திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு–6-6-

கீழ் திருவாய் மொழி தோழி பாசுரமாக சென்றது
இத் திருவாய் மொழி தாய் பாசுரமாக செல்லா நின்றது
சங்கை இழந்தாள்
மாமை நிறம் இழந்தாள்
சாயை இழந்தாள்
மாண்பு இழந்தாள்
கற்பு இழந்தாள்
கட்டு இழந்தாள்
இத்தால்பகவத் விஷயத்தில் பிராவண்யம் அதிகரித்த படியையும்
அபெஷிதமான சம்ச்லேஷம் கிடையாமல் மேனி மெலிந்த படியையும்
கட்டுக்கு அடங்காமையும்
ஆகிய இவை சொல்லப் பட்டன –

கீழ் நாலாம் பத்தில் -யெராலும் இறையோனும் -திருவாய் மொழியில்
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -என்று
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறைவிலமே -என்றும்
ஆத்மாத்மீயங்கள் தாமே வேண்டாம் என்று உபேஷித்தார்
இதில் இப்போது இவை தன்னடையே கழிந்து செல்லுகிற படி சொல்கிறது

எம்பெருமான் உடைய ஒவ் ஒரு அவதார திவ்ய சேஷ்டிதங்களையும்
ஒவ் ஒரு திவ்ய கல்யாண குணங்களையும் நினைக்க நினைக்க
தாம் பரவசராய்
மேனி மெலிந்து
ஆவி நீராய் உருகுகின்றமையை
ஆழ்வார் அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் ஆயிற்று —

————————————————————————————————————————————————————————-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந்தாமரை கண்னற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்து சங்கே –6-6-1-

ஒவ் ஒரு விசேஷணங்களையும் நினைந்தது மகள் தளர்கின்றாள்
மால் -வ்யாமோஹம்
என் மகள் மாலுக்கு சங்கு இழந்தாள்
வையம் அளந்த மணாளற்கு சங்கு இழந்தாள் -சீல குணத்தை நினைந்து
நீலக் கருநிற மேக நியாயற்கு சங்கு இழந்தாள்
கோலச் செந்தாமரை கண்னற்கு சங்கு இழந்தாள் –
யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத் ஷநேன தன்வங்க்யா
கலிதானி புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தலிதாநி
மாலுக்கு -சமோஹம் சர்வ பூதேஷு கீதா ஸ்லோகத்துக்கு -கீதா பாஷ்யத்தில் -அஹம் அபி தேஷு மதுத் க்ருஷ்டேஷ்விவ வர்தே-வ்யாமோஹம் கொண்டுள்ளவன்
வையம் அளந்த மணாளற்கு –
மாவலி –கஸ் த்வம் ப்ரஹ்மன்-அந்தணா நீ யாவன்
பகவான் -அபூர்வ –
மாவலி -க்வ ச தவ வசதி -உன் இருப்பிடம் யாது
பகவான் -யா அகில ப்ரஹ்ம சிருஷ்டி -பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -என்றும்
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய் –
மாவலி -கஸ்தே த்ரேதா -நீ யாருடைய சம்ரஷணையில் இருக்கிறாய்
பகவான் -அநாத
மாவலி -க்வ ச தவ ஜனக -உன் தமப்பனார் எங்கே
பகவான் -நைவ தாதம் ஸ்மராமி
மாவலி -கிம் தே அபீஷ்டம் ததாமி
பகவான் -த்ரிபத பரிமிதா பூமி
மாவலி -அத்யல்பம் ஏதத்
சாதுர்யமான பேச்சு வடிவு அழகு –சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறி- நமுசியை வானில் சுழற்றிய விரோதி நிரசனம்
இவற்றில் ஈடுபட்டு-
நீலக் கருநிற மேக நியாயற்கு-வடிவு தன்மை
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -மேகம் போலே சென்று பொழிபவன்
பிராட்டி உடன் கூடி கிருபா ரசம் விஞ்சி மின்னல் உடன் கூடிய மேகம் போலே
வந்தாய் போல் வாராதே வாராதே போல் வருவான் -இன்ன காலம் மழை பொழியும் அறுதி இட முடியாதே
அபேஷா நிரபேஷமாக தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்டான்
கோலச் செந்தாமரை கண்னற்கு
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -என்றும்
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே -என்றும்
என் கொங்கலர் ஏலக் குழலி-வணக்கத்துடன் கூடிய தலை
பரிமளம் -பாகவத பர்யந்தம் இருக்கை
திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் -பாகவத பக்தி நிரம்பியவர் —

—————————————————————————————————————————————————————————————————————————————–

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணம் துழாய் முடியானுக்கு என்
மங்கை யிழந்தது மாமை நிறமே –6-6-2-

பாஹூ பிரணத ரஷாயாம் விலம்பம் அசஹந்நிவ சதா பஞ்சாயுதீம் பிப்ரத் சந ஸ்ரீ ரெங்க நாயக –
செங்கனி வாய் –
எந்தொண்டை வாய்ச் சிங்கம் வாவென்று எடுத்துக் கொண்டு
அந்தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இச் செந்தொண்டை வாய்-
என்றபடி ஆய்ச்சியர்கு எளிதான செங்கனி வாய் எனக்கு அரிதாக வேணுமோ
செய்ய தாமரை கண்ணற்கு
ஸ்ரமணீ விதுர ரிஷி பத்நீகளை பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு சாபம் இழிந்து என்னப் பண்ணும் இ றே -நாயனார்
என்னையும் பரி சுத்தப் படுத்தின இது பாதியில் அரை குறையாக நிற்க வேண்டுமோ
கொங்கலர் தண்ணம் துழாய் முடியானுக்கு-ரஷியாமல் இருந்தே வளையும் சாத்தி இருக்கலாமோ-

——————————————————————————————————————————————————————————————————————–

நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட
திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடி –6-6-3-

பீடு -பெருமை
நிறம் கரியானுக்கு -நான் உடம்பு வெளுத்து இருக்க குறி அழியாமல் பசகு பசகு என்று இருக்கிற அழகு என்னே –
நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச்-
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் -என்னை ரஷியாமல் ஒழிவதே
சிறுக் கள்வனவற்கு-
சிறிய வயிற்றிலே பெரிய லோகங்களை வைத்து
பரிச்சேதிக்க ஒண்ணாத சேஷ்டிதத்தை
யுடையவனுக்கு -ஈடு
சிறுக்கள்வன் அவற்கு-என்றும் பாடம் உண்டு
கறங்கிய சக்கரக் கையவனுக்கு-கையும் திரு வாழியுமான அழகைக் காட்டி
கொள்ளை கொண்ட பிரான் உபேஷித்து இருத்தல் தகுதியோ
அன்றிக்கே
காசீ விப்லோஷ சைத்ய ஷபண தரணி ஜத்வம்ச ஸூர்யாபிதானா க்ராஹ த்வேதாத்வ மாலித்ருடன-ஸூதர்சன சதகம்
காசீ தஹனம்
சிசுபால வதம்
நரகாசூர சம்ஹாரம்
ஜெயத்ரவதம்
சூர்யன் மறைத்து
முதலையை துணித்து
மாலியை மடித்து
என்னுடைய விரோதி நிரசனத்தில் வ்யாபரியாது இருத்தல் என்னோ -என்றுமாம்-

—————————————————————————————————————————————————————————————————

பீடுடை நான்முகனைப் படைத்தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை யல்குல் இழந்தது பண்பே –6-6-4-

பண்பு -இயற்கையான தன்மை
பீடுடை நான்முகனைப் படைத்தானுக்கு
நான்முகனை நாராயணன் படைத்தான்
யாம் கடவுள் என்று இருக்கும் எவ் வுலகில் கடவுளர்க்கும் ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பாமோ –
பரத்வம் காட்டி ஈடுபடுத்திக் கொண்டவன்
மாடுடை வையம் அளந்த மணாளற்கு –
உபேஷித்து இருந்தாரையும் தன்னடிக் கீழ் ஆக்கிக் கொண்டவன் அபி நிவேசம் உள்ள என்னை உபேஷித்து இருப்பதே
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு-தூது சென்றாய் குறு பாண்டவர்காய் –
இன்னார் தூதன் என நின்றாய்
தூதனாகி அவாப்த சமஸ்த காமன் ஆனாய் நம்பி குண பூரணன்
நாடுடைய ராஜாக்களான
பாண்டவர்களுக்குத் தூது போய்
அத்தாலே பூரணன் ஆனவனுக்கு -ஈடு
இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்
என்று ராஜ்ஜியம் பண்ணுகிறவர்கள் துரியோதனாதிகளாய் இருக்க
பாண்டவர்களை நாடுடை மன்னர் என்றது
பகவத் அபிப்ராயத்தாலே -ஈடு

——————————————————————————————————————————————————————————————————-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் அளந்த வராகற்கு
தெண் புனற்பள்ளிஎம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே -6-6-5-

கற்பு -கல்வி -அதாவது -ஞானம் -ஈடு -அறிவு இழந்தாள்
சங்கை -விபரீதம் -மறுப்பு -இல்லாமை
வேதத்துக்கு பண்பு உள்ளபடி எம்பெருமானை காட்டித் தருவது
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை –
இப்படி கண் இல்லாதார்க்கும் கொடுத்து அருளினவன் என்னுடையதையும் கொள்ளை கொண்டானே
பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே -நாயனார்
பண்புடை வேதம் என்று ஒழிய பண்புரை வேதம் என்ற பாடம் வியாக்யானங்களில் கண்டதில்லை எனினும்
ஆப்த தமரான இவர் இப்பிரபந்தத்தில் இப்படி அருளிச் செய்கையாலே இப்படியும் கொள்ள வேணும் -மணவாள மாமுனிகள்
பண்புரை வேதம் என்றது பண்ணைப் புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப்பன்னுக்கு ஆச்ரயமான வேதம் என்றபடி -மா முனிகளே வியாக்யானம் செய்து அருளி இருக்கிறார்
மண்புரை வையம் அளந்த வராகற்கு –
பாசி தூரத்துக் கிடந்த பார்மகட்கு பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் தேசுடைய தேவர்
தன்னை அழிய மாறி ஒருத்திக்கு செய்து அருளி -எனக்கு வடிவு கூட காட்டாதே இருப்பது என்
எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட வெந்தாய் உன்னை பெற்று இனிப் போக்குவனோ –
தெண் புனற்பள்ளி-
ஏகார்ணவத்தில் பள்ளி கொண்டு சங்கல்ப்பித்து சிருஷ்டி –
சத்தையே பிடித்து
உண்டாக்கி அறிவு கொடுக்கக் கடவ
அவன் கிடீர் உண்டான அறிவை
வாங்கிக் கொள்க்றான் -ஈடு
எம் தேவ பிரானுக்கு
பிரயோஜனாந்தர பரர்கள் அவனை தொழுது அவன் அழகை கண்டு இருக்காமல் தம் கார்யம் கொள்ள
ஸ்வயம் பிரயோஜனமாக தொழச் செய்தேயும் கருணை பிறக்க வில்லையே
கண் புனை கோதை
கண்டார் கண்ணைக் கவரும்படியான கூந்தல் அழகு-

—————————————————————————————————————————————————————————————————–

கற்பக காவன நற்பல தோளற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண் மலர்க்கையற்கு என்
விற்புருவக் கொடி தோற்றது மெய்யே –6-6-6-

சரீரம் தனது வசம் இல்லாமல் பரவசமாகப் பெற்றாள் என்கை
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – திருக்கைகள் -தோள்கள் ஆயிரத்தாய்
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈச தே பிசநயன் கில மௌலி –
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின் -கையைப் பிடிப்பதற்கு அன்றோ விலஷணமான
நல் பல தாமரை நாள் மலர்க்கை –
என் வில் புருவக் கொடி –
ஆழ்வார் புருவம் நெரித்த இடத்தே எம்பெருமான் கார்யம் செய்ய வேண்டும் படி இருக்கை
யத் ப்ரூபங்கா பிரமாணம்
ஆழ்வார் சம்பந்தம் உடையார் இடத்திலும் எம்பெருமான் விஷயீ காரம் செல்லும் படி இருக்கை –

—————————————————————————————————————————————————————————–

மெய்யமர் பல்கலன் நன்கு அணிந்தானுக்கு
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு
கையேடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே –6-6-7-

சாயை -ஒளி லாவண்யம் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன்வடமும்தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக –
இவை காட்டில் எறித்த நிலாவாகாதே சம்ச்லேஷிக்கைக்காக அன்றோ
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -ஒருவனையே எல்லாமாக கொள்ள வேண்டுமோ
என்னையும் சிறிது சேஷப்படுத்திக் கொண்டால் ஆகாதோ
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உள வாயிற்று நாண் யிலியேனுக்கே
கையேடு கால் செய்ய கண்ணபிரானுக்கு-நீல தடவரையிலே செந்தாமரை பூத்தால் போலே பச்சை மா மலை போன்ற திரு மேனிக்கு பரபாகமாக
திருக்கையும் திருக்கால்களும் விளங்கும் ஆச்சர்யமான அழகு கலக்கைக்கு என்று இருந்தேன்
அந்தோ அப்படி இல்லையே என்று தளர்கிறாள் –

————————————————————————————————————————————————————————————————————-

சாயக் குருத்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண்ட பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே –6-6-8-

மாட்சியை இழந்தாள்
குருந்திடைக் கூறை பணியாய்
குருந்து ஒசித்ததும்
மாயச் சகடனைஉதைத்ததையும்
பூதனையை பிணம் ஆக்கியதையும் –
இப்படி சிறுச் சேவகங்கள் பாடிப் பாடி நைகின்றாள் –

————————————————————————————————————————————————————————————————————–

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க்குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே –6-6-9-

மாண்பு -அழகு

பொற்பு அழகு இழந்தாள்
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன்னிவ் உலகினை முற்றும் அளந்தவன் –
க்ருத்திம் கிருஷ்ண ம்ருகச்ய வஷசி வஹன் ஆஷாட மாம் சேர்ப்பயன்
ச்வாத்யாயஸ் வர சம்பதா பரிஷதாம் ப்ரீதிம் சமுத்பாதயன் யாச்ஞாய பலி யஞ்ஞவாட
நிகடம் ப்ராப்தோ வடு பாது வ -என்னும் படி அழகு நினைந்து என் மகள் தன் அழகை அழிந்தாள்
அந்த அழகை காணாமல் ஸ்வராஜ்யம் வேணும் என்ற இந்தரனுக்கு கார்யம் செய்து அருளினவன் என்னை உபேஷிப்பதே-தளர்கின்றாள் –

——————————————————————————————————————————————————————————————————————–

பொற்பமை நீண் முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே–6-6-10-

கட்டு -ஸ்த்ரீத்வ மரியாதை -லஜ்ஜை அடக்கம் உடன் இருத்தல்
எல்லாம் என்றுமாம்
பல சொல்லி என் –இழவாதது உண்டோ -இழந்து எல்லாம் என்கிறாள்
பொற்பு -அழகு -அது அமைந்த திரு அபிஷேகத்தின் மேலே உள்ள திருத் துழாய் மாலை சாத்தி இருக்கும் அழகில் ஈடுபட்டு நைகின்றாள்
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு -திருமேனியில் பூசின சாந்து சிறிதும் குறி அழியாமல்
ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லரை சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் –
நிற்பன பல்லுருவாய் நிற்கும் மாயற்கு -அந்தர்யாமியாய் நிற்கச் செய்தே தோஷம் சிறிதும் தட்டாமல் இருக்கும்
ஆச்சர்யத்தில் ஈடுபட்டு நைகின்றாள்

————————————————————————————————————————————————————————————————————————-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனை
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11-

ஸ்வரூப அனுரூபமாக திவ்ய போகத்தை அனுபவிக்கப் பெறுவார்கள்

கீழ் மூன்றாம் பத்தில் -சொன்னால் விரோதத்தில் –
தென்னா தெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்று
அருளிச் செய்தவர் ஆகையால் இப்பத்தும் திருவேங்கட வாணனுக்கு என்னக் குறை இல்லையே – –

———————————————————————————————————————————————————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி –

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே யுண் –56-

——————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading