ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-6-
பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
அசங்க்யேய திவ்ய பூஷணங்களையும் -அசங்க்யேய கல்யாண குணங்களையும் -அசங்க்யேய தேஜோ மாயா கல்யாண திவ்ய ரூபங்களையும்-
அசங்க்யேய திவ்ய போகங்களையும் -அசங்க்யேய திவ்ய ஞானங்களையும் உடையனாய் -நாக பாருங்க சாயியாய் இப்படி பரிபூர்ணனாய்
இருந்து வைத்து என்னோடே கலந்து அருளினான் -என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-5-6-
தம்மோடு கலந்த எம்பெருமானுடைய அசங்க்யேயமான திவ்ய பூஷணாதிகளை அனுபவிக்கிறார் –
பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
பாம்பணை மேலார்க்கு பிரகாரங்களை என்னப் புகில்-ஆபரணங்கள் -குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் –
திவ்ய விக்ரஹங்கள் -ஐந்த்ரிய ஸூ கண்கள் -ஞானங்கள் -இவை எல்லாம் அசங்க்யே யங்கள்
ஞானம் என்று ஞான சாதனமான சஷூராதி இந்திரியங்கள் ஆகவுமாம்
சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கும் பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் -பாம்பணை மேலாற்கேயோ-என்றது –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –2-5-6-
அநந்தரம் பூஷணாத் அபரிச்சேதத்தை அனுபவிக்கிறார் –
பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
பாம்பணை மேலாற்கேயோ–திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டால் போலே என்னோடு கலந்தவனுக்கு –
பண்பு எண்ணில்-ஸ்வ பாவ நிரூபணம் பண்ணில்
ஆபரணம் பல பல -ஆபரணம் -க்ரீடாதி ரூப பேதத்தாலும் ஓர் ஒன்றில் ஸம்ஸ்தான பாஹுள்யத்தாலும் -பல பலவாய் இருக்கும் –
பேரும் பல பல -நாமமும் வ்யக்தி பேதத்தாலும் -நிர்வசன முகத்தாலும் ஓர் ஓன்று அநேக நாமாத்மகமாகையாலே பல பலவாய் இருக்கும் –
சோதி வடிவு பல பல -ஜ்யோதி ரூபமான அப்ராக்ருத விக்ரஹமும் பாரா வ்யூஹத்தி பேதத்தாலும் அவாந்தர பேதத்தாலும் பல பலவாய் இருக்கும் –
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்- பலபலவே –இந்த்ரியத்வாரா தத் தத் விஷய சம்யோகத்தால் வருகிற ஸூகமும் –
வ்யக்தி பேதத்தாலும் அவாந்தர பேதத்தாலும் பல பலவாய் இருக்கும் –
ஞானமும் பல பல –தத்த்வாரா பதார்த்தங்களில் பிறக்கிற ஞானமும் அப்படியே பல பலவாய் இருக்கும் –
இந்த்ரியத்வாரா வருகிற ஸூக ஞானங்களில் ஈஸ்வரனுக்கு யதாக்ரமத்தாலும் வ்யுத்க்ரமத்தாலும் வரும் அநியமத்தாலே பன்மை சொல்லவுமாம் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-5-6-
தம்மோடு கலந்தவனுடைய ஆபரணாதிகளை அனுபவிக்கிறார் –
பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
பலபலவே யாபரணம்
சாதிப் பன்மையும் -அவாந்தர பன்மையும் –
பேரும் பலபலவே-
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களும் பல -சீலப் பேர் -வீரப் பேர் அநேகமாய் இருக்கை –
பலபலவே சோதி வடிவு –
அக் குண சேஷ்டிதங்களுக்கு ஆஸ்ரயமான வடிவும் பல –
சுத்த சத்வ மயமான விக்ரஹத்தையே இதர சஜாதீயம் ஆக்குகையாலே கொண்ட வடிவு எல்லாம் ஜோதி வடிவாய் இருக்கிறது –
ஸுபரியைப் போலே அநேக வடிவு எடுத்தாயிற்று இவரை அனுபவிப்பது
பண்பு என்னில்-
அவனுடைய பிரகாரங்களை அனுசந்திக்கில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்-
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தும் உண்டாகக் கடவதான ஐந்த்ரிய ஸூ கமும் பல –
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–
வைஷாயிக ஞானமும் பல பல -ஞாயதே அ நேந -என்கிறபடியே ஞான சாதனமான சஷூராதிகளை சொல்லிற்று ஆகவுமாம் –
பாம்பணை மேலாற்கேயோ–
சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமான பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் –
பாம்பணை மேலாற்கேயோ-பண்பு எண்ணில் -பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
சோதி வடிவு பலபலவே – கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபல- ஞானமும் பலபல ஓ -என்கிறார் –
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –2-5-6-
என்னுடனே கலந்து ஆற்றானாய்ப்-அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி -பல சரீரங்களை மேற்கொண்டு –
என்ன அனுபவியா நின்றான்’ என்கிறார்.
பல பலவே ஆபரணம்; பேரும் பல பலவே;
பல பலவே சோதி வடிவு; பண்பு எண்ணில்
பல பல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்;
பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ!–2-5-6-
பலபலவே ஆபரணம் –
ஜாதி பேதமும்-வ்யக்தி – வடிவு பேதமும் இருக்கிற படி.
திருக்கைக்குச் சாத்துமவை என்றால், பல; அவைதாம், ‘இடைச்சரி, கடைச்சரி’ என்பன போல்வன.அநேகமாய் இருக்கும் இறே –
பேரும் பலபலவே-
அனுபவ சமயத்தில்-திரு நாம க்ரஹணத்துக்கு – திருப்பெயர்களைச் சொல்லுதற்கு இழிந்த இடமெல்லாம் துறை;
அவைதாம் ‘சீலப்பேர், வீரப்பேர்’ என்பன போல்வன அநேகமாய் இருக்கும் இறே
சீலப்பேர் – கோவிந்தன் என்பது போன்ற திருப்பெயர்கள்.
வீரப்பேர் – மதுசூதனனன் என்பது போன்ற திருப்பெயர்கள்.
பலபலவே சோதி வடிவு – அத்திருப்பெயர்கள்-த்வாரா – மூலமாகக் காணும் வடிவுகளும் பல;
அவன்-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை – பிரகிருதி சம்பந்தம் இல்லாத தனது திருமேனியை, மற்றைச் ஜாதிகட்குச் சமமாக்குகிறான்
ஆகையால் எல்லாம் ஜோதி வடிவாயே இருக்குமாதலின், ‘சோதி வடிவு’ என்கிறார்.
இனி, சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு இவரை அனுபவிக்கிறான் ஆதலின், ‘பலபலவே வடிவு’ என்கிறார் எனலுமாம்.
முத்தன் தன்னை யனுபவிக்கும்போது படுமாறு போன்று, தான் என்னை அனுபவிக்கப் பல வடிவு கொள்ளா நின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.
பண்பு எண்ணில் –
பிரகாரங்களை அனுசந்திக்கில் -தன்மைகளை நினைக்குமிடத்து
பல பல இத்யாதி
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து உண்டாகக் கூடியவான ஐம்பொறி இன்பங்களும் பலப்பல’ என்றது,
காண்பனவும் உண்பனவும், கேட்பனவும், தொடுவனவும், முகர்வனவுமான இவைகள் பலப்பல என்பதாம்.
பலபலவே ஞானமும் –
ஐம்புலன்களைச் சொல்லுதல்; அவற்றை அறிகைக்குக் கருவியான ஞானங்களைச் சொல்லுதல்.
ஆயின், ஞானம் பல உண்டோ?’ எனின், விஷயங்கள் தோறும் ஞானமும் வேறுபடும் அன்றோ?
ஆக, இவற்றால், தன்னின் வேறு பட்டவற்றை எல்லாம் விஷயமாக உடையனாய், அவற்றை எல்லாம் அறியவும் வல்லவனாய்,
அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தையும் உடையவனாய் இருக்கும் இருப்பைத் தெரிவித்தபடி.
பாம்பணை மேலாற்கேயோ –
இவை எல்லாம் ஒரு விஷயத்தில் இருக்க அனுபவிப்பான் என்னுமிடத்திற்கு உதாஹரணம் காட்டுகிறார்.
பாம்பு-தொடுதற்கு மென்மையாய் இருக்கும்; நறுநாற்றத்ததாய் இருக்கும்; கண்ணுக்கு இனியதாய் இருக்கும்.
இம்மூன்றும், ஏனை இரண்டற்கும் உபலக்ஷணம்.
‘பாம்பணை மேலாற்கு, பண்பு எண்ணில், பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே; சோதி வடிவு பலபலவே;
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் பலபலவே; ஞானமும் பலபலவே; ஓ’ என்று அந்வயம் –
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply