அலம் புரிந்த நெடும் தடக் கை அமரர் வேந்தன்
அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் படி
நிலம் பரந்து வரும் கல் உழி பெண்ணை ஈர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வெளிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே !–6
திரி விக்கிரம அவதாரம் யுகம் ஸ்தலம் வேறே- பிற் பட்டாரும் அனுபவிக்க -திரு கோவலூரில் சேவை சாதிக்கிறானே–
நெஞ்சை தடி -தனி- போட்டு கிளப்புகிறார்– தேரை இழுத்து போவது போல–
அவன் வைபவம் முதலில் சொல்லி திவ்ய தேசம் ஏற்றம் -பின்னானார் வணங்கும் சோதி–
அலம்-போதும்–அம் சிறை புள்-கருடர்–தென் பெண்ணை ஆற்றில் அடித்து வரும்- முத்துகள்-மூங்கில்கள்–
முத்துகள்–களை போல உந்தி-தள்ளி விட -புலம் முழுவதும் படர்ந்து பொன்னை விளைக்கும்-முத்துக்களே விதை–
பொய்கை நீர் கொண்டு–வேலி- நான்கு பக்கமும் கொண்டு –பூம் கோவலூர் போகு நெஞ்சே–
திரு மழிசை ஆழ்வாரை திருத்திய பேய் ஆழ்வார்–
மந்திரத்தை மந்தரத்தால்- வாழ்த்த –கண்ணால் கண்டு அனுபவிக்க வந்து அவதரித்து —
தலையிலும் திருவடி வைத்து முறை உணர்த்தின –ஓலைப் புறத்தில் சென்று விடாமல்-
திரு மந்த்ரம் அர்த்தம் காட்டி-சேஷித்வம்-ஸ்ரீ ரெங்க விமானம் ஸ்ரீ பாஷ்யம் ஸ்புடம் ஈஷதே–
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி–சம்பந்தம் காட்டி–செவ்வியையும் -தடவி- -மிருதுவாக தீண்டி–
அனுபவிக்கப் பெறாத வருத்தம் தீர–அந்த திரி விக்ரமனே காட்டிக் கொடுக்க –
பிரயத்தனம் எல்லாம் அவன் எடுக்கிறான் நம்மை அடைய– இங்கும் செவ்வியுடன் -பிற பட்டாரும் சேவிக்க –
இந்த செவ்வி–தான் உகந்த -உகந்து அருளின நிலங்களில் பிரவணராய்–
கருட வாகனும் நிற்க- சம்சாரத்தில் உள்ள சகலரும் தம் ரஷா பரத்தை தன் திருவடிகளில் சமர்ப்பிக்க —
நெஞ்சே நமக்கு வாய்த்ததை அனுபவிக்க வாராய்–பூம் கோவலூர் அனுபவிக்க –திவ்ய தேசம்–
திரு மந்த்ரார்த்த எல்லை உகந்து அருளின நிலமே -ததீய சேஷத்வம் விட –அவனை கொடுத்த ஏற்றம் என்பதால்–
சேஷ பீடம் அரங்கனுக்கு காத்து இருந்ததே—
ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி கண்ணீர் மல்கி நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடி இவ் வாள் நுதலே –இரட்டிப்பு —
பாகவத சமாகம் கிடைக்காமல்–அடியார் இடம் போகாமல் நரஸிம்ஹரிடமே இடம் கேட்பது –
சொத்து பறி கொடுத்தால் திருடர் இடம் கேட்காமல் ராஜா இடம் தானே சொல்லி சேர்க்க வைப்பார்-
அது போல திவ்ய தேசம் புகுந்தார் அவனைச் சேர வைக்க —
திரு மந்த்ரம் லபித்தது -சூழ் புனல் குடந்தையே தொழுது -புகுந்தார்–அது போல் —
இங்கும் பூம் கோவலூர் தொழுதும் போகு நெஞ்சே போதுமே பொய்கை வேலி நிலம் எல்லாம் –
சொன்னது திவ்ய தேசம் அடி பாடு= வரலாறு சொல்கிறது–
வட வேம்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் போல–வடக்கு வாசல் வழியே வந்து சயனித்தான் என்பதால்–
மேன்மையும் நீர்மையும் போலே காணும் நாராயண சப்த அர்த்தம்–
தத் புருஷ பஹுர் விபூதி-இடம் கொடுத்தவன் அனைத்துக்கும் மேன்மை- உள்ளும் இருந்து நீர்மை–
இப் பாட்டில் திரு கோவலூரும் முன் பாட்டில்-விபவம் மேன்மை அர்ச்சை நீர்மை—
அலம் புரிந்த இட்டு நீண்ட நெடும் கை- ஆஜானு பாகு ஸ்ரீ ராமன்–லஷணம் அழகுக்கு அங்கு –
இங்கு இட்டு நீண்டு–புறம்பு ஒருவர் வாசலில் போக வேண்டாம் படி கொடுப்பவன்-
ஈஸ்வரனை பற்றினவன் வேறு எங்கும் ஆசை கொள்ள மாட்டான்–உன்னை கண்ட கண்கள் வேறு ஒன்றை காணாவே–
கண்ணன் ருக்மிணி-என் இடமும் என் அடியவர் இடமும் ஒன்றுமே இல்லை-ருக்மிணி மூர்ச்சித்து விழ அஷ்ட புஜங்களால் தூக்கி-
தாத் பர்யம்-அடைய வேண்டியது ஒன்றும் இல்லை- அவாப்த சமஸ்த காமன்-
அடியாரும் அமுதினை கண்ட கண்கள் வேறு ஒன்றும் காணார்–அதவா–ஒவ்தார்யம் பண்ண உத்யோகித்தால்-
போரும் போரும்-கை வாங்கி கொண்டால் தான்-கொடைக்கு-ஹானி இல்லை ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப –
உதாராம் சர்வ ஏவைத ஞானி –அவர்களே ஒவ்தாரர்கள்- கொடுக்கும் படி கை எந்தினதால்–
கள்வர் இல்லாமை பொருள் காவல் இல்லை–கம்பர்–கொள்வார் இல்லாமை கொடுப்பார் இல்லை தானோ–
உளக்கிலே பதக்கை புகட ஒண்ணாமையாலே மேலும் இத்தனை– ஆசை கொஞ்சம் தானா —
பூ மண்டலம் முழுவதும் 1 முழம் தங்கம் சேர்ந்தால்-ஒவ்தார்யம் பார்த்தால் அவன் மனோ ரதம் கடலில் குழப்படி போல் தான்–
கொள்ளாமல் போகாது -நாங்கள் கொடுத்து போக வந்தோம் வாசிக மானச கையால் கைங்கர்யம் -ஆண்டாள்–
ஆழ்வார் -அவா– தத்வ த்ரயம் தாண்டி-அதை அறுத்தானே —
மாலே மணி வண்ணா -திரு உள்ளம் பார்த்து தான் பட்ட பாடு ஒன்றும் இல்லையே —
ருக்மிணி 7 ச்லோஹம் சந்தேசம் –பிராட்டிக்கு கடின சித்தம் என்றானே–நினைக்கவே உருகுகிறான்
என்னில் முன்னம் பாரித்து முற்ற பருகினான் எதிர் சூழல் புக்கு –புரிந்த கொடுக்கையும் மீளுகையும் –அவன் கை மீளுவது இல்லை–
வாங்கிய இவன் கை மீளுவது-பிரயோஜனந்தருக்கு இது வரை—-
அநந்ய பிரயோஜனருக்கு தன்னையும் தன் உடைமையும் உபய விபூதியையும் கொடுத்து கொடுக்க விரகு இல்லை–
அவனும் கேட்க வேறு இல்லை-அவனும் அனுபவித்தில் இழிவான் இவனும் என் செய்வன் என்று இருத்தி–
ஸ்ரீ நிதிம் -நிதிம் -அபார அர்திதம் -தீஷை -கொண்டு விரதம்-சர்வ பூத சுக்ருதம் தயா நிதிம் தேவ ராஜம்– கூரத் தாழ்வான்
கோ தானம் ராமன் இடம் கேட்ட பிராமணன் தடி வீசி எறிந்தானே-ராமன் சிரித்தான்–
கொடுக்கையே விளை நீராக வளர்ந்த நெடும் தடக் கை–ரஷகனுக்கு விருத்தி ரஷணத்தாலே —
விபீஷணன் சரணா கதி-வர க் கூடாத காலம்-ஜாம்பவான்–
ராஜ்ஜியம் கிடைத்தால் சீதை கிடைப்பாளே கவலை வேண்டாம்–
கொள்ளலாம் கை விடலாம் ராமன் திரு முகம் வாட்டம் கண்டு மாற்றி கொண்டனவாம்-உளன் ஆனான்–நானும் பேசலாமா –
அழுதன குரங்குகள்–ஹனுமான் அங்கீகரிக்கலாம் சொன்னதும் ப்ரசன்னாத்மா ஆனான்–
ஒவ்தார்யம் அளவிட்டு அளக்க முடியாத நெடும் கை– குண திசை பாதம் நீட்டி- -திரு மண்டம் குடி வரை -உறையூர் வரை நீண்டதே –
அர்த்திகள் இருக்கும் வரை நீண்ட திருக் கை–லோகம் அனைத்தும் அடங்கினாலும் விஞ்சி இருக்கும் தோள்கள்–
சர்வ அதிகாரம்–அடக்கி ஆளும் பற்ற வேண்டிய தானே போக்யமாய் இருக்கும் பாஹு-
ஊற்றம் உடையாய் ரஷணத்தில் ஊற்றம் வேதங்களால் சொல்ல பட்ட -அடுத்து பெரியாய்– சொல்ல முடியாது என்கிறாள்
அலம் புரிந்த நெடும் கையன் போய் இரந்தான்–தினவு தீர –
அமரர் வேந்தன்–நித்ய சூரிகள் நாயகன்- தெய்வ நாயகன் தேவாதி ராஜன்-
அம்சிறை புள் தனி பாகன் என்பதால்- வாங்கி கொள்பவர் -ஒவ்தார்யத்தை உப ஜீவிக்கும் —
மரணம் பிரசங்கம் இல்லாதவர்– நித்ய சூரர் -அனுபவம் கைங்கர்யம் தடங்கலே மரணம் ஸ்வரூப நாசம்–
இது இல்லாமையாலே அமரர்–அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் –
வேந்தன் -அடிமை கொள்ள கடவதாக முடி சூட்டி கொண்டான்–அஹம் சர்வம் கரிஷ்யாமி –
தாஸ்யத்தில் அபிஷேகம் இவர்களும் –
ஒரு கையால் திரு வெண் கொற்ற குடையையும் ஒரு கையால் திரு வெண் சாமரமும் ஏந்தி லஷ்மணன் பட்டாபிஷேகத்தில் –
ஏவி பணி கொள்வாய்–சுயம் பாகத்தில் வயிறு வளர்த்தவன் -ஒப்பூண் உண்ண மாட்டமையாலே –அபிஷேகம் இருவருக்கும் ஒக்கும் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு என்ன கடவரே–
பிறப்பால் அரசர் மறக்க ஏதேனும் ஆவேனே -கொல்லி காவலன் கோழியூர் கோன் சேரலர் கோன்-
லஷ்மணன்-பட்டாபிஷேகம் செய்ய மறுத்து – கைங்கர்ய சாம்ராஜ்யம் ஏற்கனவே ஆனதே —
ராமன் செய்ய சொல்வதை மாட்டேன் சொல்லி ராம தாசன் பேர் பெற்றானே–
அநவரத பரிசரத சரண யுகளம்–சிவந்து ராஜா முடிகள் ரத்னம் விழுந்து–அம் சிறை புள் தனி பாகன்- அசாதாரண லஷணம்–
கருத்மான் -சாமான்யம் கீழே இங்கு விசேஷணம்- தூரச்தன் ஆனாலும் கிட்டி நின்று உதவும் சாமான்யம்–
திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்ததே -நந்த கோபாலன் மறு மகளே சாமான்யம் -நப்பின்னை- விசேஷணம்–
தனித்து கருடன் இடம் அடிமை கொள்வதை சொல்கிறார் -அத்வீதிய-தனி- பாகன்–
வெம் சிறை புள் அம் சிறை புள்- புறப் பட்டு போகும் பொழுது —
கிட்டே கூட்டி கொண்டு வரும் பொழுது –உண்ட பொழுது ஒரு வார்த்தை உண்ணாத பொழுது ஒரு வார்த்தை பேசுவார்கள் –
வினை வேலை பண்ண தானே வாகனம்–சங்கல்ப்பதாலே பண்ணுவானே–
போக வேண்டும் நினைத்தாலும் போக முடியாதே சர்வ வியாபகன் தானே–கரந்து எங்கும் பரந்து உளன்–
ராஜாக்கள் அழகு செண்டேற கடவது–திரு கல்யாண-திரு மலை திவ்ய தேசம்
நித்யம் அங்கு மட்டும் கருடன் மேல் ஏறி இறங்கி-அழகு செண்டேற காட்டுவான் -ஓடும் புள் ஏறி–
ஞாப்தி முதல் பத்தில் அறிந்து– ஞாப்தி பல முக்தி – முக்தி கைங்கர்யம் நிஷ்கரித்து இரண்டாம் பத்தில் —
முக்தி பல விருத்தி மூன்றாம் பத்தில்-பிரார்த்தித்தார் ஒழிவில் காலம் எல்லாம்–கருடனுக்கு சேஷத்வம் நிறம் பெற ஏறி இறங்கனும்–
சிறை புள் உவந்து ஏறும்–ஆனந்தமாக -இருவரும் தரிக்க-
நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை அன்றி இலேன்–ஆண்டானும் அடிமையும்–
அம் சிறை-அழகிய -திரு பரிய வட்டம் கொய்து சாத்தினால் போலே அவன் சிறகே திரு பரிய வட்டம் போல-இருக்கை–
ஆல வட்டம் -வீசும் -தேவ ராஜன்–ஆசுவாசம் -ஆசனம் வாகனம் -தாசன் சக -விதானம் வேத மயன்-
கூசிப் பிடிக்கும் மெல் அடிகள்–சோபை காட்டும் –பர தத்தவத்தை ஆஸ்ரியர் இடம் சேர்ப்பித்த அழகு சிறகுகளுக்கு —
ஞான கர்மங்களை-அனுஷ்டாங்கள் சிறகு சேர்ப்பாரை பட்ஷி-
நாய் வாலை போல வீண் அனுஷ்டானம் இல்லாமல் இருந்தால்–படைத்ததே திருஷ்டானம் காட்டத் தான்–
குருவை அடைந்தக்கால் தானே வைகுந்தம் தரும்–ஆழ்வார் அவதரித்து பட்ஷி ஜாதி வீறு பெற்றது —
ஆழ்வார் நாலு தூது –ஆண்டாள் மேக விடு தூது –சு குண மகிமை தரிசி-காட்டும் கண்ணாடி கருடன்–
பகவத் குண தர்பணம் -கண்ணாடி–வேதாத்மா –புள் அரையன் கோ-பாப யோனி இல்லையே நித்யர்—
வாசிக அபசாரம் பசு பட்ஷி பிறக்க –காகிக அபசாரம் கல் ஸ்தாவரம் பிறப்பார்–
நிலா தென்றல் சஞ்சரிக்கும் போது -ஏகாந்தம்-சந்தனம் –
அந்தரங்கர்-கூனர் குறளர் -விருத்தர்கள் குள்ளர்கள்-வைப்பார்கள்–அந்தரங்க சேவைக்கு ஏற்ற வடிவை பரிகரிப்பார் நித்யர்–
அணைய ஊற புனைய –பர்வத பவனன்களிலே ஏதேனுமாக ஜனிக்க பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் -நித்தியரும் பரி கரிப்பர்கள்–
அனந்தாழ்வான் பிரசாத கட்டு சாத எறும்பு- விருத்தாந்தம்–கைங்கர்யம் கிடைக்கிற ஜன்மமே உத்தேசம்–
அவஸ்தை உந்த உரு-சென்றால் குடையாம் போல–தனி பாகன்-அத்வீதியம்-அவனுக்கு சுவாமி/ அடங்கினவன்-நடாத்துவன் பவ்யன்–
யானைக்கு பாகன் போல–கைங்கர்யம் கொண்டு–அவன் சொல் படியும் கேட்டு-
தனி கோல் செலுத்துபவன் -வேதம் அடக்கி -சர்வாதிக லஷணம்–வேதங்களால் சொல்ல படுபவன் சாத்திர யோநித்வாத் –முயலும் —
சொல்லி முடிக்க முடியாது -ஸ்வாமி– அது சொல்லியே காண முடியும்–பவ்யன்–வேறு யாரும் இது போல இல்லை-அத்வீதியன் -தனி பாகன்–
அமரர் வேந்தன் தனி பாகன்–என்றும் கொண்டு–அயர்வறும் அமரர்கள் அதிபதி–
அவுணர்க்கு -அருள் கொடுக்காமல் தீங்கு- செய்குந்தா -அங்கு விரோதி இன்றி-இருப்பதால் ராம கிருஷ்ண அவதாரம்–
சாது பரித்ராணம் அர்த்தமாக அவதரித்து விரோதி நிரசனம் பண்ணின படி–துஷ்ட நிரசனம் மட்டும் சொல்லி–பிரதானம் இது என்பதால்–
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி- அநிஷ்ட நிவ்ருத்தி–மட்டும் அருளியது போல-
இது தானே தடங்கல்-அது கிடைக்க–அணை திறந்த உடன் கரை புரண்டு ஓடுமே–ஸ்வேனே ரூபனே அபி நிஷ்டதே —
மாணிக்க கல்லில் சேற்றை விலக்கி உடன் ஒளி தானே வருவது போல —
கண்ணாலம் – ஆங்கு அவளை கை பிடித்த பெண்ணாளன் –பிரதானம் இது –
சிசுபாலன் எல்லாம் பண்ண இவன் இது மட்டுமே தான் பண்ணினான் —
சாத்தியம் விரோதி நிரசனம் தானே அதை கொடுக்கும் –இத்தை இட்டு அத்தை -கைங்கர்யம் கிட்டும்–
அசுர ஜாதியை சொல்ல வில்லை அகங்கார மம காரம்-
வணங்க மாட்டேன்-வணக்குடை தவ நெறி இல்லாதவன் ராவனணன் -ஜாதியால் சொல்ல வில்லை எனபது—
ஸ்ரீ பிரகாலாதன்-ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-தேவ ஜாதி ஜெயந்தன் காகாசுரன்–அடிமை தனம் பக்தி ஒன்றே வேண்டுவது–
விபீஷணனுக்கு வேறாக நல்லான்–விஷ்ணு பக்தி பரோ தேவ -விஷ்ணு புராணம்–
தேவ ஆசுர விபாகம்–அர்ஜுனன் இரண்டாவது சோகம்–ஸ்ராவண்ய ஜன்ய மகா சோகம்–
சலம்=தீங்கு, வஞ்சனம்–கோபம் விட மாட்டேன் -புரிந்து =செய்து–வஞ்சனம் கொடுத்து–
அவன் சீற்றம் காட்டினாலும் அருள் தானே–ஸ்வாமி-தாசன்–
அவனை பற்றினவர் ஏதாவது வாங்கி போவார் ஒவ்தார்யம் பெற்று போவார்-அமரர்கள்-கோபம் இங்கு–பிரயோஜன சூன்யம் இருக்காது–
விநாசம் பிரயோஜனமா –அவர்கள் நினைவால் இல்லை என்றாலும் அது தான் ஹிதம்–கொன்று அவர்கள் ஆத்மா உஜீவனம் –
தலையை அறுப்பவன் கையில் வாளை வாங்குவது போல—சர்வமும் ரஷணம் தான் –
அது இது உது –உன் செய்கை என்னை நைவிக்கும்–
கூடாரை வெல்லும் சீர்–வீரத்தாலே ராவணனை வென்றான்-அழகால் சூர்பனகை சொவ்சீல்யத்தால் விபீஷணன்–
இப்படி செய்ததால் நம்மை அனைவரையும் –ரஷகன் வியாபாரம் சர்வமும் ரஷணம் தானே–
தலையை ஆங்கே அறுப்பதே கருமம்–சாத்விகர் தொண்டர் அடி பொடி ஆழ்வார்–இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனிய வாறே–
அவரே பேசும் படி –நின் பால் பேசில்- குறிப்பு எனக்கு அடையுமானால் கூடுமேல்– போவதே நோயதாகி போந்து விட வேண்டும்–
அருள் இல்லா தன்மையாளன்–தயை ஆஸ்ரிதர் இடம் எப் பொழுதும்-இருப்பது போல–
சீற்றமும் தயையும்-விருத்தம்–கோப பிரசாதம்–விஷய விபாகத்தாலே -ஆள் ஆகுபவர்கள் வேற–
அசேதனமாய் இருப்பதொரு கல்–சந்தரன் இடம் காட்டி-நீர் ஓட்டம் –பரம சேதனன் இடம் கேட்க வேண்டுமோ–
பரதன் பிரார்த்திக்க சித்ர கூடத்தில்–நம் பெருமாள் பங்குனி உதரம் 18 தடவை திரு மஞ்சனம் கண்டு அருள
ஸ்வாமி சரம ஸ்லோகார்த்தம் பெற 18 தடவை நடந்த ஸ்ரமம் தீர-
வேய் மரு தோள் இணை மெலியுமாலோ–அவன் தோள்கள் தானே –மரவடியை வான் பணயம் வைத்து —
ஆண் சிங்கம் பெண் சிங்கம் குட்டி சிங்கம் யானை கதை-பாதுகா பட்டாபிஷேகம் முடிந்து போனது –
பெண் சிங்கம் பாதுகை ஆண் சிங்கம் பெருமாள் பெண் சிங்கம் பரதன் யானை ராவணன் -பாதுகை பரதனை கூட்டி வந்ததாம்–
தயையும் கோபமும் ஒரே சமயத்தில் -பிரகலாதனுக்கு அருளும் ஹிரண்ய கசிபுக்கு கோபமும் காட்டியது போல
தன்மை யாளன்- இதுவே ஸ்பாகமாய் கொண்டவன் -அருள் இல்லா தன்மையும் அருளே- சீறி அருளாதே –
இவன் சீறினாலும் அருள் தான் மற்றவர் அருளினாலும் சீறியது தான்–
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு–முதலை மேல் சீறி வந்தான்–நீர் புழு மேல்–
சிறு மா மனிசர்- சிறுமையும் பெருமையும் -கீர்த்தியில் பெருமை மூர்த்தியில் சிறியவர்–குழந்தை அபிமானம் பராசர பட்டர் இடம்–
தான் உகந்த ஊர்- விரும்பி ஆஸ்ரயத்த–அமரர் வேந்தன் உகந்த ஊர்-
பரம பதத்தில் – அருள் இல்லா தன்மையாளன் உகந்த ஊர் -விரோதி நிரசன சீலன் வர்த்திக்கும் திரு பாற் கடல்—-
போக்யன் வர்த்திக்கும் -106 திவ்ய தேசங்களும் —-சம்சாரிகள் விமுகராய் இருக்க தானே உகந்து வர்த்திக்கும் –
உடமை நசியாமல் இருக்க தானே ஆதரித்து வர்த்திக்கும் –ஆஸ்ரயணீயமும் பிராப்யமும் இவையே–
பிரப்யமும் பிராபகமும் திவ்ய தேசங்களே–
அமரர் வேந்தன் என்கையாலே-ஸ்வாமித்வம்—உலகம் மூன்று உடையாய்–நிகரில் புகழாய் -வாத்சல்யம் –
தான் உகந்த ஊர் –என்னை ஆள்வானே -சௌசீல்யம்–சேராமல் தானே இல்லை என்கிறானே –
திரு வேம்கடத்தானே -சௌலப்யம்–கண் கொண்டு காண -பிராப்யம் சுடர் விட்டு ஒளி விடுவது இங்கே தானே–
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–அடி அறா போந்த படி–
கல்லும் கணை கடலும் –புல் என்று ஒழிந்தன கொல்–
எல்லாரையும் போக விட்டு அகம் பார்த்து நொந்து கொண்டு இருக்கிறான் வைகுந்த நாதன்–எல்லாம்-
ஞானம் பிறப்பதற்கு முன்-அவர் அவர் பனை முலை துணையா இருந்தது போல– எல்லா திவ்ய தேசம்–
திரு கோவலூராய் இருக்க ஊர் எல்லாம்–நீர் சாயலையும் நிலா சாயலையும் –வெளி சோலை அனுபவிப்பது போல–
வாசு தேவ தரு சாயா –நீராடப் போதுவீர்–பர அனுபவம்–மரத்தின் நிழல்- —
அவனை அனுபவிக்க போகும் பொழுது நிழல் அனுபவிப்பது போல–தரு-பிராபகம் சாயை-பிராப்யம் —
வாசுதேவம்=எல்லா இடங்களிலும் இருப்பவன்–ஊர் எல்லாம் திவ்ய தேசம் மட்டும் –உகந்து அருளின பூமிகளே வக்தவ்ய பூமி–
வழி போவார்க்கு கட்டு பிரசாதம் போல தாள் பாடி- திரு நாம சங்கீர்த்தனம்–தன தாள் பாடி–பாதேயம் புண்டரீகட்ஷா நாம சங்கீர்த்தனம்–
தன்னைப் பாடி இல்லை தன் தாள் பாடி–ஒரு கால் நிற்ப ஒரு கால் கடந்த -மறக்காமல் அவற்றை சொல்கிறார்–
ப்ரீதி பிரேரராய் கொண்டு பாடி–பெண்ணை–கண்டதும் -இதை பாட ஆரம்பிக்கிறார்–திருவடிகளை மறந்து இதை கவி பாட ஆரம்பிக்கிறார்–
தனக்கு ஆதரவான திவ்ய தேசம் நோக்கி போகும் ஆறு என்பதால்-நிலம் பரந்து வரும்–ஆதரவு தோற்ற–
புருஷோத்தமனை ஸ்திரீ அனுபவிக்க போகும் போலே போகிறது–
கரைக்கு மீது வழிந்து குடி இருப்புகளை அழித்து வேய் கன்றுகளை கிளர்த்தி உடன் வரும்–கலுழி-கலங்கி—
தெளிவிலா பொன்னி-தெண்ணீர் பொன்னி-மருமகன் பார்க்க போகும் கலக்கம் பார்த்து போனதும் பிரிந்த வருத்தம் ..
ஆதாரம் தோன்ற வரும் பொழுது தன் விபூதி அழிவதை பார்க்க மாட்டான்-
கண்டா காரணன்-இப் பொழுது கொண்டு வந்தேன் ரிஷி பிணம் என்று ஆதரவுடன் சமர்ப்பிகிறான்– –
பிணம் விருந்து இட்டேனோ கண்டா கர்ணன் போல –பிரட்டி கண்ட விஷயம் சொல்ல வந்த வானரங்கள் மது வனம் அழித்தன–
நம் கார்யம் கிருத கருத்தியம் ஆனதே- மது வனம் இல்லா விடில் ராமனின் முதுகு பட்டு இருக்கும்-எம்பார் சாதித்தார்–ஆதரவே முக்கியம்–
ஈர்ந்த -வேரோடு கிள்ளிய மூங்கில் உள்ளே இருந்த -முத்துக்கள் தெறித்து விழ –வயலில் தள்ள -களை என்று தள்ள –பரவி கிடக்கிற நிலம்-
தேச சமர்த்தி–நெடு வேய்கள்- -திரி விக்ரமன் போல ஓங்கி இருக்கும் மூங்கில்கள்-ஓங்கு பெரும் செந்நெல்-
திரி விக்ரமன் போல- ஓங்கி இருக்கும் சென் நெல்–உந்த உந்தி-முத்துகளை ஆறு உந்த–உழவர்கள் அவற்றை தள்ள —
பயிர்கள் முக்கியம் அவர்களுக்கு –அடித்து வருகிற வேகத்தில் -விளைவது பொன்னி முத்து களை தானே —
பொன் ஆனாய்-பொன் படு குட்டம் இறே–நிலத்தை வேலியாக சுற்றிலும் கொண்ட –மழை தண்ணீரை எதிர் பார்க்காமல் நதி வளம்–
பூம் கோவலூர் தொழுதும்-அவன் அளவுக்கு போக வேண்டாம் படி போக்யமாய் இருக்க –
போது நெஞ்சே–ஆற்றின் ஆதரவும் நில வளமும் கேட்டு -ஸ்தம்பித்து -தடி போட்டு கிளப்புகிறார்-
தன் தாள் பாடி- திரு நாம இனிமையால் உருகி தளர்ந்து இருந்த நெஞ்சை போது என்கிறார்–
தொழுதும்-நம-பக்த அஞ்சலி புட-முக்தர் போல அனுபவித்து கொண்டு -தொழுகை கை கூப்புகை –
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply