ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
ஆத்ம பிரபந்தம் அசமாப்யா ஹிதம் ஜனானாம்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் ப்ரசமார்த்த சிந்தாம்
ஆத்ம பிரபந்தம் அசமாப்யா-திருவாய் மொழி முடிக்க வேண்டுமே -ஆயிரம் சங்கல்பம் உண்டே
ஹிதம் ஜனானாம் ஆத்மேஷ்ட்டம் -ஆசைப்பட்டதை
ஹரிநாம் பிராதாம் அஷமயா -செய்யாததால்
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் -ஆழ்வாரது வியஸனம் அவனுக்கும் தீர்க்க முடியாத படி
ப்ரசமார்த்த சிந்தாம் -என் சிந்தித்தாய் -திருத்தாயார் கேட்டவை
வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதான்யம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் இங்கும் ஷீராப்தியிலும் -ஸுவ்ம்யமான திரு உள்ளம்
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் –யதிருச்சா ஸூஹ்ருதம் விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் ஆபி முக்கியம் –
தொடர்ந்து ஆறு படிகள் -இத்தைக் காட்டவே மேலே கீழ் ஆறு படிகள்
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
தீ மான் சடாரி ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்
ஸூசித்வாத் விஸ்வத்வ அநிஷ்ட பாவாத் உரக சயனதயாத்
பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத் ஜலத தனு தயாத்
உபகரியா தத் பராயத்தாத் ஸ்வாமி விகர் மாம் உப சமயதி
தீ மான் சடாரி
1-ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?
2–3–நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்—2/3-அவதாரம் -ஆதி சப்தத்தால்–முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?-என்றும்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-என்றும் –
4–ஸூசித்வாத் –சிஷ்டன் -ஸ்ரீ இஷ்டம் –-சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!–இவள் திறத் தென் சிந்தித்தாயே-
5–விஸ்வத்வ அநிஷ்ட பாவாத்–‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!-அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
6–உரக சயனதயாத்–பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே
7–பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத்–‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! -பற்றிலார் பற்ற நின்றானே!
8–ஜலத தனு தயாத்–‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;–
9–உபகரியா தத் பராயத்தாத்–கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
ஸ்வாமி விகர் மாம் உப சமயதி -பிரிவாற்றாமை தவிர்த்து அருளி –முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்-
———
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
————
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-
————
வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-
———–
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-
———
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-
—————
‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-
———
‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-
———-
கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-
————
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
———
‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-
———
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-
———–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -62-பாசுரம்–
அவதாரிகை –
இதில்-அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க
அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி-மோஹித்து-இவர் கிடக்க-
பார்ஸ்வத்தரான பரிவர்
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை
ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-
திருத்தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————————
கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-
அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க-
தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -ஸ்வீகாரமும் உபாயம் இல்லை
ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஆழ்வாரது அம் சொல்
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே
—————————————————–
வியாக்யானம்–
கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-(ஸூந்தர 30-)-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்யசைவ -(ஸூந்தர -26-)-என்றும்
ராமம் ரக்தாந்தனய நம பஸ்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்-இத்யாதிப்படியே-திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –இப்படி அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-
அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –
ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற
அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –
(ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தின் குணம் )
இங்கு இவள் பால் –
இத் தசையில்-
இவள்-இடையாட்டமாக –
என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் –
ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து-
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ-ஒன்றும் தெரிகிறது இல்லை
எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-(பெரிய திருமொழி -2-7-) -என்கிறபடியே
அத்தலையில் நினைவே இறே உபாயம்
இத்தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –
என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே திருத் தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-
அஞ்சொலுற –
அஞ்சொல் உற-அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –
நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் –
கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக ஓர் ஸ்ரீ அரங்கரைப் பார்த்து-ஒருகிற ஸ்ரீ அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
ஸ்ரீ திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
ஸ்ரீ அரங்கநகர் மேய அப்பனாய்-மந்தி பாய் -இத்யாதிப் படியே பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் – என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
ஆறு அலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-
தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-
அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி –
துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
(இப்பாசுரம்-வேடு பறி உத்சவம் – திருவாலியில் சொல்லி பின்பே வாடினேன் வாடி தொடக்கம் ஆகும் )
ஐக்யமாக அருளிச் செய்தது
சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –
இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply