ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்
அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை எழுந்து அருளும் பொழுது வழியிடையிலே –
பகவத் குண அனுபவத்தாலும் அனுபவ ஜெனித ப்ரீதிகார வாசிக்க கைங்கர்யத்தாலும்
தம்முடைய நெஞ்சாறல்களை மறக்கக் கருதி எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசதமாக அனுசந்தித்து
அவ்வனுசந்தான பரிவாக ரூபமாக
முதலில் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவமும் அடுத்து ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவமும் ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவமும் அருளிச் செய்தார்
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ வரதராஜ ஸ்தவமும் நிகமத்தில் ஸ்ரீ ஸ்தவமும் அருளிச் செய்தார்
பஞ்ச ரத்னம் போன்ற இவையே பஞ்ச ஸ்தவமாகும்
எனவே இதில் ஆச்சார்ய வந்தனத்துடன் உபக்ரமிக்கிறார்
இந்த ஸ்தவங்களில் சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் மற்று எந்நோக்கும் சிறப்பாக அமைந்துள்ளன
உபய வேதாந்த ரஹஸ்ய அர்த்தங்கள் பொதிந்து இருக்கும்
வான் இள அரசன் வைகுண்டக் குட்டன் ஒண் டொடியாள் திரு மகளும் தாணுமாய் நலம் அந்தமில்லதோர் நாட்டில்
நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கும் இருப்பை இதில் அனுபவிக்கிறார்
திருநாட்டின் பெருமைகளை பரக்க பேசி-தமது பெரு விடாயை அருளிச் செய்கிறார்
————
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்
மேல் -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்தில் ஸ்ரீ ராமா வரஜ முனீந்திர லப்த போதாஸ் -என்று
தம் சத்தை பெறுவித்தமை அருளிச் செய்கிறார்
அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
வேதா த்வேதா பிரமம் சக்ரே காந்தாஸூ கநகேஷூ ச –ஸ்வர்ணத்தில் பிரமம் சர்வர்க்கும் அவர்ஜனீயம் என்பதால்
சமத்காரமாக அருளிச் செய்கிறார்
கோயில் திருமலை பெருமாள் கோயில் -முதலான திருப்பதிகளில் நித்ய வாசம் செய்வதே ஆஸ்ரிதர்களை
நழுவ ஒண்ணாமைக்காக என்பதால் அச்யுத-பதாம்புஜம் –
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதயா ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலிநா -என்று
இவர் தம் பொன்னடியை பேணுமவர்கள் போலே இவரும் அச்யுத-பதாம்புஜத்தில் இருப்பாரே –
திருக்கச்சி நம்பியும் -நமஸ்தே ஹஸ்தி சைலே ப்ரணதார்த்திஹர அச்யுத -என்றார்
பச்சை மா மலை போல் மேனி –அச்யுதா அமரர் என்றே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் -பொன் அரங்கம் என்னில் மயிலே பெருகும் ராமானுஜன் அன்றோ
அஸ்மத் குரோர் -அஞ்ஞானத்தை போக்குபவரே குரு –
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்து ராமானுஜன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந் யத்ர-
புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீமாந் ஆவிர்பூத் ராமானுஜ திவாகர–
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு அஸ்மத் சப்த பிரயோகம் –அஸ்மாகம் குரோ என்றபடி
பகவத்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் –
முக்கிய வ்ருத்தம் அவனுக்கே பொருந்தும் -இங்கு பொருந்துமாறு எங்கனே என்னில்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும்
சாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும் மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா –என்றும்
சாஷாத் சர்வேஸ்வர அவதாரமே அன்றோ ஸ்வாமியும்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகிலா யுலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே–
அவனுக்கும் பகவத் சப்தத்தை த்ருடமாக்கி அருளிய வீறு உண்டே ஸ்வாமிக்கு
அஸ்ய
யச் சப்த பிரயோகம் இல்லாமல் -அஸ்ய-என்று இதம் சப்தத்தால் பிரதி நிர்த்தேசம் பண்ணுவது
இதம் -ப்ரத்யக்ஷ கதம் -தத் இதி பரோக்ஷ விஜா நீயாத் –என்கிறபடி ப்ரத்யக்ஷ விஷயம் -ஸ்வாரஸ்ய அதிசயம் உண்டே
காஷாய சோபி கமனீய சிகா நிவேசம் தண்ட த்ர்ய உஜ்ஜ்வல்யகரம் விமல உபவீதம் உத்யத்திநேசநிபம்
உல்லச ஊர்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்தி யதிராஜ த்ருசோர் மம அக்ரே –என்று இடைவிடாமல் சாஷாத்கோசாரமாய்
ஆழ்வானுக்கு இருப்பதால் தச் சப்தம் இல்லாமல் இதம் சப்தமே ஏற்குமாயிற்று
தயைக ஸிந்தோ
முலைக் கடுப்பாலே பீச்சுவாரைப் போலே -பயன் அன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்தி
பணி கொண்டு தம் பேறாக சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பிக்கும் கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் வர்க்கம் ஸ்வாமி தொடங்கிய அன்றோ
ஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பார் உலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம்
ஆரியர்கள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –
ருசி விசுவாச ஹீனரையையும் நிர்பந்தித்து சரம உபாயஸ்தராக்கியும்
அதிகாரம் பாராமல் இவர்களுடைய துர்க்கதியையே பார்த்து உபதேசித்து அருளுபவர் அன்றோ
ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே —
ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply