Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ வடமதுரா என்னும் மதுரா—ஸ்ரீ விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம்–ஶ்ரீமது⁴ராபுரீஸ்துதி:–ஸ்ரீ வல்லபாச்சார்யர் -அருளிச் செய்த ஸ்ரீ மதுராஷ்டகம் ––

January 16, 2023

ஸ்ரீ வடமதுரா என்னும் மதுரா

ஸ்ரீ வடமதுரை மஹாத்ம்யம்
மதுரா நாம நாகரீ புண்யா பாபஹரீ சுபா -புராண ஸ்லோகம் -யுகம் தோறும் சம்பந்தம் -மன்னு வடமதுரை –

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சீ ஹ்யவந்திகா |. புரீ த்வாரவதீ சைவ ஸப்தைதா மோக்ஷதாயிகா:

க்ருத யுகத்தில் த்ருவன் யமுனையில் நீராடி நாரதர் இடம் உபதேசம் பெற்று தவம் புரிந்து பகவானை தரிசித்தான் இங்கேயே
த்ரேதா யுகத்தில் -மது என்னும் அசுரனின் மகன் லவணாசுரன்-துன்புறுத்த –தம்பி சத்ருக்னணனை அனுப்பி அழித்தான்-
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் இதற்கு மதுரா என்று பெயரிட்டு தானே ஆண்டு வந்தான் என்பதை உத்தர காண்டம் சொல்லும் –
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி -பெருமாள் திருமொழி –
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரீ த்வாரவதீ சைவ ஸப்த தைதா மோக்ஷதா யகா -ஸ்லோகம் படி முத்தி தரும் க்ஷேத்ரம் –

நம்மாழ்வார் -பத்து -7 -10-4–/-8–5–9-/-9–1–3-தொடங்கி -10-வரை குலசேகரர் -1-/
பெரியாழ்வார் -நான்கு–திருப்பல்லாண்டு -10-/பெரியாழ்வார் திருமொழி -3–6—3 /—4-7–9-/–4–10–8-/
ஆண்டாள் -ஏழு -திருப்பாவை -5-/ நாச்சியார் திருமொழி -4–5-/ -4–6-/-6-5-/-7–3-/-12–1-/ -12–10-/
திருமங்கை ஆழ்வார் -நான்கு -6-7-5-/ -6–8–10-/-9-9–10-/ சிறிய திருமடல் -40 கண்ணி-/
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -ஓன்று -திருமாலை 45-ஆகிய ஆறு ஆழ்வார்களால் -27-பாசுரங்களால் மங்களா சாசனம் –

வளவெழும் தவளமாட மதுரைமா நகரந் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை, துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல், இளைய புன் கவிதை யேலும் எம்பிறார்க்கு இனிய வாறே. (45)

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து, கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே. (பெரிய திருமொழி 6.7.5)

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை நன் நறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார், கன்னவிலும் தோளான் கலியன் ஓலி வல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. (பெரிய திருமொழி 6.8.10)

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான், வாச மலர்ப் பொழில் சூழ் வட மாமதுரைப் பிறந்தான், தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற, கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ. (பெரிய திருமொழி 9.9.6)

பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த் தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப் (சிறிய திருமடல், 74)

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற, வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந் நெலும் வயல் சூழ் திருவாறன்விளை, வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த, வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே. (திருவாய்மொழி 7.10.4)

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இரும் சிறைப் புள், அதுவே கொடியா உயர்த்தானே! என்று என்று ஏங்கி அழுதக்கால், எதுவேயாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான், மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே? (திருவாய்மொழி 8.5.9)

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்றே எழுவர், இருள் கொள் துன்பத்து இமை காணில் என்னே என்பாரும் இல்லை, அருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு அருள் கொளாளா உய்ய வல்லால் இல்லை கண்டீர் அரணே.(திருவாய்மொழி 9.1.3)

அரணம் ஆவார் அற்ற காலைக்கு என்று அமைக்கப் பட்டார், இரணங் கொண்ட தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அஃதே, வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சரண் என்று உய்யப் போகில் அல்லால் இல்லை கண்டீர் சதிரே. (திருவாய்மொழி 9.1.4)

சதிரமென்று நம்மைத் தாமே சம்மதித்தின் மொழியார் மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்று உறுவர் அதி கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு எதிர் கொள்ளா உய்யுய்ய ல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே.(திருவாய்மொழி 9.1.5)

இல்லை கண்டீ ர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே. (திருவாய்மொழி 9.1.6)

மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிருக்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றமன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றிமில் சீர் கற்று வைதல் வாழ்தல் கண்டீர் குணமே . (திருவாய்மொழி 9.1.7)

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போம் இதனில் யாதுமில்லை மிக்கதே. (திருவாய்மொழி 9.1.8)

யாதுமில்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் மா துகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே. (திருவாய்மொழி 9.1.9)

கண்ணன் இல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் திண்ணமா அம் உடைமை உண்டேல் அவனடி சேர்த்து உய்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே. (திருவாய்மொழி 9.1.10)

ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்கள் இவை ஆயிரத்துளிப் பத்தும் ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே. (திருவாய்மொழி 9.1.11)

மதுரையார் மன்னன் என்று பெயர் இடச் சொல்லி ஸ்வப்னத்தில் சாதித்த ஐதிஹ்யம் –
அஹோ மது புரீ தன்யா வைகுண்டாச்ச கரீயஸீ தினமேகம் நிவாஸேன ஹரவ் பக்தி ப்ரஜாயதே -வாயு புராணம் -பக்தி பிறக்கும் ஒரு நாள் தங்கினாலேயே
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகாதோ மதுராம் பூரிம்-

மதன ஆதார பூமி -அதாவது கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி
ப்ருது மஹா ராஜன் இவ்விடத்திலேயே பூமா தேவியிடம் இருந்து மக்கள் வாழ வேண்டிய சிறந்த பொருட்களை எல்லாம் கடைந்து எடுத்த படியால் இப்பெயர்
மத்யதே பாப ராசி யயா இ தி -எதனாலே மக்களின் பப்பட் கூட்டங்கள் கடைந்து அகற்றப் படுகிறதோ அதுவே மதுரா
இங்கு வசித்தாலும் -கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும் சம்சாரத் தளைகள் வஸூ தேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போலே விலகிப் போகும் –

தர்சன ஸ்தலங்கள் –
1–அக்ரூர காட் -அக்ரூரர் கண்ணனையும் பலராமனையும் தேரில் அழைத்துக் கொண்டு மதுரை வரும் போது கண்ணன் லீலை புரிந்து நதிக்கு உள்ளே சேவை சாதித்தான்
வெளியே ரத்தத்திலும் சேவை -இப்படி மாறி மாறி சேவை சாதித்து -தானே சர்வ வ்யாபி சர்வ நியாந்தா -என்று புரிய வைத்தான் –
இங்கு அக்ரூரருக்குஒரு கோயில் உள்ளது -யமுனை தற்காலத்தில் சற்று தள்ளி ஓடுகிறது –இந்த சரித்திரம் -ஸ்ரீ மத் பாகவதம் -10-39-/-40-விவரிக்கும்
2–ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி -சிறைச்சாலை -தந்தை காலில் விலங்கு அவிழ நான்கு தோளோடு எட்டாவது கர்ப்பமாய் பிறந்து ஜென்ம ரஹஸ்யம் வெளியிட்டு அருளி
அவர்கள் அதை மறக்கும் படி செய்தான் -பிறந்த அன்றே கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டு யோகமாயையை எடுத்து வந்தார்
இங்குள்ள புராதனமான திருக் கோயில் கண்ணனுடைய கொள்ளுப் பேரனான வஜ்ர நாபனாலே ஸ்தாபிக்கப் பட்டது
பல படை எடுப்புக்களுக்கு ஆட்பட்டு தற்போதுஉள்ள நிலை –
3–கேசவஜீ மந்திர் -ஜென்ம பூமிக்கு அருகில் உள்ள இக்கோயில் புராதனம் -கம்சனின் சிறை இவ்விடம் இருந்ததாக சொல்லுவார்கள்
இங்கு இருக்கும் மூர்த்தி பகவானுடைய -24-அவதாரங்களாலும் அலங்கரிக்கப் பட்டு இருக்கிறார்
4–போத்ரா குண்ட் -ஜென்ம பூமிக்கு அருகில் வஸூ தேவரும் தேவகியும் துணி துவைத்த இடம் –
பவித்ரா குண்டம் என்னும் சொல் சிதைந்து போத்ரா குண்ட் என்று கூறப்படுகிறது
5–கம்ச டீலா / ரங்க பூமி -முஷ்டிக சாணூரர்கள் இடம் பொருத ஸ்தலம் -கம்சனையும் கீழே இழுத்துத் தள்ளி கொன்ற ஸ்தலம் –
அஞ்சலகத்துக்கு அருகே இவ்விடம் தற்போது அமைந்துள்ளது-
6— ஆதி வராஹர் சந்நிதி -புராதனமான மதுரா ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் -இங்கு இருக்கும் ஸ்ரீ வராஹ மூர்த்தி கபில முனிவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு
பின்பு திரு அயோத்தியில் இருந்து ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது
7–த்வரகாதீசன் சந்நிதி -150-ஆண்டுகளுக்கு முன்பு வல்லபாசார்ய ஸம்ப்ரதாயத்தாரால் கட்டப்பட்டது -ருக்மிணீ சத்ய பாமையோடு எழுந்து அருளி இருக்கும் கண்ண பிரான் –
ஸ்ரவண மாதத்தில் மிகப் பெரிய உத்சவம் –
8—சமயமன தீர்த்தம் -ஸ்வாமி காட் என்றும் சொல்லுவார் -இவ்வழியாகத் தான் கண்ணனைச் சுமந்து கொண்டு யமுனையை வஸூ தேவர் கடந்தார்
யமுனையில் உள்ள -24-துறைகளில் ஒன்றாகும்
9–விஸ்ராம் காட் –இதுவே நடுவாக விழுங்கும் காட் –
கண்ணன் கம்சனை முடித்து அந்திம கிரியைகளை துருவ காட்டில் நடத்தி வைத்து இங்கே வந்து நீராடி ஓய்வெடுத்தான்
கார்த்திகை ஸூக்ல பஷ த்விதீயை -எம த்விதீயை -அன்று தான் யமனின் தங்கை யமுனை பிறந்த நாள் –
அன்று நீராடினால் சம்சார நிவ்ருத்தி கிடைக்கும் -முன்பு ஸ்ரீ வராஹ பெருமாளும் இங்கே ஓய்வெடுத்ததாகச் சொல்லப்படுகிறது
10–துருவ டீலா -யமுனையின் மற்றொரு கரையில் இருக்கும் இதில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான் –
இத்தலத்தை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளலாம்
இது மது வனத்துக்குள் மஹாலி கிராமத்தில் பாதை சரியில்லாத இடத்தில் அமைந்துள்ளது –
11–தாள வனம் -தேனுகாசுரன் கழுதை வடிவு கொண்ட அசுரனை பலராமன் இங்கு தான் கொன்றார் -இக்காடு கிரைய பனை மரங்கள் நிறைந்து உள்ளன
ஞானம் அற்ற சம்சாரியே கழுதை -சுக துக்கங்கள் பொதி -சுமந்து பக்தி இல்லாமல் இருக்க -பகவான் அறிவின்மையை அழித்து நற்கதி அளிக்கிறான்
மதுரைக்கு தெற்கே -6-மைல் தொலைவில் உள்ள இவ்விடத்தில் பலராமன் கோயிலும் பலராமன் குண்டமும் உள்ளன –ஸ்ரீ மத் பாகவதம் -10-15-இதை விவரிக்கும்
12–மதுவனம் -மதுரைக்கு தேன் மேற்கே உள்ள இங்கு தான் க்ருத யுகத்தில் மது என்னும் அசுரனைக் கொன்று பகவான் மது சூதனன் என்ற பெயர் பெற்றான்
த்ரேதா யுகத்தில் மதுவின் மகனான லவணாசுரனை இங்கு தான் சத்ருன ஆழ்வான் கொன்றான் -அவனே வராஹ பெருமானுக்கு கோயில் அமைத்து ஆண்டு வந்தான்
இங்கு சத்ருக்ன ஆழ்வானுக்கு சந்நிதியும் மது குண்டமும் உள்ளன
த்வாபர யுகத்தில் கண்ணன் கற்றுக் கறைவைகளோடு இங்கு வந்து நாட்டியமாடி மகிழ்வான்
இங்கு த்ருவன் தவம் பண்ணிய சிறு குன்று கோயிலும் உள்ளன -லவணாசுரன் ஒளிந்து இருந்த குகையையும் காணலாம்
13–குமுதவனம் -தாளவானத்தில் இருந்து மேற்கே -2-மைல் தொலைவில் உள்ள இங்கு கோபிகளுக்கு குமுத மலர்களை கண்ணன் சூட்டி விடுவபானாம்
இங்கு தாமரை மலர்கள் நிறைந்த பத்ம குண்டத்தின் கரையில் கபில முனிவர் பல காலம் தவம் புரிந்தார் –

———————————————–

வடமதுரை என்னும் மதுரா

. “மதுரா நாம நகரி புண்யா பாபஹரி சுபா”
என்னும் புராண ஸ்லோஹத்தின் படி மதுரா நகரம் பாபங்களைத் தொலைத்து புண்ணியத்தை தரக்கூடியதாகவும்,மங்கலங்களுக்கு இருப்பிடமாகவும் உள்ள ஊர் ஆகும். இதுவே கண்ணனின் பிறப்பிடமாகும்

இந்நகரம் யுகம்தொரும் பாகவத சம்மந்தம் பெற்ற ஊர் என்கிறார்கள். க்ருத யாகத்தில் துருவன் யமுனைக்கரையில் தவம புரிந்து பகவானை தரிசித்தான். த்ரேதா யுகத்தில் இதே ஊரில் லவனாசுரன் என்ற அரக்கனைக்கொன்று சத்துருக்க்ணன் மதுரா எனப் பெயரிட்டு ஆண்டு வந்தான் என குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் கூறுகிறார்.

ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில்

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா ……

என்று ,கொண்டாடப்படும் ஊர்  மதுரா நகரமாகும்.

பெரியாழ்வார், தனது திருமொழியில்

வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென்னும் கடிநகரே.

ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்

அன்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்

மண்ணின் பாரம் நீக்குவதற்கு வடமதுரையில் கண்ணன் வந்து பிறந்தான், கண்ணன் அல்லால் மற்றொரு தெய்வம் இல்லை என்று உணருவீர், அவனைச் சரண் அடைந்து உய்ம்மின்
என்று, கூறு கிறார்.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால் இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும், வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.
ஆதாரம்:
திவ்யதேச மாஹாத்ம்யம்— தொகுத்தவர்; வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள். மூன்றாம் பதிப்பு, கிஞ்சித்காரம் டிரஸ்ட், 6, பீமசேனா கார்டன் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
கண்ணன் பிறந்த இடத்தையும் மற்றும் மதுராவில் கண்ணனுக்கு வேண்டிய இடங்களையும் காண்போம்.
க்ருஷ்ண ஜன்ம பூமி யின்  முகப்பு

1. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி.
கம்சனின் அரண்மனையில் ஒருகாட்சி::
தேவகிக்கும் வசுதேவருக்கும் மாங்கல்யதாரணம் நடத்துவது என்று கம்சன் தீர்மானிக்கிறான். உரிய நாளில் திருமணம் செய்து அவர்களை ரதத்தில் ஏற்றி பாசத்துடன் வழியனுப்ப தயாராகிறான். அந்த சமயம், வானத்தில்
“கம்சா, தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் உனக்கு எமன்”
என்று அசரரி கேட்கிறது. கம்சன் திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு வழியனுப்புவதை நிறுத்திவிட்டு,
“இவர்கள் இருவரையும் உடனே கொல்லுங்கள்”
என தனது ஆட்களுக்கு ஆணை இடுகிறான். அதிர்ச்சி அடைந்த வசுதேவர், கம்சனிடம்,
” கம்சா,எங்களுக்கு பிறக்கும் எட்டாவது மகன் தானே உனக்கு எமன். நாங்கள் என்ன பாவம் செய்தோம்.எங்களுக்கு பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்து விடுகிறோம். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எங்களைக் கொன்று அந்தப் பாவத்தை வேறு நீ ஏன் பெறவேண்டும்”, என்று பலவாறு அவனுக்கு அறிவுரை சொல்கிறார். ஒருவாறு சமாதானம் அடைந்த கம்சன்,
“இவர்கள் சொல்வதும் சரிதான். “இவர்களை சிறையிலடையுங்கள். இவர்களுக்கு தக்க பாதுகாப்புப் போடுங்கள்.இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்”,
என்று தனது ஆட்களுக்கு ஆணையிடுகிறான்.
நாட்கள் சென்றன. தேவகியும் கருவுற்றாள்.குழந்தை பிறந்த செய்தி கேட்டு,கம்சனும் அந்தக் குழந்தையை உடன் பெற்று கொன்றான்.இது மாதிரி ஆறு குழ்ந்தைகளிக் கம்சன் தொடர்ச்சியாகக் கொன்றான். தேவகி ஏழாவது கர்ப்பம் தரித்தாள்.அந்த சமயத்த்தில் விஷ்ணு பகவான் தன் யோகமாயையை கூப்பிட்டு
“ரோகிணி கோகுலத்தில் வாழ்கிறாள். நீ தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை வெளியே இழுத்துக்கொண்டு போய் ரோஹினியின் கர்ப்பத்தில் வைத்து விடு. தேவகிக்கு கர்ப்பச் சிதைவு என்று கம்சனிடம் சொல்லிவிடுவார்கள்”
என்று ஆணையிடுகிறான். இந்தக் குழந்தைதான் பலராமன்.
“மேலும் நீ போய் கோகுலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் பெண் குழந்தையாக பிற.நான் தேவகியின் எட்டாவது மகனாக மதுரையில் பிறந்து, என்னை வசுதேவர் யமுனையைத் தாண்டி கோகுலத்தில் கொண்டு விட்டு, உன்னை எடுத்துக் கொண்டு வந்து கம்சனிடம் எட்டாவது குழந்தையாகக் கொடுப்பார்.உன்னைக் கம்சன் கொள்ள முற்படும்போது நீ நடந்ததைச் சொல்லி விட்டு மறைந்து விடு”,
என்று ஆணை இடுகிறார்.
அந்தக் கண்ணன் அவதரித்த சிறைச்சாலை. இங்கேதான் வசுதேவரும்,தேவகியும்அடைக்கப்பட்டு இருந்தார்கள். இங்கு தான் எட்டாவது குழந்தையாக கண்ணன், தந்தையின் காலில் விலங்குகள் அவிழ, நான்கு தோள்களோட சகல ஆயுதங்களுடன்,ஆபரங்களுடன் பிறந்தான்.தனது ஜன்ம ரகசியத்தை பெற்றோர்களுக்கு வெளியிட்டு பின்னர் அதை மறக்கும்படி செய்தான்.எனவே வசுதேவர் கண்ணனைக் கொண்டுபோய் கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டுவிட்டு அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு அடுத்துச் சென்றார்.
இவைகள் நடந்த இடம்தான் நாம் பார்க்கும் சிறைச்சாலை. புராதனமான கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரனாபன் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பல படை எடுப்புக்களால் தற்போது உள்ள நிலையில் உள்ளது. பக்கத்திலேயே முகமதியர்களின் மஸூதி உள்ளதால் பாதுகாப்பு அதிகம் உள்ளது.கைபேசி,காமிராக்களைக் கொண்டு போகவேண்டாம்.

2.கேசவ்சி மந்திர்:

ஜன்ம பூமிக்கு அருகில் உள்ளது.புராதனமான கோயில்.கம்சனின் சிறை முன்னொரு காலத்தில் இங்கு வரை இருந்ததாகச் சொல்வார்கள்.இங்குள்ள மூர்த்தியை 24 அலங்காரகளாலும் அலங்கரித்து உள்ளார்கள்.மேலும் தேவகியும் வசுதேவரும் வணங்கிய மூர்த்தியாகும்.

போதரா குண்டம்

3.போத்ரா குண்டம்:
ஜன்ம பூமிக்கு அருகில் மிக அழகான குளம்.”பவித்ர குண்டம்” என்ற சொல் மருவி “போத்ரா குண்டம்” என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ளபோது,வசுதேவரும்,தேவகியும் நீராடி துணி துவைப்பார்களாம்.
4.கம்சா டீலா ,ரங்கா பூமி:
அஞ்சலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இங்கு தான் கண்ணன் முஷ்டிக மற்றும் சாணுரர்களை சண்டை இட்ட இடம்.இங்கே இருந்த குன்றின்மேல் அமர்ந்து இருந்த கம்சனையும் கீழே தள்ளி கொன்றானாம்.

ஆதி  வராஹ முர்த்தி

5.ஆதிவராஹ மூர்த்தி:
முன்னொரு காலத்தில் மதுரா வராஹ ஷேத்திரமாக இருந்ததாம் அயோத்திலிருந்து சத்ருக்க்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
6.த்வாரகா தீசன் சந்நிதி:
த்வாரகா தீசன் சந்நிதி ,விஸ்ராம் காட், த்ருவ டீலா ஆகியவை யமுனை நதிக்ரைக்கு அருகாமையில் உள்ளன. எனவே வாகனத்தில் சென்று பார்ப்பவர்கள் வாகனத்தை பெங்கால் காட் அருகே நிறுத்தி வைத்துக் கொண்டு தரிசிப்பது நலம். த்வாரகா தீசன் சந்நிதி 150 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லபாசார்யா சம்பிரதாயத்தில் கட்டப்பட்டது. ருக்மிணி சத்யபாமா சமேத கணணன் எழுந்தருளி உள்ளான்.

விஸ்ராம் காட் மதுரா

7.விஸ்ராம் காட்:
கண்ணன் கம்சனை முடித்து அவனுடைய அந்திமகிரியைகளை “த்ருவ காட்டில்” செய்து விட்டு நீராடி ஓய்வேடுத்தான் என்பர்.இது 24 தீர்த்தங்களுள் முக்கியமானது ஆகும்.யமுனைக் கரையில் உள்ளது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்விதீயை “யமத்விதீயை”, அன்று இங்கு நீராடினால் சம்சாரத்தில் இருந்து ஒய்வு கிடைக்குமாம்.
8.த்ருவ டீலா:
யமுனையின் மற்றொரு கரையில் உள்ள இந்த இடத்தில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான்.பாதை சரியில்லாமல் உள்ளதால், இதனை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளவேண்டும்.
தாள வனம்  மதுரா

9.தாள வனம்:
மதுரைக்குத் தெற்கே 6 மைல் தொலைவில் உள்ளது.இங்கு பலராமன் கோயிலும் குண்டமும் உள்ளன.

10.மது வனம்: மதுரைக்கு தென்மேற்கே உள்ளது. இங்கு மது என்ற அசூரனைக் கொன்றதால் மதுவனம் எனப்பட்டது இதைத் தவிர இன்னும் பல இடங்கள் பாதை சரியில்லாமல் இருக்கின்றன.

————–

ஶ்ரீமது⁴ராபுரீஸ்துதி:

ஶ்வேதத்³வீபமதி⁴ஷ்டி²தா ஸுவிபுலா ஸா ஸத்யலோகஸ்தி²தா
சாயோத்⁴யா ச குஶஸ்த²லீ மது⁴புரீத்யத்யுஜ்ஜ்வலா நிஸ்துலா: ।
பஞ்ச ஶ்ரீகமிது: ப்ரபஞ்சகுஹரே புர்ய: ஸ்பு²ரந்தி ஸ்பு²டம்
தாஸாம் மத்⁴யக³தா விபா⁴தி மது⁴ரா ஸா ஹந்த ஸர்வோத்தரா ॥ 1॥
காஞ்சீ காஶிபுரீ ச ஸா புநரயோத்⁴யா ஸாபி சாவந்திகா
மாயாக்²யா ச குஶஸ்த²லீ மது⁴புரீத்யத்யந்தபுண்யோத்தரா: ।
புர்ய: ஸப்த ஸமுல்லஸந்தி பரித: க்ஷோணீதலே தாஸ்வஹோ
மத்⁴யஸ்தா² மது⁴ரா விராஜதி ஸரோமத்⁴யே யதா²ம்போ⁴ருஹம் ॥ 2॥
வ்ரு’ந்தா³ரண்யப்³ரு’ஹத்³வநம் மது⁴வநம் தாலாடவீ ஶ்ரீவநம்
ப⁴த்³ராக்²யம் குமுதா³டவீ ச ப³குளாரண்யஞ்ச லோத்⁴ராடவீ ।
மாண்டீ³ராக்²யவநம் ததை²வ க²தி³ராரண்யஞ்ச காத்யாடவீத்யேதைர்த்³வாத³ஶபி⁴ர்வநை: பரிவ்ரு’தா ஜேஜேதி ஸா பூ⁴தலே ॥ 3॥
யோகீ³ந்த்³ராத்³ரு’தபுண்யதோயமரிதா பா⁴கீ³ரதீ²ஸங்க³தா
காளிந்தீ³ பரிகே²வ யத்ர ஸரிதாமக்³ரேஸரீ பா⁴ஸதே ।
ஶ்ரீகோ³வர்த⁴நரோஹிதாதி³பி⁴ரக³ஶ்ரேஷ்டை²ஶ்ச கோ³ஷ்டை²ர்வ்ரு’தா
ஸா கோ³பாலபுரீ விபா⁴தி மது⁴ரா நாம ப்ரபஞ்சோத³ரே ॥ 4॥
நிர்மாந்தி ஸ்மாதிரப்⁴யாமஹஹ தி³விஷதோ³ யாம் புரைவாதி³காலே
த⁴ர்மாஸக்தாந்தராத்மா ப³ஹுயுக³மவஸத்³யத்ர மத்⁴வாக்²யதை³த்ய: ।
நிர்மாயைர்மாநவௌகை⁴ஸ்ஸததபரிக³தா நிர்மலா ஶர்மதா³த்ரீ
ஸேயம் நிர்வாணபூ⁴மிர்ஜயதி மது⁴புரீ ஸர்வகீ³ர்வாணஸேவ்யா ॥ 5॥
தி³வ்யாம் தி³வ்யைகபோ⁴க்³யாம் மணிக³ணகிரணாபூரிதாஶேஷலோகாம்
மர்த்யாநாம் து³ர்விலோகாம் மது⁴ஸுதமத²நே யாம் புரா கோஸலேந்த்³ர: ।
கீ³ர்வாணாநாம் ப்ரஸாதா³த³க்ரு’த நிஜபுரீம் தி⁴க்க்ரு’தஸ்வர்க³லோகாம்
தாம் ஸாக்ஷாத்³ ப்³ரஹ்மகோ³பாலகத³யிதபுரீமீக்ஷிதாஹே கதா³ நு ॥ 6॥
யத்ராவிர்பூ⁴ய பூ⁴யஸ்தரநிஜகலயா கூ³ட⁴மத்⁴யாஸ்த கோ³ஷ்டம்
யாமேவாப்⁴யேத்ய பூ⁴ய:க்ஷிதிபதிமகரோது³க்³ரஸேநம் முராரி: ।
யாமக்³ரே ஶூரஸேநஶ்சிரமநுபு³பு⁴ஜே வஜ்ரமுக்²யாஸ்ததா²ந்தே
ஸேயம் வ்ரு’ஷ்ணீஶ்வரஸ்ய ப்ரியதமநக³ரீ லாலஸீதி த்ரிலோக்யாம் ॥
ஹ்ரு’ஷ்டாத்மா முஷ்டிகாரிப்ரமுக²யது³வரைர்த்³வ்யஷ்டஸாஹஸ்ரயோஷாஜுஷ்ட: ஸம்ம்ரு’ஷ்டஶக்ரோபலதுலிதருசிர்யத்ர சிக்ரீட³ சக்ரீ ।
சக்ராத்³யைஶ்ஶஸ்த்ரஜாலைரபி⁴தநிஜமஹஶ்சக்ரவித்³யோதிதாஶாசக்ரைராபாலிதா ஸா ஜயதி மது⁴புரீ ஶக்ரமுக்²யைர்நிஷேவ்யா ॥ 8॥
யஸ்யாம் யத்ஸந்நிதௌ⁴ வா க்வசித³பி விபிநே யாம் பரீத்ய ஸ்தி²தாஸு
த்³வார்வத்யாத்³யாஸு வாபி ப்ரதி²தஹரிஹரக்ஷேத்ரதீர்தா²ங்கிதேஷு ।
ப்ரேதா ஜாதா: ஸ்தி²தா வா ந க²லு ஶமலவந்தோऽபி பஶ்யந்தி கோ⁴ராந்
ப்ரேதாதீ⁴ஶஸ்ய தூ³தாநபி ப³த மது⁴ராம் தாம் வ்ரஜேமாஶுபா⁴ந்தாம் ॥ 9॥
வ்யுஷ்ட்யாம் தி³ஷ்ட்யாபி யஸ்யா: ஸ்ம்ரு’திரகி²லந்ரு’ணாம் ஹந்த நக்தந்தி³வாந்தர்ஜாதம் ஸர்வாக⁴ஜாதம் க்ஷபயதி தரஸா மங்க³ளஞ்சாதநோதி ।
ஸேயம் ஶ்ரேயஸ்ஸ்வரூபா தி³நகரது³ஹிது: பஶ்சிமே தீரபா⁴கே³
கா³ட⁴ம் பா³பா⁴தி ப்ரு’த்²வீகுசப⁴ரகலிதா சந்த்³ரலேகே²வ ப்ரு’த்²வீ ॥ 10॥
நித்யம் யத்ர பரிஸ்பு²ரத்ஸு நிதராம் புண்யேஷ்வரண்யேஷ்வஹோ
ராமாத்³யா நிவஸந்தி தை³வதக³ணோபாஸ்யா ஹரேர்மூர்தய: ।
ந்ரு’த்யந்த்யப்ஸரஸ: ஸஹாமரக³ணைரத்யந்தஹர்ஷோத³யாதி³த்த²ம்பூ⁴தமஹோத³யா மது⁴புரீ ஜேஜேதி ஸா பூ⁴தலே ॥ 11॥
த்³ரு’ஶ்யா விஷ்ணுபதோ³ஜ்ஜ்வலா ஸுவிமலா நிஶ்ஶேஷதாபார்தி³நீ
ஶஶ்வத்³விஶ்வஜநேஷு சித்³ரஸஸுதா⁴நிஷ்யந்த³ஸந்தோ³ஹிநீ ।
காளிந்தீ³ஸரித³ம்பு³பி³ம்பி³தகலாநாதா²ர்த²பி³ம்போ³பமா
மௌகுந்தோ³ பரிலாலஸீதி நக³ரீ ஸேயம் த⁴ரித்ரீதலே ॥ 12॥
யா கு³ப்தா மது⁴நா புரா மது⁴புரீத்யாக்²யாமவாப ஸ்பு²டாம்
ஸத்³ய: பாபநிமந்த²நேந மது²ரேத்யாக்²யாயதே யா பு³தை:⁴ ।
யாம் லோகே மது⁴ரேதி சாபி⁴த³த⁴தே மாது⁴ர்யஸர்வங்கஷாம்
வ்ரு’ஷ்ணீநாம் நியதா புரீ விஜயதே ஸேயம் த⁴ராமண்ட³லே ॥ 13॥
உத்³யாத்³விரு’மஶாலிநாம் நிஜயஶ:ப்ரத்³யோதஶௌர்யோஷ்மபி:⁴
க²த்³யோதீக்ரு’தலோகபாலமஹஸாம் சக்ராயுதா⁴லம்பி³நாம் ।
ஆவாஸாத்கில ஶூரஸேநந்ரு’பதீநாம் ஶௌரஸேநீதி ஸா
விக்²யாதா பு⁴வநே விகுண்ட²ப⁴வநப்ரக்²யா விஜேஜீயதே ॥ 14॥
யஸ்யாம் த்⁴யாதுர்முகுந்த:³ ப்ரதி³ஶதி ப⁴க³வாநாஶு முக்தி விஶேஷாத்³யஸ்யாமஷ்டச்ச²தா³ட்⁴யா விகஸதி விலஸச்சித்தபத்³மம் த்ரிலோக்யா: ।
யஸ்யாம் திஷ்ட²ந்தி ஹ்ரு’ஷ்டாஸ்ஸததமபி ஹரிம் த்³ரஷ்டுமஷ்டௌ தி³கீ³ஶா
விஶ்வோத்க்ரு’ஷ்டா ஸுபுஷ்டா விலஸதி மது⁴ரா நாம ஸா ராஜதா⁴நீ ॥ 15॥
அஶ்ராந்தாநந்தஶக்தே: பஶுபகுலஶிஶோர்நித்யலீலாநிகேதைர்விஶ்ராந்த்யாத்³யை: பவித்ரைர்ஹரிஹரகி³ரிஜாமந்தி³ரைரங்கிதாயாம் ।
அஶ்ராந்தம் ஹந்த விஶ்வேஶ்வரமஹிதமஹாவிஷ்ணுபுர்யாமமுஷ்யாம்
விஶ்ராந்திம் ஸ்வாந்த! குர்யாஸ்த்வமிஹ ப⁴வபதே² மா வ்ரு’தை²வ வ்யதே²தா:² ॥16॥
யஸ்யாம் பீ⁴மோர்மிசக்ராஹதிமதிபருஷாம் தூ³ரதோ வாரயந்த்யாம்
ஶ்ரீமத்³வைகுண்ட²நாமா பஶுபகுலஶிஶு: கோऽபி ஸத்கர்ணதா⁴ர: ।
காளிந்தீ³தீரநிஷ்டா²ம் யது³பதிநக³ரீநாமதே⁴யாம் க³ரிஷ்டா²ம்
ஸம்ஸாராப்³தே⁴ஸ்தரீம் தாமதுலஸுக²கரீம் கா³ட⁴மத்³யாவலம்பே³ ॥ 17॥
யஸ்யாம் ஹா ஹந்த விஶ்வாத்³பு⁴தமநுஜகிஶோராக்ரு’தேஶ்சக்ரபாணேர்லீலாவம்ஶீரவாஸ்வாத³நபரமசிதா³நந்த³ஸித்³தா⁴ நிமக்³நா: ।
யோகீ³ந்த்³ராஸ்தாத்³விகுண்டா²ஸ்பத³மபி⁴லஷிதம் நாதி⁴ரோடு⁴ம் க்ஷமந்தே
தஸ்யௌँகோ³பாலபுர்யா: ஶிவ ஶிவ ! மஹிமோத்³ரேகஸீம்நே நமோऽஸ்து ॥18॥
கா³டோ⁴த்³பா⁴ஸிகுஶஸ்த²லீமுக²ஜக³ந்நாதா²தி⁴வாஸஸ்த²லீ
மத்⁴யஸ்த²ம் நிஜரோசிஷைவ ஹரிதாமாபூரயந்மண்ட³லம் ।
ஶ்ரீமந்மாது⁴ரமண்ட³லம் விஜயதே மத்⁴யேத⁴ராமண்ட³லம்
ஜ்யோதிர்மண்ட³லமத்⁴யக³ம் தி³வி யதா² தாராபதேர்மண்ட³லம் ॥ 19॥
ஶ்ரீகோ³பாலகமலமூர்திரமலா ஸாரா ஸலீலோத்ஸுகா
தாருண்யோத³யராமணீயகஹடா²க்ரு’ஷ்டத்ரிலோகீமநா: ।
யஸ்மிந் கே²லதி வேணுநாத³லஹரீ நிர்மஜ்ஜிதாஶாமுகா²
தஸ்மிந் மாது⁴ரமண்ட³லே ப⁴வது மே கு³ல்மாதி³ஜந்மாபி வா ॥ 20॥
இத்யேதாம் மது⁴ராபுரீஸ்துதிகதா²ம் ஶ்ருத்யந்தஸாரோதி³தாம்
ப்ரத்யூஷே ப்ரதிபு³த்⁴ய ஶுத்³த⁴மநஸா நித்யம் பட²ந் மாநவ: ।
ம்ரு’த்யோர்மஸ்ததடார்பிதாஙக்⁴ரிரகி²லாந் பு⁴க்த்வேஹ போ⁴கோ³த்கரா
நத்யுத்க்ரு’ஷ்டமகுண்ட²தா⁴ம தத³ஹோ வைகுண்ட²தா⁴ம வ்ரஜேத் ॥ 21॥
இதி ஶ்ரீமது⁴ராபுரீஸ்துதி: ஸமாப்தா ।
——–
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம் |மஹார்ஹ வைடூர்ய கிரீடகுண்டல-
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி:
விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத ||
( சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் , திருமறு,
கவுத்துவம், வனமாலை தாங்கிய மார்பு, பீதகவாடை, மின்னும் முடி-
குண்டலங்கள், மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்)ஏன் அற்புதம் என்னும் அடைமொழி?அவதரிக்கும்போதே ‘தர்ஹி மாம் கோகுலம் நய’ (என்னை கோகுலம் எடுத்துச்
செல்) என்று தகப்பனுக்கு ஆணையிட்டதால். அம்புலிப்பருவத்தில் அசுரரை
மாய்த்ததால், காளியன் செருக்கை அடக்கியதால், குரவை கோத்ததால்,
மதுரையில் காட்டிய மாவீரத்தால், வெஞ்சொல் தந்தவனுக்கும் வீடு தந்ததால்,
பஞ்சவரைப்பல வகையிலும் காத்ததால், போர்க்களத்தில் ப்ரம்மவித்தை
பகர்ந்ததால், பகல் நடுவே இரவழைத்ததால், இன்னும் பல ஆனைத்தொழில் களால்,
துவாரகை என்ற பொன்னகர் பொங்கும் கடலினுள் புகுந்ததையும் ஒட்டுதல்
இல்லாமல் புன்முறுவலோடு ஏற்றதால்—————-‘அவதாரம்’ என்றால் என்ன ?ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யத்தின் முன்னுரையில் ஸ்ரீ ஆதி சங்கர
பகவத்பாதர் அவர்கள் எழுதியிருப்பது –

“ப்ரபஞ்சம் முழுதும் ‘அவ்யக்தம்’ என்னும் மூலப்ரக்ருதியாகிய மாயைக்குள்
வசப்பட்டிருக்க, பரம புருஷனாகிய நாராயணன் மட்டும் அம்மாயைக்கு
அப்பாற்பட்டவனாகத் திகழ்கிறான்”

”ஆதி கர்த்தாவாகிய ‘நாராயணன்’ எனும் நாமத்தை உடைய (ஆதிகர்த்தா
நாராயணாக்ய:) விஷ்ணுவானவன், ஸநாதந தர்மத்தைப் பேணும் பொருட்டு தேவகி
தேவிக்கும், ஸ்ரீவஸு தேவருக்கும் ‘க்ருஷ்ணன்’ என்னும் திரு நாமத்துடன்
மகனாக அவதரித்தான். ஞானம், ஐசுவர்யம், பலம், வீர்யம், சக்தி, தேஜஸ்
ஆகியவற்றை எப்பொழுதும் தன்னிடம் இயல்பாகவே பெற்றுள்ள பகவான் பிறப்பு-
இறப்பு அற்றவனாக, அனைத்துயிர்களையும் ஆளும் தன்மை உடையவனாக, நித்ய.
சுத்த,புத்த, முக்த னாகவே எப்பொழுதும் விளங்குவதால் தன் ஒப்பற்ற
ஆற்றலால் ஓரழகிய வடிவம் பூண்டு (சாமானிய ஜீவர்களைப் போல்
ப்ரக்ருதிக்கு வசப்பட்டுப் பிறப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி )
ஜீவகோடிகளுக்குப் பேரருள் புரிகிறான். ”

கண்ணன் பிறந்த தினம்

ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப்
பிரகாசத் திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில்,
உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்
என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம்
தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலை வனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும்
நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின்
மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயநத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீகிருஷ்ண பக்ஷ
அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு
நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு ஓர்
இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது.
இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது
சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ
கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி
பக்ஷத்தின் நடுவில் வருவதால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ
கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது ஸ்ரீ
கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள்
எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம்.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ
கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.

அவனுடைய பெயரும் கிருஷ்ணன். ‘கிருஷ்ண’ என்றால் கருப்பு என்று பொருள்.
அவனது மேனியும் கறுப்பு.

இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்பவித்தாலும் அவனே
ஞான ஒளி. நல்ல காளமேகங்களாகளிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு
நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்னும்
என்றும் ஜ்வலித்துக் கொண்டி ருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும்
உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின்
பெருமை பிரகாசிக் கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந் திருக்கும் ’ஸ்ரீமத்
பாகவதம்’ புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.

உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக
உயிர்களுகெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம்
தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகி விட்டான்.
அகக்ண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம்
அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச
சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்திக் குளிர வைக்கும் அந்தக் கண்ணனே
நம் உலகுக்குக் கண்.

ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து
நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு
மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும்
ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்கள்
ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், ( நக்நஜித் என்ற ராஜாவின்
பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்து கொள்வதற்கு நிபந்தனையாக ஏழு
காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன்,
ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, த்ரௌபதி போல் தீர்க்க முடியாத
கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற
அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியே அளித்தவன்.
பீஷ்மருக்கு மாத்திரமல்ல – தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த
வேடனுக்கும் முக்தி கொடுப்பவன் – இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.

உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாகிய அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக
ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும்
ஸ்த்ரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும்,
இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சக்காரனும்,
கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான
மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம்
உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களாகக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ
அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு
திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஒர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர்
உல்லாஸ புருஷனின் கேளிக்கைகளே சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன்
நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக,
கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல
போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்
தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும்
பாத்திர மாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூர்ணாவதாரம்.

சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 108 நாள் இடை வெளி
இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கங்கள் உதித்தது. அதுவேதான்
இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக் கொண்டாலும், உள்ளே
ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இந்த க்ஷேத்திரமும் ஒன்று. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

இந்த `விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா’ எனப்படும். கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர் சிலர் அது கோவர்தன பரிக்ரமா எனப்படும். சிலர் மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. இப்படி பரிக்ரமா பல உள்ளன. நேர, கால, தேக சௌகர்யங்களுக்கு ஏற்ப மக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்பதை இன்றும் நாம் கண்கூடாக காணலாம்.

கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி’யில் உள்ளன. `பிருந்தா’ என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன. அவை, மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுத வனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம், பில்வவனம்.

மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, கேசவ தேவ் கோயில் என்று பெயரிட்டுள்ளனர்.  தற்பொழுது பாதுகாப்பு படையினரால் காக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்குள் சென்று விட்ட பின் மிகவும் அருமையாக அனுபவிக்க வேண்டிய இடம். எல்லாவற்றையும் அடைந்த கண்ணன், நமக்காக இந்த சிறைச்சாலையில் வந்து பிறந்து பற்பல லீலைகள் புரிந்ததை நினைத்தால் நம் கண்களில் கண்ணீர் குடிகொண்டுவிடும்.

கிருஷ்ணனின் அவதார ஸ்தலமான கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏற்றவாறு பெரிய மண்டபங்களும், மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பிருந்தாவனத்தில் தமிழ்நாட்டு முறைப்படி அமைக்கப்பட்ட ரங்கமந்திர் என்று அழைக்கப்படும் விசாலமான கோவில் அல்லது ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. இதில் ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள், திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர் களுக்கு சன்னதிகள் உண்டு.

கோகுலாஷ்டமி அல்லது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்

இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, உதாரணத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் சேர்த்து பாடப்பட்டுள்ளது. கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து ஆயர்பாடிக்கு/ஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபாலன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.

இந்த மதுரா நகரம் எல்லா யுகங்களிலும் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரமாகும். ஸ்ரீவாமனனாய் எம்பெருமான் திருஅவதாரம் செய்த போது, இங்கு தவம் புரிந்து இருந்தார்.

பின்பு, த்ரேதா யுகத்தில், மது என்னும் பெயரில் சிறந்து விளங்கியது. ஒரு சமயம், அந்நகரை அரசாண்டு வந்த லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்து, ரிஷிகள் நடத்தும் யாகங்களை அழித்து அவர்களுக்கு துன்பம் கொடுத்து வந்தான். இதனால் சில ரிஷிகள் இராமபிரானிடம் சென்று விசுவாமித்திரருக்கு உதவியது போல, லவணாசுரனை கொன்று தங்களை காத்திட வேண்டும் என்று வேண்டினர். ராமன் தன் தம்பி சத்ருக்னனை அனுப்பி லவணாசுரனை அழித்தான். சத்ருக்னன் மாத்ரா நகரத்தை விரிவாக்கி நெடுங்காலம் ஆண்டு வந்தான் .

கிருஷ்ணனாய் இங்கு அவதரித்ததாலும், இப்படி பல யுகங்களில் திருவடமதுரைக்கு பகவத்ஸம்பந்தம் தொடர்ந்து வருவதால், ஆண்டாள் மன்னு வடமதுரை என்று கூறுகிறார்.

கண்ணன் ஆயர்பாடியில் வாழ்ந்த சமயம், அங்கு இந்திர பூஜை நடப்பது வழக்கம். அதன்படி இந்திரனுக்கு, ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழையை வேண்டுவார்கள். கண்ணன், இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுஇருந்த போது, என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக, இந்திரனுக்குப் பிடித்தமான
உணவு வகைகளைச் செய்து அவனுக்கு படைப்போம், அதனைக்கொண்டு அவன் மழை கொடுப்பான் என்று சொன்னார்கள். அதற்கு கண்ணன், மழையை கொடுப்பது இந்த கோவர்த்தன மலை தான் என்றும், இந்திரனுக்கு படைக்க வேண்டாம் என்று சொன்னான். அந்த ஊரில், கண்ணன் சொன்னதை மறுப்பவர் கிடையாது, அவன் அந்த மக்களுக்கு மிக பிரியமானவன். கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை கொடுக்க சொல்லி, தானே கோவர்த்தன மலையாக இருந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டான்.

இதனால் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி, அங்கிருந்த ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் தொல்லை கொடுத்து ஏழு நாட்கள் கடுமையான மழையால் அவதிக்குள்ளாக்கினான். மனிதர்களும், ஆடுமாடுகளும் கஷ்டப்படுவதை கண்ட கண்ணன், அந்த அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினான். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். அந்த மலை கோவர்தன மலை என்றும், அதனை குடையாக பிடித்து அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான் என்பது குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் வரலாறு என்றும் கூறப்படும். கண்ணனின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார் . அந்த மலை, அவர்களை காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கண்ணன்,  கோவர்தனன் என்றும் பெயர் பெற்றார். அந்த கோவர்த்தன மலை இன்றும் கொண்டாப்பட்டு, மக்கள் பரிக்ரமா என்ற கால்நடையாக அந்த மலையை சுற்றி வருகிறார்கள்; இது சுமார் 26 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.

ஹரிதேவரின் கோயில் என்ற இடத்தில கிருஷ்ணர் நாராயண ரூபத்தில் வீற்று இருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே.  இக்கோயிலுக்கு அருகில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது. இந்திரன், ஸ்ரீ கிருஷ்ணரை நீராட்டிய பிறகு, அனைத்து தேவர்களும் புனித நதிகளும் சாதுக்களும் கிருஷ்ணரை நீராட்டினார்கள். அப்போது பிரம்மாவும் கிருஷ்ணரை நீராட்டினார். அந்த நீரே குளமாக மாறி பிரம்ம குண்டம் என்று அறியப்படுகிறது.

லக்ஷ்மி நாராயண கோயில்: ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர்.

இதற்கு அருகில் இருக்கும், தான கடி என்னுமிடத்தில் கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கோபியர்களிடம் வரி வசூல் செய்தனர். அதாவது, கோபியர்கள் சுமந்து சென்ற பால், தயிர் போன்ற பொருட்களில் சிலவற்றை வலுக்கட்டாயமாக வரியாக பெற்று கொண்ட லீலை இவ்விடத்தில்தான் நடைபெற்றது.

அடுத்து, அனியோர், இங்கு சாதம், இனிப்புகள், காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது.

கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளன. ராதா குண்டம், இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது. ராதாராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை. கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது. சியாம குண்டமும் ராதா குண்டமும் அருகருகில் அமைந்துள்ளன.

குசும சரோவர் என்ற இடத்தில், கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். இதற்கு அருகில் உத்தவரின் கோயிலும் உள்ளது. கோபியர்களின் உயர்ந்த பக்தியை கண்ட உத்தவர், விருந்தாவனத்தில் ஒரு புல்லாகப் பிறக்க வேண்டும் என்றும், கோபியர்களின் பாதங்கள் தன்மீது பட வேண்டும் என்றும் பிரியப்பட்டார். இங்கே உத்தவர் புல்லின் வடிவில் வசிக்கிறார். இவ்விடத்திற்கு அருகில் நாரத வனம் இருக்கிறது. இங்கு நாரத முனிவர் நாரத பக்தி சூத்திரத்தை இயற்றியதோடு, விருந்த தேவியின் உபதேசத்தை ஏற்று இவ்விடத்தில் தவமும் புரிந்தா

————-

ஸ்ரீ விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம்-
சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை. டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் உள்ள இத்திருத்தலத்தை சேவித்தவரை சேவித்தாலே பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதை ஆதி வராஹ புராணத்தில் காண்கிறோம். 168 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட விரஜ மண்டலத்தில்137 காடுகள் உள்ளபோதிலும், பன்னிரண்டு காடுகள் மிகவும் முக்கியமானவை: மதுவனம், தாலவனம், குமுதவனம், கதிரவனம், மஹாவனம், பத்ரவனம், பாண்டீரவனம், பில்வவனம், லௌஹவனம், பஹுலாவனம், காம்யவனம், மற்றும் விருந்தாவனம். மொத்த விரஜ மண்டலமும் விருந்தாவனம் என்று அழைக்கப்படும்போதிலும், விருந்தாவனம் என்று குறிப்பிட்ட ஒரு வனமும் உண்டு.
🌺உத்தரை மற்றும் பரீக்ஷித் மஹாராஜனின் உதவியுடன் கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபரால் விருந்தாவனத்தில் கிருஷ்ணரின் பல்வேறு திருவுருவங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. காலப்போக்கில், அவையாவும் வனத்தினுள் மறைந்தும் புதைந்தும் போயின. சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆலோசனையின் பேரில் அவற்றைக் கண்டெடுத்த கோஸ்வாமிகள், பிரம்மாண்டமான கோவில்களை நியமித்து முறைப்படி பூஜையைத் தொடங்கினர்.
⭕பின்னர், முகலாய மன்னனான ஔரங்கசீப் காலத்தில், இந்துக் கோவில்களின் மீதான அதிரடித் தாக்குதல்களின் காரணத்தினால், பகவானின் திருவுருவங்களை விருந்தாவன வாசிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றினர்; மதன-மோஹனர், கோவிந்தர், கோபிநாதர் என பலரும் இராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய லீலா ஸ்தலங்கள் அனைத்தையும் இங்கே முழுமையாக விவரிக்க இயலாது என்பதால், பகவத் தரிசன வாசகர்களுக்காக முக்கிய ஸ்தலங் களின் அடிப்படைக் குறிப்பினை மட்டும் இங்கு வழங்குகிறேன்.
⭕விரஜ மண்டல யாத்திரையானது ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து தொடங்குகின்றது. மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த இடத்தில் வஜ்ரநாபரால் எழுப்பப்பட்ட திருக்கோவில் காலப்போக்கில் முகலாயர்களால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு எழுப்பப்பட்ட கோவில்களும் தகர்க்கப்பட்டு, பெரிய மசூதி ஒன்று கட்டப்பட்டது. தற்போது அம்மசூதிக்கு அருகில், பிரம்மாண்டமான கோவிலும் அதனுள் சிறை போன்ற ஓர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
⭕விஷ்ராம் காட்: கம்சனை வதம் செய்த பின்னர், கிருஷ்ணர் ஓய்வெடுத்த யமுனைக் கரை, இன்று விஷ்ராம் காட் (ஓய்வெடுத்த படித்துறை) என்று அழைக்கப்படுகிறது. ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியை மீட்ட பின்னர், வராஹரும் இங்கு ஓய்வெடுத்ததாக மதுரா மஹாத்மியத்தில் காண்கிறோம். கம்சனின் கோட்டையான கம்ச திலா, கிருஷ்ணர் கம்சனைக் கொன்ற ரங்க பூமி, வியாசர் தோன்றிய வியாச திலா, அம்பரீஷ மன்னர் விரதம் மேற்கொண்ட அம்பரீஷ திலா உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்கள் மதுராவில் அமைந்துள்ளன.
⭕விருந்தாவனம், விருந்தாதேவி என்று அழைக்கப்படும் துளசிதேவியின் வனமாகும். இதனை அவர் ஸ்ரீமதி ராதாராணிக்கு பரிசளித்தபோது, இராதை இதற்கு விருந்தாவனம் என்று பெயர் சூட்டினார். இராதா கிருஷ்ணரின் ராஸ லீலை நடைபெறும் இடம் என்பதால், விருந்தாவனம் விரஜ மண்டலத்தின் மிக முக்கிய பகுதியாகும்.
⭕நிதுவனம், ஸேவா குஞ்சம்: கிருஷ்ணர் ராஸ லீலை புரிந்த இவ்விரண்டு இடங்களும் விருந்தாவனத்தில் முக்கியமானவை. நிதுவனத்தினுள் ராஸ லீலை நித்தியமாக நடைபெறுவதால், இன்றும் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் தங்குவதில்லை, இங்கு அதிகமாக இருக்கும் குரங்குகள்கூட வெளியே வருவதைக் காணலாம்.
⭕கோவில்கள்: நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்ட விருந்தாவனத்தில் ஏழு கோவில்கள் மிகவும் முக்கியமானவை: (1) ஸநாதன கோஸ்வாமியினால் வழிபடப்பட்ட இராதா மதன-மோஹனர் திருக்கோவில், (2) ரூப கோஸ்வாமியின் இராதா கோவிந்தர் திருக்கோவில், (3) மதுபண்டிதரின் இராதா கோபிநாதர் திருக்கோவில், (4) ஜீவ கோஸ்வாமியின் இராதா தாமோதரர் திருக்கோவில், (5) கோபாலபட்ட கோஸ்வாமியின் இராதா ரமணர் திருக்கோவில், (6) ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் இராதா கோகுலானந்தர் திருக்கோவில், மற்றும் (7) சியாமானந்த பண்டிதரின் இராதா சியாமசுந்தரர் திருக்கோவில்.
⭕இஸ்கான்: கிருஷ்ண பலராமர் தமது நண்பர்களுடன் விளையாடும் ரமண ரேதி என்னும் இடத்தில் ஸ்ரீல பிரபுபாதரால் கிருஷ்ண பலராமர் திருக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. இங்குள்ள விக்ரஹங்களின் கொள்ளை அழகாலும் அற்புதமான வழிபாட்டினாலும், கிருஷ்ண பலராமர் திருக்கோவில் இன்று விருந்தாவனத்தில் அதிக மக்கள் வரக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகத் திகழ்கிறது. கோவிலுக்குச் சற்று தொலைவில், நந்த மஹாராஜர் பிராமணர்களுக்கு பசுக்களை தானம் வழங்கிய இடத்தில், சுமார் 350 பசுக்களுடன் இஸ்கானின் கோசாலை அமையப் பெற்றுள்ளது.
⭕காளிய காட்: யமுனை நதியின் நீரை விஷமாக்கிய ஆயிரம் தலைகளைக் கொண்ட காளியன் என்ற பாம்பிற்கு பாடம் புகட்ட ஒரு கதம்ப மரத்தின் மீது ஏறி கிருஷ்ணர் யமுனையினுள் குதித்தார். காளியனின் கர்வத்தை அடக்கி, அவன்மீது நடனமாடினார். யமுனையின் இப்படித்துறை காளிய காட் (காளியனை அடக்கிய படித்துறை) என்று அறியப்படுகிறது. கிருஷ்ணரின் திருப்பாதம் பட்ட அந்த கதம்ப மரத்தினை 5,000 வருடங்கள் கடந்து இன்றும் தரிசிக்கலாம்.
🍎 *துவாதச-ஆதித்ய திலா:* குளிர்ந்த யமுனையில் காளியனுடன் நீண்ட நேரம் இருந்ததால், குளிர்ச்சியுற்ற தனது திருமேனிக்கு சிறிது உஷ்ணத்தை விரும்பிய கிருஷ்ணர் அருகிலிருந்த குன்றின் மீது அமர்ந்தார். அப்போது உலகின் பன்னிரண்டு ஆதித்தியர்களும் (சூரியதேவர்களும்) அங்கு ஒன்றுகூடி, பகவான்மீது சூரிய ஒளியைப் பொழிந்ததால், இவ்விடம் துவாதச-ஆதித்ய திலா (பன்னிரண்டு ஆதித்தியர்கள் தோன்றிய குன்று) என்று பெயர் பெற்றது. ஸநாதன கோஸ்வாமி இராதா மதன-மோஹனரை இங்குதான் வழிபட்டு வந்தார். மதன-மோஹனரின் அருளைப் பெற்ற ராம்தாஸ் கபூர் எனும் உப்பு வியாபாரி இவ்விடத்தில் பிரம்மாண்டமான கோவிலைக் கட்டினார். இதுவே விருந்தாவனத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும்.
⭕பிரம்ம குண்டம்: கிருஷ்ணரின் நண்பர்களைக் கடத்திச் சென்றது தவறு என்பதை உணர்ந்த பிரம்மதேவர் கண்ணீருடன் பகவானிடம் வேண்டினார். அக்கண்ணீரால் உருவான குளம், பிரம்ம குண்டமாகும்.
⭕ *கோபேஷ்வர மஹாதேவர்* : ராஸ லீலையைக் காண விரும்பிய சிவபெருமான், விருந்தாவனத்தினுள் நுழைந்தபோது கோபியர்கள் அவரையும் கோபியாக மாற்றினர். கோபேஷ்வர மஹாதேவர் என்று அழைக்கப்படும் இவருக்கு விருந்தாவனத்தில் ஒரு தனிப்பட்ட ஆலயம் உள்ளது.
⭕அக்ரூரர் காட்: அக்ரூரர் நந்த கிராமத்திலிருந்து கிருஷ்ண பலராமரை அழைத்துச் சென்றபோது, ரதத்தை யமுனையின் ஒரு கரையில் நிறுத்திவிட்டு நீராடச் சென்றார். அப்போது கரையில் இருந்த கிருஷ்ண பலராமர் இருவரும், நீரினுள் நாராயணராகவும் ஆதிஷேஷராகவும் அக்ரூரருக்கு காட்சி கொடுத்தனர். இதனால் அக்ரூரர் காட் (அக்ரூரரின் படித்துறை) என்று அறியப்படும் இவ்விடம், விருந்தாவனத்திற்கும் மதுராவிற்கும் இடையில் உள்ளது.
*#கோகுலம் (மஹாவனம்)*
⭕மதுராவிலிருந்து வசுதேவரால் யமுனையைக் கடந்து கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணர், கோகுலத்தில் நந்த மகாராஜரின் பாதுகாப்பில் அவரது மகனாக வளர்ந்தார். நந்தபவன் என்று அழைக்கப்படும் நந்த மகாராஜரின் இல்லத்தினை இங்கு செல்வோர் இன்றும் காணலாம். பகவான் இங்குதான் நந்த-லாலாவாக (நந்தரின் செல்லப் பிள்ளையாக) தவழ்ந்து விளையாடி தனது பால்ய லீலைகளை அரங்கேற்றினார். பூதனா, திருணாவ்ருதன் போன்ற அசுரர்களை கிருஷ்ணர் கொன்றதும், வெண்ணெய் பானைகளை உடைத்ததால் அன்னை யசோதையினால் விரட்டிப் பிடிக்கப்பட்டு உரலில் கட்டப்பட்டதும் இங்குதான். அந்த உரல் இன்றும் பக்தர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
⭕பிரம்மாண்ட காட்: கோகுலத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய இடம் பிரம்மாண்ட காட். யமுனைக் கரையில் அமைந்துள்ள இப்படித்துறையின் அருகில்தான், பகவான் கிருஷ்ணர் சிறு குழந்தையாக இருந்தபோது மண்ணை உட்கொண்டு, அன்னை யசோதைக்கு பிரபஞ்சம் முழுவதையும் தமது திருவாயினுள் காட்டினார். மிகவும் மென்மையான மண்ணைக் கொண்ட இவ்விடம் பிரம்மாண்ட காட் (பிரபஞ்சத்தைக் காட்டிய படித்துறை) என்று அறியப்படுகிறது.
⭕வைகுண்டத்தைவிட உயர்ந்தது மதுரா, மதுராவைவிட உயர்ந்தது விருந்தாவனம், விருந்தாவனத்தைவிட உயர்ந்தது கோவர்தன மலையாகும். ஆரம்பத்தில் 115 கிமீ நீளமும் 72 கிமீ அகலமும் 29 கிமீ உயரமும் கொண்டிருந்த கோவர்தன மலையானது, புலஸ்திய முனிவரின் சாபத்தினால் தினமும் கடுகளவு குறைந்து, தற்போது வெறும் 80 அடி உயரமாக மட்டும் காணப்படுகிறது. கலி யுகம் 10,000 வருடத்தை எட்டும்போது கோவர்தன மலை மறைந்து விடும் என்று கர்க ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
⭕கோவிந்த குண்டம்: இந்திரனின் கொடிய மழைத் தாக்குதலிலிருந்து விரஜவாசிகளைக் காப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஏழு வயதில் இடது கை சுண்டு விரலால் கோவர்தன மலையை ஏழு நாள்கள் குடையாகத் தூக்கிப் பிடித்தார். தனது அபராதத்தை உணர்ந்த இந்திரன், சுரபிப் பசு, ஐராவத யானை, மற்றும் தேவர்களுடன் வந்து மன்னிப்பை வேண்டினார். அப்போது பகவானுக்கு அபிஷேகம் செய்ததால் தேங்கிய அபிஷேக நீரானது கோவிந்த குண்டம் என அழைக்கப்படுகிறது.
#மானஸ_கங்கை: கன்றின் வடிவில் வந்த வத்ஸாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததால், அவர் கங்கைக்குச் சென்று புனித நீராட வேண்டும் என்று அவரது நண்பர்கள் கூறினர். கங்கையை கிருஷ்ணர் மனதால் நினைக்க, கோவர்தனத்தின் ஒரு பகுதியில் கங்கை ஓர் ஏரி போன்று தோன்றியது. கிருஷ்ணரின் மனதிலிருந்து தோன்றியதால், இதற்கு மானஸ கங்கா என்று பெயர்.
⭕ஒருமுறை கங்கையின் மகத்துவத்தைக் கேள்வியுற்ற விரஜவாசிகள் கங்கைக்குச் சென்று நீராட விரும்பினர். கங்கைக்குச் செல்ல வேண்டாம், கோவர்தனத்திலேயே கங்கை உள்ளது,” என்று கூறி அவர்களை கிருஷ்ணர் மானஸ கங்கைக்கு அழைத்து வந்தார். கரையில் கிருஷ்ணரைப் பார்த்த மாத்திரத்தில் அங்கு தோன்றிய கங்கா தேவியைக் கண்டு வியந்த விரஜவாசிகள் கங்கைக்கு தங்களது வந்தனங்களை செலுத்தி புனித நீராடினர்.
#குஸும்_ஸரோவர்: கோவர்தன பகுதியில் அமைந்திருந்த ஒரு தோட்டத்தில் கோபியர்கள் பறித்திருந்த மலர்களை தோட்டக்காரரின் வடிவில் வந்த கிருஷ்ணர் தட்டிவிட, இவர் கிருஷ்ணர் என்பதை அறிந்து கொண்ட இராதை பூக்களை நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். கிருஷ்ணரோ உடனடியாக தனது புல்லாங்குழலால் தரையை இருமுறை குத்தினார், அதனால் ஏற்பட்ட இரண்டு துவாரங்கள் பாதாள லோகம் வரை சென்றன. அதிலிருந்து வந்த நீரினால் பூக்கள் தூய்மை செய்யப்பட, அந்த நீரானது குஸும் ஸரோவர் (பூக்களின் ஏரி) என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் வனபிஹாரி (வனத்தில் திரிபவர்) என்ற பெயரில் கிருஷ்ணருக்கு ஒரு கோவில் உள்ளது.
⭕கோவர்தனத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் ராதா குண்டம் (ராதாராணியின் குளம்). காளையின் வடிவில் வந்த அரிஷ்டாசுரனை கிருஷ்ணர் கொன்ற காரணத்தினால், அவரைக் களங்கம் தொற்றிக் கொண்டதாகவும் மூவுலகிலுள்ள எல்லா புனித நீர்நிலைகளிலும் அவர் நீராட வேண்டும் என்றும் ராதாராணி கூறினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ தனது திருப்பாதங்களால் பூமியை அழுத்தி அங்கு ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்கினார். பின்னர், மூவுலகிலுள்ள புனித தீர்த்தங்கள் அனைத்தையும் அழைத்து, அவற்றின் நீரால் அப்பள்ளத்தை நிரப்பினார், இது சியாம குண்டம் எனப்படுகிறது.
⭕இதைக் கண்ட ராதாராணி தானும் ஒரு குளத்தை உருவாக்குவதாகக் கூறி தமது திருக்கரங்களில் அணிந்திருந்த வளையல்களைக் கொண்டு தனது தோழியருடன் இணைந்து பூமியைத் தோண்ட ஆரம்பித்தார். சற்று நேரத்தில் அங்கு உருவான பள்ளத்தினை மானஸ கங்கையின் நீரினால் நிரப்ப கோபியர்கள் ஆயத்தமானபோது, சியாம குண்டத்தில் இருந்த புனித நதிகள் அனைத்தும் இராதையினால் உருவாக்கப்பட்ட குளத்தினுள் நுழைய அனுமதி வேண்டி, புதிய பள்ளத்தையும் நிரப்ப, அந்த குளம் ராதா குண்டம் என்று பெயர் பெற்றது.
⭕வளையல்களைக் கொண்டு உருவானதால் இதற்கு #கங்கன்_குண்டம் (வளையலால் உருவாக்கப்பட்ட குளம்) என்ற பெயரும் உண்டு. இந்த ராதா குண்டமானது ஸ்ரீமதி ராதாராணிக்கு மிகவும் பிரியமானது மட்டுமின்றி, ராதா குண்டத்தின் நீருக்கும் ஸ்ரீமதி ராதாராணிக்கும் வேறுபாடில்லை என்பதால், ராதா குண்டத்தை தரிசிப்பதற்கும் ராதாராணியை தரிசிப்பதற்கும் வேறுபாடில்லை.
⭕நந்த மகாராஜரின் தந்தையான பர்ஜன்யர், கேசி என்ற அரக்கனின் தொல்லையினால், தான் வாழ்ந்து வந்த நந்தீஷ்வர மலையை விட்டு கோகுலத்திற்குச் சென்றார். கிருஷ்ணரை கோகுலத்தில் வளர்த்து வந்த நந்த மகாராஜர், கம்ஸனால் அனுப்பப்பட்ட அசுரர்களின் தொல்லையினால், மீண்டும் நந்தீஷ்வர மலைக்கு இடம் பெயர்ந்தார். அன்றிலிருந்து இன்றுவரை நந்தீஷ்வர மலையைச் சுற்றியுள்ள பகுதி நந்த கிராமம் என்று அறியப்படுகிறது.
⭕கிருஷ்ணரின் இளமைப் பருவ லீலைகள் நந்த கிராமத்தில் நிகழ்ந்தவை. நந்தமகாராஜரால் வழிபடப்பட்டு வந்த வராஹ தேவர், சாலகிராமத்தினாலான லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோரை மட்டுமின்றி, நந்த மகாராஜரின் இல்லம், மற்றும் யசோதை தயிர் கடைந்த பானையையும் இங்கு செல்வோர் இன்றும் தரிசிக்க இயலும்.
⭕கிருஷ்ணர் கோகுலத்திலிருந்து நந்த கிராமத்திற்கு இடம்பெயர்ந்தபோது, ராவல் என்னும் இடத்திலிருந்து ஸ்ரீமதி ராதாராணி பர்ஸானாவிற்கு இடம்பெயர்ந்தார். பர்ஸானா, ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவின் தலைநகரமாகும். ராதா கிருஷ்ணரின் பல்வேறு லீலைகள் பர்ஸானாவில் நிகழ்ந்துள்ளன. விருந்தாவன லீலைகளில் பங்குகொள்ள விரும்பிய பிரம்மதேவர் பர்ஸானாவிற்கு வந்து மலையாக மாறினார். இங்குள்ள இரண்டு மலைகளில் ஒன்றான பிரம்ம கிரியின் மீது விருஷபானு தனது இல்லத்தினை அமைத்தார்; ஸ்ரீமதி ராதாராணி வாழ்ந்த இந்த இடத்தில் தற்போது ஒரு கோவில் உள்ளது.
⭕கிருஷ்ணர் பசுக்களை மேய்க்கச் செல்லும் இந்த வனத்தின் ஓர் பகுதியிலுள்ள பாறை ஒன்றில், கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் அமர்ந்து உணவருந்தியதற்கு அடையாளமாக, உணவுப் பாத்திரங்கள், மற்றும் இலைகளின் அச்சு பதிந்திருப்பதைக் காண முடியும். இங்கிருந்துதான் பிரம்மதேவர் கோபர்களைக் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
#வியோமாசுர_குகை: கிருஷ்ணர் தனது கோபர்களுடன் கோவர்தன மலையில் ஒளிந்தும் மறைந்தும் விளையாடி மகிழ்ந்த சமயத்தில், வியோமாசுரன் எனும் அசுரன் கோபர்களைக் கடத்திச் சென்று ஒரு குகையினுள் அடைத்து குகையை மூடினான். கிருஷ்ணரின் பிடியிலிருந்து தப்பிக்க பாறையாக மாறினான். பகவானோ ஆகாயமார்கமாக பறந்து அப்பாறையின் மீது மோதி அவனை வதைத்தார். அப்போது, பகவானின் கைவிரல்கள், தாமரை பாதங்கள், கௌஸ்துப மாலை, மற்றும் குண்டலங்களின் அச்சு அப்பாறையில் பதிந்தது. மேலும், அருகிலுள்ள மற்றொரு பாறையில் பலராமரின் தாமரை பாதங்கள் பதிந்துள்ளதையும் காணலாம்.
#சரண்_பாரி__பாரி_என்றால்_மலை; சரண் பாரி என்றால் கிருஷ்ணரின் திருவடிகள் பதிக்கப்பட்ட மலை என்று பொருள்படும். இச்சிறிய மலை சிவபெருமானின் தோற்றம் என்றும், இங்கு அவர் கிருஷ்ணரின் திருவடிகளைத் தாங்கியுள்ளார் என்றும் அறியப்படுகிறது.
#பிச்சல்_பாரி: கிருஷ்ணர் தனது சகாக்களுடன் சறுக்கி விளையாடிய பாறை.
வஜ்ரநாபரால் ஸ்தாபிக்கப்பட்ட விருந்தாதேவி, மற்றும் காமேஸ்வரர் கோவிலும் இவ்வனத்தில்தான் உள்ளன.
விரஜ மண்டலத்தின் இதர காடுகள்
⭕ஸத்ய யுகத்தில் துருவ மஹாராஜர் தவம் செய்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்ற இடம். திரேதா யுகத்தில், மது என்னும் அசுரனின் மகனான லவனாசுரனை பகவான் ஸ்ரீ இராமரின் தம்பியான சத்ருகணர் இங்கு வதம் செய்தார். துவாபர யுகத்தில் கிருஷ்ணர் தமது பசுக்களை இங்குதான் நீர் அருந்துவதற்காக அழைத்து வருவார்.
🌳 தால (#பனை) மரங்களால் நிறைந்துள்ள இக்காட்டில்தான் கழுதை வடிவில் வந்த தேனுகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார். கதிரவனம்: கொக்கு வடிவில் வந்த பகாசுரனை வதம் செய்த இடம். லௌஹவனம்: லௌஹன் என்னும் அசுரனை வதம் செய்த இடம். பத்ரவனம்: கன்றுக் குட்டியின் வடிவில் வந்த வத்ஸாசுரனை வதம் செய்த இடம்.
#🌳கோகிலவனம்:
🍒குயில் போன்று கூவி, ஸ்ரீமதி ராதாராணியை கிருஷ்ணர் அழைக்கக்கூடிய இடம். குமுதவனம்: கிருஷ்ணர் தனது சகாக்களுடன் விளையாடும் இடம். இங்கு பிரகாசமான சிவப்பு நிற குமுத பூக்கள் இருந்ததால், குமுதவனம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள பத்ம குண்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
🌳 பஹுலாவனம்:
🍒சிங்கத்தினால் தாக்கப்பட விருந்த ஒரு பசு, தனது கன்றுக் குட்டியை சந்திப்பதற்கு அவகாசம் கேட்டு, அதன் பின்னர் சிங்கத்திடம் வந்தபோது, பசுவின் நேர்மையை சிங்கத்தின் வடிவில் வந்திருந்த தர்மராஜன் பாராட்டினார். அப்போது அங்கு தோன்றிய கிருஷ்ணர் அப்பசுவிற்கு தாயின் ஸ்தானத்தை வழங்கினார்.
🌳 பாண்டிரவனம்:
🍒நண்பர்களுடன் நண்பனாக வந்த பிரலம்பாசுரன் எனும் அசுரனை பலராமர் வதம் செய்த வனம். பில்வவனம்: கோபியர்களுடனான கிருஷ்ணரின் ராஸ நடனத்தில் கலந்துகொள்ள விரும்பிய மஹாலக்ஷ்மி தாயார் தவம் புரிந்த இந்த வனத்தின் யமுனைக் கரையில் லக்ஷ்மிதேவியின் திருக்கோவில் ஒன்று உள்ளது.
—————

ஸ்ரீ மதுராஷ்டகம்

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

வேணூர் மதுரோ ரேணூர் மதுர: பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

———–

அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்   ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம்

ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்  ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்
உன்
இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
வசனம் மதுரம் சரிதம் மதுரம்   வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்  மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
வேணுர்மதுரோ ரேணுர்மதுர:     பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கீதம் மதுரம் பீதம் மதுரம்     புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
பாடல் இனியது; பட்டாடை இனியது; உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கரணம் மதுரம் தரணம் மதுரம்     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
குறும்பு இனியது; வெற்றி இனியது; கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
குஞ்சா மதுரா மாலா மதுரா     யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
மணிகள் இனியது; மாலை இனியது; யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கோபி மதுரா லீலா மதுரா     யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்  மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது; கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கோபா மதுரா காவோ மதுரா     யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர்மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
ஆயர் இனியது; ஆக்கள் இனியது; செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
இதி மதுராஷ்டகம் சம்பூர்ணம்.! இங்ஙனம் இனியவை எட்டும் நிறைவே!

——————————————

ஸ்ரீ வல்லபாச்சார்யர் -அருளிச் செய்த ஸ்ரீ மதுராஷ்டகம் –

ஸ்ரீ நாத் –முதலில் பிரதிஷ்டை செய்து அருளியவர்
ஸ்ரீ வல்லபாச்சார்யர்-1479–1530-புஷ்ட்டி மார்க்க வைஷ்ணவ சம்ப்ரதாயம் – ஆந்திர -முன்னோர்
ஸ்ரீ பால கிருஷ்ணன் புஷ்டியான அனுக்ரஹம் –

ஸ்ரீ மதுராதிபதியே அகிலம் மதுரம் -புண்யா பாப ஹரி ஸூபா -வடமதுரை மன்னு-யுகங்கள் தோறும் -வாமன ஆஸ்ரமம் –
சத்ருக்கனன் -லவணாஸூரன்/ஸ்ரீ கிருஷ்ண கா ஜென்ம பூமி -பெயரிலே மதுரம் –
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுரக் கானாக் கண்டேன் –மிகவும் விரும்பிய திரு நாமம் –
விதி வாக்கியம் -அநு வாதம் வாக்கியம் இரண்டும் உண்டே
ஸ்ரவணம்-விதி இல்லை -ஆசை வந்தால் தான் கேட்க வருகிறான் -மனனம் அவனே பண்ணுவான் –
கேட்பதும் மனனம் பண்ணுவதும் விதி இல்லை
அடுத்து அனவ்ரத சிந்தனம் ஒழுக்கம் த்யான மாத்திரம் -நிதித்யாஸனம் -விதி வாக்கியம் –
ஆசை -உண்ண பசி போலே –இத்தை வளர்க்கவே இது போன்ற ஸ்லோகங்கள் –
அவன் -பிரிய தமரானவர்களை தானே வரித்து -தன்னைக் காட்டுகிறான் -சததம் கீர்த்த யந்த –தாதாமி புத்தி பூர்வகம்
தேஷாம் நிதயாபி யுக்தாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –
தாதாமி புத்தி யோகம் -கொடுக்கும் பொழுது ப்ரீதி உடன் கொடுக்கிறான் -பக்தி என்றாலே ப்ரீதி தானே –
ஆகையால் இப்படி கொண்டு கூட்டுப் பொருள்
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி –
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ வைகுண்டம் -நினைவே அமுதம்-நனைந்த சிந்தனையால் மோக்ஷம் பெறுவோம் –

அதரம் மதுரம் –
திருவாய் -திரு உதடுகள் -உபதேசம் -இனிமை -பவள வாய் -பார்த்து நம் உதடு பாட துடிக்கும்
வாலியதோர் கனி கொல்—கோலம் திகழ் திரள் பவளம் –7-7-3-அபூத உவமை —
நீல நெடு முகில் போல் –திரு மேனி அம்மான் -தொண்டை வாய் –திசைகள் எல்லாம் –
வாய் அழகர் -சம்பாஷ மான இவ–நம்பெருமாள் புன்சிரிப்பால் குழி -ஈர்க்கும் –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே –அபயம் ஹஸ்த முத்திரை புரியாமல் இருந்தால்
குவிந்த உதடால் மாஸூச சொல்ல –செங்கனி வாய் –நெஞ்சம் நிறைக்கும் – -கோவை வாயாள் -அபிமத அநு ரூபம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அஷ்ட புஜத்து எம்பெருமான் –
கழுத்தை உதட்டாட்டம் கண்டு -மயங்கினது போலே -/
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து –/
ஸ்மித புல்ல அதர பல்லவம் -கொழுந்து போலே அன்றோ –
வதனம் மதுரம் –
மையல் ஏற்றி மயக்க வல்ல மாய மந்த்ரம் கொலோ –புண்டரீகம் தடாகம் -திரு முகம் செங்கமலம் —
குண்டலம் தோடு -ஆண் பெண்- -/ தாமரை தாதுக்கள்-நீண்டு நுனியில் உருண்டு -கிரீட மகுட -சூடா வதம்ச –
பெரியவன் –ஆதி ராஜ்ய ஜல்பிகா /
வண்டுகள் ஒத்த திருக் குழல்கள் -மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-மதுவை உண்ண /
கபோலம்–யசோதை அன்பு கையால் ஸ்பர்சம் பருத்து -அழகர் இடம் இன்றும் சேவிக்கலாம் –
நயனம் மதுரம் –
கருணை வெள்ளம் அகப்படாமல் இருக்க திரு மணத் தூண்கள் -கருணா பிரவாஹம் -குண பிரவாஹம் பெருமாள் இடம் இருந்து –
நவ ரசம் -ஸ்திரம் –பெறும் கேழலார் தம் பெறும் கண் மலர் புண்டரீகம் -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்து –
எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் – சொட்டை குலத்தில் உதித்தார் இங்கே வந்தார் உண்டோ -ஐதிக்யம்-
ஆ முதல்வன் -என்று கடாக்ஷம் -ஸ்திரம் தானே –
எழில் கொள் தாம்பு –அழுத கையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் -நம்பி ஹனுமந்த தாசர் -திருவாராதன கிராமம் -ராமானுஜர் -ஐதிக்யம் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்கள் -பக்த ஸூர்யனால் மலரும் தாமரைக் கண்கள் –
கப்யாசம் புண்டரீக அக்ஷிணீ/ ராஜீவ லோசனன் -ந யுத்த யோக்யதாம் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -க ஸ் ஸ்ரீ சரியா கஹா புண்டரீகாஷா /கோபம்-நரசிம்ஹன் – தயை அனைத்தும் காட்டுமே /
செங்கண் சிறிச் சிறிதே எம் மேல் விழியாவோ
எம் பச்யதே புருஷோத்தமன் -ஜெயமான மது ஸூதன கடாக்ஷம்
சிரமணி –நெடு நோக்கு கொள்ளும் பத்த விலோசனத்துக்கு என்னை உய்த்திடுமின் -சபரி -விதுரன் -ரிஷி பத்தினிகள் -அனுக்ரஹம் உண்டே
பரிகாசமும் -கோபிகள் -சிற்றில் -முற்றத்தூடு புகுந்து -முகம் காட்டி முறுவல் செய்து -சிந்தையும் சிதைக்கக் கடவையோ –
எதிர்பார்த்து காத்து இருக்கும் -ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் –
சிக்கென செங்கண் மாலே ஆவியே -நான் உன்னை விடேன்-
ஹசிதம் மதுரம்
புன்முறுவல் -பிரகசன்னிவே பாரத -அர்ஜுனன் விசாகம்–சிரித்து கொண்டே ஸ்ரீ கீதா உபதேசம் –
கன்றினை வால் ஓலை கட்டி —
ஹ்ருதயம் மதுரம்
திரு மார்பே -என்றும் -திரு உள்ளம் என்றும் -ஸுஹார்த்தாம் ஸர்வ பூதானாம் -முதல் படி ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கோர மாதவம் செய்தனன் –திரு ஆர
மார்பு அதன்றோ-
தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் -வக்ஷஸ்தலம் திருத் துளசி மாலை -ஸ்ரீ கௌஸ்துபம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ கமலா -விமலம் விசாலம் –
கமனம் மதுரம்
நடை -வ்யாக்ர சிம்ம கஜ ரிஷப சர்ப்ப கதிகள்/ நம் பெருமாள் பக்கலிலே காணலாம்,
கோபம் தேஜஸ் கர்வம் பெருமிதம் -இங்கனே போந்து அருளி -சீரிய சிங்கம் –
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு திருவடிகள் வந்து ரஷிக்கும் -எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -சீதா மத்யே -அக்ர பிரதயோ ராமா –
நடந்த கால்கள் நொந்தவோ –பேசி வாழி கேசனே -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -வருக வருக நம்பி வாமன நம்பி
வா போ வந்து ஒருகால் கண்டு போ –கச்சதி ப்ராதரத்தி -நடை அழகில் மயங்கி கைங்கர்யம் கெடாமல் -ராகவ ஸிம்ஹம்–
நம்மாழ்வார் நாச்சியார் திருக் கோலம் -இராப்பத்து ஏழாம் திரு நாள் திருக் கைத் தலை சேவை இன்றும் சேவிக்கலாம்
மதுராதிபதயே அகிலம் மதுரம்

———————-

வசனம் மதுரம்
திரு வாக்கு –பேச்சு வார்த்தை சொல் -மூன்றும் உண்டே –
திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-பேச்சு ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
சொல்லும் பொய்யானால் -நானும் பிறந்தமை பொய்/
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -சொல்
மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் -வார்த்தை
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் என் முன்னால் காண வந்தே -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
வாக்மீ ஸ்ரீ மான் -கொண்டாடுகிறார் வால்மீகி -அபயப்ரதானம் -மஞ்சு பாஷீ மிருத பாஷீ பூர்வ பாஷீ ராகவா –
உனக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு வாழ்வு மாஸூச –
அர்ச்சா சமாதி குலைத்து வசனம் மதுரம் –திரு விளக்கு பிச்சன் -தொண்டமான் சக்ரவர்த்தி -திருக் கச்சி நம்பி –
சரிதம் மதுரம் -சேஷ்டிதங்கள்
அது இது உது என்னாலாவன -நைவிக்குமே/-சாரித்ரேன கோ யுக்தா -இஷுவாகு வம்ச பிரபவா /
ஜென்ம கர்ம மே திவ்யம் /அவதார ரஹஸ்ய ஞானம் -அதே பிறவியிலே மோக்ஷம் -பக்தனுக்கும் /
வசனம் மதுரம் –
வஸ்திரம்
அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே /செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவலிகை — கச்சு என்கின்றாளால்/
ஐயோ அச்சோ ஒருவர் அழகிய வா -/பவ்வ நீர் உடை ஆடை யாக சுற்றி –பவனம் மெய்யா -அண்டம் திருமுடி /திரு மாலே கட்டுரையே –
கைலி –நம் பெருமாள் -மாற்றுவதே அழகு –துலுக்க நாச்சியாருக்காக சாத்திக் கொள்கிறார்
வலிதம் மதுரம் —
மூன்று மடிப்புக்கள் கழுத்திலும் வயிற்றிலும் உண்டே
யா தாமோதர -உதர பந்தம் –சேஷி திரு இலச்சினை –
திரு வயிற்று உதர பந்தம் -பெற்ற வயிற்றுக்கு பட்டம் –
வரத வலி த்ரயம் -பிரதான திரு ஆபரணம் –
நஞ்சீயர் திரைக்குள்ளே -ஏகாந்த தழும்பு சேவிக்க ஆசை -பிரதம விபூஷணம் / தாமோதரனை ஆமோ தரம் அறிய –
தத்வ த்ரயம்-ஞான பக்தி வைராக்யம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -முக்குணம் தாண்டி -ரஹஸ்ய த்ரயம் –
மூன்று பாதங்கள் -மூன்று அக்ஷரங்கள் -மண்டப த்ரயம் காட்டும் –
தேசிகன் -பெறும் தேவி தாயார் ஸ்வர்ண -கனக வளைய முத்ரா –
சலிதம் மதுரம் –
அசைவே மதுரம் –ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
முன் இருந்த தானத்தே -தாளால் உலகம் அளந்த அசைவே கொல்/
கிடந்த நாள் கிடந்தாய் –உன் திரு உடம்பு அசைய / எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -ஆராவமுத ஆழ்வார் – திரு மழிசை பிரான் -/
அசைவில் அமரர் தலைவா -அசையா நீ எழுந்து இருப்பதா வாழி –உத்தான சயன -உத்யோக சயனம் /
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -அசைந்து -காட்டி அருளி -இங்கிதம் நிமிஷ தஞ்சை தாவகம்–நீ பண்ணுவதே ரம்யம் அத்புதம் அதி பிரிய கரம்
தவழ்ந்து போய் என் மகன் கோவிந்தன் புழுதி அழைக்கின்றான் -நீ இங்கே நோக்கி போ -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
பிரமிதம் மதுரம்
சுழற்சி மதுரம் -ராஸக்ரீடை -/ அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா -கோபிகள் கண்ணன் -/தோளுடன் தோள் கோத்து-
கோபிகா கீதம் -குரவை கூத்து -கோப வேஷ பரிகம்மிதா -பஞ்சாவதம்ச -மயில் பீலி சூடி —
ஒருவர் இருவர் ஓர் மூவர் என உருவு கரந்து -சுழன்று –
ஆடி ஆடி அகம் கரைந்து —
மதுராதிபதயே அகிலம் மதுரம்

————————————————

வேணூர் மதுரா
விசித்திர வேஷம் –செவி ஆட்ட கில்லாவே – /அத்புதம் கேளீர் -/உபதேசம் ஆச்சார்யர் மூலம் போலே புல்லாங்குழல் -கானம் -சப்த ஸ்வரம் –
சஜாதீயர் ஆச்சார்யர் –விஜாதீயர் அவன் /
வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்தனர் தாமே -/எழுது சித்ரங்கள் போல் நின்றன /
ரேனூர் மதுரா
ஸ்ரீ பாத ரேனு-சித்ரா கல்பா லாங்கனி-வலம் காதில் மேல் தோன்றி பூ அணிந்து –
புழுதி அளந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் -விளையாடு புழுதியும் கொண்டு – -நப்பின்னை காணில் சிரிக்கும் -/புனிதனோடு காப்பு நான் கட்ட -இதுவே இவன் ஆச்சாரம்
தவழ்ந்து எழுந்து ஓர் தளர் நடையால் — மண்ணில் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பினில் –பெற்றிலேன் அந்தோ –
கோபால வேஷம் -கற்றுத் தூளி –தூசரிதமான திருக் குழலும் —
ஸைன்ய தூசி -சேனா -தூளி தூசரிதம் -பாரத சாமரம்
பாத தூளி படித்தலால் இவ்வுலகம் பாக்யம் -தொண்டர் அடிப் பொடி
பாணீர் மதுரா
கைத்தலங்கள் வந்து காணீரே –சங்கும் நேமியும் நிலாவிய -ரேகைகள் -யசோதை வளர்க்கும் பிள்ளை -நாராயணன் இல்லை –
அத்புதம் பாலகம் -/ கராவிந்தேனே –பால முகுந்தம் -/உந்தை யாவன் –நிஷ்காரணம் ஜகத் பிதா –
விரலாலே காட்ட -நந்தன் பெற்றனர் -வஸூ தேவன் இழந்தான் -எடுத்த பேராளன் –
முழுதும் வெண்ணெய் அலைந்து அலைந்து தொட்டு உண்ணும் –தாமரைக் கை —
கொட்டாய் சப்பாணி -பிளந்திட்ட கைகளால்
பாணி சிவந்தது ஊன்றி தவழ்ந்ததாலா -சாட்டை ஒட்டியா -தேரோட்டி கடிவாளத்தாலா –
திதியோதனம் ஊறுகாய்-கண் எச்சி படும்படி
செந்தாமரை கை விரல்கள் கோலம் அழிந்தில -வாடிற்றல –திரு உகிர் நொந்தும் இல –
கை வண்ணம் தாமரை -வாய் கமலம் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே பாணி கிரஹணம் -முறை –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அஞ்சேல் என்ற திருக் கைகள்
பாதவ் மதுரா
திருவடி தாமரைகள் -தானே சுவைத்து பார்ப்பான் -/பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும் / ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் அன்றோ –
சகடாசூர -சகடத்தை சாடிப் போய் -சாடுதைத்த திருவடி -உலகளந்த திருவடி -அவனுக்கும் ரஷகம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்தால் போல் –
கதா புன -சக்ர சங்க த்வஜம் அங்குசம்
திருப் பொலிந்த சேவடி / தேருக்கு கீழே நாட்டிய
உலகம் அளந்த பொன்னடி -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ந்ருத்யம் மதுரம்
குடமாடு கூத்தன் –குரவை கூத்து -கும்ப நாட்டியம் -காளிங்க நர்த்தனம் -சாரீ ந்ருத்தம் எண்ணிக்கை –
ஹல்லீ ந்ருத்தம் –வண்ண புஷ்ப்ப மாலை / கோஷ்ட்டி ந்ருத்தம் ராஸ க்ரீடை
மன்றமர கூத்தாடும் மைந்தன் -மன்றம் அமரும் படி -மயங்கி அங்கேயே அமர்ந்து
சக்யம் மதுரம்
நட்ப்பு -குகன் ஸூ க்ரீவன் விபீஷணன்
கோபி -பிரசாதம் -சுகர் ஆச்சர்யம் / உத்தவர் -ஸூ தாமா –
விதுரர் / மாலா காரர் / அக்ரூரர் / சஞ்சயன் -18-நாடார் கூட்டம்
ஆத்ம ஸஹர் -அறிவார் உயிரானார் -யாம் பெறும் ஸம்மானம் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————————–

ஐயப்பாடு அறுத்ததும் ஆதாரம் பெறுக வைப்பதும் அழகன் -அழகையே ஸைன்யமாக கொண்டு -கட்டுப்படுத்துவானே
மால் பால் மனம் சுழித்து மங்கையர் தோள் கை விட வேண்டுமே –
கீதம் மதுரம்
பாட்டு -ஸ்ரீ கீதா ஸூ கீதா -மதுரம் -தத்வ விவேக –இத்யாதி -பார்த்தன் அன்று ஓதிய –கீதாம்ருதம் மஹத் -ஸர்வ உபநிஷத் -சாரம் –
புல்லாங்குழல் கானம் -சங்க நாதமும் கீதமே -168-mile தூரம் —84-இடங்களில் ஸ்ரீ பாகவதம் சப்தாகம்
ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளி-84- க்ரோஸம் தூரம் என்பதால்
ஆ நிரை இனம் மீளக் குறித்த சங்க ஒலி -7-லக்ஷம் பசுக்களை இத்தைக் கொண்டே
நைவளமும் –கொண்டு பெண்ணை -நோக்கா –இது அன்றோ எழில் ஆலி என்பான் –
நாணினார் போலே –இறையே –தாசன் -என்று அபிமதம் விஞ்சி –
கான பிரியன் -முடங்கு கேள்வி இசை என்கோ–சாம வேத கீதனே –
பீதம் மதுரம்
குடித்தது -எதுவாய் இருந்தாலும் -அருகிருந்த மோரார் குடம் உருட்டி –கன்றுக் குட்டிக்கு நீர் குடிக்க –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –
இது முதலில் -உண்பது அப்புறம் -மாறி -பருகி விட்டே உண்பான் -இரண்டுக்கும் வாசி அறியான் என்றுமாம்
பால் உண்ணோம் -நெய் உண்ணோம் -போலே
புக்தம் மதுரம்
உண்டது –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —என்னை முற்றும் பருகினான் -உண்டு பருகினான்
அப்பம் கலந்த சிற்றுண்டி –அக்காரம் பாலில் கலந்து-சொப்பட நான் சுட்டு வைத்தேன் –
வெண்ணெய் விழுங்கி –ஆராத வெண்ணெய் -வெள்ளி மலை இருந்தது ஒத்த -முப்போதும் கடைந்த வெண்ணெய் –
ஏரார் இடை நோவ- தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி –
கை விரல் அனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசில் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
குடத்தோடு சாய்த்துப் பருகி -குடத் தயிர் சாய்த்து பருகி —சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு -வளையலும் காணேன் –
கன்னல் -இலட்டு வத்தோடும் -சீடை கார் எள்ளின் உண்டை -என்னகம் என்று வைத்துப் போந்தேன்–இவன் புக்கு அவற்றை பெருக்கிப் போனான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி வெண்ணெயும் சோதிக்கின்றான் -உன் மகனைக் கூவிக் கொள்ளாய் –
சுக்தம் மதுரம்
தூக்கமே மதுரம் -பையத் துயின்ற பரமன் -/உறங்குவான் போல் யோகு செய்து -கிடந்தவாறும் நினைப்பு அரியன
அன்று வெக்கணை கிடந்தது –என் நெஞ்சுள்ளே –
புளிங்குடி கிடந்தது –தெளிந்த என் நெஞ்சம் அகம் கழியாமல் /
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடப்பாய் -அரவின் அணை மிசை கிடந்த மாயனாய் /
ஸ்படிக சிலை -பெருமாள் –சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தபன்/ ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று/
ஸ்வரூப த்யானம் -/டோலத்சவம்-
ரூபம் மதுரம்
காந்தா –அத்தியாச்சார்யம்-சாஷாத் மன்மத மன்மதன்-அவனும் மடல் எடுக்க வேண்டும்படி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபராஹினாம்-
கண்டவர் தம் மனம் வழங்கும் -மின்னு மா மகர குண்டலங்கள் -ஆடினால் தானே ஓளி வீசி -முக காந்தி குழல் காந்தி வாசி –
முத்துப்பல் ஓளி யாலே வா ஸூ தேவர் -தேவகி –/ மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் /
நீல தோய்த்த மத்யஸ்த -மேகம் மின்னல் வெட்டு -சந்திரன் ஓளி -வானவில் நினைத்து உபாஸிக்க -உபநிஷத் சொல்லுமே –
திகழ்கின்ற –திரு மார்பில் -திகழும் மங்கையோடும் -/முடிச்சோதியாய் –உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திருமாலே கட்டுரையே
நிறைந்த சோதி வெள்ளம் -சூழ்ந்த பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே ஒழிந்தான்-
அருவமும் எண்ணிறந்த உருவங்களில் ஒன்றே -வாரா வருவாய் –வாரா அருவாய்
ஆதாயம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் -/
திலகம் மதுரம்
ஊர்த்வ புண்டர திலகம் -பஹு மாணாத்-உத்தர உபரி பக்த ஜனாதி -நம்மை மேலே தூக்கி செல்லவே / இனிமை அறியவே –
தன் திரு நாமத்தை தானே சாத்தி -கம்பர் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————————————-

கரணம் மதுரம்
லாவண்யம் ஸுந்தர்யம்–கொள்கின்ற கோள் இருளை –அன்று மாயன் குழல் –
சுட்டுரைத்த பொன் ஒவ்வாதே –கரும்பு வில் போன்ற திருப் புருவம் –
ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் –/அப்ராக்ருதம் -/ எழு கமலா பூ அழகர் /ஸுந்தர்ய அருவி சுழி -திரு நாபீ-உந்தித் தாமரை –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கோல திருக் குறுங்குடி நம்பியை -என் சொல்லி நான் மறப்பேனோ /
ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச
தரணம் மதுரம்
தாண்டுவிக்கிறார் / வழுக்குப் பாறை –ஸூ கர்- திருவடி படும்படி பாக்யம் –ஸிம்ஹம் புழு மலை தாண்டிய கதை –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
வைதிக புத்ரன் கதை -ஒரு நாள் ஒரு பொழுதில் உடலோடு கொண்டு கொடுத்தவனைப் பெற்று இனி என் குறை
கண்ணன் ரூபம் சேவிக்க ஆசை கொண்ட ஸ்ரீ மஹா லஷ்மீ
அத்யயன உத்சவம் -நம்மாழ்வார் திருவடி சேவை -எங்கும் உண்டே -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஹரணம் மதுரம்
அவன் திருட்டே மதுரம் -வெண்ணெய் உடம்பு முழுவதும் பூசிக் கொண்டே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய்
திருட்டு ஒரு நாள் இல்லையே -கச்வம் பால –பாலானுஜன் -மன் மந்த்ர சங்கையா-
ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ் கொண்டே திருட்டு / வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்ட ஆளு கூத்து அப்பன் —
துன்னு படல் திறந்து புக்கு –திருமங்கை ஆழ்வார் போட்டி -ஸ்வர்ண விக்ரஹம் -எந்திரத்துக்கு உள்ளே -மதிள் கைங்கர்யம்
ரமணம் மதுரம்
விளையாட்டு –கண்ணை புரட்டு விழுந்து களகண்டு செய்யும் பிரான் – -அப்பூச்சி காட்டுகின்றான்
விளக்கில் வீட்டில் பூச்சி போலே ஆஸிரர்கள் -ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு -பால் குடிக்க உயிரும் சேர்ந்து
ரமண ரேடி -இன்றும் மணலில் உருண்டு வெட்கம் இல்லாமல்
வமிதம் மதுரம்
தாம்பூல ஸ்ரவணம் / தூய பெரு நீர் யமுனை / உமிழும் பொன் வட்டில் பிடித்து புகப் பெறுவேன் /
சமிதம் மதுரம்
பிரளய ஆபத்தில் -வையம் எழும் கண்டாள் பிள்ளை வாய்க்குள்ளே / ப்ரஹ்மாண்டம் ஜிஹாத் -மண் பிரசாதம்
நெய்யூண் மாற்று மருந்து /
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -மஞ்சாரா -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -உண்டும் உமிழ்ந்து –
மதுராதிபதியே அகிலம் மதுரம்

—————————-

மதுரா பெண் பால் /மதுரம் ஆண்பால் மதுரம் வரும் -சப்தத்துக்கே லிங்கம் சமஸ்க்ருதம் /
உஞ்சா மதுரம்
பறை வாத்யம் -இடுப்பில் கட்டி குடக் கூத்து-குரவைக் கூத்து ராஸ க்ரீடை -ஜல க்ரீடை மூன்றாவது
விளையாட்டு –ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு —வாராயோ –சென்றேன் என் வல் வினையால்
பறை -திருப்பாவை -/ புருஷார்த்தம் –தாத்பர்யம் அறியாமல் -சீதை -திரும்பி இங்கு /
ஜாம்பவான் பறை -சாலப் பெறும் பறை -தான் கட்டின பறை –
கோவிந்தன் வருகின்ற கூட்டம் -தளைகளும் தொங்கலும் -மயில் பீலி கொடை–
தண்ணுமை எக்கம் மத்தளி – -தாள் பீலி குழல்கள் கீதமும் ஆகி எங்கும்
மலை கொலோ வருகிறது என்று –
பாலா மதுரா
மாலா -பாட பேதம் -கோப கோபி மேலே வரும் -அதுவே பருவ பரம்
புஷ்பங்கள் தொடுக்கப் பட்ட -காட்டுப் பூ மல்லிகைக்கு பாலா என்று பெயர்
ரமணம் -ஸ்மரணம் -கீழே பாட பேதம் /
செண்பகப் பூ சூட்ட வாராய் -/ ப்ராத கால புஷ்ப்பம் செண்பகம் -/
அனந்தாழ்வான் -மாலாகாரர்/ சுமந்து மா மலர் தீபம் கொண்டு -பாசுரம் ஐதிக்யம் /
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -குறும்பு அறுத்த நம்பி /தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்வர்ண புஷ்ப்பம் /
மல்லிகை பூ -சாயங்கால பூ / பாதிரிப் பூ -பச்சை தமனகம் சேர்த்து -தவன உத்சவம் -/
மருவும் தவனமும் சேர்த்து -அடுத்து -/ செங்கழு நீர் ஐந்தாவது -விடிந்தால் வாய் நெகிழும் /
பின்னை பூ -பின்னை மர வாஹனம் உண்டே /குருக்கத்தி பூ அடுத்து /
இருவாட்சி கடைசியில் -நம்பெருமாள் மாலை பிரசாதம் தனியாக தெரியுமே –விருட்சி பூ /
சூடிக் கொடுத்த சுடர் கொடியையும் சேர்த்து அவனுக்கு சூட்டினார் -/
யமுனா மதுரா
தூய பெரு நீர் யமுனை –திருவடி தீண்ட பெருகி பின் வற்றிக் கொடுத்ததே -ஜானு மாத்திரம் /
மன்றமர கூத்தாடியே -வட திருவேங்கட மைந்தன் /
யமுனாச்சார்யர் -யமுனைத் துறைவன் -/பலராமன் -ராம் காட் -ஷீர் காட் வஸ்திர லீலை /கோவர்த்தன கிரி -21-மைல் சுற்றளவு -/
வீஸீ மதுரா
அலைகள் –தரங்கம் -சம்சார சுக துக்கம் மாறுவது போலே -ஆவாரார் துணை
சலிலம் மதுரம்
தண்ணீர் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -/பிள்ளை கார்யம் இடம் கண்டு -காரணத்தில் இருக்குமே /
யுத்த பூமியில் மோ ழை எழுவித்தான் / இட்டமான பசுக்களை இனிது மருத்து நீராட்டி -/
தெளிவில்லா கலங்கல் காவேரி -தெண்ணீர் பொன்னி–மாப்பிளை பார்க்க வரும் கலக்கம் -பிரிந்து போகும் கலக்கம் /
கமலம் மதுரம்
அடித்தலமும் தாமரை –அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் / ஆசன பத்மம் -தோற்று தாங்கும் திருவடித் தாமரை /
ஒப்பாகா –/கை வண்ணம் தாமரை வாய் கமலம் -போலும் கண் இணையும் அரவிந்தம் –அடியும் அஃதே -/ஆரோகணம் அவரோகணம் இல்லாமல் –
திருக் கல்யாணம் -பாணி கிரஹணம் -மந்த்ரம் வாயால் சொல்லி -கண்ணால் இவளையே நோக்கி -தோற்று விழுந்த திருவடி –
சப்த பதிக்கு திருவடி -கையைப் பிடித்து -வாயால் மந்த்ரம் சொல்லி -கண்ணால் முகத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும்
ஸர்வ லோக மகேஸ்வரன் வெட்கப்படாமல் -கண்டு -அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
பா மருவு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ—அளந்த -பத்ம பாதாவோ –தாமரைக் கண்ணாவோ –தனியேன்
கரை புரண்டு –அரவம் சுமப்பது அஞ்சன மலை -அம்மலை பூத்தது அரவிந்த வனம் –அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே -/
கண்ணை தனியாக -அடியேனை பாட வைத்ததால் –
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -அமலங்களாக விழிக்கும்
மதுராதிபதியே அகிலம் மதுரம்

———————————–

கோபீ மதுரா
-5-லக்ஷம் -காத்யாயினி நோம்பு -சொல்லும் அவிடு ஸ்ருதியும் / கண்ணனை கையிலே வைத்துள்ளார்கள்
த்வதீய -கம்பீர -மநோ அநு சாரீ -வேதம் பின் செல்லுமே -வ்ரஜை ஸ்த்ரீகள் கண் அடி படவே அவதாரம் /
உத்தவர் ஞான உபதேசம் செய்ய வந்து பக்தி கற்று வந்தார் -ஞானம் அக்னியால் எல்லாம் போக்கலாம் -முயல வந்து –
காளியனாக அநு காரம் / கோவிந்தா வாங்கலையோ -/ மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் /
ஆண் உடையுடன் எப்படி நுழைந்தீர் -கோகுலத்துக்குள் –
லீலா மதுரா
சேஷ்டிதங்கள் அனைத்தும் மதுரம் -அவதரித்ததே மதுரம் -வண்ண மாடங்கள் சூழ் -/ ஒருத்தி மகனாய் பிறந்து
விளையாட்டாக பூதனை முதல் கேசி வரை -மிச்சம் இல்லாமல் அனைவரையும் முடித்து /அரவம் அடல் வேழம்-10- சேஷ்டிதங்கள் ஒரே பாசுரம் -/
யுக்தம் மதுரம்
அவர்கள் உடன் கூடியதும் ஆடியதும் -சம்யோகம் -யோகம் -சேர்க்கை – மதுரம்
பரீக்ஷித் -தர்ம ஸ்தாபனம் -பண்ண வந்த -இப்படி செய்யலாமோ -அக்னி -அனைத்தையும் புனிதமாக்கும் –
சர்வதவசாகம் -சர்வாந்தராமி -உடல் மிசை உயிர் என எங்கும் பரந்துளன் -சரீராத்மா பாவம் -சரீர த்வாரா ஆடினால் என்ன நேராக —
சரீர சம்பந்தமே இல்லையே -ஆத்ம சம்பந்தம் தானே
முக்தம் மதுரம்
பிரிவும் மதுரம் -கோபீகா கீதம் –விரஹம்-குடில குந்தளம்–நீண்டு சுழன்று செறிந்துன் நேத்து கடை சுருண்டு கரு நீலம் –
இரட்டை திருவடி –அஹங்காரம் -தூக்கி கொள்ளச் சொல்ல -ஆழ்ந்த ஒரு திருவடி இணை -ஒருத்தி அழ-
பூ கொத்து பறித்து வைத்து -குனிய -காண வில்லையே
சுரத்துடன் அழுது-
த்ருஷ்டம் மதுரம்
கடாக்ஷம் -செங்கண் சிறுச் சிறிதே -ஜெயமான புருஷன் எம் பச்யதி -சாத்விக சிரத்தை -நெடு நோக்கு புண்டரீகாக்ஷன்
வேண்டாத துரியோதனனுக்கும் -பீஷ்ம த்ரோண -கிம் அர்த்தம் புண்டரீகாஷா -புக்தம் விதுர போஜனம் –
அழல விழித்தான் அச்சோ அச்சோ -பார்வையால் துச்சோதனனை-இத்யாதிகளை – நிரசித்து –
அஹம் காலோஸ்மி நிமித்தம் தான் அர்ஜுனா நீ —
சிஷ்டம் மதுரம்
மிச்சல் -போனகம் செய்த சேடம் –நிவேதனம் பண்ணிய மிச்சல் -இல்லை என்றால் பாப உருண்டைகள் –
பரமன் உண்ட எச்சில் நச்சினேன் -லஷ்மணன் -தாரை இடம் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————————————

கோபா மதுரா
கோபர்கள் -கோப குமாரர்கள் -தன்னேராயிரம்-கை கலந்து –திருட்டுக்கு துணை -பொத்த உரலை கவிழ்த்து- –
பிரசாதம் கை கலந்து -பிரமனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் -சென்று செருச் செய்யம் குற்றம் ஓன்று இல்லாத கோபர் -/
நல் செல்வன் -இருவரும் உண்டே -சாமான்ய விசேஷ தர்மங்கள் /லஷ்மணன் அக்னி கார்யம் செய்யும் அன்று தான் இவன் பால் கறப்பான்
தோழன்மார் கண்டதே –செண்டு கோல் மேலாடை இத்யாதி -ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி
ஸத்ய பாமை -பின்பு -தோள் கொடுப்பாள்
காவோ மதுரா
பசுக்களும் கன்றுகளும் -ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு மீதளிக்கும் -வள்ளல் பெறும் பசுக்கள் –
கணங்கள் பல -கற்று கறவை -கறவைகள்–பல பன்மை
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -இட்டமான பசுக்களை –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –
ஆ மருவி அப்பன் -கோ சகன் -தேர் அழுந்தூர் -நிரை மேய்த்து அமரர் கோமான் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தான் -நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலம்
யஷ்ட்டிர் மதுரா
கையில் கோல் -கொள்ளா மாக் கோல் -பார்த்தசாரதி -கையிலே பிடித்த -கோபால வேஷம் –
ஸ்ருஷ்ட்டிர் மதுரா
இயல்பு -குழந்தைகள் / ப்ரத்யும்னன் -அநிருத்தினான் -16008-ஒவ் ஒருவருக்கும் -10-அஷ்ட மஹிஷிகள்
குழந்தை பேறுக்கு ராம மந்த்ரம் -சொத்துக்கு கிருஷ்ண மந்த்ரம் –
கைலாச யாத்திரையில் -கள்வா –ருக்மிணி தேவி உடன் -சென்று -/
தலிதம் மதுரம்
உடைந்த மண் பாத்திரம் கண்ணன் கை ஸ்பர்சம் -இதுவும் மதுரம் -வெறும் கலத்தை வெற்பிடை இட்டு
அதன் ஓசை கேட்க்கும் உய்க்கும் கண்ணபிரான் கற்ற கல்வி
ஆத்மாவை ஸ்வா கருத்து சரீரம் விடுவதை
ததீ பாண்டன் -வ்ருத்தாந்தம் -இங்கு இல்லை என்றேனோ -ததி பாண்டனைப் போலே –
ததி பாண்டன் பிரகலாதன் இருவர் இடம் உள்ள பக்தியே முக்கியம்
முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி யும்-
பலிதம் மதுரம்
பழம் -காய்-கண்ணன் அமுத செய்த சேஷம் -பலமும் சொல்லி நிகமிக்கிறார்
அவன் உண்ட மிச்சலே பலம் -முக்தி -மோக்ஷம் அங்கு காவு காவு தானே -இதுவே பரம புருஷார்த்தம் -உண்டதும் உமிழ்ந்ததுமே
என் அமுதினைக் கண்டா கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -போலே இங்கும் பல ஸ்ம்ருதி இல்லாமல் –
இந்த ஸ்லோகம் சொல்வதே கேட்பதே பலம் பூமாதிகரணம் -போலே இதுவே பூமா –
மதுராதிபதியே அகிலம் மதுரம் –

48-மதுரங்கள் -அனைத்தும் மதுரம் அஷ்ட 8-தடவை சொல்லி -நிகமிக்கிறார்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வல்லபாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கண்ணன் பிறந்தான்… எங்கள் கண்ணன் பிறந்தான்!–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்–ஸ்ரீ கண்ணன் கழலிணையே ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் —

January 16, 2023

ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நள்ளிரவில், தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாக, மதுரா நகரில் சிறைச்சாலையில் அவதரித்தான் கண்ணன். அவன் அவதரித்த நாளையே கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீஜயந்தி உள்ளிட்ட பல பெயர்களால் அழைத்து, நாம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

இத்திருநாளில் கண்ணன் பிறந்ததை அக்கால ரிஷிகள் தொடங்கி, இக்காலக் கவிகள் வரை எப்படி எல்லாம் அநுபவித்தார்கள் என்பதன் தொகுப்பே இக்கட்டுரை.

ஸ்ரீபராசர முனிவர் – விஷ்ணு புராணம்:
“ததோ அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானுனா
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத் மனா”

வாடிய தாமரை மலர வேண்டும் என்றால், சூரியன் உதிக்க வேண்டும். அதுபோல் இவ்வுலகம் என்னும் தாமரை வாடிக் கிடந்த போது, சூரியனைப் போல் அவதாரம் செய்தான் கண்ணன். கண்ணன் என்ற சூரியன் உதித்ததாலே, உலகம் என்னும் தாமரை மலர்ந்தது, அதாவது உலக மக்களுக்கெல்லாம் முகமலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டானது.

சூரியன் கிழக்குத் திக்கில் உதிக்கும். கண்ணன் என்னும் சூரியன், தேவகியின் கர்ப்பத்தையே தான் உதிக்கும் கிழக்குத் திக்காகக் கொண்டு அவளது கருவிலிருந்து உதித்தான் என்றும் இந்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார் பராசர முனிவர்.சூரியனோடு கண்ணனை ஒப்பிட்ட பராசர முனிவர், கண்ணனுக்கும் சூரியனுக்கும் உள்ள வேறுபாட்டையும், இந்த ஸ்லோகத்தில் உள்ள ‘அச்யுத பானு’ என்னும் அடைமொழியால் காட்டுகிறார்.
சூரியன் காலையில் உதித்தாலும், மாலையில் அஸ்தமித்து விடுவதால், அதற்கு ‘ச்யுத பானு’ (மறையும் சூரியன்) என்று பெயர். ஆனால் கண்ணனோ, அஸ்தமிக்காமல், மறையாமல் எப்போதும் ஒளிவீசும் சூரியனாக இருப்பதால், ‘அச்யுத பானு’ (மறையாத சூரியன்) என்று கண்ணனைக் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி, கர்மவினையால் நாம் பிறப்பது போல் அவன் பிறப்பதில்லை. தனது கருணையால் கீழே இறங்கி வந்து அவதரிக்கிறான். இதைத் தெளிவு படுத்தவே ‘ஆவிர்பூதம்’ (கண்ணன் ஆவிர்பவித்தான்) என்று இந்த ஸ்லோகத்திலே கூறுகிறார் பராசர முனிவர்.

இவ்வாறு கண்ணன் அவதாரம் செய்த போது, கடல்கள் வாத்திய கோஷம் போன்ற ஒலியை எழுப்பின. தேவ லோகத்துக் கந்தர்வர்கள் தேவ கானங்களைப் பாடினார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். அப்ஸரஸ் பெண்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். உலகிலுள்ள தீ எல்லாம் சாந்தமாக எரியத் தொடங்கியது. மேகங்கள் முழங்கின.

குழந்தை கண்ணன் எப்படி இருந்தான்?

“புல்ல இந்தீவர பத்ர ஆபம் சதுர் பாஹும் உதீக்ஷ்ய தம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் ஜாதம் துஷ்டாவானக துந்துபி:” என்கிறார் பராசர முனிவர்.

அதாவது, நன்கு மலர்ந்த கருநெய்தல் பூப்போன்ற நிறத்தோடும்,
நான்கு கரங்களோடும், திருமார்பில் திருமகள் அமரும் வத்சம் என்ற மறுவோடும் குழந்தை கண்ணன்
விளங்கினான் என்பது இதன் பொருள்.

ஸ்ரீ சுக முனிவர் – ஸ்ரீ மத் பாகவத புராணம்:
“தேவக்யாம் தேவரூபிண்யாம் விஷ்ணு: ஸர்வகுஹாசய: ஆவிராஸீத் யதா ப்ராச்யம் திசி இந்துரிவ புஷ்கல:
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீ வத்ஸலக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்
மஹார்ஹ வைதூர்ய கிரீட குண்டல த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி: விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத”

“எல்லார் இதயத்திலும் ஒளிந்திருக்கும் திருமால், இருளடைந்த நள்ளிரவில், தேவப் பெண் போல் திகழ்ந்த தேவகியிடத்தில், கிழக்குத் திக்கில் பௌர்ணமி நிலவு உதிப்பது போல் வந்துதித்தார்.
தாமரைக் கண்களோடும், சங்கு சக்கரம் கதை போன்ற சிறந்த ஆயுதங்களோடும், நான்கு தோள்களோடும், மார்பில் வத்சம் எனும் மறுவோடும்,
கழுத்தில் கௌஸ்துப மணியோடும், இடையில் மஞ்சள் பட்டாடையோடும், வைடூரியத்தாலான கிரீட குண்டலங் களோடும்,
அவற்றின் பிரகாசத்தால் ஒளிவீசும் குழல் கற்றைகளோடும், ஒளிவீசும் அரைநூல், தோள்வளை, கங்கணம் ஆகியவற்றோடும்
விளங்கிய அந்த அற்புத இளங்குழந்தையை வசுதேவர் கண்டார்!” என்பது இந்த ஸ்லோகங்களின் திரண்ட பொருளாகும்.

நம்மாழ்வார் – திருவிருத்தம்:
“சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபந்தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே”

“கண்ணா! வைகுண்டத்தில் உள்ள நித்திய சூரிகள் உனக்கு நன்றாக அபிஷேகம் செய்து, மணம்மிக்க மலர்மாலைகளைச் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபம் காட்டிய போது, அந்தப் புகை உன்னை முழுவதுமாக மறைத்த நிலையில், நீ ஒரு மாயம் செய்து, இப்பூமியில் கண்ணனாக அவதாரம் செய்து, வெண்ணெயைத் திருடி உண்டு, ஏழு காளைகளை அடக்கி, நப்பின்னையைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, கூத்தாடி விட்டு, புகை அடங்குவதற்குள் மீண்டும் வைகுண்டத்துக்கே எழுந்தருளி விட்டாயே! உனது மாயத்தை என்னவென்று சொல்வேன்?” என்று இப்பாடலில் வினவுகிறார் நம்மாழ்வார்.

பெரியாழ்வார் திருமொழி:
திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டிருக்கும் சௌமிய நாராயணப் பெருமாளையே கண்ணனாகக் கண்டு, அந்தப் பெருமாளே ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்ததாகப் பெரியாழ்வார் பாடுகிறார்:

“வண்ணமாடங்கள் சூழ்த் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தளராயிற்றே”

திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டுள்ள சௌமிய நாராயணப் பெருமாள், (மதுராவில் இருந்த கம்சனிடம் இருந்து தப்பி வந்து) ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமாளிகையில் குழந்தையாகத் தோன்றினான். அப்போது ஆயர்பாடியைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் எண்ணெயையும்
மஞ்சள் பொடியையும் மகிழ்ச்சியோடு ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டு, கண்ணனின் அவதாரத்தைக் கொண்டாடினார்கள்.
அதனால் நந்தகோபனுடைய வீட்டின் பெரிய முற்றம் முழுவதும் சேறாகி விட்டது.

“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே”

கண்ணன் பிறந்த சந்தோஷத்தில், ஆயர்கள் எல்லோரும் பால், தயிர் சேமித்து வைத்த உறிகளை முற்றத்தில் உருட்டி விட்டுக் கூத்தாடினார்கள். நெய், பால், தயிர் உள்ளிட்டவற்றை வறியவர்க்குத் தானம் செய்தார்கள். ஆய்ச்சியர்கள் தங்கள் கூந்தல் அவிழ்ந்து போனது கூடத் தெரியாமல் நடனம் ஆடினார்கள். பித்துப் பிடித்தவர்கள் போல் அனைவரும் கூத்தாடினார்கள்.
வேதாந்த தேசிகன் – யாதவாப்யுதயம்:

கண்ணனின் முழு வரலாற்றை யாதவாப்யுதயம் என்னும் இருபத்து நான்கு சர்கங்கள் கொண்ட மகாகாவியமாக வடித்துத் தந்தார் வேதாந்த தேசிகன். அதில்,

“புக்தா புரா யேன வஸுந்தரா ஸா ஸ விச்வ போக்தா மம கர்ப பூத:”–என்கிறார்.

தேவகி எட்டாவது முறையாகக் கருவுற்றிருந்த நிலையில், மண்ணை உண்டாளாம். மண்ணை உண்டதன் மூலமாக, இந்த மண்ணுலகத்தை எல்லாம் உண்ட கண்ணன் என் வயிற்றுக்குள் தான் இருக்கிறான் என்பதை உலகுக்குச் சூசகமாகத் தெரிவித்தாள் தேவகி என்று இந்த ஸ்லோகத்தில் வேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.

மேலும், கண்ணன் அவதரித்த காலத்தை ஜோதிட ரீதியில் துல்லியமாகத் தெரிவிக்கிறார் வேதாந்த தேசிகன்:
“அத ஸிதருசி லக்னே ஸித்த பஞ்ச க்ரஹோச்சே
வ்யஜனயத் அனகானாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்
நிகில புவன பத்ம க்லேச நித்ரா அபனுத்த்யை
தினகரம் அனபாயம் தேவகீ பூர்வ ஸந்த்யா” என்ற ஸ்லோகத்தில்,

“சந்திரோதயம் ஆனபின், ரோகிணி நட்சத்திரத்தோடு கூடிய ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியில் (ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியோடு ரோகிணி நட்சத்திரம் இணைந்து வந்தால் அந்நாளை ஜயந்தி என்று அழைப்பார்கள்), ரிஷப ராசியில் சந்திரனும், மகர ராசியில் செவ்வாயும், கன்னி ராசியில் புதனும், கடக ராசியில் குருவும், துலா ராசியில் சனியும் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், சந்திரனுக்கு உகந்த ரிஷப லக்னத்தில், பூமியாகிய தாமரையைத் துயில் எழுப்புவதற்காக, தேவகி என்னும் கிழக்குத் திக்கில், கண்ணன் என்னும் சூரியன் தோன்றினான்!” என்று வர்ணித்துள்ளார்.

நாராயண பட்டத்ரி – நாராயணீயம்:
“ஆனந்த ரூப பகவன்னயி தே அவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவத் அங்க நிரீயமாணை:
காந்தி வ்ரஜை: இவ கனாகன மண்டலை: த்யாம்
ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷ வேலா”

“ஆனந்த வடிவமான குருவாயூரப்பா! உன் அவதாரக் காலம் நெருங்கிய போது, உன் திருமேனியில் இருந்து வெளிக்கிளம்பிய கதிர்ப் படலங்கள் போல் மேகங்கள் பெரிதாக வானில் தோன்றின. அவை வானையே மறைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறு கார்காலம் விளங்கிற்று.”

“ஆசாஸு சீதலதராஸு பயோத தோயை:
ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜனேஷு
நைசாகரோதய விதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹ த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:”

“மேகங்கள் பொழிந்த மழையால் திசைகள் எல்லாம் குளிர்ந்தன. நல்லோர் விரும்பிய அனைத்தும் கைகூடின. மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். நள்ளிரவில் சந்திரன் தோன்றும் வேளையில், மூவுலகின் துன்பத்தை அழிப்பவனான நீ தோன்றினாய்!”

“பால்யஸ்ப்ருசா அபி வபுஷா ததுஷா விபூதீ:
உத்யத் கிரீட கடகாங்கத ஹார பாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேன
மேகாஸிதேன பரிலேஸித ஸூதி கேஹே”

“குழந்தை போல் தோற்றமளித்தாலும் வல்லமை மிக்க திருமேனி கொண்டவன் அல்லவோ நீ? கிரீடம், கைவளை, தோள்வளை, முத்து மாலை முதலியவற்றின் ஒளியோடும், சங்கு சக்கரம், தாமரை, கதை போன்றவற்றோடும் நீ விளங்கினாயே! கருமேகம் போல் நீல நிறத்தோடு நீ
விளங்கினாயே!”

ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள்:
மன்னார்குடியில் கோவில் கொண்டிருக்கும் வித்யா ராஜகோபாலனைக் குழந்தை கண்ணனாக அநுபவித்து,
அவனது தோற்றத்தை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வடமொழியில் வர்ணித்துப் பாடுகிறார்
“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப:
பாலாவேசித மௌலி ரத்ன திலகோ மாலாவலீ மண்டித:
சேலாவேஷ்டித மௌலி மோஹித ஜன: சோலாவனீ மன்மத:
வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”

வலக்கையிலே செண்டை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ என்று வியக்கும்படி, இளஞ்சூரியனைப் போன்ற பொலிவுமிக்க வடிவுடன், திவ்யமான ரத்தினத் திலகத்தை நெற்றியில் அணிந்து கொண்டு, செண்பகம் போன்ற பூமாலைகளை அணிந்து கொண்டு, அழகிய தலைப்பாகைக் கட்டால் அனைவரையும் மயக்கும் சோழநாட்டு மன்மதனும், கருணைக் கடலுமான ராஜகோபாலனைத் தலையால் வணங்குகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

மகாகவி பாரதியார்:
கண்ணன் பிறந்தான்! – எங்கள் கண்ணன் பிறந்தான்! – இந்தக் காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான்! – மணி வண்ணம் உடையான்! – உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்!
பண்ணை இசைப்பீர்! – நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர்! – இந்தப் பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர்! – நன்கு கண்ணை விழிப்பீர்! – இனி ஏதும் குறைவில்லை! வேதம் துணையுண்டு!

இதைத் தழுவிக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய புதுக்கவிதையும் நோக்கத் தக்கது:
கண்ணன் பிறந்தான் – எங்கள் கண்ணன் பிறந்தான் – புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் – எங்கள் மன்னன் பிறந்தான் – மனக் கவலைகள் மறந்ததம்மா

அயோத்தியில் ராமன் அவதரித்த போது, அதைத் தசரதச் சக்கரவர்த்தி கோலாகலமாகக் கொண்டாடினார். ஆனால் மதுராவில் சிறைச்சாலையில் கண்ணன் அவதரித்த வேளையில், விலங்குகளால் கட்டப்படிருந்த தேவகியாலும் வசுதேவராலும் பெரிதாக அவனது பிறப்பைக் கொண்டாட முடியவில்லை.
அக்குறை தீரவே, இன்று ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை நமது இல்லங்களில் எல்லாம் வெகு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். பல்வகை இனிப்புகளை வீட்டில் செய்து, கண்ணன் நம் இல்லத்துக்குள் நுழைவதன் அடையாளமாக அவனது திருப்பாத வடிவில் இழைகோலம் இட்டு, பஜனைகள், பாடல்கள்,

பாராயணம் எனப் பலவிதமான முறைகளில், நம்வீட்டில் குழந்தை பிறந்தது போல் மகிழ்ச்சியோடு ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாளைக் கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணஜயந்தி நாளில் விரதம் இருப்போர்க்கு, ஒரு வருடத்தில் உள்ள அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிட்டும். இந்நாளில் கண்ணனை வழிபடுவோர்க்குக் கண்ணனைப் போலவே ஒரு குழந்தை பிறக்கும் என்பதில் ஐயமில்லை!

—————–

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

—————-

உகாரம் -ம் -அகாரம் -துக்காராம் -உமது -சொத்தாகவே அனுசந்தேயம் உபக்ரமத்தில்
உப சம்ஹாரத்திலும் என் என்பது என் -யான் என்பது என் -என்று ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களையும் நிரஸித்து அருளினார் –
ஸாது -சந்திம் இச்சந்தி ஸாத்வ -ஸத் ஸந்தாதா -சந்திமான் -பரதனுக்கும் திரு நாமங்கள் –
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்து

——————

ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்ய தேசங்கள் எனப்படும்
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷதிங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்ய தேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.
கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக்
காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய காளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்ஜ்வல பாரி ஜாதம்,
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.  திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம்–கொடை என்றுமாம் -அபீஷ்ட வரதன் அன்றோ -.
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.
இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.  இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகாரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாதுவச்சாவசேந |
யத்வீதீநாம் கார்கிபதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்வதசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை: ||   என்று.–தேவப்பெருமாளின் உத்ஸவம் விமா¢சையாக நடக்கிறது.

அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.  ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவை ஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.  அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது. -அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள். -அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
“வந்தே ஹஸ்திகிரீ சஸ்ய வீதீசோதககிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.
‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.  அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள்.
அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது,
தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.  இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.  மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது,

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டு
இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்து நான்கு சாண் கொண்டது.
வானவெடிகள் இருபத்து நான்கு வகைகள்.
த்வஜ ஸ்தம்பத்தில் இருபத்து நான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்து நான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.  இவையும் இருபத்து நான்கே.
இப்படி இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்து நான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதாரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே’
என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.
அப்பைய தீக்ஷ¢தர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸ கனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்து நான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –
ஸம்ஸாரவாரிநிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
பஸ்யந் பவந்த முபயாதி காரிச நூநம் ||
வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்தி¡¢யம் ஐந்து, ஜ்ஞாநேந்தி¡¢யம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம்
ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரம சேதனன் பரமாத்மா.

தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்துவிடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்து நான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள
அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே
கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.

இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்ய தேங்களைக் காட்டிலும் வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பஞ்ச நாராயண -ஸ்ரீ ரெங்க -ஸ்ரீ ராம -ஸ்ரீ க்ருஷ்ண -ஸ்ரீ நரஸிம்ஹ ஷேத்ரங்கள்

December 23, 2022

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :

ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில்
எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டி தேவன் என்கிற விஷ்ணு வர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.

கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்–
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்
தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி ,
கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத் பரர் ஆகையால்,
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத் பரத்தையே இவர் கைவேல்.
திரு மந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு
ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.
கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது
முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார் மேனி நாராயணன் –
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவது போல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் –
என்றது செவ்வரி யோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.
மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும்
இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.

———-

பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன திருக் காவேரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின்  கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்- ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும் 

ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒன்று கர்நாடகாவிலும் மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் உள்ளன.

ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு)

ஆதிரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம்

காவிரிநதியின் முதல் தீவு கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உருவாகிறது.
இங்கு அரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது.
எனவே இது ஆதிரங்கம் எனப்படுகிறது
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது

அரங்கநாதசுவாமி கோவில். சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார்.
பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார்.
பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார்.

இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் சிவசமுத்திரம் ஆகும்.
இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவில் மத்தியரங்கம் என்று ஒரு சிலரால் அழைக்கப்படுகிறது.

மத்தியரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

அரங்கநாதசுவாமி

தமிழ்நாட்டில் காவிரி நதி திருச்சிராப்பள்ளி அருகே மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும்.
இது மத்தியரங்கம் என்று பெயர் பெறுகிறது
சிலர் இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் காவேரிக் கரையில் அமைந்த, பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்று.

ஸ்ரீரங்கம் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம்.
இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்.

அப்பாலரங்கம்

அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்ளில் அப்பாலரங்கம் என்று சொல்லப்படும்
திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் இரண்டாகப் பிரியுமிடத்தில்
இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில்,
கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை சென்று அங்கிருந்து கோவிலடி செல்லவேண்டும்.

இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.
உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று.
இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும்,
உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.
தாயாரின் திருப்பெயர்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி என்பனவாகும்.

சதுர்த்தரங்கம்

சாரங்கபாணி கோவில்,கும்பகோணம்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் (உபய பிரதான திவ்யதேசம்) ஒன்றாகவும்,
பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில்,
காவிரி நதி – காவிரி, அரசலாறு என்று – இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது.
தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன.
பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார்.
எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார்
இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது.
வேத சக்ர விமானத்தின் கீழ் பரிமள ரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் சந்நிதியின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பரிமள ரங்கநாதர் திருவடிகளில் யமதர்ம ராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாயாரின் திருப் பெயர் பரிமள ரங்கநாயகி ஆகும்.
சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் திரு இந்தளூர் எனப் பெயர் பெற்றது.

————

பஞ்ச சயன ரங்கம்

“பஞ்ச“  என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள். 

இந்த “பஞ்ச“  என்ற ஐந்தின் சிறப்பினை நாம் பஞ்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்.

பஞ்ச நிலைகள் ..பகவான் பரம், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி  என்று ஐந்து நிலைகளில் அர்ச்சிக்கப்படுபவன்.

பாஞ்சராத்ரம்..பகவானை ஆராதிக்கும் ஒரு வழிமுறை.  ஐந்து ராத்ரிகளில் ஐந்து முனிவர்களுக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஒரு சிறந்த வழிப்பாட்டு முறை.

பஞ்ச சம்ஸ்காரம்,இது ஒவ்வொரு வைணவருக்கும் கட்டாயம் அமைய வேண்டிய “நல்வினை சடங்கு“.  (1)தாப ஸம்ஸ்காரம் (2) புண்ட்ர ஸம்ஸ்காரம் (3) நாம ஸம்ஸ்காரம் (4) மந்த்ர ஸம்ஸ்காரம் (5) யாக ஸம்ஸ்காரம் என்ற ஐந்து நிலைகளையும் குருவிடமிருந்து ஒரே சமயத்தில் பெறுதல்.

பஞ்சாங்கம்..பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:

  1. வாரம் 2.திதி3.கரணம் 4-நட்சத்திரம்,5.யோகம் என்பனவாகும்.

பஞ்ச கவ்யம் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் என பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.  சாத்திரப்படி சரீரத்திற்கும், இதர பொருட்கள் சுத்திக்கும்  இன்றியமையாதது.

பஞ்சாம்ருதம் பகவானுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவை.

தீபத்திலும் பஞ்ச முக விளக்கு  பஞ்ச முக தீபம் முதலியன சிறந்தனவாம்.
இது வரை பகவானோடு தொடர்புடைய சில ஐந்தின் சிறப்பினைப் பார்த்தோம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐந்து என்ற எண் புதன் கிரகத்திற்குரியது.  இந்த புதனின் அதிதேவதை விஷ்ணு அதாவது ஸ்ரீரங்கநாதனே..!. புதன் நன்கு அமையப் பெற்றவர்
அதிபுத்திசாலிகள்.  கணிதத் திறமை, கணினித் திறமை,  கலைத்திறன் வாய்ந்தவர்கள்.ஆக்கப்பூர்வமானவர்கள்….!

ஐந்து என்ற எண் இயக்க சக்தி..! காலில் மற்றும் கைகளில் உள்ள ஐந்து விரல்களின் இயக்கத்தினால் தான் ஒரு செயலை தடையின்றி செய்ய முடிகின்றது.
ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகத்தின் வலிமைக் குன்றியவர்கள்,  மற்றும் நம்முடைய ஜாதகரீதியாக
புதன் மேலும் வலிமைப் பெற ஸ்ரீரெங்கநாதனை வணங்குபவர்கள் நீங்கப் பெறுவர்.

சயனம்‘சயனம்’ என்றால் ‘நித்திரை’  அல்லது ‘உறங்குதல்’ என்று பொருள்.  இது ஒரு தற்காலிக விடுதலை..! இது ஒரு வரப்பிரஸாதம்..!  இது சரிவர அமையப்பெறாதவர் அனைவரும் துர்பாக்கியசாலிகளே..!  இது ஜாதகத்தின் 12ம் இடமாகும்.  இந்த இடம் கெட்டிருந்தால் அந்த ஜாதகரின் நிம்மதியான நித்திரை என்பது சந்தேகமே..!சயனம் கொண்டிருக்கும் பகவானை அனுதினமும் ஸேவிக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்..!  நிம்மதியாக வாழ்வர்..!

பஞ்ச சயன ரங்கம்

ரங்கம் என்றால் அரங்கம்.  இந்த அரங்கமானது பாம்பணையின் மிருதுவான பள்ளிக்கட்டிலின் மேல்பரப்பு.  இங்கு பள்ளிக்கொண்டு உறங்குபவன் அரங்கன். அரங்கன் என்றாலே அழகு..!  இதனை நான் சொல்லவில்லை..!  ஆண்டாளின் திருவாயினால் கேட்போம்..!  ஆண்டாளுக்கு 108 திவ்யதேச எம்பெருமான்களில்  அரங்கனின் அழகுமட்டுமே நெஞ்சைக்கவர்கிறது…!

எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரேஎன்று பாடுகிறாள். 

01.ஸ்ரீரங்கம்.

வைணவத்தினைக் கருவில் சுமந்தவள் அரங்கத்தம்மா..!

வைணவத்தினை வளர்த்த ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் அவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான் தாய்வீடு..!

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அடைக்கலம் புகுந்தது இந்த அரங்கத்தம்மாவிடம்தான்..!வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்..!

எந்த திவ்யதேசம் சென்றாலும் “அடியார்கள் வாழ்க..!  அரங்கநகர் வாழ்க..!“ என்னும் கோழம் இல்லாமல் சாற்றுமுறையில்லை.

ஸ்ரீரங்கம் நன்கு செழிப்புடன் இருந்தால் தான் வைணவத்திற்கு சிறப்பு..!

இங்கு ஏதேனும் தாழ்வு ஏற்பட்டால் உலகிலுள்ள அனைத்து வைணவதலத்திற்கும் தாழ்வே..!

அதனால்தான் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் அடியார்களும், ஆச்சார்யர்களும், ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தில் மண்டியிட்டு கிடந்துள்ளனர்.., கிடக்கின்றனர்..!

இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள் புரிபவள்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகர்
“அள்ள அள்ளக் குறையாத அருள் அமுதம்.
தோளாத தனிவீரன் ஸ்ரீராமன் தொழுதகோயில்.
வீடணருக்குத் துணையாய் திருவரங்கம் வரை வந்த கோயில்..!
செழுமறையின் முதல் எழுத்தாம் “பிரணவரூபமாய்“ விளங்கும் கோவில்..!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்..!“ என்கிறார்.

இங்கே பெருமாள் “புஜங்க சயனம்”  –
விமானம் ப்ரணவாக்ருதி விமானம்.
தாயார் – ஸ்ரீரெங்கநாயகி.

எந்த க்ஷேத்திரம் சென்றாலும் “லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் – ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்….“  என்றுதான் சாற்றுமுறையில் ஓதுவர்.
இவள் சமஸ்த லோகங்களுக்கும் “ஓளி்“யாவாள்.   இவள் கருணையில்லாவிடின் இருட்டுதான் எங்கும்..!
இங்குள்ள தீர்த்தம்   சந்திரபுஷ்கரிணி தீர்த்தம்.
தர்மவர்மா என்னும் சோழ அரசன் அரங்கன் வருகைவேண்டி கடும் தவம் பரிந்த இடம்.
இந்த அரங்கன் தர்வவர்மா, காவேரீ, விபீஷணன் ஆகியோருக்குப் ப்ரத்யக்ஷம்.
ஆழ்வார்களோடும், ஆச்சார்யர்கள் பலருடனும் தன்னுடைய “அர்ச்சை“ என்ற நிலைப்பாட்டினையும் தாண்டி அன்போடு அளாவியவன்.
இன்னமும் மெய்யன்போடு  இருப்பவரிடத்து தாயன்போடு உருகுபவன்.
தன்னை அண்டியவர்களை அபய முத்திரை காண்பித்துக் காப்பாற்றும் இந்த அரங்கனை அதிகாலையிலேயே வந்து தரிசியுங்கள்.
இங்கு பெருமாள், தாயாருக்கு நந்தவனத்திலிருந்து வரும் மாலைகளைத் தவிர வேறு ஏதும் சாற்றுவது கிடையாது.
அரங்கன் அன்புக்குத்தான் அடிமை..!  உங்கள் துாய அன்பினை சமர்ப்பியுங்கள்..!  அதுவே பெரிய புஷ்பம் அவனுக்கு

——–

02. உத்தமர் கோவில்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே

திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம்.
ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட ஸ்தலம் –
ஆழ்வார் மீது – ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.
ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹா லக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார்.
இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.
தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம் தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..?
கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர்.
கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.

இங்கு பெருமாள் புஜங்க சயனம் – கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.
விமானம் உத்யோக விமானம்.
தீர்த்தம் கதம்ப தீர்த்தம்.
ப்ரத்யக்ஷம் கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ
மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் – ஒரு பாடல்
ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த ஸ்தலம்.
பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும்

———–

03. கோபுரப்பட்டி
வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:1324ம் ஆண்டு. திருவரங்கத்தின் ஒரு மோசமான ஆண்டு..! மாலிக்காபூர் என்னும் முகலாய தளபதியின் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 12000 வைணவர்களின் தலையைச் சீவிக் கொன்ற ஆண்டு..! “பன்னீராயிரம் தலைத் திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று ஸ்ரீரங்கத்தின் கோவிலொழுகு இந்த வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது.
இந்த கொலைப்படையிடமிருந்து தப்பிய வைணவர்கள் சுமார் 750 பேர்களேயாவர். இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்த ஊர் கோபுரப்பட்டி.
அபயமளித்து அருளியவர் ஆதிநாயகன் – இந்த ஊரில் பள்ளிகொண்டு அருளும் கதாநாயகன்.
வைணவம் காத்த ஊர் – வைணவம் வளர்த்த ஊர்.

ஸ்ரீரங்கத்தில் இறந்த வைணவர்களுக்கெல்லாம் இங்குள்ள பெருவளவாய்க்காலின் கரையில் இங்குள்ள வைணவர்கள் வாழ்ந்த வரையிலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் அனைத்தும் செய்து வருடந்தோறும் திதி கொடுத்திருக்கின்றனர். இறந்த அனைவருமே இவர்களின் உறவுக்காரர்களா என்ன? ஆம்..! ஆண்டாளின் கூற்றுப்படி அரங்கனுக்கு உற்றவர்கள் அனைவருமே உறவினர்கள்தானே..! ஒரு கூட்டமாக நின்று பலவருடங்கள் ஒரு நதியின் கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ, பாரபட்சம் இல்லாது, வேற்றுமைகள் இல்லாது ஒருமித்து சுமார் 50 பேர்கள் சேர்ந்து திதிகள் கொடுத்தாலே அந்த நதி பவிஷ்யமானது..! அந்த நீர் புண்ணிய தீர்த்தம்..! முன்னோர்களின் ஆசிபெற்ற க்ஷேத்திரம்! ஒரு சில தீர்த்தகரைகளுக்கே இந்த புண்ணியபாக்கியமுண்டு. கோபுரப்பட்டி அத்தகைய புண்ணியத்தினைப் பெற்றுள்ளது. இங்கு உறையும் ஆதிநாயகர் பித்ருதோஷங்களை கண்டிப்பாக போக்கக்கூடியவர். ஆதிநாயகி ஸமேத ஆதிநாயகரை வணங்குங்கள். நம் முன்னோர்களின் அருளாசியோடு, வாஸூதேவனாம் ஆதிநாயகனின் அருட்பார்வையும் அமையப்பெறுவீர.

பெருமாள் ஆதிநாயகரை் என்னும் ஸ்ரீரங்கநாதர்
தாயார் ஆதிநாயகி என்னும் ஸ்ரீரங்கநாச்சியார்
சயனம் பால சயனம்
தலவிருட்சம் பன்னீர் புஷ்ப மரம்.
அர்ச்சகரின் அலைபேசி எண் +91 98655 56504.
வழி மண்ணச்சநல்லுார் – அழகிய மணவாளம் – கோபுரப்பட்டி

வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:

வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:

வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:

வேத நுால்களின் படி, அறிவின் இறுதி நோக்கமாகயிருப்பவர் வாஸூதேவனே.!
யாகங்கள் செய்யும் நோக்கமே அவரை திருப்திப்படுத்துவதுதான்!. வேதம் கற்பதே அவரை உணர்வதற்குதான்!. அவரே பரமஞானம்! கடும்தவமும் அவரை அறிவதற்கே!
மதமும் அவருக்கு அன்புத் தொண்டாற்றவே..! எல்லா க்ரியைகளும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம்..! வாழ்வின் மிக உயர்ந்த இலக்கும் அவரே..!

03. திருஅன்பில்
கோபுரப்பட்டியினை தரிசித்தபின், சுமார் 1 கி.மீ தொலைவில் ’அழகிய மணவாளம்’ என்னும் திருத்தலம் உள்ளது. நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பித்துச் செல்கையில், இங்கு சிலகாலம் தங்கி சென்றதாக வரலாறு. நல்ல ஆகுரிதியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வீர் பின்னர் அருகில் சுமார் 2 கி.மீ தொலைவில்தான் “திருவெள்ளரை“ எனும் மிகவும் புராதனமான திவ்யதேசம் உள்ளது. இந்த திவ்யதேச பெருமாளையும் சேவித்து அங்கிருந்து திரும்பவும் மண்ணச்சநல்லுார் வழியாக டோல்கேட் அடைந்து இலால்குடி செல்லும் பாதையில் பயணித்து “திருஅன்பில்“ என்னும் நான்காவது சயனம் கொண்ட அரங்கனைத் தரிசிக்கலாம்

அறியாமல் செய்த பாபத்தினி்ன்று கூட தப்பி விடலாம். ஆனால் ஒருவர் சாபத்திலிருந்து விடுதலை பெறுதல் மிகவும் கடினம். ரிஷிகளின் காலத்தில் சாபங்களுக்கும், சாபவிமோசனங்களுக்கும் குறைவேயில்லை. ஒரு மகரிஷி தாம் பெற்ற சாபத்தினால் தவளையாகவே மாறிவிட்டார். தவியாய் தவித்தார். இத்தலத்து பெருமாள்தான் அவருக்கு சாபத்தினின்று விடுதலை அளித்தவர். “மண்டூகம்“ என்றால் சமஸ்கிருதத்தில் ‘தவளை’ என்று அர்த்தம். அந்த மகரிஷி இந்த சாபவிமோசனத்திற்குப் பிறகு ‘மண்டூக மகரிஷி’ என்றே அழைக்கப்பெற்றார். இந்த மகரிஷி தன் சாபவிமோசனம் பெற நித்யமும் நீராடிய குளம் ”மண்டூக புஷ்கரிணி’ என்று அழைக்கப்படுகின்றது. மகாசாபத்தினைப் போக்கிய இந்த புஷ்கரிணியும் பெருமாளும் நம் பாபத்தினைத் தொலையச் செய்ய மாட்டார்களா என்ன..? நம் முற்பிறவி பாபத்தினையும் சேர்த்துக் கண்டிப்பாக போக்குவார். இத்தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. மூன்று நதிகள் இணையும் இடம் திரிவேணி சங்கமம் ஆகும். இந்த சங்கமம் நம் சங்கடங்களை போக்கும். சாபங்கள், பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும். இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் காவிரி, பல்குணி, சாவித்ரி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமம் ஆகுவதாக புராணங்கள் சொல்கின்றன. பல்குணியும், சாவித்ரியும் கீழே பாதாளத்தில் ஓடுவதாக கூறுகின்றது.. இந்த க்ஷேத்திரத்தினை “தக்ஷிண கயா“ என்றழைப்பர். கயா சென்ற பலனை இத்தலத்தில் நீராடி தரிசித்தால் அடைவோம்.
வால்மீகி ரிஷி இங்குதான் அவதரித்து பின்னர் வடநாடு சென்றார் என்பர். கம்பரும், ஓளவையாரும் இத்தலத்துப் பெருமாளை வழிப்பட்டிருக்கின்றார்கள்.
திருமழிசை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலமிது.
பெருமாள் : வடிவழகிய நம்பி (சௌந்தரராஜன்)
தாயார் : அழகிய வல்லித் தாயார்
விமானம் : தாரக விமானம்
சயனம் : புஜங்க சயனம..

05. திருப்பேர்நகர் என்னும் கோவிலடி

பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம். திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.  அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.

‘இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய  உணர்தலுற்றேனே!’  – நம்மாழ்வார் திருவாய்மொழி

திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
“இருப்பேன்” அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!”    – நம்மாழ்வார் திருவாய்மொழி

பெருமாள், “இந்த இடத்தை விட்டு பெயரேன்“ எனவருளியதால், ‘திருப்பேர்நகர்’ என்று பெயர்க்காரணம் .   நம்மாழ்வார் இந்த பெருமாளை தரிசித்தபின் “…அமுதுண்டு களித்தேனே…“ என்கின்றார்.  ஆம் இந்த அமுதம் நம் பிணி போக்கும் அமுதம். நம் பசி, நம்மை சுற்றியுள்ளோரின் பசியாற்றும் அமுதம்.  நம் பாபம் போக்கும் அமுதம். நமக்கு அழிவில்லா மோக்ஷானந்ததை காட்டிக்கொடுக்கும் அமுதம்! சோழ தேசத்தின் வழியாக கோயில் என்னும் திருவரங்கத்திற்குள் பக்தர்கள் எடுத்துவைக்கும் முதல் அடியில்  இருப்பதால் இந்த திவ்யதேசம் கோயிலடி என்று பெயர்பெற்றது! நம் மன இருளின் நடுவே ஜீவாத்மாவிற்கு சுஷும்னா நாடியை காட்டிக்கொடுக்கும் பேரொளியாய்!, பேரேன்! என்று உள்ளத்தினுள் இருக்கும் அந்தர்யாமியாக, நம் நெஞ்சுக்குள் நிறைபவரே இந்த திருபேர்நகர் எம்பெருமான்!.  நாம் ஸ்ரீவைகுண்டம் புகுவதற்கு ஆணிவேராய் உதவும் பெருமாள் இவர்!   எப்படி ஜீவாத்மா ஸ்ரீவைகுண்டம் அடைவதற்கு முதலடியாய் அந்தர்யாமி துனைபுரிகிராரோ! அப்படியே நாம் பூலோக வைகுண்டமான திருவரங்கம் புக துனைபுரிகிறார் இந்த பெருமாள்!  இந்த பெருமாள்,   பெரியாழ்வார், திருமழிசையாழ்வார்ஈ திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (33 பாசுரங்கள) ஆகியோரால் கொண்டாடப்பட்டவர்.

மேற்கு நோக்கி சயனம்.  தாயார் கமலவல்லித் தாயார்.  விமானம் – இந்திரவிமானம்.

தீர்த்தம்  காவிரி.

இங்கு இத்தலத்துப் பெருமாள் காவிரியின் கரையில், ஒரு கையினை அப்பக்குடத்தின் மேல் வைத்தப்படி, காவிரியன்னையின் தாலாட்டு அரவணைப்பில் குளர்ச்சியாய் பள்ளி கொண்டருளுகின்றார். எப்போதும் நதிதீரத்தில் குளிர பள்ளி கொள்ளும் இப்பெருமாளை வணங்குவோர் வாழ்வுதனையும் இத்தலத்து பெருமாள் குளிரக் கடாக்ஷிக்கின்றார்.  காவிரி கரையின் ஓரமாக ஒரு முறை பயணித்து இந்த பெருமாளையும் தரிசியுங்கள.வாழ்வில் உய்வு பெறுதல் திண்ணம்..!

—————

பஞ்ச ராமர் தலங்கள் – பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர்.

இத் தலங்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன.

இவை முடிகொண்டான், அதம்பார், பருத்தியூர், தில்லைவிளாகம், வடுவூர் ஆகிய இடங்களில் உள்ளன. 

முடிகொண்டான் ராமர் கோயில்
அதம்பார் கோதண்டராமர் கோயில்
பருத்தியூர் ராமர் கோயில்
தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
வடுவூர் கோதண்டராமர் கோயில்

உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு.

இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு.

இதில் ‘பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை.

அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்திவாய்ந்த ஆலயங்களாகும்.

இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.

அருள்மிகு தில்லை விளாகம் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர்தேவர் எனும் இராம பக்தர் கனவில் இராமர் கோவில் கட்ட தெய்விக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்.

அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் ஒரு கோவிலே புதைந்து கிடப்பதைக் கண்டார். 1862இல் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். கம்பீரமான இந்தத் திருமேனிக்கு ‘ஸ்ரீ வீர கோதண்டராமர்’ என்று பெயர்.

1905க்குப் பின்னர் கோவில் விரிவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் இராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் தை, ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள் புனித நீராடுகின்றனர். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

நடராஜருக்கும் இந்தக் கோவிலில் சந்நிதி உள்ளது. இந்த தில்லைவிளாகம் கோவிலில் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமரைத் தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலில் இராம நவமி, ஹனுமார் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்டஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் வடுவூர் தாலுகாவில் உள்ளது. வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்குப் புறப்படத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர்.

இராமர் தன் உருவத்தை சிலையாகச் செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, இராமபிரானிடம், “இராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,”என்றனர்.

சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையைத் தரும்படி கேட்டனர். அதன்படி இராமர் அவர்களிடம் சிலையைக் கொடுத்துவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.

தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மஹாராஜா தலைஞாயிறு எனும் இடத்தில், அரசமரத்தடியில் விக்ரஹங்கள் இருப்பதாகக் கனவு கண்டார். அங்கு தோண்டியதில் கிடைத்த அற்புதமான இராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேய விக்ரஹங்களை, வடுவூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோவிலுள் பிரதிஷ்டை செய்தார்.

இந்த வடுவூர் இராமர் பேரழகு. பிராகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இந்த ஆலயந்தின் கோவில் குளம் ஸ்ரீ சரயு தீர்த்தம். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலில் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம்.

அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர்.

தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். இராமாயணச் சொற்பொழிவுகள் செய்து நூற்றுக்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை.

ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ இராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது.

தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைக் களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்தப் பழைமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் இராமர் கதை சொல்லி, இராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு அழகான ஒரு கோவிலை அமைத்தார்.

இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி விக்ரஹங்கள் உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம்.

இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது.

இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.

அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம்.

அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை போகும் வழியில் உள்ளது மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டான்.

ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல்தலையில் மகுடத்துடன் காணப்படுகிறார் ராமர். பரத்வாஜர் தவம் செய்த இடம் முடிகொண்டான். மூலவர் இராமர், சீதை, லக்ஷ்மணர் மட்டுமே. ஸ்ரீராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்து திரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார்.

இந்தக் கோவிலில் மூலவர் ஆஞ்சனேயர் இல்லை. இராமரின் வருகை பற்றி பரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சனேயர் சென்று விட்டார் என்பது புராணம். ஸ்ரீராமரை அரசராக உடனே பார்க்க பரத்வாஜர் ஆசைப்பட, பரத்வாஜர் இராமனுக்கு முடிசூட்ட, ஸ்ரீராமர் மகுடத்துடன் இங்கு கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாக ஐதீகம்.

ஹனுமாருக்கு தனியாக வெளியே ஒரு சந்நிதி உள்ளது. பரத்வாஜர் இராமனுக்கு முடிசூடியதைப் பார்க்காததால் அனுமார் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். ரங்கநாதருக்கு இங்கு தெற்கு நோக்கி சந்நிதி உள்ளது. இந்த ஆலயந்தின் மிகப்பெரிய கோவில் குளம் ஸ்ரீ ராம தீர்த்தம் உள்ளது.

சுவாமிக்கு பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம்

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது. இந்த அதம்பார் கிராமத்தின் அருகில் தாடகாந்தபுரம், நல்லமான்குடி, வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாடகச்சேரி, என்ற சிறிய கிராமங்கள் இராமாயணத்துடன் தொடர்புடையவை. தாடகையை வதம் செய்த இடம் தாடகாந்தபுரம், அழகிய மானை சீதை பார்த்த இடம் நல்லமான்குடி, மான் வலப்புறம் துள்ளி ஓடிய இடம் வலங்கைமான், மாயா மாரீசன் என்று அறிந்து, அதனை வதம்(ஹதம்) செய்ய முடிவெடுத்த இடம் அதம்பார், மானைக் கொன்ற இடம் கொல்லுமாங்குடி, தன் பாத அணிகலன்களை சீதை கழற்றிய அடையாளம் காட்டிய இடம் பாடகச்சேரி. தெளிவாக சிந்தித்து மாரீசனைக் கொல்ல (ஹதம் செய்ய) முடிவு செய்தஇடத்தில் அதம்பார் இராமர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலின் விக்ரஹங்கள் ஸ்ரீராமர், சீதை. லக்ஷ்மணர், ஆஞ்சனேயர், மான் உருவில் மாரீசன் மற்றும் பிரதான மூலவர் அதம்பார் வரதராஜப் பெருமாள். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் பிரசித்தம்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.

புத்திர் பலம் – அறிவில் வலிமை
யசோ – புகழ்
தைர்யம் – துணிவு(பொறுமை)
நிர்பயத்வம் – பயமின்மை
அரோகதா – நோயின்மை
அஜாட்யம் – ஊக்கம்
வாக் படுத்வம் – பேச்சு வலிமை
ச – இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால்
பவேத் – பிறக்கின்றன.

அஷ்ட ஸித்திகளும் கிட்டுமே

அறிவுக் கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத் திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன.

————

 

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில்

திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில்
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை.

கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார்.

சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.

கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ‌ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.

108 திவ்யதேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.

நீலமேகப் பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம்

இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது.

ஒரு சமயம் திருமாலை வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது.

திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை வெட்டினர்.

இதனைத்தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது.

திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.

திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டியருளினார். எனவே இத்தல இறைவனை சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். இத்தலத்தில் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன.

இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும்.

இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.

இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.

பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை

இவ்விடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது.

பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது.

திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.

திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும்.

இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தலஇறைவன் அருளுவார்.

வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.

கஜேந்திர வரதப்பெருமாள், கபிஸ்தலம்

இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான்.

அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான். ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான்.

கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது.

திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம் செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார்.

இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும்.

ஆடி பௌர்ணமியில் இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்

இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள்.

இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம்.

இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார்.

இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.

பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.

நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.

—————–

காயாம் பூ அரணங்கள்

“ஆ என்று ஓலமிட்ட ஆனைக் கோன் வீடு பெற அருளியதோ கவித் தலத்தில்
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு ஆனதுவோ கண்ண மங்கை
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம் கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க் காட்டியதோ கண்ணன் கட்டில்
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க பட படத்து மூவர் நிற்க
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப் பாடுவதோ கோவ லூரில்
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக் காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

கவித்தலம், கண்ணமங்கை, கண்ணங்குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி, ஐந்தாவது கண்ண அரணத்தை(கிருஷ்ணாரண்யம்) கண்ணபுரத்தில் தேடுகிறது

கவித்தலம்:
தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் உள்ளது கவித்தல். (வளந்து கிடத்தல். குடமூக்கைப் போல்(கும்பகோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன்(கய வேந்தன் = கஜேந்திரன்.) “ஆதி மூலமே” எனக் கூக்குரல் இட்டதும், கய வேந்தனுக்கும், அவன் காலைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். “ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்” எனத் திருமழிசை ஆழ்வாரால் பாடப் பெற்றது.

கண்ணமங்கை:
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது. பூதேவியை மணந்த இடமாகப் பல தலங்கள் சொல்லப்பெறும்; ஆனால் சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப்படுபவை சிலவையே. அவற்றுள் கண்ணமங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்று, நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால், பத்ராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். “கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்” என்பது திருமங்கையாரின் வாக்கு.

கண்ணன்கட்டு:
இது திருக்கண்ணங்குடி. நாகை-திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணைக் கண்ணனைக் கட்டிப் போட்டதால் குடியிருந்த தலம். மூலவரின் நாமம் உலகநாதன்.

கண் துஞ்சாப் புளி:
இது உறங்காப்புளி; நாகை புத்த விகாரையில் தங்கம் எடுத்துக்கொண்டு திரு அரங்கள் கிளம்பிய திருமங்கையார் கண்ணங்குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்துவிட்டு, அருகே உள்ள புளியமரத்தின் அடியி படுத்துறங்க எண்ணீ,”நான் அயர்ந்ததும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்” என்று புளிய மரத்துக்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளியமரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள சில புளிய மரங்கள் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஊறாக் கிணறு:
ஒரு நாள் தங்க இடம் கேட்ட திருமங்கயாழ்வார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர் தர மறுக்க, கோவத்தில், “ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக” என்று திருமங்கையார் கடும் உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவது இல்லையாம். தவறி ஊறினாலும் இங்கு உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்:
கடு உரைக்குப் பின், பசி மயக்கம் வந்து, மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை, யாரோ தட்டி எழுப்பி,”வழிப்போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு” என்று கொடுக்க, அதை உண்டு, திருமங்கையார் உறங்கிப் போகிறார். திரும்ப எழும்போது, மனம் குளிர, உலகைக் கனிவோடு பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய்(பதிலாக), ஓய்வுக்கு உதவிய மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும்படி இன்னுரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய் வந்து இடைமறிக்க, தான் வழிப்போக்கன் என்பதால், தனக்கு வழிப்போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததைக் கண்டு வியக்கிறார்.

திருக்கோவலூர்:
இது தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; இங்கிருப்பது கண்ணன் கோயில்; இங்கிருக்கும் ஆறு கண்ண பெண்ணை (கருத்த ஆறு; இதே பெயர் ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமராய்க் காட்சி அளித்தாலும், ஊருலவரைக்(உற்சவர்) கோவலன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இடைகழியில் இருக்க,மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற உன்னத நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. “வையம் தகளியாய்” என்று பொய்கையாரும், “அன்பே தகளியாய்” என்று பூதத்தாரும், “திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்று பேயாரும் பாடிய பெருந் தலம் இது. ஆக, நாலாயிரப் பனுவலின்(பிரபந்தம்) முதல் எழுச்சி, இந்த ஊரில்தான் நடந்தது.

காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து எனப் பொருள் வரும்.

——————

மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1) மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2) மதில் ஆறு போக்கச் சொன்னான்
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில் செய்குவதே நோக்க மாக
சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க, செழுங் கோயில் அரையர்(4) வந்து
“எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை எங்கள் முனம் பொய்யா ன..தோ?”(5)
என்று எறிந்த தாளத்தால்(6), நெற்றி வடு பட்டு விட எகிறியதே திகிரி(7)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வர்மோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது கண்டு பொங்கி எழுந்து, ஒரு பத்தர், “நீ எப்படி பொறுத்துக் கொண்டு இருந்தாய்?” என்று கேள்வி கேடடுப் பெருமாள் மீதே தாளத்தை எறிய, அதனால் பெருமாளுக்கு நெற்றியில் வடு ஏற்பட்டு, பின் பத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை, இந்தப் பாடலில் பேசப்படுகிறது.

1. கீழ்வீடு – 108 விண்ணவத் திருப்பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ்வீடு என்று அழைக்கப்படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் – மால்மேகன்

2. வளநாடன் – சோழன்
3. சென்னி – பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)
4. அரையர் – திருப் பணி செய்யும் அன்பர் (திருவரங்கத்தில் அரையர் சேவை உண்டு)
5. “பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ?” என்று கேட்டதாக ஐதீகம்.
6. தாளம் – கைத்தாளம்
7. திகிரி – சக்கரம்.

—————

வரையாத அழகோடு, வடிவான உருவோடு, வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும், பழிக்கின்ற பருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன் ஒரு நாள் புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும் புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில் நுழையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் கழிப்பதை, நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி கண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

புரைதல் – ஒப்புதல், பொருந்துதல்;
புரையாத திருமகள் – ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்;
கரையோடு ஊருலவும் திரு மேனி – கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.

இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம்(ப்ழைய கதை) உண்டு. இந்தத் தோற்றரவில்(அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. பெருமாள், பத்மினி நாச்சியாரைக் கைப்பிடிக்கும் விழா, கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் நடக்கிறது. மீனவனாய் மாற்றிச் சரம்(கைலி) கட்டி, பெருமாளின் ஊருலவுத் திருமேனி(உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். அங்கே, கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். இப்படி,”எங்கள் மாப்பிள்ளை” என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சிலகாலம் வரை இருந்திருக்கின்றது.

———-

“பண்டு ஒரு நாள் மூலவருக்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில் படிந்திருந்த முடியைக் காட்டி,
பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன் பட்டனிடம் கேட்டு நிற்க,
செண்டோடும், திகிரியொடும், செறி முழங்கு சங்கமொடும், செழுந் தேவி நால்வ ரோடும்,
சீராளும் விண்ணவனின் செளரியிலே வீழ்ந்தது எனச் செப்பியதை உண்மை யாக்கி,
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம் மாலையினை அழகு பார்த்த
வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய், வரி தவழச் செளரி காட்டும்,
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!

தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப்(ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு என இருந்த மாலையையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடுநாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையிலொன்றிரண்டு முடியிழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, “ஏதோ ஒன்று தவறாக நடந்துகொண்டு இருக்கிறது” என்று மற்றவர்கள் பதறி மன்னனிடம் சொல்ல, அவன் பட்டரிடம் வினவ,”பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்” என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் தான் செய்கிற புரிசையில் தவறாத பட்டர் “அந்த முடியிழை பெருமாளுடைய செளரியில் இருந்துதான் வந்தது” என்று அடித்துச் சொல்ல, பக்தன் சொல்லியதை மெய்ப்பிப்பதுபோல், செளரி கொண்டு பெருமாள் காட்சியளித்துக் காத்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டுவிடும் கரிய அழகு. எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீலமேகர். தாயார் பெயர் கண்ணபுர நாயகி. சீதேவி, பூதேவி போக, பத்மினி, ஆண்டாள் என்னும் அவர்களுடைய தோற்றரவுகள்(அவதாரங்கள்) ஆக தேவியர் நால்வர். ஊருலவரோடு(உற்சவருக்கு) நாலு நாச்சியார்களையும் அருகே வைத்துத் தான் திருமஞ்சனம் செய்வார்கள்.

————

தமிழ்நாட்டின் மாயவரம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர்  ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.  ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் திவ்ய தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார். அவர் கள்ளர் எனும் பிரிவில் பிறந்தவர். சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் எனும் ஊரில் பிறந்தவர்.

சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது மங்கை மடம் எனும் பகுதிக்கு குறுநில மன்னராக திருமங்கை மன்னன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் உண்மையில் யார்?

சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்குறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அந்த நகரை நிர்வாகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு பகவான் விஷ்ணுவின் அருளினால் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள்.

அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்து வளர்த்தாலும், படை வீரர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை என்பதினால் அதற்கு பல்வேறு சண்டைப் பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்தார்கள். ஆகவே சிறு வயது முதலே அது யுத்தக் கலையில் சிறந்து விளங்கியது. அதனால்  ஒரே நேரத்தில் யானை, குதிரை, காலாட்டுப் படை என அனைத்து படைகளையும் திறமையுடன் அவரால் கையாள முடிந்தது. அவருடைய திறமையைக் குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் அவரை அழைத்து வந்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். அவர் யுத்தங்களில் எதிரிகளை சுலபமாக வீழ்த்தி கொன்று வந்ததால் அவரை காலன் என அழைத்தார்கள். காலன் என்பது அனைவர் உயிரையும் பறிக்கும் எம தர்மராஜரைக் குறிக்கும் பெயர். அவர் திறமையினால் அவர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள்.

திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர். அவருக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் பூமியில் மனிதராகப் பிறந்து வைஷ்ணவத்தை பரப்ப வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் பூமியில் மனித உருவில் அவதரித்து இருந்த இன்னொரு தேவ கன்னிகையின் சாபத்தையும் விலக்க வேண்டும் எனவும் தெய்வ நியதி இருந்தது. அந்த தேவலோக மங்கையோ ஒருமுறை தேவலோகத்தில் கபில முனிவருடன் இருந்த அவலட்ஷணமான தோற்றத்தைக் கொண்ட இன்னொரு முனிவரை பரிகாசம் செய்ததினால் கோபமுற்ற கபில முனிவரின் சாபத்தைப் பெற வேண்டி இருந்தது. தான் செய்த தவறுக்கு அந்த தேவ கன்னிகை கபிலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதினால் அவர் தனது சாபத்தை மாற்றி அமைத்தார். அதன்படி அவள் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்து அங்கிருக்கும் வேறொரு பிரிவை சார்ந்த ஒரு படைத் தலைவரை மணந்து கொண்டு அவரை ஆன்மீக உலகுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் மூலம் வைஷ்ணவத்தைப் பரப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவளுக்கு கிடைத்த சாபம் விலகும் என்றார்.

அந்த தெய்வ நியதியின்படி அவர்கள் இருவரும் திருமங்கை மன்னன் மற்றும் குமுதவல்லியாக பூமியில் பிறந்தார்கள். பல நிகழ்ச்சிகள் நடந்தேற அதன் இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால்  தெய்வ நியதிப்படி அவருக்கு அவள் ஒரு நிபந்தனை போட வேண்டி இருந்தது. அது என்ன எனில் குமுதவல்லி திருமங்கை மன்னனை மணக்க வேண்டும் எனில் திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.அவர்கள் கால்களை அலம்பி விட்ட பின் அந்த நீரில் சிறிது எடுத்து வந்து அவள்  தலை மீது தெளிக்க வேண்டும்.  அப்படி தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே அவளை திருமங்கை மன்னனால் மணக்க முடியும். திருமங்கை மன்னனும் அவள் கூறிய நிபந்தனையை ஏற்று அதை செய்து வர இருவருக்கும் திருமணம் நடந்தது. இப்படியாக ஆன்மீக உலகில் திருமங்கை ஆழ்வாரை ஆன்மீகத்தில் நுழைந்து விட்டால் அவர் மூலம் வைஷ்ணவத்தை பரப்பி அந்த ஷேத்திரத்தில் ஐந்து நரசிம்ம அவதாரத்தில் தானும் காட்சி தரலாம் என விஷ்ணு பகவான் எண்ணினார்.

திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததினால் அவருடைய கஜானாவும் காலி ஆயிற்று. சோழ மன்னனும் திருமங்கை மன்னன் தனக்குத்  தர வேண்டிய கப்பத் தொகையை தராமல் இருந்ததினால் மிச்சம் மீதி இருந்த அவருடைய செல்வத்தை அவர் நாட்டில் இருந்து  எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஆகவே பணம் இல்லாத நிலையை நிவர்த்தி செய்து கொள்ள திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்கத் துவங்கினார்.

திருமங்கை மன்னனின் நன் நடத்தையைக் கண்ட லட்சுமி தேவி அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணி  பகவான் விஷ்ணுவிடம் கேட்டபோது அவர் அவளை சற்று நாட்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கூறினார். அதன் பின் ஒரு சிறிய நாடகம் நடைபெற்றது. ஒருநாள் திருமால் தனது மனைவியான லட்சுமி தேவியுடன் புதியதாக மணம் செய்து கொண்ட தம்பதி போல உரு எடுத்து உடம்பில் பல்வேறு நகைகளை அணிந்து கொண்டு திருமங்கை மன்னன் ஆண்டு கொண்டு இருந்த இடத்தின் காட்டு வழியே சென்றார். அவர்களைக் கண்ட திருமங்கை மன்னன் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கொள்ளை அடித்தார். ஆனால் அந்த நகைகளை அவரால் எடுத்துக் கொண்டு செல்ல முடியாமல் அவை கனத்தன . அதன் காரணம் அந்த நகைகள் அனைத்துமே சில மந்திரங்களினால் கட்டடப்பட்டு இருந்தது என்பதே. ஆகவே அந்த மந்திரத்தை கற்றுக் கொண்டு நகைகளை எளிதில் எடுத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்த திருமங்கை மன்னனுக்கு அந்த மந்திரத்தை போதிப்பதாக மாற்று உருவில் இருந்த திருமால் கூற அதை காது கொடுத்து கேட்க அவர் அருகில் சென்ற திருமங்கை மன்னன் காதில் மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார்.  அவர் பகவான் விஷ்ணு மீது பல தோத்திரங்களை பாடத் துவங்கினார். அதன் பின் சில காலத்திலேயே அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.

திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை இயற்றத் துவங்கினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற ஹிரண்யகசிபுவின் வதமும் நிகழ்ந்தது. அதைக் கண்ட திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி  அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள். அவை உள்ள இடங்கள்:

  • குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள்
  • மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்
  • திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்

(1) திருவாலியில் வில்வாரண்யம் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் லட்சுமி நரஸிம்ம தோற்றத்தில் காட்சி தரும் பெருமாளை திருவாலி நகரலன் அல்லது வரதராஜப் பெருமான் எனவும் அழைக்கின்றார்கள். அங்குள்ள தாயாரை அமிர்தவல்லித் தாயார் அல்லது அமிர்தகடவல்லித் தாயார் என அழைக்கின்றார்கள். ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின் நரசிம்மத் பெருமான் அடங்காத கோபத்துடன் இருந்தார். அவருடைய கோபத்தைக் தணிக்க உதவுமாறு தேவர்கள் அனைவரும் லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள லட்சுமி தேவியும் நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவின் வலது தொடையில் சென்று அமர, கோபம் தணிந்த நரசிம்மத் பெருமான் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருவாலி ஆகும். ஆகவே ஆலிங்கனம் எனப் பொருள்படும் விதத்தில் அமைந்த  திருவாலி என இந்த இடம் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில்தான் லட்சுமி தேவி தொடையில் அமர்ந்திருக்க விஷ்ணு பகவான் தனது மனைவியுடன் கூடிய  ரங்கநாத பெருமானாகவும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தந்தாராம்.

(2) அங்கிருந்து சற்றே தூரத்தில் உள்ள குறையலூரில் நரஸிம்ம பெருமாள் உக்கிர நரஸிம்மராக காட்சி தந்தாலும், அவர் முகத்தில் அதீத கோபக்களை காணப்படவில்லை.

(3) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மங்கை மடத்தில் பெருமாள் வீர நரஸிம்மராக காட்சி தருகின்றார்.

(4 & 5) திருநகரி எனும் இடத்தில் உள்ள  ஆலயத்தில் பெருமாள் இரண்டு நரஸிம்ம அவதார தோற்றத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்தில் அவர் யோக நரஸிம்மராகவும், ஹிரண்ய நரஸிம்மராகவும் காட்சி தருகின்றார். இந்த ஆலயம் த்ரேதா யுகத்தை சேர்ந்தது. ஒருமுறை பிரும்மாவின் ஒரு மகன் விஷ்ணு பகவானின் தரிசனம் கிடைக்க தவம் செய்தபோது அவர் காட்சி தரவில்லை. லட்சுமி தேவி வேண்டிக் கொண்டும் விஷ்ணு அவருக்கு காட்சி தரவில்லை. ஆகவே லட்சுமி தேவி தன் கணவரான விஷ்ணு பகவானின் மீது கோபம் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். அவளைத் தேடிக் கொண்டு திருநகரிக்கு வந்த விஷ்ணு தாமரை தடாகம் ஒன்றில் அவள் ஒளிந்து கொண்டு இருந்ததை அறிந்து கொண்டார். அந்த குளத்தில் ஐந்து தாமரை மலர்கள் இருந்தன. அங்கு சென்ற விஷ்ணு பகவான் தனது இடது கையை அவற்றை நோக்கிக் காட்டினார். அவர் இடது கையில் சந்திர பகவான் இருந்ததினால் நான்கு தாமரை மலர்கள் மலர்ந்தன. ஆனால் ஐந்தாவதில் லட்சுமி தேவி ஒளிந்து கொண்டு இருந்ததினால் அது திறக்கவில்லை என்பதினால் விஷ்ணு பகவானினால் லட்சுமி ஒளிந்து கொண்டு இருந்த மலரை எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது. அந்த தாமரை மலரை கையில் எடுத்து திறந்து அதில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதனால்தான் திருமால் மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்த அந்த இடம் அதே பொருளைத் தரும் திரு நகரம் அதாவது திருநகரி என ஆயிற்றாம். இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் ஒரே ஒரு கொடிமரத்தைக் கொண்ட மற்ற ஆலயங்களை போல இல்லாமல், இந்த ஆலயத்தில் இரண்டு கொடி  மரங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆலயத்துக்கும் இன்னொன்று திருமங்கை ஆழ்வாருக்கும் என்பதாக பண்டிதர் கூறினார்.

——————

திருக்குருகூர் பஞ்ச க்ஷேத்ரம் என்பர்

குருகு -பறவை சங்கு -சங்கன் வழி பட்ட துறை சங்கணித்துறை -தீர்த்த க்ஷேத்ரம்
குரு -க -அத்ர -மதர்சனம் -நான்முகன் வழி பட்ட -பிரளயம் பின்பு முதலில் தோன்றிய க்ஷேத்ரம் ஆதி க்ஷேத்ரம்
சாளக்ராமத்தில் மந்தன் என்ற அந்தணன் வேதம் பயிலாமல் வேதத்தை இகழ -ஆச்சார்யர் சாபத்தால்
தாந்தன் என்ற இழி பிறப்பில் புல் வெட்டி ஜீவனம் செய்பவனாக
முன் செய்த புண்ய பலத்தால் இங்கே பிறக்க வடகரையில் இருந்து ஆதிநாதரை வழி பட்டு வீடு பேறு பெற்றதால் தாந்த க்ஷேத்ரம்
அர்த்த மண்டபத்தில் முதல் படிக்கட்டில் தான்தான் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
அவன் புல் வெட்டி ஜீவனம் செய்த ஸ்தலம் அப்பன் கோயில் -ஆழ்வார் அவதாரம் -இதுவே செம் பொன் மாடத் திரு குருகூர் என்பர்
வராஹ மூர்த்தி முனிவர்களுக்கு தர்சனம் கொடுத்ததால் -இங்கு ஞானப்பிரான் சந்நிதி -வராஹ க்ஷேத்ரம்
திருப்புளி ஆழ்வார் -சேஷ க்ஷேத்ரம்

ஆக -தீர்த்த க்ஷேத்ரம்-ஆதி க்ஷேத்ரம்-தாந்த க்ஷேத்ரம்-வராஹ க்ஷேத்ரம்-சேஷ க்ஷேத்ரம்-பஞ்ச க்ஷேத்ரம் இது

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சோளிங்கர் திவ்ய தேசம் —ஒண்ணான ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் –

December 12, 2022

சுவாமி முதலியாண்டான் திருவம்சத்தில் கந்தாடைநாயனுக்கு 1.2.1543ல் ஸ்வாமி தொட்டையாச்சார்யார் – தேவராஜகுரு என்கிற தோழப்பரப்பை என திருவவதாரம் செய்தார்.

சில நூறாண்டுகள்  முன்பு நம்  ஸ்வாமி தொட்டாச்சார்யார்  அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோகநரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார்.

பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால்  பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை.

மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே  ‘ஸ்ரீ தேவராஜ  பஞ்சகம்’ எனும்  ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார்.

இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகனரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார்.

சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு  எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார்.

இன்றும் இது  **ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை** என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது.

சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.

சுவாமி வேதாந்தாச்சார் அருளிய சததூழனிக்கு சண்டமாருதம் என்ற வியாக்கியானம் அருளிச்செய்தார்.

‘சண்டமாருதம்’ என்றால் புயல் காற்றில் கூட அணையாத விளக்கு என்று பொருள்.

அப்பய்ய தீக்ஷிதர் என்ற சிவாத்வவைதியை  சோழசிம்மபுரம் திருதேரடி மண்டபத்தில் 7 நாட்கள் வாதப்போர் செய்து வென்றவர்.

நமது சம்பிரதாயத்தின் தூண் ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் சுவாமி என்கிற பெரிய ஸ்வாமி தொட்டையாச்சார்  (ஸ்ரீ மஹாசார்யர்) 1-2-1543ம் ஆண்டு அவதரித்தார்.

சோளஸிம்ஹபுரம் எனும் திருக்கடிகை; தில்லை திருச்சித்திரகூடம் போன்ற பல திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்து, நிர்மாண புணருத்தாரணங்கள் செய்வித்தார்.

நம் ஒண்ணான ஸ்வாமியின் தனியன் :

வாதூல ஸ்ரீனிவாஸார்ய தனயன் வினயாதிகம்

ப்ரஜ்ஞாநிதிம் ப்ரபத்யேஹம் ஸ்ரீனிவாச மஹாகுரும் !!

நம் ஸ்வாமி வயோதிகத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் கைங்கர்யங்கள் சிறப்பாக செய்து வந்த சமயம், பரமபத பிராப்தி வருவதை உணர்ந்து ஸ்ரீமுஷ்ணம் நித்ய புஷ்கரிணீ கரையில் தனது சிஷ்யர்களுடன் எழுந்தருளி, ஆபத்சந்நியாஸம் தாமாகவே ஏற்று 3.10.1607 எம்பெருமான் திருவடி நிலை அடைந்தார்.

திருமாளிகை சிஷ்யர்கள், அவரை அங்கேயே திருப்பள்ளிப்படுத்தி திருவரசு நிர்மாணித்தனர்.

கர வருஷம் திருமாசி உத்திராட நன்னாளில் (19.2.2012) நம் சுவாமி  ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை  சண்டமாருதம் வேதாந்தச்சார் சுவாமி இவ்விடத்தை புனருத்தாரணம் பண்ணி சிறக்க வைத்தார்.

ஸ்ரீமத்வாதூல குலவாரிதி பூர்ணசந்த்ரம்*  ஸ்ரீமந்மஹார்ய சரணாம்புஜ சஞ்சரீகம் |

ஸ்ரீசிங்கரார்ய கருணாப்த ஸமஸ்தபோதம்*  பக்த்யாச யோகந்ருஸிம்ஹ குரும்ச்ரயாமி||

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அம்ருத வல்லித் தாயார் ஸமேத பக்த வத்சலப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ திருக் கடிகை என்னும் ஸ்ரீ சோளசிம்மபுரம் —

November 28, 2022
மூலவர்– யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்–அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)

உற்சவர்–  பக்த வத்ஸல பெருமாள் (தக்கான்)-பக்தோசித பெருமாள்

தீர்த்தம்–   அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்

விமானம்–ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்)-ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்.

நாமாவளி – ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ

காட்சி கண்டவர்கள்–ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற  பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு
சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.

 ——————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை யிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. –பெரிய திருமொழி -8-9-4-

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ.–பெரிய திருமொழி -8-9-9-

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

————–

ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

——————————————————————

சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே – நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான்–108 திருப்பதி அந்தாதி-பிள்ளைப் பெருமாளையங்கார்.-

———
 
வழித்தடம்:–அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும் கடிகாசலம் எனவும் வழங்கப்பெறும்.
———
யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து பார்த்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதிகம் உள்ளது.
குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப்
பெருமாளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம்.
அவரது திருவடி, என்னிடம் தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம்.
திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம்.
இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம்,

என் கண்கள் கடாட்சம் புரிவதால் தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட உயர்ந்தது என்று.

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் என்று ஆண்டாள் பாடியபடி

நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை  நாமும் பெறுவோமாக.
————
 
முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
பாசுரம்:
 மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே – பெரிய திருமொழி (1731)
 
பாசுரம் பதவுரை:
 
மிக்கானை – சிறந்தவனும்
மறை ஆய் விரிந்த விளக்கை – வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும்
என்னுள் புக்கானை – என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்
புகழ் சேர் – கீர்த்தி வாய்ந்தவனும்
பொலிகின்ற பொன் மலையை – ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும்,
தக்கானை – தகவுடையவனும்
கடிகை தட குன்றின் மிசை இருந்த – கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற
அக்காரக் கனியை – அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை
 அடைந்து உய்ந்து போனேன்-.
 
மிக்கான் – மிகுந்தவன்; ஸர்வஸ்மாத்பரன் என்றபடி. 
“மறையாய் விரிந்த விளக்கை” என்பதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு;
“வேறொன்றால் காணவேண்டாதே தனக்குத்தானே ப்ரகாசமாயிருப்பது;
ப்ரமாணங்களாலே அறியப் பார்க்குமன்று அவற்றாலே ப்ரகாசிக்கிற மேன்மைக்கு எல்லையின்றிக்கே யிருப்பது.” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அருளிச்செயல். 
இதனால், எம்பெருமானே மறையாய் விரிந்தவன் என்றதாகிறது. 
ஆசார்யஹ்ருதயத்தின் முதல் சூர்ணிகையில் “மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்” என்றருளிச் செய்தபடியை நோக்குங்கால் மறையாய் விரிந்த விளக்கென்று அகாரத்தைச் சொல்லிற்றாக விளங்குகின்றது. 
அவ்விடத்து மணவாளமாமுனிகள் வியாக்கியானத்தில் அகாரபரமாகவே தெளிவாக வியாக்கியானம் செய்தருளப்பட்டிருக்கிறது. 
(எல்லா வாக்குக்களும் அகாரமே) என்கையாலே, அகாரந்தானே நான்மறைகளாகப் பரம்பிற்றென்ப. 
ஆக, ‘மறையாய் விரிந்த விளக்கு’ என்று அகாரத்தை சொல்லிற்றாகிலும் அகார வாச்யனான எம்பெருமானே இவ்விடத்திற்குப் பொருள்;
வாச்ய வாசக பாவஸம்பந்தத்தைப் பற்றினது ஸாமாநாதிகரண்யம். 
ஆக, இரண்டுவகையான நிர்வாஹங்களும் அறியத்தக்கன.
பொலிகின்ற பொன் மாலை = “கணபுரத்துப் பொன்மாலை போல் நின்றவன்” என்றார் பெரிய திருமடலிலும்.
தக்கான் = சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி யெம்பெருனுடைய திருநாமம்.  பரமதயாளு என்றபடி.
கடிகைத் தடக்குன்று = என்னும் வடசொல் கடிகை யெனத்திரிந்தது நாழிகை என்றபடி. 
ஒருவர் ஒரு நாழிகைப்பொழுது இத்தலத்திலுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்குமாதலால் இத்தலத்திற்குக் கடிகை யென்று திருநாமமென்பர். 
இது சோளதேசம் போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல் பற்றி சோளஸிம்ஹபுரமென்று வழங்கப்படும். 
சோளஸிம்ஹராஜனது புரமென்றும் பொருள் கூறுவர்.
————-
இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத் துணுக்குத் தகவல்கள் தருகின்றன.
சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக்
காண வேண்டுமென்ற ஆவலால் இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர்.
அவர்கள் ஏன் இம்மலையைத் தேர்ந்தெடுத்தனர் என்றால்
முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக்
குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம்.
எனவே கடிகை நேரத்தில் தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால்
இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர்.இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில்
கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து
வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து சேர்ந்தார்.காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க
அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க,
அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார்.இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக

மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம்.எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்.
1) சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை – நாழிகை அசலம் – மலை எனவே கடிகாசலமானது.
2) இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம்
கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி
கண்கொள்ளாக்காட்சியாகும்.3) தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை
இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து
காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி
தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர வாயிலில்
தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில்
தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.4) சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர்.5) சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே
குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது.

6) இராமானுஜர் தமது விசிஸ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று.
7) ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும்,
தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார்.
அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில்
ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய,
துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில்
பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து
தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணங்கூறும்.
8) ஸ்ரீ  தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள்  பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம்.
இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார்.
ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித் துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி தந்தார்.
இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும் போது
கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது.
இத்திருக்கடிகையில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
 
இவரைப் போன்று ஸ்ரீ  எறும்பியப்பா  ஸ்வாமிகள்  என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.

9) முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

10) ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், மணவாள மாமுனியும், இராமானுஜரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

11) கி.பி. 1781ல் ஆங்கிலேயருக்கும், ஹைதரலிக்கும் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப்போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்றபோதும்
அவர்களால் இக்கோவிலுக்கு ஊறு நிகழவில்லை.

12) அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை இங்கே
மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான் அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும்.

13) ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும் சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே கல்லில்
இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம்.

14) இதனைச் சோழசிங்கபுரம் என்று சைவர்கள் அழைப்பர். ஏனெனில்
முன்பு இத்தலத்தில் பெருமாளோடு சிவனும் சேர்ந்து கோயில் கொண்டிருந்தாராம்.

இப்போது சிவனுக்கு தனிக்கோவில் உள்ளது. தொட்டாச்சார்யார் தான் ஒரே

கோவிலில் இருந்த சிவனைப் பிரித்து தனிக்கோவில் அமைத்தவர் என்று கூறுவர்.

15. இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.- பெரிய மலையில் திருக்கோவில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 1305 படிகள் ஏறிச் சென்று தான், யோக நரசிம்மர் அருளைப் பெற முடியும். வடக்கு நோக்கி ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டு மிக அழகாக கோவில் அமைந்துள்ளது. –இவரைத் தரிசித்து விட்டுத் தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

16-யோக நரசிம்மரின் உற்சவரான அருள்மிகு பக்தோசித சுவாமி மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் இவருக்கே சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். 
17-சிறிய மலைக் கோவில்:- சிறிய மலையில் அஞ்சனையின் மைந்தனான அருள்மிகு ஆஞ்சநநர் சுவாமி திருக்கோவில் கொண்டுள்ளார்.
இம்மலை 350 அடி உயரமும், 406 படிகளைக் கொண்ட மலைக் கோவிலாகும்.
மலையின் மீது அரங்கநாதர், இராமர், சக்கரத்தாழ்வார்ஆகியோர் சன்னதிகளும், தக்கான் தீர்த்தக்குளமும் அமைந்துள்ளது.
இராம பக்தரான அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமாள் யோகாசனத்தில் யோக ஆஞ்சநேயராக நான்கு கரங்களில், சங்கு சக்கரங்களுடன் மேற்கு நோக்கி யோக நரசிம்ம சுவாமியை சேவித்தவாறு அருள்கின்ற காட்சியானது வேறு எங்குமே காண முடியாத தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
 
18-சிறிய மலை : பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது
எழில்மிகு யோக ஆஞ்சநேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு கைகள் உள்ளன.
ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இருகைகளில் ஜபமாலை உள்ளது.
சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.
பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனை(குளம்) நீரில் விதிப்படி மூழ்கிப் படிகளில் படுத்தக் கிடந்து வாயு குமாரனை நினைத்து எண்ணிய வரம் பெறலாம்.

19. பெருமாளுக்கு ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு நியமம் உள்ளது. சில தலங்களில் உண்டியல் போடுவது. சில
தலங்களில் மொட்டை. ஆனால் இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட
முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது)

20. மலை மேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள்.
அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர்.
தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர். திருமங்கையாழ்வார் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

21- அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல்
சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)

22) ‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம்

23) கடிகாசலம் என்னும் இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக் கனியான எம்பெருமானை சேவித்தாலே மோட்சம் சித்திக்கும் என
நூல்கள் மொழிகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து
நரசிம்மரைச் சிந்தித்தாலே போதுமென்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் – இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.
 
———-

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ வரதேஸிக பௌத்ர ரத்னம் *

ஸ்ரீனிவாஸ ஸூரி பதபங்கஜ  ராஜஹம்ஸம் *

ஸ்ரீமத் வாதூலகுலவாரிதி பூர்ண சந்த்ரம் *

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ  குருவர்யம் அஹம் ப்ரபத்யே **

பக்தர்களுக்கு அருள் பாலிப்பதன் மூலம் பல வித விந்தைகளைச் செய்வது பெருமாளின் திருக்குணம். ஸ்ரீநரசிம்ம அவதாரத்தினை நிகழ்த்தி பக்தனுக்கு அருளியவர். இந்தக் கலியுகத்திலும் பக்தனுக்குக் காட்சி அளிப்பதில் பெருமாள் சளைத்தவரல்லர் என்பதற்கு வைணவ குரு, ஆசார்யன் ஸ்வாமி தொட்டாச்சாரியாருக்கு சோளிங்கரில் அளித்த காட்சியே சாட்சி. தொட்டாச்சார்யார் வம்சாவளியில் 23ஆவது பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ கே.கே.சி.பி. ஸ்வாமி சிங்கராச்சார், வழிவழியாக வழங்கிவரும் அந்த நம்பிக்கையைச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்.

ஸ்வாமி தொட்டாச்சார்யார் என்பவர் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோக நரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகன ரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் வரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். கருடனோ இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதைத் தன் கையில் உள்ள ஞான முத்திரையால் அறிவிக்கிறார்.

மூலவராகவும், உற்சவராகவும் இருக்கின்ற கருடன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம், காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில் ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச் சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. சோளிங்கரில் இந்தப் பெருமாளை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண பாக்கியம், சர்ப்ப தோஷ நிவர்த்தி ஆகிய நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் திருப்பணியை ஸ்வாமி தொட்டாச்சார்யார் வம்சத்தினர் தொடர்ந்து ஐந்து நூற்றாண்டுகளாகச் சிறப்புறச் செய்துவந்ததாகத் தெரிவித்த இப்பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமி, செண்டை மேளம் முழங்க பெருமாள் திருமாசி உத்ராட உற்சவத்தைத் தற்போது இளைஞர்கள் பங்கு கொண்டு செவ்வனே நிகழ்த்துகிறார்கள்” என்றார்.

இதில் நிறைவு நாளான அன்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீஸ்வாமி தொட்டாச்சாரியார் திருக்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடு கண்டருளி திருமலைக்கு (பெரியமலை) எழுந்தருளித் தாயார், பெருமாள் சந்நிதிகளில் மங்களாசாசனம் செய்தருளி- பெருமாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றன.

பின்னர் பெருமாளுடன் அலங்காரத் திருமஞ்சனம், திருமொழிச்சாற்று, தீர்த்த விநியோகம் ஆகியவை நடைபெற்றன.

மாலை 5 மணிக்கு ஸ்ரீதக்கானுடன் நான்கு வீதிப் புறப்பாடும், இரவு ஆஸ்தான மண்டபத்தில் திருவாய்மொழிச் சேவை, சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றன.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் நகருக்கு அடை மொழிகள் –தென் -நன் -அவ் -புகும் -மா -நீள் –ஆய்ச் சேரியிலே–தாயப் பதியிலே–வளம் புகழும் –தான -செழு -கடி -தொன் -பெரு -விண் -மண் -பொன்

October 4, 2022

தென் னகரிலே–திரு வல்ல வாழிலே

நன் னகரிலே–திரு விண்ணகரத்திலே

அவ் வூரிலே–தொலை வில்லி மங்கலத்திலே -இரட்டைத் திருப்பதியிலே

புகு மூரிலே –திருக் கோளூரிலே

மா நகரிலே –தென் திரு பேரெயிலிலே

நீள் நகரிலே –திரு வாறன் விளையிலே

ஆய்ச் சேரியிலே -திரு வண் பரிசாரத்திலே

தாயப் பதியிலே –திருக் கடித் தானத்திலே

வளம் புகழு மூரிலே –குட்ட நாட்டுத் திருப் புலியூரிலே

—————

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம் -சூரணை -168-

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-

ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

—————–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம் -சூரணை -168-

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-

ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

———–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-

கீழ் சொன்ன -5-8-நிரதிசய போக்யமான விஷயத்தை ( ஆராவமுதமான ) சீக்கிரமாக கிட்டு அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகலும் வினையேன் மெலிய -திருவாய்-5-9-1–என்று
நாள் தோறும் மெலியும் அளவிலும் –(மெலிந்த பொழுதும் விஸ்வாசம் குலையாத ஆழ்வார் )
நாமங்களுடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன்-திருவாய்-5-9-11 -என்று
அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி பண்ணும்- ( சேமம் -காவல் )

சுழலில் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே திருவாய்-5-9-9–என்கிற கிருபை
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-
தொல் -தொன்மை- பழைமை ஆகையாலே -நித்தியமாய் இருக்கும் என்கை —
( திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -பழமையே தொன்மை -சேஷத்வமும் கிருபையும் தொன்மை யாகவே உண்டே )

———-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-

க்ரம பிராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கு ஈடாகக் கடுக வந்து முகம் காட்டாமையால்- விளம்பித்து வருகையாலே –
போகு நம்பீ -திருவாய்-6-2-1-என்றும் –
கழகம் ஏறேல் நம்பீ –திருவாய்-6-2-6–என்றும் –
பிரணய ரோஷத்தால் வந்த விரோதத்தை
அழித்தாய் வுன் திரு அடியால் -திருவாய்-6-2-9–என்று
அழித்துப் பொகட்ட விருத்தங்களை கடிப்பிக்க வல்ல சாமர்த்தியம் –

நல்குரவும் செல்வமும்-திருவாய்-6-3-1- -என்று தொடங்கி –
தன்னில் சேராதவற்றைச் சேர்த்துக் கொண்டு நிற்கிற விருத்தி விபூதி யோகத்தை பிரகாசிப்பித்த –
திரு விண்ணகர் நன்னகரே-திருவாய்-6-3-2- -என்று
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1- -என்கிறபடி
பரந்து இருக்கும் என்கை –( விஸ்தீர்ணம்-பல்வகையும் பரந்த )

—————

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-

(கடிதர் -சேர்க்கப்படுபவர் /-கடகர்-சேர்ப்பவர் / விகடநா பாந்தவம் -பொருந்தாமையைச் செய்யும் உறவு முறை
பெருமாள் உடன் சேர்ந்தவரான ஆழ்வார் சேர்த்து வைத்த தாயாராதிகள் -இருவரையும் பிரிக்கும் உறவு முறை இரட்டைத் திருப்பதியில் )

அதாவது
பிரான் இருந்தமை காட்டினீர்–திருவாய்-6-5-5 -என்கிற
கடகராலே தன் பக்கல் கடிதர் ஆனார்க்கும் கடகர் ஆனார்க்கும் ,
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ-திருவாய்-6-5-1-என்னும்படி
விகடநையை பண்ணுவதான –

தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –திருவாய் -6-5-11-என்கிற அவனுடைய பாந்தவம் –
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னால் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

——————–

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

கை முதல் இழந்தார்
அதாவது
ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று
பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே –
பிராப்ய பிராபக ஆபாசங்கள் எல்லாம் தன்னடையே விட்டுக் கழிகையாலே -கைமுதல் அற்றவர்கள் –

உண்ணும்
அதாவது
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-திருவாய்-6-7-1- -என்று
தாரக போஷக போக்யங்கள் எல்லாம் தானேயாக புஜிக்கும்-
(வாஸூ தேவ சர்வம் கண்ணன்-எல்லாம் கண்ணன் – -இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவார் –
தர்சனம் பேத ஏவச–ஆறு வார்த்தைகளில் ஒன்றும் உண்டே )

நிதியின் ஆபத் சகத்வம்-
அதாவது
வைத்த மா நிதியாம் மது ஸூதனை –திருவாய்-6-7-11 -என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த மகா நிதி போல் இருக்கிறவனுடைய ஆபத் சஹத்வம் –

புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை ..(சம்ருத்தம் -நிறைவு)(புகுமூர் போகுமூர் ஆனதோ –பெண் பிள்ளை வார்த்தை —
நானே ரக்ஷித்துக் கொள்வான் அவனுடைய ஊணைப் பறிப்பானே )

——————

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-

( வேத ஒலி -விழா ஒலி= பிள்ளைகள் விளையாட்டு ஒலி மூன்றும் கோஷிக்குமே இங்கு )

சென்று சேர்வார்க்கு
அதாவது
தென் திரு பேரையில் சேர்வன் சென்றே- திருவாய்-7-3-8–என்று
க்ரம பிராப்தி பற்றாத பிரேம அதிசயத்தாலே ஹித பரர் வார்த்தை கேளாதே சென்று
பிரவேசிப்பது என்னும் படியானவர்களுக்கு –

உசாத் துணை அறுக்கும்
அதாவது
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகவோ-திருவாய்-7-3-4- -என்னும் படி
உசாத் துணையான நெஞ்சை அபஹரிக்கும் –

சௌந்தர்யம்
அதாவது
செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு
அற்றுத் தீர்ந்தும் -திருவாய்-7-3-3-என்று சொன்னவனுடைய சௌந்தர்யம் –
( ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி கடல் கொண்ட வஸ்து திரும்பாதே தசரதன் புலம்பல்
கனி வாயிலும் -முடியிலும் -திவ்ய ஆயுதங்களிலும் திருக் கண்களின் அழகிலும் -இத்யாதி —
ஆழ்வாருடைய திரு உள்ளம் தசாவதாரம் எடுத்து இவற்றை ஒவ் ஒன்றிலும் ஈடுபட -அனுபவித்ததாம்-
சர்வ வியாபகம் கொடுத்த சாம்யாபத்தி –முடியிலும் இருந்து திருவடி வரை வியாபித்து நெஞ்சு அனுபவிக்க –
நெஞ்சினார் -உயர்வு தோன்ற –
திருக்குறுங்குடி லாவண்யம் -இங்கு ஸுவ்ந்தர்யம்-நிகரில் முகில் வண்ணன் உத்சவர் திரு நாமம் இது –
மகர நெடும் குழைக் காதர்-மூலவர் இவன் அன்றோ
முக்தன் -இமான் லோகான் காமான் சஞ்சரம் -ஆழ்வார் திரு உள்ளத்துக்கு இங்கேயே அது வாய்த்ததே
அம்ருத மதனத்துக்கு அவன் பல வடிவம் கொண்டது போலே ஆழ்வார் திரு உள்ளம் இங்கு -)

மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..
( திரு உள்ளத்தில் கருட உத்சவம் இவருக்கு இங்கு கருடன் குழம்பு ஓசை இங்கு
பெரியாழ்வாரும் சமுத்திர அலை ஓசை –
இன்றும் சாம கோஷம் அங்குள்ளார் கோஷித்த பின்பே ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்து அருளுகிறார் -)

———–

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-

(இன்பம் பயக்க -என்பதால் ஆனந்த வ்ருத்தி -துணைக் கேள்வியாக இங்கே தானே –
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் ஸ்ரீ சஹஸ்ர நாமமும் – இரண்டும் தனிக் கேள்வி தானே –
பாடியவர் வால்மீகி கேட்பித்தவர் லவகுசர் -இங்கே பாடினவரே கேட்பீக்க்கவும் –
பாட்டுக்கு தலைவி சீதா பிராட்டி கேட்க்காமல்-ருக்மிணி தேவியும் கேட்க வில்லையே அங்கு –
பாசுரத்தில் சிந்தனை என்பதையே இங்கு சித்தம் -)

ப்ரவண சித்தம்
அதாவது
தீ வினை உள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்
என்னும் என் சிந்தனை–திருவாய்-7-10-9–என்று –
அவித்யாதிகள் பிரத்யக் வஸ்துவான ஆத்மாவில் பற்றற போய் -தெளிவை விளைப்பதான
பரம பதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும் என் நெஞ்சானது -திரு வாறன் விளை யாகிற இத் தேசத்தைக் கிட்டி –
அனுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக் கூடுமோ என்னா நிற்கும் என்று தன் பக்கல்
பிரவணரானவர்கள் சித்தத்தை –

பரத்வ விமுகமாக்கும்
அதாவது
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்-7-10-10- -என்று
பரம பதத்தின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாம் படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் –

ஆநந்த வ்ருத்தி-
அதாவது-
இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் எழ உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து –திருவாய்-7-10-1-
என்கிற ஆநந்த வ்ருத்தி –

நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

—————-

ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-

ஸ்ரம மனம் சூழும்
அதாவது
பணியா அமரர் பணிவும் பண்பும்–திருவாய்-8-3-6–இத்யாதி படி –
பரம பிரேம யுக்தரான நித்ய சூரிகள் பரிசர்யை பண்ண பரம பதத்தில் இருக்கும் அவன் –
நிரதிசய சௌகுமாரமான திரு மேனியோடே சம்சாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காக –
தன் வாசி அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து –
அடியார் அல்லல் தவிர்ப்பது –திருவாய்-8-3-7-
படி தான் நீண்டு தாவுவது –திருவாய்-8-3-7-
ஆகையால் வந்த ஸ்ரமத்தை அனுசந்தித்த மனசானது -வ்யாகுலிதமாய்-பிரமிக்கும்படியான –

சௌகுமார்ய பிரகாசம்
அதாவது
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்—திருவாய்-8-3-3-என்று
பூ யேந்தினாப் போலே இருக்கும் திரு ஆழி திரு சங்கை ஏந்துவதும் மலை சுமந்தார் போல்
வன் பாரமாக தோற்றும் படி இருக்கிறவன் சௌகுமார்ய பிரகாசம் –

ஆய்ச் சேரியிலே-
அதாவது
உடைய நங்கையார் பிறந்தகம் ஆகையாலே -ஆழ்வாருக்கு ஆய்ச் சேரியாய் இருப்பதாய் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் -—திருவாய்-8-3-7–என்ற
திருப் பரிசாரத்தில் காணப் படும் என்கை —

(என் திரு வாழ் மார்பன் –என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவி போலவே இங்கும் –
அமர்ந்த திருக் கோலம் இங்கு மட்டுமே மலையாள திவ்ய தேசம் –
அகஸ்தியர் ஸ்ரீ ராமாயணம் சொல்ல திருவடி கேட்ட திவ்ய தேசம்-இருவரும் சேவை சாதிக்கிறார்கள் இங்கு –
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ -சிரமம் -நினைத்த ஆழ்வார் மனம் சூழ வந்தானே
ஆழியும் சங்கும் சுமப்பார்-அவன் அபிப்பிராயம் ஏந்து-ஆழ்வார் அபிப்ராயம்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -இது அவன் அபிப்ராயம் -அங்கு –
குலசேகராழ்வார் குதிரை பரி சஞ்சரித்த இடம் திருப்பரிசாரம் -திரு வண் பரிசாரம் இது )

——————-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-

(கடி -பரிமளம் -தானம் -ஸ்தானம் -வாசனை மிக்க ஸ்தானம் -எனவே கந்தம்-
கடி -கத்தி -ஸ்தானம் -ஹனுமான் கடி போலே -என்றுமாம் –
கிஞ்சித் உபகாரம் மறக்க மாட்டான் -சஹஸ்ர அபசாரங்களையும் மறப்பான் அன்றோ –
தாயப்பத்தி -பித்ரு ஆர்ஜிதம் -ஹஸ்தி மே ஹஸ்தி சைலம் –பிதா மகன் சொத்து
ஒருக்கடுத்தல் -ஒருங்க அடுத்தல் -ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாஸம் போலவே
திவ்ய தேசத்திலும் ஆசை கொண்டு நித்ய வாஸம் என்றவாறு-
திருமாலிருஞ்சோலை மலையே என்கிறபடியே உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம்-
கல்லும் கனைகடலும் என்கிறபடி இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் –
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம்
கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் 8-6-5–)

அதாவது
சாத்யம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இன்றிக்கே இருக்க –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான்-திருவாய்-8-6-2- -என்று
சாத்தியமான ஆழ்வார் திரு உள்ளத்திலே வாஸம் லபித்தது இருக்கச் செய்தேயும் ,
இத்தைப் பெற்றது அத் தேசத்தில் நிலையாலே அன்றோ என்று
சாதனமான திருக் கடித் தானத்தையும் அடுத்து பிடித்து வர்த்திக்கும் படியான க்ருதஜ்ஞாத பரிமளம் —
திருக் கடித்தான நகரும் தான தாயப் பதி—திருவாய்-8-6-8-என்று
தனக்கு தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடிதானத்தில் என்கை ..
க்ருதஜ்ஞதா கந்தம் -என்றது-கடித்தானம்-என்று மணத்தை உடைத்தான ஸ்தானம் என்கையாலே ..

————–

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

அவகாஹித்தாரை
அதாவது
அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-என்று
தன் பிரசாதத்தாலே மருனனைய அவகாஹித்தாரை –

அனந்யார்ஹமாக்கும்-
அதாவது-
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள்–திருவாய்-8-9-1–என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று –பரவாள் இவள் நின்று இராப் பகல் -திருவாய்-8-9-9-–என்றும் –
திரு புலியூர் நின்ற மாயப் பிரான் திரு அருளாம் இவள் நேர் பட்டது -திருவாய்-8-9-10–என்னும் படி
அனந்யார்ஹம் ஆக்குமதாய் –

நாயக லஷணம்-
அதாவது-
கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்-8-9-1–என்றும் –
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்-திருவாய்-8-9-2- -இத்யாதிகளால் சொன்ன
அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணம் ..

வளம் புகழு மூரிலே குட்டமிடும்-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை ..
குட்டமிடும் -என்றது -குட்ட நாடு -என்னும் அத்தை நினைத்து ..

அருள் மூழ்கினாரை – என்னாதே -அவகாஹித்தாரை -என்றது கலந்தவர்களை-
அனந்யார்ஹர் ஆக்கும் படி இருக்க வேணும் நாயக லஷணம் என்று –
உத்தம நாயக லஷணத்தை சாமான்யேன தர்சிப்பித்து –
அந்த லஷணம் ஈஸ்வரனுக்கு திருப் புலியூரிலே பூரணமாக பிரகாசிக்கும் என்று அருளிச் செய்தவர் ஆகையாலே .

————-

நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் - நாலாயி:2569/2
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் - நாலாயி:3199/1

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல் நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று கிடந்தானை-மூன்றாம் திருவந்தாதி -34
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் - நாலாயி:3733/1
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் - நாலாயி:3850/2
கடி நகர வாசல் கதவு - நாலாயி:2269/4
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3666/1 
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே - நாலாயி:3665/4
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் - நாலாயி:730/1
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை

கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் - நாலாயி:2332/3

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த - நாலாயி:2343/2
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் - நாலாயி:2721/3
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு - நாலாயி:2739/2
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் - நாலாயி:2746/2
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் - நாலாயி:2747/1
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் - நாலாயி:2158/2
தான நகரும் தன தாய பதியே - நாலாயி:3733/4
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே - நாலாயி:3474/4
நண்ணு திருக் கடித்தான நகரே - நாலாயி:3732/4
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் - நாலாயி:739/3

-----------

நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் - நாலாயி:2569/2 

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –

முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –
அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –
கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-

கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –
நீள் நகர் –
தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –

(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் )

நீள் எரி வைத்து அருளாய் –
தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான
சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே

இலங்கை  நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –

ஒரூரைச்  சுட்டுத் தர வேணும் என்பர்கள் –

————–

நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் - நாலாயி:3199/1
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –
‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னா நின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது. ‘மற்றை இந்திரியங்கள், பரம பதம், பாற்கடல் தொடக்கமான இடங்கள் என் படுகின்றனவோ!
என்னே பாவம்!’ என்பார், ‘நெஞ்சமே இருந்த’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
‘கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென்று ஒழிந்தனகொல்? ஏ பாவம்!’ – பெரிய திருவந். 68.-என்னுமாறு போன்று
‘பரமபதமும் அவ்விருப்பும் என்படுகின்றதோ?’ என்றபடி.
‘கலங்காப் பெருநகரத்திற் பண்ணும் ஆதரத்தை என் நெஞ்சிலே பண்ணா நின்றான்,’ என்பார், ‘நகராக’ என்கிறார்.
பரம பதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.- வைகுந்தம் நகர் நெஞ்சு நீள் நகர்
மனத்தினை இட்டளம் இல்லாத நரகமாகக் கொண்டிருந்தான் –நீள் நகராகக் கொண்டிருந்தமை-என்றபடி.
‘மனத்தினை நீள் நகராகக் கொண்டிருந்தமையை அறிந்தபடி எங்ஙனே?’ என்ன,‘இல்லையாகில், மறந்து கூப்பீடு மாறும் அன்றோ?
இப்படிக் கூப்பிடப் பண்ணின உபகாரத்தின் தன்மையை நினைத்து ‘என் தஞ்சனே!’ என்கிறார்.
சமுசாரிகளில் இப்படிக் கூப்பிடுகின்றவர் இலர் அன்றே? இவர் நெஞ்சிலே இருக்கை அன்றோ இவ்விஷயத்திற் கூப்பிடுகிறது?
—————–
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் – நாலாயி:3733/1
தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-
நகரங்கள் பலவும் உண்டாய் இருக்கச் செய்தேயும்–என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும்
தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி-இருக்கிறான் -என்கிறார் –
ரதிங்கத -ஆசைப்பட்டு வந்ததால் ஸ்ரீ ரெங்கம் இதி –

என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும்
தனக்கு தாய பாகமாகக் கிடைத்த இடமாக
விரும்பி இரா நின்றான்

தாயப்பதி பரம்பரை சொத்து-இயற்கையாக-தாயாதி தாயத்தை ஆளுகிறவர்கள்-தானே வரும் –
ஹச்திசைலே–பித்ருரார்ஜிதம் -கிஞ்சித் வைராக்ய பஞ்சகம்
மலை மேல் தாய பிராப்தம் பிதாமகர் சம்பாதித்த தனம்-நான் சம்பாதிக்க வில்லை -அனுபவம் அவகாசம் இருக்காதே
ந பித்ரார்ஜிதம் -தகப்பனார் இஷ்டம் வேண்டுமே அனுபவிக்க-பைதாமகம் -தகப்பனாரும் கேட்க முடியாதே
birth right உண்டே –தாயப்பிராப்தம் இது தான்

—————

திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் - நாலாயி:3850/2

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

திரு மூழிக் களம் என்னும் –
துயர் உற்றவர்களை பாது காப்பதற்காக-வந்து நிற்கிற இடம் என்ற-பிரசித்தமான தேசம் –

செழு நகர் –
பரம பதத்தைக் காட்டிலும் உண்டான ஏற்றம் –

வாய் அணி முகில்காள்-
வளப்பம் பொருந்திய நகரத்திலே செல்லுகிற-அழகிய முகில்காள்
அன்றிக்கே
செழு நகரிலே எழுந்து அருளி இருக்கின்ற அடிகள் -என்று-
செழுநகர் வாய் -என்பதனை-அடிகளுக்கு அடை மொழி ஆக்கலுமாம்-

————–

கடி நகர வாசல் கதவு - நாலாயி:2269/4

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–இரண்டாம் திருவந்தாதி -88-

அரண் -என்று காவலாய் –
அத்தால்
ஸ்வ யத்ன சாத்தியம் அல்லாத வான் -என்றபடி
நயாமி பரமாம் கதிம் —
அநே நைவ வஹி –
அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –

கடி நகரம் –
கடி என்று பரிமளமாய்-போக்யதை யாகவு மாம் –
ஒளியை யுடைத்தான நகரம் என்றுமாம் –

——————

நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது –
பிரகாசியா நிற்கச் செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே,
‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந்தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிற
அழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை.

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

நீள் நகரம் அதுவே –
கலங்காப் பெருநகரமாய், புக்கார்க்கு ‘மீண்டு வருதல் இல்லை’ என்கிறபடியே
ஒரு நாளும் மீட்சி இல்லாதபடி எப்பொழுதும் அனுபவம் பண்ணும் பிராப்பிய தேசம் அதுவே.

மலர்ச் சோலைகள் சூழ் திருவாறன்விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் –
‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ வைகுந்த நாதன் இத்தை பிராப்யம் என்று அன்றோ உகந்து நித்ய வாசம் செய்கிறான் –
நித்திய வசந்தமான பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையாகிற மஹா நகரத்திலே வந்து வசிக்கின்ற உபகாரன்

————-

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–மூன்றாம் திருவந்தாதி -34–

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி

(நீள் நகர் என்றதே திரு வெக்கா என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளம்)

திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

————–

வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
குல க்ரமா கதமதாய் வருகிற படை வீட்டை சந்யசித்து -இவள் சொன்னாள் என்று போகைக்கு
பிராப்தி இல்லாமையைக் காட்டுகிறது

—————–

கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் – நாலாயி:2332/3

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து —மூன்றாம் திருவந்தாதி–—51-

அவனே-கலங்கா  பெரு நகரம் காட்டுவான் –
பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –

————

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த – நாலாயி:2343/2

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை -மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு –62-

‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா
திருமலை, ஆளழகிய சிங்கர் ஸந்நிதி‘ என்கிற கச்சித் திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில்,
திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று
சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று.

ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து –
மஹாபலி பக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ
அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம்.

தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.

——————

பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் – நாலாயி:2721/3

பொன்னகரம் புக்கு –
அதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி
இருக்கிற விடத்தே போய்ப் புக்கு –

அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்
அர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து
இக்காம புருஷார்த்தத்தை ஆதரித்து
அதுக்கீடாக தன்னை ஒருத்து
சாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –

பொங்கொளி சேர்-
காலம் செல்லச் செல்ல ஒளி மழுங்குகை  அன்றிக்கே
புண்ய  பலம் ஆகையாலே
மிக்கு வாரா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருப்பதாய் –

————

பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு – நாலாயி:2739/2

பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட    ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –

பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-

பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட    ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –

பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-

————–

நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் – நாலாயி:2746/2

நன்னகரம் புக்கு-
உங்களைப் போல் அன்றியே மடல் எடுப்பாரைக் கொண்டாடும் ஊர் –

நயந்து இனிது வாழ்ந்ததுவும் –
கொண்டாடி-நித்ய சம்ச்லேஷம் பண்ணி-

தனது நன்னகரம் -புக்கு-
தன்னுடைய நல்ல நகரம்-இவ் ஊருக்கு ப்ரத்யா சத்தியை யுடைய ஊர் அது –
மடல் எடுப்பாரை விலக்குவாரும் இன்றிக்கே-மடல் எடுத்து தொடர்ந்து வருவார் திரள் கண்டு உகக்கும் ஊர் –

————–

பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் – நாலாயி:2747/1

————-

பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் – நாலாயி:2158/2

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ——முதல் திருவந்தாதி —77-

இவர்களுக்கு உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி (இங்குள்ள இருந்த திவ்ய தேசமாகச் சொல்லாமல் -ஸ்ரீ வைகுண்டமும் இவையும் ஒரே போகி )
பொன்னகர் –தானே வந்து நோக்கின இடம் –

(என்றால் கெடும் -இந்த திவ்ய தேச வாசம் கூட வேண்டா -அவன் நம்மை அடையவே இங்கு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கோர மா தவம் செய்கிறான்
என்று அனுசந்தித்தாலே போதும்
இடர் என்பது எல்லாமே கெடும் என்கிறார்
நாமே சூழ்த்துக் கொண்ட ஸம்ஸாரிக துக்கங்கள் போன வழி தெரியாதபடி தாமே விட்டு ஓடிப் போகும் என்கிறார் -)

———————

தான நகரும் தன தாய பதியே – நாலாயி:3733/4

————

தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே – நாலாயி:3474/4

——-

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் – நாலாயி:739/3

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை

———–

நண்ணு திருக் கடித்தான நகரே – நாலாயி:3732/4

----------
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:391/4
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:392/4
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:393/4
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:394/4
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:395/4
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:396/4
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:397/4
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:398/4
கடலினை கலங்க கடுத்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:399/4
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:400/4

கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,கண்டம் என்னும் கடி நகரே
கண்டம் என்னும் கடிநகர்-வாசகத்தாலே-கடு வினை களைந்திட கிற்கும்-என்று அந்வயம் –
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே
கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே இருந்த கணக்காமே

1-தேசாந்தர
2-த்வீபாந்தரங்களிலே இருந்ததார்க்கும்
3-உபரிதன பாதாள லோகங்களில் இருந்ததார்க்கும்
4-நித்ய விபூதியில் இருந்து தங்கிய நா யுடையார்க்கும்
5-சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற இவர் தம்மைப் போலே -இவர் அபிமானத்திலே ஒதுங்க வல்லாருக்கும்
அவன் திருவடிகளின் கீழே இருந்து மங்களா ஸாஸனம் பண்ணின இவர் நேர் ப்ரயோஜனத்தில் ஒக்கும் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அரையர் சேவை பற்றி ஸ்ரீ ரெங்கம் அரையர் ஸ்வாமிகள் –ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி” –முனைவர் ஸ்ரீராம்–அவர்கள் –

September 22, 2022

“நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் காலத்திலிருந்து எங்களின் அரையர் மரபு தொடங்குகிறது.
நாதமுனிகளின் தங்கை தன் இரு மகன்களைத் தான் திவ்யப் பிரபந்தங்களைப் பெருமாள் கோயில்களில் பாட அர்ப்பணிக்கிறார்.
அவர்கள் மேலகத்து ஆழ்வார், கீழகத்து ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வழிவந்த வாரிசுகள்தான் நாங்கள்.

பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாடும் அரையர்கள் குடும்பங்கள்
ஸ்ரீவில்லிப்புத்தூர், மேல்கோட்டை, திருநாராயணபுரம் (கர்நாடகா), ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம். இன்னொரு குடும்பம் ராமானுஜம் அரையருடையது.

என்னோட 11-வது வயதிலிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடி வருகிறேன்.
வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட கோயிலில் இருந்து வந்து அழைத்துச் செல்வார்கள் இதுதான் மரபு.
எங்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும் குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவோம்.
நாங்கள் பாடல்களை நேரடியாக பெருமாள் முன்பு நேரடியாகப் பாடுவதாக உணர்கிறோம்.

பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம்.
வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவோம்.
இயல், இசை, நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் நடத்துவோம்.
அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடித்துவிடுவோம்.
இதைத்தவிர அரங்கநாதர் உற்சவ காலங்களிலும் பாடுவோம்.

தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக எங்களிடம் மட்டுமே இருக்கிறது.
இதை எங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே சொல்லித் தருகிறோம். வேறு யாருக்கும் சொல்வதில்லை. அரங்கநாதர் கோயிலில் மட்டுமே நாங்கள் பாடுவோம்.

இயற்பா பாடுவதற்கு இருந்த அமுதானார் என்பவரின் குடும்பத்தில் வாரிசு இல்லாததால்
அவருக்குப் பின் இயற்பாவையும் 24 ஆண்டுகளாக நாங்கள்தான் பாடுகிறோம்” என்றார் சம்பத் அரையர்.
உங்கள் மகன்களும் பாடுவார்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக, எங்கள் குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறோம்.
என் மகன் பரத்வாஜ் விமான பைலட்டாக இருக்கிறார். ஆனாலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் அவர் பாடுவார்.
இளைய மகன் இன்ஜினியர், அவரும் பாடுவார். எங்களுக்கு அரசு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அதை மறுத்துவிட்டோம். இதை பெருமாளுக்கு செய்யும் சேவையாக மட்டுமே நினைக்கிறோம்” என்றார்.
அருகிலிருந்த பரத்வாஜும் நிச்சயமாக இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று உறுதியாகச் சொன்னார்.

ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமியையும், கோயிலையும்
மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது.
கோயிலில் இருந்து புறப்பட்ட போது அரையர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்குப் ‘பாட்டுக்கு அரசன்’ என்று பெருமை பொங்கச் சொன்னார் பரத்வாஜ்.

அரங்கனுக்கு நடக்கும்அனைத்து விழாக்களும் பொதுவாக 10 நாட்களே நடக்கும். மார்கழிவைகுண்ட ஏகாதசி விழா மட்டும் 22 நாட்கள் நடக்கும். இதனாலேயே இது பெரிய திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்கழி உற்சவத்தின் முதல் பத்து நாட்கள் திருமொழித் திருநாள் எனவும் பின்னால் வரும் 10 நாட்கள் திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் பத்து நாட்கள் பகல் நேரத்தில் அரையர் சேவை நடைபெறும். திருவாய்மொழித் திருநாளின் போது அரையர் சேவை இரவு நேரத்தில் நடைபெறும். இந்த அரையர் சேவை நடைபெறும் காலத்தை வைத்து இதை பகல்பத்து இராப்பத்து என்றும் அழைக்கின்றனர்.

  • திருமங்கையாழ்வார் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பத்துநாள் திருவாய்மொழி திருநாளாக ஆரம்பிக்கப்பட்டது
  • நாதமுனிகள் காலத்தில் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்கள் சேர்க்கப்பட்டு 21 நாள் திருநாளாக அரையர் சேவையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
  • ஜகதசாரியன் சுவாமி ராமானுஜர் நம்மாழ்வார் தொடக்கமாக அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து விழாவிற்கு மேலும் பொலிவு ஊட்டினார்.
  • பராசரபட்டர் காலத்தில் மார்கழி பெரிய திருநாள் தொடக்க விழாவாக திருநெடுந்தாண்டகம் சேர்க்கப்பட்டு இன்றுவரை 22 நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மணவாள மாமுனிகள் காலத்தில் தம்பிரான் படி வியாக்கியானம் அரையர் சேவையில் சேர்க்கப்பட்டது.
  • நம்பெருமாள் வீணை வாசிப்பு கைங்கரியம்
    முத்தமிழ் விழாவில் தமிழ்வேதமான, திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை அரையர்கள் தாளம் இசைத்துப் பாடுவார்கள்.
    வீணை இசைக் கலைஞர்கள்,
    சில பிரபந்தப் பாசுரங்களை பலவகை அமிர்தமான ராகங்களில்,யாழ்(வீணை) இசைத்தும், வாய்ப்பாட்டாகவும் பாடுவார்கள்.

    இராப்பத்து நாட்களில் நம்பெருமாளின் இரவுப் புறப்பாட்டில், நாழிகேட்டான் வாசலிலிருந்து, மேலப்படி ஏறும்வரை,
    நம்பெருமாள் சுமார்1.30 மணி நேரம் இந்த அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டு வருவார்.

    சாந்தோக்ய உபநிஷத்தின்படி, வீணையில் இசைக்கப்படும் இசை எல்லாம் சேர்ந்து பரப்ரம்மமான ஸ்ரீமந்நாராயணனை போற்றுமாம்.

    மேலும் வீணை இசையே மஹாலக்ஷ்மித் தாயாரின் ஒரு வடிவம் என்கிறது உபநிஷத்.

    உடையவர் நியமித்து அருளிய வீணாகானச் சேவை:
    திவ்யப் பிரபந்தங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்த உடையவர்,
    பல பாசுரங்களிலும் ஆழ்வார்கள் யாழிசையை பாடியுள்ளார்கள்.
    எனவே, ஸ்வாமி இராமானுஜரும் பெரியபெருமாள் கேட்டு உகக்க வேண்டும் என்று கருதி, வீணை இசைக்கும் கைங்கரியத்தை ஏற்பாடு செய்தார்.

    பெருமாள் வீணை கானம் கேட்டருளும் சமயங்கள்:

    திருப்பள்ளி எழுச்சியின் போது – ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்’ எனும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம்.
    இரவில் திருக்காப்பு சேர்க்கும் போது – ‘மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்னும் பெருமாள் திருமொழி பாசுரம்.
    வைகுண்ட ஏகாதசி இராப்பத்தில்
    மற்ற சில உற்சவங்களில் பெருமாள் புறப்பாட்டின் போது வீணை கானம் சேவிக்கப்படும்.

    —————————–

ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி”

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் உற்சவங்களில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு முத்து குறி.
ஆண்டாள் எம்பெருமானையே எப்பொழுதும் நினைப்பவள்.
கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே- – என்பது ஆண்டாளின் நிலை.
“தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும், அவனுடன் கூடிமகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன்.’’
“புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல், அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்தப் பெருமான்
தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?’’ என்பது இந்தப் பாசுரத்தின் பொருள்.

ஆண்டாள் எம்பெருமானை அடைவதற்கு வழி இருக்கிறதா என்று துடிக்கிறாள். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வீதி வழியே குறி சொல்லும் ஒரு குறத்தி போகிறாள்.
அவளை அழைத்து தோழிகள் சூழ்ந்திருக்க தன் கவலைக்கான காரணத்தையும், அது தீர்வதற்கான
வழியையும் கேட்பது போல அமைந்த நிகழ்ச்சிதான் முத்துகுறி கேட்கும் நிகழ்ச்சி.
ஆண்டாள் கவலையோடு கேள்வி கேட்பதும், அவள் நோய்க்கு கட்டுவிச்சி நீண்ட பதில் சொல்வதும், சுவாரசியமாக இருக்கும்.

அதற்காகவே வடிவமைக்கப்பட்ட உரையாடலை அபிநயத்தோடு அரையர்கள் பேசுவார்கள்.
நெல்லை மாவட்ட இலக்கியங்களில், குறிகேட்கும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய வரும். `
`குற்றாலக் குறவஞ்சி’’ என்ற சிற்றிலக்கியமே, இந்த உரையாடலில் அடிப்படையில் அமைந்ததுதான்.
இந்த நிகழ்ச்சி ஆடிப்பூர உற்சவத்தில் நடைபெறும். பத்தாம் நாள் உற்சவத்தில், சப்தாவரணம் நடக்கும்.
அன்று ஆண்டாள் முத்துகுறி கேட்கும் வைபவம் நடைபெறும்.
கட்டுவிச்சி பாவனையில் அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமி வாயால் ஆண்டாள் இதைக் கேட்டு மகிழ்வாள்.

அரையர் சுவாமி ஒரு கருப்பு பட்டுத்துணியில் சோழிகளை போட்டு குறி சொல்வதுபோல் அபிநயம் செய்வார்.
ஆடித் திருநாளிலும், பங்குனித் திருநாள் ஒன்பதாம் நாள் விழாவுக்கு பிறகு, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்கிற பாசுரத்தில்
“பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்’’ என்று தொடங்கும் பாடலுக்கு அபிநயம் பிடிப்பர்.
மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோயில் பிராகாரத்தில் ஆண்டாள் மட்டும் தனியாக எழுந்தருளி இருக்க,
தலையில் பட்டு குல்லாய் அணிந்து அரையர் அபிநயம் செய்து முத்து குறி செய்வார்.
இதில், இரண்டு பேர் கிடையாது. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்ல வேண்டும். ஓரங்க நாடகம் போலிருக்கும்.

“சூழ நீர் பாயும் தென்னங்குறுங்குடி, திருமாலிருஞ்சோலை, சுக்கு குத்தி
கழத்தட்டி, வஞ்சி நகரம் என்னும் இஞ்சி நறுக்கி,
ஞானசாரம் பிரமேய சாரம் என்கின்ற சாற்றை எடுத்து,
ஸ்ரீசைலேச தயாபாத்திரத்தில் சேர்த்து
அச்சுதன் என்னும் அடுப்பை வைத்து,
உத்தமன் என்னும் உமியைத் தூவி,
வேங்கடம் என்னும் விறகை முறித்திட்டு,
நீர்மலை என்னும் நெருப்பை மூட்டி,
மணி மந்திரம் என்னும் துடிப்பினாலே,
வானமாமலை என்னும் வட்டிலில் சேர்த்து,
திருமணி கூடத்திலே இறக்கி,
உபதேசரத்தினமாலை என்னும் உரை கலத்தில் இட்டு,
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் மாத்திரை தேய்த்து,
விண்ணகரம் என்னும் மேல்பொடி போட்டு,
கண்ணபுரம் என்னும் கரண்டியால் கலக்கி,
திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து,
திருப்பள்ளி எழுச்சி என்று திகழக் கலக்கித்
திருக்குடந்தை என்று எடுத்து புசி. உன் நோய் தீரும்.”

இதை நீட்டி முழக்கி சொல்லி முடித்ததும், இப்பொழுது கோதையின் தோழிகள் கேட்கிறார்கள்.
“என்ன மருந்து சாப்பிட்டாய்?’’

கோதை பதில்,“எங்கும் இல்லாத மருந்து. விலையில்லா மருந்து.
வடக்கே சென்று வாயு புத்திரன் கொணர்ந்த மருந்து.
தெற்கே சென்று தேவர்கள் கொணர்ந்த மருந்து.
அனுமன் அங்கதன் கொணர்ந்த மருந்து. ஆழ்வார்கள் ஆசாரியர்கள் அனுசந்தித்த மருந்து.
“ஸ்ரீமன் நாராயணா…” என்று தொடங்கும் திவ்யமந்திர மருந்து’’ என்கிறாள்.

இப்படிப் போகும் அரையர் நிகழ்ச்சி. அரையர் சேவை உள்ள ஒரு சில தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரும் உண்டு.
நாதமுனிகள், ஆழ்வார்களின் அருளிச் செயலை, இயல், இசை, நாடகமாகத் தொகுத்தார்.
பொதுவாக தனித்தனியாக இருக்கும்.
இம்மூன்றும், ஒன்றாக கலந்து இருக்கும் நிகழ்ச்சிதான் அரையர் சேவை.
அவர்கள் பாடல் பாடுவார்கள். அதற்கான உரையையும் சொல்லுவார்கள். அபிநயம் பிடிப்பார்கள். வெறும் கைத்தாளம் கொண்டு மட்டும்தான் பாடுவார்கள்.
பக்கவாத்தியம் எதுவும் இருக்காது. இவர்கள் பாடலுக்கு உரை சொல்லும் பொழுது தனி உரையை பயன் படுத்துவார்கள்.
தம்பிரான்படி வியாக்கியானம் என்று பெயர்.

————-

“கோயிலுடைய பெருமாளரையர்” என்றோ,
“வரந்தரும் பெருமாளரையர்” என்றோ,
“மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்” என்றோ.
“நாத விநோத அரையர்” என்றோ அரங்கனின் கைங்கர்யபரர்களால் ,அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதிக்கப்படும்.

(பகல்பத்து ,இராப்பத்து விழாக்காலங்களில்,அரையர் ஸ்வாமிகளுக்கான அருளப்பாடு,மேற்சொன்னவாறே சாதிக்கப்படும்)

அரையர்களுக்கு ஸ்தாநீகர் ,தீர்த்தம், சந்தனம், தொங்குபரியட்டம்,மாலை ஆகியவற்றை சாதிப்பார்…

பிறகு அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் கர்ப க்ருஹத்தின் (மூலஸ்தானத்தின்) மேற்கு பகுதியில்,அரையர் ஸ்வாமிகள் இருந்துகொண்டு,

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”–என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி,
திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்பதை பலதடவை இசைப்பர்.

பிறகு,அரையர்கள் சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளி, திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்”
என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.

பிறகு முதல் பாட்டிற்கு ,”ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த,வ்யாக்யான(விரிவுரை) அவதாரிகைகளும்,
இரண்டாம் பாட்டிலிருந்து,11 பாட்டான,”பட்டுடுக்கும்”என்னும் பாசுரம் வரை,”தம்பிரான்படி” வியாக்யானமும் சேவிக்கப்டும்.

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு, நாதமுனிகள் தொடங்கி, அவரின் வம்சத்தில் உதித்த, அரையர் ஸ்வாமிகள்
(இன்றைய அரையர் ஸ்வாமிகளின் முன்னோர்கள்) எழுதி வைத்த, வ்யாக்கியானங்களுக்கு (விரிவுரை) “தம்பிரான் படி வியாக்யானம்” என்று பெயர்.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் ஓலைச் சுவடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் அச்சு வடிவில் இல்லை.
தற்பொழுது அரையர் கைங்கர்யம் செய்யும், அரையர் ஸ்வாமிகளிடம் உள்ள ஓலை ச்சுவடிகளில் இருந்து இந்த தம்பிரான்படி வியாக்கியானம் சேவிக்கப்படும்.

இந்த தம்பிரான் படி விரிவுரை, சொல்லழகும், பொருளழகும் கொண்ட, கருத்தாழமிக்க, சொற்றொடர்களாகும்.
இவற்றை கேட்கக் கேட்க, பக்தர்களின் உள்ளத்திலே பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கும்.

திவ்யப் பிரபந்தச் சொற்கள் பின்னிப் பிணைக்கப் பட்டு, சந்தத்தோடு அவைகள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும் போது,
அதைக் கேட்போரின் உள்ளத்தில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்…..

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆழ்வார்களின் ஆராவமுது -/ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகளின் ஸ்ரீ பத்ரி-ஸ்ரீ சாளக்ராமம் – திவ்ய யாத்திரை குறிப்புக்கள்

September 21, 2022

12 ஸ்ரீ ஆழ்வார்கள் ……………..அம்சங்கள்

1. ஸ்ரீ பொய்கையாழ்வார்…………ஸ்ரீ பாஞ்சஜன்யம் (சங்கு)
2. ஸ்ரீ பூதத்தாழ்வார்…………….ஸ்ரீ கௌமோதகி (கதை)
3. ஸ்ரீ பேயாழ்வார்………………ஸ்ரீ நந்தகம் (வாள் )
4. ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்……….ஸ்ரீ சுதர்சனம் (சக்கரம்)
ஒண் சங்கதை வாள் தண்டு –ஸ்ரீ ஆழ்வார் வரிசைப்படுத்தி அருளிச் செய்கிறார்
5. ஸ்ரீ நம்மாழ்வார் ……………..ஸ்ரீ விஷ்வக்சேனர் (சேனை முதலியார் )
6. ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ………..ஸ்ரீ நித்ய ஸூரி குமுதர்
7. ஸ்ரீ பெரியாழ்வார் ……………ஸ்ரீ பெரிய திருவடி (வாஹனம்)
8. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்………ஸ்ரீ .பூமா தேவி
9. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்………..ஸ்ரீ கௌஸ்துபமணி
10. ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார்- ஸ்ரீ வைஜயந்தி (வனமாலை)
11. ஸ்ரீ திருப்பாணாழ்வார் ………..ஸ்ரீவத்சம்
12. ஸ்ரீ திருமங்கையாழ்வார் ………ஸ்ரீ சார்ங்கம் (வில்)
இதனாலேயே தனது ஆறு பிரபந்தங்களிலும் ஸ்ரீ சார்ங்க பாணி ஒருவரையே மங்களா சாசனம்

——————

பூதம் -ஆழ்வாரை நினைத்தே -அவயவி
ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தானே -உண்டோ சடகோபருக்கு ஒப்பு
32-திரு நாமங்கள் உண்டே
சடகோபர்-சடாரி -சடஜித்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபிரான்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி நம்பி
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
நா வலம் பெருமான்
குமரித் துறைவன்
ஞான தேசிகன்
ஞானப் பிரான்
தொண்டர் பிரான்
உதய பாஸ்கரர்
ஞானத் தமிழ் அரசு
ஞானத் தமிழ்க் கடல்
மெய் ஞானக் கவி
பாவலர் தம்பிரான்
திரு நா வீறு உடைய பிரான்
குழந்தை முனி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஸ்ரீ வைஷ்ணவ கூடஸ் பதி
தெய்வ ஞான செம்மல்-பவ ரோக பண்டிதன் -போன்ற பல

உயர்வற உயர் நலம் உடையவன் -உயர்ந்து கொண்டே இருக்கும் நலம்

ஞானத்தால் ஆன ஆத்மாவுக்கு ஞாத்ருத்வமும் உண்டே -உணர்ந்து உணர்ந்து -தங்க சிலைக்கு தங்க ஆபரணம் போல் –

எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில-

உயிர் மிசை உடல் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –

தண்ணீர் கேட்க சொம்பு கொண்டு வர -container -வஸ்து போல் நீயே -யானும் நீயே என்னுடைமையும் நீயே
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
ப்ரத்யக் -பராக்குக்கு எதிர்மறை -இரண்டிலும் உள்ளான்
அந்தரங்க அடையாளம் அடியேன் உள்ளான் உடல் உள்ளான்

அர்த்த பஞ்சக ஞான பரமாயே தானே அருளிச் செயல்கள் உண்டு

————————-

தேனாய்க் கன்னலாய் அமுதாய் தித்திக்கும் ஆழ்வார்கள் அருளிச் செயல்களை
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
ஞானப் பூம் கொடி -பெரியாழ்வார் வளர்த்த பெண் கொடி -மால் தேடி ஓடும் மனம் கொண்டவளாய் கோல் தேடி ஓடும் கொழுந்தாகவே வளர்ந்தாள்
பெரியாழ்வார் திருத்தேவிமார் விரஜை எனப்படுபவள்

எம்பெருமானுக்கு சூடிக்கொடுத்து என்னை ஆண்டாளே இவள் –

நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
பிள்ளைகள் எல்லாரும் பாவிக்கலாம் புக்கார்
எம் பாவாய்
பாவை நோன்பு -மார்கழி நோன்பு –
பதுமை போன்று பாரதந்தர்யம் மிக்க பாவைகள் பாவையைக் கொண்டு செய்யும் நோன்பு

காட்டில் வேங்கடம் -தண்டகாரண்ய வனத்தில் ருஷிகளுடன் கூடி இருந்து வனவாஸ ரஸம் அனுபவித்தபடிக்கு ஒப்பாகும் திருமலை வாஸம்
கண்ணபுர நகர் -வனவாசம் முடித்து திரு அயோத்யையில் அனைவருடன் கூடி இருந்து நகர வாஸத்துக்கு ஒப்பு திருக்கண்ண புர வாஸம்
வ்ருத்தாவனத்துக்கும் திரு ஆய்ப்பாடிக்கும் இவ்விரண்டும் ஒப்பாகவுமாம்
வாமனன் -தன் உடைமையைப் பெற தானே இரப்பாளனாக -சேதன லாபம் ஈஸ்வரனுக்கு புருஷார்த்தம்
வாமனன் ஓட்டரா வந்து -ஓரடி மண்ணுக்குப் பதறுமவன் இவர்களை படரும் போதைக்கு ஆறி இரான் இறே
காற்றில் முன்னம் கடுக ஓடி வரக் கடவன் இறே
கூடிடு கூடலே -நீ கூடி என்னையும் கூட்டு -அவன் எழுந்து அருளி என்னைக் கூட்டிக்கொள்ளும்படியாக நீ அனுகூலிக்க வேணும்

பவள வாயான் வரக்கூவாய்
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி விளை நீர் அடைத்துப்
போன போதைச் செவ்வியோடும் ஆதாரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும்படி யாகக் கூவப்பாராய் –

என் ஆகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாடொறும் பொன்னாகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே
சொற் கேளாத பிரஜைகளைப் போல் யாயத்து முலைகளின் படி –

தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே
அவன் தரிலும் தருகிறான் தவிரிலும் தவிர்க்கின்றான் நீங்கள் அறிவித்துப் போங்கோள்-

உலங்குண்ட விளம் கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே
ஆவி தங்கும் -ஒரு நாள் அணைவது போகத்துக்குப் போதாது -அது உயிர் தரிப்பதற்கே சாலும்
குண ஞானத்தால் தரிப்பாள் என்று இருக்க ஒண்ணாது
அணையுமானால் தரிக்கலாம்

பா வரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –வில்லிபுத்தூராரின் திருக்குமாரர் வரம் தருவார்

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தி நடை விளங்க
வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே –தேசிகன்
மாடு -செல்வமாகிய ஆன்மா

தீங்கரும்பு கண் வளரும் –2-10-4-திருமங்கை

மூவரும் இராமர் பரதன் லஷ்மணன் போல் அடுத்த அடுத்த நாள் திரு அவதாரம்

ஆடவர்கள் எங்கன் அகன்று ஒழிவார் வெக்காவும்
பாதகமும் ஊரகமும் பஞ்சரமா நீடிய மால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ
மன்றார் பொழில் கச்சி மாண்பு –கணி கண்ணன் பாடியது

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என் கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே சடங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்த வண்ணமே புறம்பு யோசித்து காட்டிடே

அன்பு ஆவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கு பின்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் –

கடல் கிழக்குத் தெற்குக் கரை பொரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் -வடதிசையில்
ஏணாட்டுப் பெண்ணை இருபத்து நாற் காதம்
சோணாட்டுக்கு எல்லை எனச் சொல்

வெள்ளாறாது வடக்கா மேற்குப் பெரு வழியாம்
தெள்ளார் புனல் கன்னி தெற்காகும் -உள்ளாரா
வாண்ட கடல் கிழக்காம் ஐம்பத்தாறு காதம்
பாண்டி நாட்டு எல்லைப் பதி

வடக்குத் திசை பழனி வான் கீழ் தென்காசி
குடக்குத் திசை கோழிக்கூடாம் -கடற்கரையின்
ஓரமோ தெற்காகும் உள் எண் பதின் காதம்
சேர நாட்டுக்கு எல்லை எனச் செப்பு

மேற்குப் பவள மலை வேங்கட நேர் வடக்காம்
ஆர்க்கும் உவரி அணி கிழக்குப் பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப நின் காதம்
நல் தொண்டை நாடு எனவே நாட்டு

———–

ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகளின் ஸ்ரீ பத்ரி திவ்ய யாத்திரை குறிப்புக்கள்

ஸ்ரீ பத்ரி இந்தியாவிற்குள் 10,000 அடிகளுக்கு மேல் இருக்கிறது.

ஸ்ரீ ஹரித்துவார்

டெல்லியில் இறங்கி பேருந்தில் கரடு முரடான சாலை, விவசாயப் பேரணி எல்லாம் கடந்து ஏழு மணி நேரப் பிரயாணம் செய்து மாலை ஐந்து மணிக்கு ஹரித்துவார் சென்றடைந்தோம். ஹிமாசலத்தின் அடிவாரத்தில் அமைந்த இந்த இடம், முக்தி தரும் ஷேத்திரங்களில் ஒன்று. இங்கேதான் கங்கை கடல் மட்டத்தில் ஓடுகிறது.

பத்ரிக்கு மேலே ‘சொர்கா ரோகிணி’ என்ற இடம் இருக்கிறது. அதன் வழியாகத்தான் பாண்டவர்கள் சொர்கத்தை அடைந்தார்கள். அதற்கு இது வாசலாகத் (துவாரமாக) இருப்பதால்தான் இதை ‘ஹரி’ துவாரம் என்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பத்ரி ஸ்ரீ நாராயணனான ‘ஹரி’யை அடையும் துவாரமாக இருக்கிறது.

ஸ்ரீ தேவப்பிரயாகை -என்னும் ஸ்ரீ கண்டம் என்னும் கடி நகர் 

ஹரித்துவாரத்திலிருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் இருக்கிறது இந்தத் திவ்ய தேசம். 2720 அடி உயரத்தில் பெரியாழ்வார் ‘கண்டம் என்னும் கடிநகர்’ என்று பாடியுள்ளார். கண்டம் – பாரத கண்டம், கடி என்றால் சிறப்பான என்று பொருள்.

பத்ரிக்குச் செல்லும்போது வரும் முதல் திவ்ய தேசம் இது. பிரயாகை என்றால் ஆங்கிலத்தில் confluence என்று கூறுவர். தமிழில் சங்கமம். பாகீரதியும், அலகநதா நதியும் சங்கமிக்கும் இடம் இது. சங்கமித்த பிறகு அதற்கு ‘கங்கை’ என்று பெயர்!

கங்கை நம் பாரத தேசத்துப் புண்ணிய நதிகளுக்குள் முதன்மையானவள். ஸ்ரீமந் நாராயணன் திருவிக்கிரமாவதாரத்தில் ‘ஓங்கி உலகளந்த’ போது அவரது இடது திருவடி பிரம்மாவின் சத்ய லோகத்தை அடைந்தது. நான்முகன் பக்தியுடன் புனித நீரால் கழுவ, அதுவே கீழே பரமசிவனின் திருமுடி வழியாகக் கங்கையாக நமக்கு மொத்தம் 2525 கிமீ ஓடுகிறாள். கங்கா என்றால் பூமியை நோக்கிக் கருணையோடு இறங்கி வந்தாள் என்று பொருள். கங்கோத்திரி என்ற மலையில் உள்ள பனிப் பாறையில் தொடங்கி, உத்ராஞ்சல், உத்திரப் பிரதேசம், பிஹார், வங்காளம் சென்று கடலில் கலக்கிறாள் கங்கை.

அதாவது பரமசிவனின் தலையிலிருந்த கொன்றை மலரும், பெருமாள் பாதத்திலிருந்த துளசியும் இங்கே இரண்டு நதிகளாக ஓடிவருகின்றன. நதியின் அழகை ரசிக்கும்போது, 2013ல் வெள்ளம் வரும்போது தண்ணீர் எதுவரை வந்தது என்ற இடத்தைக் காண்பித்தார்கள். பயமாகத்தான் இருந்தது. இங்கே ஸ்ரீராமானுஜர் வந்து தங்கியுள்ளார். அவருக்கு ஒரு கோவில் இங்கே உள்ளது. கோவிலில் சயன திருக்கோலத்தில் இருக்கும் ஷேசசாயி பெருமாளும் உற்சவர் ராமானுஜரும் 2013ல் வந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்கள். உற்சவர் ராமானுஜர் மட்டும் காப்பாற்றப்பட்டு பத்ரியில் இருக்கிறார். அதைப் பின்னர் பார்ப்போம்.

கண்டம் என்னும் கடிநகரில் இருக்கும் பெருமாள் நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன் என்று திருநாமம். ஸ்ரீராமராகச் சேவை சாதிக்கிறார். பெரியாழ்வாரும் இந்தப் பெருமாளை ஶ்ரீராமனாகவே பாடியுள்ளார். ஸ்ரீராமர் தவம் புரிந்தபோது அமர்ந்த மேடை ஒன்று இங்கே இருக்கிறது.

ஸ்ரீ திருப்பிரிதி (ஜோசிமட்) 

ஆழ்வார் பாடிய திருப்பிரிதி இமயத்துள் திபெத் நாட்டில் மானசரோவர் ஏரிப்பக்கம் பக்கம் இருந்திருக்க வேண்டும். இன்று நரசிம்மரையே திருப்பிரிதி பெருமாளாக எல்லோரும் தரிசித்து வருகிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றித் தரிசிக்கலாம்.

பெங்களூரிலிருந்து எங்களுடன் யாத்திரைக்கு வந்தவர் இந்தப் பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பித்தார். “ஏலக்காய் மாலை இந்தப் பெருமாளுக்கு விசேஷமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “திருமங்கை ஆழ்வார் இந்தப் பெருமாளைப் பற்றிப் பாடும் முதல் பாசுரத்தில் ‘அன்று, ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல் இமயத்துள்’ என்று பாடியிருக்கிறார். ஏலம் மணத்துடன் கூடிய நறுமணம் என்று ஆழ்வார் சொல்லியிருக்கிறார். அதனால் ஏலக்காய் மாலை சமர்ப்பித்தேன்” என்றார். ம‘ண’ம் இருந்தால் மார்க்கம் உண்டு!

பத்ரியில் வருடத்தில் ஆறு மாதங்கள் பனியால் மூடிவிடும். அப்போது அந்தப் பெருமாளை இங்கே கொண்டு வந்துவிடுவார்கள். அவருக்குப் பூஜை, ஆராதனம் எல்லாம் இங்கே தான் நடைபெறும். 25 கீமீ மேலே இருக்கும் பத்ரிக்குப் புறப்பட்டோம்.

ஸ்ரீ பதரிகாசிரமம்

பதரிகாசிரமம் தானே உருவான திவ்ய தேசம். இதை ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் என்பார்கள். எட்டு எழுத்து மந்திரம் (பிரணவத்துடன் கூடிய நமோ நாராயணா) அவதரித்த இடம். திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியின் தொடக்கத்தில் இந்த எட்டு எழுத்து மந்திரத்தின் பெருமைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு வரும்போது பெற்ற தாயைக் காட்டிலும் நமக்கு நன்மை செய்யும் என்கிறார்.

பிறகு இந்த மந்திரத்தால் சொல்லப்பட்ட பெருமாளை திருப்பிரிதியில் தரிசித்து பாசுரங்கள் பாடுகிறார். அதற்குப் பிறகு இந்த மந்திரத்தை உபதேசித்த நாராயணப் பெருமாளைப் பதரிகாசிரமத்தில் பாடுகிறார்.

பத்ரியில் நான்கு நாட்கள் தங்கினோம். தினமும் காலை கோயிலுக்குக் குளிக்கச் செல்லுவோம். குளிக்கவா? ஆச்சரியப்படாதீர்கள். கோயிலுக்கு வெளியில் ‘தப்த குண்டம்’ என்ற இடம் இருக்கிறது. இது ஒரு வெந்நீர் ஊற்றுக் குளம். இந்தக் குளிரில் வரும் பக்தர்கள் கஷ்டப்படக் கூடாது என்று பெருமாளே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த ஊற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஊற்று வரும் தொட்டி உள்ளே இறங்கினால் தப்த குண்டம் கொடுக்கும் கதகதப்பில் அது தவக் குண்டம் ஆகி, வெளியே ரம்பையும் ஊர்வசியும் வந்தால் கூட வெளியே வரமாட்டோம்.

திருமங்கை ஆழ்வார் சொன்ன இந்த முதுமையை என் கண்முன்னே நான் பார்த்தேன். அதைப் பற்றி விவரிக்கும் முன் பத்ரியின் முக்கிய மலைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். பத்ரிகாசரமம் நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது. ஒரு புறம் பனிபடர்ந்த நீலகண்டமலை. இன்னொரு புறம் ஊர்வசி பர்வதம். நாராயண பர்வதம் இன்னொன்று சிறிய நர பர்வதம்.

சுமார் 10,800 அடி உயரத்தில் இருக்கும் பத்ரி பெருமாள் கோயிலுக்குள் சென்றவுடன் கருடன் நம்மை வரவேற்கிறார். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நுழைந்தால் கர்பகிரஹம் தெரிகிறது. மூலவர் பதரிநாராயணப் பெருமாள். பத்ரிவிஷால் என்று பெயர். தாயார் அரவிந்தவல்லி தாயார்.

நடுவாகப் பதரிவிஷால் பெருமாள் இலந்தை மரத்துக்குக் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்த தியானத் திருக்கோலம். இவருடைய திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தங்கக் குடையின் கீழ், ரத்தின கிரீடம், வண்ண வண்ண கற்கள் பதிக்கப்பட்ட மாலைகள் அணிந்து கொண்டு சேவை சாதிக்கிறார். நான்கு திருக்கரங்கள். மேல் நோக்கி இருக்கும் கரங்களில் சங்கு சக்கரம், கீழ் நோக்கி இருக்கும் கரங்களைத் தன் மடியில் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

பெருமாளின் வலதுபக்கம் கருடன் அவர் அருகே குபேரன் இருக்கிறார். இடதுபக்கம் நாரதரும் அவருக்கு அருகே உத்தவரும். நர நாராயணர்கள் இருவர் என்று மொத்தம் ஏழு மூர்த்திகள் இருக்கிறார்கள்.

‘நர நாரணனாய், உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன்’ என்கிறார் ஆழ்வார். அதாவது பெருமாளே நாராயணன் என்ற ஆசாரியனாகவும், அவரே நரன் என்ற சிஷ்யராகவும், இரட்டை வேடத்தில், சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இங்கே இருக்கிறார்.

பத்ரி பெருமாளை மூன்று முறை தண்ணீருக்குள் இருந்து மகான்கள் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். முதலில் அலகநந்தா நதிக்குள். அடுத்து நாரத குண்டத்திற்குள். மூன்றாவது முறை தப்த குண்டத்திலிருந்து.

கண்டமென்னும் கடிநகர் என்ற இடத்தில் 2013ல் வந்த வெள்ளத்தில் பெருமாள் மற்றும் ராமானுஜர் விக்கிரகங்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள், உற்சவர் ராமானுஜர் மட்டும் காப்பாற்றப்பட்டார் என்று முன்பு சொல்லியிருந்தேன். அந்த உற்சவர் விக்கிரகத்தை பத்ரியில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கடைசி கிராமம் மாணா என்ற இடத்துக்கு ஒரு நாள் கிளம்பினோம். இயற்கைக் காட்சிகளை விவரிக்க முடியாது. மாணா கிரமத்துக்குச் செல்லும்போது அடிக்கடி ‘மூட் ஸ்விங்ஸ்’ வந்தது. எனக்கு இல்லை பத்ரிக்கு. அங்கே காலைப் பத்து மணிக்குச் சூரியன் பளிச் என்று அடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும். அதே சூரியன் மேகத்தில் மறைந்து கொஞ்சம் ‘மூடியாக’ இருந்தால் நமக்குக் குளிர் நடுங்கும்.

கிராமம் போகும் வழியில் ‘பீம் பூல்’ என்ற பீமன் திரௌபதிக்காக ஏற்படுத்திய பாலம், பேரிரைச்சலோடு சரஸ்வதி நதி பூமிக்குள் செல்லும் இடம் (அதற்குப் பிறகு சரஸ்வதி நதி அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கா, யமுனா, சரஸ்வதி கலக்கும் இடம்) கலக்கிறாள். பாண்டவர்கள் சொர்க்கத்தை நோக்கிச் சென்ற ‘சுவர்க்கா ரோகிணி’ வாசலுக்குச் சென்றபோது ‘இப்படியே நடந்து சென்றால் நான்கு நாட்களில் சொர்க்கம் வரும்’ என்றார்கள், திரும்பிவிட்டேன்.

வியாச குகைக்குள் சென்று வியாச பகவனைச் சேவித்துவிட்டு சற்று தூரம் நடந்தபோது இந்தியக் கொடி ஒன்று பறந்துகொண்டு இருக்க, அதற்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தபோது ‘இந்தியாவின் கடைசி டீக்கடை’ என்ற பலகையைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

———-

ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகளின் ஸ்ரீ சாளக்ராம பத்திவ்ய யாத்திரை குறிப்புக்கள்

ஸ்ரீ முக்திநாத் அகண்ட பாரத தேசத்தில் அவந்தி தேசத்தில் இருந்துள்ளது. இன்று அது நேபாள தேசத்தில் 12,500 அடி உயரத்தில் இருக்கிறது. (சென்னை 22 அடி; பெங்களூர் 3000 அடி உயரத்தில் இருக்கிறது.)

முதலில், பெரிய விமானத்தில் (180 இருக்கைகள்) நேபாளத் தலைநகரம் காத்மாண்டு சென்று, அங்கிருந்து ஒரு சிறிய விமானத்தில் (50 இருக்கைகள்) போக்ரா என்று ஊரை அடைய வேண்டும். பின்னர் போக்ராவிலிருந்து ஜோம்சம் என்ற இடத்தை, ஒரு மிகச் சிறிய விமானம் (18 இருக்கைகள்) மூலம் சென்றடைய வேண்டும். பிறகு அங்கிருந்து ஜீப் மூலம் (8 இருக்கைகள்) கோயிலுக்குமுன் அரை கிமீ வரை கொண்டு போய் விடுவார்கள். அங்கிருந்து கொஞ்சம் தூரம் குதிரையிலும், பின் கடைசியாக நடந்தும் செல்ல வேண்டும்.

காத்மாண்டுவிலிருந்து முக்திநாத் 128 கிமீ தூரத்தில் இருக்கிறது. ஆனால் நேராகச் செல்ல முடியாது. முதலில் போக்ரா, அங்கிருந்து ஜோம்சம், பிறகு முக்திநாத் செல்ல வேண்டும். விடியற்காலை ஐந்து மணியிலிருந்து மதியம் பன்னிரண்டு வரை மட்டுமே விமானங்கள் இயங்கும். இதற்கிடையில் மூடுபனி, காற்று என்று வானிலை மாறும்போது விமானங்கள் ரத்து செய்யப்படும்.

விமானம் அன்னபூரணா மலைத்தொடருக்கும் தவளகிரி என்ற மலைத்தொடருக்கும் நடுவில் சென்றது. இரண்டு பக்கமும் பனிபடர்ந்த மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டு செல்லுகையில் விமானம் காற்றில் இங்கும் அங்கும் அசைந்தது. முப்பது நிமிஷத்தில் ஜோம்சம் வந்து சேர்ந்தோம்.

சாள என்றால் ஸ்தோத்திரம் என்றும், கிராமம் என்றால் கூட்டம் என்றும் பொருள். கூட்டமாக நம் ஸ்தோத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமாள் சாளக்கிராமப் பெருமாள் என்றும் கூறலாம். இன்னொரு முனிவர் கதையையும் இருக்கிறது. ‘சாளங்காயனர்’ என்ற முனிவர் கண்டகி நதிக்கரையில் தவம் மேற்கொண்டார். பெருமாள் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க, முனிவர் ‘நான் விரும்பியபடி தோன்ற வேண்டும்’ என்று தன் ஒரு கண்ணால் ஒரு பெரிய சாள மரத்தையும் இன்னொரு கண்ணால் மலையையும் பார்த்தார். மலையும் மரமாகவும் இருக்க வேண்டும் என்றார்.

அடுத்து போக்ராவில் மிக அழகான இடம் பேவா ஏரி (Phewa lake). படகுப் பயணம் செய்து இயற்கையை ரசித்தோம். அங்கே மூங்கில் மீது பறவைகள் கூட்டமாக இருந்தன. ‘கூகிள் லென்ஸ்’ உதவியுடன் இவை ‘cattle egret’ வகை என்று தெரிந்துகொண்டேன்.

காளி கண்டகி பள்ளத்தாக்கு. உலகத்திலேயே ஆழமான பள்ளத்தாக்கு இதுதான். சுற்றி இருக்கும் மலைகள், காற்று, குளிர், பளிச் என்ற சூரிய ஒளி எல்லாவற்றையும் பார்க்கும்போது, நாம் இந்த உலகத்தில் எவ்வளவு சிறியவர்கள் என்று உணர்வு ஏற்படுகிறது.

திருமங்கை ஆழ்வார் சாளக்கிராம பாசுரம் ஒன்றில் ‘தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை’ என்கிறார். நீர்ப் பறவைகள் நிறைந்துள்ள வயல்களால் சூழப்பட்ட சாளக்கிராமம் என்று பாடுகிறார். ஆழ்வார் கண்ட காட்சியை இன்றும் நம்மால் காண முடிகிறது.

முக்திநாத் கோயிலுக்குள் சென்ற போது மனதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது. திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் இங்கே வந்து தரிசித்த அதே பெருமாளை நாமும் இப்போது சேவிக்கிறோம் என்ற சந்தோஷம் அதை விடப் பெரியது.

கோயிலுக்கு முன் இரண்டு சின்ன குளங்கள் இருக்கின்றன. ஒன்று பாவ குளம், இன்னொன்று புண்ணிய குளம். பெருமாளைச் சேவிக்கும் முன் இதில் நீராட வேண்டும். நீராட என்றால் உள்ளே இறங்கிக் கடக்க வேண்டும். இதைக் கேட்கும் போதே ஜன்னி வந்தது.

முதல் குளத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். இடுப்புக்குக் கீழே உடம்பு அப்படியே உறைந்து போனது. மேலே வந்த போது உடல் சிவந்து, நடுக்க ஆரம்பித்துவிட்டது. ‘சார் புண்ணியம் எல்லாம் போச்சு, இந்த குளத்தில் இறங்கி பாவத்தைத் தொலையுங்க’ என்றார்கள். மீண்டும் அதே போல இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எமனின் எண்ணெய்க் கொப்பறையில் விழுந்து எழுந்த உணர்வு கிடைத்தது.

இதற்குப் பிறகு கோயிலைச் சுற்றி 108 நீர்த் தாரைகளில் (108 திவ்ய தேசங்களைக் குறிக்கும்) நீர் வருகிறது. அரைவட்ட வடிவில் இருக்கும் இதில் ஒரே ஓட்டமாக ஓடினால் உங்கள் மீது அந்த நீர் படும்.

பெருமாள் பெயர் ஸ்ரீமூர்த்தி பெருமாள். நான்கு திருக்கரங்கள். சங்கு சக்கரம், பத்மம், கதை தாங்கி இருக்கிறார். இருபுறத்திலும் ஸ்ரீதேவியும், பூதேவியும் சாமரம் வீசும் கோலம். பக்கத்தில் கருடன் காட்சி தருகிறார்.

பெருமாளுக்குக் கீழே ராமானுஜர் அங்கே வீற்றிருக்கிறார். கையில் சில உலர்ந்த திராட்சை, சர்க்கரை இனிப்புகளைப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். மிக முக்கியமான விஷயம், வருபவர்களுக்குத் தலையில் ஸ்ரீசடகோபம் என்ற சடாரியைச் சாதிக்கிறார் உள்ளே இருக்கும் ஒரு பெண் புத்த பிட்சு!

————————

குன்றம் எனது குளிர் மழை காத்தவன்-பொருப்பு-வெற்பு-தெய்வ வடமலை -கல்லும் -கிரி -ஆழ்வாருக்கு பணி தொண்டு செய்யும் சொற்கள்
சடகோபன் மிடைந்த சொல் தொடை ஆயிரம் -1-7-11-சொற்கள் பணி செய்ய ஆழ்வாரை நெருக்குமாம்

பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறு அத்தனை போது ஆங்காந்தவன்–பெரிய திருமொழி –10-6-1-

சடகோபன் சொல் பணி செய் ஆயிரம் -1-10-11-

ஆழ்வார் கண்டு அருளிச் செய்கிறார் -புதிதாக இயற்ற வில்லை –

இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் -ஸ்தோத்ரம் பண்ணி அர்த்தம் மனசில் படுகிறது –

—————-

மாரி மாறாத தண் அம் வேங்கடத்து அண்ணலை –வாரி மாறாத -பைம் பூம் பொழில் குருகூர் நகர் –
அங்குள்ள மாரி -இங்கு தாமிரபரணி நீர் வற்றாமல் ஓடுமே –
திருவேங்கடமும் தாம்ரபரணியும் சேர்த்து -மொட்டைத் தலைக்கும் மூலம் காலுக்கும் சம்பந்தம்
ஸஹ்யம் மூலம் அனுக்ரஹம் –
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே

———-

விதி –கோட்ப்பாடு -முறை -பாபங்கள் -பாக்யம் -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -வைகுந்தத்து அமரரும் முனிவரும் விழியப்பார்
இறை அருள் -புண்யம் -கட்டளை -கைங்கர்யம் -திண்ணம் உறுதிப்பாடு -ஆக்குதல் -இப்படி பத்து அர்த்தங்கள் உண்டே
மீனாய் பிறக்கும் விதி யுடையேன் ஆவேனே -பாக்யம்

——————

பத்து வித கைங்கர்யங்கள் -ஊனேறு செல்வத்து பதிகம் படியே
மூன்று நாள்கள் உபவாசம் திருமலையில் -மல ஜலம் கழிக்கக் கூடாதே
1-கொக்கு போல் -ஓடு மீன் ஓட உரு மீன் வரும் அளவும் -சாரம் -இவனே நாராயணன் நிரூபித்து -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே
ருக் வேத மந்த்ரம் -ஆராதி-ஏழை காணே-ஞானக்கண் விகடே -திருப்பதி வந்தால் திருப்பம் வரும் கிரீம் கச்ச -ஸ்ரீ பீடம் -கோவிந்தா கோஷம் இட்டுக்கொண்டே போக சொல்லும்
2-மீன் போல் கைங்கர்யம் -அருளிச் செயல் தண்ணீரில் -திருப் பாவை நாச்சியார் திருமொழி சேவை ஏற்படுத்தி –
மலை அடிவாரத்தில் பராங்குச நித்ய ஸூரிகள் பிரதிஷடை செய்து அருளி -அப்பனை நினைத்தார்
3- வட்டில் பிடித்து தாஸ்யத்வம் -உப லக்ஷணம் -சேஷன் -பர கத அதிசய ஆதாய இச்சையா -சேஷனையே திருமேனியில் பிரதிஷ்டை செய்து அருளினார் –
இடது திருக்கரங்களில் நாகாபரணம்
வீர நரசிம்மன் அரசன் வலது திருக் கரத்தில் சேர்த்து அருளினாராம்
4-செண்பக மரம் -புஷ்ப கைங்கர்யம் -சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -அனந்தாண் பிள்ளை -ராமானுஜன் தோட்டம் -ராமானுஜன் புஷ் கரணி
5-தம்பாக்கம் முள் புதர் -சோழன் -கோவிந்த ராஜர் -உத்சவர் -சமர்ப்பிக்க -மூலவரையும் -யாதவ ராஜ அரசன் மூலம் -ப்ரதிஷ்டை
ஸ்ரீ ராமாயணம் கால ஷேபம் -கீழே ஒரு வருஷம் -புளிய மரத்தடியில் -ஆழ்வார் சம்பந்தம் என்பதால் புளியோதரை விசேஷம்
விபீஷண சரணாகதி கட்டம் -ஐந்து திரு மேனி ராமபிரான் லஷ்மணன் விபீஷணன் அங்கதன்  சுக்ரீவன் – குருவித் துறை விஸ்வம்பரர் முனிவர்
கண்டவன் பேச்சை கேளாமல் கண்ட என் பேச்சு விபீஷணஸ்து தர்மாத்மா
மித்ர பாவேந –ஸம் பிராப்தம் -நத்யஜேயம் கதஞ்சன-கனவில் இங்கே கொண்டு வந்து சேர்க்க அருளி
சீதாபிராட்டி உடன் சேர்த்தே -திருவின் மணாளன் -அர்ச்சையில் இருக்க வேண்டுமே
புனர்பூசம் புறப்பாடு உண்டு
திருக்கல்யாண உத்சவமும் உண்டு

6-கல் பாறையாக ஆக வேண்டுமே -ஸ்ரீ வாரி பாதம் –மாத்யாயனம் பண்ணும் காலம் உன்னை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிற்றே திருமலை நம்பி வருந்த
நான் உம்மிடம் இருக்கிறேன் -காட்டி அருளி
அனந்தாழ்வான் -குங்கும பரிமள -இதிஹாச மாலையில் காட்டி அருளுகிறார்
கர்ப்பக்ருஹ வாஸனை பரிமளித்ததே
கல்பாறையில் திருவடியில் பதித்து அருளி –
வயசானவர்கள் ஏறாமல் சேவிக்க -திருவடிகளை ப்ரதிஷ்டை செய்து அருளினார்
7-காட்டாறு -நதி ஓடிக்கொண்டே இருக்குமே
கைங்கர்யம் இடைவிடாமல் போக ஜீயர் மடம் நிர்வஹித்து அருளி– மா முனிகள் சின்ன ஜீயர் மடம்
8- வழி பாதை -நெறியாகவே -நான்கு மாடவீதிகளில் வாஹனம் போகாமல் -செருப்பு அணியாமல் போக ஏற்பாடு
நித்யமான கைங்கர்யம் செய்பவர் மட்டுமே அங்கே தங்கி
திருமலையில் மரணம் ஆனால் சம்ஸ்காரம் கீழே
9- படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனே
அவனைத் தவிர யாருமே மாலை அணிய மாட்டார்கள்
அங்கே கல்யாணம் பண்ண மாட்டார்கள்
அங்கு உள்ள பூ கனி காய் எல்லாமே அவனுக்காகவே
10 ஏதேனும் ஆவேனே -அவன் இட்ட வழக்காகவே
ஆச்சார்யனாக அவனே ஆக்கி அருள -தான் சிஷ்யனாகி-அவன் கொண்ட அனைத்தும் எம்பெருமானார் அருளாலேயே
நிணர்கிறான் இவன் அவன் அமர்ந்து வேதசாரம் உபன்யாசம் -வேதார்த்த ஸங்க்ரஹம்

நம்மாழ்வார் கோஷ்ட்டி ngo காலணி -மாறன் அடியாராகி உஜ்ஜீவிப்போம்

பெரிய திருமலை நம்பி 1049 திரு நக்ஷத்ரம் சமீபத்தில் கொண்டாடினார்கள்

——————–

தேசிகர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொள்ளவில்லை.
அது பெரியாழ்வார் திருமொழியுடன் சேர்ந்தது என்ற சம்பிரதாயத்தை அப்படியே கொண்டவர்.

ஏரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவு வாயே-என்று
திருப்பல்லாண்டு சேர்ந்த ஒரே தொகையாகக் கூறியிருப்பதனால் இதனை அறியலாம்.

அவர் தமது பிரபந்த சாரத்தில் மேற்கொண்டுள்ள முறையைக் கவனித்தால் இது தெளிவாகும்.
இந்த முறை பிரபந்தசாரத்தின் முதற்பாட்டில்,
வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின் வகையான தொகைஇலக்கம் மற்றும் எல்லாம் என்று பேசப்பெறுகின்றது.
இதில் ‘பாட்டின் வகையான தொகை’ என்பது ‘பாட்டின் வகுப்பின்படி எண்கள்’ என்பதையும்
‘இலக்கம்’ என்பது அவரவர் அருளிச் செய்த பாசுரத்தின் கூட்டிய எண் என்பதையும் குறிக்கின்றன என்பது தெளிவு-

பெரியாழ்வார் பற்றின பாடலில் வகை எதுவுமின்றித் தொகை மட்டிலும் நானூற்று எழுபத்து ஒன்று இரண்டு (470+1+2=473) என்று கூறியுள்ளதை நோக்கும்போது தேசிகரின் திருவுள்ளத்தில் திருப்பல்லாண்டு தனிப்பிரபந்தம் அன்று என்றிருந்தமை தெளிவாக அறியக்கிடக்கின்றது.

இவர் இராமாதுச நூற்றந்தாதியைச் சேர்த்துத் திவ்விய பிரபந்தம் இருபத்து நான்கு பிரபந்தங்களைக் கொண்டது என்ற கொள்கையினர்;

அப்பிள்ளை-தேசிகருக்குக் காலத்தால் சற்றுப் பிற்பட்டவரான இவர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொண்டவர். இதனை,
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றுப் பத்தொன்றும் நமக்குரைத்தோன் வாழியே
என்று பெரியாழ்வாரைப்பற்றிய தமது வாழித்திருநாமத்தில் கூறியிருப்பதனால் அறியலாகும்.

வேதாந்த தேசிகர் தாம் இயற்றிய பிரபந்தசாரத்தில் இருமடல்களையும் 118 பாசுரங்களாகக் கொள்வர்.
சிறிய திருமடற் பாட்டு முப்பத்தெட்டு இரண்டும்
சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத் தெட்டும்–என்பது அவரது திருவாக்கு
பிறிதோரிடத்தில் அவர்
அஹீதனுயர் பரகாலன் சொல் . . . . . . . . . .
வேங்கட மாற்கு ஆயிரத்தோடு
ஆணஇரு நூற்றோரைம் பத்து முன்று–என்று
திருமங்கை மன்னன் பாசுரங்களை 1253 என்று பேசுவர்.
மடல் ஒழிந்த நான்கு பிரபந்தங்களிலும் அடங்கிய பாசுரங்கள்,
பெரிய திருமொழி –1084-
திருக்குறுந்தாண்டகம்–20-
திருநெடுந்தாண்டகம் –30-
திருவெழுக் கூற்றிருக்கை –1-
ஆக –1135-என்று ஆகின்றன.
எனவே, இரு மடல்களும் 1253-1135=118 பாசுரங்களாகின்றன என்பது இதனாலும் தெளிவாகின்றது.
தேசிகர் ‘சிறியதிருமடல் முப்பத்தெட்டு இரண்டும்’, பெரிய மடற் ‘பாட்டு எழுபத்தெட்டு’ என்று குறித்த எண்ணிக்கையைப் பெரும்பாலான பதிப்பாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அப்பிள்ளையாசிரியர்மடலில் அமைந்த ஒரு கண்ணியை (இரண்டு அடிகள்)ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய திருமடலை 771/2 பாசுரங்கள் என்றும்,
பெரிய திருமடலை 1481/2 பாசுரங்கள் என்றும் கணக்கிட்டு இருமடல்களிலும் 226 பாசுரங்கள் உள்ளனவாகக் கொள்வர்.
இதனைத் தாம் இயற்றிய திருமங்கையாழ்வார் வாழித் திருநாமத்தில்,
இலங்கு எழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்று இருபது ஏழ்ஈந்தான் வாழியே என வரும் பகுதியால் அறியலாம்.

யாப்பிலக்கணப்படி திருமடலை ஒரே பாட்டாகக் கொள்வதே பொருத்தம். காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலிவெண்பாவாலான பிரபந்தம்.

ஒரே பாடலாக அமைந்த நீண்ட பாசுரங்களைப் பொருள் முடிவு கருதித் தனித்தனிப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுதல் பண்டிருந்து வரும் ஒரு மரபேயாகும்.
நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் இம்முறையை மேற் கொண்டுள்ளனர்.
இம் மரபையொட்டியே இருமடல் பிரபந்தங்களையும் பல பாசுரங்களால் (சரியாகச் சொன்னால் பல பகுதிகளாகக்) கணக்கிடும் மரபும் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
பாசுரங்களைச் சேவிக்கும் போது இப் பகுதிகளின் இறுதியில் சற்று நிறுத்தப் பெறுகின்றது.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.-

ஸ்ரீ பார்த்த சாரதி பஞ்சரத்னம் -ஸ்ரீ உ வே புன்னை மாடபூசி ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் —

September 15, 2022

பார்த்தனுக்குச் சாரதி மேல் பஞ்ச ரத்தினம் செய்யக்
காத்திரள்கள் ஏறிக் கவிந்த பொழில் -யோர்த்த
குருகையில் வாழ் மாறன் குரை கழலைப் போற்றின்
அருகெய்தா தோடும் அவம் –காப்புச் செய்யுள் –கா -பூந்தோட்டம்

————-

செங்கமல மங்கையொடு சங்க வணனும் முரிய சிறிய வரு மருகார் தரத்
திருவல்லிக்கேணி தனில் வானவர்கள் வந்து பணி செய்ய மகிழ்வெய்தி அமரும்
துங்க நவ மா மணி குயிற்றி ஒளிர் ஸந்நிதித் துவார வழி நின்று நின்னைத்
துதி செய்து நிற்கும் எனை யருள் செய்து வா வென்று சொல்லில் உனக்கு என்ன குறைவோ
மங்கள குணாகர மநோ ஹர மஹா தீர மார சுகுமார வீர
மதி தவருணாலாய ஹிரண்ய ஹர நரஸிம்ஹ மதுகைட போத் காடந
பங்கச பாப நிச யஷாள நரம்பு தர பரம புருஷாமரேச
பத்ம பவ பவ தாத பாணி த்ருத நவ நீத பாண்டு சுத ரத ஸூதனே–1-

செங்கமல மங்கையொடு -திரு மா மகளான ருக்மிணி பிராட்டியார்
சங்க வணனும் -பலராமன்
உரிய சிறியவரும் -அநிருத்தன் -ப்ரத்யும்னன் -ஸாத்விகீ
துங்க -உயர்வான
நவ மா மணி குயிற்றி -நெருக்கமாகப் பதித்து
ஒளிர் -பிரகாசிக்கின்ற
மங்கள குணாகர -நற் குணங்களுக்கு இருப்பிடமானவனே
மநோ ஹர –கண்டவர் மனம் கவரும் கண்ணனே
மஹா தீர
மார சுகுமார -சாஷாத் மன்மத மன்மதனே
வீர
மதி தவருணாலாய -திருப்பாற் கடலைக் கடைந்து அருளினவனே
ஹிரண்ய ஹர நரஸிம்ஹ
மதுகைட போத் காடந
பங்கச –திருவடி முதல் திருமுடி வரை தாமரை வனம் போன்றவனே
பாப நிச யஷாள நரம்பு தர -பாபக் குவியலைப் போக்கும் மேகம் போன்றவனே
பரம புருஷ
அமரேச
பத்ம பவ பவ தாத -நான் முகனுக்கும் சிவனுக்கும் தந்தையே
பாணி த்ருத நவ நீத -வெண்னெய்க் கையனே
பாண்டு சுத ரத ஸூதனே–அர்ஜுனன் தேர் பாகனே
பார்த்த சாரதியே

—————–

எங்கும் உனை வைத சிசு பாலற்கு நின் பாதம் ஈந்தனை எதிர்த்து நின்றே
இணை யற்ற பண நிரையினால் எறிந்தோர்க்கும் உனது எழில் மேனி தந்து அருளினை
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை
புகழ் அரிய நின் பாதம் ஒரு நாளும் அகலாது போற்றும் எனை அருளாதது ஏன்
சங்க தர சடகோப பரகால பரி படித ஸ்யாமள சரீர ராம
சசி தரணி நயன புத சநவி நுத பத நளின சதமக மதச் சேதந
பங்கஜ தளாஷ பக நாசக கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –2-

எங்கும் உனை வைத சிசு பாலற்கு -தமகோஷன் -சேதி நாட்டு அரசனுக்கும் வஸூதேவர் தங்கை சுருதசிரைவைக்கும் பிறந்தவன்
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை -புல்லன் -கண்டா கர்ணன்
சசி தரணி நயன -சந்த்ர ஸூர்யர்களைத் திருக் கண்களாகக் கொண்டவனே
புத சநவி நுத பத நளின –தேவர்களும் புலவர்களும் வணங்கும் தாமரை இதழ் ஒத்த திருவடிகளை யுடையவனே
சதமக மதச் சேதந -இந்திரன் கர்வத்தை அழித்து அருளினவனே
பங்கஜ தளாஷ -செந்தாமரைக் கண்ணனே
பக நாசக -புள்ளின் வாய் கீண்டவனே
கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந -குன்றம் ஏந்திய திருக் கையால் அகில உலகங்களையும் ரக்ஷித்து அருளினவனே

———————–

ஆசை வலையுள் சிக்கி யாடும் என் நெஞ்சத்தின் அறியாமை நீக்குவாயேல்
அனு தினமும் உனது திருவடியை மறவாத பத்தி வரும் ஐம் பொறியின் மதம் அடங்கும்
மாசில் உனது அடியார்கள் அருள் செய்வர் என் மீது வல் வினைகள் நீங்கி அகலும்
மன்னும் உயர் உணர்வு எய்தி மலரினிடை உறைகின்ற மா மகளின் நோக்கு வருமால்
கீச குலபதி மித்ர கம்பு நிப கந்தர  ஸூ கேது தநுஜா நாசந கிரண மணி க்ருத ஹார கம்பீர புஜ கலித கேயூர வேத சார
பாசதர சத்ருச அஸுராந்தக மஹா சூர பரம கருணா சாகர
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –3-

கீச குலபதி மித்ர -ஸூக்ரீவ மஹா ராஜனின் நண்பன்
கம்பு நிப கந்தர –குடக் கழுத்து போன்ற திருக் கழுத்து யுடையவனே
ஸூ கேது –தர்மத்துக்கு ஜெயக்கொடி போன்றவனே
தநுஜா நாசந –அரக்கர் கூட்டங்களை நிரசித்து அருளுபவனே
கிரண மணி க்ருத ஹார -ஒளி வீசும் ரத்னங்களான காரத்தை யுடையவனே
பாசதர சத்ருச -பாசக்கரைடு கையில் கொண்ட யமனுக்கு நிகரானவனே
அஸுராந்தக -அஸூரர்கட்க்கு யமனாய் இருப்பவனே
மஹா சூர -அஸஹாய ஸூரனே
பரம கருணா சாகர -அருள் மா கடல் அமுதே

—————————

முன்னம் ஒரு வீடுமன் முனைந்து வரு சமரத்து முனை வாளியால் அடிப்ப
முக கமல மலர் கருக நிகில புவனமும் அதிர முடுகி ஒளி யாழி ஏந்திச்
சொன்ன சபதம் அழிய வன்னவனை மாய்க்க வரு தோற்றம் எளியேன் காண நீ
தோற்றுவித் தனை யாகினான் கண்டு கொண்டு பல துதி யோதி யுய்குவன் காண்
உன்னத கதா ஹஸ்த கோபிகா நந்தந கர யுத்தமோத்தம மா தவ
உத்துங்க பீஷ்மக சுதாகாந்த கோவிந்த வுக்ரகம் ஸாசு கரண பன்னகாதிப சயன நாராயணா நந்த பலராம தேவா நுஜ
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –4-

முன்னம் ஒரு வீடுமன் -சந்தனு கங்கை இருவருக்கும் பிறந்த பீஷ்மர் -காங்கேயன் தேவ விரதன் என்றும் பெயர் -வசுக்களில் ஒருவர்
உன்னத -நெடியோனே
கதா ஹஸ்த
கோபிகா நந்தந
கர யுத்தமோத்தம
மா தவ
உத்துங்க பீஷ்மக சுதா காந்த -மிகச் சிறந்த பீஷ்மகரின் திரு மகளரான ருக்மிணி பிராட்டி மணாளனே
கோவிந்த
வுக்ர கம்ஸாசு கரண -கோரா கம்சனை அனாயாசேன கொன்றவனே
பன்னகாதிப சயன
நாராயணா
நந்த
பலராம
தேவா நுஜ -நம்பி மூத்த பிரானுக்கு பின் தோன்றலே

—————————

காலயவனற்கு மிக அஞ்சி யோடினை என்று கழறுகின்றனர் அறிவிலார்
கண்ணியா நோக்கினின் கழல் இணையை மறவாத கனமுடைய முசுகுந்தனின்
நீல நிற மணி மேனி கண்டு தொழவே எதிர் நின்றனை எனக் கொள்ளுவாம்
நின் பெருமை வணம் அறிய வல்லார் இந்த நீண் நிலத்தில் எவர் அறைகுவாய்
சீல குண கண நாத சிகுர குந்தள வாம சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர கீத உபதேச வா சிஷ்யார்ய பத தர்ச்சக
பால குல கோபால பக்த ஜன மந்தார பாரத சஹாய ஸுவ்ரே
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –5-

சீல குண கண நாத
சிகுர குந்தள வாம -வளைத்த முன் உச்சி மயிர்களால் அழகானவனே
சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர
கீத உபதேச வா
சிஷ்யார்ய பத தர்ச்சக -சிஷ்ய ஆச்சார்ய நிஷ்டைகளைக் காட்டி அருளினவனே

—————–

இரண்டாவது மகுடம்

கரு மேனி அழகு அழிய வரு சிறுவரோடு பல காடு மலையின் புறத்துக்
கன்று நிரை மேய்க்க நீ சென்ற பொழுதத்து உனது கழல் இணை என் மீது பட யான்
ஒரு பெரிய கல்லாக மரமாக மெதுவாக யுற்ற சிறு புல்லாக முன் உதித்து இருந்தேனாகில்
அரு நரகில் வீழ்க்கும் இவ் வுடலம் எவ்வாறு எய்துவேன்
குரு வம்ச பவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேபந ரகூத்தம கரிந்த்ர வரத
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –1–

குரு வம்ச பாவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர -கௌரவ வம்ச அரசர் கூட்டங்களுக்கு பீதியை விளைவித்தவனே
கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேப ந-பரிமளம் மிக்க கஸ்தூரி பூச்சை யுடையவன்
ரகூத்தம -ராகு வம்சத்தில் உத்தமனாய் நின்று பிரகாசிப்பவனே
கரிந்த்ர வரத -கஜேந்திராழ்வானுக்கு பேர் அருளாளனாய் வந்து அருளினவனே
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த
வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல
விஜி தரிபு சய -சத்ருக்களை எல்லாம் ஜெயித்தவனே
விமல விஜய ரத ஸூய மணியே –பார்த்தனுக்கு தேரூர்ந்த மா மணியே –

————————————————-

எந்த உலகுக்கும் இறையாகி யுள நீ முன்னம் எளியவோர் மாணியாகி ஏகி
மா வலி யச்ச வாடத்து மூவடி மண் ஏற்றனை யது யன்றி இரவி
மைந்தனிடை அந்தண் உருக் கொண்டு சென்று பின் மா தான பலம் ஏற்றனை
மா காந்தனான யுனக்கேற்கும் முறை எவ்வாறு வாய்த்ததோ யான் அறிகிலேன்
கந்த வஹ சுத வாஹ நாச்யுத ஹ்ருஷீ கேச கம நீய கோப வேஷ
காகுஸ்த்த வஸூதேவ தேவகி ஸூத ரத்ன கநக வஸ்த்ர அலங்க்ருத
விந்த்ய கிரி சத்ருச புஜ யுகள ப்ருந்தாரண்ய மேதினீ ஸமஸ்தா பக
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –2–

இரவி மைந்தன் -ஸூ ர்ய புத்ரன் -கர்ணன்
மா காந்தன் -ஸ்ரீ யபதி
கந்த வஹ சுத வாஹந-ஹநுமானை வாகனமாகக் கொண்டருளினவனே
அச்யுத
ஹ்ருஷீ கேச
கம நீய கோப வேஷ
மேதினீ ஸம்ஸ்தாபக -தர்மத்தை நிலை நாட்டை தரணியில் அவதரித்து அருளினவனே –

———————-

செகத்தில் உடலோடு காண்கின்ற வுயிர் யாவும் நீ செய்த நன்றியை மறந்து
செருக்குற்று நின்று தாம் செய் தொழில் கடம் முடைய செய்கை என்றே நினைந்து
திகைத்து மேல் தெய்வம் இல்லை என்று எண்ண மாயையாம் திரையிட்டு வைத்து இருத்தி
திரு உள்ளம் இரங்கி அத்திரை நீக்கி யவை உனைத் தரிசித்து வாழும் அன்றோ
ஸூக நாரதாதி முனி ஸேவ்ய வைகுண்டேச ஸூத்த ஸாத்விக கேசவ
சூர்ப்ப கா ராதி ஜனக ஆஸ்ரித ஜன ஆதார ஸூப விபீஷண பாந்தவ
விகோசித மன நளிந பாஸ்கர வஷட்கார விஹ கரத விஸ்வ மூர்த்தே
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –3–

வஷட்கார -வஷட் கார ஸ்வரூபியே
விஹ கரத -திருவடியை வாஹனமாகக் கொண்டு அருளினவனே

——————–

சொல்லால் உனைப் பாடி மகிழ அறியேன் சொன்ன சொற் பொருளின் உண்மை அறியேன்
சோராமல் நிற்கு அடியேன் செய்ய அறியேன் பெரிய சுருதியினை நோக்க அறியேன்
கல்லை நிகர் நெஞ்சினேன் பொய் களவு வஞ்சகம் கனவிலும் நீக்க அறியேன்
கடையினேன் நாயினும் கடைக் கணித்து ஆள நின் கருத்தின் நினைத்து அருள்வாய்
பில்லாதி போல்லாச கர கோபிகா ஜார பீமாக்ர ஜாபி வாத்ய
பீத பாஞ்சால புத்ரீ மாநத அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ விஹித ப்ரஹ்மாதி ரூப
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –4–

பில்லாதி போல்லாச கர –ஆயர் தலைவர்கட்க்கு மகிழ்ச்சி அளித்தவனே
கோபிகா ஜார -ஆய்ச்சிகளை மோஹித்து அடைந்தவன்
பீமாக்ர ஜாபி வாத்ய –யுதிஷ்ட்ரர் வணங்கியவனே
பீத பாஞ்சால புத்ரீ மாநத-பயந்த திரௌபதியின் மானத்தைக் கொடுத்தவனே
அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ
விஹித ப்ரஹ்மாதி ரூப –விதி சிவன் இந்திராதி ஸர்வ ரூப சரீரியே

—————————

முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே
மதுர ம்ருது தர வசன நவநீத ததி சோர மது ஸூதந ஆதி கூர்ம மதுரா புரீ வாஸ மாதந மா ரமண மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய விப்ர தநத அநித்ய விஷயாதி தூர கமந
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –5–

முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே

ம்ருது தர வசன -இனிய வார்த்தை யுடையவன்
நவநீத ததி சோர மது ஸூதந
ஆதி கூர்ம –ஆதி கூர்ம ரூபியே
மதுரா புரீ வாஸ
மாதந –மானத்தையே தனமாகப் பெற்றவனே
மா ரமண -ஸ்ரீ யபதியே
மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய –விதுரரால் நன்கு அதிதி ஸத்காரம் செய்யப் பெற்றவனே
விப்ர தநத-குசேலருக்கு ஐஸ்வர்யம் அளித்து அருளினவனே
அநித்ய விஷயாதி தூர கமந -அநித்யமான விஷயங்களுக்கு வெகு தூரம் செல்பவனே

——————–

மூன்றாவது மகுடம்

உன்னுந்தி மலர் வந்த நான்முகத்து ஒருவனே நின் பெருமை அறியாது உனை
ஓர் இடையன் மகனாக யுன்னீ நீ காட்டகத்து ஓடி அனுதினம் மேய்த்திடும்
பொன்னின் அணி இலகு மணி ஆக்களையும் அவைகள் பின் போகு சிறு கன்றுகளையும்
போற்றி வரும் கோபால பாலர்களையும் தனது புணர் மாயை யால் பிணைத்துப்
பன்னரிய பெரிய மலை முழை ஒளித்திட வாய்ந்து பார்த்தவர்கள் போல் உருவம்
பல பல எடுத்து நீ நிற்க அவன் அணி நின் பாத மலர் இறைஞ்சி யஞ்சிக்
கன்னனிகர் வேத மொழி யாற்று திப்பக் கருணை காட்டி அறியாமை ஈர்ந்தாய்
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –1-

வானில் உறைகின்ற மதி செல்ல வழி இன்மையால் வாடி மேனிலை வாயிலில்
வந்து புக நின்ற கோபுர வகையும் மணி தைத்த வண்ண வான் கதவின் வகையும்
மானெரிய நீண்டு வளை தந்த மதிலின் வகையும் மா மாணிக் கொடி ஏறும் உறும்
மன் பெரிய தம்பமும் பொன் மண்டபப் பொலிவு மண நாறு பூஞ்சோலையும்
மீன் உலவும் இனிய புனநிறை குளனும் வாய்ந்த பேர் மேன்மை யுறு நின்னகரில் வாழ்
மேதக்க யடியார்கள் யடி பணியும் அவர் பெருமை வேதனும் வுரைக்க வலனோ
கானனல முண்ட கனி வாயனே மாயனே கமலை யுறைகின்ற மார்பா
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –2-

கங்கை அலை எறிகின்ற கழல் இணையின் அழகு நின் கரிய திருமேனி யழகும்
கலை மதியை ஒத்த தவனத்தின் அழகும் பெரிய கமல நிகர் விழியின் அழகும்
சங்க முறை தருகின்ற கையின் அழகும் குங்கொடியர் தலை யரியும் வாள் கை அழகும்
தமநிய மலைக்கு நிகர் தோளின் அழகும் தலை யிறாங்கு மணி முடியின் அழகும்
துங்க மலர் மகள் வாழு மார்பின் அழகும் அதில் தோன்றும் வனமாலை யழகும்
தூய நான்முகன் வந்த யுந்தி அழகும் பொலந்தூசு பொலி இடையின் அழகும்
கங்குலும் பகலும் என் கண்ணை விட்டு அகலாது கருத்தினை யிருக்கும் அன்றே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –3–

மிக்க பசியால் வாடி யுணவினை விரும்பி முன் விடுப்பவொரு கோபனோடி
வேள்வி செய்யும் அந்தணரை நாடி அன்னம் கேட்ப வெகுண்டவர் மறுப்ப வன்னான்
இங்கு நிகர் மொழி வரவ் வேதியரின் மனைவியரை யேற்பவ வருள் களித்தே
இணை யற்ற வன்ன முதலாய கைக் கொண்டு எய்தி எம் பெரும நீ கொள்க எனத்
தக்க யுபசாரத்தினோடு உனை அருத்திடத் தளர்ச்சி யற யுண்டு வந்து
தாழாத வர்க்கு அருள் செய் தந்த மங்கையர் தம்பதிகள் செய் தொழிலினும்
கக்கும் ஒளிமைக் குழலவர் பத்தியே மிகக் கனமுடைய தென நாட்டினை
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –4-

அமித வெழில் ஒழுகு முக கோபியர்கள் அரு கலவி யார்ந்தகம் உவந்த நீ முன்
அம்மதுரை நகரினிட வதிகின்ற கூனி யுடல் அணை தந்த வாறு என்னவும்
தமர் கண் மிக வினிய சுவை தர வாங்கி அன்பினோடு தந்த உணவு உண்டு அருளு நீ
தகுதி அற வொரு அறிய வந்தணன் அளித்தவ வறான் யுண்ட வாறு என்னவும்
அமுத மொழி யுடைய பல வாழ்வார்கள் செந்தமிழை ஆதாரத்தோடு கொண்ட நீ
அஞ்ஞனான எளியேன் சொன்ன புன் கவியை அருள் செய்து கொள வேண்டுமால்
கமழ மணமுடைய துளஸீ காரனே விளவின் கனி வீழ்த்த வொரு தீரனே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –5-

அந்தணன் -குசேல முனி

ஆக்கியோன் பெயர்
குந்தி மகன் சாரதி மேல் கூறினான் பஞ்ச ரத்னம்
செந்திரு வாழ் கஞ்சஞ் செழு நீலம் –உந்து மணப்
பூ நிரை மாறா வயல் சூழ் புன்னை ராமானுஜன் சேய்
சீ நிவாஸன் விழைந்து தேர்ந்து

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புன்னை ஸ்ரீ ராமானுஜன் ஸ்வாமிகள் திருக்குமாரர் ஸ்ரீ நிவாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு எவ்வுளூர் திருப்பஞ்சகம்–

September 10, 2022

இதன் சந்தம் விளம், மா, காய், விளம் – என்ற வாய்பாட்டில் உள்ளது

திருப்பஞ்சகம் – முதல் பாடல்
குருவுளச் சந்தக் கவிராயர் சொன்ன
வொருகலிச் சந்தம் உணராநின் றுன்னி
திருவுளே துஞ்சும் திருமால்பேர் சொல்வேன்
கருவிளம் மாமுன் பலவின்காய் மாவே. –சந்தம்: கருவிளம் மா புளிமாங்காய் மா

குருவாக உளம் கொண்ட சந்தக் கவிராயர் ஒரு கலிவிருத்த சந்தம், உணர்ந்து உன்னி, திருவுள்ளூரில் இருக்கும் திருமால் பேரைச் சொல்ல பயன் படுத்துவேன். இதில், உள்ள நாற்சீர்கள் கருவிளம், மா, பலகாய்கள் மற்றும் மாவாக வரும்

திருப்பஞ்சகம் – இரண்டாம் பாடல்
இராவணன் வீழ்த்தி ஏந்திழையை மீட்ட
இராவணன் இங்கே ஈடிலாத பேறாய்
அராவணை தன்னில் ஆன்றதுயில் கொண்டான்
மராவளி சாய்த்த மாலிவனைக் கொள்ளே! -2-சந்தம்: கருவிளம் மா கூவிளங்காய் மா

இரவு வண்ணம் கொண்டவன், இராவணனை வதைத்து தன் மனைவியை மீட்டான். அந்த மரா மர வரிசையைச் சாய்த்தவன் இங்கு பாம்பு படுக்கையில் தூங்குகிறானே! அவனை நீ மனதில் வரிப்பாயாக.

திருப்பஞ்சகம் – மூன்றாம் பாடல்
மலிகடல் வாழ்ந்த மாகைட பர்தம்
தலைகுடல் வேறாய்த் தானாழி கீண்டான்
அலகிடும் அன்பர் ஆகாத வெந்நோய்
குலைகெட இவ்வுள் கா(ல்)நீட்டு மாறே! -3-சந்தம்: கருவிளம் மா தேமாங்காய் மா

பெருங்கடலில் வளர்ந்த மது கைடபர் என்ற இருவரை, (தன் தொடைமீது வைத்து), சக்ராயுதத்தால் வகிர்ந்தவன், இவ்வூரில், உடம்பின் பகுதிகளை அலகால் சமர்ப்பிக்கும் அன்பர்கள் நோய் தீர்ப்பவனாக கால் நீட்டி படுத்திருக்கும் அழகைப் பாருங்கள்!

திருப்பஞ்சகம் – நான்காம் பாடல்
சுவாதி நன் னாளில் சினமுறுத்த சீயம்
விவாதமீ தீற்றில் வெளிப்புறத்த தென்னே!
அவாயிரா சாலி அருமுனிவர்க் கிங்கே
சுவாமிநின் அவ்வுள் சுவீகரித்த தென்னே! -4-சந்தம்: கருவிளம் மா கருவிளங்காய் மா

‘அவன் எங்கிருக்கிறான்’ என்ற விவாதத்தின் முடிவில், கோபமாய் சிங்க உருவில் வெளி வந்தவன், இங்கு ஆசை இல்லாத சாலி ஹோத்ர மகரிஷிக்கு அந்த உள்ளை (பரத்தை)க் காட்டி எப்படி அன்போடு சுவீகரித்து இருக்கிறான்!

மிளகுமுப் பளக்கு மடியவர்பால் நெஞ்ச
மிளகுமிம் மருந்து திருவுளூரில் துஞ்சும்
அளவுமிப் படியென் ரளக்குறாத அண்ணல்
முளரியொப் புவசு மதிமணந்த திங்கே! -5-சந்தம்: கருவிளம் மா கருவிளங்காய் மா

மிளகும் உப்பும் தரும் அடியவர்க்காக நெஞ்சம் இளகும் மருந்து ஒன்று திரு எவ்வுள் ஊரில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அண்ணலை, எண்ணிக்கையால் அளக்க முடியாது (அத்யதிஷ்ட தஷாங்குலம்). அவன், வசுமதியை வரித்த ஊர் இதுவே!

வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்தி கொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார்.
‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனே போற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதி நல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர் வாழ் வீர ராகவனே போற்றி’

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –