ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-2- சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-/

பெயர் புகழ் கொண்டாடப்படுத்தல் மூன்றும் சமாக்யம்-name -fame -ஒற்றுமைகளைச் சொல்லி
சடாரி -பெயர் வரக் காரணம்
திருவடியில் இருந்து தோன்றும் குலம் –
வேதம் எளிதாக நான்காம் பாசுரம்
அமுதம் போல் நாதம் ஐந்தாம் -பாசுரங்கள்
அடியார்க்கு அடிமை 6-7-பாசுரங்கள்
லோக -ப்ரபந்ந ஜட கூடஸ்தர் -8-பாசுரம்
அகஸ்தியருக்கே பெருமை -9-பாசுரம் –
1000 பாசுரங்கள் -ஸ்லோகங்கள்

————-

வந்தே விஷ்ணு பதா சக்தம் தம் ருஷிம் தாம் ச பாதுகாம்
யதார்த்தா சடஜித் சம்ஜ்ஞா மச் சித்த விஜயாத் யயோ –21-

யயோ-எந்த இருவருக்கும்
யதார்த்தா சடஜித் சம்ஜ்ஞா-பொருத்தமாக இருக்கிறதோ
மச் சித்த விஜயாத்-சட வாயுவை விட அடியேனுடைய சித்தம் -மாமஸூ துஷ்ட தமம் -இருவரும் வென்றார்கள்

ஸ்ரீ பாஞ்ச ராத்ர சம்ஹிதையில் சடன் என்ற அசுரனை ஜெயித்த படியால் சடகோபம் என்ற திருநாமம் வந்ததாக கூறப் பட்டு உள்ளது –
துஷ்டர்களை ஸ்வா தினம் பண்ணிக் கொண்டவன் என்கிற அர்த்தத்தில் கெட்ட வழியில் செல்லும்
நம்மை வென்று சன் மார்க்கத்தில் கூட்டிச் செல்வதால் சடகோபம் என்கிற பெயர் –
அவரவர் பக்தர்களை அவரவர் பாதுகையாகச் சொல்வது வழக்கு –
அதனாலேயே ஸ்ரீ பாதுகையை சடகோபம் -சடாரி -என்கின்றனர் –

பாதுகைக்கு“சடாரி” என்று திரு நாமம் வந்ததற்கு காரணம் ஸாதிக்கிறார்.
சடஜித் என்றால் துஷ்டனை ஸ்வாதீனம் பண்ணிக் கொண்டவனென்று அர்த்தம்.
மிகவும் துஷ்டனான என்னை பாதுகையும் ஆழ்வாரும் கெட்ட வழிகளில் செல்லாமல் நல்ல வழிகளில்
செல்லும்படி செய்த படியால் அவ் விருவருக்கும் அப் பெயர் வந்தது.
நம்மாழ்வாருக்கு சடகோபனென்று திருநாமம். அந்தத் திருநாமம் பாதுகைக்கு எப்படி வந்ததென்பதற்கு காரணம் ஸாதித்தார்.
சடனென்ற அஸுரனைப் பாதுகை ஜயித்த படியால் பாதுகைக்கு “சடகோப”னென்ற திருநாமம் வந்தது.
இவ் விஷயம் ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில் சொல்லப் பட்டிருக்கிறதென்று சொல்லுகிறார்கள்.

யார் எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் –
விட்டுப் பிரியாமல் நிலை நின்று -மனம் வென்று -இரண்டு ஒற்றுமைகள் இதில்

—————————————————————————–

த்ரமிட உபநிஷன் நிவேச ஸூந்யான்
அபி லஷ்மீ ரமணாய ரோச யிஷ்யன்
த்ருவ மாவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப ஸ்வயமேவ மாநநீய –22-

லஷ்மீ ரமணாய-சுவையன் திருவின் மணாளன்
ரோச யிஷ்யன் -இஷ்டமானவர்களாக ஆக்குவதற்காக
நிவேச ஸூந்யான் அபி -ஞானம் இல்லாதவர்களும் கூட
மாநநீய -கொண்டாடத் தக்கவர்
ஸ்வயம் த்ருவம் ஆவிசதிஸ்ம-தானே ஆவிர்பவித்தார் -இது திண்ணம்

அனைவரும் எம்பெருமானை அடைந்து எட்ட ஒண்ணா சுகம் பெற திருவாய்மொழி அருளினார் –
அத்தை கற்க திறன் அற்றவர்களும் கூட எம்பெருமான் திருவடி அடைய வேண்டும் என்கிற எண்ணத்துடனே
அவரே தானே ஸ்ரீ பாதுகையே திருவவதரித்து அருளினார் எனபது நிச்சயம் –

எல்லோரும் பெருமாளை யடைய வேண்டுமென்று
எண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார்.
அந்தத் திருவாய் மொழியையும் சிலர் நெட்டுரு பண்ணுகிறதில்லை.
அவர்களும் பெருமாளை யடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார்.

அதாவது
எல்லோரும் பெருமாளை யடைவதற்காக
ஸந்நிதிகளில் பாதுகையை எல்லோருக்கும் ஸாதிக்கிறார்கள்.-
அதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர்
அருளுக்கு இலக்கு ஆக்குவதில் ஒற்றுமை இதில் –

———————————————————————

நியதம் மணி பாதுகே ததான
ச முநிஸ்தே சடகோப இத்யபிக்யாம்
த்வது வாஸ்ரித பாத ஜாத வம்ச
பிரதிபத்த்யை பரமாததான ரூபம் –23-

நியதம் மணி பாதுகே -நிச்சயம்
ததான ச முநிஸ்தே சடகோப இத்யபிக்யாம் -அந்த முனிவரான நம்மாழ்வார் –
சடகோபன் என்கிற உன்னுடைய பெயரைத் தாங்குகிறார் –
இதி -ப -இதி -உயிர் மெய் எழுத்து யி இல்லை -எறும்பு போகும் வழியில் இடை வெளி விட்டுப்படிக்க வேண்டும்
பாதுகா தேவிக்கு முதலிலே சடாரி
த்வது வாஸ்ரித பாத ஜாத வம்ச -உன் மீது நிலை பெற்ற பாதுகைகளில் இருந்து உண்டான
அந்தணர் முகம் -வேளாளர் திருவடி -க்ஷத்ரியர் தோள் -வைஸ்யர் -தொடை -வேண்டிய ஆற்றல் அருளவே இப்படி
வேத அத்யயனம் அந்தணருக்கு -வணிகருக்கு மடி நிறைய செல்வம் -வேளாளர் காலால் உழைத்து -இத்யாதி
பிரதிபத்த்யை பரம் ஆததான ரூபம்—ரூபம் ஆததான -அந்தக் குலத்தை கௌரவிக்கவே இந்தக்குலத்தில் ஆவிர்பவித்தார்

ஒ ரத்ன பாதுகையே -அந்த நம்மாழ்வார் உன் பெயரை சடகோபம் என்பதைத் தனக்கு வைத்துக் கொண்டார்
நீ ஆஸ்ரயித்து இருக்கும் பெருமாள் திருவடியில் இருந்தே –பத்ப்யாம் ஸூத்ர– என்கிற ஸ்ருதியின் படியே உண்டான
ஸூத்ர குலத்தைத் தானும் மற்றவர்களும் கௌரவிப்பதைக் காட்டவே ஆழ்வார்
அந்தக் குலத்தில் ரூபம் எடுத்துக் கொண்டார் எனபது நிச்சயம்

ஏ பாதுகையே! நம்மாழ்வார் உன்னிடத்தில் பக்தியினால் உனது “சடகோபன்”என்ற பெயரை வஹித்து,
சூத்ர வம்சத்தைக் கொண்டாடுவதற்காகவே அந்த வம்சத்தில் அவதரித்தார்.

திருவடி சம்பந்த ஒற்றுமை இதில்

——————————————————————-

முநிநா மணி பாதுகே த்வயா ச
ப்ரதிதாப்யாம் சடகோப சம்ஜ்ஞயைவ
த்விதயம் சகல உபஜீவ்ய மாஸீத்
ப்ரதமேன ஸ்ருதி ரன்ய தஸ் ததர்த்த –24-

முநிநா மணி பாதுகே த்வயா ச -ஸ்ரீ பாதுகா தேவி உம்மால்
ப்ரதிதாப்யாம் சடகோப சம்ஜ்ஞயைவ -புகழ் பெற்ற ஆழ்வாராலும்
த்விதயம் சகல உபஜீவ்ய மாஸீத் -அனைவரும் உப ஜீவிக்கும் படி ஆனார்கள்
ப்ரதமேன ஸ்ருதி ரன்ய தஸ் ததர்த்த -முதலில் சொன்ன ஆழ்வாரால் வேதமும் –
மற்ற ஒன்றான ஸ்ரீ பாதுகையால் -தத் அர்த்தம் வேதப் பொருளான அவனும் அனைவருக்கும் கிட்டும்படி ஆனார்கள்
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை -ஸஞ்சாரம் பண்ண வைத்து -நம்மிடமே கூட்டி
டிவி மொபைல் அனைத்திலும் அனுப்பியும் -வாழ்விக்கிறாள் –

ஸ்ரீ பாதுகையே ஒரு நீசனும் கூடப் பெருமாளை சேவிக்கும் படியாக வீதியிலே
அவனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வருகிறாய்
வேதம் தமிழ் செய்த மாறன் -வேதத்தின் உட்பொருளான -பரம் பொருளை –
யாவரும் உணரும்படியாக -செய்து அருளினார்
ஆகவே தான் நீங்கள் இருவரும் ஸ்ரீ சடகோபன் என்ற பெயரைப் பெற்றீர்கள் –

ஏ பாதுகையே நீயும் நம்மாழ்வாரும் ஒரு விதமான காரியஞ்செய்தீர்கள் .
அதனால் உங்களிருவர்களுக்கும் “சடகோபன்” என்று ஒரே பெயர்.
நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்து எல்லோரும் சொல்லும்படியாகப் பண்ணினார்.
நீ வேதத்தினுடைய அர்த்தமான பெருமாளைச் சண்டாளன் கூட ஸேவிக்கும் படியாக
வீதியிலே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தாய்.

—————————————————————–

ஆகர்ணய கர்ணாம்ருத மாத்ம வந்த
கதா சஹ்ரம் சடகோப ஸூரே
மஞ்ஜூ ப்ரணாதாம் மணி பாதுகே த்வாம்
ததேக நாமா நம நுஸ்மரந்தி–25-

ஆகர்ணய கர்ணாம்ருத மாத்ம வந்த கதா சஹ்ரம் சடகோப ஸூரே -திவ்ய ஸூரி -பக்தாம்ருதம் —
அடியார்க்கு -செவிக்கு இனிய செஞ்சொல் –ஆயிரம் -போல் உனது நாதமும்
மஞ்ஜூ ப்ரணாதாம் -இனிய நல்ல ஒலி
மணி பாதுகே த்வாம் -இரத்தின பாதுகா தேவியே உன்னை
ததேக நாமா நம நுஸ்மரந்தி-அதே ஆழ்வார் பெயரையே சொல்லி உன்னையும் அழைக்கிறார்கள் –

நம்மாழ்வார் உடைய ஆயிரம் பாக்கள் மிக இனிமையாக இருப்பது போலே
உன் சப்தமும் இனிமையாக இருப்பதாலேயே
நம்மாழ்வார் உடைய பெயராலேயே உன்னையும் நினைவில் வைத்து விட்டார்கள் –

பெரியோர்களுக்கு நம்மாழ்வாருடைய பாசுரம் மிக இன்பமாயிருக்கிறது.
அதே மாதிரியாகவே உன்னுடைய சப்தமிருக்கிறது.
உலகத்தில் ஒருவர் மாதிரி ஒருவர் பேசினால்
அவர் வரும் பொழுது அவரே வந்துவிட்டார் என்று சொல்வது வழக்கம்.
அதனால் நம்மாழ்வாருடைய பெயரை உனக்கு வைத்துவிட்டார்கள்.

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆத்மஸ்வரூபம் என்ன என்பதை உணர்ந்தவர்களுக்கு
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மிகவும் இன்பமாக உள்ளது.
இது போன்று அவர்களுக்கு நம்பெருமாள் நடக்கும் போது எழும் உனது ஓசையும் இனிமையாக உள்ளது.
ஆகவே ஒரே போன்ற சப்தம் உடைய உனக்கு நம்மாழ்வாரின் பெயரையே வைத்தனர்.

இந்த உலகில் ஒருவரைப் போன்று மற்றொருவருக்குக் குரல் இருந்தால்,
ஒருவர் பேசும்போது மற்றவர் வந்துவிட்டார் என நினைப்பார்கள்.
அது போன்று நீ வரும்போது எழும் நாதம் கேட்ட பலரும், நம்மாழ்வார் வந்துவிட்டதாகவே எண்ணினர்.
எனவே உன்னையும் அவராகவே பெயரிட்டு அழைத்தனர்.

இவ்விதமாக நீயும் நம்மாழ்வாரும் ஒன்றே என நினைப்பவர்கள் செய்வது என்ன?
நம்பெருமாள் ஸஞ்சாரம் செய்யும்போது எழும்பும் உனது ஒலியைக் கேட்டால்,
திருவாய்மொழியின் ஓசையைக் கேட்டது போன்றே எண்ணுகின்றனர்.
திருவாய்மொழியின் ஓசையைக் கேட்கும்போது, உனது நாதத்தையே அதில் கேட்கின்றனர்.

அமுதம் போன்ற நாதமும் திருவாய் மொழி அமுதம் ஒற்றுமை இதில்

————————————————————————-

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம்
சேஷத்வ காஷ்டாம பஜன் முராரே
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ
லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி –26-

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன் முராரே –எந்த ஆழ்வார் -முரனை வதைத்த
அவனது சேஷத்வ எல்லை நிலத்தில் அடைந்தாரோ
அடியார் அடியார் தம் அடியார் –பயிலும் சுடர் ஒளி –
ப்ருத்ய ப்ருத்ய -முகுந்த மாலையிலும் உண்டே -இப்படி எட்டாவது படியில் இருக்கும் ஆழ்வாரை
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி-அந்த நம்மாழ்வார் பெயரைத் தாங்கி –
தொண்டர் தலைவன் பெயரைத் தங்குவது போல் –
உன்னாலே -இவரை வென்று -சடகோப தாசன் -என்று ஒன்பதாவது படிக்குச் சென்றாயே –

அடியார் அடியார் –அடியேன் என்று ஆழ்வார் சாதித்தார் –
அவர் திருநாமம் வகித்துக் கொண்டு
அவரைக் காட்டிலும் ஜெயித்து நீ மேலும் ஒருபடி சென்று விட்டாய் –
நம்மாழ்வார் திருநாமம் வைத்துக் கொண்டு அவருக்கும் தாசன் என்று காட்டி அருளினாய் என்றபடி –

ஏ பாதுகையே ! நம்மாழ்வார் பெருமாளுடைய பக்தர்கள் வரிசையில் நான் எட்டாவதாயிருக்கிறேன் என்று ஸாதித்தார்.
அவ் விஷயத்தில் அவரை ஜயிப்பதற்காகவே அவர் பெயரை நீ வஹித்துக் கொண்டு ஒன்பதாவதாய் ஆகிவிட்டாய்.
ஒருவரின் பெயரை ஒருவர் வைத்துக் கொள்வது அவருக்குத் தாஸன் என்பதைக் காண்பிக்கும் என்பது சாஸ்த்திர ஸித்தம்.

சேஷத்வ காஷ்டையில் மூழ்கிய ஒற்றுமை இதில்

——————————————————————————

சய்யாத்மநா மதுரி போரசி சேஷ பூதா
பாதாஸ் ரயேண ச புன த்வி குணீ க்ருதம் தத்
பூயோ அபி பாகவத சேஷ தயா ததேவ
வயங்க்தும் பதாவநி சடாரி பதம் பிபர்ஷி –27-

சய்யாத்மநா மதுரி போர் அசி சேஷ பூதா -மதுவை வென்ற அவனுக்கு சேஷ பூதா ஸ்தானம் முதலில் அடைந்து -ஆதி சேஷனாகி
பாதாஸ்ரயேண ச புன த்வி குணீ க்ருதம் தத் -மீண்டும் -திருப்பாதங்களை அடைந்து -இரண்டு -இரட்டிப்பாகி –
ஆதி சேஷன் ஓன்று தானே –
திருவடிக்கீழ் குற்றேவல் திரு மேனிக்கு விட இரட்டிப்பாகும்
இரட்டை பாதுகை –
ஆனாலும் முழுமை ஆவதற்காகவே ததீய சேஷத்வம்
பூயோ அபி பாகவத சேஷ தயா ததேவ -மேலும் மீண்டும் பூர்த்தி ஆவதற்காகவே
வயங்க்தும் பதாவநி சடாரி பதம் பிபர்ஷி -நம்மாழ்வார் திரு நாமத்தைத் தாங்கிக் கொண்டாய் –
அதன் மூலம் அடிமைத்தனத்தின் எல்லை நிலம் அடைந்தாய் –

ஸ்ரீ பாதுகையே -முதலில் படுக்கையாக இருந்து எளிமையாக கைங்கர்யம் செய்யும் பாவத்துடன்
பாதுகையாய் திருவடியைப் பற்றினாய் –
அதனால் சேஷத்வம் இரட்டிப்பாய் ஆனதே –
மேலும் பாகவதர்களுக்கும் ஆட்செய்யக் கருதி நம்மாழ்வார் திருநாமம் வைத்துக் கொண்டாய் –

ஏ பாதுகையே நீ பெருமாளுக்குப் படுக்கையாயிருந்து தாஸனானாய்.
இன்னும் தணிந்து கைங்கர்யம் செய்ய வேண்டுமென்று பாதுகையனாய்.
இதுவும் போராது பாகவதர்களுக்கு தணிந்திருக்க வேண்டுமென்று எண்ணியே
ஆழ்வாருடைய பெயரை வைத்துக் கொண்டாய்.

அடியார்க்கு அடிமை -இரண்டு திருவாய் மொழிகள் உண்டே -கீழே பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை -ததீய சேஷத்வம் -உறுமோ பாவியேனுக்கு -ஆகவே இரண்டு ஸ்லோகங்கள் இதிலும் –

———————————————————————

பத்யேன தேவி சடகோப முநிஸ் தவாஸீத்
தஸ்யாபி நாம வஹநான் மணி பாதுகே த்வம்
சேஷீ பபூவ யுவயோர் அபி சேஷ சாயீ
சேஷம் த்வ சேஷம் அபி சேஷ பதே ஸ்திதம் வ –28-

பரஸ்பர அடிமை -இருவரும் –
பெருமாள் -பாதுகை -நம்மாழ்வார் -மூவரையும் சேஷிகளாகக் கொண்டோமே
பத்யேன தேவி சடகோப முநிஸ் தவாஸீத்-பத்யம் -கவிகளாலே -உன்னுடைய தொண்டரானார்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -முதலிலே தொண்டர் ஆனார்
தஸ்யாபி நாம வஹநான் மணி பாதுகே த்வம் -நீ அவர் பெயரை சூட்டிக் கொண்டு அவருக்கு அடியார் ஆனாயே
பரஸ்பர நீச பாவம்
சேஷீ பபூவ யுவயோர் அபி சேஷ சாயீ -தலைவனான அவன் உங்கள் -இருவருக்கும்-
பெரிய பெருமாள் அணுக்கத் தொண்டர்களாக்கிக் கொண்டு மகிழ்ந்து
சேஷம் த்வ சேஷம் அபி சேஷ பதே ஸ்திதம் வ -மூவரைத் தவிர அசேஷமான ஸமஸ்த வஸ்துக்களும் –
அங்கு ஏதும் சோராமல் ஆள்கின்ற எம்பெருமான் -மூவரும் -ஆனீர்களே

ஸ்ரீ பாதுகையே உன்னைப் பற்றி அருளிச் செய்து உனக்கு சேஷி ஆனார் நம்மாழ்வார் –
அவர் உடைய திருநாமம் வகித்து நீ அவருக்கு சேஷம் ஆனாய் –
உங்கள் இருவருக்கும் ஸ்வாமி எம்பெருமான் –
நீங்கள் மூவரும் மற்ற எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமிகள் ஆகிறீர்கள் –
சர்வ சேஷியான எம்பெருமானை சேஷ பூதர்கள் ஸ்ரீ பாதுகை மற்றும் நம்மாழ்வார் பலம் கொண்டு தானே அடைகிறார்கள் –

உன்னைப்பற்றி நம்மாழ்வார் பாடினார்.
அதனால் அவர் உனக்குக் கீழ்ப் பட்டிருந்தவராக ஆனார்,
நீ அவர் பெயரை வஹித்துக் கொண்டதினால் அவருக்குக் கீழ் படிந்தாய்.
உங்களிருவருக்கும் பெருமாள் எஜமானர்.
நீங்கள் மூன்று பெயரும் (பெருமாள், நம்மாழ்வார், பாதுகை) மற்ற வுலகங்களுக்கெல்லாம் யஜமானர்களாக ஆகின்றீர்கள்.
பெருமாள் எல்லோருக்கும் யஜமானர்.
பெருமாளைச் சேர்ந்தவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தாழ்வுமுயர்த்தியுமுண்டு.

———————————————————————-

விந்த்யச்தம் பாத விஹதக தேர் விஷ்வகா சாந்த சிந்தோ
கும்பீ ஸூ நோர ஸூரக பளக்ராசின ச்வைர பாஷா
நித்யம் ஜாதா சடரி புத நோர் நிஷ்பதன்நீ முகாத் தே
ப்ராசீ நா நாம் ஸ்ருதி பரிஷதாம் பாதுகே பூர்வ கண்யா –29-

விந்த்ய ஸ்தம்பத் -விந்திய மலையை
அவிஹத கதேர் -தாண்டி வரும் வலிமை
விஷ்வக் ஆகாசந்த சிந்தோ -கடல் நீரை ஆசமனம் செய்து
கும்பீ ஸூ நோர -கூட முனிவர் அகஸ்தியர்
அஸூர கபள க்ராசின -வாதாபி உண்டு அழித்து
ஸ்வைர பாஷா -பிடித்த தமிழ் -வண் தமிழ் மா முனி -ராமர் காலத்திலேயே உண்டே
நித்யம் ஜாதா சடரி புத நோர் நிஷ்பதன்நீ முகாத் தே -உன்னுடைய அவதாரமான நம்மாழ்வார் திரு வாக்கில்
வெளிவந்து நித்யத் தன்மை பெற்றது -அனைவரும் அறியும்படி
ப்ராசீ நா நாம் ஸ்ருதி பரிஷதாம் பாதுகே பூர்வ கண்யா -அநாதி யான ஸ்ருதி வேதக் கூட்டங்களுக்கும் முன்னே செல்லும் பெருமையும் பெற்றதே –

தடையாக இருந்த விந்தய மலையை அடக்கி கடலை ஆசமனம் செய்து வாதாபி என்ற அசுரனை
புஜித்து ஜீரணித்து அதிசயங்கள் புரிந்த அகஸ்த்ய மகர்ஷி தமிழ் மொழியைக் கொண்டாடி வளர்த்தார்
நம்மாழ்வாராக திருவவதரித்த உன் வாக்கினால் தமிழ் வேதம் இயற்றப் பட்டு தமிழ் மொழி விசேஷ கௌரவம் பெற்றதே –
ஆகவே வடமொழி வேதங்களுக்கும் முன் செல்லும் பேறு பெற்றதே தமிழ் வேதம் -இது தான் முக்கியம்

பாதுகையே! தமிழ் பாஷையானது நித்யமாய் இருக்கிறது. அகஸ்தியரென்ற் மஹரிஷிக்கு மிகவும் இஷ்டமானது.
அப்படியிருந்தும் அப்பாஷைக்கு விசேஷ கவுரமில்லாமலிருந்தது. நீ ஆழ்வாராக அவதரித்து உன்னுடைய முகத்திலிருந்து
திருவாய்மொழியாக வெளிப்பட்டபடியால் வேதத்துக்கு மேலே கெளரவமேற்பட்டது.
அகஸ்தியர் விந்தியமென்ற மலையை அடக்கினார். ஸமுத்திரத்தை ஆசமனம் செய்தார்.
வாதாபி என்ற அஸுரனைப் புஜித்து ஜரிக்கப் பண்ணினவர். இன்னும் அனேகம் ஆச்சரியமான காரியத்தைச் செய்தார்.

பாதுகை ஆழ்வாருக்கு அனுக்ரஹம்
ஆழ்வார் அகஸ்தியர் மொழிக்கு அனுக்ரஹம்
இவ்வாறு ஒற்றுமை இதில்

—————————————————————-

சடகோப இதி சமாக்யா தவ ரங்க துரீண பாதுகே யுக்தா
ஸூதே சஹஸ்ர மேவம் ஸூக்தீ ஸ்வயமேவ யந் மயா பவதீ -30-

சடகோப இதி சமாக்யா-பெயரும் -புகழும் -அறியப்படும் தன்மைகள்
தவ ரங்க துரீண பாதுகே யுக்தா -உனக்கும் பொருந்தும்
ஸூதே சஹஸ்ர மேவம் ஸூக்தீ –ஆயிரம் திருவாய் மொழி ஆழ்வார் அருளிச் செய்தது போல்
ஸ்வயமேவ யந் மயா பவதீ-நீயும் என்னைக்கொண்டு என் மூலம் உருவாக்கி -இவ்வாறு ஒற்றுமை இதில் –

ஸ்ரீ பாதுகை -சடகோபன் என்கிற திரு நாமம் உனக்குச் சாலப் பொருந்தும்
நம்மாழ்வார் எம்பெருமானை ஆயிரம் பாசுரங்களால் ஸ்துதித்து தமிழ் வேதம் அருளிச் செய்தார் –
இந்த காரணத்தாலே தானோ நீயும் என்னைக் கொண்டு ஆயிரம் ஸ்லோகங்கள் செய்து அருள்கின்றாய் –

ஏ பாதுகையே! நம்மாழ்வார் பெருமாளைப் பற்றி ஆயிரம் பாசுரம் பாடினார்.
நீ என்னைக் கொண்டு ஆயிரம் ஸ்லோகங்கள் பண்ணுகிறாய்.
ஆகையால் அந்தப் பெயர் உனக்குத் தகும்.
இந்தப் பெயர் வருவதற்குத் தான் லக்ஷம் ஸ்லோகம் பண்ணும் படி நியமிக்கவில்லை.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading