ஸ்ரீ யாதவாப்யுதயம்–13- சர்க்கம் -ஸ்ரீ ருக்மிணி திருக்கல்யாணம்–ஸ்லோகார்த்தங்கள்–

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

———–

ஸ்வாமி தேசிகன் தனது காவ்யரத்னமான யாதவாப்யுதயத்தில்
ஸ்ரீ க்ருஷ்ண – ஸ்ரீ ருக்மணி கல்யாண வைபவத்தை 109 ஸ்லோகங்களால் கொண்டாடியுள்ளார்.

1. ப்ரஸாதபாஜ: ப்ரதிநிர்கதாம் தாம் ப்ரஸாததோ வாஸவ வல்லபாயா:
ஸமக்ரசக்தி: ஸமயோபயாத ப்ராணேச்வரீம் ப்ராப்தும் இயேஷ சௌரி:

ருக்மிணிப்பிராட்டி இந்த்ராணியின் கோயிலிலிருந்து திரும்புகின்றாள். இந்த்ராணியும் மிகவும் ப்ரஸந்நையானாள்.
குறித்த சமயத்தில் அங்கு நெருங்கி வந்தான் கண்ணன். திறமையுடையவன் தனது ப்ராணனைக் காட்டிலும் சீரியவளும்,
அன்புக்களஞ்சியமோ என நின்ற ருக்மிணியைக் அடைய ஆவலுற்றான்.

2. தாம் அத்புதாநாம் ஸித்திமிவ அத்புதாநாம் (இவாத்புதாநாம்) ஸௌபாக்ய வித்யாமிவ ஸத்குணாநாம்
ஸத்தாம் அநந்யாம் இவ ஸத்குணாநாம் யதாச்ருதம் ப்ரைக்ஷத யாதவேந்த்ர:.

அத்புதமாய் தோன்றுபவள். அத்புதங்களுக்கெலாம் அத்புதமோ அத்தகைய ஸித்தியோ என நிற்பவள்.
ஸௌபாக்ய வித்தையோ எனப்பட்டவள். பிறரை நாடாத குணங்கள் அகலாமல் நிலைத்து நிற்கப் பெற்றவள்.
ருக்மிணியை முன் கேள்வி யுற்றதற்கேற்ப யாதவர்கள் கண்ணன் கண் குளிரக் கண்டான்.

3. அங்கைர் அவஞ்ஜாத கதம்பகோளை: அஸ்பந்தமந்தேந விலோசனேன
லீலோபசாந்த்யா லிகிதேவ ஸாபூத் தாமோதரே த்ருஷ்டிபதம் ப்ரயாதே

கண்ணனைக் கண்டாள் ருக்மிணி. அப்பொழுது உடல் எங்கும் புல்லரித்தது. அசைவின்றி நின்றாள்.
மெல்ல நோக்கினாள். செயலற்றாள். கதம்ப மொட்டென அவள் புல்லரிப்பு இருந்தது.

4. பத்மாகராணாம் பரிஷந்நிவேஷே பர்யாப்தசந்த்ராயுத காந்திஸாரே
அநந்யலப்யாம் லபதே ஸ்ம த்ருப்திம் தஸ்யா முகே த்ருஷ்டிரதீவ சௌரே:

தாமரைக் காட்டின் கூட்டமெனப் பெற்றது கண்ணனுடைய கண்ணும் பதினாயிரம் பூரண சந்திரனின் ஒளி
நிரம்பியதான அவளுடைய முகத்தில் வீழ்ந்து பிறர்க்குப் பெற அரிதான பூரண த்ருப்தியைப் பெற்றது.

5. வாசஸ்பதித்வம் ச வநஸ்பதீநாம் திவ்யேதரேஷாம் ச திவஸ்பதித்வம்
தாதும் க்ஷமாயா தயிதே ததாநீம் ஆஞ்ஜாபகோ நூநம் அபூத் அநங்க:

வனஸ்பதியை (மரத்தை) வாசஸ்பதி யாக்குபவளும் சாதாரண மனிதர்களையும் தேவ பதியாக ஆக்கும்
ஆற்றல் பெற்ற கடாக்ஷ வைபவமுடையவளுமான ருக்மிணியின் கணவனின் விஷயத்தில்,ஆணையிடுபவன் மன்மதன் ஆனான்.

6. தஸ்மிந் த்விதீயாமிவ வைஜயந்தீம் ஸா ச ப்ரியே ஸாசிவிசேஷரம்யாம்
கடாக்ஷமாலாம் நிபபந்த க்ருஷ்ணே காமாதிகே கௌதுகமேதுராக்ஷீ

அத்புதமான வஸ்துவைக் காண ஆவல் கொண்ட கண்களை உடைய அவள் அவனுக்கு மற்றொரு
வைஜயந்தி மாலையோ என்னலாம்படி குறுக்குப் பார்வையால் ஒரு மாலையை காமம் மிகுந்த கண்ணனிடம் கட்டிவிட்டாள்.

7. அலக்ஷ்யபேத த்ரிவிதாம்புஜாபை: ஆலக்ஷ்ய ச்ருங்கார குணாநுபந்தை:
ஸ்வயம்வர ஸ்ரக்பிர் அபாவி தஸ்யா: காலோதிதே கம்ஸரிபௌ கடாக்ஷை:

ஆம்பல், தாமரை,கருநெய்தல் இம்மூமலரும் கலந்து நின்றால் போன்றதும், சிறிதே காணப்படுவதுமான
ச்ருங்கார ரஸத்துக்கேற்ற நிலைகளையுடைய கடாக்ஷங்கள் சமயத்தில் தோன்றிய கண்ணனிடம்
ஸ்வயம்வர மாலைகளாக அமைந்தன.

8. ஸ வைஜயந்த்யாதி விபாவசாலீ நிர்வ்யாஜ நிஷ்பந்ந நிஜாநுபாவ:
ச்ருஙகார வீராத்புதசித்ரிதாத்மா ரம்யஸ்தயா நிர்விவிசே ரஸோந்ய:

வைஜயந்தி முதலான மாலைகளை இயற்கையாகவே தரித்து ஆகர்ஷணாதிகளாலே விபாவம் என்ற நிலையை
அடைந்த அந்த கண்ணன் ச்ருங்காரம் வீரம் அத்புதம் என்ற மூவகையான ரஸம் கலந்து சித்ர ரஸமாகத்
தோற்ற்மளிப்பவனும் மனத்துக்கும் இனியதான அந்த கண்ணனை தனித்ததோர் ரஸமாகக் கண்டு களித்தாள் ருக்மிணி.

9. ஆகேகராணாம் அநகஸ்ததாநீம் ஏகக்ஷணம் லக்ஷ்யம் அபூத் பஹூநாம்
தஸ்யா: ஸ்திராநந்த பரிப்லுதாநாம் அர்த்தஸ்ப்ருசாமர்த்த விலோகிதாநாம்

கண்ணன் ருக்மிணியின் பலவகையான அரை பார்வைகளுக்கு இலக்கானான்.
ஆகேகரங்கள் என்பது பார்வையின் விசேஷத்தைக் குவிந்தும் அலர்ந்தும் மாறி மாறி அசைவுகள் ஏற்பட்டும்
அதிசயத்தைக் கண்ட பொழுது ஆனந்தம் மல்க இமைகள் சலிப்ப அன்பும் ததும்ப அரைக் கண்ணால் பார்ப்பதாம்.
ருக்னிணியின் கடாக்ஷங்களுக்கு கண்ணன் அவ்வாறே பாத்திரமானான்.

10. தஸ்யா ஸ்திராகாங்க்ஷித லாபதந்யை: அபத்ரபாம் அந்தரிதை ரபாங்கை:
பபார பூயோ பஹுமாநபூர்வம் பால்யே த்ருதாம் பர்ஹிகலாபபூஷாம்

வெகு நாட்களாக அவள் காண விரும்பியது கிடைத்ததால் தன்யங்களான வெட்கம் கலந்த அவளது பார்வைகளால்
இளமையில் தான் தரித்த மயில் தோகையை மறுபடியும் பஹுமானத்துடன் தரித்துக் கொண்டான்.

11. ஸந்தாந ஸௌபாக்ய கணேன யூநா ஸிக்தா ஸுதாதார நிபைர் அபாங்கை:
உத்பின்னரோமாஞ்ச ததிர் பபாஸே காந்தப்ரரோஹா களமஸ்தலீவ

ஸந்தாநம் எனும் தேவமரத்தின் ஸௌபாக்யம் என்னலாம்படி அடர்ந்த மேகமான யுவாவினால் அமுத மழை
என்னலான கடைக் கண் பார்வைகளால் நனைந்த ருக்மணி சம்பாப் பயிர் என்னும் மயிர் கூச்சல் உதிக்க விளங்கினாள்.

12. ஸ்வகாந்தி ஸாம்யாதிவ ஜாதஸங்கை: சௌரிஸ்ததா ஸ்வாகத ஸுக்திகர்பை:
ப்ரியாஸகீநாம் அபஜத் ப்ரஹ்ருஷ்டை: உத்வீக்ஷணை: உத்பலபுஷ்ப வ்ருஷ்டிம்

ஒருவருக்கொருவர் நோக்கும் போது க்ருஷ்ணனுடைய ஒளியில் ஆஸக்தி ஏற்பட வரவேற்பென்னலான
ருக்மிணியின் தோழிகளின் மகிழ்ச்சி ததும்பும் நோக்குகளாலே கருநெய்தல் பூ மழை பொழிதல் ஏற்பட்டதுதாமோ!

13. ஸ ருக்மிணி நேத்ரசகோர சந்த்ர: ஸா தத்ப்ரஹர்ஷாம்புஜ பூர்வஸந்த்யா
ததத்புதம் த்வந்த்வம் அவேக்ஷ்ய ஸக்ய: ப்ராபுஸ்துலாம் அப்ஸரஸாம் அநூநாம்

ருக்மிணியின் கண்களாம் சகோரபைக்ஷிகளுக்கு கண்ணன் சந்திரனானான்.
ருக்மிணி மகிழ்ச்சி பெறும் கிழக்கு திக்கின் ஸந்த்யையானாள்.
மிக மிக அழகான அந்த மிதுனத்தைக் கண்டு தோழிகள் அப்ஸரஸுகளுக்கு நிகரானார்கள்.

14. தயைவ தாதாத்ம்யம் இவாகதாநாம் தஸ்யா: ஸகீநாம் ஸமமாவிராஸந்
பரஸ்ய வீக்ஷாம் ப்ரதிஸம்லபந்தோ வல்ரோக்திகர்ப்பா இவ மந்தஹாஸா:

தோழிகளும் ருக்மிணியாகவே ஆகிவிட்ட்னரோ? அவர்களின் மந்த ஹாஸங்கள் ஒரே சமயத்தில் உதித்தன.
கண்ணனின் பார்வைக்கு இவை பதில்களாக அமைந்தனவே.ருக்மிணிக்குத் தானே நீர் கணவனாக வேண்டும் என்றது போலும்!

15. ஸ கௌஸ்துபாப்யர்ண நிவேசயோக்யம் கந்யாத்மகம் காம பயோதிரத்னம்
பரீதமாராத் ப்ரதிஹாரபாலை; பச்யந் க்ஷணம் பாந்த இவாவதஸ்தே

கௌஸ்துப மணியின் அருகில் அமைக்க ஏற்றதும் காவலரால் நாற்புரமும் சூழ்ப்பெற்ற அனுராகக் கடலில் தோன்றிய
கன்னிகை எனும் ரத்தினத்தைக் கண்டு ஒருகணம் வழிப்போக்கன் போல நின்றார்.

16. தம்மால்ய பூஷா பரிகர்மிதாங்கம் தாராதடித்வந்தம் இவாம்புவாஹம்
ஸமீக்ஷ்ய பாலா ததநந்ய த்ருஷ்டி சர்யாம் அவாலம்பத சாதகாநாம்

மாலை, ஆபரணம் அணிந்து அழகு பெற்று தாரையும் மின்னலும் கலந்த மேகம் போன்ற கண்ணனைக் கண்ட
இச் சிறுமி நோக்கியபடியே சாதக பக்ஷியின் நிலையை அடைந்தாள். வைத்த கண்ணை வாங்க வில்லை.

17. தலோதரீம் தாளபல ஸ்தநீம்தாம் தாம்ராதராம் சாரு நவோத்பலாக்ஷீம்
கிம் நாம பாவீதி விபாவயந்தீம் க்ருஷ்ணஸ்ததா கிஞ்சித் இவாஸஸாத

கத்தி போன்ற இடையை உடையவளும் சிவந்த உதடுகளை உடையவளும் தால பழம் (பனம்பழம்) போன்ற திருமுலைத் தடங்களை
உடையவளும் அழகிய புதிய கரு நெய்தல் போன்ற விழிகளை உடையவளும் ஆன ருக்மிணி என்ன நடக்கப்போகிறதோ என்று நினைக்கிறாள்.
அவளை சிறிது நெருங்கினான் கண்ணன்.

18. துர்தர்ச மத்யாம் த்விரதேந்த்ரயாதாம் வ்யூஹக்ரமவ்யக்த விசித்ரகாத்ரீம்
பரைர் அபேத்யாம் ப்ரதிஜக்முஷீம் தாம் காந்தாத்மிகாம் காமசமூம் ஸ மேநே

மிக மெல்லிய இடையை உடையவளும், யானை நடையவளும் படைப்பின் கலையே எனும்படியான அழகு ததும்பும்
உடற் கட்டு உடையவளும் பிறரால் அணுக முடியாததும் ஆன காம சேனையோ என எண்ணினான்.

19. ஸ சந்த்ரிகாம் சந்த்ர இவாபியாத சந்த்ராநநாம் யாதவ வம்சசந்த்ர:
நிர்வேசநீய: ஸ விசேஷமாஸீத் நேதீயஸாம் நேத்ர சகோர ப்ருந்தை:

சந்திரன் சந்த்ரிகையை (ஒளியை) அடைந்தது போல் யாதவ வம்ச சந்திரனான கண்ணன் சந்திரன் போன்ற முகத்தை உடைய
ருக்மிணியை நெருங்கினான். அப்போது அருகில் இருந்தவர்களின் கண்களாம் சகோர பக்ஷிகளுக்கு மிகவும் போக்யமானான்.

20. அஹம் த்வயா தூத முகேந தூராத் ஸாத்வயா ஸமாஹூத இஹோபயாத:
மா தே பயம் பூதிதி மஞ்ஜுபாஷீ தாம க்ரஹீத் அக்ரகரே முகுந்த:

நீ தூதனை அனுப்பினாய். நானோ வெகுதூரத்தில் இருப்பவன். கற்புக்கரசியான நீ அழைத்ததன் பேரில் இங்கு வந்துள்ளேன்.
உனக்கு எத்தகைய பயமும் வேண்டாம் என்று இனிதே கூறுபவனாய் முகுந்தன் அவளது நுனிக்கை விரல்களைப் பற்றினான்.

21. ப்ரியேண ஸா தேந க்ருஹீத ஹஸ்தா தத்வக்த்ர திவ்யாம்புஜ ஷட்பதேந
விலோசநேந வ்யவ்ருணோத் ஸகீப்ய: க்ருதார்த்ததாம் க்ஷீபத் அசோல்பணேந

அவளது முகமெனும் திவ்யமான தாமரை மலரில் மொய்க்கும் வண்டு எனும்படியான பார்வையை உடைய அனபனான
கண்ணனாலே கைப்பற்றப் பட்டதை, தனது கண் பார்வையாலேயே தனது மனோ ரதம் கூடிவிட்டது என்று தோழிகளுக்கு உணர்த்தினாள்.

22. ப்ராசோவதாராந் அதிசய்ய பூம்நா ஸா ருக்மிணீ தேந வ்ருதா சகாசே
தஸ்யைவ ரூபாந்தர தூரவ்ருத்தி: கந்தர்ப ஜந்மானு குணேவ காந்தி:

முந்திய அவதாரங்கள் எல்லாவற்றையும் விட விஞ்சிய வைபவம் உடையவளான அந்த ருக்மிணி அவனால் வரிக்கப் பெற்று
மிகவும் விளங்கினாள். கண்ணனும் பல அவதாரங்களை எடுத்த போதும் அவற்றை விட விஞ்சிய நிலையான
மன்மதனுக்குத் தாயான தேர்ந்த ஒளியை அடைந்துவிட்டாள்.

23. மல்லீவிகாஸ உஜ்வல மந்தஹாசா ரோமோத்கமைர் ஆஹித கோரகஸ்ரீ:
ஸமேயுஷீ ஸந்த த்ருசே ததா ஸா வஸந்த லக்ஷ்மீ: இவ மாதவேந

மல்லிகையின் மலர்ச்சி என்னலான புன்முறுவல், மயில் கூச்செரிதல் மொட்டுக்கள் மாதவனோடு இணைந்த அந்த ருக்மிணி
வஸந்த லக்ஷ்மியாகவே விளங்கினாள். மாதவன் மாதவ மாசமானான். இவள் வஸந்தையானாள்.

24. அகர்ம ஜஸ்வேதகணாவகீர்ணாம் அபீதிஜம் வேபதும் உத்வஹந்தீம்
அநுஷ்ண பாஷ்போதய மந்தராக்ஷீம் விலோக்ய தேவீம் ஹரி: அப்யநந்தத்

வெப்பத்தினால் ஏற்படும் வியர்வை இல்லை. பயத்தினால் ஏற்படும் நடுக்கம் இல்லை. சூட்டினால் ஏற்பட்ட கண்ணீர் வடிப்பில்லை.
இத்தகைய தேவியைக் கண்டு விபுவான கண்ணன் மகிழ்ந்தான்.

25. ஹரிப்ரியாம் அந்யந்ருப த்விசேந்த்ரை: துராஸதாம் அந்யந்ருபத்விவேந்த்ரை:
ஸகீஜந: ப்ரீதமநா நிதத்யௌ யயௌ ச கேதம் நிஜவிப்ரயோகாத்

இவள் ஹரி ப்ரியை. பெண் சிங்கம். மத யானையாம் பிற அரசர்கள் அணுக முடியாதவள். இவளைக் கண்ட தோழிக் கூட்டம்
தகுந்த கணவன் கிடைத்த படியாலே மகிழ்ச்சியடைந்தது. தங்களை விட்டு ருக்மிணி பிரிகிறாளே என்ற வருத்தத்தையும் விட்டு விட்டது.

26. மிதோகுணை ஸ்தந்மிதுநம் நிபத்தம் வியோக வைதேசிக ஸம்ப்ரயோகம்
அஜாயத் அந்யோந்ய நிலீநபாவம் ஸகீத்ருசாம் ஸாதர தர்சநீயம்

தமக்குள் ஒவ்வொருவருடைய குண விசேஷங்களால் ஒன்றி விட்டது. கட்டுப்பட்டு விட்டது.
ஒன்றோடொன்று அகலகில்லாதது. இந்த மிதுனம் தோழிகளின் கண்களுக்கு அழகாக தோன்றியது.

27. ஜகத்த்ரயார்த்தி ப்ரசமாய ஜாதாம் விஹார ஸங்க்ஷோபித வைரிஸிந்து:
தேவேஷு பச்யத்ஸ்விவ பூர்வமேநாம் ஜக்ராஹ தாம் ஜாக்ரதி ராஜலோகே

விளையாட்டாகவே வைரிகளான கடலைக் கலக்கியவன். தேவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க,
அரசர்கள் எல்லாம் விழிப்புடன் இருந்தும், மூன்று உலகங்களிலும் ஆர்த்தியை அகற்ற உண்டானவளான
அவளை க்ரஹித்துக் கொண்டான்.

28. ஸ புஷ்பகம் ராம இவ ப்ரியாம் ஸ்வாம் உத்தாரிதாம் சத்ரு பயாத் உதீர்ணாத்
மநோஜவம் ஸத்ய மநோரதஸ் தாம் ஆரோபயாமாஸ ரதம் ரதாங்கீ

புஷ்பகம் என்ற விமானத்தில் ஸீதையுடன் ராமன் அமர்ந்து செல்வது போல, பயங்கரமான சத்ரு பயத்திலிருந்து
மீட்கப்பட்ட ருக்மிணியை, ஸத்ய மநோரதனான கண்ணன் மனோ வேகத்தில் செல்லும் தேரில் ஏற்றிக் கொண்டான்.

29. ஸா சாமரௌகை: உபசர்யமாணா வாதாவதூதை: இவ காசஜாலை:
ரராஜ நாதேந ரதோதயாத்ரௌ சந்த்ரேண பூர்ணேந சரந்நிசேவ

தாஸிகள் சாமரங்கள் வீசி உபசரிக்க, காற்றில் அசைவு பெறும் நாணல் பூக்கள் போலாக, தேரெனும்
உதயமலையில் பூரண சந்திரனான தனது நாதனோடு சரத்கால இரவு போல விளங்கினாள்.

30. பரஸ்பர ப்ராப்த குணேந பாஸா பர்ஹாவ்ருதம் வ்யோம விபாவயந்தௌ
விரேஜதுஸ்துங்க ரதாச்ரயௌ தௌ வித்யுத் பயோதாவிவ மந்தரஸ்தௌ

ஒருவருக்கொருவர் தமது ஒளியினால் வானத்தை மயில் தோகையினால் மூடப்பட்டதை போலச் செய்தனர்.
சீரிய தேரில் அமர்ந்து செல்லும் அத் தம்பதிகள் மந்தர மலை மீதிருக்கும் மேகமும் மின்னலுமாய் விளங்கினர்.

31. ப்ரபேவ தேவேந தமோபஹேந ப்ரத்யக்திசம் தேந ஸஹ ப்ரயாந்தீ
நித்யாநபாயித்வம் அஜாநதீநாம் ஸத்யாபயாமாஸ நிஜம் ப்ரஜாநாம்

இருளைப் போக்கடிக்கும் தேவனோடு ஒளிபோல் எங்கும் செல்பவளாய், நித்யாநபாயிநி தான் என்பதை
அறியாதவர்களான ப்ரஜைகளுக்கு, தமது பிரிவற்ற தன்மையை தத்துவத்தை விளக்குபவளாக ருக்மிணி விளங்கினாள்.

32. தாம் உத்வஹம்ஸ்தாமரஸாயதாக்ஷோ ரத்நௌக தீப்தேந ரதேந தேவீம்
ஆத்மாநமேவார்யம மண்டலஸ்தம் வித்யாஸகம் வ்யஞ்ஜயதி ஸ்ம வீர:

அவளை அழைத்துக் கொண்டான் கமலக் கண்ணன். மணிக் குவியல்களால் ஒளி பெற்ற தேரில் வித்யையோடு
கூடின தன்னையே ருக்மிணி பதியாயிருந்து சூரிய மண்டலத்தில் உள்ள வித்யாஸகன் எனத் தெளியச் செய்தான்.

33. அதீததர்சாமிவ சந்த்ரலேகாம் சாந்தோபரோதாம் இவ சாரதீம் த்யாம்
அமம்ஸ்த நிர்விக்ந பலாம் இவேச்சாம் சோகத்யஜம் சூர குலேச்வரஸ் தாம்

அமாவாஸ்யை கழிந்தபின் தோன்றும் சந்திரகலை போன்றவளாகவும் மேகங்களின் குமுறல்கள் தீர்ந்த சரத் கால வானம்
போன்றவளாகவும் தடை யேதுமில்லாமல் பயனை அளிக்கின்ற விருப்பம் போன்றவளாகவும் சோகத்திலிருந்து விடுபட்டவளாக
அவள் சூரகுலத் தலைவனான கண்ணனுக்கு காட்சி யளித்தாள்.

34. ஸமேத்ய ஸிம்ஹீமிவ தாம் அநந்யாம் யாநோத்யதம் யாதவ பஞ்சவக்த்ரம்
ஆகுஷ்ய கோமாயுர் இவாமிஷார்த்தீ சைத்ய: க்ருதா தீப்தமுகோந்வதாவத்

பெண் சிங்கமென இருப்பவளும், வேறு எதையும் நாடாதவளுமான அந்த ருக்மிணியை அடைந்து புறப்பட முனைகின்ற
யாதவச் சிங்கமென நின்றவனை மாமிசத்தில் விருப்பு கொண்ட நரியொத்த சிசுபாலன் சினத்துடன் இறைச்சலிட்டு
சீறிய முகத்துடன் பின் தொடர்ந்தோடினான்.

35.ருக்மீ ச தூர்ணம் ப்ரதிபந்ந ரோஷ:புரோபவந் பூமிப்ருதாம் ஸகீநாம்
பராபவஸ்ய ப்ரதிகாரமிச்சந் ஜக்ராஹ பார்ஷ்ணிம் ஜகதேகநேது:

ருக்மீ உடனே சீறியெழுந்தான். தனது நண்பர்களான அரசர்களை முந்திக் கொண்டு தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு
பழி வாங்க எண்ணி உலகத்தை எல்லாம் வழிநடத்திச் செல்லும் ஏக நாயகனான கண்ணனின் சேனையை பின் தொடர்ந்தான்.

36. ஜிகாம்ஸிதே ப்ராதரி ஜாதகேதை: காந்தாபிலாபை: கதகைர் இவாம்ப
மந: ப்ரபேதே ஸஹஜாம் ப்ரஸத்திம் ஸத்வாதிகாம் ஸாத்வத வம்சகோப்து:

தனது உடன் பிறப்பான ருக்மியை கண்ணன் கொல்ல நினைத்தபோது ருக்மிணியின் தழுதழுத்த வார்த்தைகளை கேட்டு
தேத்தான் கொட்டையினால் நீர் தெளிவு பெறுவது போல ஸாத்வத வம்சத்தில் தோன்றியவனுக்கு
ஸத்வம் மேலிட்டு ப்ரஸாதம் மனதில் தோன்றியது.

37. ஸவீக்ஷமாண: ஸவிலாஸ நேத்ரம் வல்குஸ்மிதம் வாமத்ருசோ முகாப்ஜம்
ததுக்திபி: ஸ்வாதுதமாபி: ஆஸீத் ஆப்யாயிதோ நூநம் அநாவிலாபி:

திவ்யமான பார்வையை உடைய ருக்மிணியின் கண்ணோட்டத்தையும் சிறு புன் சிரிப்பினை யுடைய தாமரை மலரன்ன
திருமுக மண்டலத்தையும் கண்டு அவளது இனிய வார்த்தைகளாலும் கலக்கம் அற்ற சொற்களாலும் யுத்தம் செய்யாமல் நின்று விட்டான்.

38. அநுத்ருதாம் வைரிசமூம் ஸ வீரோ பலேந ருத்வா நிஜபாஹுநைவ
விநிர்திசந் மார்கபவாந் விசேஷாந் விச்வாஸயாமாஸ விதர்ப கந்யாம்

பின் தொடர்கின்ற எதிரிகளின் சேனையை தனது புஜ பலம் என்கிற சேனையைக் கொண்டே தடுத்து விட்டு வழியில்
ஆங்காங்கு தென்படுகின்ற வனத்தில் உள்ள விசேஷங்களை எல்லாம் ருக்மிணிக்கு காண்பித்த்வாறே
அவளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உண்டு பண்ணியவாறே கண்ணன் சென்றான்.

39. ப்ரியா ஸஹாய: பதவீம் ச கச்சந் த்ராகீயஸீம் தாருக ஸாரதிஸ்தாம்
உதக்ரவேகாந் உததேர நூபே வீதிந் க்ஷணம் விச்ரமயாம் பபூவ

ருக்மிணியுடன் இருக்கும் கண்ணன் வெகுதூரமான த்வாரகைக்கு செல்லும் மார்க்கத்தில் செல்லனானான்.
தாருகனை சாரதியாகப் பெற்றவனாய் மஹா வேகமுள்ள குதிரைகளை கடலோரத்தில் களைப்பாறச் செய்தான்.

40. பயார்ணவாத் உத்ருதயா ஸ்வயாசௌ (அஸௌ) ச்ரியேவ ஸாக்ஷாத் அநுபூயமாந:
பயோதிரூபாம் பரிகாம் விலங்க்ய த்யுஸம்மிதாம் த்வாரவதீம் அயாஸீத்

பயக்கடலிலிருந்து மீட்கப்பட்டவளும் தம்மவளான ஸாக்ஷாத் லக்ஷ்மியுமான ருக்மிணியுடன் தன் நாட்டிற்கு
அகழியாய் அமைந்த கடலைத் தாண்டி சொர்க்கம் என நின்ற த்வாரகைக்குச் சென்று கொண்டு இருந்தான்.

41. பரிஷ்க்ருதாம் காஞ்சந தோரணைஸ்தாம் வல்குத்வஜாம் வந்தந தாமசித்ராம்
ராமாஸஹாய: ப்ரஸமீக்ஷ்ய ரேமே ரம்ய ப்ரஸூநாஞ்சித ராஜவீதிம்

தங்கத் தோரணங்களாலும் வரவேற்பு வளையங்களாலும் அலங்கரிக்கப் பெற்றதும் அழகிய கொடிகள் கட்டியதும்
மங்களகரமான புஷ்பங்களால் செய்யப்பட்ட தோரணக் கயிறுகளால் விசித்திரமானதும் அழகிய மலர்கள் தூவின
ராஜ வீதிகளை உடையதுமான த்வாரகையைக் கண்டு மகிழ்வெய்தினான்.

42. மஹீயஸாம் மங்கள துந்துபீநாம் நாதைர் அவஜ்ஞாத பயோதிசப்தா
ச்ருதோத்ஸவாநாம் விததே புரீஸா ஸ்வர்கௌகஸாம் ச்ரோத்ரஸுதாம் அபூர்வாம்

மிகப் பெரிய பேரீ வாத்யங்களின் ஒலிகளால் கடலோசையையும் மிஞ்சிய துவாரகை நடைபெற இருக்கும்
திருமணத் தகவலைச் செவியுற்று ஸ்வர்கவாஸிகளுக்கும் அபூர்வமான செவி அமுதத்தைப் பரிமாறியது போலும்.

43. ப்ரத்யேயுஷாம் கம்ஸரிபு: யதூநாம் தேவத்ருமாணாம் இவ ஜங்கமாநாம்
அநர்க்க ரத்நாபரண ப்ரதாநாந் ஆதத்த திவ்யாந் உபதாவிசேஷாந்
நடைபோட்டு வருகின்ற கல்ப வ்ருக்ஷங்களோ என நினைக்கத் தக்க யது வம்சத்தவர்கள் ஆங்காங்கு எதிர் கொண்டழைத்து
விலை மதிக்க இயலாத ரத்தினங்களையும் திரு வாபரணங்களையும் உபஹாரமாக சமர்ப்பிக்க
கம்ஸரிபுவான கண்ணன் அவற்றை ஸ்வீகரித்துக் கொண்டான்.

44. தஸ்மிந் மஹாநீல மணிப்ரகாசே தாம் ருக்மிணீம் ஆஹித ருக்மகாந்திம்
புராங்கநா: ப்ரேக்ஷிதும் ஈஹமாநா:ஸ்வர்காதிகாந் ஆருருஹு: ஸ்வஸௌதாந்

கண்ணன் மணியொளி வண்ணன். அம்மணிக்கு தங்கத்தகடு போல ருக்மிணி. பட்டணத்துப் பெண்கள்
இச் சேர்த்தியைக் காண ஸ்வர்க்கத்தினும் சீரியதான மணி மாடங்களில் ஏறி விட்டனர்.

45. கலக்வணந் நூபுர சாருவாத்யம் கர்ணாவதம்ஸோதித ப்ருங்க கீதம்
கஸ்யாஸ்சித் அந்வாகத நாட்யவேதம் லீலாகதம் லாஸ்யம் அபூத் அபூர்வம்

ஒருத்தி இம் மிதுனத்தை ஸேவிக்க உப்பரிகை ஏறினாள். ஏறும் போது மெல்லிய அடியானது நூபுரங்கள் (சலங்கை) வாயிலாக
வாத்தியம் வாசிக்க காதணியாகிய பூங்கொத்தில் அமர்ந்திருந்த வண்டுகள் காமரம் பாடியது.
அவளுடைய நடை அபூர்வமான விளையாட்டு நடையாக பரதம் ஆடுவது போல அமைந்தது.

46. பரிச்யுதம் கிஞ்சித் இவாந்தரீயங் காசித் ஸமாலம்ப்ய ஸஹைவ காஞ்ச்யா
க்ஷிப்தேவ தீவ்ரேண குதூஹலேந க்ஷணேந வாதாயந மாஸஸாத

சேலை அணிந்து கொண்டிருந்தாள் ஒருத்தி. மாடி ஏறும்போது அச் சேலை சிறிது நெகிழ்ந்தது.
ஒட்டியாணத்துடன் அத்துகிலையும் கைப்பற்றியவாறே உடனே ஜன்னல் அருகில் சென்றுவிட்டாள்.
குதூஹலமாக அம்பு பாய்வது போலன்றோ அவள் சென்றாள்!

47. ஆமுச்ய தாடங்கம் அநங்கசக்ரம் ஸவ்யேதரே ஸத்வரம் ஆவ்ரஜந்தீ
அந்யேந காசித் ப்ருசம் ஆபபாஸே கர்ணேன கைவல்ய விபூஷணேந

மன்மதனின் சக்ராயுதமோ எனும்படியான தோட்டினை வலது காதில் அணிந்துகொண்டு விரைந்து சென்ற ஒருத்தி
மற்றொரு காதில் தோடு அணியாமலே சென்றதை மறந்தாள். தோடு அணியாத காது அணியாமையை
ஆபரணமாகப் பெற்றது போலத் தோன்றியது. அதுவும் அழகாகவே இருந்தது.

48. உதஞ்சிதா பாஹுலதேதரஸ்யா மௌளிஸ்ரஜா ஹஸ்த க்ருஹீதயாஸீத்
ஜகஜ்ஜிகீஷோர் மதநஸ்ய ஜைத்ரீ பதாகயேவாத்புத கேதுயஷ்டி:

மாலையை கையினால் முடியில் சூட்டிக் கொள்ள நினைத்தாள். அது நழுவி கையில் விழுந்தது. அவ்வாறே சென்றாள்.
அவ்வாறு மாலையுடன் தூக்கி நின்ற கை உலகத்தையே வெல்ல நினைக்கும் மன்மதனுடைய வெற்றிக் கொடிக் கம்பமாகவே தோன்றியது.

49. ப்ரகோஷ்டபாஜ: ப்ரியசாரிகாயா:பயஸ்வயம் ஸாதரம் அர்ப்பயந்தீ
கவாக்ஷமாகம்ய கஜேந்த்ரயாதா காசித் விஸஸ்மார க்ருதாவசேஷம்

மற்றொருத்தி தனது கை மணிக்கட்டில் ஒரு பறவையை வைத்துக்கொண்டு அன்புடன் பாலூட்டி வந்தாள்.
இச் செய்தியைக் கேட்டதும் அப்படியே ஜன்னல் அருகில் மதயானையின் நடையில் வந்தாள்.
செய்யவேண்டியதை மறந்து நின்றுவிட்டாள்.

50. ப்ரசார வேகாத் த்ருடிதேந சக்ரே ஹாரேண முக்தாபல வர்ஷிணாந்யா
அதூரதஸ்ஸந் நிஹிதஸ்ய சௌரே: ஆசாரலாஜாஞ்சலி பூர்வரங்கம்

வேகமாக வந்தாள் ஒருத்தி. முத்து மாலைச் சரடு அறுந்து விடவே முத்துக்கள் சிதறி விட்டன.
சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு பொறித் தூவுதலைச் செய்வதற்கு முன்னேற்பாடு
என எண்ணலாம் போலிருந்தது.

51. ஸ்தநாம்சுகம் ஸ்ரஸ்தம் அபுத்யமாநா ஸகீஜநே ஸஸ்மிதம் ஈக்ஷமாணே
பராம்ருசந்தீ விததாந காசித் ப்ரதிக்ரியாம் பாணி நகாம்சுஜாலை:

மார்பில் அணிந்த ஆடை நழுவிவிட்டது. அதை கவனிக்கவில்லை. மற்றைய தோழிகள் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்டு தனது மார்பைத் தடவி பார்க்கிறாள். அப்போது அவள் கை நகவொளியினால் அவள் மார்பகங்களை
பிறர் பார்க்கா வண்ணம் மறைப்பது போலிருந்ததாம்.

52. ஸகீத்ருதை: சாமர தாள வ்ருந்தை: அச்யாநதாம் ப்ராபிதம் அங்கராகம்
விலோகிதே சார்ங்கிணி விஹ்வலாந்யா ச்வாஸாநிலைச்சோஷம் இவாநிநீஷத்

சார்ங்கமென்னும் வில்லாண்டானைக் கண்டாள். மன்மதனால் தாக்கப் பெற்றாள். தளர்ந்தாள்.
தோழிமார்கள் தாபம் தீரப் பூசிய சந்தனப்பூச்சு சாமரங்களாலும், விசிறியாலும் உண்டான காற்றினால் சிறிது உலர்ந்தது.
அது முற்றிலும் உலரத்தானோ பெருமூச்செறிந்தாள்.!

53. ப்ரஸாதயந்தீம் அவதார்ய தாத்ரீம் அங்கைர் அஸம்பாவித பூஷணாந்யா
ஸமீக்ஷ்ய க்ருஷ்ணம் ஸஹஸோபஜாதை:பரிஷ்க்ரியாமாத்ரியதேவ பாவை:

மற்றொருத்தி தனக்கு ஆபரணம் அணிவிக்க விரும்பாதவளாய் விலக்கினாள். கண்ணனைக் கண்டாள்.
அப்போதே அவளது உடம்பு வியர்த்தது. புல்லரித்தது. அதுவே ஆபரணமாயிற்று.
கண்ணனைக் காண இந்த ஆபரணமே போதும்.

54. ப்ருவா ஸ்புரந்த்யா மதநஸ்ய மௌர்வீ ஜ்யாகாதரேகாம் அபிதர்சயந்தீ
அந்யாநுஷக்தேபி ஹரௌ வியாதாம் ப்ராயுங்க்ததூதீம் இவ த்ருஷ்டிமந்யா

புருவங்களை நெறித்தாள் ஒருத்தி. அது மன்மதனின் பாணத்தில் பூட்டிய நாணாயிற்று. நாண் குறித்த தழும்புமாயிற்று.
ருக்மிணியிடம் நாட்டம் கொண்டிருப்பினும் வெட்கமே இல்லாத பார்வையெனும் தூதை கண்ணனுக்கு அனுப்பினாள் போலும்.

55. ஸமேயுஷீம் அப்ரதிமேந யூநா தாம் ருக்மிணீம் ப்ரேக்ஷ்ய விலீநபாவா
பாக்யம் கிமஸ்யா இதி பாவயந்தீ ததாத்மதாம் நூநம் அலிப்ஸதாந்யா

ஈடு இணையில்லாத யுவாவுடன் இணைந்தாள் ருக்மிணீ. இதைக் கண்டாள் ஒருத்தி.
ருக்மிணி என்ன பாக்யம் செய்தாளோ என வியந்தாள். ருக்மிணியாகவே தான் ஏன் ஆகக்கூடாது என எண்ணி
அவளாகவே ஆக நினைத்தாள்.

56. ததீக்ஷணே பர்த்துர் இவ ஸ்மரந்த்யா கந்யாதசாம் காமவசாத் பஜந்த்யா
ஸ்வயம் வரார்ஹே ஸ்வயமேவ தஸ்மிந் கயாசிதாதாயி கடாக்ஷமாலா

கண்ணனைக் கண்ட மற்றொருத்தி அவனையே கணவனாக வரித்து விட்டாள். காமத்துக்கு இலக்கானாள்.
ஸ்வயமாகவே வரித்துவிட்டாள். கடைக் கண் பார்வைகளாகிற ஸ்வயம்வர மாலையை அணிவித்தாள்.

57. கக்ஷ்யாநிபந்தச்யவநே ஸலீலம் ஸ்தநாஹிதஸ்வஸ்திக பாஹுபந்தா
ஜகத்பதௌ பச்யதி ஜாதபீஷா ப்ராயஸ்தத் ஆலிங்கநம் அப்யநைஷீத்

மற்றொருத்தி கண்ணனைக் கண்டதும் தனது ரவிக்கை முடிச்சு அவிழ்தலைக் கண்டாள். அதைக் கண்ணனும் கண்டு விட்டான்.
இரு கைகளாலும் ஸ்தனங்களை மறைத்துக் கொண்டாள். கண்ணன் கண்டதால் பயமடைந்தாள்.
இருந்தாலும் அவனையே அணைப்பது போல் பாவித்தாள்.

58. ரதேந தம் ராஜபதே ப்ரயாந்தம் நிர்வ்யாஜஸங்கேந நிசாமயந்தீ
த்யக்தா நிமேஷைர் அபராந்வகார்ஷீத் சித்ராங்கநாநாம் ஸுரயோஷிதாஞ்ச

ராஜ மார்க்கத்தில் ரதத்தில் வருகின்றான் கண்ணன். அதைப் பார்த்த ஒருத்தி இயற்கையான ஆசை கொண்டாள்.
அவனைக் கண்டாள். வைத்த கண் வாங்காமல் அப்படியே நின்று விட்டாள். கண் இமை கொட்டாதபடியால்
சித்திரத்தில் எழுதின பதுமையோ அல்லது தேவலோக மங்கையோ எனப்பட்டாள்.

59. ஸமீக்ஷிதஸ்யாபி ஸஹத்வஸங்காத் துஷ்ப்ராபலோபாத் அபி தூயமாநா
கலத்பிர் அந்யா வலயப்ரஸூநை: அப்யர்சநாமாத் அநுதேவ சௌரே:

கண்ணனை நன்றே கண்டாள். அவனோடே இணைய நினைத்தாள். அவனை அடைவது எளிதல்லவே? பேராசைதானே இது!
வருந்தினாள். அவள் கைவளைகள் கழன்று விழுந்தன. கண்ணனை மலர்கள் கொண்டு ஆராதித்தால் ஒருவேளை
தன் ஆசை சாத்தியமாகுமோ என்று எண்ணி மலர்களால் அர்ச்சித்தது போல இருந்தது அக்காட்சி.

60. ஸமாநகாந்த்யா ப்ரியயா ஸமேதே த்ருஷ்டே ஜகத்தாதரி ஜாதராகா
ப்ரணாமயோக்யேயம் இதீவ மத்வா ப்ராப்தம் பதம் மேகலயா பரஸ்யா:

ஸமானமான ஒளிபெற்ற ப்ரியையுடன் இணைந்து லோகநாதன வருவதைக் கண்டு அநுராகம் கண்டாள்.
அப்போது அவள் அணிந்திருந்த மேகலை கழன்று வீழ்ந்தது. இவள் வணக்கத்துக்கு உரியவள் என்று எண்ணி
அவள் ஒட்டியாணம் அவள் அடியிணையை (பாதத்தை) அடைந்து விட்டது போலும்.

61. தாஸாம் ததேகோத்ஸுக தர்சநாநாம் ஸமாதிபாஜாம் இவ சேமுஷீணாம்
அலம் ப்ரபுஸ்ஸோபி ந மாதுமாஸீத் அபார ஹர்ஷாத் அநகாம் அவஸ்தாம்

தம்மையே கண்டு களிப்பதில் நாட்டமுடைய அப்பெண்டிரின் தூயதான நிலையை அளப்பதற்கு ஸர்வ சக்தனான
கண்ணனாலும் முடியாது போயிற்று. அவர்களுடைய நிலை ஸமாதி நிலையையே குறிக்கோளாகக் கொண்ட
யோகிகளின் நிலையை ஒத்திருந்தது.

62. அவாருணீ ஸம்பவ ஸௌரபைஸ்தை: அநந்ய ஸாத்யாதர பிம்பராகை:
நிரஞ்சநோபஸ்தித நேத்ரசோபை: ஸ பிப்ரியே பௌரவதூ முகாப்ஜை:

நறுமணம் கமழும் முகங்கள். இயற்கையாகவே கோவைபழம் போன்ற உதடுகள். மையிடாமலேயே ஒளி திகழும் கண்கள்.
இத்தகைய அழகிய முகங்களையுடைய பட்டணத்துப் பெண்களைக் கண்டு களித்தான்.

63. ஸ பௌரகந்யா கரவிப்ரகீர்ணாந் ப்ராய: ப்ரதீச்சந்நுபசாரலாஜாந்
அசீசரத் ஸ்யந்தநம் அப்ஜநேத்ர: ஸவ்யாப ஸவ்யேந கதேந வீதிம்

மரபிற்கிணங்க நகர கன்னிகைகள் கைகளில் பொரிகளை வைத்துக் கொண்டு தூவலாயினர்.
அது மரியாதைக்குச் செய்யும் மங்கல கார்யம். தேரில் இருந்தபடியே தேரை இடமும் வலமுமாக
அவரவர் வாயிற்படிகளில் சென்று அவற்றை ஏற்று மகிழ்விப்பான் போலும்.

64. கல்ஹார பத்மோத்பல காந்திசோரை; கடாக்ஷணை: பௌரவதூஜநாநாம்
முக்தேந்துஹாஸோ முமுதே முகுந்த: பச்யந் ப்ரியாம் ப்ராபித புஷ்பவ்ருஷ்டிம்

நகரப் பெண்மணிகள் தமது பார்வைகளால் ருக்மிணியின் மீது பூமழையே பெய்துவிட்டனர்.
அவர்கள் பார்வை முற்றுமாக அவளிடமே விழுந்தது, செங்கழுநீர் ஆம்பல் தாமரை என்று மூவகை மலர்களின் மழை என்னலாம்.
அதைக் கண்ட முகுந்தன் கம்பீரமான மந்தஹாஸம் செய்து மகிழ்ந்தான்.

65. க்ருஷ்ணஸ்ய தாம் ஸ்கந்தம் உபக்நயந்தீம் ஸுரத்ருமஸ்யேவ ஸுவர்ணவல்லீம்
அவேக்ஷ்ய நூநம் சதுர: புமர்த்தாந் அநந்யலப்யாம் அலபந்த பௌரா:

க்ருஷ்ணனை ஆலிங்கநம் செய்து கொண்டாள். கல்ப வ்ருக்ஷத்தை அடைந்த தங்கக் கொடி போல் விளங்கினாள்.
ருக்மிணி என்ற பெயருக்கு ஏற்ப கனகவல்லியானாள். இவர்களைக் கண்ட பட்டணத்து மக்கள் பிறருக்கு கிடைக்காத
நால்வகையான புருஷார்த்தங்களையும் ஒரே சமயத்தில் பெற்று விட்டனர்.

66. வக்த்ரைஸ் ஸுதாஸோதர காந்திபூரை: கஸ்தூரிகாபங்க கலங்கத்ருச்யை:
அலக்ஷ்ய தேஹா விததுர் ம்ருகாக்ஷ்ய: ப்ரத்யுப்த பூர்ணேந்து சதாந் கவாக்ஷாந்

சந்திரனின் ஒளியை பெற்றவையும் கஸ்தூரியால் தீட்டப்பட்ட கோடுகளே களங்கம் என எண்ணும்படியான
மான் விழியுடைய மங்கைகள் உடல்கள் மட்டும் வெளியில் தெரியாமல் நின்று கொண்டு வெளியில்
தமது முகங்களால் நூற்றுக்கணக்கான சந்திரன்களைப் படைத்து விட்டனர்.

67. சுசிஸ்மிதாஸ்ஸௌத தலாந்தரஸ்தா:பத்மேக்ஷணம் ப்ரேக்ஷ்ய பரிஸ்புரந்த்ய:
சரத் பயோதோதர ஸ்ம்ச்ரிதாநாம் க்ஷணத்யுதீதாம் த்யுதிம் அந்வவிந்தன்

மணி மாடங்களில் இருக்கும் பெண் மணிகள் புன் முறுவல் பூத்தவர்களாய் செந்தாமரைக் கண்ணனைக் கண்டனர்.
திடீரென பளிச்சிட்டவர்களாய் கண ஒளிபெறும் மின்னலின் ஒளியினைப் பெற்றனர்.

68. அபாங்கஜாலை: அஸிதோத்பலாபை:க்ருஷ்ணாத்மகம் பாவம் இவோத்வமந்த்ய:
விதேநிரே ராஜபதே ம்ருகாக்ஷ்ய:ததாத்ருதாம் பர்ஹவிதாநசோபாம்

கடைக்கண் பார்வைகள் கருநெய்தல் பூக்களை ஒத்திருந்தன. அவை வீதியில் பரவின. உள்ளத்திலேயே கற்பனை செய்து
கொண்டு அவர்கள் கண்ணன் விரும்பும் மயில் தோகை யெனும் மேற்பரப்பை வீதியில் விரித்தனரோ என்னும்படி இருந்தது.

69. ஹரேர் அபிக்யாம் அநுபாதி ரம்யாம் விலோசனைர் வீதநிமேஷ விக்நை:
ஆஸ்வாதயந்த்யஸ் ஸுத்ருசஸ்ததாநீம் அயத்ந நிஷ்பீத ஸுதா இவாஸந்

திருவாபரணம் ஏதும் அணியாமலும் இருந்தும் கூட கண்ணன் அழகு. அத்தகைய கண்ணனின் அழகினை
இமை கொட்டுவதும் இடையூறு என்று எண்ணி கண்கொட்டுதலை நிறுத்தியவாறே தமது கண்களால் பருகும்
பாங்குடையராய் பாங்கியர் முயற்சியேதுமின்றி கிடைத்த அமுதத்தைப் பருகியவர் போலாயினர்.

70. அம்போருஹாணாம் அவலேபஸீமாம் கர்ணோத்பலாநாம் அபி காந்திகக்ஷ்யாம்
விலங்கயந்தஸ் ஸுத்ருசாம் கடாக்ஷா: விலில்யிரே க்ருஷ்ணம் அவாப்ய லக்ஷ்யம்

தாமரை மலர்களின் கர்வத்தின் கடையெல்லையையும் செவிப் பூக்களான கருநெய்தல்களின் காந்தி குவியல்களையும்
கட்ந்தனவான அவர்களின் கடாக்ஷங்கள் கண்ணனென்ற குறியிலே வேறிடம் செல்லாமற் பதிந்தன.

71. தம் ஆத்மவந்தம் பரவித்யயேவ பராக்ரமம் தத்பரயேவ லக்ஷ்ம்யா
தமேவ தேவம் தயயேவ ஜூஷ்டம் ஸம்மேநிரே தத்வவிதஸ் ஸபார்யம்

தத்வ ஞாநிகள் ருக்மிணியுடன் விளங்கும் கண்ணனை பரவித்யையுடன் கூடிய யோகியைப் போலவும்
பராக்ரமம் லக்ஷ்மியுடன் கூடியது போலவும் தயையுடன் சேர்ந்த தேவனைப் போலவும் மிகவும் பஹுமானித்தனர்.

72. தாம் ப்ராப்ய சித்ராமிவ தாரகேச ஸ்தவ்யை: ஸ்துதோ வந்திகணைரபௌமை:
விவேச தாமஸ்வமுதீர்ணதாமா வைவாஹிகீம் ஸம்பதம் ஆப்துமிச்சந்

சித்திரை நக்ஷத்திரத்துடன் கூடிய சந்திரன் போல் துதிக்கப்பட வேண்டிய தன்மை பெற்ற துதி பாடகர்களால்
துதிக்கப் பெற்று தமது திருமாளிகையை அடைந்தார்.
திருமணத்திற்கு தேவையான சீரும் சிறப்பும் பெறவே திருவுடன் ப்ரவேசித்தான்.

73. விஹாரயோகேந விபஜ்ய யுக்தம் மிதோநுரூபம் மிதுநம் ததாத்யம்
உபாசரந் வ்யோமசரா யதார்ஹம் ஸம்ப்ரீணநைர் உத்ஸவ ஸம்விதாநை:

லீலாரஸத்தின் புஷ்டியென்னலாம்படி சிறிது காலம் பிரிந்திருந்து பிறகு கூடியதும், பரஸ்பரம் அநுரூபமானதுமான
க்ருஷ்ண ருக்மிணி மிதுனத்தை வானவீதியில் உலாவரும் தேவர்கள் வழிபட்டவாறு
திருக்கல்யாண மஹோத்ஸவ ஏற்பாடுகளைச் செய்தனர்.

74. ஸதாபிகம்யைர் அபிகம்யமாநம் விச்ராணநே வைச்ரவணாத் ப்ரபூதம்
தம் சங்கபத்ம ப்ரமுகா மஹாந்த: ஸிஷேவிரே சேவதயஸ் ஸமேதா:

எப்போதும் வணக்கத்திற்குரியவனும், வாரி வழங்குவதில் குபேரனை விஞ்சியவருமான க்ருஷ்ணனை
சங்கம் பத்மம் எனப்படும் மஹாநிதிகள் எல்லாம் இணைந்து சேவை செய்தன.

75. அக்ருத்ஸ்ந ஸம்வேதிநி ஜீவலோகே ஸங்க்ராஹயந் தர்மமதாத்மவ்ருத்யா
ப்ரத்யர்சயாமாஸ முநீநுபேதாந் ப்ரபுஸ்வயம் ப்ரேஷ்ய இவோபசாரை:

உலகில் இருக்கும் ஜீவராசிகளில் எல்லார்க்கும் எல்லாம் தெரியும் என்று சொல்ல இயலாது.
தனது செயலால் தர்மத்தை உணரச் செய்ய வேண்டும் என நினைத்து அங்கு குழுமியிருக்கும் முனிவர்களுக்கு
முன் தான் ஒரு சாதாரணமானவன் போல் பாவித்து பலவகையான உபசாரங்களால் கௌரவித்தான்.

76. அபத்ரபாவிப்லுத சேதஸோ யே த்யக்த்வா விபக்ஷம் தரஸோபஸேது:
யதாக்ரமம் ஸாத்யகிர் உத்ஸவாதௌ ஸம்பாவயாமாஸ ஸபாஸதஸ்தாந்

சிசுபாலன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் தமது செயல்களுக்கு வெட்கப்பட்டு அக்கூட்டத்தை விட்டு விலகி விரைந்து
வந்து கண்ணன் பக்ஷத்தில் சேர்ந்து விட்டனர். ஸபையில் வந்த அவர்களை வேற்றுமை காட்டாமல் சமமாகவே ஸாத்யகி உபசரித்தார்.

77. சுபம்யவ: ஸ்வாமி மஹோத்ஸவேந ஸ்வாராஜ்யம் அக்ஷய்யம் இவாப்தவந்த:
தத்தோபசாரா வஸுதேவதாரை: புண்யாசயா: பௌரஜநா ஜஹர்ஷு:

கண்ணனுடைய இந்த மஹோத்ஸ்வத்தினால் பாக்யசாலிகள் தாம் அழியாத ஸ்வராஜ்யத்தை அடைந்தவர்களாய் மகிழ்ந்தனர்.
வஸுதேவரின் தேவிகளும் மிகவும் அவர்களை அன்புடன் உபசரித்து கௌரவித்தனர்.
பாக்யசாலிகளான பட்டணவாசிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

78. ஸஹோதர ந்யஸ்தபர ஸ்ததாத்மா ருக்மாணி ரத்நாநிச ரௌஹிணேய:
அதத்த ஸந்தோஷவசாத் அபீக்ஷ்ணம் வாஞ்சாதிகம் வந்தி வநீபகாநாம்

திருத் தமையனாரான பலராமனிடம் தான் கல்யாண நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அவனே சேஷனாவான்.
ஸந்தோஷ மிகுதியால் துதிபாடகர்களுக்கும் யாசகர்களுக்கும் தங்கமாகவும், ரத்னமாகவும்
அவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாகவே வழங்கினார்.

79. அநந்ய பக்தைர் அநுபாவ்ய பூம்நா தத்தக்ஷணோ தானபதி ஸ்த்ரிதாம்நா
ஸமாஹிதைஸ் ஸம்மதம் உத்தவாத்யை: புரோதஸாம் பூஜநமாசசார

பரமை காந்திகளான பக்தர்களால் அனுபவிக்கப்படும் க்ருஷ்ணனுடைய கண் சாடை யறிந்த அக்ரூரர் மிகவும்
அவதானத்துடன் உத்தவர் முதலியோரின் சம்மதப்படி புரோஹிதர்களை வரித்து உபசரித்தார்.

80. ஆஹந்யமாநா த்ருதஹேமகோணை: கந்தர்வமுக்யைர் இவ காடவித்யை:
ஜாதாநுநாதா ஜகதாம் த்ரயாணாம் தோஷச்சிதோ துந்துபய: ப்ரணேது:

தங்கக் கம்புகளால் அடிக்கப்படுபவையும் பேரீவாத்ய கலையில் ஆழ்ந்த புலமையுள்ள கந்தர்வர்களால் ஒலிக்கச்
செய்பவையுமான, பேரிகள் மூன்று உலகங்களின் துன்பங்களையும் தொலைக்கும் வண்ணம் முழங்கலாயின.

81. விபாவிதம் சிக்ஷித நாட்யவேதை:உத்வாஹ ஸங்கீதம் உதாரக்லுப்தம்
ப்ரஸாதநம் த்ருஷ்டி மநச்ருதீநாம் அதிவ்யம் ஆஸ்கந்தித திவ்யமாஸீத்

நாட்டியத்தை ப்ரதானமாகக் கொண்ட ஸங்கீத விற்பன்னர்கள் சிறந்த திருமணப் பாடல்களைப் பாடினர்.
செவிக்கும் மனதிற்கும் கண்களுக்கும் இது பரம போக்யமாயிருந்தது.
ந்ருத்தம், கீதம், வாத்யம் என மூன்று இணைந்தால் ஸங்கீதம். இது திவ்ய ஸங்கீதத்தையும் பின்னடையச் செய்வதாய் இருந்தது.

82. லாவண்யபூரம் லலிதாங்கயஷ்டே: காத்ஸ்ந்யேந நிர்வேஷ்டும் அபாரயந்த்ய:
அங்காநி வத்வா: குலவ்ருத்த நார்ய: ப்ரஸாதநைர் அந்தரயாம் பபூவு:

மெல்லிய மேனிப்பாங்கு உடைய ருக்மிணியின் அழகு முழுதும் தரிக்க மாட்டாமல் குலப் பெரு மங்கைகள்,
அவளுக்கு கண் த்ருஷ்டி படுமோ என எண்ணி பொருத்தமான நகைகளை திருமேனி முழுவதும் அணிவித்து மறைத்து விட்டனர்.

83.ப்ரயுஜ்யமாநாநி தயோர் யதார்ஹம் மாங்கல்ய மால்யாபரணாக்ஷதாநி
ப்ராயேண லோகாப்யுதயம் ப்ரதாதும் தத்ஸங்கமாத் தாத்ருசதாம் அகாங்க்ஷந்

இத் தம்பதிகளுக்கு மாலைகளை அணிவித்தனர். ஆபரணங்களை ஏற்றவாறு அணிவித்தனர். அக்ஷதைகளையும் பொழிந்தனர்.
அவர்களை அடைந்தபடியால் தான் உலகம் செழிக்க இவை மங்களகரமானவை என்ற தன்மைகளை அடைந்தன போலும்.

84. அராதிபக்ஷார்ணவ மந்தராபே ஹஸ்தே ஹரேர் யத்ததபந்தி ஸூத்ரம்
ததாததே ஸ்தாநவசாத் அபிக்யாம் ஸம்வீத நாகேந்த்ர நிதர்சநீயாம்

எதிரிகளின் கூட்டம் என்பதொரு மாகடலை கலக்கும் மந்தர மலையோ என்னும்படி தோன்றும் க்ருஷ்ணனுடைய கைகளில்
கட்டப் பெற்ற நூலிழை(ப்ரதிஸரம்) முன்பு மந்தரத்தில் கட்டப் பெற்ற வாஸுகியின் பேரொளியைப் பெற்று விட்டது போல் விளங்கியது.

85. ஸமேதிதஸ்தஸ்ய விவாஹ வஹ்நி: புரோதஸா புண்யக்ருதக்ரிமேண
ப்ரதக்ஷிணாவர்தசிகாகலாப: ப்ராயேண நீராஜநமாததாந

மஹா புண்யவானான ப்ருஹஸ்பதி விதியோடு செய்யப்பட்ட ஹோமத்தில் ஜ்வாலை மிகவும் ரம்யமாயிருந்தது.
ஜ்வாலையும் ப்ரதக்ஷிணமாக சுழலும்போது மங்கல ஆரத்தி எடுத்ததோ எனும்படி இருந்தது.

86. ஆசாஸ்ய லாஜாஞ்சலி ஹோமபாஜா க்ஷேமாசிஷா கிஞ்சித சேஷஹ்ருத்யம்
அந்யோந்ய மாகேகர ஸஸ்மிதாக்ஷௌ அபச்யதாமாதிம தம்பதீதௌ

லாஜ ஹோமம் நடைபெறுகிறது. என் கணவன் நூறு வருடம் இருக்க வேண்டும் என ருக்மிணி சொன்னாள்.
கண்ணன் புன்முறுவலித்தான். அவளும் அவ்வாறே செய்தாள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
மந்த்ரம் சொன்னது பலகோடி நூறாயிரம் வாழ்பவர்களுக்கு தேவையோ என்பது சிரிப்பில் தொனித்தது.

87. வைலக்ஷ்ய டோளாமிவ ஸம்ச் ரிதாநாம் விலோசநநாம் வவ்ருதே விஹாரை:
தயோர் அநந்யாத்ருச வைபவாநாம் மந்யோந்ய ராஜீவ மதுவ்ரதாநாம்

அந்த தம்பதிகள் வெட்கம் என்ற ஊஞ்சலில் அமர்ந்தனர். அவர்களின் வைபவம் எங்கு தான் கிடைக்கப் பெறும்?
கண்ணன் முகம் தாமரையை ஒத்தது. அவளின் திருமுகமும் அப்படியே! பரஸ்பரம் பார்வைகள் மலரில் அமரும் வண்டுகள் ஆயின.
வெட்கமெனும் ஊஞ்சல் ஏறி ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

88. பரஸ்பரம் பாணிஸரோஜ யோகாத் பபூவதுஸ்தௌ புளகாஞ்சிதாங்கௌ
அஸ்வித்யதாம்ச ஜ்வலநஸ்து மந்தை: அஸூததூமை ரதிவாஸமாத்ரம்

இருவரும் பரஸ்பரம் கைப்பிடித்துக் கொண்டனர். அப்போது மயிர் கூச்செரிதல் உண்டாயிற்று. உடல்கள் வியர்த்தன.
லாஜ ஹோமம் செய்த போது அக்னியில் உண்டான சிறுபுகை மணத்தைத் தான் வீசியது. அந்த அக்னியால் வியர்வை ஏற்படவில்லையே?

89. ஸமந்த்ரகம் ஸாக்ஷிணி ஹவ்யவாஸே ஸக்யோசிதாம் ஸப்தபதீம் பஜந்தௌ
ஸ்வசாஸநேந ஸ்வயமந்வயாதாம் ஆசாரமாகந்துக தம்பதீநாம்

விவாஹாக்னி சாக்ஷியாயிருக்க ஸப்தபதி நடைபெறுகிறது. தனது ஆணையை அனுசரிக்கும் விவாஹ தம்பதிகள்
இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அனுஷ்டித்து காண்பிக்கின்றனர் இத் திவ்ய தம்பதிகள்.

90. அந்வேது விஷ்ணு ஸ்வயமித்யுதீர்ய ப்ரியாம் பராதீந இவாநுகச்சந்
ஜாயாபதீநாம் ஜகத் உத்பவாநாம் பவ்யாம் தசாம் பாவயதிஸ்ம நாத:

விஷ்ணு உன் பின் தொடரட்டும் என கண்ணன் தானே சொன்னான். அடிமை போல் ருக்மிணியை பின் தொடர்ந்தான்.
உலகில் இருக்கும் தம்பதிகளைப் போலத்தானே நடந்துகொண்டு அழகான நிலையைக் கோடித்தான்.

91. ஆத்மாநமேவ ஸ்வயம் அக்னிரூபம் பரிக்ரமை: பர்யசரத்ஸ தேவ:
விச்வஸ்ய பாஹ்யாந்தர நித்யவ்ருத்யா நகர்மசர்தா ச ய ஏவயேஷாம்

அக்னி ஸ்வரூபமான தன்னையே வலம் வந்து கொண்டிருந்தார். உலகில் உள்ளும் புறமும் விளங்கும் இவன் ப்ரதக்ஷிணம்
செய்வதோ செய்யப்பட்டதோ ஒன்றுமில்லை. தன்னையே தான் வலம் வந்தது தான் உண்மை!.

92. ப்ரதக்ஷிணேந க்ரமணேந தாப்யாம் தத்தார்சநோதிவ்ய வதூவராப்யாம்
நூநம் ததாநர்ச விகூர்ணநேந ஸ்வாந்த: ஸ்திதௌ வஹ்நிரபி ஸ்வயம் தௌ

இருவரும் வலம் வந்தனர்.இவர்கள் திவ்ய தம்பதிகள். இவர்கள் தன்னை ஆராதித்தபோது அக்னியும் தனது
ஜ்வாலையை வலமாக எழும்படி செய்து தனக்கும் அந்தர்யாமிகளாக இருப்பவர்களான இவர்களை ஆராதித்தான்.

93. தஸ்யாஸ் ஸலீலம் சரணாரவிந்தம் காமீ க்ருஹீத்வா கரபங்கஜாப்யாம்
ஆஸ்தாபயத் யாம் த்ருஷதம் முகுந்த: ஸாபூத் ஸ்வயம் மௌளிமணி: ச்ருதீநாம்

அம்மி மிதிக்கும் படலம். ருக்மிணியின் தாமரை மலரையொத்த திருவடியை லீலையாகவும் ஆசை மிக்கவனாய்
செம்மையுடைய திருக் கரங்களால் பற்றி அம்மியில் ஏற்றிவைத்தான்.
அந்த சிலையானது உபநிடதங்கள் தங்கள் சிரஸ்ஸுகளில் சூட்டிக் கொள்ளும் ராக்கொடிக் கல்லானது.

94. யதத்ரகர்மண்ய யதாக்ருதம் தத் ஸ்விஷ்டம் க்ரியாதக்நிரிதி ப்ருவாண:
ஸ்வதேஜஸா பாவித விச்வதேஜா: ஸ்வாஹாஸகம்தேவ முபாஸ்த தேவ:

இந்த வைவாஹிக ஹோமத்தில் ஏதாவது ந்யூநாதிரேகங்கள் இருந்தால் அக்னி அவற்றை சரி செய்துக் கொள்ளட்டும்
என்ற விதிப்படி மிக்கதேஜஸ்ஸை உடைய பரமபுருஷன் ஸ்வாஹா தேவியுடன் விளங்கும் அக்னியை உபாஸித்தான்.

95. ராமஸ்ய ஸீதேவ ரமேவ விஷ்ணோ: அமுஷ்ய பூயாஸ்த்வம் இஹைகபத்நீ
இத்யூசிஷோ யாதவவ்ருத்ததாராந் ப்ரீதாசயா ப்ரைக்ஷத ஸா ஸநாதா

ராமனுக்கு சீதை போலவும் விஷ்ணுக்கு லக்ஷ்மி போலவும் அவருக்கு ப்ரியமான மனைவி ஆவாய் என்று
வாழ்த்துகின்ற யாதவ சிரேஷ்டர்களின் மனைவிமார்களை நிறைந்த மகிழ்ச்சியோடு கணவனுடன் கண்டாள்.

96. வரேண வந்த்யேந ஸுராஸுராணாம் மங்கள்ய ஸீமாந்த புவாச வத்வா
ஸமீக்ஷிதா ப்ரம்ஹ ஸுதஸ்ய பத்நீ ஸர்வைர் அபூத் ஸாதர தர்சநீயா

தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் வரனாலும் மங்களங்களுக்கெல்லாம் இருப்பிடமான மணப் பெண்ணாலும்
வணங்கப்பட்ட வஷிஷ்டரின் மனைவியான அருந்ததி அன்பும் ஆதுரமும் நிறைந்து காணப்பட்டாள்.
அதனால் தான் இன்றும் அருந்ததீ தர்சனம் வழக்கத்தில் உண்டு.

97. ததேகபாவா தம் அநந்யபாவம் நாதப்ரியா நாதம் அநுவ்ரஜந்தீ
அபீஷ்டஸித்தேர் அதிதேவதேயம் யத்வா ஸவித்ரீதி யதார்த்த மூசே

எல்லாம் கண்ணன் என்ற மனோநிலை ருக்மிணிக்கு. எல்லாம் ருக்மிணி என்ற நிலை கண்ணனுக்கு. நாதனுக்கு அன்புச் சுனையான
ருக்மிணி நாதனைப் பின் தொடர்ந்தாள். வேண்டியவற்றெல்லாம் அடைய வைக்கும் அதிஷ்டான தேவதையோ
அபீஷ்ட சித்தியை செய்பவள் தானோ என்று கண்டவரால் எண்ணப்பட்டாள்.

98. மநுஷ்யதாம் மாநயதோ விஹாரை: ஸ்வாமேவதேவீம் உபயச்சதஸ்தே
ஸமேததாம் மங்களமித்யுஸந்தஸ்: ஸத்யாசிஷஸ்தம்முநயச் சசம்ஸு:

மனிதத் தன்மையை ஏற்றிருப்பவனும், தனது விஹாரங்களால் தன்னைச் சேர்ந்தவளும், அவளையே மணக்கின்றவனான
கண்ணனுக்கு மங்களம் உண்டாகட்டும் என்றும் “நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்னுமாப்போலே
ஸத்ய வாக்குகளான முனிவர்கள் வாழ்த்தினர்.

99. க்ருதாசிஷம் க்ருஷ்ணக்ருஹேஷ்வரீம் தாம் புரோதஸா புண்யமநோரதேந
ஸ கௌதுகாம் கௌதுகிநஸ்ஸுரத்நை: அப்யர்ச்சயாமாஸுரமாத்ய வ்ருத்தா:

நல்ல மனோரதமுடைய புரோஹிதர் ஆசீர்வாதம் செய்தார். க்ருஷ்ணரின் பத்னி காப்புடன் விளங்க, குதூஹலத்துடன் விளங்க,
மந்திரி ப்ரதானிகள் நல்ல நல்ல ரத்தினங்களை அக்ஷதமாக ஆசிர்வாதத்தில் வழங்கினர்.

100. ப்ரதாய தாப்யாம் உபதாஸ்ஸமீசீ:ப்ரத்யாகதாஸ்: ஸ்வாநி க்ருஹாணி பௌரா:
ஆசாபதீநாம் விபவாத் அநூநம் தத்ரைவதே ஸம்பதம் அந்வபூவந்

அத் தம்பதிகளுக்கு ஏற்றவையான உபஹாரங்களை அளித்து விட்டு தம் தம் திருமாளிகைகளுக்கு திரும்பும் பட்டணத்து மக்கள்
குபேரன் முதலியோரின் செல்வத்துக்கு எவ்வகையிலும் குறையாத செல்வத்தை அங்கேயே அனுபவித்து உய்யலாயினர்.

101. ஸ்த்ரீபும்ஸநாம்நா பஹுதா விபக்தம் விச்வம் யயோரேவ விபூதிமாஹு:
நயோ ஜஹௌ த்வாரவதீம் ந தாப்யாம் அங்கீக்ருதாமாதிம தம்பதிப்யாம்

ஆண் என்றும் பெண் என்றும் இருகூறாகப் பிரிக்கப்பட்ட இந்த உலகம் எந்த தம்பதிகளின் சொத்தோ அத்தகைய
ஆதி தம்பதிகளாலே அங்கீகரிக்கப்பட்ட த்வாரகையை நீதி விடவில்லை.

102. வதூஸகே தத்ர ஜகந்நிவாஸே வஸத்யமர்யாத குணானுபாவே
தஸ்மிந் நிவாஸீத் அநபாயபாவா தஸ்யாம் நகர்யாமபி ருக்மிணி ஸ்ரீ:

எல்லையில்லாத குணங்களைப் பெற்றவனும் ஜகத்துக்கு வாஸ்ஸ்தானமுமாகிய கண்ணன் பிராட்டியுடன் அங்கு
வசிக்கும்போது அந்த நகரிலும் ருக்மிணீ அகல்கில்லேன் என்ற நிலையைப் பெற்றுவிட்டாள்.

103. தஸ்யா கடாக்ஷை: விஹிதாபிஷேக: தத்பாஹுநா கல்பித கண்டமால்ய:
அவாப சோபாம் அதிகாம் முகுந்த: ஸௌபாக்ய ஸிம்ஹாஸந ஸார்வபௌமீம்

அவளுடைய கடாக்ஷங்களால் நீராட்டப்பட்டவனான். அவளது ஆலிங்கனம் செய்து கொள்கிற திருக்கரங்களையே மாலையாக அணிந்தான்.
முகுந்தன் அபூர்வமான சோபையை அடைந்தான். ஸௌபாக்யம் எனும் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்த
பட்ட மகிஷியின் தன்மையை அந்த ஸோபை பெற்றுவிட்டது.

104. கதம்ப கோள ச்ரியமாக்ஷிபந்தம் கந்தர்ப ரூபோதய பூர்வரூபம்
ப்ரியாபரிஷ்வங்க ரஸேநதன்யம் ப்ரீதாசயோ பஹ்வமதாத்ம தேஹம்

ருக்மிணி கண்ணனை அரவணைத்தாள். கூச்செரிந்தது, கதம்ப சோபையை புறக்கணித்தது. மன்மதனின் பூர்வ ரூபமோ என அமைந்தது.
மேலும் திருவணைப்பினால் தன்யமாயிற்று. ப்ரீதியும் பெருகியது. தனது திருமேனியில் பகுமானமும் கண்ணனுக்கு ஏற்பட்டது.

105. தாம் ப்ராப்ய க்ருஷ்ண: ப்ரபுதாமிவ ஸ்வாம் மந: ப்ரஸூதேர் இவ மந்த்ரஸித்திம்
ஆஸீதபீதைஸ் ஸஹஸாபிகம்யோ மித்ரைர் அமித்ரைர் அபி ஸாபராதை:

ப்ரபுதா சக்தி போன்ற ருக்மிணியை அடைந்து மன்மதனை அழைக்க வல்ல மந்த்ர ஸித்தியை அடைந்தது போல் நெருங்க வல்லவனாகி விட்டான்.
பிராட்டி யோகத்தினால் மித்ரர்களும் சத்ருக்களும் குற்றம் புரிந்தவர்களும் பயமின்றி அணுகக் கூடியவரானர்.

106. ஸ்ரீவத்ஸ ஸ்ம்ஸ்தாந ஜுஷா ப்ரக்ருத்யா ஸ்தாநேந சிஹ்நேந ச லக்ஷணீயௌ
த்ருஷ்டாவபீஷ்டம் பஜதாம் ததாதே ஜகத்பதீ தௌ இவ தம்பதீ த்வௌ

ஸ்ரீவத்ஸம் என்பதொரு ப்ரக்ருதியின் ஸ்தானத்தில் அமர்ந்தாள் ருக்மிணி. அதுவே அடையாளமும் ஆயிற்று.
மரு ப்ராக்ருதிக்கு அடையாளம். அங்கே ப்ராட்டியும் இருப்பது லக்ஷணமாயிற்று. இவ்வண்ணம் ஸேவிப்பவர்களுக்கு
அபீஷ்டத்தை அளிக்கும் அத்திவ்ய தம்பதிகளே இந்த தம்பதிகளாம்.

107. நதே மநுஷ்யா நச தேவதாஸ்தே ப்ராயேண தாவேவ ததாபவந்தௌ
யைரேவம் அந்யோந்ய விபூஷிதம் தத் த்வந்த்வாதிகம் த்வந்த்வம் அவைக்ஷி தந்யை:

அங்குள்ள மனிதர்கள் மனிதர்கள் அல்லர். தேவர்களும் தேவர்களல்லர். இந்த த்வந்த்வமில்லாத த்வந்த்வத்தைக் கண்டவர்
அவர்களே ஆகி விட்டனர். அந்த க்ருஷ்ணன் ருக்மிணி என்ற மிதுனம் ஒன்றுக்கொன்று அணிகலனாகி விட்டது.

108. அத ஸமுதித ஹர்ஷைர் ஆத்ருதோ மந்த்ரிவ்ருத்தை: ஸுரபதிதயிதாபி: ஸ்தூயமாநாபதாந:
ருசிமிவ நிரபாயாம் ருக்மிணீம் ப்ராப்ய ஹ்ருஷ்யந் யதுபதி ரதிசக்ரே யாயஜூகாதிகாரம்

மகிழ்ச்சியின் உச்சியை அடைந்த் நன் மந்திரிகளால் பாராட்டப் பெற்றார். தேவலோகப் பெண்டிரான அப்ஸரஸுக்களால்
புகழ் பாடல் இசைக்கப் பெற்றார். பிரியா ஒளியென ருக்மிணியை அடைந்து மகிழ்பவராய் யாகம் செய்பவர்களுக்கு
வேண்டிய தகுதியை யதுபதியான க்ருஷ்ணன் அடைந்து விளங்கினார்.

109. ஸுபகம் உபலபிம்பே சாத கும்பேபி ரத்னம் கநதி விபிநபாகே காலகண்டேபி கங்கா
வசிக ந்ருபக்ருஹே ஸா வாஸுதேவேப்ய தீவ்யத் நஹி பவதி விசேஷ: க்வாபி நித்யோந்நதாநாம்

ரத்தினம் கல்லாகவும், தங்கத்திலும் நன்றாக விளங்குகிறது. கங்கை நதியாக காட்டிலும், சிவனுடைய முடியிலும் நன்றாக விளங்குகிறது.
சிறு மன்னனான பீஷ்மகன் இல்லத்திலும், வஸுதேவனுடைய க்ருஹத்திலும் வாஸுதேவனின் ப்ராட்டி விளங்கினாள்.
என்றுமே எங்குமே பெருமை உடையவராக விளங்கினர்.

————

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம:

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

One Response to “ஸ்ரீ யாதவாப்யுதயம்–13- சர்க்கம் -ஸ்ரீ ருக்மிணி திருக்கல்யாணம்–ஸ்லோகார்த்தங்கள்–”

  1. Lakshmi Says:

    Hi.. This was very useful.. It will be even more useful…. If there’s meaning for rest of the sargam’s

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading