ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –
ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப்பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –
உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –
ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்
அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –
ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலே பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்
இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –
இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –
இந்த ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய்ப் போகாமே சர்வாதிகாரமாம் படி
த்ராவிடமான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிற பக்தியாலே வாசிதமாக்கி
மரங்களும் இரங்கும் வகை -திருவாய் மொழி -6-5-9-என்கிற
தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உத்பாதகம் ஆழ்வார் திருவடிகள் ஆகையாலும்
இவர் திருவடிகளிலே விழுகிறார் –
எத்திறம் -திருவாய்மொழி -1-3-1- என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -திருவாய்மொழி -5-10-3- என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1- -என்றும்
பெரிய முதலியாரையும்
ஸ்ரீ பராசர பகவானையும் போலே
கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து
ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-
மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெருகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அஸூத்திகளையும் மதியாதே
பால்ய தசையிலே ஆதரித்து
பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து
அகல இசையாதே
அவன் பிரியத்தையே வேண்டும் –
மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –
பிதா –
அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி
உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்
யுவதயஸ் –
இருவரையும் மறந்து விரும்பும்
யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை
தனயா –
அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய்
பக்வ தசையில் ரஷகனாய்
ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் –
புத்ரனைப் போல் இருக்கை –
விபூதி –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே
இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –
சர்வம் –
அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –
யதேவ –
அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8-
என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –
நியமேன –
என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய
ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –
மதநவ்யாநாம் –
வித்யயா ஜந்ம நா வா –என்று ஸூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த ஹனுமான் –
உபய சந்தான ஜாதருக்கும்
ஆத்யஸ்ய –
வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை –
ந குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –
வகுளாபி ராமம் –
திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை –
மகிழ் அலங்காரமான திருவடிகள்
இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –
நல்லடி மேல் அணி நறு துழாயை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –
ஸ்ரீ மத –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –
அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாத க்ரோதா விபீஷண
அந்தரிஷ கதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் -யுத்த -16-17-
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-
சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத
லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-என்று
பகவத் பிரத்யாசத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்
ததங்க்ரி யுகளம் –
அது -என்னும் அத்தனை ஒழிய
பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –
யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –
ப்ரணமாமி மூர்த்நா –
ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே
நம -என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –
கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது
முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும்
என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று
ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்
ஸ்ருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்
ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை
அதவா
நிருபாதி சேஷி அவன்
தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான
ஜ்ஞான பக்த்யாதிகள்
பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-
முதல் மூன்று ஸ்லோகத்தாலே
பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே -இவ் வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது –
வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –
ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –
மத் அன்வயாநாம் யதேவ நியமேன
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று
அந்வயம் –
(ஆத்யஸ்ய ந குலபதே-எங்கள் பிரபன்ன குடித் தலைவர் -விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசார்ய போதாய நாதிகள்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
ஆத்யஸ்ய ந குலபதே–ஸ்ரீ லஷ்மி நாதனை சொல்லி -ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம்-ஸ்ரீ சடகோபரை சொல்லிற்று என்றுமாம் –
நம்மாழ்வாரை சொல்லுவதே உசிதம் என்பது பூர்வர்கள் திரு உள்ளம் –
மத் அன்வயாநாம்-இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும்
ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று -வகுளாபி ராமம்–மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)
———-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்
ஸ்ரீ ப்ரஹ்ம ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய் போகாமே சர்வாதிகரமாம் படி த்ராமிடியான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் -என்கிற பக்தியாலே வாசிகமாக்கி
மரங்களும் இரங்கும் வகை என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உபாதானம் ஆழ்வார் ஆகையாலும் அவர் திருவடிகளிலே விழுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே கிருஷ்ண வித்தராய் இருக்கும் படியையும் நினைந்தது ஆழ்வார் திருவடிகளில் சரணம் புகுகிறார்
—————————————————————————————————————————————–
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா —
மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெறுகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அசூத்திகளையும் மதியாதே பால்ய தசையில் ஆதரித்து வளர்த்து
பக்வனானால் பின்பு ப்ருஷபாஷணம் பண்ணினாலும் அவற்றைப் பொறுத்து
அகல இசையாதே
இவன் பிரியத்தையே வேண்டி இருக்கும் மாதாவைப் போலே உபகாரராய் இருக்கை –
பிதா –
அவள் பாத்ரமாத்ரம் என்னும்படி உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹிதைஷியான பிதா பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
கரியான் ப்ரஹ்மத பிதா –
யுவதயஸ் –
இவ் விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே
நெஞ்சுக்கு இனியராய் இருக்கை –
தனயா-
அவர்களுடைய யௌவனத்தை அழிய மாறி பெற்றவராய்
பால்யத்தில் ஸூக கரராய்
பக்வ தசையில் ரஷகராய்
நிரய நிஸ்தாரகரான புத்ரர் பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
விபூதிஸ் –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமம் ஆகையாலே
இவை எல்லா வற்றையும் நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யராய் இருக்குமவர் -என்கை –
சர்வம்-
அனுக்தமான சர்வ ஐஹிகங்களுமாய் இருக்கை –
அதாவது மோஷ உபாயமும்
முக்த ப்ராப்யமும் –
யதேவ —
அவதாரணத்தால்-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -என்று இருக்கும் ஆழ்வார் நினைவுக்கே –
நியமேன –
என்றும் ஒக்க –
அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும்
புறம்பு போகக் கடவது அன்றிக்கே இருக்கை –
மத் அந்வயாநாம் –
வித்யயா ஜன்மனா வா -என்ற உபய சந்தான ஜாதர்க்கு –
ஆத்யஸ்ய ந –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர் -என்கை –
குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷியும் அவரே –
வகுளாபிராமம் –
திரு மகிழ் மாலையால் அலங்க்ருதமாய் உள்ளத்தை
இத்தால் -திருவடிகளில் பரிமளத்தால் வந்த போக்யதையை சொல்லுகிறது
திருத் துழாயால் அலங்க்ருதமான பகவத் சரணார விந்தங்களை வ்யாவர்த்திக்கிறது –
நல்லடி மேலணி நாறு துழாய் –
ஸ்ரீ மத் –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் நித்ய சம்யுக்தமாயிருக்கை
அந்தரீஷகத ஸ்ரீ மான்
ச து நாகவரஸ் ஸ்ரீ மான்
என்று பகவத் ப்ரத்யா சத்தியை ஐஸ்வர் யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு ஊற்றான ஐஸ்வர் யத்தை யுடையவர் என்னவுமாம் –
தத் அங்க்ரி யுகளம் –
அது என்னுமது ஒழிய பேசி முடிய ஒண்ணாது -என்கை
யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை யுடைத்தாய் இருக்கை –
ப்ரணமாமி மூர்த்நா —
ஆழ்வார் உடைய படிகளை நினைத்தவாறே
நம-என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளில் தலையை சேர்க்கிறார் –
கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது ஆயிற்று –
முமுஷூவுக்கு உபகாரகர் சேஷித்வ பிரதிபத்தி விஷய பூதரும் ஸ்துத்யரும் என்னும் இடம் சொல்லுகிறது
ஒருவனுக்கு சேஷிகள் இருவராம்படி எங்கனே என்னில் –
க்ருதி சேஷித்வம் யாகாதிகளுக்கும் புரோடாசாதிகளுக்கும் உண்டாமா போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்-பாகவதர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை –
அதவா –
ஈஸ்வரன் நிருபாதிக சேஷியாய் -தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையால் பாகவத சேஷத்வம் ஒவ்பாதிகம் -என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான பக்த்யாதிகள் பிதா மஹோபாத்த தனம் –என்கைக்காக
முதலிலே பெரிய முதலியாருடைய ஜ்ஞான பக்திகள் உடைய ஆதிக்யம் சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே –இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தாநுமதம் -என்கிறது –
அஞ்சாம் ஸ்லோகத்தாலே இந்த ஜ்ஞானம் இவர்க்கு ஆழ்வாரால் வந்தது என்கை –
———————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply