்தாபனமன்றிக்கே க்ருஷ்ணம் தர்மம் ஸ்நாதநம் ராமோ விக்ரஹவாந் தர்ம; என்று ஸாசஷாத்தர்மமாகவும் ஸித்ததர்மமாகவும் சொல்லப்பட்ட தன்னையே ஸ்தாபிப்பது என்று தேறிற்று. இவ்விஷயமும் இப்பாட்டில் முதலடியில் தெரிவிக்கப்படுகிறது–”கண்ணனல்லாலில்லைகண்டீர் சரணது நிற்க” என்று
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;–க்ருஷ்ணனையொழிய வேறு சரணமாவாரில்லையென்னு மிவ்வர்த்தம் நிலைநிற்கைக்காக. இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும், அதுக்குறுப்பாக பூபாரத்தைப் போக்குகைக்காகவும் திருவவதாரம் பண்ணினான் என்று.
ஆனபின்பு, நீங்களும் உங்களுடைமையென்று நினைத்திருந்தன வுண்டாகில் அவன் திருவடிகளுக்கே சேஷமாம்படி ஸமர்ப்பித்திடுங்கள் என்கிறார் மூன்றாமடியால்
“நும் முடைமைகளை அவனடி சேர்த்து” என்னாமல் “.நும்முடைமையுண்டேல்” என்கையாலே, நும்முடைமையென்று சொல்லக்கூடிய வஸ்து ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தால் இல்லையென்பது போதரும்.
அவர்களுடைய அங்யாதாஜ்ஞானத் தாலுள்ளதத்தனை. எண்ண வேண்டா = இது தான் அவனதோ நம்மதோ வென்று விசாரிக்கவேண்டா; உங்களோடு உங்களுடைமையோடு வாசியற எல்லாம் அவனுக்கே சேஷப்பட்டதாகையாலே மருளவேண்டா என்றபடி,
அவனன்றியென்றது – அவனுக்கு சேஷபூதமாக வல்லது என்றபடி, ஈற்றடிக்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்;
இனிச் செய்ய வேண்டுவதில் உங்கள் தலையிலே சுமையொன்றும் கிடக்கின்றதன்று: எல்லாம் அவன்பக்கலிலே கிடக்கிறது= என்பதாக மற்றில்லை யென்றவிடத்திற்கு ஈடு:– “பலஸித்திக்கீடான ஸாதனமும் அவனையொழிய இல்லை ; ஸமிதைபாதி ஸாவித்ரி பாதியாக நீங்களும் ஒரு தலை கூட்டுப்பட வேண்டுவதில்லை”
—————–
ஆதும் இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-9-1-11-
பதவுரை
| தாது சேர்தோள் கண்ணனை |
– |
மாலையணிந்த தோள்களையுடைய பெருமானைக் குறித்து |
| அவனில் மற்று ஆதல் என்றதுவே துணிந்து |
– |
அவனையொழிய வேறெதுவு மில்லை யென்னுமத்யவஸாயத்தையே கொண்டு |
| குருகூர் சடகோபன் சொன்ன |
– |
ஆழ்வாரருளிச் செய் |
| ஒனா தமிழ்கள் |
– |
அழகிய தமிழினாலான |
| தீது இல்லாத இவை |
– |
தீதற்ற இவ்வாயிரத்தினுள்ளே ஆயிரத்துள் |
| இப்பத்தும் ஒதவல்ல |
– |
இப்பதிகத்தைக் கற்கவல்ல |
| பிராக்கள் |
– |
உபகாரர்களான் ஸ்வாமிகள் |
| பண்டே நம்மை ஆளுடையார்கள் |
– |
ஏற்கெனவே நம்மை அடிமை கொண்டவராவர் |
***– இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலனுரைக்கும் பாசுதமானவிது விலக்ஷணமாகத் தோன்றியுள்ளது. “இப்பத்து மோதவல்லபிராக்கள் பண்டே நம்மையாளுடையார்கள்” என்கிறார். இப்பதிகத்தை யோதவல்லவர்களுக்கு ஆழ்வார் தாம் அடிமைப்படுவதாக அருளிச்செய்கிறார்.
இது இப்பதிகத்திற்குப் பலன் கூறினவாறாக எங்ஙனே யாருமென்று சங்கிக்க நேரும். “இப்பதிகம் கற்பார் என்போன்றவர்களை ஆட்படுத்திக் கொள்ள பெறுவர்” என்பது பரமதாற்பரியமாகையாலே பாகவதர்களை வசப்படுத்திக் கொள்வதே இப்பதிகம் கற்கைக்குப் பலனாகச் சொல்லிற்றாயிற்றென்று கொள்க.
இப்பதிகத்தை யோதுவ தென்றால் வெறும் சப்தராசிகளைக் கற்கையன்றே; பொருளுணர்ந்து அதுதானும் அனுஷ்டான பர்யந்தமாகுமே; அதுதானே ஆழ்வார்க்கு உகப்பு; ஆழ்வார்க்கு மாத்திரமன்று; ஆழ்வார் போல்லாரெல்லார்க்குமே உகப்பு; ஆகவே இப்பத்து மோதவல்லவர்கள் பாகவதோத்தமர்களை உகப்பிக்க வல்லவரா களென்று பயனுரைத்ததாயிற்று.
ஆழ்வார் இப்பதிகமருளிச் செய்ததற்குக்காரணம் ஒரு துணிவு; அதாவது “ஆதுமில்லை மற்றவனில்” என்ணுந்துணிவு. எம்பெருமானையொழிய வேறு ப்ராப்யப்ராபகங்களில்லையென்கிற அத்யவஸாயமே இப்பதிகமாகப் பரிணமித்த தென்னலாம்.
இரண்டாமடியை நோக்கி நம்பிள்ளையருளிச்செய்து காணீர்– “இவர்க்கு இப்படி இந்த வ்யவஸாயத்தைக் கொடுத்தார். ஆனென்றால், வேறுண்டோ? அவனுடைய தோளும் தோள்மாலையுமன்றோ அவனுடைய ஸெளந்தர்யமாயிற்று இவரையிப்படி துணியப் பண்ணிற்று” என்று.
தீதிலாதவாயிரம் – ஸ்ரீ ராமாயணம் மஹாபாரதம் முதலாவனவை போல பகவத் கதைகளோடு இதர கதைகளையும் சேர்த்துப் பேசுகையாகிற தீதில்லாமை விவக்ஷிதம்.
ஒண்தமிழ்கள் –”உள்ளுண்டான அத்தத்தையடைய வெளியிட்டுக் கொடுக்கவற்றாயிருக்கை” என்பது ஈடு.
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 14, 2022 at 2:57 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply