Sri Lakshmi Thanthram..Shri.Sridaran Swami..

1-1–நமோ நித்யாநவத்யாய ஜகத: ஸர்வஹேதவே

ஞானாய நிஸ்தரங்காய லக்ஷ்மீநாராயணாத் மநே
பொருள் – மிகவும் தூய்மையானதும், தோஷங்கள் அற்றதும், உலகின் காரணமாக உள்ளதும், அனைத்திற்கும் காரணமாக உள்ளதும், ஞானமயமாக உள்ளதும், மாற்றம் அடையாமல் உள்ளதும், லக்ஷ்மி – நாராயணன் ஆகிய இருவருக்கும் ஆத்மாவாக உள்ளதும் ஆகிய அதனை (ப்ரஹ்மம்) வணங்குகிறேன். (இங்கு லக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் ஆத்மாவாக வேறொரு உயர்ந்த வஸ்து உள்ளதாகக் கூறப்பட்டாலும், இந்த வஸ்துவும் நாராயணனும் ஒன்றே என பின்னர் கூறப்பட உள்ளது.

1-7–பதிவ்ரதாநாம் பரமா தர்மபத்நீ யசஸ்விநீ

ப்ரஹ்மா விஷ்ணு மஹேசாநாம் ஜநநீ காரணாந்தரே

பொருள் – (அனசூயா பற்றிக் கூறுவது) – கணவனுக்கு ஏற்ற மனைவியர்களில் மிகவும் சிறந்தவள்;அத்ரி முனிவரின் தர்மபத்னி; ப்ரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தாய் போன்ற ஸ்தானத்தை ஒரு சூழ்நிலையில் அடைந்தவள்…..

1-31–பாரிஜாதே ஹயச்ரேஷ்டே கஜேந்த்ரே அப்ஸரஸாம் கணே

காலகூடே ஸமுத்பூதே வாருண்யாம் அம்ருதே ததா

பொருள் – (அந்தத் திருப்பாற்கடலிலிருந்து) பாரிஜாதம், உச்சைஸ்சிரவஸ் என்னும் உயர்ந்த குதிரை, ஐராவதம் என்னும் யானை, அப்ஸரஸ் பெண்கள், காலகூடம் என்னும் விஷம், வாருணி என்னும் பானம், அமிர்தம் ஆகியவை வெளிப்பட்டன

1-32–ஸஹ சந்த்ரமஸா தேவ்யாமுத்திதாயம் மஹார்ணவாத்

பத்மிந்யாம் பத்மநாபஸ்ய வக்ஷ: ஸ்தாயாமனந்தரம்

பொருள் – அதன் பின்னர் அந்தப் பெரிய கடலில் இருந்து சந்திரனுடன் இணைந்து மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவள் தாமதம் செய்யாமல், விரைந்து சென்று, பத்மநாபனின் திருமார்பில் அமர்ந்து கொண்டாள்.

1-43–பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ஸ ஏஷா நிஷ்டா ஸநாதநீ

ஸ ஏஷா நாராயணீ தேவீ ஸ்திதா நாராயணாத்மநா

பொருள் – பாஞ்சராத்ர ஆகமத்தின் மூலம் அடையப்படும் முக்கிய குறிக்கோளாக இவளே உள்ளாள் (அதன் மூலம் ஆராதிக்கப்படும் தெய்வம் எனலாம்). இவளே நாராயணீ என்று போற்றப்படுகிறாள். நாராயணனின் ஆத்மாவாக இவள் எப்போதும் அவனிடம் பொருந்தி, நிலையாக உள்ளாள்.

2-7–வஸ்த்வவஸ்து ச தந்நாஸ்தி யந்நாக்ராந்தமஹம்தயா

இதம் தயா யதாலீடமாக்ரந்தம் ததஹம்தயா

பொருள் – அவன் வ்யாபிக்காமல் எந்த ஒரு அற்ப வஸ்து கூட இந்த உலகில் இருப்பதில்லை. “இது” என்று கூறப்படும் எந்த ஒரு வஸ்துவும் அவனால் பரவப்பட்டே உள்ளது.

2-13–ஆத்மா ஸ ஸர்வபூதாநாமஹம் பூதோ ஹரி: ஸ்ம்ருத:

அஹம்தா ஸர்வபூதாநாமஹமஸ்மி ஸநாதநீ

பொருள் – ஸ்ரீஹரி எனக் கூறப்படும் அவன் அனைத்து உயிர்களுக்கும் ஆத்மாவாக உள்ளான். அவனுடந் நானும் அனைத்து உயிர்களுக்குள் எப்போதும் (நான் என்ற எண்ணமாக) அமர்ந்துள்ளேன்

3-1..நித்யநிர்த்தோஷ அநி:ஸீம கல்யாண குணசாலிநீ

அஹம் நாராயணி நாம ஸா ஸத்தா வைஷ்ணவீ பரா

பொருள் – மஹாலக்ஷ்மி கூறத் தொடங்கினாள் – என்றும் இருப்பவளும், தோஷங்கள் அற்றவளும், எல்லையற்ற திருக்கல்யாண குணங்கள் கொண்டவளும் ஆகிய நான், நாராயணி எனப்படுகிறேன். உயர்ந்த விஷ்ணுவுக்கு ஏற்றவளாக உள்ளேன்.

4-13..ஞான சக்தி பல ஐச்வரிய வீர்ய தேஜாம்ஸ்யசேஷத:

          உந்மிஷந்தி யதா துல்யம் வாஸுதேவஸ்தத உச்யதே

பொருள் – எனது ஆறு குணங்களான ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம் மற்றும் தேஜஸ் ஆகியவை சரிசமமாக எந்த ஒரு ரூபம் எடுக்கிறதோ அந்த ரூபமே வாஸுதேவன் என்பதாகும் (அல்லது வாஸுதேவ ரூபத்தில் இவை சரிசமமாக உள்ளன எனலாம்).

4.44..கல்யாணரூபா பத்ராஸ்மி காளீ ச கல்நாத்ஸதாம்

         த்விஷதாம் காலரூபத்வாதபி காளீ ப்ரகீர்த்திதா

பொருள் – அனைத்து மங்கலங்களையும் அளிப்பதால் பத்ரா என்றும், நன்மைகளைக் காப்பதால் காளீ என்றும், விரோதிகளுக்குக் காலனாக உள்ளதால் காளீ என்றும் கூறப்படுகிறேன்

..4-45..ஸுஹ்ருதாம் த்விஷாம் ச ஏவ யுகபத்ஸதஸ்த்விதே:

          பத்ரகாளீ ஸமாக்யாதா மாய ஆச்சர்ய குணாத்மிகா

பொருள் – நண்பர்களுக்கு உபகாரத்தையும், தீயவர்களுக்கு அபகாரத்தையும் செய்வதால் பத்ரகாளீ என்று கூறப்படுகிறேன். எனக்கு உள்ள வியப்பளிக்கும் குணங்கள் காரணமாக நான் மாயா என்றும் அழைக்கப்படுகிறேன்.

4-48..பூர்ண ஷாட்குண்ய ரூபத்வாத் ஸ அஹம் பகவதீ ஸ்ம்ருதா

         பகவத் யஜ்ஞ ஸம்யோகாத் பத்நீ பகவத்: அஸ்மி அஹம்

பொருள் – ஆறு குணங்களும் பூர்ணமாக உள்ளதால் என்னைப் பகவதி என்றும் கூறுகின்றனர். பகவானுடன் அவனது யஜ்ஞங்களில் பங்கு பெறுவதால் என்னை அவனுடைய தர்மபத்னியாகக் கொள்கின்றனர்.

One Response to “Sri Lakshmi Thanthram..Shri.Sridaran Swami..”

  1. Rajaganapathy Sarma Says:

    Is it possible to me to get the lakshmi Thanthram anywhere in chennai. please intimate.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading