திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–கையார் சக்கரத்து–5-1-

திருமாலை நினையாமல் இருக்கும் சம்சாரிகள் படுகிற கிலேசங்களை நினைத்து நண்ணாதார் முறுவலிப்ப –
திருவாய் மொழியை அருளி
எம்பெருமான் உடைய பெருமையை உபதேசித்து அருள ஒன்றும் தேவும் -திருவாய்மொழி அருளி
உபதேசம் கெட்டு திருந்தினவர்கள் நிரம்பி இருக்கும் படியைக் கண்டு
பொலிக பொலிக பொலிக மங்களா சாசனம் பண்ணுவதாக இருக்கும் அளவிலே
தம்மைப் பற்றி சிறிது நினைத்துக் கொண்டு
நாமும் சம்சாரத்தில் இவர்களைப் போல் தோள் மாறி கிடவாதே
உபதேசம் பண்ணும்படியாயும் திருத்தும் படியாகவும்
எம்பெருமான் நிர்ஹேதுகமாக அருள் புரிந்தமையை அனுசந்தித்து
உள் குலைந்து அதனைப் பேசி அனுபவிக்கிறார்
சப்தாதி விஷயங்களில் மண்டிக் கிடக்க
பகவத் விஷயத்தையும் வாயால் சொல்லுபவன் போலே பாவனை செய்தேனே யல்லது
உள் கனிந்த ப்ரேமம் சிறிதும் உடையேன் அல்லேன்
அப்படி இருந்தும் க்ரித்ரிமமான அந்த உக்தி தன்னையே பற்றாசக் கொண்டு
எம்பெருமான் என்னை விஷயீ கரித்தவாறு என்னே -என்று ஆச்சர்யப் பட்டு அருளிச் செய்கிறார் –

——————————————————————————————————————————————————————————————–

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பாரார்
ஐயோ கண்ணபிரான் அறையோ வினிப் போனாலே –5-1-1-

சேர்த்தி அழகிலே ஈடுபட்டார் பாவனையில் பல காலும் கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே-சொன்னேன்
விதி வாய்க்கின்று காப்பாரார்
அருள் வெள்ளம் கரை உடைந்து பெருகப் புக்கால்
எம்பெருமான் தன்னாலும் அணை செய்ய முடியாது அன்றோ
உன்னாலும் விட்டுப் பேர முடியாது -வீர வாதம் செய்கிறார் அவன் இடம் நேராக
அறை கூவுதல் நாவலிடுதல்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன -என்ற உனக்கு என்னை விட்டு போக முடியாதே -இது திண்ணம்
இவன் நடுவே அடியான் என்ன
ஒலைப்படா பிரமாணம் பஷபாதி சாஷி
வன்களவில் அனுபவமாக இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள
காப்பார் அற்று விதி சூழ்ந்தது -நாயனார்
விதி -பகவத் கிருபை -தப்ப ஒண்ணாதது

——————————————————————————————————————————————————————————————————

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மா நிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே –5-1-2-

சில பொய்யுரைகளைச் சொல்ல
அவன் எனக்கு விதேயனாகி விட்டான்
அதுக்கும் மேலே
அவன் விபூதிகள் எல்லாம் என்னுள்ளே நடத்தும்படி யாயின –

——————————————————————————————————————————————————————-

உள்ளன மற்றுளவாப் புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே யுன்னையும் வஞ்சிக்கும்
கள்ளமனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத் தணைக் கிடந்தாய் இனி யுன்னை விட்டென் கொள்வனே -5-1-3-

ஔதார்யம் -வடிவு அழகு -குணங்களில் -ஈடுபட்டார் போலே
காலம் எல்லாம் பொய்யே கைம்மை சொல்லி
அது தவிர்ந்து கபடம் அற்ற பக்தி உடன் கூடிய பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேன்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியும் அப்பெருமானையும் வஞ்சிக்கும்படி
கள்ள மனம் கொண்டு இருந்தவன்
கள்ளமனம் தவிரப் பெற்று உஜ்ஜீவிக்க வல்லவன் ஆனேன்
வஞ்சக் கள்வன் மா மாயன் என்ற பிரசித்தி பெற்ற உன்னையும் வஞ்சிக்க வல்லவனாய் -உம்மைத் தொகை –

————————————————————————————————————————————————————————————–

என் கொள்வன் வுன்னை விட்டென்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ணநீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனதாவியை நீக்க கில்லேன்
என் கண் மலினமறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே –5-1-4-

முன்பு எல்லாம் பொய்யனாக போந்தது பிரகிருதி சம்பந்தத்தால் என்பதால் அத்தை போக்கி அருள வேணும்
அன்றிக்கே
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றார் அது மானஸ அனுபவம் மாத்ரமாய் இருந்தது
காட்சிக்கு பிறகு சம்ச்லேஷ ருசி பிறந்து கையை நீட்ட
அகப்படாமையாலே தளர்ந்து
இது தேக சம்பந்தம் அடியாக என்று உணர்ந்து
அத்தை நீக்கி உனது திருவடிகளில் அழைத்துக் கொண்டு அருள வேணும் என்கிறார்
அனுதபித்து வன் கள்வனேன் என்கிறார் -அவனுடைய ஆத்மவஸ்து -பிறர் நன் பொருள் திருடினேன்
மலினம் -பிரகிருதி சம்பந்தம் –

என்கொள்வன்-இத்யாதி –
ஸ்வரூப அனுரூபமான பாசுரத்தை வாயாலே சொல்லி நிற்கச் செய்தேயும்
வன் கள்வனேன்
உத்தேச்ய வஸ்துவை கடுக லபிக்க பெறாத இன்னாப்பாலே மகா பாபி என்னுமா போலே சொல்லுகிறார் –
மனத்தை வலித்து -இத்யாதி
பக்தி பாரவச்யத்தாலே சிதிலமாகிற மனசை திண்ணியதாக்கி
தன் கேழில் ஒண் கண்ணநீர் கொண்டாள் -என்கிற கண்னநீரையும் மாற்றி
நின் கண் நெருங்க வைத்தே
காலாழும் நெஞ்சு அழியும் -என்கிறபடியே
உன்னைக் கிட்டினவாறே உடைகுலைப் படுகிற மனஸை தரித்து நின்று
உன்னை அனுசந்திக்கும்படி பண்ணி
இச் சரீரத்தில் நின்றும் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்க ஷமன் ஆகிறிலேன் -ஈடு

—————————————————————————————————————————————————————————————————–

கண்ணபிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை யமுதை
நண்ணியும் நண்ணி கில்லேன் நடுவே யோருடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே –5-1-5-

மலினம் -என்று பிரஸ்தாபிக்க பட்ட பிரகிருதி சம்பந்தம் விளக்கி அருளுகிறார்
அத்தைப் பேசுமுன் நெஞ்சு குளிர பகவத் விஷயத்தை –
விண்ணோர் கரு மாணிக்கத்தை–யமுதை–கண்ணபிரானை என்று பேசுகிறார்
ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
சர்வ போக்யனாம் படி வந்து
ஸ்ரீ வசூதேவ க்ருஹே அவதீர்ணனான உன்னை -ஆராயிரப்படி
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே
ஆங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து –
விண்ணோர் களை வஞ்சித்து
கண்ணபிரானாக திருவவதரித்து
அதிமாநுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷ சாமான்யகாரமாக காட்டி அருளி
ஆராவமுதமாய் இருக்கும் எம்பிரானை –
ஞான லாபம் பெற்றது -நண்ணியும்
சரீர சம்பந்தம் உடன் இருக்கும் இருப்பை -நண்ண கில்லேன் -நடுவே ஓர் உடம்பில் இட்டு –
நடுவே அழுக்கு உடம்பு அனுபவ விரோதியாய் உள்ளதே –

தோலை மேவி கைப்பாணி இட்டு
மெழுக்கு வாசியாலே பிரமிக்கும்படி பண்ணின இத்தனை ஒழிய
அகவாய் புறவாய்ஆகிற்றாகில் காக்கைநோக்கிப் பணி போரும் இத்தனை –ஈடு

தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு உடல் -பிள்ளைப் பிள்ளை ஐயங்கார்

எதி நாமச்ய காயஸ்ய யதந்தஸ் தத் பஹிர் பவேத்
தண்டமாதாய லோகோயம் சுன காகாம்ச ச வாரயேத்

———————————————————————————————————————————————————————————————————

புறமறக் கட்டிக் கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன்
நிற முடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே –5-1-6-

இழவு தீரும் படி வடிவு அழகைக் காட்டி அருளினான்
இவரை மெய் மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு
தன் உடம்பை மறந்து
மகிழ்ந்து
நிற முடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே
கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்கிறார்
முந்துற முன்னம் தோள்களால் அணைத்தார் -நிற முடை நால் தடம் தோள்
உடனே சில அமுத மொழிகள் பேசத் தொடங்கினான் -செய்ய வாய்
உடனே குளிரக் கடாஷித்து அருள -செய்ய தாமரைக் கண்
இன்னார் என்று அறியேன் அன்னே யாழியோடும்
பொன்னார் சார்ங்கம் உடைய வடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
மதி மயக்க வல்ல திவ்யாயுதங்களை காட்டி அருளி
திருமேனியை முற்றூட்டாக காட்டி அருள -அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே-என்கிறார்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கிட செங்கோல் நடாவுதிர் என்கிறபடியே
லோக ரஷணம் தர்மம் நடத்துகையால் அற முயலாழி -என்கிறார் –

———————————————————————————————————————————————————————————————————–

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார்
எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே
மெய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே –5-1-7-

பிற்காலிக்க வேண்டி இருக்கச் செய்தே கிருபைரசம் கரை அழிய பெருகினபடியால் ஒரு நீராய் கலக்க நேரிட்டது –
ஆழிப்பிரான் -திருவாழி திருக்கையில் கொண்ட உபகாரகன்
திருப்பாற் கடல் பள்ளி கொண்ட பிரான்
நிஷர்தாநாம் நேதா கபிகுலபதி காபி சபரி குசேல குப்ஜா சா வ்ரஜ யுவதயோ மால்யக்ருததி
அமீஷாம் நிம்நத்வம் வ்ருஷகிரி பதேருன் நதிமபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரபை மனுகம்பே சமபசி -தயா சதகம்
மேடுபள்ளம் நிரவப் பெறுமே
அரை குலைய தலை குலைய திரு நாட்டில் இருந்து களிறு நீர்ப் புழுவால் வாதிப்புண்டாய்
பெண்ணுலாம் சடையினானும் –ஆனைக்கு அன்று அருளை ஈந்த
ஸ்ரக் பூஷாம் பரம யதாயதம் ததான திங்மாமித் யநு கஜ கர்ஜமாஜா கந்த –
கைம்மா துன்பு ஒழித்தாய் –
நெஞ்சு கனிந்து மெய்யுடையார் சொல்லும் சொல்லை கபட புத்தியுடன் சொல்ல
அதுவே மெய்யான பக்தியாக பரிணமித்து
எம்பெருமான் உடைய விஷயீ காரம் பெற்று விட்டேன்

————————————————————————————————————————————————————————————–

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்தின நாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணி யாரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே யினி யாவாரே –5-1-8-

பரம விலஷணர் தன்னை அனுபவிக்கச் செய்தே -நித்ய சூரிகள் -பிராமணர்
இளைய பெருமாளும் வலக்கை இடக்கை அறியாத குரங்குகளும் ஒக்க
அடிமை செய்தால் போலே இரண்டு விபூதியில் உள்ளாறும் ஒரு மிடறாக சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகன் -ஈடு
மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் -திருப்பாற் கடலையும் பெரிய பிராட்டியாரையும் விட்டு
நித்ய சம்சாரியான என் நெஞ்சிலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தனன் –
ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதா ச மம ராகவா -போலே
சகலவித பந்துவும் அவனே
சேலே ய்-செல் மீன் ஏய்ந்த மீன் போன்ற கண்கள் உடைய ஸ்திரீகள்
எம்பெருமானைப் பற்றி நின்று எல்லா வகை இன்பங்களையும் பெற்று நின்றேன்

————————————————————————————————————————————————————————————–

ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க
தேவர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆவா வென்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே –5-1-9-

கிலேசங்கள் எல்லாம் தீர அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகத்தோடே வந்து என்னுடன் கலந்தான்
நாவாய் –கப்பலையும் கப்பலில் உள்ளாரையும்
அழுந்துகின்ற கப்பல் போலே -உணர்வு இல்லாத ஜடம் போலே
தேவர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆவா வென்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே
திவ்ய ஆயுதங்கள் உடன் சேர்ந்தால் போலே
என்னுடன் பொருந்தினான்
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று இவர் அபேஷித்தபடியே
கையும் திருவாழியுமான கோலத்துடன் வந்து கலந்தான் -என்று எம்பெருமானார் நிர்வஹிப்பாராம் –

————————————————————————————————————————————————————————————————–

ஆனானாளுடையான் என்று அக்தே கொண்டு உகந்து வந்து
தானே யின்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்
கானாரேனமுமாய்க் கற்கியாமின்னம் கார் வண்ணனே –5-1-10-

எம்பெருமான் என்னை ஆட்கொண்டான் என்ற அக்தே கொண்டு
அவன் பக்கல் க்ருதஞ்ஞ்ச அனுசந்தானம் பண்ண
அவன் போரத் திரு உள்ளம் உகந்து
அதிகமான சம்ச்லேஷம் என்னிடத்தில் பண்ணி அருளினான்
தனது பேறாக கிருபையைப் பண்ணி அருளி கலந்தான்
என்னை முற்றவும் தானானான்-உள்ளோடு புறம்போடு வாசி அறக் கலந்தான் -அன்றிக்கே
எனக்கு சகல வித போக்யமும் ஆனான்
திருவவதாரங்களைஅருளி செய்து ஆட்கொள்ள வழி வகுத்தவனும் அவனே
இன்னம் கார் வண்ணனே
இன்னும் மேலே மேலே திரு வவதரிக்க திரு உள்ளம் பற்றின படி –

———————————————————————————————————————————————————————————————————-

கார்வண்ணன் கண்ணபிரான் கமலத் தடம் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை யாயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடிக் கீழ் புகுவார் பொலிந்தே –5-1-11-

ஏர்களின் மிகுதியை உடைய அழகிய கழனிகள் உடைய திருநகரி
எம்பெருமானாரைப் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மிக்கவர்களாய் கொண்டு
தாய் நிழலில் ஒதுங்குவாரைப் போலே எம்பெருமான் திருவடிக் கீழ் புகுவர்
ஆர் வண்ணத்தால் -நெஞ்சு கனிந்து –அம்ருத பானம் பண்ணுவாரைப் போலே
ஸூ க்திம் சமக்ரயது —யாம் கண்டூல கர்ண குஹரா -கவயோ -பட்டர் –ஸ்ரீ குணரத்ன கோசம்

———————————————————————————————————————————————————————

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-1-1-சக்ரஸ் பாயாத் கரத்வாத் -கையார் சக்கரத்து
5-1-2-ஸ்வ ஜன வசதயா–தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
5-1-3-ரஷண உத்யுக்த பாவாத் -வெள்ளத் தணைக் கிடந்தாய்
5-1-4-பவ்யத்வாத் -கூவி யருளாய் கண்ணனே
5-1-5-ஸ்வாத் மதா நாத் -கண்ணபிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை யமுதை
5-1-6-அமலதநுதயா -கரு மேனி அம்மான் தன்னையே
5-1-7-ஸ்ரீ கஜேந்த்ராவ நாச்ச -கைம்மா துன்பு ஒழித்தாய் என்று
5-1-8-நாநா பந்துத்வ யோகாத் -சேலேய் கண்ணியரும் -இத்யாதி
5-1-9-விபதி சகி தயா -ஆவாரார் துணை- இத்யாதி
5-1-10-வ்யாஜ மாத்ராபி லாஷாத் -ஆனானாளுடையான் என்று அக்தே கொண்டு உகந்து வந்து-

——————————————————————————————————————————————————————————————-

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு-மெய்யான
பேற்றை யுபகரித்த பேரருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து –51-

புறனுரை வெற்றுரை
புறனுரையே யாயினும் -முதல் திருவந்தாதி – 41
பழிச் சொல் என்றுமாம்
இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன் -பெரிய திருமொழி -6-4-7-

—————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading